Tuesday, July 16, 2024

தினம் ஒரு மூலிகை - பெருங்காயம்


*தினம் ஒரு மூலிகை* *பெருங்காயம்*.  மலை பாங்கான உயர்ந்த இடங்களில் வளரும் சிறு செடி அல்லது சிறிய மரம் அளவுக்கு வளர்ந்த உடனே தண்டையும் வேறையும் கீறி விட்டு அதில் வடியும் பிசினை எடுத்து பக்குவப்படுத்தி காய வைத்தால் அதுதான் பெருங்காயம் பால் பெருங்காயம் சிவப்பு பெருங்காயம் என்று இரண்டு வகை உண்டு. காரமும் கசப்பும் கொண்ட பெருங்காயம் சுவை நரம்புகளை தூண்டி ருசியை உண்டாக்கும் குணம் கொண்டது பெருங்காயம் வயிற்று வாய்வு அகற்றும் செரிமானத்தை தூண்டும் குடல் புழுக்களை கொல்லும் சிறுநீர் பெருக்கம் நரம்பு உரமூட்டும் நாடி நடையை சமப்படுத்தும் மாதவிலக்கை தூண்டும் கோழை அகற்றும் இசிவு அகற்றும் தன்மை கொண்டது அரை கிராம் பொறித்த பெருங்காயத்தை பனைவெல்லத்தில் கொதித்து உண்டுவர வாத நோய் மண்டை நீரேற்றம் ஜன்னி உதிர சிக்கல் கீல் வாதம் வெறிநாய்க்கடி வழிப்பு தொண்டை கம்மல் தெரியாமல் பேதி வயிற்றுப் பெருமல் வயிற்று வலி குடல் நுண் புழுக்கள் ஆகியவை நீங்கும் 2 கிராம் பெருங்காயத்தை 20 மில்லி நல்லெண்ணையில் காய்க்கு வடித்து ஓரிரு துளிகள் காதில் விட்டு வர காது வலி தீரும் நன்றி.

No comments:

Post a Comment