Monday, July 1, 2024

தேசிய மருத்துவர்கள் தினம்.(01-ஜூலை)

இன்றைய நாள்

👨‍⚕️ ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1ஆம் தேதி இந்திய மருத்துவ சங்கம் சார்பில் தேசிய மருத்துவர்கள் தினம் கொண்டாடப்படுகிறது.

👨‍⚕️ வங்காள முன்னாள் முதலமைச்சர் டாக்டர் பி.சி.ராயின் பிறப்பு மற்றும் நினைவு தினத்தை நினைவுகூறும் வகையிலும், மக்களுக்கு சேவை செய்து வரும் அனைத்து மருத்துவர்களுக்காகவும் இந்த நாள் அர்ப்பணிக்கப்படுகிறது.

*தேசிய பட்டய கணக்காளர் தினம்.*

🖋 ஒவ்வொரு ஆண்டும் தேசிய பட்டய கணக்காளர் தி

னம் அல்லது CA தினம் ஜூலை 1 அன்று கொண்டாடப்படுகிறது. 

🖋 ஜூலை 1, 1949ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்தின் விளைவாக ICAI (Institute of Chartered Accountants of India) தொடங்கப்பட்டதை நினைவுகூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் தேசிய பட்டய கணக்காளர் தினம் கொண்டாடப்படுகிறது.

சரக்கு மற்றும் சேவை வரி தினம்.

👉 ஒவ்வொரு ஆண்டும் சரக்கு மற்றும் சேவை வரி தினம் அல்லது GST தினம் ஜூலை 1 அன்று கொண்டாடப்படுகிறது.

👉 ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டம் நாடு முழுவதும் 2017ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து ஆண்டுதோறும் இத்தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

*முக்கிய நிகழ்வுகள்...*

👉 2002ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உருவாக்கப்பட்டது.

👉 1979ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி சோனி நிறுவனத்தின் வாக்மன் அறிமுகம் செய்யப்பட்டது.

No comments:

Post a Comment