Sunday, November 3, 2024

*நரகாசுரன் கதை !!* *🌹பகுதி - 01 🌹*

 *🛕🛕🛕🔔 ஓம் 🔔🛕🛕🛕

*விஷ்ணுவின் உதவியை நாடிய பூமாதேவி !!*

🎇🎇💥🎇🎇💥🎇🎇💥🎇🎇

*🌹விஷ்ணுவின் உதவியை நாடிய பூமாதேவி !!*

🌟 இறைவன் படைத்த இந்த பிரபஞ்சத்தில் ஒரு அங்கமாக இருக்கக்கூடியவர்கள் மனிதர்கள். இந்த மனிதர்கள் வாழும் இடமான பூமியில் தாங்கள் செய்யும் செயல்களின் காரணமாக அதாவது ஆசை, மோகம், போகம் போன்றவற்றால் பலவிதமான கொடூரமான

பாவங்களை செய்து, அவர்களின் பாவ மூட்டைகளை கணக்கற்ற அளவில் பெருக்கி கொண்டுள்ளனர்.


🌟 அவை அனைத்தையும் எம்மால் தாங்க இயலவில்லை என திருமாலிடம், பூமாதேவி எடுத்துரைத்து இந்த நிலைமை மேலும் தொடருமாயின் பூமியில் உள்ள உயிர்கள் யாவும் அழிந்து விடும். இதிலிருந்து இவர்களை காத்து ரச்சிக்கும் படி வேண்டினாள் பூமாதேவி. அதற்கு பொறுமைக்கொள் பூமாதேவி என்று கூறினார் திருமால். 


     *🌹வராக அவதாரம் :*


🌟 சப்த ரிஷிகளில் ஒருவரான காசிப முனிவருக்கும் அவருடைய மனைவியான திதிக்கும் பிறந்தவர்களே இந்த ஹிரண்யாக்ஷன் மற்றும் ஹிரண்யகசிபு ஆவார்கள். இவர்களில் இளையவனான ஹிரண்யாக்ஷன் பிரம்ம தேவரை நோக்கி கடுந்தவம் இருந்து வந்தார். அவருடைய தவத்தின் வலிமையால் மூன்று லோகங்களிலும் தீச்சுவாலைகள் ஏற்பட்டன. இதனால் பாதிக்கப்பட்ட தேவர்கள் அனைவரும் பிரம்ம தேவரை சந்தித்து நிகழ்ந்தவற்றை எடுத்து உரைத்தனர். பின்னர் பிரம்ம தேவர் அவர்களுக்கு ஏற்படும் துன்பத்தில் இருந்து காப்பதாக கூறி அவர்களை அவர்கள் பணியை செய்ய அனுப்பி வைத்தார். பின்பு ஹிரண்யாக்ஷன் தவம் செய்யும் இடத்தை அடைந்தார். 


🌟 ஹிரண்யாக்ஷன் உன் தவத்தால் மனம் மகிழ்ந்தோம் வேண்டும் வரத்தைக் கேட்பாயாக... என்று பிரம்ம தேவர் கூறினார். கண்விழித்த ஹிரண்யாக்ஷன் பிரம்ம தேவரை வணங்கி தனக்கு இந்த பிரபஞ்சத்தில் உருவான எந்த உயிரினத்தாலும், எந்த ஆயுதத்தாலும் தனக்கு அழிவு அல்லது மரணம் நேரிடக்கூடாது என்றும், தான் மூவுலகத்திற்கும் அதிபதியாக வேண்டும் என்ற இரண்டு வரங்களையும் வேண்டினான். திருமாலை எண்ணி பிரம்ம தேவரும் அவன் வேண்டிய வரத்தை அருளினார்.


🌟 காலங்கள் கடக்க பூமியில் வாழ்பவர்கள் நல்லறங்களை விடுத்து தீயச் செயல்களின் மீது அதிக விருப்பம் கொண்டு ஈடுபட தொடங்கினார்கள். அதாவது தன்னுடைய சுகபோக வாழ்விற்காக மற்றவர்களை துன்புறுத்துதல், முனிவர்கள் செய்யும் யாகத்தை தடுத்தல், பொய்யை உரைத்து பிறரின் பொருட்களை கவர்தல், கொலை - கொல்லை போன்ற செயல்களை செய்தனர். இது தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே சென்றது.


