Saturday, January 20, 2024

ரஹ்மானுக்கு ‘தன்னம்பிக்கையின் சக்தி’ உறுதுணை

 மனப்போராட்டத்திற்கும், சந்தேகக் கண்ணோட்டத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்துவிட்டு இலக்கை நோக்கி ஆர்வத்துடன் பயணிக்க வழிவகுத்து, வாழ்க்கையின் அற்புதமான மாற்றங்களுக்கு முக்கியக் காரணமாக இருப்பதுடன் கனவுகள் நிறைவேறுவதற்கு உறுதுணையாக இருக்கும் சக்தி ‘தன்னம்பிக்கை’.


உலகின் மிகச்சிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வர ஏ.ஆர். ரஹ்மானுக்கு ‘தன்னம்பிக்கையின் சக்தி’ உறுதுணை


 ஜனவரி 6, 1966ல் சென்னையில் ஒரு இசைக்குடும்பத்தில் திலீப் குமாராகப் பிறந்தார். 4 வயதிலேயே பியானோ வாசிக்கத் தொடங்கினார். 9 வயதில் தந்தையை இழந்தார். 11 வயதில் குடும்பத்துக்குத் துணை நிற்கவேண்டும் என்ற நிர்பந்தத்துடன் கீ-போர்ட் வாசிப்பவராக இளையராஜாவிடம் இணைந்தார்.

 

சிறுவயதில் அதிக வெட்கத்தின் காரணமாக, தனிமையில் அனைத்து விளக்குகளையும் அணைத்துவிட்டே பாடி பார்த்த அவர் இன்று மக்களின் முன் ஒளிவீசும் விளக்குகளுக்கு மத்தியில் பாடுகின்றார். 


2008ல் இரண்டு ஆஸ்கர் விருதுகளை ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ படத்திற்கு பெற்றரஹ்மான் உலகப் புகழ் ‘மொஸார்ட் ஆப் மெட்ராஸ்’ன் பிரதிநிதியாக உள்ளார்

ரஹ்மானின் வாழ்வில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்:

உங்களுக்கும் உங்களது இலக்குகளுக்கும் இடையில் இடையூறாக இருப்பது உங்களது அச்சமே. அதை ஊக்கத்துடன் எதிர்கொண்டு வெல்ல கற்றுக்கொள்ள வேண்டும்.

 

உங்கள் மீது நம்பிக்கை வைத்துத் திறமைகளை வெளிப்படுத்த முயற்சி செய்ய வேண்டும்.

நீங்கள் இன்று எந்த இடத்தில் இருக்கிறீர்கள் என்பது ஒரு விஷயமே அல்ல. 


தன்னம்பிக்கை சக்தி உடனிருக்கும் பட்சத்தில் எந்த உயரத்தையும் எட்ட முடியும்.

பேய்ப்பீர்க்கு-தினம் ஒரு மூலிகை


*பேய்ப்பீர்க்கு*.    இதை நுரைப்பிற்கு மெழுகு பிற்கு என்றும் அழைப்பார்கள் தமிழகமெங்கும் தானே வளரும் குடியினம் கசப்பு மிக்க சுவையுடையது கொடியின் எல்லா பாகங்களும் கசப்பு சுவை உடையது இலை வேர் காய் ஆகியவை மருத்துவ குணம் உடையது நஞ்சு முறிக்கும் தன்மை அது இலையை இடித்து பிழிந்து வடிகட்டி 30 மில்லி அளவாக காலையில் மட்டும் மூன்று நாட்கள் உட்கொள்ள வாந்தியாகி அனைத்து நஞ்சுகளையும் முறிக்கும் மருத்துவத்தின் போது உப்பில்லா பத்தியம் இருத்தல் அவசியம் காய்ச்சாற்றில் மூன்று துளியோ அல்லது காயை உலர்த்தி இடித்து எடுத்த பொடியையும் நசியமிட மஞ்சள் காமாலை தீரும் ஒற்றைத் தலைவலி தீரும் உலர்ந்த காயின் பொடியை தாளில் சுருட்டி பீடி போல் புகைக்க பல் தேய்வு சொத்தை பூச்சிகள் ஆகியவை தீரும் உலர்ந்த வேர் மிளகு சமனளவு எடுத்து இடித்து பொடியாக்கி அரை கிராம் அளவாக வெண்ணையில் குழைத்து கொடுக்க செய்யான் கடியினால் ஏற்படும் தடிப்பும் நமைச்சலும் தீரும் வேர் நன்னாரி வேர் சீரகம் ஆகியவற்றை சமநலவு உலர்த்தி பொடித்து சர்க்கரை சேர்த்து காய்ச்சிய பாலில் அரை தேக்கரண்டி அளவாக கலந்து பருகிவர சீழ்ப்பிரமேகம் தீரும் நன்றி.

Friday, January 19, 2024

காட்டுச்சுரை


பேய்ச்சுரை அல்லது காட்டுசுரை எனவும் அழைப்பர். காட்டுச்சுரை (அ) பேய்ச்சுரை கசப்பாக இருக்கும். மருத்துவத்துக்கு இவற்றின் இலை, கொடி, காய், விதை என அனைத்தும் பயன்படுகிறது. இந்த பேய்ய்சுரையின் மருத்துவக் குணங்கள் என்ன என்பதைப் பற்றிப் பார்ப்போம்.

எவ்வளவு கடுமையான விஷக்கடியாக இருந்தாலும் இது விஷத்தை முறித்து துரித குணத்தை உண்டாக்கிவிடும்.

பேய்ச்சுரையின் வேரைச் சேகரித்து நன்கு அரைக்க வேண்டும். இதை விஷத் தீண்டலுக்கு உள்ளானவர்களுக்கு இரண்டு கொட்டைப்பாக்கு அளவு உள்ளுக்குக் கொடுக்க வேண்டும். இந்த இலையை அரைத்து கடிவாயில் வைத்துக் கட்டிவிட வேண்டும். திடீரென ஏற்படும் பேதி, வாந்தி முதலியவற்றால் விஷத்துக்கு முறிவு ஏற்பட்டு விஷக்கடிக்கு ஆளானவரின் உயிர் மீளும்.

சிலவகைப் பாம்புகள் கடித்தால் அவற்றின் விஷ வேகம் மிகவும் துரிதமாக இரத்தத்தில் கலந்து, இருதயத்தை அடைந்து முச்சடைத்து மனிதன் இறந்துவிடுவான் , ஆனால் அவசர உணர்வோடு பேய்ச்சுரையை உபயோகித்தால் விஷத்தை முறித்துவிடலாம்.

கொடிய விஷப்பாம்பு கடித்து மனிதன் உணர்விழந்துவிட்டான் என்றால் முதலில் நாம் செய்யவேண்டியது அவனுக்கு உணர்வு ஊட்டி நினைவுண்டாக்க வேண்டியத்தான். இதற்கு பேய்ச்சுரை

கழுகுகளிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள கோட்பாடுகள்


கழுகுகளிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளக்கூடிய ஆறு தலைமைத்துவக் கோட்பாடுகள்

1. கழுகுகள் தனியாகவும் அதிக உயரத்திலும் பறக்கின்றன.

அவை சிட்டுக்குருவிகள், காக்கைகள் மற்றும் பிற சிறிய பறவைகளுடன் பறப்பதில்லை.

பொருள்;  குறுகிய மனப்பான்மை கொண்டவர்களிடமிருந்து விலகி இருங்கள், உங்களை வீழ்த்துபவர்கள்.  கழுகு கழுகுகளுடன் பறக்கிறது.  நல்ல சகவாசம் வைத்துக் கொள்ளுங்கள்.

2. கழுகுகளுக்கு துல்லியமான பார்வை உள்ளது.  

5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள எதையாவது கவனம் செலுத்தும் திறன் அவர்களுக்கு உண்டு.  எந்தத் தடைகள் வந்தாலும், கழுகு இரையைப் பிடிக்கும் வரை அதன் கவனத்தை நகர்த்தாது.

பொருள்;  எத்தகைய தடைகள் வந்தாலும் ஒரு பார்வை மற்றும் கவனத்துடன் இருங்கள், நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.

3. கழுகுகள் இறந்த பொருட்களை உண்பதில்லை.  அவை புதிய இரையை மட்டுமே உண்கின்றன.

பொருள்;  உங்கள் கடந்தகால வெற்றியை நம்பாதீர்கள், வெற்றிபெற புதிய எல்லைகளைத் தேடுங்கள்.  கடந்த காலத்தில் உங்கள் கடந்த காலத்தை அது எங்கிருந்ததோ அங்கேயே விட்டு விடுங்கள்.

4.கழுகுகள் புயலை விரும்புகின்றன.

மேகங்கள் கூடும் போது, கழுகு உற்சாகமடைகிறது, கழுகு புயல் காற்றைப் பயன்படுத்தி தன்னை மேலே தூக்கிக் கொள்கிறது.  புயலின் காற்றைக் கண்டுபிடித்தவுடன், கழுகு மேகங்களுக்கு மேலே தன்னை உயர்த்திக் கொள்ள பொங்கி வரும் புயலைப் பயன்படுத்துகிறது.  இது கழுகிற்கு அதன் இறக்கைகளை சறுக்கி ஓய்வெடுக்க வாய்ப்பளிக்கிறது.  இதற்கிடையில், மற்ற அனைத்து பறவைகளும் மரத்தின் கிளைகளிலும் இலைகளிலும் ஒளிந்து கொள்கின்றன.

பொருள்;  இவை உங்களை விட வலிமையாகவும் சிறப்பாகவும் வெளிப்படும் என்பதை அறிந்து உங்கள் சவால்களை எதிர்கொள்ளுங்கள்.  வாழ்வின் புயல்களை நாம் அதிக உயரத்திற்குப் பயன்படுத்திக்கொள்ளலாம்.  சாதனையாளர்கள் உயரம் உயர பயப்பட மாட்டார்கள்.  சாதனையாளர்கள் சவால்களுக்கு பயப்பட மாட்டார்கள், மாறாக அவர்கள் அவற்றை அனுபவித்து லாபகரமாக பயன்படுத்துகிறார்கள்.

5. கழுகுகள் பயிற்சிக்குத் தயாராகின்றன;

அவர்கள் கூட்டில் உள்ள இறகுகள் மற்றும் மென்மையான புல்லை அகற்றிவிடுகிறார்கள், இதனால் குஞ்சுகள் பறக்கத் தயாராகி அசௌகரியமடைகின்றன, இறுதியில் பறக்கின்றன/ கூட்டில் தங்குவது தாங்க முடியாததாக இருக்கும்./

பொருள்;  உங்கள் ஆறுதல் மண்டலத்தை விட்டு வெளியேறுங்கள், அங்கு வளர்ச்சி இல்லை.

6. கழுகு வயதாகும்போது

அவனுடைய இறகுகள் வலுவிழந்து, அவனை எவ்வளவு வேகமாகவும், எவ்வளவு உயரமாகவும் எடுத்துக்கொள்ள முடியாது.  இது அவரை பலவீனப்படுத்துகிறது மற்றும் அவரை இறக்கக்கூடும்.  எனவே அவர் மலைகளில் வெகு தொலைவில் உள்ள இடத்திற்கு ஓய்வு எடுக்கிறார்.  அங்கு இருக்கும் போது, அவர் தனது உடலில் உள்ள பலவீனமான இறகுகளைப் பறித்து, அதன் கொக்குகளையும் நகங்களையும் பாறைகளுக்கு எதிராக உடைத்து, அவர் முற்றிலும் வெறுமையாக இருக்கும் வரை;  மிகவும் இரத்தக்களரி மற்றும் வலிமிகுந்த செயல்முறை.  பின்னர் அவர் புதிய இறகுகள், புதிய கொக்குகள் மற்றும் நகங்கள் வளரும் வரை இந்த மறைவிடத்தில் இருந்து பின்னர் அவர் முன்பை விட உயரமாக பறந்து வெளியே வருகிறார்.

