ஒரு மரத்தில் குடியிருந்த குரங்குகளெல்லாம் கூடி வாரம் ஒரு நாள் உண்ணா விரதம் மேற் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தனவாம். எனவே தலைவர் குரங்கிடம் போய் மற்ற குரங்குகள் எல்லாம் விஷயத்தைச் சொன்னவுடன், தலைவர் குரங்காரும் ''சரி அவ்வாறே செய்து விடுவோம். அதற்கு முன்னால் உண்ணா விரதம் முடிந்தவுடன் உண்ணுவதற்கான பழங்களைச் சேகரித்து வைத்து விடுங்கள். ஏனெனில் விரதம் முடியும் பொழுது பசியாக இருக்கும். எனவே அப்பொழுது போய் பழங்களைத் தேடிக் கொண்டிருக்க முடியாது'' என்று அறிவுரை சொன்னார். அதை அமோதித்த மற்ற குரங்குகளும் அருகில் இருந்த தோட்டத்திலிருந்து நிறைய வாழைப்பழங்களைக் கொண்டு வந்து தலைவர் முன் வைத்தன. உடனே தலைவர் ''சரி உண்ணா விரதத்தை ஆரம்பித்து விடுவோம்'' என்றார். அப்பொழுது கூட்டத்தில் இருந்த ஒரு மூத்த அனுபவமுள்ள குரங்கு ''தலைவரே விரதம் துவங்குவதற்கு முன் அவரவர் பழங்களை பிரித்து கொடுத்து விடுவோம். இல்லையென்றால் விரதம் முடிந்தவுடன் சண்டையிட்டுக் கொள்வார்கள்'' என்று யோசனை சொல்லிற்று. அதை ஆமோதித்த தலைவரும் அவ்வாறே பழங்களை பகிர்ந்தளித்தார். அப்பொழுது ஒரு குரங்கு எழுந்து, பழத்தின் தோலை உரித்து வைத்து விடுவோம். அந்த நேரத்தில் உரித்துக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை என்றவுடன். பழத்தின் தோல் உரித்து முன்னே வைக்கப்பட்டது. உடனே ஒரு குட்டிக் குரங்கு எழுந்து தலைவரே ஒரு நாள் விரதம் இருக்கப் போகிறோம். தோல் நீக்கிய இந்தப் பழங்களின் மேல் தூசிகள் படிந்து விடும். எனவே இந்த பழங்களெல்லாம் கனிந்து அழுகிப் போவதற்கு வாய்ப்பு உள்ளது. நமக்குதான் உணவை வாயில் ஒதுக்கி வைத்துக் கொள்ளும் வசதி இருக்கிறதே ? எனவே பழங்களை அவரவர் வாயில் ஒதுக்கி வைத்துக் கொள்வோம் என்றது. அவ்வளவுதான் பழங்கள் அனைத்தும் வாயில் ஒதுக்கி வைக்கப்பட்டன. சற்று நேரம்தான் ஆகியிருந்தது. ஒதுங்கியிருந்த பழங்களெல்லாம் தானாகவே தொண்டைக் குழியை நோக்கி போகத் துவங்கின. இவ்வாறு குரங்குகளின் விரதம் நிறைவுக்கு வந்தது. இவ்வுலகில் பெரும்பாலானவர்களின் தியான மற்றும் விரத முயற்சியும் இவ்வாறுதான் இருக்கிறது.
Wednesday, December 27, 2023
வாரம் ஒரு நாள் உண்ணா விரதம்
ஒரு மரத்தில் குடியிருந்த குரங்குகளெல்லாம் கூடி வாரம் ஒரு நாள் உண்ணா விரதம் மேற் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தனவாம். எனவே தலைவர் குரங்கிடம் போய் மற்ற குரங்குகள் எல்லாம் விஷயத்தைச் சொன்னவுடன், தலைவர் குரங்காரும் ''சரி அவ்வாறே செய்து விடுவோம். அதற்கு முன்னால் உண்ணா விரதம் முடிந்தவுடன் உண்ணுவதற்கான பழங்களைச் சேகரித்து வைத்து விடுங்கள். ஏனெனில் விரதம் முடியும் பொழுது பசியாக இருக்கும். எனவே அப்பொழுது போய் பழங்களைத் தேடிக் கொண்டிருக்க முடியாது'' என்று அறிவுரை சொன்னார். அதை அமோதித்த மற்ற குரங்குகளும் அருகில் இருந்த தோட்டத்திலிருந்து நிறைய வாழைப்பழங்களைக் கொண்டு வந்து தலைவர் முன் வைத்தன. உடனே தலைவர் ''சரி உண்ணா விரதத்தை ஆரம்பித்து விடுவோம்'' என்றார். அப்பொழுது கூட்டத்தில் இருந்த ஒரு மூத்த அனுபவமுள்ள குரங்கு ''தலைவரே விரதம் துவங்குவதற்கு முன் அவரவர் பழங்களை பிரித்து கொடுத்து விடுவோம். இல்லையென்றால் விரதம் முடிந்தவுடன் சண்டையிட்டுக் கொள்வார்கள்'' என்று யோசனை சொல்லிற்று. அதை ஆமோதித்த தலைவரும் அவ்வாறே பழங்களை பகிர்ந்தளித்தார். அப்பொழுது ஒரு குரங்கு எழுந்து, பழத்தின் தோலை உரித்து வைத்து விடுவோம். அந்த நேரத்தில் உரித்துக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை என்றவுடன். பழத்தின் தோல் உரித்து முன்னே வைக்கப்பட்டது. உடனே ஒரு குட்டிக் குரங்கு எழுந்து தலைவரே ஒரு நாள் விரதம் இருக்கப் போகிறோம். தோல் நீக்கிய இந்தப் பழங்களின் மேல் தூசிகள் படிந்து விடும். எனவே இந்த பழங்களெல்லாம் கனிந்து அழுகிப் போவதற்கு வாய்ப்பு உள்ளது. நமக்குதான் உணவை வாயில் ஒதுக்கி வைத்துக் கொள்ளும் வசதி இருக்கிறதே ? எனவே பழங்களை அவரவர் வாயில் ஒதுக்கி வைத்துக் கொள்வோம் என்றது. அவ்வளவுதான் பழங்கள் அனைத்தும் வாயில் ஒதுக்கி வைக்கப்பட்டன. சற்று நேரம்தான் ஆகியிருந்தது. ஒதுங்கியிருந்த பழங்களெல்லாம் தானாகவே தொண்டைக் குழியை நோக்கி போகத் துவங்கின. இவ்வாறு குரங்குகளின் விரதம் நிறைவுக்கு வந்தது. இவ்வுலகில் பெரும்பாலானவர்களின் தியான மற்றும் விரத முயற்சியும் இவ்வாறுதான் இருக்கிறது.
அப்பவே சொல்ல மறந்து போய்ட்டேன்
மறுநாள் கடைத்தெருவில் நம்மாளு போய்க் கொண்டிருந்த போது விற்றவன் அவரை சந்தித்தார்.
"அப்பவே சொல்ல மறந்து போய்ட்டேன். இப்ப உங்களை பார்த்த உடனே நினைவுக்கு வந்தது. நான் உங்களுக்கு வித்தது கிணத்தை மட்டும்தான். அதில் இருக்கும் தண்ணீரை அல்ல. ஆகையினால் அந்த தண்ணீரை நீங்கள் பயன்படுத்த வேண்டுமானால் மாதா மாதம் அதற்கு எனக்கு கட்டணம் செலுத்த வேண்டி வரும். அதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்" என்றார்.
அப்ப நம்மாளு தயங்காமல் "நேத்து நானேஉங்க கிட்ட சொல்லனும்னு இருந்தேன். நாம்ப இன்னிக்கு நேர்ல பார்த்தது நல்லதா போச்சு. எனக்கு கிணறு மட்டுமே போதும். அதில் இருக்கும் உங்கள் தண்ணீர் எனக்கு வேண்டாம்.
ஒன்று, நீங்கள் அதிலிருக்கும் தண்ணீரை காலிபண்ணி வெத்து கிணறை எனக்கு கொடுங்கள். இல்லையென்றால் எனக்கு சொந்தமான இடத்தில் தண்ணீரை வைத்திருப்பதற்காக நீங்கள் மாத வாடகை செலுத்த வேண்டி இருக்கும்" என்றாரே பார்க்கலாம்.
மவனே யார் கிட்ட??
ஒருவர் மீது ஒருவர் அன்பு செலுத்தும்போது என்ன நடக்கும்?
2,99,500 ரூபாயை மீண்டும் அக்கவுண்டில் டெபாசிட் செய்ய சொன்னார்
"ஐயாயிரம் ரூபாய்க்கு கீழே தொகை எடுக்க வேண்டும் என்றால், நீங்கள் உங்கள் ATM கார்டை பயன்படுத்தி எடுங்கள்" என்றாள். உடனே அந்த முதியவர், ஏனென்று கேட்க, அந்த பெண் கேஷியர் சற்று எரிச்சலுடன், "இது தான் பேங்க் சட்டம். வேற எந்த விஷயமும் இல்லைனா இடத்தை காலி பண்ணுங்க, உங்களுக்கு பின்னால் நிறைய பேர் வெயிட் பண்றங்க" என்றாள் சற்றே கடுமையுடன்..
அந்த முதியவர் , இப்பொழுது அமைதியாக தனது செக்கை மீண்டும் அந்த கேஷியர் பெண்ணிடம் கொடுத்து, "தயவு செய்து என் அக்கவுண்ட்டில் உள்ள பணம் முழுவதும் எனக்கு திரும்ப கொடுத்து விடுங்கள்" என்றார். அந்த கேஷியர் பெண் அந்த முதியவர் அக்கவுண்டிலுள்ள பண நிலுவையைப் பார்த்து அதிர்ச்சியானாள்.
அவள் தனது தலையை ஆட்டிக் கொண்டு அந்த முதியவரிடம், "என்னை மன்னித்து கொள்ளுங்கள் தாத்தா.. உங்கள் கணக்கில் மூன்றரை கோடி ரூபாய் உள்ளது. எங்கள் வங்கியில் இப்பொழுது அவ்வளவு பணம் இல்லை. எனவே தாங்கள் தயவுசெயுது நாளை சிறிது நேரம் ஒதுக்கி வர இயலுமா?" என்று மிகப் பணிவோடு பவ்யமாக கேட்டாள்.
உடனே அந்த முதியவர் "இப்பொழுது நான் எவ்வளவு பணம் எனது அக்கவுண்டில் எடுக்க இயலும்..?" என்று கேட்டார். உடனே அந்த பெண், "மூன்று லட்சம் வரை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்" என்றாள். உடனே அந்த முதியவர் அந்த பெண்ணிடம் மூன்று லட்சம் ரூபாய் தனக்கு வேண்டுமென்று கூற,
அந்த பெண்ணும் மூன்று லட்சம் ரூபாய் வேகமாக மிக பணிவுடன் கொடுத்தாள். அந்த முதியவள் இப்பொழுது ஐநூறு ரூபாயை அவளது கைப்பையில் வைத்துவிட்டு மீதம் இருந்த 2,99,500 ரூபாயை மீண்டும் அவளது அக்கவுண்டில் டெபாசிட் செய்ய சொன்னார்.
அந்த கேஷியர் பெண் இப்பொழுது வாயடைத்து நின்றாள். சட்டங்கள் தளர்க்கப்படாதவையாக இருந்தாலும், நாம் மனிதர்களின் சில சூழ்நிலைக்கேற்ப அனுசரித்து போகலாம். ஒருவருடைய தோற்றத்தையோ, உடையையோ வைத்து ஒருவரை எடை போடக் கூடாது. மாறாக அனைவரையும் மரியாதையாக நடத்த வேண்டும்.
நம்மிடம் இருப்பவை எல்லாம் அவர்கள் கொடுத்தது
எனக்கு ரோஜாவை மிகவும் பிடிக்கும்
" என் கணவர் நிறைய குறைகளோடு இருக்கிறார்...அவரோடு என்னால் இனி என்னால் வாழமுடியாது...எனவே நான் அவரைவிட்டு விலகி விடட்டுமா?".
அவளுக்கு நேரடியாக பதில் சொல்லாத துறவி...
"அம்மணி! இங்குள்ள செடிகளில் ஏதாவது ஒன்றை உனக்கு தர விரும்புகிறேன்...எது வேண்டும் ...கேள்?" என்றார்.
அப்பெண் ரோஜா செடியைக் கேட்டாள்...
" அதைப் பராமரிப்பது மிகவும் கடினம்..அதோடு அதில் நெறைய முட்கள் வேறு இருக்கிறதே? இதுவா வேண்டும்?" இது துறவி..
