Wednesday, July 3, 2024

செய்திகள் - 03.07.2024(புதன்கிழமை)

சிந்தனை துளிகள்*

எவ்வளவு காலம் உறவுகளாக இருந்தோம் என்பதை விட எவ்வளவு காலம் உறவில் உண்மையாய் 

இருந்தோம் என்பதே முக்கியமாகும்.!

அன்பாக பழகுவதை மறந்து...

அளவாக பழகுவதற்கு கற்றுத்தருகிறது...

சில அனுபவங்கள்.!!

அடுத்த வரை ஏமாற்றிவிட்டோம் நாம் சந்தோஷமாய்

வாழலாமென்று மட்டும் நினைத்துவிடாதீர்கள்.!

ஏனெனில் உங்களுக்கும் அந்த நிலை வரும் ஏமாறும் காலம் வேண்டுமானால் தள்ளிப்போகலாம். வாழ்க்கை ஒரு வட்டம்.!!!

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

*செய்தி துளிகள்*


🍒🍒தமிழ்நாட்டில் ஜூலை 13ம் தேதி நடைபெற உள்ள குரூப் -1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியானது.

தேர்வர்கள்

 tnpsc.gov.in என்ற இணைய முகவரிக்கு சென்று ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம்

🍒🍒தமிழகத்தில் 3 ஆண்டு (LLB) சட்டப்படிப்புக்கு இன்று முதல் 24ஆம் தேதி வரை விண்ணப்பம்.

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலை. இணைவுபெற்ற அனைத்து சட்டக்கல்லூரிகள், பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் சீர்மிகு சட்டப்பள்ளி ஆகியவற்றில் மூன்றாண்டு LLB படிப்பிற்கு

 www.tndalu.ac.in இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.                                  🍒🍒நீட் தேர்வு வினாத்தாள் கசிவு- இனி புதிய நடைமுறை

முதுநிலை நீட் தேர்வுக்கான வினாத்தாள் இரண்டு மணி

நேரத்திற்கு முன்பு தயாரிக்கப்படும் என தகவல்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தை

தொடர்ந்து மத்திய அரசு நடவடிக்கை.                                                  🍒🍒அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயில இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பு

இன்று முதல் 5ஆம் தேதி வரை TNGASA இணையதளத்தில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

🍒🍒“உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் தமிழ்நாடு சாதித்துவிட்டது!”

-AICTE தலைவர் சீத்தாராம் பாராட்டு

உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் தமிழ்நாடு சாதித்துவிட்டது!

2035ம் ஆண்டு எட்ட வேண்டிய (GER) உயர்கல்வி மாணவர் சேர்க்கை விகிதத்தை தமிழ்நாடு இப்போதே எட்டிவிட்டது. 

2021-22ம் ஆண்டில் இந்தியாவின் உயர்கல்வி மாணவர்கள் சேர்க்கை விகிதம் 28.3% ஆனால், அதே காலத்தில் தமிழ்நாட்டில் 47%. அந்த விகிதம் இப்போது 50%-ஐ கடந்து இருக்கும்

அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் AICTE தலைவர் சீத்தாராம் பாராட்டு.

🍒🍒இன்று திமுக மாணவரணி ஆர்ப்பாட்டம்:-

நீட் தேர்வுக்கு எதிராக இன்று (ஜூலை 3) திமுக மாணவரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. 

தமிழ்நாட்டிற்கு நீட் தேவையில்லை என பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பிய மசோதாவுக்கு ஒப்புதல் தர வலியுறுத்தியும், மத்திய அரசைக் கண்டித்தும் சென்னையில் இன்று இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

🍒🍒தலைமை ஆசிரியர்களுக்கு இன்று வரை அவகாசம்

முதல்வர் திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்களின் விவரங்களை, இணையத்தில் பதிவேற்றுவதற்கான அவகாசம் இன்றுடன் (ஜூலை 3) முடிவடைகிறது.

2024-25 கல்வியாண்டில், 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஜூலை 21இல் திறனாய்வுத் தேர்வு நடைபெற உள்ளது. 

முன்னதாக இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிப்போரின் விவரங்களை, ஜூன் 21-26 வரை பதிவேற்ற தலைமை ஆசிரியர்களுக்கு அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.

🍒🍒BT BRTE BREAKING NEWS 

அரசு அளித்த இறுதி விடை குறிப்பு அனைத்தும் செல்லும்

அனைத்து வழக்குகளும் சென்னை உயர்நீதிமன்றத்தில்முடித்து வைப்பு 

சான்றிதழ் சரிபார்ப்பு சென்றவர்களுக்கு 100% வாய்ப்பு

சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

🍒🍒பள்ளிக் கல்வித் துறையில் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணிபுரியும் அமைச்சுப் பணியாளர்களுக்கு (Non Teaching Staff) கட்டாய இடமாறுதல் வழிகாட்டு நெறிமுறைகள் அரசாணை வெளியீடு.

🍒🍒ஆகஸ்ட் 21 முதல் செப்டம்பர் 4 வரை கணினி அடிப்படையில் நெட் நுழைவுத் தேர்வு

🍒🍒மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கு தகுதியுடையோர் பட்டியலை மாவட்ட வாரியாக ஒப்படைக்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு.

🍒🍒இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி ஜூலை 5ம் தேதி ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக மீனவர்கள் அறிவிப்பு!

ராமநாதபுரம் மாவட்ட நாட்டுப் படகு மீனவர்கள் நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தல் ஈடுபட்டுள்ளனர்.

🍒🍒5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட ஜிம்பாப்வே புறப்பட்டது இந்திய அணி.

