Monday, October 21, 2024

21.10.2024(திங்கட்கிழமை) - செய்தி துளிகள்

 *இன்றைய நட்பும் நிகழ்வும் செய்திகள்*

⛑️⛑️அக்.25-ல் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம்:- 👉“அனைத்து அரசுப் பள்ளிகளிலும் 2024 26 - கல்வியாண்டுகளுக்கான பள்ளி மேலாண்மைக் குழுக்களுக்கான முதல் கூட்டம், அக்டோபர் 25-ம் தேதி பிற்பகல் 3 முதல் 4.30 மணி வரை பள்ளிகளில் நடத்தப்பட வேண்டும்.

புதிய உறுப்பினர்களுக்கான அடையாள அட்டை வழங்கப்பட வேண்டும்."

-அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு,

பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை.

⛑️⛑️கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார் முதலமைச்சர்:-

👉'பெருந்தலைவர் காமராஜர், முத்தமிழறிஞர் கலைஞருக்கு பிறகு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கல்விக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குழந்தைகளை எப்படி நேசிக்கிறார் என்பதற்கு காலை உணவுத் திட்டம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். நல்ல மாணவர்களை தேர்ந்தெடுத்து அவர்களை ஊக்குவிப்பதும், அவர்களை வெளிநாடு அழைத்துச் செல்லும் பணியும் நமக்கு கிடைத்த பெருமையாகும்."          - இயக்குனர் பாரதிராஜா பாராட்டு.

⛑️⛑️தலைமை ஆசிரியர் காலி பணியிடங்களுக்கு தற்காலிக அடிப்படையில் ஆசிரியர்கள் நியமனம்.

👉TEMPERARY MIDDLE SCHOOL HM & TEMPERAY PRIMARY SCHOOL HM 

(வரலாற்றில் முதல் முறையாக )

👉( SMC மூலம் நேரடி நியமனம் & தற்காலிகம் )

👉அரசு பள்ளிகளில் காலியாக உள்ள நடுநிலை பட்டதாரி தலைமையாசிரியர் பணியிடம் மற்றும் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களை SMC மூலம் 15000 ரூபாய் மற்றும் 12000 ரூபாய் தொகுப்பு ஊதியத்திற்கு உடுமலை வட்டார கல்வி அலுவலகம் மூலம் நேரடியாகவும் மற்றும் தற்காலிகமாகவும் நியமிக்க செய்தித்தாளில்

பொது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

👉தற்காலிக ஆசிரியர் பணிக்கு வரும் 21-ல் நேர்காணல்

⛑️⛑️தமிழ் மொழி இலக்கியத் திறனாய்வுத் தேர்வு முடிவுகளை துரிதமாக வெளியிட திட்டம்.

⛑️⛑️பிரான்ஸ் செல்ல உள்ள "கனவு ஆசிரியர்"களுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் கலந்துரையாடல்.                                                ⛑️⛑️ஆங்கில ஆசிரியர்களுக்கு whatsapp குழு ஆரம்பித்து பணித்திறன் மேம்படுத்துதல் சார்ந்து எஸ் சி இ ஆர் டி இயக்குனரின் செயல்முறைகள் வெளியீடு.

⛑️⛑️இனி வினாத்தாளில் ‘ஆ’ பிரிவு கேள்விகள் கட்டாயம்: ஜேஇஇ தேர்வில் தளர்வுகள் திரும்பப் பெறப்படுவதாக என்டிஏ அறிவிப்பு

⛑️⛑️திருத்தப்பட்ட ஆண்டறிக்கையில் குறிப்பிடப்பட்ட தேதிகளின்படியே போட்டித் தோ்வுகளுக்கான அறிவிக்கை வெளியிடப்பட்டதாக தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தெரிவித்துள்ளது.

⛑️⛑️“உருது மொழியை யாரும் திணிக்கவில்லை! நீங்கள் எங்கெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அங்கெல்லாம் இந்தி மொழியை திணிக்கிறீர்கள். சிறுபான்மையினர் பேசும் மொழியை நாங்கள் பாதுகாப்போம்.”

-தமிழிசை சௌந்தரராஜனுக்கு, அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பதிலடி

⛑️⛑️RTI - 2005 - 01.08.2024 அன்று உள்ளபடி பள்ளிக் கல்வித் துறையில் மாநில அளவிலான பொதுத் தகவல் அலுவலர் மற்றும் மேல்முறையீட்டு அலுவலர் விவரம் வெளியீடு.