பொருள்;  நாம் எப்போதாவது பழைய பழக்கத்தை விட்டுவிட வேண்டும், எவ்வளவு கடினமாக இருந்தாலும், நமக்குச் சுமையாக இருக்கும் அல்லது நம் வாழ்க்கைக்கு மதிப்பு சேர்க்காத விஷயங்களை விட்டுவிட வேண்டும்.

தன்னம்பிக்கையை எப்படி அதிகப்படுத்தி கொள்வது?


வாழ்வை செதுக்கிய தன்னம்பிக்கை மந்திரங்கள்....

Self motivation advices :

1) முதலில் நிமிர்ந்து நிற்கவும், நடக்கவும், அமரவும் பழகுங்கள். தலையை குனிந்து கொண்டு நடப்பது மற்றவர் கண்களை நேருக்கு நேராக பார்க்காமல் தவிர்ப்பது முதலில் avoid செய்யுங்கள்.

2) எதிர்மறையான எண்ணங்கள் வேண்டவே வேண்டாம். Always Positive thinking

3) புன்னகை எப்போதும் இருக்கட்டும், உள்ளத்தில் எந்த கவலை இருந்தாலும்....

4) எதற்கும் பயப்படாதீர்கள். நம்மை மீறி எதுவும் நடக்காது என்று உறுதியாக நம்புங்கள்.

5) உடை அணிவதில் கவனம் தேவை. எளிமையான உடையாக இருந்தாலும் சுத்தமாக அணியுங்கள். கசங்கிய ஆடையோடு ஊர்வலம் வராதீர்கள்.

6) உங்களிடம் நீங்களே பேசி உங்களை உற்சாகபடுத்தி கொள்ளுங்கள்.

நான் தன்னம்பிக்கை மிக்கவன்

நான் சக்தி மிக்கவன்

நான் சாதனையாளன்

நான் அன்பு மிக்கவன்

என்னால் முடியும் முடியும் 

முடியும் வெற்றி நிச்சயம்.


அடிக்கடி இதை உங்களுக்குள் 

சொல்லி கொள்ளுங்கள்.


7) சின்னஞ் சிறு இலக்குகளை தினமும்நிர்ணயம் செய்யுங்கள். செய்து முடித்தவுடன் உங்களை நீங்களே பாராட்டி கொள்ளுங்கள். eg :சரியான நேரத்திற்கு செல்லுதல்.இனிய சொற்களை பேசுதல். 

நாம் இருக்கும் இடத்தை சுத்தமாக வைத்து கொள்ளல்.மற்றவர்க்கு உதவுவதல் etc etc

8) வாழ்க்கை ஒரு விளையாட்டு.ஜெயித்து காட்டுவேன்... என்று சங்கற்பம் செய்து கொள்ளுங்கள்.

9) நல்ல நட்பு வட்டத்தை உருவாக்கி கொள்ளுங்கள். 

10)Ego, Jealous, Fear, Hesitation எல்லாவற்றையும் மூட்டை கட்டி தூர போடுங்கள்.

ஒரே நாளில் எல்லாம் முடியாது. 

சிறுக சிறுக பழக்கப்படுத்தி கொள்ளுங்கள்.

இந்த 10 ம் தெளிவாக எழுதி வைத்து கொண்டு, தினமும் ஒரு முறை படியுங்கள். மனதில் பதிய வையுங்கள்.

Thursday, January 18, 2024

அடிக்கடி சளி பிடிக்குதா.. மாத்திரை வேண்டாம்.




மழைக்காலம் வந்து விட்டாலே சளி மற்றும் இருமல் போன்ற தொற்றுக்கள் அடிக்கடி ஏற்பட ஆரம்பித்து விடும். சிலருக்கு நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தாலும் அவர்கள் அடிக்கடி சளி மற்றும் இருமல் போன்ற தொற்றுக்கு உள்ளாவார்கள். மூச்சுக்குழாய் மற்றும் நுரையீரலின் கீழ் சுவாசக் குழாயில் ஏதேனும் தொற்று ஏற்பட்டால் சளி ஏற்படுகிறது. இது வைரஸ், பாக்டீரியா மற்றும் பூஞ்சை போன்ற நோய்த்தொற்றால் ஏற்படுகிறது. இப்படி ஏற்படும் சளித் தொல்லையை எப்படி வீட்டு வைத்திய முறைகள் மூலம் போக்கலாம் என அறிந்து கொள்வோம்.

​சளி ஏற்படுவதற்கான ஆபத்து காரணிகள்

நிமோனியா, லேசான தொற்று, காச நோய், நுரையீரல் புற்று நோய், மூச்சுக் குழாய் அழற்சி போன்ற நோய்கள் சளியை ஏற்படுத்துகிறது. நாள்பட்ட மூச்சுக் குழாய் அழற்சி, ஆஸ்துமா போன்ற காற்றுப் பாதை நோய்களாலும் சளி உண்டா கிறது.

சளியை குறைக்க சிறந்த வழி அதைக் கண்டறிந்து அதை சுவாசப் பாதையில் இருந்து முழுமையாக அகற்ற வேண்டும். சளியை குறைக்க நீராவி பிடித்தல், வெதுவெதுப்பான நீரைப் பருகுதல் போன்ற விஷயங்களை செய்து வரலாம். இதனால் நுரையீரலில் இருந்து அதிகப்படியான சளியை வெளியேற்ற முடியும்.

​சளி இருமலைக் குறைக்கும் தேன் இஞ்சி

1 தேக்கரண்டி தேனை 1 தேக்கரண்டி இஞ்சி சாறுடன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். இந்த சிரப்பை பருகி வர தொண்டைப் புண் மற்றும் வறட்டு இருமலை போக்க முடியும். ஒரு நாளைக்கு 3 முறை என தேவையான அளவு எடுத்துக் கொள்ள வேண்டும்.

தொண்டை வலியால் ஏற்படும் வீக்கத்தை குறைக்க இஞ்சி உதவுகிறது. தேன் சளியை வெளியேற்றவும் இருமலை அமைதிப்படுத்தவும் உதவுகிறது.

​சளி இருமல் குறைய நிறைய தண்ணீர் குடியுங்கள்

நீரேற்றமாக இருப்பது சுவாச பாதையில் இருந்து சளியை வெளியேற்ற உதவுகிறது. எனவே நிறைய தண்ணீர் எடுத்து வாருங்கள். இது தொண்டையில் உள்ள சளியை மெல்லியதாக மாற்ற உதவுகிறது. எனவே சளித் தொல்லை இருக்கும் சமயங்களில் வெதுவெதுப்பான நீரை குடிப்பது நல்லது.

உப்பு நீரில் வாய் கொப்புளியுங்கள்

உப்பு நீரை வைத்து வாய் கொப்பளிப்பது உங்கள் தொண்டையை சுத்தம் செய்து சளியை குறைக்க உதவுகிறது. ஒரு கிளாஸ் தண்ணீரில் 1-2 தேக்கரண்டி கல் உப்பு சேர்த்து கொள்ளுங்கள்.


நீரை குலுக்கி கொஞ்சம் உப்பு நீரை வாயில் ஊற்றி தொண்டையில் படும் படி செய்து வாயை கொப்பளிக்க வேண்டும். இது மேல் சுவாசப் பாதையில் தொற்று ஏற்படுவதை தடுக்கிறது.

சளி இருமல் தவிர்க்க சத்தான உணவு

அதிகப்படியான சளியை போக்க ஏலக்காய், வெங்காயம், அன்னாசி, இஞ்சி, பூண்டு, மிளகுத்தூள் போன்றவற்றை அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். காரமான உணவுகள் கெட்டியான சளியை வெளியேற்ற உதவுகிறது.

நீராவி மற்றும் அத்தியாவசிய எண்ணெய்

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சூடாக்கி அதில் அத்தியாவசிய எண்ணெய் சேர்த்து அதில் இருந்து வெளியேறும் நீராவியை முகர்ந்து பார்க்க வேண்டும்.

தினமும் 1-2 முறை இதைச் செய்து வரலாம். நீராவியை உள்ளிழுப்பது உங்கள் சுவாசப் பாதையில் உள்ள சளியை அகற்ற உதவுகிறது.சளியை இளகச் செய்து வெளியேற்றுகிறது.

சளி இருமலைக் குறைக்கும் மூலிகை தேநீர்

புதினா தேநீரில் அழற்சி எதிர்ப்பு பண்புகள், ஆன்டி மைக்ரோபியல் பண்புகள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்கள் காணப்படுகிறது. இது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. சளியை வெளியேற்ற உதவுகிறது.

8​சளி இருமலைக் குறைக்கும் நாசி ஸ்ப்ரே

சளி உருவாவதைக் குறைக்கவும், சாதாரண சுவாசத்தை மீட்டெடுக்கவும் நாசி ஸ்ப்ரே உதவுகிறது. நாசி ஸ்ப்ரேயில் உப்பு நீர் உள்ளது. இது சளியை மெல்லியதாக தளர்த்தி வெளியேற்றுகிறது.

​சளி இருமல் குறைய பின்பற்ற வேண்டிய விஷயங்கள்

சளித் தொல்லையை போக்க புகைப்பிடித்தலை தவிர்க்க வேண்டும். மது அருந்துதல் கூடாது.

காபியை குறைந்த அளவு எடுத்துக் கொள்ளுங்கள்.

தலையை உயர்த்தி வைத்து படுங்கள்

பால் பொருட்களை தவிருங்கள், சுவாச பயிற்சி செய்யுங்கள்.

Wednesday, January 17, 2024

சிறுநீரகக்கல் - இஞ்சி நெல்லிக்காய் ஜூஸ்



இஞ்சி - நெல்லிக்காய் ஜூஸ்!

இரண்டு பெரிய நெல்லிக்காய்களை நறுக்கிக் கொள்ளவும். ஒரு சிறு துண்டு இஞ்சியின் தோல் சீவித் துருவவும். நெல்லிக்காய், இஞ்சியுடன் அரை கப் தண்ணீர் சேர்த்து அரைக்கவும். பிறகு, இதில் இரண்டு டீஸ்பூன் சர்க்கரை, ஒரு டீஸ்பூன் தேன், ஒரு சிட்டிகை உப்பு, கால் டீஸ்பூன் சீரகத்தூள் சேர்த்து மேலும் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து அரைக்கவும். இதை வடிகட்டி, தேவைப்பட்டால் குளிரவைத்துப் பரிமாறவும்.இந்த ஜூஸை தொடர்ந்து குடித்து வந்தால், சிறுநீரகக் கல் கரையும்.

********

சுய சம்பாத்தியம் என்றால் என்ன...?


சுய சம்பாத்தியம் என்றால், ஒருவர் தன்னுடைய வாழ்நாளில் யாருடைய தயவுமின்றி சுயமாக சம்பாதித்த அல்லது வாங்கிய அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் அனைத்துமே அவரது சுய சம்பாத்தியம் ஆகும்.


சுயசம்பாத்தியச் சொத்தில் யாருக்கெல்லாம் பங்கு உண்டு...?


சுயசம்பாத்தியச் சொத்தில் யாருக்கு பங்கு கிடையாது. அதனை சம்பாதித்தவர் அதனை யாருக்கு வேண்டுமானாலும் கொடுக்கலாம். அதனை தடுக்கும் உரிமை யாருக்கும் கிடையாது.


பூர்வீகச் சொத்து என்றால் என்ன...?


ஒருவர் தனது வாழ்நாளில் சுயமாக சம்பாதித்த அசையும் மற்றும் அசையாச் சொத்துக்களைப் பற்றி, எந்தவித ஏற்பாடும் எழுதி வைக்காமல் இறந்துவிட்டால், அவரது சொத்துக்கள் பூர்வீகச் சொத்துக்கள் ஆகும். 


பூர்வீகச் சொத்துக்களில் யாருக்கெல்லாம் உரிமை உண்டு...?


பூர்வூகச் சொத்துக்கள் பிரிக்கப்படாதவரை, அந்தப் பரம்பரையில் வருகின்ற வாரிசுகள் அனைவருக்குமே சொந்தமாகும். 


வாரிசுகள் என்றால் யார்...? 

இவர்களில் முன்னுரிமை உண்டா...?


