Monday, October 21, 2024

உலக அயோடின் குறைபாடு தினம்.*

 *இன்றைய நாள்.*

(21-அக்)

*

🍚 உலக அயோடின் குறைபாடு தினம் ஆண்டுதோறும் அக்டோபர் 21ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. அயோடின் பற்றாக்குறை குறித்து அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இத்தினம்

கொண்டாடப்படுகிறது.


🍚 அயோடின் சத்துக் குறைபாட்டால் இளம் வயதினரின் அறிவுத்திறன் பாதிக்கப்படும். பெரியவர்களுக்கு நரம்புத்தளர்ச்சி ஏற்படும். எனவே தினமும் அயோடின் கலந்த உப்பினைப் பயன்படுத்த வேண்டும் என்பதே இத்தினத்தின் முக்கிய நோக்கமாகும்.


*முக்கிய நிகழ்வுகள்...*


👉 இந்தியக் காவலர் நினைவுநாள் : அக்டோபர் 21ஆம் தேதி இந்தியாவில் காவலர் நினைவு தினமாக அனுசரிக்கப்படுகிறது.


👉 1835ஆம் ஆண்டு அக்டோபர் 21ஆம் தேதி கர்நாடக இசை மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசுவாமி தீட்சிதர் மறைந்தார்.

No comments:

Post a Comment