Thursday, October 24, 2024

இன்றைய நாளில் பிறந்தவர்.* (24-அக்)

இராசிபுரம் கிருஷ்ணசுவாமி ஐயர் லட்சுமணன்.*

நகைச்சுவை சித்திரம் வரைபவரான இராசிபுரம் கிருஷ்ணசுவாமி ஐயர் லட்சுமணன் 1921ஆம் ஆண்டு அக்டோபர் 24ஆம் தேதி மைசூரில் பிறந்தார்.

கன்னட நகைச்சுவை இதழான, கோரவஞ்சிக்காக கேலிச்சித்திரங்கள் வரைந்தார். பின்னர்

டைம்ஸ் ஆப் இந்தியாவில் யூ செட் இட்' (You Said it) என்கிற தலைப்பில் 'திருவாளர் பொதுஜனம்' (Common Man) 'என்கிற கதாபாத்திரத்தை 1951ஆம் ஆண்டு முதல் 60 ஆண்டு காலமாக வரைந்து வந்தார்.

இவர் பத்மபூஷண் மற்றும் பத்மவிபூஷண் போன்ற பல விருதுகளைப் பெற்றுள்ளார். இவர் 2015ஆம் ஆண்டு மறைந்தார்.


*லட்சுமி சாகல்.*


👩‍✈️ 1914ஆம் ஆண்டு அக்டோபர் 24ஆம் தேதி ஜான்சி ராணி படை பிரிவின் தலைமை பொறுப்பில் இருந்த லட்சுமி சாகல் பிறந்தார்.


👩‍✈️ லட்சுமி சாகல் 1942ஆம் ஆண்டு பிரித்தானிய-ஜப்பானியப் போரில் காயம் அடைந்தவர்களுக்கு மருத்துவ உதவிகள் செய்துள்ளார்.


👩‍✈️ 1943ஆம் ஆண்டு நேதாஜி, ஜான்சிராணி படை என்ற பெயரில் பெண்களும் ஆயுதப் போராட்டத்தில் சமமாகப் பங்கேற்க வேண்டும் என லட்சுமி சாகலுக்கு அழைப்பு விடுத்தார். லட்சுமி சாகல் அந்த அழைப்பை ஏற்று ஜான்சிராணி படைக்கு பொறுப்பேற்றார்.


👩‍✈️ இளம் பெண் மருத்துவராகவும், காங்கிரஸ் கட்சியின் அனுதாபியாகவும், பின்னர் கேப்டன் லட்சுமியாக ஆயுதமேந்தி போராடியும், நேதாஜி சுபாஸ் சந்திர போஸின் நெருங்கிய உதவியாளருமாக இருந்த லட்சுமி சாகல் தனது 97வது வயதில் மறைந்தார்.

No comments:

Post a Comment