திருமணமான ஒரு ஆணின் வழித்தோன்றல்கள் அனைவருமே அவரது வாரிசுகள்தான். இருந்தாலும், சட்டம் இவர்களில் சிலரை முன்னிலைப்படுத்தி இருக்கிறது.


முதல்நிலை வாரிசு

திருமணமான ஒரு ஆணின் சொத்திற்கு அவரது மனைவி, மகன், மகள் மற்றும் தாய் ஆகியவர்கள் முதல்நிலை வாரிசுகளாக சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்டு உள்ளனர். 


இரண்டாம் நிலை வாரிசு

திருமணமான ஒரு ஆணின் சொத்திற்கு அவரது தந்தை இரண்டாம் நிலை வாரிசாக சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்டு உள்ளார். 


மூன்றாம்நிலை வாரிசு

திருமணமான ஒரு ஆணின்சொத்திற்கு அவரது உடன்பிறந்த சகோதர, சகோதரர்கள் மூன்றாம்நிலை வாரிசுகளாக சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்டு உள்ளனர்.


திருமணம் ஆன ஒருவரின் சொத்துக்கு அவரது பேரன் மற்றும் பேத்திகள் எப்போது உரிமை கொண்டாட முடியும்...?


திருமணமான ஒரு ஆண், தனது சொத்துக்களைப் பற்றி எதுவும் எழுதி வைக்காமல், திடீரென இறந்து போன சூழ்நிலையில், அவரது மகன் அல்லது அவரது மகள் ஏற்கனவே இறந்து போயிருந்தால் அந்த மகன் அல்லது மகளுக்குரிய பங்கு (அவர்களின் குழந்தைகளான) அவரது பேரன் பேத்திகளுக்கு சரிசமமாக பிரித்து வழங்கப்படும்.


திருமணம் ஆகாத ஒருவரின் சொத்துக்கு, அவரது தந்தை எப்போது உரிமை கொண்டாட முடியும்...?


திருமணமாகாத ஒரு ஆண், தனது சொத்துக்களைப் பற்றி எதுவும் எழுதி வைக்காமல், திடீரென இறந்து போய்விட்டார் என்றால், அவரது தாயாரும் ஏற்கனவே இறந்துபோயிருந்தால், அவரது சொத்துக்கள் அனைத்தும் அவரது தந்தைக்குச் சேரும்.


திருமணம் ஆன ஒருவரின் சொத்துக்கு அவரது தந்தை எப்போது உரிமை கொண்டாட முடியும்...?


திருமணமான ஒரு ஆண், தனது சொத்துக்களைப் பற்றி எதுவும் எழுதி வைக்காமல், திடீரென இறந்து போன சூழ்நிலையில், அவரது தாயும், அவரது மனைவியும், அவரது மகன் மற்றும் மகள்களூம் ஏற்கனவே இறந்துபோயிருந்தால், அவரது சொத்துக்களுக்கு அவரது தந்தை உரிமை கொண்டாட முடியும். 


திருமணம் ஆகாத ஒருவரின் சொத்துக்கு அவரது சகோதர, சகோதரிகள் எப்போது உரிமை கொண்டாட முடியும்...?


திருமணமாகாத ஒரு ஆண், தனது சொத்துக்களைப் பற்றி எதுவும் எழுதி வைக்காமல், திடீரென இறந்து போய்விட்டார் என்றால், அவரது தாயாரும், தந்தையும் ஏற்கனவே இறந்து போயிருந்தால், அவரது சொத்துக்கள் அனைத்திற்கும் அவரது சகோதர, சகோதரிகள் உரிமை கொண்டாட முடியும்.


திருமணம் ஆன ஒருவரின் சொத்துக்கு அவரது சகோதர, சகோதரிகள் எப்போது உரிமை கொண்டாட முடியும்...?


திருமணமான ஒரு ஆண், தனது சொத்துக்களைப் பற்றி எதுவும் எழுதி வைக்காமல், திடீரென இறந்து போன சூழ்நிலையில், அவரது தாயும் தந்தையும், அவரது மனைவியும், அவரது மகன் மற்றும் மகள்களூம் ஏற்கனவே இறந்துபோயிருந்தால், அவரது சொத்துக்கள் அனைத்திற்கும் அவரது சகோதர, சகோதரிகள் உரிமை கொண்டாட முடியும். 


Half Brother, Half Sister என்று சட்டம் யாரைக் குறிப்பிடுகிறது...?


கோபால் என்ற ஒருவருக்கு இரண்டு மனைவிகள் என்று வைத்துக் கொள்வோம். கோபாலின் முதல் மனைவிக்குப் பிறந்த குழந்தைகளுக்கு, கோபாலின் இரண்டாவது மனைவியின் மகன் Half Brother , மகள் Half Sister ஆவார். 


Half Brother, Half Sister-கள் எந்தச் சொத்தில் உரிமை கொண்டாட முடியாது...?


திருமணமான ஒரு ஆண், தனது சொத்துக்களைப் பற்றி எதுவும் எழுதி வைக்காமல், திடீரென இறந்து போன சூழ்நிலையில், அவரது தாயும் தந்தையும், அவரது மனைவியும், அவரது மகன் மற்றும் மகள்களூம் ஏற்கனவே இறந்துபோயிருந்தால், அவரது சொத்துக்கள் அனைத்திற்கும் அவரது உடன்பிறந்த சகோதர, சகோதரிகள் மட்டுமே உரிமை கொண்டாட முடியும். 


Half Brother Half Sister-கள் உரிமை கொண்டாட முடியாது. சட்டம் இங்கு ஒரு தாய் வயிற்று பிள்ளைகளுக்கே உரிமையை வழங்கி இருக்கிறது.


சட்டத்தால் அங்கீகரிக்கப்படாத திருமணம் எது...?


ஒரு ஆண் முதல் மனைவி உயிருடன் இருக்கையிலேயே, அந்த முதல் திருமணத்தை சட்டபூர்வமாக ரத்து செய்யாமலேயே, இரண்டாவதாக ஒரு திருமணம் செய்வதை சட்டம் அங்கீகரிக்கவில்லை.


ஒரு ஆணின் சொத்தில் முறையாக திருமணம் செய்யாத இரண்டாவது மனைவிக்கு பங்கு உண்டா...?


கிடையாது. ஆனால், அவரது குழந்தைகளுக்கு தந்தையின் சொத்தில் பங்கு உண்டு.


இரண்டாவது மனைவிக்கு கணவனின் சொத்தில் உரிமை எப்போது கிடைக்கும்...?


ஒரு ஆண் தன்னுடைய முதல் மனைவி இறந்த பிறகோ அல்லது தன்னுடைய முதல் மனைவியை சட்டப்படி விவாகரத்து செய்த பிறகோ, இன்னொரு பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ளும் போது, அந்தப் பெண்ணிற்கு அவரது சட்டப்படியான மனைவி என்ற அந்தஸ்தும், கணவனின் சொத்தில் அல்லது பூர்வீகச் சொத்தில் உரிமையும் கிடைக்கும்.


இறந்து போன முதல் மனைவிக்கு ஒரு குழந்தையும், உயிருடன் உள்ள (சட்டபூர்வ) இரண்டாவது மனைவிக்கு இரண்டு குழந்தையும் இருந்தால், ஒருவரின் சொத்தை எப்படி பிரிக்க வேண்டும்...?


இறந்து போன ஆணுக்கு சொந்தமாக ஒரே அளவுள்ள 4 வீடுகளும், வங்கியில் 40 லட்ச ரூபாய் ரொக்கமும் இருப்பதாக வைத்துக் கொள்வோம். 


இதனை அனைவரும் சமமாக பிரித்து வைத்துக் கொள்ள வேண்டும். அதாவது மூத்த தாரத்து மகள்(1), இரண்டாவது மனைவி(2), இரண்டாவது மனைவியின் மகன்(3), இரண்டாவது மனைவியின் மகள்(4) ஆகிய நால்வரும் ஆளுக்கொரு வீடும், 10 லட்ச ரூபாயுமாக பங்கு பிரித்துக் கொள்ள வேண்டும். 


ஒரு மனையை அல்லது ஒரு நிலத்தினை அண்ணன் தம்பிகள் எப்படி சண்டையில்லாமல் பிரித்துக் கொள்வது...? 


ஒரு வீடு அல்லது ஒரு நிலம் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். இதனை சண்டை போட்டுக் கொள்ளாமல் சகோதரர்கள் (இருவர் மட்டும் இருந்தால்) பிரித்துக் கொள்ள விரும்பினால், அண்ணனுக்கு மேற்கு திசையில் உள்ள இடமும், தம்பிக்கு கிழக்கு திசையில் உள்ள இடமும் என்று பிரித்துக் கொள்ளலாம். 


நான்கு பேர் இருந்தால், மூத்தவனுக்கு தென்மேற்கு, அடுத்தவன் வடமேற்கு, மூன்றாவது உள்ளவனுக்கு தென்கிழக்கு, கடைசியில் உள்ளவனுக்கு வடகிழக்கு என்று பிரித்துக் கொள்ள வேண்டும் என்றும், பெண்வாரிசுகள் இருந்தால் சகோதரர்கள் மேற்கு மற்றும் தெற்கு பக்க பங்குகளையும், சகோதரிகள் கிழக்கு மற்றும் வடக்கு பக்க பங்குகளையும் பிரித்து எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும், ஒரு மனையையோ அல்லது ஒரு வீட்டையோ நான்கு பாகமாக மட்டுமே பிரிக்க வேண்டும் என்றும், அந்தச் சொத்துக்கு அதிக வாரிசுகள் இருந்தால் நான்கு நபர்கள் தவிர மற்றவர்கள் தங்கள் பங்கிற்காக பணத்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.

சாதுரியம், சாணக்கியத்தனம், ராஜதந்திரம்


சாதுரியம், சாணக்கியத்தனம், ராஜதந்திரம்  இவை எல்லாம் வேறு ஒன்றுமில்லை.* *நம்பிக்கை துரோகம் என்பதன்  நாகரிகப்பெயர்கள் தான் அவைகள்.*


பிறர் கண் கலங்க காரணமாக வாழ்வதை விட அவர் கண் கலங்கினால் , அவர் கண்ணீர் துடைக்க வாழ்வதே சிறப்பு.


எல்லா கல்லையுமா கருவறைக்குள் ஏற்ற முடியும், அதேபோல தான் வாழ்கையில் ஜெயுச்சவங்களும்.


*சில கற்கள் செதுக்க முயற்சிக்கும் போதே வலி தாங்க முடியாமல் தன் தகுதியினை குறைத்து கொள்கின்றன.


எதற்கும் எப்போதும் தயாராக இருங்கள். சில நேரங்களில் நீங்கள் யூகிக்க முடியாதப் பல விஷயங்கள். உங்களுக்கு எதிராய்த் திரும்பும்.


கடந்து போக கற்று கொள்ளுங்கள்.மாயமான இவ்வுலகில் எல்லா காயங்களுக்கும் நியாயங்கள் தேடிக்கொண்டிருந்தால் நிம்மதி இருக்காது.


பிரச்சனைகளைத் தீர்க்க பழகிக் கொள்ளுங்கள். கவலைகளை மறக்கப் பழகிக் கொள்ளுங்கள். மகிழ்ச்சியாக வாழ்வதற்கே வாழ்க்கை என்பதை புரிந்து கொள்ளுங்கள்.


காற்று அடிக்கும் திசையைப் பொறுத்து தான், மழையின் பயணம் இருக்கிறது. கலங்கரை விளக்கை பார்த்து தான், கப்பலின் கரையும் இருக்கும்.


உழைப்பவரின் உயர்வை பொறுத்து தான், மேலாண்மையின் திறன் இருக்கும். வரப்பு உயர்ந்தால் தான் நீர் உயரும். நீர் உயர்ந்தால் தான் நெல் உயரும். உழைப்புக்கு உயர்வு கொடுத்தால் வெற்றி நிச்சயம்.

Tuesday, January 16, 2024

நன்றி சொல்வது தமிழனின் மரபுசார்ந்த வாழ்வியல்....!!

 


🙏🌽💕நன்றி சொல்வது தமிழனின் மரபுசார்ந்த வாழ்வியல்....!!*


தமிழர்களின் கலாச்சாரத்தில் ஒன்றிப்போன ஒன்றுதான் உதவிய உயிர்களுக்கு நன்றி சொல்வது...!!


