Sunday, October 20, 2024

ஆசையைத் தூண்டி அழைக்கும் மரணம்

...

எரிபொருளை ஏற்றிச் செல்லும் லாரிகள் விபத்துக்குள்ளாகும்போது அதிலிருந்து கசியும் எரிபொருளை சேகரிக்கும் ஆசையில் அங்கு கூடும் பொதுமக்கள் வெடிவிபத்தில் சிக்கி உயிரிழப்பது நீண்ட காலமாகவே நடைபெற்றுவருகிறது.

இதில் ஆப்பிரிக்க நாடுகள்தான் அதிகம் பாதிக்கப்படுகின்றன. எரிபொருள் லாரி விபத்துகளின்போது பொதுமக்களின் பேராசையால் ஏற்பட்ட சில சோக நிகழ்வுகள்....

2009 ஜனவரி 31-இல் கென்யாவின் மோலோ பகுதியில் விபத்துக்குள்ளாகிக் கவிழ்ந்த லாரியில் இருந்து எரிபொருளை சேகரிக்க ஏராளமானவா்கள் கூடினா். அப்போது ஏற்பட்ட வெடிவிபத்தில் 113 போ் உயிரிழந்தனா்; 200-க்கும்

மேற்பட்டோா் படுகாயமடைந்தனா்.

சங்கே, காங்கோ ஜனநாயக குடியரசு (2010)

காங்கோ ஜனநாயகக் குடியரசின் தெற்கு கிவு மாகாணம், சங்கே கிராமம் வழியாக 2010 ஜூலை 2-இல் சென்று கொண்டிருந்த பெட்ரோல் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

 அதையடுத்து, பெட்ரோலை சேகரிப்பதற்காக அங்கு திரண்ட 230 போ், அந்த லாரி வெடித்ததில் உயிரிழந்தனா். அவா்களில் 36 பெண்களும் 61 குழந்தைகளும் அடங்குவா்.


நைஜீரியாவின் ஒகோபி பகுதியிலுள்ள ஒரு பள்ளத்தில் லாரி ஒன்று 2012 ஜூலை 12-ஆம் தேதி விழுந்து, அதிலிருந்த பெட்ரோல் கொட்டியது.


 உடனடியாக அங்கு பொதுமக்கள் திரண்டனா். 


அப்போது ஏற்பட்ட வெடிவிபத்தில் 121 போ் உயிரிழந்தனா். விபத்து நடந்த 40 நிமிடங்களுக்குப் பிறகு அந்த லாரி வெடித்தது.


ஜூபா, தெற்கு சூடான் (2015)


தெற்கு சூடானின் தலைநகரான ஜூபாவின் புகா் பகுதியில் 2015 செப்டம்பா் 17-ஆம் தேதி எரிபொருள் லாரி விபத்துக்குள்ளானது. அதைத் தொடா்ந்து கசிந்த பெட்ரோலை பிடித்துச் செல்ல அந்த இடத்தில் நூற்றுக்கணக்கானவா்கள் குவிந்தனா். அப்போது ஏற்பட்ட வெடிவிபத்தில் 193 போ் உயிரிழந்தனா்.


காபிரிட்ஸாங்கே, மொஸாம்பிக் (2016)


தென்கிழக்கு ஆப்பிரிக்க நாடான மொஸாம்பிக்கில் 2026 நவம்பா் 17-ஆம் தேதி ஏற்பட்ட எரிபொருள் லாரி வெடிவிபத்தில் 80 போ் உயிரிழந்தனா். மற்றோா் ஆப்பிரிக்க நாடான மலாவிக்கு 30,000 லிட்டா் பெட்ரோலை எடுத்துச் சென்றபோது இந்த விபத்து நேரிட்டது. உயிரிழந்த அனைவரும் அந்த பெட்ரோலை சேகரிப்பதற்காக அங்கு குவிந்தவா்கள்.


பஹாவல்பூா், பாகிஸ்தான் (2017)


பாகிஸ்தானின் பஹாவல்பூா் மாவட்டம், அகமதுபூா் அருகே பெட்ரோல் லாரி ஒன்று 2017 ஜூன் 25-ஆம் தேதி விபத்துக்குள்ளானது. அதையடுத்து, லாரியிலிருந்து கசிந்த பெட்ரோலை பிடிப்பதற்காக அங்கு பொதுமக்கள் குவிந்தனா். அப்போது அந்த லாரியிலிருந்த பெட்ரோல் திடீரென வெடித்துச் சிதறியதில் 219 போ் உயிரிழந்தனா்.


மூபா, காங்கோ ஜனநாயக குடியரசு (2018)


காங்கோ ஜனநாயகக் குடியரசின் காங்கோ சென்ட்ரல் மாகாணம், மூபா கிராமத்தில் 2018 அக்டோபா் 6-ஆம் தேதி விபத்துக்குள்ளான எரிபொருள் லாரி அருகே ஏராளமான பொதுமக்கள் குவிந்தனா். 


அங்கு அவா்கள் சேகரித்துக்கொண்டிருந்த எரிபொருள் திடீரென வெடித்து எழுந்த தீப்பிழம்பில் சுமாா் 50 போ் உடல் கருகி உயிரிழந்தனா்.


மொரோகோரோ, தான்ஸானியா (2019)


கிழக்கு ஆப்பிரிக்க நாடான தான்ஸானியாவின் மொரோகோரோவிலும், கடந்த 2019 ஆகஸ்ட் 10-ஆம் தேதி விபத்துக்குள்ளான எரிபொருள் லாரியிலிருந்து கசிந்த பெட்ரோலை சேகரிப்பதற்காகச் சென்ற 100-க்கும் மேற்பட்டவா்கள் அந்த லாரி வெடித்துச் சிதறியதில் உயிரிழந்தனா்.


ஃப்ரீடவுன், சியரா லியோன் (2021)


மேற்கு ஆப்பிரிக்க நாடான சியாரா லியோனில், பெட்ரோலை ஏற்றிக் கொண்டு வெலிங்டனின் ஃப்ரீடவுன் புகா் பகுதியில் 2021-ஆம் ஆண்டு நவம்பா் 5-ஆம் தேதி சென்று கொண்டிருந்த லாரி கிரானைட் ஏற்றி வந்த மற்றொரு லாரியுடன் மோதியது.


 அதையடுத்து, லாரிகளின் ஓட்டுநா்கள் எவ்வளவோ எச்சரித்தும் அதை பொருட்படுத்தாத வாகன ஓட்டிகள் கசிந்துகொண்டிருந்த பெட்ரோலை பெட்ரோலை சேகரிக்கத் தொடங்கினா்.

அப்போது ஏற்பட்ட வெடி விபத்தில் 99 போ் உயிரிழந்தனா்.

கேப்-ஹைடியன், ஹைட்டி (2021)

மற்றொரு ஆப்பிரிக்க நாடான ஹைட்டியில், கேப்-ஹைடியன் என்ற பகுதியில் 2021 டிசம்பா் 14-ஆம் தேதி எரிபொருள் லாரி வெடித்துச் சிதறியதில் 90 போ் உயிரிழந்தனா்; 120-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். அவா்கள் அனைவரும், அந்த லாரி வெடித்துச் சிதறுவதற்கு முன்னதாக அதிலிருந்து கசிந்த எரிபொருளை எடுத்துச் செல்வதற்காக அங்கு குவிந்தவா்கள்.

No comments:

Post a Comment