"எனக்கு ரோஜாவை மிகவும் பிடிக்கும்...அதனால் அதனிடம் உள்ள குறைகள் பெரிதாகத் தெரியாது.." என்றாள்..
புன்னகைத்த துறவி சொன்னார்:" வாழ்கையும் அப்படிதான்! பிறரை நேசிக்கக் கற்றுக் கொண்டால், அவர்களது குறை பெரிதாகத் தெரியாது"
பிரச்சனைகள் அனைத்தும் எப்போது முடியும்
ஒரு குட்டி பெண்ணும் குட்டி பையணும்
அந்த பையன் சொன்னான் என்கிட்ட இருக்கிற பொம்மைகள் எல்லாத்தையும் உன்கிட்ட தர்ரேன் நீ வச்சு இருக்கிற இனிப்புகள் எல்லாத்தையும் எனக்கு தர்ரியா என்று கேட்டான். குட்டி பெண்ணும் அதற்கு சம்மதம் தெரிவித்தாள்.
அந்த பையன் தன்னிடம் உள்ள நல்ல பொம்மையை ஒளித்து வைத்துவிட்டு அந்த குட்டி பெண்ணிடம் இனிப்புகளை கேட்டான்.குட்டி பெண் எல்லா இனிப்புகளையும் கொடுத்து விட்டு பொம்மைகளை வாங்கிகொண்டாள்.
அன்று இரவு அந்த குட்டி பெண் நிம்மதியாக உறங்கினாள். அந்த பையனுக்கு உறக்கமே வரவில்லை. அவள் எல்லா இனிப்புகளையும் நம்மிடம் தந்திருப்பாளா இல்லை நாம் ஒளித்து வைத்தது போல் அவளும் ஏமாற்றி இருப்பாளா என்று நினைத்துக் கொண்டே உறக்கம் இல்லாமல் அவஸ்த்தைப்பட்டான்.
நீங்கள் 100 சதவீதம் அடுத்தவர் மேல் நம்பிக்கை வைக்கவில்லை என்றால் அடுத்தவர் உங்களிடம் காட்டும் அன்பின் மீது சந்தேகம் இருந்து கொண்டே இருக்கும்.
சிறுவன் ஒருவனுக்கும் வாக்குவாதம்
என்னவென்று அறிவதற்காக அந்தக் கூட்டத்திற்குள் நுழைந்தார்.
அங்கே கழுதைகளுடன் வணிகன் ஒருவன் நின்றிருந்தான். அவனுக்கும், சிறுவன் ஒருவனுக்கும் வாக்குவாதம் நடந்து கொண்டிருந்தது.
வணிகனைப் பார்த்து 'உங்களுக்குள் என்ன தகராறு?" என்று கேட்டார்.
'ஐயா! நான் வெளியூர். பத்துக் கழுதைகளின் மேல் வெல்லத்தை ஏற்றிக் கொண்டு இந்த ஊர் சந்தைக்கு வந்தேன். இங்கே வரும் போது என் கழுதைகளில் ஒன்று துள்ளிக் குதித்தது. அதன் முதுகில் இருந்த மூட்டை கீழே விழுந்து விட்டது. அந்த மூட்டை மிகுந்த எடையுள்ளதாக இருந்தது. என் ஒருவனால் அதைத் தூக்க முடியவில்லை.
அப்போது இந்தச் சிறுவன் அங்கு வந்தான். அவனை அழைத்த நான், 'தம்பி! இந்த மூட்டையைக் கழுதையின் மேல் ஏற்ற உதவி செய். உனக்கு நிறைய வெல்லம் தருகிறேன். நீ மகிழ்ச்சியாகச் சாப்பிடலாம்" என்றேன். இவனும் என்னுடன் சேர்ந்து மூட்டையைத் தூக்கி கழுதையின் முதுகில் மூட்டையை ஏற்றினான்.
'நான் சொன்னது போலவே, கை நிறைய வெல்லத்தை எடுத்து இவனிடம் தந்தேன்." ஆனாலும் இவன், 'நீங்கள் நிறைய வெல்லம் தருவதாகச் சொன்னீர்கள். சொன்னது போல நடந்து கொள்ளவில்லை. குறைவான அளவு வெல்லமே தருகிறீர்கள். நான் பெற்றுக் கொள்ள மாட்டேன்" என்று மறுத்தான்.
'நான் முதலில் எடுத்ததைப் போல இன்னொரு பங்கு வெல்லம் எடுத்து நிறைய வெல்லம் இது. பெற்றுக் கொள்" என்று தந்தேன்.
'இதுவும் குறைவாகத்தான் இருக்கிறது. நீங்கள் நிறைய வெல்லம் தந்தால்தான் வாங்கிக் கொள்வேன் என்று மறுத்தான்."
மேலும், சிறிதளவு வெல்லத்தைச் சேர்த்து இவனிடம் தந்தேன்.
'இதுவும் நிறைய இல்லை" என்று வாங்க மறுத்தான். எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. இவனோ, 'நிறைய வெல்லம் கொடு. நிறைய வெல்லம் கொடு" என்று அடம் பிடிக்கிறான். அதற்குள் இங்கே கூட்டம் கூடி விட்டது.
கூட்டத்தில் உள்ளவர்களுக்கும் என்ன செய்வது என்று தெரியவில்லை. வேடிக்கை பார்த்தபடி நிற்கின்றனர்.
அந்தச் சிறுவன் குறும்பு செய்து விளையாடுகிறான் என்பது புரிந்தது.
வணிகனிடமிருந்து வெல்லத்தை வாங்கினார்.
தன் ஒரு கையில் சிறிதளவு வெல்லத்தை வைத்தார். இன்னொரு கையில் இன்னும் அதிகமாக வெல்லத்தை வைத்தார்.
இரண்டு கைகளையும் அந்தச் சிறுவனின் முன் நீட்டினார்.
'எந்தக் கையில் எவ்வளவு வெல்லம் உள்ளது? உன்னால் சொல்ல முடியுமா?" என்று கேட்டார்.
'இந்த கையில் வெல்லம் குறைவாக உள்ளது. அந்த கையில் வெல்லம் நிறைய உள்ளது," என்றான் சிறுவன்.
'எந்த கையில் நிறைய வெல்லம் உள்ளது?" என்று கேட்டார் .
நிறைய வெல்லம் இருந்த கையைக் காட்டினான் சிறுவன்.
'இந்தக் கையில் நிறைய வெல்லம் உள்ளது என்று நீயே ஒப்புக் கொண்டாய். இதை வாங்கிக் கொண்டு போ. இனி வீணாக இங்கே தகராறு செய்யாதே," என்ற அவர் அதைச் சிறுவனிடம் நீட்டினார்.
வேறு வழியில்லாத அந்தச் சிறுவன் வெல்லத்தை எடுத்துக் கொண்டான். ஏமாற்றத்துடன் அங்கிருந்து சென்றான்
ஒவ்வொரு உயிரினங்களுக்கும் ஏதோ ஒரு கவலை
காட்டில் இருந்த அந்த சிங்கம் தன்னைத்தானே நொந்து கொண்டது.
"எனக்கு இவ்வளவு பலம் இருந்தும், இரும்பு போன்ற உறுதியான நகங்களும், பற்களும் இருந்தும் என்ன பயன்? நிம்மதியாய் இருக்க முடியவில்லையே! கேவலம், இந்த சேவல் கூவும் சப்தம் என்னை நடுங்க வைக்கிறது. இம்மாதிரி பயந்துகொண்டே எத்தனை நாளைக்குத்தான் வாழ்வது?" என தனக்குத்தானே முணுமுணுத்துக் கொண்டது.
அப்போது அங்கே வந்த யானை, ரொம்பக் கவலையோடு வேகமாய் காதுகளை முன்னும் பின்னும் அசைத்தது. அதைப் பார்த்த சிங்கம், "என்னப்பா, உனக்கு என்ன கவலை? உன்னை எதிர்க்கும் அளவுக்கு எந்த பிராணியாவது இருக்கிறதா? உன் உடலைப் பார்த்தாலே எல்லாம் பயந்து ஓடுமே, நீ எதற்காகக் கவலையோடு இருக்கிறாய்?" என்று கேட்டது.
"இதோ, என் காதுக்கு அருகில் பறக்கும் குளவியைப் பார்த்தாயா? இது என் காதுக்குள் போய் கொட்டினால், உயிர் போவது போல் வலிக்கும். அதற்காகத்தான் குளவி காதுக்குள் சென்றுவிடாமல் இருக்க, காதுகளை ஆட்டிக்கொண்டே வருகிறேன்" என்றது யானை.
யானை சொன்னதைக் கேட்டதும் சிங்கம் யோசித்தது.
இந்த உலகில் உள்ள ஒவ்வொரு உயிரினங்களுக்கும் ஏதோ ஒரு கவலை இருக்கத்தான் செய்கிறது. அதுபோன்ற கவலைதான் எனக்கும் ஏற்பட்டுள்ளது. ஆனால், நான் கவலையை மட்டுமே நினைத்து வாழ்க்கையில் உள்ள இன்பங்களை இழந்து கொண்டிருக்கிறேனே என்று நினைத்து வெட்கப்பட்டது.
அன்றுமுதல் கவலையை விட்டுவிட்டு மகிழ்ச்சியுடன் வாழ ஆரம்பித்தது சிங்கம்.
ஜெய் உப்புமா!
எனவே விடுதிக் காப்பாளர் என்ன காலை உணவு கொடுக்கலாம் எனத் தெரிவு செய்ய வாக்கெடுப்டை நடத்தினார். உப்புமா, தோசை, பூரி, இட்லி, பொங்கல் என லிஸ்ட் கொடுத்து வாக்கெடுப்பை நடத்தினார்.
உப்புமா வெறி பிடித்வர்கள் 20 பேர் அதற்கு வாக்களித்தனர்.
20 பேருக்கு பிடித்ததை மற்ற எல்லோரும் சாப்பிட வேண்டிய துயரம் நடந்தது.
எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையின்மைக்கு மிக பெரிய விலை கொடுக்க வேண்டியிருந்தது.
ஜெய் உப்புமா!
நடராஜர்' பெயர்க்காரணம்
தில்லை மரங்கள் அடர்ந்த வனமான சிதம்பரத்தில் ஆடும், நடராஜரின் திருநடனம் காண, வியாக்ர பாதர் என்னும் புலிக்கால் முனிவரும், பதஞ்சலி முனிவரும் தவம் செய்து வந்தனர். அவர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த நன்னாள் வந்தது. இந்திரன் உள்ளிட்ட தேவர்கள் அங்கே கூடினர். துந்துபிகள், பானுகம்பன் போன்ற தேவலோக இசைக் கலைஞர்கள் வாத்தியங்களை இசைத்தனர். பிரம்மா,விஷ்ணு, லட்சுமி, சரஸ்வதியும் வந்து சேர்ந்தனர். மூவாயிரம் தில்லை அந்தணர்களும் அங்கே ஒன்று கூடினர். அப்போது, நந்தியின் மீது நடராஜப் பெருமான் எழுந்தருளினார். அம்பாள் பார்வதி, "சிவகாமி' (சிவன் மீது விருப்பம் கொண்டவள்) என்ற பெயருடன் அருகில் நின்றாள். அப்போது சிவன் ஆனந்த நடனம் ஆடினார். எல்லாரும் நடனம் கண்டனர். நடனம் ஆடியதால், "நடராஜா' என்று போற்றினர்.
*இசை பிறந்த கதை*
படைப்பவரான பிரம்மா மட்டுமே, ஒவ்வொரு முறை உலகம் அழியும் போதும் இறந்து போவார். உலகம் தோன்றியதும் அவரே இறைவனால் முதலில் எழுப்பப்படுவார். இவ்வாறு அவர் 32 முறை பிறந்து இறந்திருக்கிறார். அந்த 32 பிரம்ம தலைகளையும், நடராஜர் தனது கழுத்தில் அணிந்திருப்பார்.
உலகை அழிப்பதும், ஆக்குவதும் தானே என்பதைக் குறிப்பதே சிவனின் இந்தக் கோலம். அவர் நடனம் ஆடும் போது, தலையில் சூடியிருக்கும் பிறைநிலவில் இருந்து அமிர்தம் வழிந்து, பிரம்ம தலைமாலையில் விழும். அமிர்தம் பட்டால் இறந்தவர்கள் உயிர் பிழைத்து விடுவர். அந்த பிரம்ம தலைகளும் உயிர் பெற்று நடராஜரைப் புகழ்ந்து பாடும். பாட்டும், ஆட்டமும் இணையும் போது ஆனந்தம் ஊற்றெடுக்கும். இந்த பிரம்ம கபாலங்களில் இருந்தே இசை பிறந்ததாக சங்கீத சாஸ்திரம் கூறுகிறது. இதனால் தான் கலைஞர்கள் சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் அரங்கேற்றம் நடத்த விரும்புகின்றனர்.