அதனால்தான் உழவர்கள் தங்களுக்கு உழவுத் தொழிலில் 

உற்ற நண்பனாக விளங்குகிற கால்நடைகளுக்கு 

நன்றி சொல்வதற்காகவே 

ஒரு விழா...!!


நம்

முன்னோர்கள் கொண்டாடிய ஒவ்வொரு விழாவும் அந்த அந்த பருவ நிலைகளுக்கு ஏற்ப வாழ்வியல் சூழலை நமக்கு வாழ்க்கை பாடமாக வகுத்து தந்து இருக்கிறார்கள் என்பதே திருவிழாக்கள் நமக்குத் 

தரும் 

நல்ல செய்திகள்....!!


இயற்கை

தந்த இந்த வாழ்வுக்கு நன்றி சொல்வோம்...!!


நேசமுடன்

*வாய்மேடு இ.மணிமொழி*

🌞🌾🐑🐏🐂🐄🐓🐃

முடிவளர்ச்சிகான தைலம்


தே.பொருட்கள்-

நொச்சி சாறு 1/2 படி 

கையான் தகரை  சாறு 1/2 படி 

வாசனை புல் சாறு (திருப்பன புல் )1/2 படி 

அவுரிசாறு  1/2 படி 

சின்னிசாறு  1/2 படி 

தேங்காய் எண்ணெய்   2.1/2 படி 

இவைகளை ஒன்றாக ஒரு பாத்திரத்தில் ஊற்றி சூரிய புடம் வைத்து (வெய்யிலில் வைத்து சாறு சுண்ட வைத்து )பிறகு அடுப்பு ஏற்றி காய்ச்சி இருத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் சுருள் முடியும்,உதிர்தலும் போகும்.


உள்ளுக்கு சாப்பிடவேண்டிய மருந்து:-

பறங்கி சக்கை 25 கிராம் 

சுக்கு 25 கிராம்

மிளகு 25 கிராம்

திப்பிலி 25 கிராம்

சதகுப்பை 25 கிராம்

கொடிவேலி 25 கிராம்

கருஞ் சீரகம் 25 கிராம்

கற்கடக சிங்கி (கடுக்காய் பூ )25 கிராம்

அதிமதுரம் 25 கிராம்

இசங்கு 25 கிராம்

கார்போக அரிசி 25 கிராம்

அமுக்குரா 25 கிராம்

சர்க்கரை 300 கிராம் 

இவைகளை தனி தனியே பொடித்து சலித்து சர்க்கரையுடன் சேர்த்து சலித்து ஒன்றாக்கி சூரணம் செய்து வைத்து கொண்டு காலை,மாலை வெருகடி அளவு சாப்பிட்டு வர சுருள் முடி ,பொதிவு முடி,ஊரல்,குத்து வலி போன்றவை நீங்கும்.

#ப்ரதாப் 👏👏👏மிரண்டுதான் போனேன்

 


இந்த பையனுக்கு வயது 21 தான் ஆகிறது. 1 மாதத்திற்கு குறைந்தது 28 நாட்கள் விமானத்திலேயே வெளிநாட்டிற்கு பயணம் செய்கிறார்.

"FRANCEல் இருந்து அழைப்பு. மாதம் 16 லட்சம் தருகிறோம். 5 Bedroom வீடு தருகிறோம்.  2.5Cr மதிப்புள்ள Car தருகிறோம். எங்கள் நாட்டிற்கு வந்து பணிபுரியுங்கள் என்று கெஞ்சுகின்றது"

ஆனால் மறுத்து விட்டார்.


#பிரதமர் இவரை அழைத்து உயரிய விருது அளித்து கௌரவித்துள்ளார். மற்றும் DEFENCE DRDOவில் இணைந்து அத்துறையை மேம்படுத்தும்படி கேட்டுள்ளார்"


கர்நாடகாவில் பிறந்த இவர் அப்படி என்னதான் சாதித்து விட்டார்? விரைவில் எதிர்பாருங்கள்.....


DRONEBOY Pratap

இவர் சாதனை பற்றி 3 பாகமாக பார்க்கலாம்.


*பாகம் 1*


இவர் பிறந்தது கர்நாடக மாநிலத்தில் கடைக்கோடியில் உள்ள ஒரு சிறு குக்கிராமம். தந்தைக்கு விவசாயம். மாத வருமானம் சுமார் Rs.2000/-.

சிறு வயதிலேயே Electronics மேல் விருப்பம்.


*College படிப்பு*

+2 படித்துக்கொண்டே Electronics துறையில்

இருந்த தாகத்திற்கும் இவர் தீனி போடத் தவறவில்லை. பக்கத்தில் உள்ள Cybercafe netcenterல் internet மூலம் drone சம்பந்தமான தகவல்களை திரட்டி உள்ளதைப் பார்த்தால் மிகவும் பிரமிப்பாக உள்ளது

(Aviation websites , Research websites, Space websites, Roles Roy car Blueprint , Boeing777 Blueprint அனைத்தையும் பிரித்து மேய்ந்துள்ளார்.).


Scientistகள் Emailidக்கு mail அனுப்பி தன் சந்தேகங்களை (Butler Englishல் ) கேட்டிருக்கிறார். (100 mail அனுப்பினால் 1 பதில் வருமாம். அதுவும் கடந்த 2 வருடங்களாகத்தான் English கற்றுக்கொள்ளவே ஆரம்பத்திருக்கிறார்.).


Engg college படிக்க ஆசை. ஆனால் பணவசதி இல்லை. ஆகையால் Bsc Physics சேருகிறார். பின் மைசூரில் BSc 3வது வருடம் படிக்கும்போது Hostel Fees கட்டமுடியாமல் வெளியே துரத்தப்பட்டார். தெருவில், நடைஓர platformல், Busstandல் தங்கியுள்ளார். நகரத்தையே பார்த்திராத இவருக்கு மைசூர் Busstand ஒரு palace மாதிரி இருந்தது என்கிறார்.


அங்கு Public toiletல் துணி துவைத்து College படிப்பை தொடர்ந்து இருக்கிறார்.


Tuition எடுத்து அதில் வந்த வருமானத்தில் (Rs.20க்காக அதிகாலை 2மணிக்கு எழுந்து 16 km நடந்து) எப்படியாவது ஒரு பறக்கும் Machineஐ குறைந்த செலவில் உருவாக்கிட வேண்டும் என தீவிரமாக எண்ணினார். அப்பொழுது அதன் பெயர் Drone என்பது கூட அவருக்குத் தெரியாது.


Courseல் சேருவதற்கு பணம் கிடையாது என்ற காரணத்தினால் C++ JavaCore Python Adobe Cloud Computing போன்ற Softwareகளை எல்லாம் சுயமாகக் கற்று , அவை அனைத்திலும் தேர்ச்சி பெற்றார்.


பின் Bombay, Visakappattinam போன்ற ஊர்களில் மலைமலையாக குவிக்கப்பட்டிருந்த eWaste Scrap yardல் தேடி அலைந்தார்.

இப்படியாக தனது Drone Projectக்கு ஆகும் செலவை 40% வரை குறைத்துள்ளார்.


ஏகப்பட்ட முறை முயன்று தோல்வி அடைந்து பின் மனம் தளராது தனது 80 வது முயற்சியில் வெற்றி பெற்றார்.

அன்று தானே பறப்பது போல இருந்தது என சந்தோசமாக சொல்கிறார்.


*பாகம் 2*


IIT நடத்தும் ஒரு Drone Competionல் கலந்து கொள்வதற்காக unreserved compartmentல் 3 நாள் ரயிலில் டில்லிக்கு பயணம் செய்கிறார். சரியான Shoes கிடையாது. சரியான Dressகிடையாது. இந்தியாவிலுள்ள பல்வேறு மாநிலங்கள் கலந்து கொண்ட அந்த போட்டியில் 2 வது பரிசு கிடைக்கிறது. அவரது உற்சாகம் பீறிட்டுக் கொள்கிறது.


"ஜப்பானில் இதே மாதிரி ஒரு போட்டி நடக்கிறது. அதில் கலந்து கொள்ளுங்களேன்" என்று யாரோ சொல்ல அதற்கான முயற்சியில் இறங்குகிறார். அதற்காக passport visa எல்லாம் வாங்க வேண்டும் என்பது கூட அவருக்கு தெரிந்திருக்கவில்லை.


தன்னுடைய 10th, +2 marksheetஐ அடமானம் வைத்து கொஞ்சம் பணம் பெநுகிறார். பல்வேறு நபர்கள் (College friends, professors) முடிந்தவரையில் இவருக்கு உதவுகிறார்கள். ஒருவழியாக

Tatkalல் passport visa எல்லாம் வாங்கி விட்டார். ஆனால் ஆணிவேரை அசைக்கிற மாதிரி ஒரு சம்பவம் நடந்தது.


ஜப்பானில் நடக்கும் போட்டியில் பங்கேற்க வேண்டும் என்றால் ஒரு Professor Phdயிடம் இவரது project report எல்லாம் சமர்ப்பித்து Approval வாங்க வேண்டும். அதற்காக சென்னைக்கு கிளம்புகிறார். கையில் இருப்பதோ வெறும் 300 ரூபாய்தான்.


*புண்ணியம் கட்டிக் கொண்ட சென்னை*


சென்னையோ இவருக்கு புதிது. ஒரு வழியாக professor வீட்டைக் கண்டுபிடித்து கேட்டால் அவர் வீட்டில் இல்லை. தொடர்ந்து 4 நாட்களாக படையெடுக்கிறார்.


கையில் காசு கரைந்து கொண்டே இருக்கிறது. Public toiletல் துணியை துவைத்து (ஒரே ஒரு Dressதான் கைவசம். அதைத்தான் துவைத்து மறுநாள் உடுத்த வேண்டும் ) central railway stationல் platformல் உறங்கி.... இப்படி போகிறது வாழ்க்கை. கடைசியாக professorஐ சந்திக்கிறார். Project reportஐ பார்த்த அந்த professor புண்ணியம் கட்டிக் கொள்கிறார்.

"நீயோ BSc Arts Group. உன் படிப்புக்கும் நீ பண்ணுகின்ற இந்த projectக்கும் என்ன சம்பந்தம்? கையெழுத்து போட மறுத்து விடுகின்றார். மறுபடியும் Back to Square 1. Drone project வேறு பாதியில் நிற்கிறது. அதையும் ready பண்ண வேண்டும். தொடர்ந்து 31 நாட்கள் Professor கையெழுத்துக்காக படை எடுக்கிறார். காலை tiffinக்கும் இரவு dinnerக்கும் ஒரே ஒரு ரொட்டி துண்டுதான்(Rs.5/-). மற்ற நேரத்திற்கு தண்ணீர்தான் உணவு.

14 நாட்களுக்குள் கையில் உள்ள பணம் அனைத்தும் காலி. ரொட்டிக்கு கூட வழி இல்லை. கடைசியில் 31 நாட்கள் கழித்து எப்படியோ Signature வாங்கியபின் Mysoreக்கு திரும்புகிறார்.


*ஜப்பான் பயணம்*


இந்திய நாட்டின் சார்பாக இந்த போட்டியில் கலந்து கொள்ள பயணச்செலவு (குறைந்தபட்சம்) Rs.60000 தேவைப்படுகிறது. மாநில மற்றும் மத்திய அரசுகளுக்கு பலமுறை mail போட்டும் ஒன்றும் பயனில்லை.

மைசூரில் உள்ள கருணை உள்ளம் கொண்ட ஒரு சுவாமிஜி Flight ticket எடுத்துக் கொடுக்கிறார். எவ்வளவு முயற்சி செய்தும் பணம் பற்றாமல் தன் தாயின் தாலிக்கொடியை விற்று இதர பயண செலவுகளை சமாளிக்கிறார்.


Bangalore busstandயே பார்க்காத தனக்கு முதல் விமானப்பயணமே International flight. அதுவும் Transfer flight வேறு. மிகவும் சிரமப்பட்டு திக்கி திணறி ஒரு வழியாக தன்னந்தனியாக TOKYOல் போய் இறங்குகிறார்.