⛑️⛑️"உதய் அண்ணா விளையாட்டுத்துறை அமைச்சரான பிறகுதான், எங்களைப் போன்ற மாற்றுத்திறனாளி வீரர்களுக்கும் சம உரிமை கொடுக்க ஆரம்பிச்சாங்க. வேறெந்த மாநிலத்திலும் இந்த மாதிரி கிடையாது"

பாரிஸ் பாராலிம்பிக்ஸ் பேட்மிண்டனில் வெள்ளிப் பதக்கம் வென்ற துளசிமதி முருகேசன் பேட்டி.

⛑️⛑️அரசியல் களத்தில் வாய்மொழியில் வித்தை காட்டுவது நம் வேலை இல்லை

செயல்மொழிதான் நமது அரசியலுக்கான தாய்மொழி.

த.வெ.க. மாநாட்டிற்கு பள்ளி சிறுவர்கள், கர்ப்பிணிகள், முதியவர்கள் வர வேண்டாம்"

தவெக தலைவர் விஜய், மாநாடு குறித்து கடிதம்.

⛑️⛑️தமிழ் மீது இருக்கிற

அவமரியாதையை காட்டுகிறது - தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் குறித்து நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறிய கருத்துக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பதில்

⛑️⛑️தேசிய மகளிர் ஆணையத்தின் புதிய தலைவராக விஜயா ரகத்கர் நியமனம்.

⛑️⛑️"திமுக இல்லை என்றால் இந்தியாவில் துணை ஆட்சி மொழியாக ஆங்கிலம் இருந்திருக்காது"

-சென்னை ஓட்டேரியில் நடைபெற்ற தெருமுனை பொதுக்கூட்டத்தில் மாநிலங்களைவை உறுப்பினர் திருச்சி சிவா பேச்சு

⛑️⛑️"நம்ம முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் விளையாட்டு வீரர்களுக்கு ரொம்ப உதவி செய்யுறாங்க, அதை பயன்படுத்தி எல்லாரும் மேல வாங்க வரணும்"

சேலத்தில் வீரர், வீராங்கனைகளுக்கு 'கலைஞர் விளையாட்டு உபகரணங்கள்' வழங்கும் விழாவில் கலந்து கொண்ட பாரா ஒலிம்பிக் வீரர் மாரியப்பன் தங்கவேலு நெகிழ்ச்சி

⛑️⛑️ஆதரவற்ற வீடு இல்லாதோர், மனநிலை பாதிக்கப்பட்டோரை தெருக்களில் பார்க்க நேர்ந்தால் 9444717100 அழைக்கவும்.

சென்னை காவல்துறை

"காவல் கரங்கள்"

திட்டம் மூலம் அவர்களுக்கான தேவைகளை ஒருங்கிணைக்கிறது.இதுவரை 6000 மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர்.

⛑️⛑️ஆந்திராவில் வயிற்றுப்போக்கு காரணமாக 8 பேர் உயிரிழப்பு - விரிவான ஆய்வுக்கு உத்தரவு.

👉ஆந்திரா: குர்லா என்ற கிராமத்தில் வயிற்றுப்போக்கு காரணமாக 8 பேர் உயிரிழப்பு. 100க்கும் மேற்பட்டோர்  மருத்துவமனையில் அனுமதி.

👉போதிய இடம் இல்லாததால் அருகில் உள்ள பள்ளியில் தங்க வைத்து சிகிச்சை!

விரிவான ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ள நிலையில்,இன்று நேரில் துணை முதலமைச்சர் பவன் கல்யாண் ஆய்வு செய்ய உள்ளதாக தகவல்.

⛑️⛑️⛑️⛑️⛑️⛑️⛑️⛑️⛑️⛑️

🌹🌹முதியோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் 2 குழந்தைகளுக்கு மேல் இருந்தால் தான் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட புதிய சட்டத்தை கொண்டு வர முடிவு செய்துள்ளதாக ஆந்திரா முதல்வர் கூறினார்.

👉ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு,அம்மாநில நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், ‘ஆந்திரா மாநிலத்தில் வசிப்பவர்கள் அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும்.

👉ஆந்திராவில் அதிகரித்து வரும் முதியோர்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு இந்த ஆலோசனை வழங்கப்படுகிறது. மக்கள் தொகை மேலாண்மைக்கு மாநில அரசு திட்டமிட்டு வருகிறது.

👉அதன்படி அதிக குழந்தைகளைக் கொண்ட குடும்பங்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும். இதுமட்டுமின்றி, இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்கள் மட்டுமே உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வழிவகை செய்யப்படும்.

