தினம் ஒரு மூலிகை* *பெரு மரம் (அ) தீக்குச்சி மரம்*
இவை சைமரூபியேஸி என்ற தாவர இனத்தைச் சார்ந்த மரம் பெரு மரம் நெடிது உயர்ந்து வளரக்கூடிய சாம்பல் நிற பட்டையையும் பசிய பூக்களையும் கரு கருவாள் வடிவான பசிய சிறகு கூட்டமைப்பு இலைகளையும் உடையது இம்மரத்திலிருந்து
வடியும் பிசின் மட்டி பால் எனப்படும் மிக்க நறுமணம் உடையது நறுமண புகை ஊட்டிகள் செய்வதற்கு பயன்படும் இதன் பிசின் பட்டை ஆகியவை மருத்துவ குணம் உடையது பட்டை துவர்ப்பியாகவும் உடலுரமூட்டியாகவும் செயல்படும் பிசின் உடல் வெப்பம் மிகுதல் உடல் பலம் மிகுதல் காய்ச்சல் தணித்தல் தாய்ப்பால் பெருக்குதல் ஆகிய குணம் உடையது பச்சை பட்டையை இடித்து பிழிந்து வடிகட்டிய சாறு 30 மில்லி அளவாக சமன் அளவு தயிரில் கலந்து காலை மாலை கொடுத்து வர செய்த கழிச்சல் இருமல் குணமாகும் பட்டை 40 கிராம் ஒன்று இரண்டாய் இடித்து 800 மில்லி நீரில் இட்டு எட்டில் ஒன்று ஆகுமாறு காய்ச்சி வடிகட்டி 40_50மிலி அளவாக கொடுத்து வர உன் புண்கள் ஆறும் நீடித்த கழிச்சல் சீத கழிச்சல் நீர்த்த கழிச்சல் தீரும்.
No comments:
Post a Comment