*பாகம் 3*

*Tokyo Exibition Centre*


கையில் இருப்பதோ வெறும் Rs.1400தான். Airportவ் இருந்து

Exibition Centreக்கு Bullet trainல போனால் 2 மணி நேரம்தான் ஆகும். அதிக செலவு ஆகும் என்பதால் Normal trainல போகலாம் என்று முடிவு செய்கிறார். ஆனால் ஒரு பிரச்சினை. 16 Station மாற வேண்டும். ஒவ்வொரு Stationலயும் அத்தனை LIFTடையும் Elevatorயும் platformயும் கடந்து லக்கேஜோட Train மாற வேண்டும். எதுவும் சாப்பிடவில்லை. கடைசி Station வந்தாயிற்று. Exibition Centre அங்கிருந்து 8 km . மறுபடியும் அனைத்து Boxயும் தூக்கி பின் இறக்கி வைத்து இப்படியே 8 KM நடந்து

ஒரு வழியாக 5 நாட்கள் கழித்து Exibition Centreஐ அடைகிறார்.


*இறுதிச்சுற்று*


127+ நாடுகள் பங்கேற்கிற அந்த Expoவில் எப்படியாவது 70வது இடத்தையாவது பிடித்துவிடவேண்டும் என்று வெறியுடன் Resultஐ பார்த்துக்கொண்டே இருக்கிறார்.


*இவர் பேர் வரவில்லை.*


50வது இடமாவது வருகிறதா

என்று Resultஐ பார்க்கிறார்.


*இவர் பேர் வரவில்லை.*


30வது இடமாவது வருகிறதா

என்று Resultஐ பார்க்கிறார்.

இதில் Chinese universityதான் ஆதிக்கம் செலுத்துகின்றது.


*இவர் பேர் வரவில்லை.*


20வது இடமாவது வருகிறதா

என்று Resultஐ பார்க்கிறார்.

இதில் Europe மற்றும் German universityகள்தான் ஆதிக்கம் செலுத்துகின்றது.


நம்பிக்கையற்ற நிலையில்

எல்லாவற்றையும் Repack பண்ணுகிறார். தான் பட்ட கஷ்டம் எல்லாம் கண்முன்னே நிழல் ஆடுகிறது. வேற வழி தெரியாமல் கடைசி rowல் போய் உட்கார்ந்து வேடிக்கை பார்க்கிறார்.


Top 10 பட்டியல் அறிவித்துக் கொண்டே இருக்கிறார்கள்.

இதில் Americaவின் top universityகள்தான் ஆதிக்கம் செலுத்துகின்றன.


எப்படியும் STANFORD Universityதான் FIRST PRIZE என்று எல்லோரும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

2nd prize STANFORD University என்று Announce பண்ணியவுடனே அப்போ யார் 1st prize?


"Please welcome Mr.Pratap GOLD MEDALIST from INDIA"

நம்ம ஆளுக்கு அழுகை அழுகையாக வருகிறது. கண்களில் இருந்து தாரை தாரையாக கண்ணீர்.


INDIA கொடி மேலேயும் AMERICA கொடி கீழேயும் இறங்குவதை பார்த்ததும்


"கண்முன்னே அம்மாவின் தாலி வந்து போகின்றது"


10000$ REWARDஆக தருகின்றார்கள்.

அதற்கப்புறம் என்ன ஒரே ஆரவாரம் கொண்டாட்டம்தான்.


Karnataka MLA MP எல்லோரும் இவருடைய வீட்டுக்கு படை எடுக்கிறார்கள்.


FRANCEலும் போய் அங்கேயும் First prize. உலக நாடுகள் அனைத்தும் தலையில் வைத்துக் கொண்டாடுகின்றது.


"உலக நாடுகள் எங்கள் நாட்டிற்கு வந்து பணிபுரியுங்கள் என்று கெஞ்சுகின்றது. ஆனால் மறுத்து விட்டார்"


#இந்தியாவின் மினி கலாம்

நல் வாழ்த்துக்கள்🙏

Monday, January 15, 2024

ஆல்பிரெட் நோபல்-அறிவியலாளர்





அறிவியலாளர், நோபல் பரிசு நிறுவனருமான ஆல்பிரட் நோபல் பிறந்த தினம் அக்டோபர் 21; 1833

ஆல்பிரெட் நோபலினின் தந்தை இம்மானுவேல் புகழ் பெற்ற பொறியியலாளர். ஸ்டோக்ஹோம் நகரத்தில் பல்வேறு கண்டுபிடிப்புகளை நிகழ்த்திய அவர் வறுமையின் காரணமாக ரஷ்யா நோக்கி நகர்ந்தார். அங்கே போர் நடக்கும் சமயங்களில் உபயோகப்படுத்தும் வகையில் கன்பவுடரைப் பயன்படுத்தினார். ஆனாலும் போர் முடிந்தபின் வறுமையின் பிடிக்கு தள்ளப்பட்டார்; அவரின் பிள்ளையான ஆல்பிரெட் நோபலோ கவிதை, இலக்கியம் போன்றவற்றில் மிகுந்த ஆர்வம்கொண்டிருந்தார்.



மகனின் ஆர்வத்தை அதிர்ந்த தந்தை ஏற்கனவே வேதி பொறியியல் படித்திருந்த மகனை பாரிஸில் புகழ் பெற்ற ஒரு வேதியியல் நிபுணரிடம் அனுப்பினார்; அங்கேதான் நைட்ரோ க்ளிசரனை பார்த்தார்; அது வெடிமருந்து பவுடரை மாதிரி பலமடங்கு ஆற்றல் மிகுந்து இருந்தது, எனினும் அது கொஞ்சம் அழுத்தம், வெப்பம் மாற்றங்களில் கூடவெடித்து விடும் தன்மை கொண்டிருந்தது.

அதை எல்லாரும் பயன்படுத்தும் வகையில் மாற்றும் ஆய்வில் ஈடுபட்டார் மனிதர். இதில் தன் தம்பியையே ஒரு வெடிவிபத்தில் இழந்தார். அப்பொழுது 'மரணத்தின் வியாபாரி ஆல்பிரெட் நோபல் மரணம்!' என்று பிரெஞ்சு இதழ்கள் தலைப்பு செய்தி வாசிக்க அதிர்ந்தார் அவர். ஆல்பிரெட் நோபல் ஸ்டா க்ஹோமில் ஆய்வு செய்ய அரசு தடை விதித்தது.

இறுதியில் அவர்கள் நாட்டில் கிடைக்கும் கேய்சல்கர் எனும் களிமண்ணை கலந்து டைனமைட்டை உருவாக்கினார், அது மிகப்பெரிய அளவில் கட்டிடங்கள், பாலங்கள் கட்டப் பயன்பட்டது. ஆனால் அதையே போரில் பயன்படுத்தி பல உயிர்களைக் குடிக்க ஆரம்பித்தன ராணுவம், உலகின் அமைதிக்கு பெரிய தீங்கு விளைத்து விட்டோம் என்கிற குற்ற உணர்வோடு அவர் நாற்பத்தி மூன்று வயதிலேயே நொந்து போய் முடங்கிப்போனார் .

ஆல்பிரட் நோபல் உதவியாக பெர்த்தா என்கிற பெண் செயலராக வந்தது அவர் வாழ்வில் பெரிய மாற்றம். அவரின் பாவத்துக்கு தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தினார் பெர்த்தா. உங்கள் ஆயுதங்களை கீழே போடுங்கள் என ஒரு நூலையும் எழுதினார். பின் நோபலை விட்டு பிரிந்து திருமணம் செய்துகொண்டு அவர் வெளியேறிவிட்டாலும் அவரின் தாக்கத்தில் நோபல் தனிமையில் தன்னால் ஏற்பட்ட அழிவிற்கு பிராயசித்தம் தேட யோசித்ததன் விளைவு அவரின் உயிலில் கோடிக்கணக்கான ருபாய் மதிப்புள்ள அவரின் சொத்தில் இருந்து வரும் வட்டியில் வருடாவருடம் அமைதி அறிவியல் உலக முன்னேற்றம் ஆகியவற்றில் சிறப்பான பங்களிப்பு தருபவர்களுக்கு பரிசளிக்க வேண்டும் என அவர் அறிவித்து விட்டு போனதன் விளைவாக உண்டானதே நோபல் பரிசு.

இலக்கியம்,இயற்பியல், வேதியியல் மருத்துவம் . உலக அமைதி பொருளாதாரம் ஆகியத்துறைகளில் நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

* நோபல் பரிசு சில துளிகள்... *

* நோபல் பரிசு மற்றும் ஆஸ்கர் விருது இரண்டையும் பெற்றவர் பெர்னார்ட் ஷா.

* நோபல் பரிசு உருவாக்கப்பட்ட பொழுது பொருளாதாரத்துக்கு பரிசு நோபலின் உயிலில் குறிக்கப்படவில்லை ;1968 ஆம் ஆண்டில் இருந்தே அப்பரிசு வழங்கப்படுகிறது.

* ஹிட்லர் தன் காலத்தில் தன் நாட்டவர் மூவர் நோபல் பரிசை பெறுவதை தடுத்து இருக்கிறார் ;அவர் மறைந்த பின் அப்பரிசை அவர்கள் பெற்றுக்கொண்டாலும் பணம் கொடுக்கப்படாமல் போனது ;ஒன்லி பதக்கம் என கறாராக சொல்லிவிட்டது கமிட்டி.

* நோபல் அமைதி பரிசு காந்திக்கு வழங்கப்பட்டதே இல்லை ;அவருக்கு 1948 இல் வழங்க நியமனம் செய்யப்பட்ட சில நாட்களில் கொல்லப்பட்டதால் அப்பரிசு அவருக்கு மரியாதையை செலுத்தும் வகையில் அவ்வருடம் மட்டும் கொடுக்கபடாமலே போனதாக சொல்லப்படுவதுண்டு .காந்திக்கு பரிசு கொடுக்கப்படாமல் போனதற்கு பகிரங்க மனிப்பு கேட்டது நோபல் கமிட்டி.

நோபல் பரிசின் மூலம் பெறப்பட்ட நிதி மற்றும் விருந்துக்கான பணத்தையும் முழுக்க பெற்று அதையும் சமுக சேவைகளுக்கு செலவிட்டார் அன்னை தெரசா.

* இறந்தவர்களுக்கு பெரும்பாலும் நோபல் பரிசுகள் வழங்கப்படுவதில்லை ;2011 இல் ஒரு கூத்து நடந்தது .மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட ஸ்டெய்ன்மென் அதற்கு மூன்று நாட்கள் முன்னமே மரணம் அடைந்து இருந்தார். இது தெரியாமலே பரிசை அறிவித்து விட்டனர் .ஆனால்,அப்பரிசை திரும்பபெறவில்லை கமிட்டி.

நோபல் பரிசு உருவான கதை!

வெடி பொருட்களை உருவாக்கியவர் ஆல்பிரட் நோபல்’: நோபல் பரிசு உருவான கதை!


ஒரு கண்டுபிடிப்பாளர், வேதியியலாளர் மற்றும் பரோபகாரர், ஆல்ஃபிரட் பெர்ன்ஹார்ட் நோபல் (அக்டோபர் 21, 1833 - டிசம்பர் 10, 1896) உலகின் மிகவும் செல்வாக்கு மிக்க மனிதர்களில் ஒருவர். நோபல் பரிசை அமைப்பதைத் தவிர, அவர் தனது செல்வங்களை பரிசுக்கு நிதியளிப்பதற்காக மிகவும் பிரபலமானவர். அவர் தனது தொழில் வாழ்க்கையில் 355 காப்புரிமைகளை வைத்திருந்தார். நோபலின் மிகவும் குறிப்பிடத்தக்க பங்களிப்பு சந்தேகத்திற்கு இடமின்றி வெடிக்கும் கலவை டைனமைட் ஆகும், இது அவர் 1867 இல் கண்டுபிடித்தார், பின்னர் இது உலகின் சுரங்கங்கள் மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்கள் முழுவதும் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. அறிவியல் மற்றும் கற்றலுக்கான அவரது ஆரம்பகால திறமை, குறிப்பாக வேதியியல் மற்றும் மொழியியல் திறன்கள் நன்கு ஆவணப்படுத்தப்பட்டன. 24 வயதில் நோபல் ஆறு மொழிகளில் சரளமாகப் பேசத் தெரிந்தார்.

