Sunday, October 27, 2024

அறிந்து கொள்வோம்...

பெருமாள் கோவில்களில் தீர்த்த ப்ரஸாதம் (ஸ்வீகரிக்கும்) வாங்கிக் கொள்ளும் போது, நமது கைவிரல்கள் இந்த அமைப்பில்தான் இருக்க வேண்டும் என்று நம் பெரியோர்கள் காட்டித் தந்திருக்கின்றனர்..

...உள்ளபடியே ஆராய்ந்து பார்ப்போமானால், நம் முன்னோர்களின் வழிகாட்டுதல்கள்

ஒவ்வொன்றிலும் ஆயிரமாயிரம் அர்த்த விசேஷங்கள் ஒளிந்திருப்பதை நம்மால் உணர முடியும்..


...சரி, இந்த மாதிரியான ஓர் அமைப்பில் ஏன் கைகளை வைத்துக்கொண்டு, தீர்த்த ப்ரஸாதத்தை ஸ்வீகரிக்க வேணும்?.. என்பதற்கான அழகான விளக்கம் அடியேனுக்கு, வயதிலும் அறிவிலும் பழுத்த ஸ்ரீவைஷ்ணவர் ஒருவரால் கிடைக்கப்பெற்றது..


"நான்..நான்.." என்று எதற்கெடுத்தாலும் முன்னுரிமை கோரும் நமது அகந்தையை (கட்டை விரல் என்றும் தனித்து நின்று தன்னை உயர்வாகக் காட்டிக் கொள்ளும்) அடக்கி ஆண்டு, (இதைத்தான் ஆள்காட்டி விரல் செய்கிறது..அது எம்பெருமான் விஷயத்தில் "ஆள்காட்டி" விரல் இல்லையாம்...அவனோடு நம்மைக் கூட்டி வைக்கும் "ஆள்கூட்டி" விரலாக இந்தப் பணியைச் செய்கிறதாம்..)


...மற்ற மூன்று விரல்களையும், அவன்பால் நீட்டி,


"எனது முக்கரணங்களையும் உனக்கே நாம் ஆட்செய்வோம்.." என்று உறுதியளிக்கும் ஓர் அடையாளமாம்!..


...இப்படி எல்லாம் "பவ்யத்தோடு" நடந்து கொண்டால், அந்தத் தீர்த்தனின் அருள் நிரந்தரமாய் நம்முள் தங்கிவிடும் என்பதையே, குழிந்திருக்கும் பகுதியில் விழுகின்ற தீர்த்தம் நமக்குக் காட்டிக் கொடுக்கிறதாம்....


...உண்மையில், இப்படி விஷயங்களைப் "பகுத்து" அறியும் அறிவுதான் ஒவ்வொரு ஜீவனுக்கும் தேவைப்படுகிறது அல்லவா?...

No comments:

Post a Comment