Sunday, July 21, 2024

பறவைகளிடமிருந்து கற்றுக்கொள்வதற்கான சக்திவாய்ந்த பாடங்கள்


1. பறவைகள் அதிகாலையில் எழுந்து சீக்கிரம் தூங்கும் பழக்கம் உடையவை.

அதிக தூக்கம் மன அழுத்தத்திற்கு வழிவகுக்கிறது. தூக்கமின்மை மனச்சோர்வுக்கு வழிவகுக்கிறது. சீக்கிரம் தூங்குங்கள். காலையில் சீக்கிரம் எழுந்து பழகுங்கள். ஒவ்வொரு நாளும் உங்கள் வெற்றி, மற்றும் இலக்குகளைப் பற்றி சிந்தியுங்கள். 


2. பறவைகள் தங்கள் தினசரி உணவைப் பெற கடினமாக உழைக்கின்றன. 

யாருக்காகவும் காத்திருக்காதீர்கள். உங்கள் உழைப்பை

நம்புங்கள்.  மாற்றத்தின் ஆதாரமாக இருங்கள். மகத்துவமான வாழ்க்கைக்கு கடின உழைப்பும் அர்ப்பணிப்பும் தேவை. நீங்கள் இருக்கும் இடத்திலிருந்தே உங்கள் எதிர்காலத்தை சிறப்பாக வடிவமைக்க முடியும். நம்புங்கள்.


3. பறவைகள் தங்கள் இளமைப் பருவத்திலேயே தங்கள் வீடுகளைக் கட்டுவதில் முதலீடு செய்கின்றன.

இளமையில் இருந்தே உங்கள் தேவைகளை பூர்த்திசெய்ய திட்டமிட்டு வேலை செய்யுங்கள். உங்கள் இளமை நேரத்தை உங்கள் திறமையை வளர்ப்பதில் முதலீடு செய்யுங்கள். வலிமையும் சுறுசுறுப்பும் இளமை காலத்தின் பொக்கிஷங்கள்.


4. பறவைகள் சீரான வாழ்க்கை வாழ்பவை.

10,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பறவைகள் உண்பது, உறங்குவது, வாழ்வது போன்றவற்றை மாற்றியதில்லை.இவைகளுக்கு  வீடு கட்ட பல நாட்கள் ஆகும். இலைகளை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு எடுத்துச் செல்வது எவ்வளவு கடினம் என்பதை நீங்கள் புரிந்துகொள்ளுங்கள். எனவே, தொடர்ச்சியான முயற்சியில் இருங்கள். சரியான நேரத்திற்கு காத்திருங்கள். உங்கள் சிறிய முன்னேற்றம் இறுதியில் மிகப்பெரிய வெற்றியாக மாறும்.


5. பறவைகள் தங்கள் நோக்கத்தை அறிந்து அதை நிறைவேற்றுகின்றன.

பறவைகளின் நோக்கங்களில் ஒன்று, அவற்றின் பறக்கும் திறன் மூலம் இயற்கையை அழகுபடுத்துவதாகும். நீங்களும் ஒரு நோக்கத்திற்காக பிறந்திருக்கிறீர்கள். அதை நிவர்த்தி செய்து வாழுங்கள். பறக்காத பறவையை உங்களுக்கு பிடிக்குமா? அப்போ ஜெயிக்காத உங்களை மற்றவர்களுக்கு எப்படி பிடிக்கும்?


6. பறவைகள் எப்போதும் உற்று நோக்கும்.   

பறவைகள் உணர்திறன் கொண்டவை. தீமையிலிருந்து எப்போது பறக்க வேண்டும், எப்படி தப்பிக்க வேண்டும் என்பது அவைகளுக்கு தெரியும். சில நண்பர்கள் தெரியாத எதிரிகள், இவர்களுடன் இருந்து  எப்போது ஒதுங்க வேண்டும் என்பது உங்களுக்கு தெரிய வேண்டும். கவனமாக இருங்கள். 


7. பறவைகள் வீணாக்காது.

சாப்பிட வேண்டியதைச் சாப்பிட்டு விட்டு மீதியை விட்டு செல்கின்றன. மற்ற பறவைகள் அதை சாப்பிடும். மனிதர்கள் வாழும் இந்த பிரபஞ்சத்தில் உங்களுக்கானதை எடுங்கள். பிறருக்கு கொடுங்கள். பறவைகளை போல மகிழ்ச்சியாய் இருங்கள். மகிழ்ச்சியின் ரகசியம் பிறருக்கு கொடுப்பதில் நிறைந்துள்ளது.

No comments:

Post a Comment