மலச்சிக்கலுக்கான எளிய மருந்துகள்…*
√ சித்த மருத்துவத்தில் உள்ள நிலவாகைச் சூரணம், சிறந்த மலமிளக்கி. அதிலுள்ள கிளைக்கோசைடுகள் (Glycosides), செரிமானப் பகுதியில் உள்ள நரம்புகளைத் தூண்டி, மலத்தை வெளியேற்றுவதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.
√ திரிபலா சூரணம், பொன்னாவரை சூரணம், கடுக்காய் லேகியம், கடுக்காய் சூரணம், மூலக்குடோரி எண்ணெய் என உடல் அமைப்புக்குத் தகுந்த
நிறைய சித்த மருந்துகள் இருக்கின்றன.• இரவில் படுக்கப் போவதற்கு முன்னர் இளஞ்சூடான நீர் இரண்டு டம்ளர் அருந்துவதும், காலை எழுந்ததும், பல் துலக்கி, இரண்டு டம்ளர் சாதாரண நீர் அருந்துவதும் நல்லது.
• ஒரு கப் சூடான தண்ணீரில் அரை பழம் எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து குடித்தால் போதும் உங்கள் குடல் இயக்கத்தை மேம்படுத்தும். இந்த ஜூஸை ஒரு நாளைக்கு இரண்டு முறை என எடுத்து வந்தால் உங்கள் மலச்சிக்கல் தீரும்.
• இஞ்சி சாற்றில் கடுக்காய் பொடி ஒரு ஸ்பூன் கலந்து காலை, மாலை சாப்பிட மலச்சிக்கல் குணமாகும்
• இஞ்சியை துவையல் அல்லது பச்சடி செய்து சாப்பிட மலச்சிக்கல் தீரும்.
• தினமும் அரை தம்ளர் நெல்லிக்காய் சாறை குடித்து வர, குடலியக்கமானது நன்கு செயல்பட்டு, நாள்பட்ட மலச்சிக்கல் குணமாகும்
• செம்பருத்தி இலைகளை தூள் செய்து, தினமும் இருவேளை சாப்பிட்டு வர மலச்சிக்கல் தீரும்.
• தினமும் இரவில் இரண்டு அல்லது மூன்று பேரிச்சம்பழங்களை சாப்பிட்டு பின்னர் சுடுதண்ணீர் அருந்த மலச்சிக்கல் தீரும்.
• கடுக்காய் பிஞ்சை லேசாக விளக்கெண்ணெயில் வறுத்து பொடித்து அந்த பொடியை ஒரு டீஸ்பூன் அளவுக்கு முதியோர் சாப்பிடலாம். மலம் கழிப்பது எளிதாகும்.
• கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் ஆகிய மூன்று மூலிகைக்காய்களின் உலர்ந்த தூள் (விதை நீக்கிய பின்), திரிபலா எனப்படும் இந்த சூரணம் ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டிய மிக முக்கிய மருந்து, மாலையில் இந்தப் பொடியை ஒரு டீஸ்பூன் சாப்பிட்டு வெந்நீர் அருந்தினால், காலையில் மலத்தை எளிதாகக் கழியவைக்கும்.
√ தொடர்ந்து மலச்சிக்கல் தொந்தரவு நீடித்தால், மருத்துவரின் ஆலோசனை நிச்சயம் தேவை.
√ சில நோய் நிலைகளிலும் மலச்சிக்கல் பிரச்னை உண்டாகும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
-> உணவியல் மற்றும் வாழ்வியல் மாற்றம் மூலம் சரிசெய்ய முடியாதபோது மருந்துகளுக்குச் செல்லலாம். மருந்துகளின் மூலம் இயல்பான மலம் வெளியானவுடன், மருந்துகளை நிறுத்திவிடுவது நல்லது.
உடல் பேசும் மொழிகளைப் புரிந்து கொள்ளாமல், அவசர உலகத்தில் மெளனிகளாக ஓடிக்கொண்டே இருக்கின்றோம். நோய்கள் உண்டாகவிருப்பதை, ’மலச்சிக்கல்’ எனும் மொழியின் மூலம் உடல் வெளிப்படுத்துவதைப் புரிந்து கொண்டு செயல்படுவது அவசியம்.
No comments:
Post a Comment