Thursday, October 31, 2024

நவம்பர்1 தமிழ்நாடு மாநிலம் அமைந்த நாள்!

இன்றைய "தமிழ்நாடு" பெயர் உருவாக முக்கிய காரணர்கள் தியாகி சங்கரலிங்கனார் ஐயா மற்றும் "தமிழகத்தின் தந்தை"ம பொ. சிவஞானம் ஐயா அவர்கள். ம.பொ.சி ஐயா பல போராட்டங்களை முன்னெடுத்து, பின்பு சட்ட சபையில் குரல்

எழுப்பி "தமிழ்நாடு" என்று பெயர் வைக்க முக்கிய காரணர்.அப்போது முதலமைச்சராக இருந்த அண்ணா அவர்களிடம் இக்கோரிக்கையை ம.பொ.சி ஐயா அவர்கள் முதலில் எழுப்ப அதற்கு அண்ணா அவர்கள் இது தனி நபர் கோரிக்கையாக இருக்கிறது எனவே இதை அரசு சார்பாக அனுப்புவோம் என்று சொல்லி ம.பொ.சி அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக அண்ணா அவர்கள் "தமிழ்நாடு" எனும் பெயரை சட்டசபையில் நிறைவேற்றினார்..இது வரலாறு!


அன்று தென் தமிழகத்தின் தமிழர்கள் வாழும் கல்குளம், விளவங்கோடு, தோவாளை, அகஸ்தீசுவரம் உள்ளிட்ட கன்னியாகுமரி மாவட்டத்தின் பகுதிகள் கேரள மாநிலத்துடன் சேர்ந்துவிடாமல் தடுப்பதற்கு மாபெரும் மக்கள் திரள் போராட்டங்கள் எழுச்சியுடன் நடத்தப்பட்டன. அப்போராட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் உயிரிழந்தனர். தெற்கெல்லை போராட்டத்திலும் "தமிழகத்தின் தந்தை" ம.பொ.சி ஐயா முன்னின்று போராடினார். ம.பொ.சி ஐயாவும் அவரது வழிகாட்டுதலில் மார்ஷல் நேசமணி, எஸ். சாம் நத்தானியல், பி.எஸ்.மணி, காந்தி ராமன், ஆர்.கே.ராம் உள்ளிட்ட தலைவர்களும் போராடி வெற்றி கண்டனர் என்பது வரலாறு!


மாநில தலைநகர் சென்னையை ம.பொ.சி ஐயா "தலையை கொடுத்தேனும் தலைநகர் காப்பேன்" என்று கர்ஜித்து சென்னையை காத்தது வரலாறு!


நவம்பர் 1, மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்ட நாளையே தமிழ்நாடு அமைந்த நாளாக மாநில அரசு கொண்டாட வேண்டும். இன்ப தமிழ்நாடு உருவான தினமான நவம்பர்1 தேதியை தமிழ்நாடு உருவான நாளாகவும் மற்றும் நம் மாநிலம் உருவாக காரணமாக இருந்த "தமிழகத்தின் தந்தை" ம.பொ.சி அவர்களுக்கு சென்னையில் மணிமண்டபமும், குமரியில் திருவள்ளூர் சிலை அருகே சங்கரலிங்கனார்- ம.பொ.சி-மார்ஷல் நேசமணி ஆகியோருக்கு மாபெரும் முழு உருவச் சிலையையும் வைக்க தேசபக்தர்கள் சார்பாகவும்,ம.பொ.சி பற்றாளர்கள் சார்பாகவும், தமிழ் மொழி பற்றாளர்கள் சார்பாகவும்,உலகத் தமிழர்களின் சார்பாகவும், நம் பாரத தேசத்தின் ஒவ்வொரு மக்களின் குரலாக இந்த கோரிக்கையை தமிழக அரசுக்கு முன் வைக்கிறேன்.


தமிழகத்தின் வடக்கு , தெற்கு எல்லைகளை மீட்டு,தலைநகர் சென்னையைக் காத்து புதிய தமிழகம் படைத்த "தமிழகத்தின் தந்தை" ம.பொ.சி ஐயாவையும், அவருக்கு துணை நின்ற மற்ற தலைவர்களையும் எல்லை போராட்ட தியாகிகளை என்றென்றும் போற்றி வணங்குவோம்.


வாழ்க பாரதம்! வெல்க தமிழ்!


என்றும் தாயகப்பணியில்


பா. செந்தில் மபொசி


#நவம்பர்1 #தமிழ்நாடுநாள் #தமிழகத்தின்தந்தை #மபொசி #தமிழ்நாடு #பாரதம் #செந்தில்மபொசி #bharatratna4maposi #பாரத்ரத்னா #BharatRatna

No comments:

Post a Comment