Monday, October 21, 2024

இன்றைய நாளில் பிறந்தவர்

 *.*

(21-அக்)

*ஆல்ஃபிரட் நோபல்.*


🏆 நோபல் பரிசினை உருவாக்கிய ஆல்ஃபிரட் நோபல் 1833ஆம் ஆண்டு அக்டோபர் 21ஆம் தேதி சுவீடனில் பிறந்தார். இவர் 1857ஆம் ஆண்டு எரிவாயு மீட்டர் குறித்த கண்டுபிடிப்புக்கு காப்புரிமை பெற்றார். மேலும் வெடிப்பொருட்கள் குறித்த

ஆய்வில் ஈடுபட்டு, 1863ஆம் ஆண்டு வெடி மருந்தைக் கண்டுபிடித்தார்.


🏆 பல முயற்சிகளுக்குப் பிறகு டைனமைட்டையும், சேஃப்டி பவுடரையும் 1867ஆம் ஆண்டு இவர் கண்டுபிடித்தார். 1875ஆம் ஆண்டு பிளாஸ்டிக் ஜெலட்டினைக் கண்டுபிடித்தார். சிறிய ஆயுதங்களுக்கு தேவைப்படும் புகை வெளியிடாத பாலிஸ்டைட் வகை கன் பவுடரையும் கண்டுபிடித்தார்.


🏆 இவர் போஃபர்ஸ் என்னும் பெரிய ஆயுத உற்பத்தி நிறுவனத்திற்கு உரிமையாளரானார். இவரது நினைவாக நோபலியம் என்று ஒரு தனிமத்துக்கு பெயரிடப்பட்டது. இவர் சர்வதேச அளவில் சுமார் 350 காப்புரிமைகளைப் பெற்றார்.


🏆 உலகம் முழுவதும் உள்ள தலைசிறந்த விஞ்ஞானிகளை, சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட காரணமாக இருந்த ஆல்ஃபிரட் நோபல் 1896ஆம் ஆண்டு மறைந்தார்.


*சுர்ஜித் சிங் பர்னாலா.*


🌟 தமிழக முன்னாள் ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா 1925ஆம் ஆண்டு அக்டோபர் 21ஆம் தேதி ஹரியானாவில் பிறந்தார். தமிழ்நாட்டின் மாநில ஆளுநராக நவம்பர் 3, 2004ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரை பணியாற்றியுள்ளார்.


🌟 இவர் 1942ஆம் ஆண்டு லக்னோவில் இருந்தபோது வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் கலந்து கொண்டார். 1967ஆம் ஆண்டு பர்னாலாவில் மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞராக பணியாற்றினார்.


🌟 1969ஆம் ஆண்டு பஞ்சாப் மாநில கல்வி அமைச்சரானார். 1977ஆம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினராகி மொரார்ஜி தேசாய் தலைமையில் விவசாயம் மற்றும் உணவுத்துறை அமைச்சரானார். 1985ஆம் ஆண்டு சிரோமணி அகாலி தளம் கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு பஞ்சாப் மாநில முதல்வரானார்.


🌟 மக்களவை உறுப்பினராக 1996ஆம் ஆண்டு மற்றும் 1998ஆம் ஆண்டுகளில் தேர்ந்தெடுக்கப்பட்டு வேதிப்பொருட்கள், உரம் மற்றும் உணவுத்துறை அமைச்சரானார். அதிக ஆண்டுகள் ஆளுநராக இருந்தவர்களில் ஒருவரான சுர்ஜித் சிங் பர்னாலா 2017ஆம் ஆண்டு மறைந்தார்.

No comments:

Post a Comment