**
இதை நுரைப்பிற்கு மெழுகு பிற்கு என்றும் அழைப்பார்கள் தமிழகமெங்கும் தானே வளரும் குடியினம் கசப்பு மிக்க சுவையுடையது கொடியின் எல்லா பாகங்களும் கசப்பு சுவை உடையது இலை வேர் காய் ஆகியவை மருத்துவ குணம் உடையது நஞ்சு முறிக்கும் தன்மை அது இலையை இடித்து பிழிந்து வடிகட்டி 30 மில்லி அளவாக காலையில் மட்டும் மூன்று நாட்கள் உட்கொள்ள வாந்தியாகி அனைத்து
நஞ்சுகளையும் முறிக்கும் மருத்துவத்தின் போது உப்பில்லா பத்தியம் இருத்தல் அவசியம் காய்ச்சாற்றில் மூன்று துளியோ அல்லது காயை உலர்த்தி இடித்து எடுத்த பொடியையும் நசியமிட மஞ்சள் காமாலை தீரும் ஒற்றைத் தலைவலி தீரும் உலர்ந்த காயின் பொடியை தாளில் சுருட்டி பீடி போல் புகைக்க பல் தேய்வு சொத்தை பூச்சிகள் ஆகியவை தீரும் உலர்ந்த வேர் மிளகு சமனளவு எடுத்து இடித்து பொடியாக்கி அரை கிராம் அளவாக வெண்ணையில் குழைத்து கொடுக்க செய்யான் கடியினால் ஏற்படும் தடிப்பும் நமைச்சலும் தீரும் வேர் நன்னாரி வேர் சீரகம் ஆகியவற்றை சமநலவு உலர்த்தி பொடித்து சர்க்கரை சேர்த்து காய்ச்சிய பாலில் அரை தேக்கரண்டி அளவாக கலந்து பருகிவர சீழ்ப்பிரமேகம் தீரும் நன்றி
No comments:
Post a Comment