*அங்குலம் அங்குலமாய் வர்ணனை*
*நடராஜர் ஒரு காலை ஊன்றி மற்றொரு காலைத் தூக்கியபடி நடனமாடுகிறார்*
முயலகன் என்னும் அசுரன் மீது அவருடைய ஊன்றிய பாதம் அழுத்திப் பிடித்திருக்கிறது. இந்த அசுரன் "நான்' என்னும் அகந்தையைக் குறிப்பவன். இந்த எண்ணம் நம்மிடம் எழுந்து விடக்டாது என்பதை உணர்த்தவே நடராஜர் இவ்வாறு கால் ஊன்றியிருக்கிறார்.
அவர் தனது கழுத்தில் பாம்பை அணிந்திருக்கிறார். பாம்பு ஒரு அழிவு சக்தி. மனிதனும் அழிவை உண்டாக்கும் தீய எண்ணங்களை அடக்கியாள வேண்டும் என்பதை இது உணர்த்துகிறது.
*நடராஜரின் விரிந்த ஜடை, நமக்கு பரந்த அறிவு வேண்டும் என்பதைக் குறிக்கிறது*
*கையிலுள்ள உடுக்கையும், நெருப்பும் பிறப்பையும், இறப்பையும் குறிக்கிறது*
*அவரது ஒரு கை அபயஹஸ்த நிலையில் உள்ளது. அதாவது, என்னைச் சரணடைந்தவர்கள் பயம் கொள்ளத் தேவையில்லை என்பதைக் காட்டுகிறது.*
*அவரது இன்னொரு கை வரத ஹஸ்த நிலையில் உள்ளது. இது வேண்டிய வரத்தை நமக்கு அருள்கிறது*
*இதழில் புன்சிரிப்பும், முகத்தில் மலர்ச்சியும் மனதில் எப்போதும் ஆனந்தம் நிறைந்திருக்க வேண்டும் என்பதைக் காட்டுகிறது*
*ஓம் நமச்சிவாய*
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன ?
மார்கழி மாதத்தில் சிவ ஆலயங்களில் ஆருத்ரா தரிசனம் நடைபெறுவது சிறப்பு வாய்ந்தது. திருவாதிரை நட்சத்திர தினத்தில் செய்யப்படும் மகா அபிஷேகத்தையும், அதனைத் தொடர்ந்து நடைபெறும் ஆருத்ரா தரிசனத்தையும் காண பக்தர்கள் குவிவார்கள். இந்த ஆண்டு ஆருத்ரா தரிசனம் *இன்று 27- ம் தேதி புதன்கிழமை* சிறப்பாக நடைபெற உள்ளது. ஆருத்ரா தரிசனம் கண்டால், எல்லா பாவங்களும் நீங்கி, நீங்கா புண்ணியம் பெற்றிடலாம்.
தமிழ் மொழியில் திருவாதிரை என்று கூறப்படும் நட்சத்திரத்திற்கு வடமொழியில் ஆர்த்ரா என்று பெயர். இதுவே ஆருத்ரா எனப் படுகிறது. மார்கழி மாத திருவாதிரை நட்சத்திர நாளில், எல்லா சிவாலயங்களில் ஆருத்ரா தரிசனம் சிறப்பாக நடைபெறும்.
*சிவபெருமானின் பஞ்ச சபைகளான திருவாலங்காடு இரத்தின சபை, சிதம்பரம் கனக சபை, மதுரை வெள்ளி சபை, திருநெல்வேலி தாமிர சபை, திருக்குற்றாலம் சித்திர சபையாக போற்றப்படகிறது. இந்த ஐந்து சபைகளிலும் ஆருத்ரா தரிசனம் மிக கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.*
ராமனுக்கு ஜென்ம நட்சத்திரம் புனர்பூசம், கிருஷ்ணருக்கு ரோகிணி, முருகனுக்கு விசாகம். இவை யாரும் இறைவன் இப்புவியில் அவதரித்த நட்சத்திரங்கள். அப்படி இருக்க பிறப்பே இல்லாத ஆதியும் அந்தமும் இல்லாத பரம்பொருளுக்கு சிவபெருமானுக்கு உரிய நட்சத்திரம் திருவாதிரை என்கிறார்களே எப்படி என்று கேட்கிறீர்களா 'பிறவா யாக்கைப் பெற்றோன் பெரியோன்' என்று சங்க இலக்கியமான சிலப்பதிகாரம் சிவபெருமானைக் குறிக்கிறது. சிவபெருமானின் நட்சத்திரம் திருவாதிரை ஆனது பற்றி புராணச் செய்திகள் உள்ளன.
சிவபெருமான் நெருப்பு உருவமாக தன்னை வெளிப்படுத்திக் காட்டியது சிவராத்திரி நன்னாள். சுவாமி தான் இப்பூமியில் தோற்றுவித்த ஆருத்ரா நன்னாள். சிவராத்திரியன்று அவரை வழிபட்டால் பலன். ஆருத்ரா நாளில் தரிசித்தாலே பலன் ஆகும்.
வியாக்ரபாத முனிவர், பதஞ்சலி முனிவரும் சிவ பெருமானின் திருநடனத்தை காண விரும்பி ஈசனை துதித்தனர். அவர்களுக்காக திருநடனத்தை நிகழ்த்திக் காட்டிய நிகழ்வு தான் ஆருத்ரா தரிசனமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
ஆனந்தத் தாண்டவமாடிய கனகசபை சிதம்பரம், திருஆலங்காடு திருத்தலத்தில் ஊர்த்துவத் தாண்டவமாடிய ரத்தினசபை, மதுரையில் பாண்டியனின் வேண்டுதலுக்காக இடக்கால் மாறி ஆடிய வெள்ளிசபை திருஆலவாய், நெல்லையில் தாமிர சபை , குற்றாலத்தில் சித்திர சபை ஆகிய பஞ்ச சபைகளிலும் ஆருத்ரா அபிஷேகம், தரிசனமும் வெகு சிறப்பாக நடைபெறும். ஈசனின் ஆருத்ரா தரிசனம் கண்டால், எல்லா பாவங்களும் நீங்கி, நீங்கா புண்ணியம் பெற்றிடலாம். திருவாதிரை திருநாளில் சிவ ஆலயம் சென்று எல்லாம் வல்ல நடராஜப்பெருமானை தரிசிப்போம் அளவில்லாத ஆனந்தம் அடைவோம்..
உடல் எடைக்குறைப்பில் பெருஞ்சீரகம்:
அதிகரித்த உடல் எடையால் பல உடல் நலப்பிரச்சனைகளும் நாம் சந்திக்க நேரிடும் என்பதால் நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். இதற்காக கண்ட கண்ட மாத்திரைகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதில்லை. உங்களது சமையல் அறையில் உள்ள பெருஞ்சீரகம் ஒன்று போதும். இதோ உடல் எடைப்பிற்கு எப்படி உதவுகிறது? என இங்கே அறிந்துக் கொள்ளுங்கள்.
உடல் எடைக்குறைப்பிற்கு உதவும் பெருஞ்சீரக தண்ணீர்!
உணவுகளுக்கு சுவையைக் கொடுப்பதோடு மட்டுமில்லாமல், உடலுக்குத் தேவையான பல ஆற்றல்களையும் பெருஞ்சீரகத்தால் நாம் பெற முடியும்.
உடல் எடைக்குறைப்பில் பெருஞ்சீரகம்:
அனைவரது வீடுகளிலும் உள்ள மசாலாப் பொருள்களில் ஒன்று தான் சோம்பு. உணவுகளுக்கு சுவையைக் கொடுப்பதோடு மட்டுமில்லாமல், உடலுக்கும் பல ஆற்றல்களையும் வழங்குகிறது. குறிப்பாக உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் தினமும் ஒரு வேளையாவது பெருஞ்சீரக தண்ணீரைக் குடிக்க வேண்டும் என ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
நம்மில் பலருக்கு சாப்பிட சில மணி நேரத்திலேயே அதிக பசி எடுக்கும். இதனால் கிடைத்த நொறுக்குத்தீனிகளைச் சாப்பிடுவதால் நமது உடல் எடை அதிகரிக்கிறது. இதுப்போன்ற நிலையை நீங்களும் சந்தித்தால், இனி சோம்பு தண்ணீரைக் குடிக்கவும். இதற்கு இயற்கையிலேயே பசியை அடக்கும் பண்புகள் உள்ளது.
Tuesday, December 26, 2023
தினம் ஒரு மூலிகை-கோடகசாலை
கோடகசாலை தமிழகம் எங்கும் தரிசுகளில் தானே வளரும் சிறு செடி இனம் சிறிய கூர்மையான இலைகளை உடைய கூட்டமாய் வளரும் பூ கதிராய் வளர்ந்திருக்கும் சமூலம் இலை ஆகியவை மருத்துவ பயன் உடையவை வெப்பம் அகற்றுதல் சதை நரம்புகளை சுருங்கச் செழுதல் ஆகிய மருத்துவ குணம் உடையது இலைகளை பறித்து ஓர் இரண்டு மிளகு சேர்த்து சன்னமாக அரைத்து சுண்டைக்காய் அளவு பாலில் கரைத்து வடிகட்டி காலை மாலை ஐந்து நாட்கள் கொடுத்து வர உடலில் மிகை வெப்பம் வெள்ளை நீர் சுருக்கு பித்த வாயு பூச்சிக்கடி வயிற்றுப்புண் ஆகியவை குணமாகும் இலையை அரைத்து கரண்டி கொப்பளம் தொழுநோய் புண்கள் குருதி கசியும் வெட்டு காய புண் ஆகியவற்றின் மீது பூசி வர அவை குணமாகும் இலையை புங்கம்பாள் விட்டு அரைத்து சிறு சுண்டைக்காய் அளவு மாத்திரை செய்து நிழலில் உலர்த்தி வைத்துக் கொண்டு காலை மாலை கொடுத்து வர உடல் வெப்பம் வெள்ளை நீர் சுருக்கு பித்த வாயு பூச்சிக்கடி வயிற்று உப்புசம் ஆகியவை தீரும் சமூகத்தை உலர்த்தி வைத்துக்கொண்டு 50 கிராம் ஒரு லிட்டர் நீரில் இட்டு கால் லிட்டர் ஆகுமாறு காய்ச்சி இலையை புங்கம் பால் விட்டு அரைத்து சிறு துண்டைக்காய அளவு மாத்திரை செய்து நிழலில் உலர்த்தி வைத்துக்கொண்டு காலை மாலை கொடுத்து வர உடல் வெப்பம் வெள்ளை நீர் சுருக்கு பித்த வாயு பூச்சிக்கடி வயிற்று ப்புசம் ஆகியவை தீரும் சமூகத்தை உலர்த்தி வைத்துக்கொண்டு 50 கிராம் ஒரு லிட்டர் நீரில் இட்டு கால் லிட்டர் ஆகுமாறு காய்ச்சி வடிகட்டி காலை மாலை 100 மில்லி அளவுக்கு குடித்து வர காய்ச்சல் தோல் நோய்கள் பித்த வாயு வாயு புண் ஆகியவை தீரும் இதன் இலை ஒரு கைப்பிடி அளவு எடுத்து அம்மியில் வைத்து அரைத்து ஒரு சுண்டை காய் அளவு பசும்பாலில் காலை மாலை அருந்த வெள்ளைப்படுதல் நீர் சுருக்கு உடல் வெப்பம் முதலியன குணமாகும் தோல் நோய்களுக்கு சிறந்த மருந்தாகவும் உடல் வலி குறிப்பாக முதுகு வலிக்கு நல்ல நிவாரணம் அளிக்கும் கண் நோய்க்கும் சிறந்த மருந்தாகும் நன்றி.
பொறுமையும் பொறுப்பும்
அந்த அதிர்ச்சிகரமான நிமிடங்களில் எடிசன் பொறுமையுடன் நடந்து கொண்ட சுவாரஸ்ய சம்பவம்...
தனது நண்பர்களுக்கும், சக விஞ்ஞானிகளுக்கும் மின்சார பல்பை ஒளிர வைத்துக் காட்டுவதற்காக எடிசன், ஒரு சந்திப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தார், அவரது ஆய்வகத்தின் மேல் தளத்தில் இந்த சந்திப்பு நடந்தது.
எடிசன், தனது உதவியாளரை அழைத்து மின்சார பல்பை மேல் தளத்திற்கு கொண்டு வரச்சொன்னார். பல்பை கொண்டு வரும்போது, அது கைதவறி விழுந்து உடைந்துவிட்டது. அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் எடிசன் சற்றும் திகைக்கவில்லை.
