*.*
(01-நவ)
*வி.வி.எஸ்.லக்ஷ்மண்.*
🏏 1974ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வி.வி.எஸ்.லக்ஷ்மண் ஹைதராபாத்தில் பிறந்தார். இவர் வலது கை மட்டையாளர் ஆவார்.
🏏 1996ஆம் ஆண்டில் அகமதாபாத்தில், தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணிக்கு எதிரான தேர்வு கிரிக்கெட்
போட்டியில் அறிமுகம் ஆனார்.🏏 கிரிக்கெட் உலகக்கிண்ணத்தில் விளையாடாமல் நூறு தேர்வு கிரிக்கெட் போட்டியில் விளையாடிய வீரர்களில் லக்ஷ்மணும் ஒருவர் ஆவார்.
🏏 இந்தியக் குடியுரிமை விருதுகளில் நான்காவது பெரிய விருதாக கருதப்படும் பத்மஸ்ரீ விருதினையும் இவர் பெற்றுள்ளார்.
*ஆல்ஃபிரெட் வெஜினர்*
🌟 கண்டங்களின் பெயர்ச்சி பற்றிய கோட்பாடுகளை வகுத்த ஆல்ஃபிரெட் வெஜினர் (Alfred Wegener) 1880ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி ஜெர்மனி தலைநகர் பெர்லினில் பிறந்தார்.
🌟 இவர் வளிமண்டலம், பூமியின் காலநிலை மாற்றங்கள் போன்ற ஆய்வுகளில் அதிகம் ஆர்வம் காட்டினார். துருவ காலநிலை குறித்த ஆராய்ச்சிகளுக்காக கிரீன்லாந்தில் 1906ஆம் ஆண்டு முதல் 2 ஆண்டுகாலத்திற்கு பயணம் மேற்கொண்டார். இவ்வாறு மொத்தம் 4 முறை இப்பயணத்தை இவர் மேற்கொண்டுள்ளார்.
🌟 கண்டங்களின் இடப்பெயர்ச்சி என்ற தனது கோட்பாட்டை 1912ஆம் ஆண்டு வெளியிட்டார். இதுதான் பிற்காலத்தில் 'கண்டப் பெயர்ச்சி' எனக் குறிப்பிடப்பட்டது. தி ஆரிஜின் ஆஃப் கான்டினென்ட்ஸ் அண்ட் ஓஷன்ஸ் (The Origin of Continents and Oceans) என்ற தனது பிரபலமான கட்டுரையை 1915ஆம் ஆண்டு வெளியிட்டார். கண்டங்கள் ஒரு காலத்தில் இணைந்திருந்தது பற்றிய தனது விரிவான ஆராய்ச்சி முடிவுகளை இதில் வெளியிட்டார்.
🌟 வாழ்நாளின் இறுதிக்காலம் வரை பல கோட்பாடுகளை கண்டறிந்த இவர் 1930ஆம் ஆண்டு மறைந்தார்.
No comments:
Post a Comment