*தினம் ஒரு மூலிகை*
*வெள்ளிலோத்திரம்* மலை பகுதியில் வளரும் பசுமையான சிறு மரம் நீண்ட போல் போன்ற இலைகளையும் வெள்ளை அல்லது மங்கலான நிறத்துடன் உள்ள மலர்களையும் உடையது பழங்கள் செந்நிறமாகவும் ஒன்று முதல் மூன்று விதைகளை உடையது இதன் பட்டையும் கட்டையும் மருத்துவ குணம் உடையது குளிர்ச்சி உண்டாக்கியாகவும் நஞ்சு நீக்கியாகவும் செயல்படும் பச்சை பட்டையை இடித்து எடுத்த சாறு 30 துளி அளவாக காலை மாலை கொடுத்து வர கருப்பை தொடர்பான நோய்கள் சீத கழிச்சல் சூட்டு கழிச்சல் ஆகியவை குணமாகும் அதிமதுரம் மாதுளம் பழத்தோல் மருதம்பட்டை ஆகியவற்றின் பொடி சம அளவாகவும் வெள்ளி லோத்திரப் பட்டை பொடி மூன்று மடங்காகவும் சேர்த்து கலந்து வைத்துக் கொண்டு ஒரு கிராம் அளவாக நான்கு ஐந்து நாட்கள் கொடுக்க கழிச்சல் சீத கழிச்சல் வீக்கம் ஈரல் நோய்கள் பெரும்பாடு சூதகத்தடை ஆகியவை தீரும் கட்டையை ஒன்று இரண்டாய் இடித்து எட்டு மடங்கு நீர் விட்டு எட்டில் ஒன்றாய் காய்ச்சி வடிகட்டி வாய் கொப்பளித்து வர வாய் நாற்றம் பள்ளாட்டம் பற்களில் சீழ் குருதி கசிவு ஆகியவை தீரும் நன்றி
No comments:
Post a Comment