ஆயிரம் தோல்விகளைச் சந்தித்து வெற்றி கண்ட அவருக்கு மின்சார பல்பை மீண்டும் உருவாக்குவது எளிதாக இருந்தது. சிறிது முயற்சி செய்து ஒரு பல்பை உடனடியாக உருவாக்கினார். அதனை மீண்டும் அந்த உதவியாளரிடமே கொடுத்து மேலே எடுத்துவரச் சொன்னார்.
பல்பை கீழே போட்டு உடைத்தவனிடமே மீண்டும் அந்த வேலையைக் கொடுக்கிறீர்களே? என்று சிலர் எடிசனிடம் கேட்டுவிட்டனர்.
அதற்கு எடிசன், ‘பல்பு உடைந்தது என்னால் மீண்டும் செய்து கொள்ள முடிந்தது. ஆனால் அவரது மனதை காயப்படுத்திவிட்டால் அதை என்னால் சரிசெய்து கொடுத்துவிட முடியுமா? மீண்டும் அவனிடமே பணியை கொடுத்தால் அவன் தனது பொறுப்பையும், எனது நம்பிக்கையும் உணர்ந்து கூடுதல் கவனத்துடன் பணிபுரிவான். அதனால்தான் அப்படி செய்தேன்’ என்றார்.
எடிசனுக்கு வெற்றியை பெற்றுத்தந்த பொறுமை உணர்ச்சியின் எல்லையை அப்போதுதான் மற்றவர்கள் முழுமையாக உணர்ந்து கொண்டனர்!
நம்மால் எப்போதும் உதவி செய்ய முடியாது
ஆனால் எப்போதும் இதமாகப் பேச முடியும்.!!!
Monday, December 25, 2023
பென்சில் கள்ளி-தினம் ஒரு மூலிகை
Sunday, December 24, 2023
கவலையை தூக்கிச் சுமக்காதீர்கள்!
கவலையே எனக்கு இல்லையென்று ஒரு மனிதனும் சொல்வதில்லை.
ஏதோ ஒரு கவலை அவனை வாட்டிக் கொண்டு இருப்பதாக புலம்புகிறான்.சிலரோ எனக்கு மட்டும், அடுத்து அடுத்து கவலைகள் வந்து கொண்டே இருக்கிறது, ஏன்? என்கிறார்கள்.
கவலைகள் அதிகமாக உள்ள மனிதனோ எந்த கவலையை எப்படி போக்குவது?என்று தெரியாமல் முழிக்கிறேன் என்கிறான்.இன்னும் சிலரோ வாழ்க்கை என்றால் கவலைகள் இருக்கத்தான் செய்யும். அப்படிதான் வாழ்க்கை இருக்கும் என்று ஒரு வரியில் பதில் சொல்லி விட்டுப்போய் விடுவார் கள்.ஆதரவு அற்றோர் விடுதியில் பல குழந்தைகள் தங்கி கல்விகற்றனர்.அந்த விடுதியின் நிர்வாகம் ஒரு அறிவிப்பினை
வெளியிட்டார்கள்.
அதில் தாங்கள் விரும்பினால் சில குழந்தைகளின் சாப்பாட்டிற்கு நிதியுதவி செய்யலாம் என்று இருந்தது.
மொத்தக்குழந்தை களுக்கும் நிதியுதவி கேட்டால் கிடைக்குமோ அல்லது கிடைக்காதோ என்ற சந்தேகம் இருந்ததால் அப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டனர்.
அதனால் சில குழந்தைகளுக்கு நிதியுதவி கிடைக்க வில்லை.நிதியுதவி பெற்றகுழந்தைகளுக்கு இட்லி பொங்கல் கொடுத்த நிர்வாகம்,
நிதியுதவி கிடைக்காத குழந்தைகளுக்கு சுடுகஞ்சி மட்டுமே கொடுத்தனர்.குழந்தை களுக்கு மத்தியில் என்ன ஏற்றத்தாழ்வு?அந்த குழந்தைகள் செய்த தவறு என்ன?கடவுள்மீது கூட நமக்கு
கோபம் வரும் நிகழ்வு தானே இது!நல்ல சாப்பாடு கிடைக்காத குழந்தைகளுக்கு ஆதங்கம் இருக்கத்
தானே செய்யும்.சில குழந்தைகள் தாங்க முடியாமல் அழுது விடுவார்கள். அதுவே சில குழந்தைகளின் மனதில் கவலையாக இந்த நிகழ்வு தங்கி விடும்.அவர்கள் வளர்ந்து பெரியவர்கள் ஆனபிறகும்கூட அந்தக் கவலை அவர்களின் மனதை விட்டு நீங்காது.
கவலைகள் ஆயிரம் மனதில் இருந்தாலும்,
அதையெல்லாம் கடக்க எதிர் நீச்சல் போடத் தான் வேண்டும் என்போர் சிலர்.அது அவ்வளவு எளிதானது அல்ல! இப்படிப்பட்ட சூழ்நிலையில் வளர்ந்த வர்கள் மட்டும்தான் மற்றவர்களின் கவலைகள் நீங்குவதற்கு வழி சொல்ல முடியும். அனுபவங்கள் இல்லாமல் ஆறுதல் சொல்லவும் முடியாது ஒருவரையும் தேற்றவும் முடியாது.எனவே யாராக இருந்தாலும் கவலையை தூக்கிச்
சுமக்காதீர்கள். கவலையை ஓரமாக வைத்துவிட்டு முடிந்தவரை நம்மை சூழ்ந்து இருப்போரை மகிழ்ச்சியாக வைக்க முயற்சியுங்கள். நம்மை சார்ந்திருப்போரை மகிழ்ச்சியாக வைக்க முயன்றாலே நம் கவலைகளை
நினைத்து கவலைப்பட நேரம் இருக்காது.
காலம் கடந்த பின்னே தேடியது கிடைத்து என்னபயன்?
எனவே தேடல்கள் என்பது எல்லோருக்கும் பொதுவானது என்று சொல்லலாம்.
சிலருக்கு தேடியது கிடைத்து விடும். சிலருக்கு தேடியதை தவிர்த்து வேறு ஏதாவது கிடைக்கும்.
பொதுவாகபலருக்கும் தேடியது கிடைக்காது என்பது பொது விதியாக இருந்தாலும்
மிகச்சிலருக்கு எதுவுமே கிடைக்காமலும் போகக் கூடும்.சார்லி சாப்ளின் ஒருமுறை கூறினார்: நான் முகம் பார்க்கும் கண்ணாடி தான் என்னுடைய உற்ற நண்பன் என்றார். ஏன் என்று அவரிடம் கேட்டபொழுது பதில் சொன்னார், இப்படி "நான் அழும்போது,
கண்ணாடியின் பிம்பம் என்னைப் பார்த்து சிரிப்பதில்லை மாறாக தானும் சேர்ந்து என்னோடு அழுகிறது என்றார். எல்லோரையும் சிரிக்க வைத்த அந்த பிரபல சிரிப்பு மனிதர் தனக்குள் எத்தனை முறை,எப்படியெல்லாம் அழுதிருக்கிறார் என்பது யாருக்கும் தெரியாது.பெரும் பாலும் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் பல வகையான சோகங்கள் உண்டு.அதை அவர்கள் வெளியே சொல்வதும் சொல்லாமல் இருப்பதும் ஒவ்வொரு
வருடைய நிலைப்பாடு தான்.'மறதி'மட்டுமே மனிதர்களுக்கு இறைவன் ஏற்படுத்திக் கொடுத்த வசதி என்று நினைத்துக்கொள்ள வேண்டும்.நல்ல செயல்களை நினைவில் வையுங்கள் அல்லனவற்றை நினைவில் வைப்பதை தவிர்த்து விடுங்கள்.
கிடைத்ததைக்
கொண்டு,தேடியது கிடைத்து விட்டது என்று எண்ணிக்கொள்ளுங் கள்.காலம் கடந்து கிடைத்தாலும்,
தேவையான நேரத்தில் கிடைத்தாலும் இரண்டையும் சமஅளவில் நேசிக்கக் கற்றுக்கொள்வோம்!
தினம் ஒரு மூலிகை-குகை கிழங்கு
குகை கிழங்கு கூவை கிழங்கு என்று அழைக்கப்படும் இந்த கிழங்கிலிருந்து எடுக்கப்படும் மாவு அரூட்மாவு என்று அழைக்கப்படும் வணிக ரீதியாக தமிழகத்தில் பல இடங்களில் பயிர் செய்யப்படுகிறது மஞ்சள் செடி போல் சிறு செடி கிழங்கு கூர்மை உடையதாக வெள்ளை நிறத்தில் இருக்கும் கிழங்கை அரைத்து நீரில் கலக்கி வடிகட்டி மூன்று மணி நேரம் அசையாது வைத்திருக்க மாவு சத்து அடியில் படிந்திருக்கும் நீரை வடித்து விட்டு மீண்டும் நீர் விட்டு கரைத்து தெளிவு இருக்கவும் இதுபோல் ஏழு முறை சுத்தம் செய்து எடுக்கப்படும் மாவு அரை ரொட்டி மாவு என்று அழைப்பார்கள் மருத்துவ குணம் குளிர்ச்சி உண்டாக்குதல் உடல் உரமாக்குதல் சிறுநீர் பெருக்குதல் செரிமான மின்மை பிரச்சனையை தீர்த்தல் ஆகிய குணங்களை உடையது நான்கு தேக்கரண்டி மாவை ஒரு லிட்டர் நீரில் இட்டு கஞ்சியாக பால் சர்க்கரை சேர்த்து கொடுக்க எளிதில் செரிமானம் ஆகும் எல்லா வயதினருக்கும் கொடுக்கலாம் வயிற்றுப் புண்கள் ஆறும் டைபாய்டு காய்ச்சலின் போது கொடுக்க உகந்தது அடிக்கடி வயிற்றுப்போக்கு உள்ளவர்களுக்கு சிறந்த உணவாகும் நன்றி.
Saturday, December 23, 2023
முதியார் கூந்தல்-தினம் ஒரு மூலிகை
முதியார் கூந்தல் அல்லது சவுரிக்கொடி தமிழகம் எங்கும் வேலிகளில் வளரக்கூடிய கொடி வகை பத்து மீட்டர் நிலம் ஒரே கோடியாக வளரும் தன்மையுடையது இதன் பழம் உடல் தேற்றும் வேர் மலமிளக்கும் பழத்தை பொடியாய் அறிந்து தேங்காய் எண்ணெயில் பதமுறகாழ்ச்சி வடித்து வைத்துக் கொண்டு இரண்டு அல்லது மூன்று துளி காதில் விட்டு வர காது வலி காது புண் ஆகியவை தீரும் மூக்கில் விட்டு வர நாசிப்பும் ஆறும் பழத்தை உலர்த்தி பொடித்து பீடி போல் புகைக்கச் சளியை விலகச் செய்து இறைத்திருமல் குணப்படும் பழத்தை பொடியாய் அறிந்து நல்லெண்ணையில் இட்டு காய்ச்சி வடித்து வைத்துக் கொண்டு தலை முழுகி வர தீராத தலைவலி ஒற்றைத் தலைவலி தலைபாரம் ஆகியவை தீரும் வேரை உலர்த்தி பொடித்து பத்து கிராம் அளவு அரை லிட்டர் நீரில் இட்டு 125 மில்லியாக காக்கி வடிகட்டி 30 மில்லி அளவாக காலை மாலை கொடுத்து வர வெள்ளை குணமாகும் நன்றி.
Friday, December 22, 2023
வெட்டிவேர்-தினம் ஒரு மூலிகை
வெட்டிவேர் அல்லது குருவேர் குத்தாக வளரும் ஒரு புள்ளினம் இதன் மனம் உடைய வேர் அடர்த்தியாய் மஞ்சள் நிறமாய் நீண்டு வளர்ந்திருக்கும் இதை வெட்டிவேர் குருவே என்றும் அழைப்பார்கள் உடல் உரமாக்குதல் வெப்பம் மிகுத்தல் இசிவு அகற்றுதல் வியர்வை சிறுநீர் பெருக்குதல் மாதவிடாய் தூண்டுதல் காய்ச்சல் தணித்தல் ஆகிய மருத்துவ குணம் உடையது வேரை உலர்த்தி முடித்து அரை கிராம் அளவாக சர்க்கரை கலந்து நாள்தோறும் மூன்று வேளை கொடுத்து வர மிகையான பித்தம் தாகம் உடல் பயிற்சி காய்ச்சல் ஆகியவை தீரும் வேரை நீர் விட்டு அரைத்து உடலில் பூசி வர உடல் வெப்பம் எரிச்சல் ஆகியவை தனியும் நாட்டு மருந்து கடைகளில் உலர்ந்த வேர்கள் கிடைக்கும் வெயில் காலங்களில் வேரை சுத்தப்படுத்தி குடிநீரில் ஊறவைத்து குடிநீர் அருந்த வெயிலின் தாக்கத்திலிருந்து நோய் எதிர்ப்பு சக்தியை கொடுத்து நமது உடம்பை பாதுகாக்கும் நன்றி.