👉அதிக குழந்தைகளைக் கொண்டவர்கள் தேர்தலில் போட்டியிடக் கூடாது என்ற சட்டத்தை முன்பு கொண்டு வந்தோம். ஆனால் இப்போது அந்தச் சட்டத்தை ஒழித்துவிட்டு, அதனை மாற்ற முடிவு செய்துள்ளோம். அதிக குழந்தைகளைக் கொண்ட குடும்பங்களுக்கு கூடுதல் வசதிகளை வழங்குவது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது. தென் மாநிலங்களில், குறிப்பாக ஆந்திராவில் அதிகரித்து வரும் முதியோர் எண்ணிக்கை கவலையளிக்கும் விஷயமாக உள்ளது.

👉முதியோர் அதிகம் கொண்ட ஜப்பான், சீனா உள்ளிட்ட சில ஐரோப்பிய நாடுகள் இந்த பிரச்சனையில் போராடி வருகின்றன. இளைஞர்கள் நாட்டின் பிற பகுதிகளுக்கு அல்லது வெளிநாடுகளுக்குச் செல்வதால், தென்னிந்தியாவில் இந்தப் பிரச்னை அதிகரித்து வருகிறது.தென் மாநிலங்களில் கருவுறுதல் விகிதம் குறைந்து வருகிறது. தென்மாநிலங்களில் கருவுறுதல் விகிதம் 1.6 சதவீதமாக உள்ளது; இது தேசிய விகிதமான 2.1-ஐ விட மிகவும் குறைவு. இதே நிலைமை நீடித்தால், 2047ம் ஆண்டுக்குள் நமது முதியோர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும்.

👉ஆந்திராவில் மட்டுமல்ல, நாட்டின் பல கிராமங்களிலும் இப்போது முதியோர்கள் மட்டுமே எஞ்சியுள்ளனர். மக்கள்தொகைக் கட்டுப்பாட்டுக்கான எனது முந்தைய முயற்சிகளை மாற்றிக் கொள்ள முடிவு செய்துள்ளேன். வேகமாக அதிகரித்து வரும் மக்கள்தொகை காரணமாக இயற்கை வளங்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகின.ஆனால் இப்போது நிலைமை மாறிவிட்டது’ என்று கூறினார்.

⛑️⛑️⛑️⛑️⛑️⛑️⛑️⛑️⛑️⛑️

🌹🌹தொலைதூர கல்வி படிப்பில் சேர அக்.31 வரை அவகாசம்: இக்னோ பல்கலைக்கழகம் அறிவிப்பு


👉தொலைதூரக் கல்வி படிப்புகளில் சேருவதற்கான கடைசி தேதி அக்டோபர் 31 வரை நீட்டிக்கப்பட்டிருப்பதாக இக்னோ பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

👉இது தொடர்பாக இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் (இக்னோ) சென்னை மண்டல முதுநிலை இயக்குநர் கே.பன்னீர்செல்வம் கடந்த  (வெள்ளிக்கிழமை) வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மத்திய அரசு பல்கலைக்கழகமான இக்னோ பல்கலைக்கழகம் தொலைதூரக் கல்வி திட்டத்தின் வாயிலாக பல்வேறு பாடப்பிரிவுகளில் இளங்கலை, முதுகலை, பட்டய மற்றும் சான்றிதழ் படிப்புகளை வழங்கி வருகிறது.

👉இந்நிலையில், ஜூலை 2024 பருவத்துக்கான மாணவர் சேர்க்கைக்கான கடைசி தேதியானது, பல்வேறு தரப்பினரின் நலனை கருத்தில்கொண்டு அக்டோபர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த தேதி நீட்டிப்பு, சான்றிதழ் மற்றும் செமஸ்டர் அடிப்படையிலான படிப்புகளுக்கு பொருந்தாது.எனவே, செமஸ்டர் அடிப்படையிலான மற்றும் சான்றிதழ் படிப்புகள் நீங்கலாக மற்ற அனைத்து வகை இளங்கலை, முதுகலை மற்றும் டிப்ளமா படிப்புகளில் மாணவர்கள் https://ignouadmission.samarth.edu.in என்ற இணையதள இணைப்பை பயன்படுத்தி அக்டோபர் 31-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

👉இக்னோ பல்கலைக்கழகத்தில் பிஏ, பிகாம், பிஎஸ்சி (பொது) படிப்புகளில் சேரும் தகுதியுடைய எஸ்சி, எஸ்டி விண்ணப்பதாரர்களுக்கு கல்விக் கட்டணத்தில் விலக்கு அளிக்கப்படுகிறது. மாணவர் சேர்க்கை தொடர்பான கூடுதல் விவரங்களை பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் (www.ignou.ac.in) அறிந்துகொள்ளலாம். மேலும், இக்னோ சென்னை மண்டல அலுவலகத்தை 044-26618040 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டும் விவரங்கள் பெறலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

No comments:

Post a Comment