முதல் டி20 போட்டி வரும் 6ம் தேதி ஹராரே மைதானத்தில் நடைபெறவுள்ளது.

🍒🍒யூரோ கோப்பை கால்பந்து தொடரின் காலிறுதிக்கு முன்னேறியது கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுகல் அணி 

ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் ஸ்லோவேனியா அணியை பெனால்டி ஷூட் அவுட் முறையில் வீழ்த்தி வெற்றி

🍒🍒மீனவர்களை மீட்க கோரி முதல்வர் கடிதம்

இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்ட

25 மீனவர்களையும் படகுகளையும் மீட்க நடவடிக்கை தேவை

வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு

 முதல்வர் ஸ்டாலின் கடிதம் மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணவும் கடிதத்தில் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்

🍒🍒ஜிம்பாப்வேக்கு எதிரான டி20 தொடரின் 2 போட்டிகளில் விளையாடும் 3 வீரர்களுக்கு பதில் மாற்று வீரர்கள் அறிவிப்பு

முதல் 2 போட்டிகளில் சஞ்சு சாம்சன், ஷிவம் துபே, ஜெய்ஸ்வால் ஆகியோருக்கு பதில் மாற்று வீரர்கள் அறிவிப்பு

சஞ்சு சாம்சன், ஷிவம் துபே, ஜெய்ஸ்வாலுக்கு பதில் சாய் சுதர்சன், ஜிதேஷ் சர்மா, ஹர்ஷித் ராணா அறிவிப்பு

🍒🍒தமிழகத்தில் அமையும் அதிநவீன பரிசோதனை கூடங்கள்

ஆளில்லா விமானங்கள், மின்னணு ஆயுதங்கள் மற்றும் எலெக்ட்ரோ ஆப்டிக்ஸ் தொடர்பான மூன்று அதிநவீன பரிசோதனை கூடங்கள் அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் 

பாதுகாப்பு அமைச்சகம் மற்றும்  (டிட்கோ) இடையே கையெழுத்தானது.

🍒🍒மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு.

பிரதமர் மோடியின் பதிலுரையை தொடர்ந்து

மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு.

இன்று வரை நடைபெறுவதாக இருந்த நிலையில் ஒருநாள் முன்னதாகவே முதல் அமர்வு நிறைவு.

🍒🍒TN-RISE நிறுவனத்தை தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

🍒🍒விக்கிரவாண்டி தொகுதியில் வரும் 6, 7, 8ம் தேதி வரை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.

🍒🍒அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட தனது உரையின் பகுதிகளை மீண்டும் சேர்க்க வேண்டும்"

"அவை குறிப்பில் இருந்து தனது கருத்துக்களை நீக்கியது ஜனநாயகத்திற்கு எதிரானது" 

மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கடிதம்

🍒🍒மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் நிராகரிக்கப்பட்டு மேல்முறையீடு செய்தவர்களில் 1.48 லட்சம் விண்ணப்பங்கள் ஏற்பு

விண்ணப்பதாரர்களின் வங்கி கணக்கில் இம்மாதம் 15ம் தேதி ‌முதல் 1000 ரூபாய் வங்கி கணக்கில் வரவு வைக்க பட உள்ளதாக தகவல்.

🍒🍒விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு மை வைக்கும் நடைமுறையில் மாற்றமில்லை"

"இடது கை ஆள்காட்டி விரலில் மக்களவை தேர்தலில் வைக்கப்ட்ட  மை இருந்தால் அதற்கு மாற்றாக இடது கை நடு விரலில் மை வைக்கப்படும்"

தேர்தல் ஆணையம்

🍒🍒சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஊதியம் உயர்வு

நாளொன்றுக்கு வழங்கப்பட்டு வரும் தினகூலியை ரூபாய் 300 ரூபாயில் இருந்து 325 ரூபாயாக உயர்வு

உயர்த்தப்பட்ட ஊதியத்தை அனைத்து ஊழியர்களுக்கும் வழங்க சென்னை மாநகராட்சி சுற்றறிக்கை

🍒🍒தீபாவளி: ரயில் டிக்கெட் முன்பதிவு விற்று தீர்ந்தது

தீபாவளிக்கு முன்தினமான அக்டோபர் 30, 2024ல் சொந்த ஊர் செல்ல நேற்று ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில மணி நேரத்திலே விற்று தீர்ந்தது.

🍒🍒ஹஜ் பயணம் மேற்கொண்ட தமிழர்கள் 10 பேர் மரணம்

தமிழ்நாட்டில் இருந்து 5,801 பேர் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொண்ட  நிலையில், முதற்கட்டமாக 326 பேர்  சென்னை வந்தடைந்தனர்.

இவர்களை நேரில் சென்று வரவேற்ற அமைச்சர் செஞ்சி மஸ்தான், தமிழகத்தில் இருந்து சென்றவர்களில் 10 பேர் வெயிலின் தாக்கத்தால் உயிரிழந்ததாகவும், ஒருவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதாகவும் கூறினார்.

மெக்காவிற்கு செல்லும் வழியில் ஒருவர் சாலை விபத்தில் உயிரிழந்ததாகவும் தெரிவித்தார்.                              🍒🍒5 சிறை அலுவலர்கள் மற்றும் 44 உதவி சிறை அலுவலர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை வழங்கினார். 

சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறைக்கு டி.என்.பி.எஸ்.சி. மூலம் தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். 

தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் வழங்கினார்

🍒🍒இந்த வருடம் முதல் ஹஜ் பயணிகளுக்கு ரூ.25,000 இணை மானியம்

தமிழக அரசு அறிவிப்பு                                                 🙏🙏🙏🙏🙏🙏

No comments:

Post a Comment