குருந்து(அ) காட்டு எலுமிச்சை-தினம் ஒரு மூலிகை
குருந்து(அ) காட்டு எலுமிச்சை கொத்தான வெண்ணிற மலர்களையும் உருண்டை வடிவ காய்களையும் உடைய முள் உள்ள எலுமிச்சை என மரம் காட்டு எலுமிச்சை என்றும் புன எலுமிச்சை என்றும் அழைக்கப்படும் இதன் இலை பழம் மருத்துவ பயன் உடையவை உடல் வெப்ப அகற்றுதல் பசியை தூண்டி வயிற்று வாய்வு அகற்றுதல் ஆகிய குணம் உடையது குருந்தம் பழச்சாறு 20 மில்லியில் 2 கிராம் வெடி உப்பை கரைத்து உடம்பில் தடவி வைத்திருந்து குளிக்க சொறி சிரங்கு ஆகியவை தீரும் 30 மில்லி பழச்சாற்றில் சிறிது ஒப்பிட்டு நீர் கலந்து மாலை தோறும் குடித்து வர வாந்தியுடன் கூடிய வயிற்று வலியும் தலைவலியும் தீரும் பழத்தை தனலில் இட்டு பதமாக வாட்டி பிழிந்த சாறு 30 மில்லியுடன் தேன் கலந்து ஒவ்வொரு தேக்கரண்டி அடிக்கடி கொடுத்து வர இருமல் தீரும் பழத்தோலில் இருந்து எடுக்கப்பட்ட எண்ணெயுடன் சம அளவு விளக்கெண்ணெய் கலந்து பூசி வர ஆண்குறி பெண்குறி ஆகியவற்றில் காணும் வெடிப்பு நமைச்சல் வாத வலி ஆகியவை தீரும் இலையை நீரில் இட்டு கொதிக்க வைத்து வடிகட்டி புண்படை ஆகியவற்றை கழுவி வர அவை அரிப்பு நீங்கி விரைந்து ஆறும் நன்றி
Thursday, December 21, 2023
பிராய்லர் கோழி சாப்பிட்டால் பிரச்சனை வருமா?

இந்த நிலையில் பிராய்லர் கோழி அதிகம் சாப்பிட்டால் ஆண்களுக்கு புரோஸ்டேட் என்ற புற்றுநோய் வருவதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் பிராய்லர் கோழிகள் சாப்பிடுவதால் உடல் எடை அதிகரிக்கும் என்றும் குறிப்பாக பிராய்லர் கோழி சாப்பிடும் தீவனத்தில் ஹார்மோன்கள் அதிகம் இருப்பதால் அந்த கோழி இறைச்சிகளை சாப்பிடும் நபர்களும் உடல் எடை அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது
மேலும் பிராய்லர் கோழி அதிகம் சாப்பிட்டால் மலட்டுத்தன்மை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது. பெண்களுக்கும் கருப்பையில் சில பிரச்சனைகள் பிராய்லர் கோழி அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் என்று கூறப்படுகிறது.
சிறுநீரக தொற்றுகிருமி மற்றும் கல்லடைப்பு தீர்வுக்கு.
முற்றின நாட்டு கோழியின் கல்லீரலில் இருக்கிற சிறுகல்,வெள்ளரி விதை,பூநாகம், வெல்லம் வகைக்கு ஒரு கொட்டை பாக்கு அளவு அரைத்து எடுத்து வைத்து கொள்ளவும். தினமும் புதியதை செய்யவும். காலை,மாலை, உணவுக்கு முன் பசுவின் பாலில் கலக்கி குடித்துவர 4நாளில் நீரடைப்பு, கல்லடைப்பு தீரும்.
அல்லது
வாழைகிழங்கில் இருந்து எடுக்கின்ற நீருடன் வெடியுப்புசுண்ணம் 1அரிசிஎடை, வெங்காரபஸ்பம்1 அரிசிஎடை, நன்டுகல்பஸ்பம்1 அரிசிஎடை கலந்து காலை, மாலை இருவேளையும் உணவுக்கு முன் சாப்பிட15,நாளில் கல்லடைப்பு, நீரடைப்பு தீரும்.
மகிழ்ச்சியே மலரும்
இதயத்தையும்,உடலையும் பாதுகாப்பாக வைத்திருப்பது பெருமளவில் நமது வாழ்க்கை முறையைச் சார்ந்தது.
அதாவது, நமது உணவு, தூக்கம், உடல் சார்ந்த நடவடிக்கைகள், அன்றாடச் செயல்பாடுகள், பழக்க வழக்கங்கள் எனப் பல அம்சங்களைப் பொறுத்தது._
நாம் என்னவெல்லாம்
செய்ய வேண்டும் என்பவை கீழே தரப்பட்டுள்ளன.
தண்ணீர் நிறைய குடியுங்கள்.
குறிப்பாக சுடுதண்ணீர் குடியுங்கள்..
இயற்கை உணவை,பழங்களை அதிகமாக எடுத்துக் கொண்டு, பதப்படுத்தப்பட்ட
உணவைத் தவிர்த்து விடுங்கள்.
தினமும் நடைபயிற்சி,
உடற்பயிற்சி மற்றும்
விளையாட்டுக்கு கண்டிப்பாக
நேரம் ஒதுக்குங்கள்.
ஒரு நாளைக்கு 10 நிமிடம் தனிமையில் அமைதியாக இருங்கள்.
குறைந்தது 7 மணி நேரம் தூங்குங்கள்.
எதிர்மறையான எண்ணங்களை எப்பொழுதும் மனதில்
நினைக்காதீர்கள்.
உங்களால் முடிந்த அளவு வேலை செய்யுங்கள்.
அளவுக்கு மீறி எதையும் செய்யாதீர்கள்.
நீங்கள் விழித்திருக்கும் பொழுது எதிர்காலத்தைப் பற்றி நிறைய கனவு காணுங்கள். அது உங்கள் மனதைச் சுறுசுறுப்பாக வைத்திருக்கும்.
அடுத்தவரைப் பார்த்துப் பொறாமை கொள்வது நேர விரையம்.
உங்களுக்குத் தேவையானது உங்களிடம் உள்ளது.
கடந்தக் காலத்தை மறக்க முயற்சி செய்யுங்கள். கடந்த காலம் உங்கள் நிகழ்காலத்தைச் சிதைத்து விடும்.
வாழும் இந்தக் குறுகிய காலத்தில் யாரையும் வெறுக்காதீர்கள்.
மற்றவர்களைப் பற்றிப்புறம் பேசுவதில் உங்கள் சக்தியை வீணாக்காதீர்கள்.
எப்பொழுதும்
மகிழ்சியாக இருக்கக் கற்றுக்கொள்ளுங்கள்
70 வயதிற்கு மேலிருப்பவர்களையும்,
6 வயதிற்குக் கீழிருப்பவர்களையும் கவனிக்க நேரம் ஒதுக்குங்கள்.
அடுத்தவர்கள்
என்ன நினைப்பார்களோ என்பதைப் பற்றி ஒருபோதும் கவலை கொள்ளாதீர்கள்.
உங்கள் மனதிற்கு
எது சரியென்று படுகிறதோ
அதை உடனே செய்யுங்கள்.
எந்தச் சூழ்நிலையும் ஒரு நாள் கண்டிப்பாக மாறும் என்பதில் நம்பிக்கை வையுங்கள்.
வாழ்க்கை முறையில் தேவையான மாற்றங்களைச் செய்து கொண்டால் மனமும், உடலும் பாதுகாப்பாக அமையும்.
கவலை அற்ற மனமே இதய ஆரோக்கியத்துக்கு மிகவும் அவசியமானது.
மேலே கண்டுள்ளதை அவசியம் கடைப்பிடியுங்கள்;
கவலையற்ற வாழ்வை வாழுங்கள்.
சிறந்த ஒரு சிந்தனை
பெரும்பாலான மனிதர்கள் தங்களின் பிறவியின் பயனை புரிந்து கொள்வதில்லை. அவர்கள் தானாக செயல்பட முடிவதில்லை. பெற்றோர்கள், சுற்றத்தினர் அவர்களை அலைக்கழிப்பதால், அவர்கள் வாழ்வில் ஒர்ப்பிடிப்பின்றி அடுத்தவர் போக்குக்கு செயல்பட பழகிவிடுகின்றனர்.
அதனால் இப்பிறவியில் அவர்கள் யாராக இருக்கின்றார்களோ அதில் அவர்களுக்கு வெறுப்பும் சலிப்பும் ஏற்படுகின்றது. அப்பிறவி நினைத்தபடி வாழ விடாமல் இந்த சமூகம் சுற்று சூழலுக்கு அவரை மாற்றுவதால் அதற்கு சுயசந்தோஷம் இருப்பதில்லை.
இந்த வெறுப்பு அவர்மீதும், சமூகத்தின்மீதும் விழுகின்றது. அதனால் அவர்கள் ஜடமாக உலவுகின்றனர். மனதில் எந்த அமைதியும் இல்லை. சந்தோஷமும் இல்லை. எனவே ஆன்மாக்களை சுயமாக செயல்பட அனுமதியுங்கள்.
அலைமோதும் கடலில் எப்படி அல்லி வளரமுடியாதோ, அதைப்போல அலைபாயும் மனதில் அமைதி நிலவாது. தீய, பிறருக்கு தீமை விளைவிக்கும் கொடிய எண்ணங்கள் மனதில் அமைதியை ஏற்படுத்தாது.
அந்த எண்ணங்களின் கொந்தளிப்பில் நல்ல எண்ணங்கள் அமுங்கிவிடும். நம் மனதை சுத்தப் படுத்தி, தூய்மையாக வைத்திருங்கள். அங்கு நிம்மதியும், சந்தோஷமும் நிரம்பி வழிய மிகமிக அதிக வாய்ப்புண்டு.
மனதில் தோன்றும் கவலைகளும் வருத்தங்களும் பறவைபோல நம் மனத்திலிருந்து பறந்துவிட வேண்டும். அவைகளை அங்கே தங்கவிட்டால் பறவைகள்போல கூடுகட்டி குஞ்சு பொறித்துவிடும்.
மனத்தில் தோன்றிய வேண்டாத எண்ணங்களை வலுக்கட்டாயமாக நீக்கமுடியாது. அதற்கு முயற்சி செய்தால் அந்த எண்ணங்களே அதிகமாகி அளவில் பெருக வாய்ப்புண்டு. அது வீண்முயற்சி. ஒன்றை நீக்கின் புதியதாய் ஒன்று சேரும்.
எனவே வேண்டாத எண்ணங்களை நீக்கவேண்டும் என்பதற்காக சிந்தித்து காலத்தை விரயம் செய்வதைத் தவிர்த்து, முற்றிலும் புதிய நல்லெண்ணங்களை, உயர்ந்த ஒன்றில் கவனம் செலுத்துங்கள்.
பழையது முற்றிலும் மறந்து காணாமல் போய்விடும்.
மனிதனின் இயல்பான மனநிலை இது. செயலில் முழுக்கவனம் இருந்தால் மற்றது மறக்கப்படும். உற்சாகமோ சலிப்போ எதுவாக இருந்த போதும் அது மனதின் பிரதிபலிப்பேயாகும்!
┈❀🌿🀼┈❀🌿🌺🌿❀┈❀🌿🌺🌿❀┈
முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும் எழுந்து புதிய நாளை துவங்க இறைவன் அருள் புரியட்டும்…!
நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும்.
நல்ல எண்ணங்களுடன் இன்றைய நாளை தொடங்குவோம்...
Wednesday, December 20, 2023
குங்குமப்பூ-தினம் ஒரு மூலிகை
* *குங்குமப்பூ*. இது ஒரு சிறு செடியினம் இதன் பூவில் உள்ள மகரந்த தாள்களே குங்குமப்பூ எனப்படும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் பசி தூண்டுதல் வெப்பம் உண்டாகுதல் துயர் அடக்கல் இசிவு அகற்றுதல் மாதவிடாய் தூண்டுதல் ஆகிய மருத்துவ குணம் உடையது ஒரு குண்டுமணி அளவு குங்குமப்பூவை பாலில் இரவு தோறும் கருவுற்ற தாய்க்கு கொடுத்து வர சளி தொடர்பான பிணிகள் அணுகாது பிறக்கும் குழந்தை நலத்துடனும் திடமானதாகவும் அமையும் 3 கிராம் குங்கும பூவை சோம்பு குடிநீரில் கரைத்து கொடுக்க மகப்பேறு எளிதாகும் 5 கிராம் குங்கும பூவை நேரில் அரைத்து கொடுக்க வயிற்றில் இறந்த குழந்தை வெளியாகும் ஒரு குண்டுமணி அளவு குங்கும பூவை நாள்தோறும் மூன்று வேளை வெற்றிலையில் வைத்து மென்று தின்ன மகப்பேற்றின் போது ஏற்படும் உதிரச் சிக்கலை வெளிப்படுத்தும் குங்குமப் பூவை தாய்ப்பாலில் அரைத்து நெற்றியில் பற்று போட தலைவலி நீங்கும்.