உலகின் மிக உயரிய விருதுகளுள் ஒன்று நோபல் பரிசு. டைனமைட் உள்ளிட்ட பல வெடி பொருட்களை உருவாக்கிய ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த ஆல்பிரட் நோபல் என்பவரே இந்தப் பரிசு உருவாகக் காரணமாக இருந்தார்.

உலக அமைதியையும் நல்லிணக்கத்தையும் விரும்புபவராக தற்காலத்தில் அறியப்படும் ஆல்பிரட் நோபல், ராணுவத்திலும், சுரங்கம் உள்ளிட்ட கட்டுமானத் துறையில் பயன்படுத்தப்படும் 150-க்கும் மேற்பட்ட வெடிபொருள்களைக் கண்டுபிடித்தவர். இவற்றில் அதிகமாக அறியப்படுவது டைனமைட். உண்மையில் டைனமைட்டை விடவும் சக்திவாய்ந்த பல வெடிபொருள்களை ஆல்பர்ட் நோபல் கண்டுபிடித்திருக்கிறார்.

அப்படியொரு ஆய்வு நடந்தபோது, பெரும் விபத்து நடந்தது. அதில் தனது சகோதரர் எமிலையும், பல தொழிலாளர்களையும் பறிகொடுத்தார். பல நாட்டு அரசுகள் இவரது வெடிபொருள்களைத் தடை செய்தன. இருப்பினும் தலைமறைவாக இருந்தபடியே பலவெடிபொருள்களை உருவாக்கினார் ஆல்பிரட் நோபல். இவற்றுக்குக் காப்புரிமை பெற்றதன் மூலம் வாழ்நாள் முழுவதும் பெரும் பணம் இவருக்குக் கிடைத்தது.

ஸ்வீடனின் மிகப்பெரிய பொறியியல் குடும்பத்தில் 1833 ஆம் ஆண்டு பிறந்த ஆல்பிரட் நோபலுக்கு மூன்று சகோதரர்கள் இருந்தனர். இவர்களில் எமில் தவிர, லுட்விக் நோபல் மற்றும் ராபர்ட் நோபல் போன்றோர் காஸ்பியன் கடலோரம் அஜர்பைஜான் நாட்டில் எண்ணெய்க் கிணறுகளில் முதலீடு செய்திருந்தனர். ஆல்பிரட் நோபலுக்கும் இதில் கணிசமான பங்கு இருந்தது.


1888 ஆம் ஆண்டில், லுட்விக் நோபலின் மரணத்தின்போது பல செய்தித்தாள்கள் ஆல்பிரட் நோபல் இறந்துவிட்டதாகச் செய்தி வெளியிட்டன. அதில் ஒரு பிரெஞ்சு இதழ், "மரணத்தின் தூதர் இறந்துவிட்டார்" என்று குறிப்பிட்டிருந்தது. இறப்பதற்கு முன்னரே தனது இரங்கல் குறிப்பைக் கண்ட ஆல்பிரட் நோபலின் மனம் வெடித்தது. வரலாற்றில் இப்படியொரு மோசமான மனிதனாக தாம் பதிவு செய்யப்படக்கூடாது என்று விரும்பினார்.


தனது சொத்து முழுவதையும் பொதுச் சேவைக்காகச் செலவு செய்வது என முடிவெடுத்த நோபல், பல உயில்களை எழுதினார். அதில் கடைசி உயில்தான் நோபல் பரிசு பற்றியது. தனது ஒட்டுமொத்தச் சொத்தின் 94 சதவீத்தை மனித குலத்துக்குப் பயனளிக்கும் வகையில் இயற்பியல், வேதியியில், மருத்துவம், அமைதி மற்றும் இலக்கியம் ஆகிய துறையில் பணியாற்றியவர்களுக்கு அளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். நோபல் பரிசுக்காக ஒதுக்கப்பட்ட தொகையின் தற்போதைய மதிப்பு சுமார் 1000 கோடி ரூபாய்.

1896-ல் பெருமூளை இரத்த கசிவின் காரணமாக நோபல் இறந்தார். அவரது விருப்பப்படி, 1901-ம் ஆண்டு முதல் 5 பிரிவுகளில் நோபல் பரிசுகள் வழங்கப்பட்டு வந்தன. 1969-ம் ஆண்டு முதல் ரிக்ஸ் வங்கி நன்கொடையாக அளித்த பணத்தைக் கொண்டு நோபலின் பெயரிலேயே பொருளாதாரத்துக்கான பரிசுகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

மனித உயிர்களைக் கொல்வதற்காகப் பயன்படும் வெடிபொருள்களைக் கண்டுபிடித்த நோபல், இறப்புக்குப் பிறகு தாம் நினைத்தபடியே சமாதானத் தூதராகவே அறியப்படுகிறார். இவரது பெயர் நோபல் பரிசுக்கு மட்டுமல்லாமல், நோபலியம் என்ற தனிமத்துக்கும் வைக்கப்பட்டிருக்கிறது.

ஆல்ஃபிரட் நோபல் கண்டுபிடிப்புகள்

ஆல்ஃபிரட் நோபல், நைட்ரோகிளிசரின் கீசெல்குஹ்ர் (டயட்டோமேசியஸ் எர்த்) எனப்படும் உறிஞ்சக்கூடிய மந்தப் பொருளில் சேர்ப்பதால், அதை பாதுகாப்பாகவும் எளிதாகவும் கையாள முடியும் என்று கண்டுபிடித்தார். இந்தக் கலவையானது 1867 இல் நோபலால் "டைனமைட்" என்று காப்புரிமை பெற்றது. நோபல் முதன்முதலில் இங்கிலாந்தின் சர்ரேயில் உள்ள ரெட்ஹில் ஒரு குவாரியில் தனது வெடிபொருளைக் காட்டினார். தனது பிராண்டை மீண்டும் நிலைநிறுத்தவும், தனது வணிகத்தின் இமேஜை அதிகரிக்கவும், நோபல் மிகவும் ஆற்றல் வாய்ந்த பொருளுக்கு "நோபலின் பாதுகாப்புப் பொடி" என்று பெயரிடவும் யோசித்தார், ஆனால் அதற்குப் பதிலாக டைனமைட்டைத் தேர்ந்தெடுத்தார், இது அதிகாரத்திற்கான கிரேக்க வார்த்தையைக் குறிக்கிறது.

ஆல்ஃபிரட் நோபல் பின்னர் மற்றொரு திருப்புமுனையை ஏற்படுத்தினார். நைட்ரோகிளிசரின் நைட்ரோசெல்லுலோஸ் இரசாயனங்களுடன் இணைத்து, கொலோடியனைப் போன்றது, டைனமைட்டை விட அதிக ஆற்றல் வாய்ந்த ஒரு வெளிப்படையான, ஜெல்லி போன்ற தயாரிப்பு கிடைத்தது. நோபல் இறுதியில் ஒரு வெற்றிகரமான கலவையில் குடியேறினார், அதில் மற்றொரு நைட்ரேட் வெடிமருந்து சேர்க்கப்பட்டது. வெடிக்கும் ஜெலட்டின், சில நேரங்களில் ஜெலிக்னைட் என்று அழைக்கப்படுகிறது, இது முதலில் 1876 இல் உருவாக்கப்பட்டது, அதைத் தொடர்ந்து பொட்டாசியம் நைட்ரேட் மற்றும் பிற சேர்த்தல்களைக் கொண்ட ஒத்த கலவைகள். Gelignite அதிக நிலைப்புத்தன்மை மற்றும் போக்குவரத்துத்திறனைக் கொண்டிருந்தது, மேலும் துளையிடல் மற்றும் சுரங்கத்திற்காக முன்னர் பயன்படுத்தப்பட்ட கலவைகளை விட துளையிடப்பட்ட துளைகளுக்குள் பொருத்துவதற்கு எளிதில் வடிவமைக்கப்பட்டது. நோபலின் உடல்நிலைக்கு நிறைய செலவாகும் என்ற உண்மை இருந்தபோதிலும், இது "பொறியியல் வயதில்" நிலையான சுரங்க தொழில்நுட்பமாக மாறியது மற்றும் அவருக்கு நிறைய பணத்தை கொண்டு வந்தது. நோபல் இறுதியில் பாலிஸ்டைட்டை உருவாக்கினார், இது புகையை உருவாக்காத தூள் வெடிபொருட்களின் முன்னோடியாகும்.


சிவனருள் பெற்ற அடியார்-நந்தனார்



ஆதனூரில் பிறந்து சிவாலயங்கள்தோறும் சென்று பேரிகை, மத்தளம் முதலிய வாத்தியங்களுக்கு தோலும் கட்டுபவரும், யாழ், வீணை முதலான வாத்தியங்களுக்கு நரம்புகளும், சிவபெருமானுடைய திருமேனியில் பூச கோரோசனையும் தருபவர் திருநாளைப்போவார் என்று அழைக்கப்படும் நந்தனார். தனது இழி பிறப்பை நினைத்து வருந்தினாலும், இசைத் தமிழில் சிறந்து விளங்கி ஆலயத் தொண்டு புரிந்தவர்.

நந்தனார்


சோழவள நாட்டில் ஒரு பிரிவான மேகாநாட்டில், கொள்ளிடக் கரைக்கு அடுத்துள்ள சிவத்தலம் ஆதனூர். சிறந்த நீர்வளமும், நில வளமும் பெற்றுள்ள இவ்வூருக்கு அடுத்தபடியாக வயல்களால் சூழப்பட்ட சிறு குடிசைகள் நிறைந்த ஊரான புலைப்பாடியில் புலையர் குலத்தைச் சேர்ந்தவர்கள் வசித்து வந்தனர். விவசாயத்தை தொழிலாகக் கொண்டு நிம்மதியாக வாழ்ந்து வந்தவர்களுள் ஒருவர் நந்தனார்.

சிவபெருமானிடத்தில் மிகுந்த அன்பு கொண்ட நந்தனார், அவர் கோயில் கொண்ட இடங்களில் தொண்டாற்றி வந்தார். உழுதுண்டு பிழைத்து அதில் ஈட்டும் பொருளை, கோயில்களில் பயன்படும் மத்தளம், பேரிகை போன்ற வாத்தியங்களுக்கு தேவையான போர்வைத் தோல் மற்றும் விரிவார்களை வழங்கி வந்தார். கோயில்களில் உள்ள வீணை, யாழ் போன்றவற்றுக்கு நரம்புகள் அளிப்பார். சிவபெருமான் ஆராதனைக்குத் தேவையான நறுமணமிக்க பொருட்களையும் (கோரோசனை) அளிப்பார் நந்தனார்.

விலகி இருக்கும் நந்தி...


இருப்பினும் தாழ்ந்த குலத்தில் பிறந்தவர் என்று கருதப்பட்டு, கோயிலுக்குள் சென்று இறைவனை வழிபட தகுதியற்றவராக முத்திரை குத்தப்பட்டார். இதை நினைத்து ஒவ்வொரு நாளும் நந்தனார் வருந்தினார். இருந்தபோதும் கோயிலுக்கு வெளியில் இருந்தவாறே இறைவனை மனதில் நினைத்து ஆனந்தக் கூத்தாடுவார். மிகுந்த மகிழ்ச்சி கொள்வார்.

ஒருமுறை திருப்புன்கூர் தலத்துக்குச் சென்று சிவலோகநாதரை தரிசிக்க எண்ணினார் நந்தனார். அதன்படி ஒருநாள் திருப்புன்கூரைச் சென்றடைந்தார். அங்கு கோயில் வாசலில் நின்றபடி ஈசனை தரிசிக்க நினைத்தபோது, நந்தி குறுக்கே இருந்து ஈசனை மறைத்தது. அதைக் கண்டு நந்தனாருக்கு வருத்தம் மேலிட்டது. தேடி வந்த ஈசனின் தரிசனம் தனக்குக் கிடைக்காமல் போய்விடுமோ என்று அஞ்சினார்.