இதனால் பூமாதேவியின் கவலையும் அதிகரிக்க தொடங்கின. பின் மும்மூர்த்திகளுக்கும் பூமாதேவியின் இன்னல்கள் புரியவே பூமாதேவியின் இன்னல்களை நீக்க திருமால் மானிடனாக பிறப்பெடுக்க உள்ளார் என்ற செய்தியை மட்டும் பூமாதேவிக்கு தெரிவித்தனர். 


🌟 மானிட பிறப்பெடுக்கும் திருமாலுக்கு உதவும் வகையில் அனைத்து தேவர்களும் அவர் பிறப்பெடுக்கும் யது குலத்தில் அவதரிக்க தொடங்கினார்கள். 


         *ஆர் வி ஜெ*


🌟 யது குலத்தின் அரசனாக இருந்தவர் சூரசேனன். இவரது புத்திரர் வசுதேவர் ஆவார். வசுதேவர் வாலிப பருவத்தை அடைந்ததும் அவருக்கு திருமணம் செய்ய முடிவு செய்தனர். எனவே, தேவகர் என்பவரின் மகளான தேவகியை பெண் பார்த்து நிச்சயம் செய்து வசுதேவருக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தனர்.


🌟 பிரம்ம தேவரிடம் இருந்து வரத்தைப் பெற்ற ஹிரண்யாக்ஷன் தன்னை யாராலும் வெல்ல முடியாது என்ற மமதையில் உலகிலுள்ள அனைத்து உயிர்களையும் துன்புறுத்த தொடங்கினான். பின்பு மூவுலகங்களையும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர எண்ணினான். அதுமட்டுமின்றி தன்னை வெற்றி கொள்ள எவரும் இல்லை என்ற எண்ணமும், தானே ஆளப்பிறந்தவன் என்ற எண்ணமும் அவனிடம் மென்மேலும் அதிகரிக்கத் தொடங்கின.


🌟 பின்பு, அவன் முதலில் சத்தியலோகம் சென்று தனக்கு வரமளித்த பிரம்ம தேவரை வெற்றிக்கொள்ள ஆயத்தமானான். அவன் வருகையை உணர்ந்த பிரம்ம தேவரும் அவனிடம் போர் புரியாமல் சில சாதகமான வார்த்தைகள் மூலம் சமாதானப்படுத்தி உலகைக் காப்பவரான திருமாலை நீ வென்றால் உனக்கு நிகர் எவரும் இல்லை என்று கூறி திருமால் வீற்றிருக்கும் வைகுண்டத்தை நோக்கி ஹிரண்யாக்ஷனை அனுப்பி வைத்தார்.


🌟 வைகுண்டத்தை அடைந்த ஹிரண்யாக்ஷன் திருமால் வீற்றிருக்கும் இடத்தை நோக்கி சென்று கொண்டிருந்தார். அவ்வேளையில் அங்கு காவல் பணியில் இருந்த துவாரபாலகர்கள் எவ்விதமான தடையையும் ஏற்படுத்தாமல் அவனை உள்ளே அனுப்பினார்கள்.


அங்கு சென்றதும் திருமால் ஸ்வரூபியாகக் காணப்பட்டார். என்ன செய்வது என்று தெரியாமல் திருமாலை தேடிச் செல்ல முயன்றான் ஹிரண்யாக்ஷன்.


🌟 போஜ குல மக்களின் அரசனாக இருந்தவர் உக்கிரசேனன் ஆவார். இவர் தேவகரின் அண்ணன். உக்கிரசேனனுக்கு கம்சன் என்று ஒரு மகன் இருந்தார். கம்சன் தனது சித்தப்பாவான தேவகரின் மகளான தேவகியை வசுதேவருக்கு பெரியவர்கள் சூழ தன் தலைமையில் மணம் முடித்து வைத்தார். 


🌟 பின்பு தனது சகோதரியான தேவகியையும், தனது சகோதரியின் கணவனான வசுதேவரையும், அழகிய மலர்களை கொண்டு அலங்கார வேலைப்பாடு நிறைந்த குதிரை தேரில் அமரவைத்து தான் சாரதியாக இருந்து, தனது தங்கையின் கணவரின்(வசுதேவரின்) அரசாட்சி பகுதிக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தார். அவ்வேளையில் எங்கு சென்று கொண்டிருக்கிறாய் கம்சனே என ஆகாயத்திலிருந்து ஒரு அசரீரி ஒலித்தது.


*🌹03.11.2024... ஆர் வி ஜெகநாதன் (சென்னை) 🙏*


         *தொடரும்...*


🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀

No comments:

Post a Comment