குங்குமப்பூ சர்க்கரை வகைக்கு 3 கிராம் பாலில் அரைத்து 250 மில்லி பால் 250 மில்லி தேங்காய் எண்ணெய் ஆகியவற்றுடன் நன்கு கலந்து பதமுறக் காய்ச்சி வடித்து வைத்துக் கொண்டு காலை மாலை 5 துளிகள் நாசியில் விட்டு வர அனைத்து பினிஷமும் தீரும் *குங்குமப்பூ*நன்மைகள் 90க்கும் மேற்பட்ட நோய்களை குணப்படுத்த கூடியது இதில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடென்ட் கரோட்டின் அதிக நன்மைகளை தரக்கூடியது இதில் வைட்டமின் ஏ சி மற்றும் மேனேஜ் எலும்புகளை பலப்படுத்தவும் திசுக்களை சரி செய்யவும் ஹார்மோன்களை தூண்டவும் பயன்படுகிறது *தீமைகள்*கண்டிப்பாக அதிக அளவு உட்கொண்டால் நிறைய தீமைகள் உடலில் விளையும் முக்கியமாக வாந்தி மயக்கம் ஏற்படலாம் வாய்ப்பு உள்ளது கர்ப்பமாக இருப்பவர்கள் அதிகமாக உட்கொண்டால் 5 மாதத்திற்கு மேலும் வாந்தி மயக்கம் வயிற்றுப் பிரட்டல் ஏற்படலாம் வாய்ப்பு உள்ளது ஒரு நபர் ஒரு நாளைக்கு ஐந்து கிராம் அளவுக்குத்தான் குங்குமப்பூ உட்கொள்ள வேண்டும் அதனை காய்ச்சிய பாலில் போட்டு அருந்த வேண்டும் அதற்கு மேல் சாப்பிட மருத்துவரின் அறிவுரையின்படி சாப்பிடலாம் நன்றி.
Sunday, December 17, 2023
பாம்பு என்றால் என்ன?
புத்தக அறிமுகம்...*
பல்லுயிரியத்தின் காவலர்கள்.*
ச.முகமது அலி
வேலா வெளியீட்டகம்.
பக்கங்கள்:96
விலை:90
தொடர்புக்கு:9047087058
பாம்புகளைப் பற்றி நமக்கு நிறைய தெரியும்...
உதாரணமாக,
*நல்ல பாம்பும் சாரைப்பாம்பும் புணையலாடும். அதாவது இணைந்து இனப்பெருக்கம் செய்யும்.
*நல்ல பாம்பை அடிச்சு விட்டுட்டோம்னா மறுபடி பழி வாங்க வரும்.
*ஆண் பெண் பாம்புகளில் ஏதோவொன்றை அடிச்சு கொன்னுட்டோம்னா அதோட ஜோடி பாம்பு பழி வாங்க வரும்.
*வயதான நல்ல பாம்பு நீளத்துல குறுகிகிட்டே வந்து ஒரு அடி நீளமாயிடும். அதோட தலையில விலையுயர்ந்த நாக மாணிக்கம் இருக்கும்.
*வயசான நல்ல பாம்புக்கு கண் சரியா தெரியாது. இருட்டுல அதோட மாணிக்கத்தை கக்கி வச்சுட்டு இரை தேட போகும். அப்போ அந்த மாணிக்கத்தை ஒரு கூடை சணி போட்டு மூடி வைச்சுட்டா பாம்புக்கு கண்ணு தெரியாம எங்கேயோ போயிடும். பிறகு நாம போய் அந்த மாணிக்கத்தை எடுத்துட்டு வந்திடலாம்.
*மனைவி மாசமா இருக்கும்போது கணவன் நல்ல பாம்பை அடிக்கக் கூடாது.
*நல்ல பாம்பை அடிச்சு கொண்ணுட்டா பாலும் காசும் ஊத்தி புதைக்கனும்.
*கொம்பேறி மூக்கன் மிகக் கொடிய விஷமுள்ள பாம்பு. அது கடிச்சா சாவுதான். அப்படி தான் கடித்து செத்தவர்கள சுடுகாட்டில் எரிக்கும் போது பக்கத்தில் உள்ள மரத்தில் ஏறி அவங்க எரிவதைப் பார்க்கும்.
*பச்சை பாம்பு கண்ண குத்தும்.
*நல்ல பாம்பு சாமி.
*கூல பாம்பு என்னும் மண்ணுளி பாம்பு கடிச்சா தொழுநோய் என்னும் குஷ்டம் வரும்.
*பாம்புகள் பால் குடிக்கும்.
*பாம்புக்கடியிலிருந்து பிழைக்க மந்திரங்கள்
இன்னும்... இன்னும்... நிறைய நமக்குத் தெரியும்.
ஆனால் அது அத்தனையும் பொய்...
மானைப் போல
பூனைப் போல
சிங்கம் போல
சிறுத்தைப் போல
ஆடு போல
மாடு போல
பாம்பு நமது உயிர் சூழலியலில் முக்கியமான ஒரு உயிரினம். அவ்வளவே.
விலங்குகளிலேயே பாம்புகள் மேல்தான் அதிக மூடநம்பிக்கை உள்ளது என்கிறார் நூலாசிரியர்.
நம் சுற்றுப்புறச் சூழலின் சமன்பாட்டை சரிவர வைத்துக் கொள்ளும் தொடர்புமிகு உயிர்கள் பாம்புகள். ஊர்வன பிரிவைச் சேர்ந்த பல்லி இனத்திலிருந்து பாம்புகள் உருவாகி சுமார் 13 கோடி ஆண்டுகள் ஆகின்றன. உலகில் சுமார் 3000 சிறப்பினங்கள் உள்ளன. நம் நாட்டில் பொதுவாக 270 வகைப் பாம்புகள் உள்ளன. இதில் 4 பாம்புகள் மட்டுமே நஞ்சுள்ளவை என்கிறார்.
பாம்புகளைப் பற்றிய பொதுவான தகவல்கள்... பல்லி இனத்திலிருந்து பாம்புகள் பரிணமித்த வரலாறு...
பத்து குடும்பங்களாக பகுக்கப்பட்டுள்ள வகைப்பாடு. இந்த பத்து குடும்பங்களில் மூன்றே குடும்பங்களே நச்சுடையவை என்ற தகவல்கள்...நம் பகுதியில் பொதுவாக அறியப்படும் 13 இன பாம்புகள் பற்றிய வியப்பூட்டும் செய்திகள்... பாம்புக்கடிக்கு செய்ய வேண்டிய அறிவியல் பூர்வமான முதலுதவி மற்றும் சிகிச்சைகள் என 98 பக்கங்களில் பாம்புகளைப் பற்றிய தெரியாத பல வியப்பூட்டும் தகவல்களைத் தந்துள்ளார் நூலாசிரியர்.
இப்புத்தகத்தின் மூலம் நான் தெரிந்து கொண்ட ஒரு விஷயம் முக்கியமானது.
அதாவது கட்டுவிரியன் என்றே இதுவரை நினைத்திருந்தேன். இதில் எனக்கு ஒரு குழப்பம் இருந்தது.
அதாவது நஞ்சுள்ள பாம்புகள் விஷத்தின் அடிப்படையில்
1.மைய நரம்பு மண்டலத்தைத் தாக்கும் Neurotoxic. நாகப்பாம்பு மற்றும் கட்டுவிரியன்களின் விஷம் இத்தன்மை உடையது. இதனால் கடிபட்டவர்களின் மூளை உள்ளிட்ட மைய நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு சுவாசித்தலில் சிரமம்உண்டாகி உடலுக்கு ஆக்ஸிஜன் கிடைப்பது தடைபட்டு உயிரிழப்பை ஏற்படுத்தும்.
2. தலை முக்கோணம் வகையில் அமைந்த இரண்டாவதான விரியன் வகை பாம்புகளின் விஷம் இரத்தத்தை பாதிக்கும் Heamotoxic வகையைச் சேர்ந்தது. இந்த வகைப் பாம்புகளின் விஷம் ரத்தம் உறைதலில் மாற்றத்தை ஏற்படுத்தி சிறுநீரக செயலிழப்பை ஏற்படுத்துகிறது. குறிப்பாக கண்ணாடி விரியன் கடித்து சிறுநீரகச் செயலிழப்பைச் சந்தித்து பிறகு டயாலிஸிஸ் மற்றும் விஷ முறிவு சிகிச்சை செய்யப்பட்டு மீண்டு வந்தவரை தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சந்தித்து இருக்கிறேன்.
அதே நேரம் இரவு உறங்கும்போது முகத்தின் தாடைப்பகுதியில் கட்டு வரியன் கடித்து பக்கவாதம் ஏற்பட்டு கண்கள் இருண்டு வர மரணத்தைச் சந்தித்தவரைப் பற்றியும் நான் அறிவேன்.
இந்தப் புத்தகத்தில் தான் கட்டுவரியன் என்று அதன் உடலில் உள்ள வெண்ணிற வரியை காரணப் பெயராக்கி குறிப்பிட்டுள்ளமையை அறிந்தேன்.
எனவே கண்ணாடி விரியன், சுருட்டை விரியன் என்பவை விரியன் வகையைச் சேர்ந்த Heamotoxic விசத்தன்மை கொண்டுள்ளமையும், கட்டுவரியன் என்பது நாகப்பாம்பு போன்ற Neurotoxic விசத்தன்மை வகையைச் சேர்ந்தது என்பதையும் அறிந்து தெளிந்தேன்.
பாம்புக்கடி என்பது சாலையில் நடக்கும் விபத்து போன்றது. பாம்புக்கடிக்கு அறிவியல் பூர்வமாக மருத்துவமனைகளில் செய்யப்படும் அல்லோபதி மருத்துவம் ஒன்றே தீர்வு. மூலிகை வைத்தியம், மந்திரித்தல் போன்றவை தற்கொலைக்குச் சமமானது என்று உரக்கச் சொல்லிச் செல்கிறார் நூலாசிரியர்..
வாசித்துப் பாருங்கள்...
பூலாங்கிழங்கு-தினம் ஒரு மூலிகை
*பூலாங்கிழங்கு* அல்லது கிச்சிலி கிழங்கு மஞ்சள் இனத்தைச் சார்ந்த சிறு செடி கிழங்குகள் வெள்ளை நிறமாகவும் மனம் உடையதாகவும் இருக்கும் வெள்ளை மஞ்சள் பூலாங்கிழங்கு எனவும் அழைப்பார்கள் வெள்ளை வில்லைகளாக நறுக்கி உணர்த்திய கிழங்குகள் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் கிழங்கு இலை மருத்துவ பயன் உடையது உடல் வெப்பம் மிகுத்தல் வயிற்று வாயு அகற்றுதல் சளி நீக்குதல் சிறுநீர் பெருக்குதல் உடல் தேற்றுதல் மனம் மூட்டுதல் ஆகிய குணம் உடையது கிழங்கை உலர்த்தி பொடித்து அரை கிராம் அளவாக தேனில் கலந்து கொடுத்து வர தொண்டைக் கட்டு வயிற்று பெருமல் நீர் கோவை காய்ச்சல் ஆகியவை தீரும் கிழங்குடன் அரிசி திப்பிலி இலவங்கம் அதிமதுரம் வகைக்கு 10 கிராம் ஒன்று இரண்டாய் இடித்து அரை லிட்டர் நீரில் இட்டு நாளில் ஒன்ற பங்காக காய்ச்சி வடிகட்டி தேன் சேர்த்து வேலைக்கு 50 மில்லியாக குடித்து வர இருமல் தீரும் கிழங்கினை சுவைத்து விழுங்க தொண்டைக் குழலில் தேங்கியுள்ள சளியை அகற்றி குரல் வளம் மிகுக்கும் பச்சை கிழங்கை இடித்து பிழிந்த சாற்றை 10 அல்லது 15 மில்லி அளவாக சிறு குழந்தைகளுக்கு கொடுக்க மலர் பூச்சிகள் வெளியேறும் நன்றி.
அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது.