இதற்குமேலும் பக்தனை சோதிக்க விரும்பாத சிவலோகநாதர் நந்தியை சற்று விலகும்படி பணித்தார். ஈசனின் சொல் கேட்டு நந்திதேவரும் சற்று விலகினார். தீபாராதனை ஒளியில், கருவறையில் ஆனந்தச் சுடராக அருள் வடிவமாக காட்சியளிக்கும் சிவலோகநாதரின் திருத்தோற்றத்தைப் பார்த்து உள்ளமும் உடலும் பொங்கி பூரிக்க, தரையில் விழுந்து பலமுறை வணங்கினார் நந்தனார்; பாடி பரவசமானார். ஆனந்தக் கூத்தாடினார். கோயிலை பலமுறை வலம் வந்தார். மனநிறைவுடன் தன்னுடைய ஊருக்குப் புறப்பட்டார்.
திருப்புன்கூர் கோயில்


வரும்வழியில் ஓரிடத்தில் ஒரு பள்ளத்தைக் கண்டதும் அதை, இரவு பகல் என்று பார்க்காமல், சீராக வெட்டி குளமாக்கினார். சுவாமி புஷ்கரிணியாக்கினார். எண்ணியதை எண்ணியபடி செவ்வனே செய்து முடித்து ஆதனூர் திரும்பினார். சில நாட்கள் கழித்து மீண்டும் திருப்புன்கூர் சென்று சிவலோகநாதரை தரிசிக்க எண்ணினார் நந்தனார். அதன்படி திருப்புன்கூர் உள்ளிட்ட சிவத்தலங்களுக்குச் சென்று ஈசனை தரிசித்து மகிழ்ந்தார்.

இப்படியே நாட்கள் செல்லச் செல்ல, தில்லை சென்று அம்பலக்கூத்தனை தரிசிக்க வேண்டும் என்ற தணியாத ஆசை அவருக்கு எழுந்தது. தினமும் இரவு படுக்கச் செல்லும்போது, நாளை பொழுது புலர்ந்ததும் கிளம்பி தில்லை செல்ல வேண்டும் என்று நினைத்துக் கொள்வார். ஆனால் காலையில் எழுந்ததும், அந்த எண்ணமே மறைந்துவிடும். இப்படியே சில நாட்கள் ஓடின.

எப்படியோ ஒருநாள் அவரது எண்ணம், பூவாகி, காயாகி, கனிந்தது. நாளை போவோம் என்று கூறியவர், துணிந்து எழுந்தார். தில்லைக்குப் புறப்பட்டார். தில்லையின் எல்லையை வந்தடைந்தார். தில்லைவாழ் அந்தணர் எழுப்பிய யாகத்தீயில் இருந்து வந்த புகை, விண்ணை முட்டி மேகத்தோடு கலந்திருந்தது. நகரத்துக்குள் சென்று ஈசனைக் காணும் தகுதி தனக்கு இல்லை என்று வருந்தினார். இருந்த இடத்திலேயே அம்பலக்கூத்தனை நினைத்துப் பாடினார். தன் நிலை குறித்து ஈசனிடம் கூறினார். கோயில் மதிலைச் சுற்றிச் சுற்றி வந்தார்.
சிவலோகநாதர்


ஆனந்த நடனத்தைக் காண முடியவில்லையே என்றும், கண்ணிருந்தும் குருடனாக இருக்கிறேனே என்றும் அழுது அரற்றினார் நந்தனார். தன் மீது இவ்வளவு அன்பு வைத்திருக்கும் நந்தனாரை நினைத்து மகிழ்ந்த ஈசன், தில்லை வாழ் அந்தணர் தம் கனவில் தோன்றி, நந்தனாரை கோயிலுக்குள் அழைத்து வருமாறு பணித்தார். மேலும், அவரை தீயிடை மூழ்கச் செய்து தன் சந்நிதிக்குள் அழைத்து வரச் சொன்னார்.

மறுநாள் காலை தில்லைவாழ் அந்தணர்கள், நந்தனாரை அழைத்து வந்து அவருக்கு எதிரே தீ மூட்டினர். ‘நெருப்பிடை மூழ்கி வருக’ என்று அந்தணர்கள் கூற, நந்தனாரும் அவ்வாறே தீயினுள் மூழ்கி எழுந்தார். பால் போன்ற மேனியும், திருவெண்ணீற்று ஒளியும், உத்திராட்ச மாலையும், முப்புரி நூலும் விளங்க, ஒரு முனிவரைப் போன்று சடைமுடியுடன், கோடி சூரிய பிரகாசத்துடன் வெளியே வந்தார் நந்தனார்.

நந்தனார்


அந்தணர் வழிகாட்ட, நந்தனார் முன் சென்றார். கரம்குவித்து, ஐந்தெழுத்து ஓதியபடி, ஆடுகின்ற கூத்தன் முன் நின்றார். திரு முன் நின்றவர் திரும்பவே இல்லை. அம்பலத்தரசன் திருவடி நிழலிலேயே ஐக்கியமாகி, உமையொரு பாகரோடு கலந்தார் திருநாளைப் போவார் என்றழைக்கப்படும் நந்தனார். எம்பெருமானின் மலரடிகளில் உறையும் பேரின்ப வாழ்வைப் பெற்றார்.

‘திருநாளைப் போவார் அடியார்க்கடியேன்’

கரும்பின் மருத்துவக் குணங்கள்





தமிழர்களின் திருநாளாம் பொங்கல். பொங்கல் திருநாள் என்றலே நாம் அனைவரின் நினைவில் தோன்றுவது கரும்புதான். கரும்பில் நிறைய நன்மைகள் அடங்கியுள்ளன. ஆனால் அதன் உண்மையான நன்மைகள் பலருக்கும் தெரிவதில்லை.

அதனால் தான் பலரும் கரும்பு சாப்பிடாமல் இருக்கின்றனர். முதலில் கரும்பின் நன்மைகளை தெரிந்து கொள்ளுங்கள். கரும்பில் நம்மால் நம்பமுடியாத அளவிற்கு மருத்துவ குணம் இருப்பது உங்களுக்கு தெரியுமா?.

கரும்பின் மருத்துவ குணம் பற்றி பார்க்கலாம்:

கரும்பில் சாற்றில் மஞ்சள் காமாலையை குணப்படுத்தும் மருத்துவப் பொருள் நிறைந்துள்ளது. பொதுவாக மஞ்சள் காமாலை வந்தால், சருமம் மஞ்சள் நிறத்தில் காணப்படும் இதற்கு காரணம், பிலிரூபின் இரத்தத்தில் கலந்திருப்பதே ஆகும்.

இதுமட்டுமல்லாது, மோசமான கல்லீரல் செயல்பாடுகள் மற்றும் பித்த நாளங்களில் அடைப்பு போன்றவைகளும் மஞ்சள் காமாலையை உண்டாக்கும். எனவே மஞ்சள் காமாலையிலிருந்து உடனே குணமாவதற்கு, இரண்டு டம்ளர் கரும்பு சாற்றுடன் எலுமிச்சை மற்றும் உப்பு சேர்த்து குடித்து வந்தால் போதுமானது.




உடலில் உள்ள சிறுநீரக குழாய், பிறப்புறுப்பு, செரிமான மண்டலக் குழாய் போன்ற பல இடங்களில் தொற்றுநோய்களினால் எரிச்சல், அரிப்பு போன்றவை ஏற்படும். இத்தகையவற்றை சரிசெய்ய ஒரு டம்ளர் கரும்பு சாறு குடித்தால், அவை சரியாகிவிடும்.

கரும்பின் நன்மைகளிலேயே முக்கியமான ஒன்று என்றால் அது சிறுநீரக கற்களை குணமாக்குவது தான். பொதுவாக இந்த கற்கள் உடலில் ஏற்படும் வறட்சியினால் ஏற்படும். அதற்காகத் தான் அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

ஏனெனில் அவை அந்த கற்களை உடைத்து வெளியேற்றிவிடும். எனவே தண்ணீர் மட்டுமின்றி, கரும்பு சாற்றையும் குடித்தால், அந்த கற்கள் எளிதில் உடைந்து கரைந்துவிடும்.

இனிப்பாக இருப்பதால், நீரிழிவு நோயாளிகள் சாப்பிட பயப்படுவார்கள். ஆனால் உண்மையில் இதில் இருக்கும் இனிப்பானது இரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவை சீராக வைக்கும். எனவே உடல் எடையை குறைக்க விரும்புவோர் அல்லது சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள், இதனை எந்த ஒரு அச்சமுமின்றி சாப்பிடலாம்.

கரும்பில் வைட்டமின் மற்றும் கனிமச்சத்துக்கள் அதிகம் உள்ளது. அதிலும் பாஸ்பரஸ், இரும்புச்சத்து, பொட்டாசியம், கால்சியம் மற்றும் மக்னீசியம் போன்றவை அதிக அளவில் இருப்பதால், உடலில் எந்த ஒரு ஊட்டச்சத்து குறைபாடுமின்றி, உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்

நிறைய பேர் இருமல், சளி அல்லது தொண்டை வலி இருந்தால், கரும்பை நிச்சயம் சாப்பிடக் கூடாது என்று சொல்வார்கள். ஆனால் உண்மையில் அந்த மாதிரியான எண்ணம் தவறானது. இந்த மாதிரியான பிரச்சனைக்கு சிறந்தது என்று சொன்னால், அது கரும்பு தான்.

கரும்பில் இயற்கையாக உள்ள அல்கலைன் என்னும் பொருள், புற்றுநோயை குணப்படுத்தும் தன்மையுடையது. குறிப்பாக பெருங்குடல், நுரையீரல் அல்லது மார்பக புற்றுநோய் போன்றவற்றிற்கு சிறந்தது.

நிறைய மக்கள் அதிக அளவு தண்ணீர் குடிப்பதை விரும்பமாட்டார்கள். எனவே அத்தகையவர்களுக்கு உடலில் ஏற்படும் வறட்சியை நீக்க கரும்பு சாற்றை குடிக்கலாம். மேலும் கோடைகாலத்தில் உடலானது அதிக சூடாக இருக்கும். எனவே உடல் வெப்பத்தை தணிப்பதற்கு தினமும் ஒரு டம்ளர் கரும்பு சாறு குடிப்பது நல்லது.

பொங்கல் பொங்கி வழியும் திசையும் அதன் பலன்களும்.


உறவோடு ஒன்று கூடி புதிதாக அறுவடை செய்த புதிய அரிசியில் பொங்கல் வைக்க புதிய மண்பானை வாங்கி அதில் அரிசி கழுவிய தண்ணீருடன் பசும்பால் சேர்த்து புதிய அடுப்பில் சமநிலையில் வைத்து இளம் தீயில் எரியவிட்டு பானையில் வைத்த கழுநீரை பொங்கவிட்டு, பொங்கிவரும்போது  "பொங்கலோ பொங்கல்" என்று குலவையிட்டு கூவி மகிழ்து, சூரிய பகவானுக்கும் கதிரவனுக்கும்  நன்றி சொல்லுவார்கள்

நம் முன்னோர்கள்.

அப்போது பொங்கல் பொங்கிவழியும் திசையை வைத்து அந்த வருடம் முழுதும் குடும்பத்திற்கும் உறவுகளுக்கும்  நடக்கும் பலனை தீர்மானிக்கின்றனர்.


*கிழக்கு* –  பொங்கல் கிழக்கு திசையில் பொங்கி வழிந்தால், வீடு, மனை, வாகனங்கள் வாங்கும் பேச்சுவார்த்தைகள் நடந்தால் அது சுமூகமாக நடக்கும். ஏதேனும் பொருட்கள் வாங்க திட்டமிட்டிருந்தால் அதனை வாங்கி மகிழ்வீர்கள். உடை மற்றும் ஆபரணங்கள் சேரும் வாய்ப்புகள் அதிகம்.