1. வருடங்கள்(60)
2.அயணங்கள்(2)
3.ருதுக்கள்(6)
4.மாதங்கள்(12)
5.பக்ஷங்கள்(2)
6.திதிகள்(15)
7.வாஸரங்கள்(நாள்)(7)
8.நட்சத்திரங்கள்(27)
9.கிரகங்கள்(9)
10.இராசிகள் மற்றும் இராசிஅதிபதிகள்(12)
11.நவரத்தினங்கள்(9)
12.பூதங்கள்(5)
13.மஹா பதகங்கள்(5)
14.பேறுகள்(16)
15.புராணங்கள்(18)
16.இதிகாசங்கள்(3)
இவை அனைத்தையும் ஒவ்வொன்றாக பார்ப்போம்.
வருடங்கள் மொத்தம் அறுபது அவை:
1.ப்ரபவ 2.விபவ 3.சுக்ல 4.ப்ரமோதூத 5.ப்ரஜோத்பத்தி 6.ஆங்கீரஸ 7.ஸ்ரீமுக 8.பவ 9.யுவ 10.தாது(தாத்ரு) 11.ஈச்வர 12.வெகுதான்ய 13.ப்ரமாதி 14.விக்ரம 15.விஷு 16.சித்ரபானு 17.ஸுபானு 18.தாரண 19.பார்த்திப 20.வ்யய 21.ஸர்வஜித் 22.ஸர்வதாரி 23.விரோதி 24.விக்ருதி 25.கர 26.நந்தன 27.விஜய 28.ஜய 29.மன்மத 30.துன்முகி 31.ஹேவிளம்பி 32.விளம்பி 33.விகாரி 34.சார்வாரி 35.ப்லவ 36.சுபக்ருது 37.சோபக்ருது 38.க்ரோதி 39.விச்வாவஸு 40.பராபவ 41.ப்லவங்க 42.கீலக 43.ஸெளம்ய 44.ஸாதாரண 45.விரோதிக்ருத் 46.பரிதாபி 47.பிரமாதீச 48.ஆனந்த 49.ராக்ஷஸ 50.நள 51.பிங்கள 52.காளயுக்தி 53.ஸித்தார்த்தி 54.ரெளத்ரி 55.துன்மதி 56.துந்துபி 57.ருத்தோத்காரி 58.ரக்தாக்ஷி 59.க்ரோதன 60.அக்ஷய.
அயணங்கள் இரண்டு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது:
1.உத்தராயணம்
(தை மாதம் முதல் ஆனி மாதம் வரை உள்ள ஆறு மாத காலம்).
2.தக்ஷிணாயணம்
(ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை உள்ள ஆறு மாத காலம்).
இரண்டு அயணங்கள் சேர்ந்து ஒரு தமிழ் வருடமாகும்.
ருதுக்கள் மொத்தம் ஆறு வகைப்படும்:
1.வஸந்தருது
(சித்திரை,வைகாசி)
2.க்ரீஷ்மருது
(ஆனி,ஆடி)
3.வர்ஷருது
(ஆவணி,புரட்டாசி)
4.ஸரத்ருது
(ஐப்பசி,கார்த்திகை)
5.ஹேமந்தருது
(மார்கழி,தை)
6.சிசிரருது
(மாசி,பங்குனி)
இரண்டு தமிழ் மாதங்கள் சேர்ந்தது ஒரு ருது ஆகும்.
தமிழ் மாதங்கள் பண்னிரண்டு ஆகும் :
1.சித்திரை(மேஷம்)
2.வைகாசி(ரிஷபம்)
3.ஆனி(மிதுனம்)
4.ஆடி(கடகம்) 5.ஆவணி(சிம்மம்)
6.புரட்டாசி(கன்னி) 7.ஐப்பசி(துலாம்)
8.கார்த்திகை(விருச்சிகம்)
9.மார்கழி(தனுர்)
10.தை(மகரம்)
11.மாசி(கும்பம்)
12.பங்குனி(மீனம்).
பக்ஷங்கள் இரண்டு வகைப்படும் :
1.ஸுக்ல பக்ஷம்
(அமாவசை திதி முதல் சதுர்த்தசி திதி வரை)
2.க்ருஷ்ணபக்ஷம்
(பெளர்ணமி திதி முதல் சதுர்த்தசி திதி வரை)
சுக்ல பக்ஷத்தை பூர்வ பக்ஷம் என்றும் வளர்பிறை என்றும் கூறுவர்.
க்ருஷ்ண பக்ஷத்தை அமர பக்ஷம் என்றும் தேய்பிறை என்றும் கூறுவர்.
இரண்டு பக்ஷங்கள் சேர்ந்தது ஒரு தமிழ் மாதம் ஆகும்.
திதிக்கள் மொத்தம் பதினைந்து வகைப்படும் :
1.பிரதமை
2.துதியை
3.திருதியை
4.சதுர்த்தி
5.பஞ்சமி
6.ஷஷ்டி
7.சப்தமி
8.அஷ்டமி
9.நவமி
10.தசமி
11.ஏகாதசி
12.துவாதசி 13.திரையோதசி 14.சதுர்த்தசி 15பெளர்ணமி(அ)அமாவாசை.
வாஸரங்கள்(நாழ்) ஏழு ஆகும் :
1.ஆதித்யவாஸரம்
2.சோமவாஸரம்
3.மங்களவாஸரம்
4.ஸெளமியவாஸரம்
5.குருவாஸரம்
6.சுக்ரவாஸரம்
7.மந்தவாஸரம்(அ)ஸ்திரவாஸரம்
நட்சத்திரங்கள் மொத்தம் இறுபத்தி ஏழு ஆகும்:
1.அஸ்வினி 2.பரணி 3.கர்த்திகை 4.ரோகினி 5.மிருகசீரிஷம் 6.திருவாதிரை 7.புனர்பூசம் 8.பூசம் 9.ஆயில்யம் 10.மகம் 11.பூரம் 12.உத்திரம் 13.ஹஸ்த்தம் 14.சித்திரை 15.சுவாதி 16.விசாகம் 17.அனுஷம் 18.கேட்டை 19.மூலம் 20.பூராடம் 21.உத்ராடம் 22.திருவோணம் 23.அவிட்டம் 24.சதயம் 25.பூரட்டாதி 26.உத்திரட்டாதி 27.ரேவதி.
கிரகங்கள் ஒன்பது ஆகும்:
1.சூரியன்(SUN)
2.சந்திரன்(MOON)
3.அங்காரகன்(MARS)
4.புதன்(MERCURY)
5.குரு(JUPITER)
6.சுக்ரன்(VENUS)
7.சனி(SATURN)
8.இராகு(ASCENDING NODE)
9.கேது(DESCENDING NODE)
இராசிகள் மற்றும் இராசிஅதிபதிகள்:
இராசிகள் பண்ணிரெண்டு ஆகும் ஒவ்வொரு நட்சத்திரமும் நான்கு பகுதியாக(பாகங்கள்) பிரிக்கப்படும், நட்சத்திரங்களின் ஒன்பது பகுதிகள்(பாகங்கள்) சேர்ந்த்து ஒரு இராசி ஆகும்.
நட்சத்திரங்கள் , இராசி , இராசிஅதிபதி.
அஸ்வினி,பரனி,கர்த்திகை முன் ¼
மேஷம்
செவ்வாய்
கர்த்திகை பின்3/4,ரோகினி,மிருகசீரிஷம் முன்1/2
ரிஷபம்
சுக்கிரன்
மிருகசீரிஷம்பின்1/2,திருவாதிரை,புன
ர்பூசம்முன்3/4
மிதுனம்
புதன்
புனர்பூசம் பின் ¼,பூசம்,ஆயில்யம்
கடகம்
சந்திரன்
மகம்,பூரம்,உத்திரம் முன் ¼
சிம்மம்
சூரியன்
உத்திரம் பின்3/4,ஹஸ்தம்,சித்திரை முன்1/2
கன்னி
புதன்
சித்திரை பின்1/2,சுவாதி,விசாகம் முன்3/4
துலாம்
சுக்கிரன்
விசாகம் பின்1/4,அனுஷம்,கேட்டை
விருச்சிகம்
செவ்வாய்
மூலம்,பூராடம்,உத்திராடம் முன்1/4
தனுசு
குரு
உத்திராடம்பின்3/4,திருவோணம்,அவிட்டம் முன்1/2
மகரம்
சனி
அவிட்டம் பின்1/2,சதயம்,பூரட்டாதி முன்3/4
கும்பம்
சனி
பூரட்டாதி பின்1/4,உத்திரட்டாதி,ரேவதி
மீனம்
குரு
சோதிட சாஸ்திரத்தில் கிரகங்களின் குணம் எந்த தெய்வத்தின் குணத்தை ஒத்துள்ளது என கண்டறிந்து, அந்த தெய்வத்தை அதிதேவதையாக கூறியுள்ளனர். ஒவ்வொரு தெய்வமும் ஒவ்வொரு கிரகத்திற்கு அதிதேவதை.
சூரியன் - சிவன், சந்திரன் - பார்வதி
பரமனும், பார்வதியும் படியளப்பவர்கள் என்ற வழக்கு உண்டு. அதுபோலவே அனைத்திற்கும் மூலகாரணாய் சூரியன் இருக்கிறான். அவன் கொடைக்கு நிகரில்லை. உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் அவன் உதவியின்றி பிராணன் கிடைப்பதில்லை. ஆகவே சூரியன் சிவனானார்.
பரமன் மனைவி பார்வதி, சந்திரனுக்கு அதிதேவதை. பூமியை தாயைப் போல் குளிரூட்டும் கிரகம். சூரியனிடத்தில் வெப்பத்தை பெற்று குளிர்ந்த ஒளியாய் தந்து நீர் நிலைகளை பொங்க வைக்கும்.
இந்த இரண்டுகிரகங்களின் நிலை சாதகத்தில் - நல்ல முறையில் இருந்தால், ஒரு ஜாதகர் தன் இன பந்துக்களுடன் இனிதே வாழ்வான் என்பது உறுதி.
செவ்வாய் :சுப்ரமண்யர்
ஜாதகத்தில் வீரத்திற்கு இன்றியமையாதது செவ்வாய் பலம். இரும்பு கிரகம். உடல் பலத்திற்கு இன்றியமையாதது செவ்வாயின் நிலை.
வீரத்தில் சிறந்த தெய்வம் முருகன். சுக்குக்கு மிஞ்சிய வைத்தியமும் இல்லை சுப்பிரமணியருக்கு மிஞ்சி தெய்வமும் இல்லை என்பது பழமொழி. அசுரர்களை தேவர்களுக்காக வதம் செய்த தெய்வம் முருகன். ஆதலால் செவ்வாய்க்கு அதிதேவதை சுப்பிரமணியர்.
புதன் :விஷ்ணு
ஒரே நேரத்தில் இருவேறு குணத்தைக் கொண்ட கிரகம். தற்சுழற்சி குறைவானது. தெய்வத்தில் இரு நிறம் கொண்ட தெய்வம் விஷ்ணு. அதுபோலவே ஒருபுறம் கடும் வெப்பமும் மறுபுறம் கடும் குளிரும் கொண்டது. எந்த கிரகத்தின் நேர்கோட்டில் 10 பாகைக்குள் உள்ளதோ அதன் குணத்தை பிரதிபலிக்க வல்லது. நியாயம் தவறாமல் கடமையை செய்வதற்கு இன்றியமையாதது இதன் நிலை.
குரு : பிரம்மா, தட்சிணாமூர்த்தி (குரு)
ஜாதகத்தில் கல்வி, கேள்வி, கீர்த்திக்கு வழிவகுக்கும் கிரகம். தற்சுழற்சி அதிகம் உள்ளது. இருக்கும் இடத்தைவிட பார்க்கும் இடமே விருத்தியாகும். ஆசிரியர் போன்ற குணத்தை உடையது.
சுக்ரன் : லக்ஷ்மி, இந்திரன்
ஒரு ஜாதகத்தில மற்ற கிரகங்கள் நிலை கெட்டிருந்தாலும் அதை நிவர்த்தி செய்ய வல்ல கிரகம் சுக்ரன். களத்திர காரகன். லக்ஷ்மியை போல் ஐஸ்வர்யத்தை கொடுக்கக் கூடிய கிரகம். ராஜயோகத்தையும், சுகபோக வாழ்க்கையையும், மனைவி வழி சொத்து சேர்க்கையையும் மனைவியின் குண நலத்தையும் கொடுக்கும். 8ம் இடத்திற்கு உரிய கிரகம். இந்திரன் குணத்தைக் கொண்டது. மழைக்கு காரணமான குளிர்ந்த கிரகம்.
சனி : எமன், சாஸ்தா
உஷ்ணத்தை பிரதிபலிக்கும் கிரகம். ஜாதகத்தில் சனியின் நிலையே மரணத்தின் வகையை நிர்ணயிக்கும். சனி 0 பாகையில் குளிர்ச்சியை கொடுக்கும். அதனால் சாஸ்தாவிற்கு நிகராக சொல்லப்பட்து. ஆனால் பார்வை உக்கிரமானது. கொடுப்பதிலும், அழிப்பதிலும் சனிக்கு நிகர் சனியே வேறு கிரகம் இல்லை (ஆயுள் காரகன்).
ராகு: காளி, துர்கை
கருமாரியின் நிழல் கிரகம். சந்திரன் தவிர மற்ற கிரகங்கள் இதன் 0 பாகையில் சாதகத்தில் வரும்போது பலன் தருவது அரிது. கருமை நிறம் உடையது. ராகு, கேதுக்கு இடையில் மற்ற கிரகங்கள் உடைபட்டு விட்டால் கால சர்ப்ப யோகம், தோஷம் என்று கூறுவதுண்டு. சாதகனின் பிற்பட்ட காலங்களிலேயே பலன் கொடுக்கும். இளம் வயதில் அவதிகளை சந்திக்க நேரும். துஷ்ட குணத்துடன் கொடுக்க வல்ல கிரகம்.
கேது :விநாயகர், சண்டிகேஸ்வரர்
ஞானத்தை கொடுக்கும் கிரகம். ஒரு ஜாதகன் பிறக்கும்போது 0 பாகை ஜன்மத்திலிருந்தால் அந்த ஜாதகனுக்கு சித்தியையும் முக்தியையும் கொடுக்கும். நீண்ட நேரம் ஓரிடத்தில் அசையாமலிருந்து பணி செய்வதில் வல்லமையைத் தரும். சோம்பல் சேர்ந்த திடீர் மாற்றத்தை தரவல்ல கிரகம். (நிழல் கிரகம்).
உடலுக்கு ஒன்பது வாசல் :
மனிதர்களுக்கு ஒன்பது வாசல் உள்ளது அவை ஒவ்வொன்றையும் கிரகம் ஆட்சி செய்கின்றது அவையானவன
1,சூரியன்-இடக்கண்
2,சுக்கிரன்-வலக்கண்வாசல்
3,சந்திரன்-வாய் வாசல்
4,புதன்-இடமூக்கு வாசல்
5,செவ்வாய்-வலமூக்கு வாசல்
6,வியாழன்-வலக் காதுவாசல்
7,சனி-இடக்காது வாசல்
8,இராகு-மலவாசல்
9,கேது-சிறுநீர் வாசல் ஆகும்
இவற்றுள் அடைக்கப்பட்ட வாயில் ஆகிய கொப்பூழை குளிகன் அல்லது மாந்தி ஆட்சி செய்கிறது! உயிர் பிரியும்போது எந்தத் திசை,எந்தப் புத்தி நடக்கிறதோ அதற்குரிய வாயில் வழியாக உயிர் பிரியும்!
நவரத்தினங்கள்:
1.கோமேதகம்
2.நீலம்
3.பவளம்
4.புஷ்பராகம்
5.மரகதம்
6.மாணிக்கம்
7.முத்து
8.வைடூரியம்
9.வைரம்.
பூதங்கள் ஐந்து வகைப்படும் :
1.ஆகாயம்-வானம்
சப்தம்
ஓசை
2.வாயு-காற்று
ஸ்பர்ஷம்
தொடு உணர்வு
3.அக்னி-நெருப்பு(தீ)
ரூபம்
ஒளி(பார்த்தல்)
4.ஜலம்-நீர்
ரஸம்
சுவை
5.பிருத்வி-நிலம்
கந்தம்
நாற்றம்(மணம்)
மஹா பாதகங்கள் ஐந்து வகைப்படும் :
1.கொலை
2.பொய்
3.களவு
4.கள் அருந்துதல்
5.குரு நிந்தை.
வீடு பேறுகள் பதினாறு வகைப்படும்:
1.புகழ்
2.கல்வி
3.வலிமை
4.வெற்றி
5.நன்மக்கள்
6.பொன்
7.நெல்
8.நல்ஊழ்
9.நுகர்ச்சி
10.அறிவு
11.அழகு
12.பொறுமை
13.இளமை
14.துனிவு
15.நோயின்மை
16.வாழ்நாள்..
புராணங்கள் பதினெட்டு வகைபடும்,
1.பிரம்ம புராணம்
2.பத்ம புராணம் 3.பிரம்மவைவர்த்த புராணம் 4.லிங்க புராணம்
5.விஷ்ணு புராணம்
6.கருட புராணம்
7.அக்னி புராணம்
8.மத்ஸ்ய புராணம்
9.நாரத புராணம்
10.வராக புராணம்
11.வாமன புராணம்
12.கூர்ம புராணம்
13.பாகவத புராணம்
14.ஸ்கந்த புராணம்
15.சிவ புராணம்
16.மார்க்கண்டேய புராணம்
17.பிரம்மாண்ட புராணம்
18.பவிஷ்ய புராணம்.
இதிகாசங்கள் முன்று வகைப்படும்.:
1.சிவரகசியம் 2.இராமாயணம் 3.மஹாபாரதம்.
சிறுநீரகம் சிறந்தது, முக்கியமானது.
சிறுநீரக நோயால் பாதிக்கப்படும் இளைஞர்களின் விகிதம் கவலையளிக்கிறது.
நமக்கு உதவக்கூடிய ஒரு பதிவைப் பகிர்கிறேன்.
தயவுசெய்து கீழே படிக்கவும்:
முக்கியமானது - சிறுநீரகம் சிறந்தது.
சில நாட்களுக்கு முன்பு, சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட எங்கள் பொதுப்பணித்துறை அமைச்சர், மாண்புமிகு டெகோ ஏரி தற்போது சிறுநீரக பிரச்சனைகளுடன் உயிர் ஆதரவுடன் மருத்துவமனையில் உள்ளார். சிறுநீரக நோயின் இந்த அச்சுறுத்தலை எவ்வாறு தடுப்பது என்பதை நான் உங்களுக்குக் காட்ட விரும்புகிறேன்.
*சிறுநீரக நோய்க்கான முதல் 6 காரணங்கள் இங்கே:*
*1. கழிப்பறைக்குச் செல்வதை தாமதப்படுத்துதல்.* உங்கள் சிறுநீரை உங்கள் சிறுநீர்ப்பையில் அதிக நேரம் வைத்திருப்பது ஒரு மோசமான யோசனை. ஒரு முழு சிறுநீர்ப்பை சிறுநீர்ப்பை சேதத்தை ஏற்படுத்தும். சிறுநீர்ப்பையில் தங்கியிருக்கும் சிறுநீர் பாக்டீரியாவை விரைவாகப் பெருக்குகிறது. சிறுநீர் சிறுநீர்க்குழாய் மற்றும் சிறுநீரகங்களுக்குத் திரும்பியவுடன், நச்சுப் பொருட்கள் சிறுநீரக நோய்த்தொற்றுகள், பின்னர் சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள், பின்னர் நெஃப்ரிடிஸ் மற்றும் யுரேமியாவை ஏற்படுத்தும். இயற்கை அழைக்கும் போது - கூடிய விரைவில் அதைச் செய்யுங்கள்.
*2. உப்பு அதிகம் சாப்பிடுவது. தினமும் 5.8 கிராமுக்கு மேல் உப்பை உண்ணக்கூடாது.*
*3. அதிகமாக இறைச்சி உண்பது.* உங்கள் உணவில் அதிகப்படியான புரதம் உங்கள் சிறுநீரகத்திற்கு தீங்கு விளைவிக்கும். புரோட்டீன் செரிமானம் அம்மோனியாவை உருவாக்குகிறது - உங்கள் சிறுநீரகங்களுக்கு மிகவும் அழிவுகரமான ஒரு நச்சு. அதிக இறைச்சி அதிக சிறுநீரக பாதிப்புக்கு சமம்.
*4. அதிகமாக காஃபின் குடிப்பது.* காஃபின் பல சோடாக்கள் மற்றும் குளிர்பானங்களின் ஒரு அங்கமாகும். இது உங்கள் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது மற்றும் உங்கள் சிறுநீரகங்கள் பாதிக்கப்படத் தொடங்குகின்றன. எனவே தினமும் குடிக்கும் கோக்கின் அளவைக் குறைக்க வேண்டும்.
*5. தண்ணீர் குடிக்காமல் இருப்பது.* நமது சிறுநீரகங்கள் அவற்றின் செயல்பாடுகளைச் சிறப்பாகச் செய்ய ஒழுங்காக நீரேற்றம் செய்யப்பட வேண்டும். நாம் போதுமான அளவு குடிக்கவில்லை என்றால், நச்சுகள் இரத்தத்தில் குவிந்துவிடும், ஏனெனில் சிறுநீரகங்கள் வழியாக அவற்றை வெளியேற்றுவதற்கு போதுமான திரவம் இல்லை. தினமும் 10 கிளாஸுக்கு மேல் தண்ணீர் குடிக்கவும். நீங்கள் குடிக்கிறீர்களா என்பதைச் சரிபார்க்க எளிதான வழி உள்ளது.
போதுமான தண்ணீர்: உங்கள் சிறுநீரின் நிறத்தைப் பாருங்கள்; இலகுவான நிறம், சிறந்தது.
*6. தாமதமான சிகிச்சை.* உங்கள் உடல்நலப் பிரச்சனைகள் அனைத்தையும் சரியாகக் கையாளுங்கள் மற்றும் உங்கள் ஆரோக்கியத்தை தவறாமல் சரிபார்க்கவும். நமக்கு நாமே உதவி செய்வோம்... இந்த வருடம் கடவுள் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஒவ்வொரு நோயிலிருந்தும் காப்பார்.
*(3) இந்த மாத்திரைகளைத் தவிர்க்கவும், அவை மிகவும் ஆபத்தானவை:*
* டி-கோல்டு
* விக்ஸ் ஆக்ஷன்-500
* கோல்ட் ஆக்ட்
* கோல்டரின்
* நிமுலிட்
* Cetrizet-D
அவை Phenyl Propanol-Amide, PPA ஆகியவற்றைக் கொண்டிருக்கின்றன
பக்கவாதத்தை ஏற்படுத்துகிறது & அமெரிக்காவில் தடை செய்யப்பட்டுள்ளது.
தயவு செய்து, நீக்கும் முன், அதைக் கடந்து உங்கள் நண்பர்களுக்கு உதவுங்கள்..! அது யாருக்காவது உதவலாம். உங்களால் முடிந்தவரை அனுப்பவும்.
*சில்வர் நைட்ரோ ஆக்சைடால் மனிதர்களுக்கு ஏற்படும் புதிய புற்றுநோயை அமெரிக்காவில் உள்ள மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.*
நீங்கள் ரீசார்ஜ் கார்டுகளை வாங்கும் போதெல்லாம், உங்கள் நகங்களால் கீற வேண்டாம், ஏனெனில் அதில் சில்வர் நைட்ரோ ஆக்சைடு பூச்சு உள்ளது மற்றும் தோல் புற்றுநோயை உண்டாக்கும்.
இந்த செய்தியை உங்கள் அன்புக்குரியவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
*முக்கிய ஆரோக்கிய குறிப்புகள்:*
1. தொலைபேசி அழைப்புகளுக்கு இடது காது மூலம் பதிலளிக்கவும்.
2. குளிர்ந்த நீருடன் உங்கள் மருந்தை உட்கொள்ளாதீர்கள்....
3. மாலை 5 மணிக்கு மேல் கனமான உணவுகளை உண்ணாதீர்கள்.
4. காலையில் அதிகமாகவும், இரவில் குறைவாகவும் தண்ணீர் குடிக்கவும்.
5. சிறந்த தூக்க நேரம் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை.
6. மருந்தை உட்கொண்ட பிறகு அல்லது உணவுக்குப் பிறகு உடனடியாகப் படுக்காதீர்கள்.
7. போனின் பேட்டரி கடைசி பட்டியில் குறைவாக இருக்கும் போது, ஃபோனுக்கு பதில் சொல்ல வேண்டாம், ஏனெனில் கதிர்வீச்சு 1000 மடங்கு வலிமையானது.
நீங்கள் விரும்பும் நபர்களுக்கு இதை அனுப்ப முடியுமா?
நான் செய்தேன்.
கருணைக்கு எதற்கும் செலவில்லை ஆனால் அறிவுதான் சக்தி...
உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் அனுப்பவும்!
தயவு செய்து படித்து உங்களை கவனித்துக் கொள்ளுங்கள் - டாக்டர் ஓகியர்.




.jpeg)