*மேற்கு* – பொங்கல் மேற்கு பக்கத்தில் பொங்கி வழிந்தால், சுப நிகழ்ச்சிகள் உண்டாகும். மகன் – மகளுக்கு மகளுக்கு வரன் தேடுபவராக இருந்தால் இந்த வருடத்தில் மங்கள நிகழ்ச்சிகள் நடக்கும். குழந்தை பாக்கியம் கிட்டும். சுப செலவுகள் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும் என்பதை குறிக்கும்.


*வடக்கு* – பொங்கல் வடக்கு திசையில் பொங்கி வழிந்தால் பண வரவு அதிகரிக்கும். நீங்கள் பதவி உயர்வு அடைவீர்கள். மகன் அல்லது மகளுக்கு நல்ல இடத்தில் வேலை கிடைக்கும். பூர்வீக சொத்து சம்மந்தமாக பேச்சுகள் நிறைவாக முடியும். வெளிநாட்டு பயணங்கள் போக வாய்ப்புகள் அதிகம். கொடுத்த கடன் எந்த தடங்கலும் இன்றி கைக்கு வந்து சேரும்.


*தெற்கு*-தெற்கு திசையில் பொங்கல் பொங்கி வழித்தால் பிணி என்றே சொல்லலாம். அந்த வருடம் முழுவதும், மருத்துவ செலவுகள் அதிகம் இருக்கும். உடல் நிலையில் அதிக சோர்வு காணப்படும். சுப காரியங்களில் சற்று தாமதம் ஏற்படும். எனவே உடல்நிலையில் கூடுதல் கவனத்தோடு செயல்பட்டு வெற்றி பெற்ற வாழ்த்துக்கள்.

பெருந்தேட்கொடுக்கு-தினம் ஒரு மூலிகை


 *பெருந்தேட்கொடுக்கு* அகன்ற இலைகளையும் சிவப்பு கலந்த வெண்ணிற பூக்களையும் உருண்டையான காய்களையும் கூரான தேடல் கொடுக்கு போன்ற வளைந்த அழுத்தமான விதைகளையும் உடைய செடி ஒரு மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது இலை பூ காய் ஆகியவை மருத்துவ குணம் உடையது இசிவு அகற்றியாக செயல்படுகிறது இலையை அரைத்து பூசி வர சொறி சிரங்கு கரப்பான் பூன் வெட்டு காயப்பும் கரும் கிரந்தி குறுக்கு புண் முகப்பரு ஆகியவை குணமாகும் விதையை அரைத்து தேர் வண்டு குளவி ஆகியவை குட்டிய இடத்தில் பற்று போட்டால் நஞ்சு தணியும் நன்றி.

பொங்கல் பண்டிகை... கரும்பின் முக்கியத்துவம்

 

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையில்🎈 கரும்பிற்கு🎋 மட்டும்.. ஏன் இவ்வளவு ஸ்பெஷல்?


பொங்கல், கரும்பு, வெல்லம், மஞ்சள் குழை.... நமக்கு அள்ளித் தரும் ஆரோக்கியப் பலன்கள்.!!


பொங்கல் பண்டிகையான தமிழர் திருநாளன்று விளைந்த பயிரை அறுவடைசெய்து, அதன் பலனை அடையும் பருவமே தைப்பொங்கல். தைப்பொங்கலில் இடம்பெறும் தலைவாழை இலையில் தொடங்கி அரிசி, கரும்பு, கிழங்கு என ஒவ்வொன்றுக்கும் ஓர் ஆரோக்கியப் பலன் உண்டு.


மஞ்சள் குழை :


பொங்கல் பானையை சுற்றி கட்டிவைக்கப்படும் மஞ்சள் குழை கிருமிநாசினியாக செயல்படும். பானையை சுற்றிக் கட்டிவைக்கப்படும் அந்த மஞ்சள் குழையில் உள்ள கிழங்கை கீறி எடுத்து மறுநாள் சிறியவர்களின் நெற்றியில் வைத்து ஆசி வழங்குவார்கள்.


ஆவாரம்பூ :


 தமிழர் திருவிழாவில் ஆவாரம்பூவிற்கு முக்கிய இடமுண்டு. காப்புக் கட்டுதலில் தொடங்கி மாட்டுப்பொங்கல் வரை ஆவாரம்பூவைப் பயன்படுத்துவார்கள். இது சிறந்த கிருமிநாசினி. நோய்களைத் தடுக்க பொங்கலின்போது ஆவாரம்பூவை வீட்டின் கூரைகளில் சொருகி வைப்பார்கள்.


சிறுபீளைப்பூ :


 சிறுபீளைப்பூ பொங்கல் பண்டிகையில் பயன்படுத்துவதுண்டு. இதை வீட்டுக் கூரையில் சொருகி வைப்பதால் இதை 'கூரைப்பூ' என்றும் சொல்வார்கள். இது பூச்சிகள் வராமல் தடுக்கும். அம்மை, அக்கி, மஞ்சள்காமாலை போன்ற நோய்கள் வராமல் பாதுகாக்கும்.


மண்பானை :


 மண்பானையில் சமைப்பதால் நுண் துளைகளின் வழியாக நீராவியும், காற்றும் உணவின் மீது சீராகவும், மெதுவாகவும் பரவும். இதனால் சுத்தம் செய்யப்படாத அரிசி, காய்கறிகளாக இருந்தாலும் மண்பானையில் சமைக்கும்போது கிருமிகள் அழிந்துவிடும். அடுப்பைவிட்டு இறக்கினாலும் சூடு ஆறாமல், அதன் தன்மை கெடாமல் பாதுகாக்கும். உணவின் சத்துக்கள் அனைத்தும் பாதுகாக்கப்பட்டு எளிதாக செரிமானமாகும். தரமான உணவு கிடைக்கும்.


தலைவாழை இலை :


 பொங்கல் பண்டிகையின்போது தலைவாழை இலையில் அனைத்து உணவுகளையும் வைத்து படைப்பார்கள். சூரியனுக்குப் படைத்த பிறகு வாழை இலையில் பரிமாறப்படும் பொங்கலை சாப்பிடுவதால் இலையில் உள்ள இயற்கைச் சாறு உறிஞ்சப்பட்டு உடலில் சேரும். இது தோல்நோய் உருவாகாமல் தடுக்கும். ரத்தத்தைச் சுத்திகரிக்கும்.


வெல்லம் :


 பொங்கல் பண்டிகைக்கே இனிமை சேர்ப்பது வெல்லம்தான். இது வாதம், செரிமான நோய்களைக் குணப்படுத்தும். வெல்லத்தை அளவுடன் சேர்த்துக்கொண்டால் வயிற்றுப்புண்ணை ஆற்றும். இரும்பு, கால்சியம் போன்ற சத்துக்களும் இதில் உள்ளன.


கரும்பு :


 பொங்கல் பண்டிகையில் முக்கிய இடம்பிடிப்பது கரும்பு. கரும்பில் நார்ச்சத்துக்கள், வைட்டமின் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. கரும்பை கடித்து சாப்பிடுவதால் பற்கள் உறுதி பெறுகிறது.


கரும்பின் முக்கியத்துவம் :


பொங்கல் பண்டிகையின் முக்கிய பங்காக இருக்கும் கரும்பானது உழைப்பின் அருமையை நமக்குக் கற்றுத்தருகிறது. அதன் மேல்பகுதி உப்புத்தன்மையுடனும், அடிக்கரும்பு இனிமைமிக்கதாகவும் இருக்கும். வாழ்க்கையும் அப்படித்தான். இளமையில் கஷ்டப்பட்டு உழைக்க எந்தவித தயக்கமும் கொள்ளக்கூடாது. அப்படியானால்தான் முதுமையில் சிரமமில்லாமல் இனியவாழ்வு வாழ முடியும். இந்த உண்மையை உணர்ந்து கரும்பை சுவைக்க வேண்டும். உழைத்து வாழ்வில் முன்னேற்றம் பெற கரும்பு நமக்கு ஒரு நல்ல உதாரணம் என்றால் அது மிகையாகாது.

Sunday, January 14, 2024

தினம் ஒரு மூலிகை-பூனைக்காலி

 

*பூனைக்காலி* அவரை இனத்தைச் சார்ந்த கொடிவகை விதைக்காக பயிரிடப்படுகிறது விதைகள் கருப்பு வெள்ளை எனவும் சிறியது பெரியது எனவும் பல வகைகள் உள்ளன விதைகள் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் இவற்றில் கருப்பு நிறம் வகையே சிறந்ததாக கருதப்படுகிறது விதை காய் மேல் உள்ள சுனை ஆகியவை மருத்துவ குணம் உடையது விதை காமம் மிகுத்தல் நரம்புகளை சுருங்கச் செய்தல் ஆகிய குணம் உடையது வேர் சிறுநீர்ப் பெருக்கும் நரம்பு உரமாக்கும் சுனை நுண் புழு கொள்ளும் தடிப்பு உண்டாக்கி நமைச்சல் தரும் விதைகளை பாலில் போட்டு வேகவைத்து தோல் நீக்கி உலர்த்தி பொடித்து ஒரு கிராம் அளவாக சர்க்கரையுடன் காய்ச்சிய பாலில் கலந்து பருகி வர பெண்டிற்கு காணும் வெள்ளை போக்கும் ஆண்களின் விந்து இழப்பும் குணமாகும் பாலில் அவித்து தோல் நீக்கி உணர்த்திய விதை புலியுடன் சம அளவு நெருஞ்சில் விதை பொடி கலந்து நாலு கிராம் அளவாக பாலில் கலந்து சாப்பிட்டு வர ஆண்மை மிகும் விதை நீக்கிய காய்களை தேனில் போட்டு சுனையை சுரண்டி சேர்த்து 10-15மிலி அளவாக மூன்று நாட்கள் கொடுத்து நான்காம் நாள் கழிச்சல் மருந்து கொடுக்க வயிற்றுப்புழு நீங்கும். 

அகத்தின் இருளை போக்கி அன்பை நிரப்புவோம்.



அகத்தின்

இருளை போக்கி

அன்பை நிரப்புவோம்...!!


🌞🔥

உறவில்

புறம் போக்கி

வாழ்வில்

அறம் செய்து இல்லறம் காப்போம்...!!


🌞🔥

எண்ணத்தில்

எதிர்மறை போக்கி

நேர்மறை வளர்ப்போம்...!!


🌞🔥

செயலில்

தீயன 

போக்கி

நல்லன பெருக்கி நலமோடு

வாழ நாதன்

தாழ் பணிவோம்...!!


🌞🔥

எண்ணியது ஈடேற 

திண்ணிய மனதோடு 

சூரிய 

கடவுளை போற்றி

வணங்குவோம்..!


Saturday, January 13, 2024

தாமரத்தம் பழம் (அ) நட்சத்திர பழம்-தினம் ஒரு மூலிகை



*தாமரத்தம் பழம் (அ) நட்சத்திர பழம்*  மற்றும் விளிம்பி பழம் என்றும் அழைப்பார்கள் காய் பழம் ஆகியவை புளிப்பு சுவை உடையன பழம் மருத்துவ பயன் உடையது மலமிளக்கி ஆகவும் குளிர்ச்சி உண்டாக்கியாகவும் பயன்படும் வாத பித்த வாத கபம் குரல் கம்மல் கண்ணோய் தாது ஒழுகுதல் ஆகிய இந்த நோய்கள் குணமடையும் சித்த பிரம்மையும் இந்த தாமரத்தம்பழத்தை உன்ன குணமாக ஸ்டார் பழம் என்றும் அழைப்பார்கள் அதிக அளவு நார்சத்துக்கள் நிறைந்துள்ளது இதை சாப்பிட்டு வந்தால் குடலில் உள்ள அசடுகளையும் மலக்கட்டு வெளியேற்றும் பழம் கிடைக்கும் காலங்களில் இதை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் இன்றி வாழலாம் முதிர்ந்த காய்களை குழம்புகளில் புலிக்கு ஈடாக பயன்படுத்தலாம் இதனால் வாந்தி பசியின்மை குரல் கம்மல் ஆண்மை குறைவு தலைநோய் மிகப் பித்தம் ஆகியவை தீரும் தாமர அத்தம் பழத்தை இடித்து சாறு எடுத்து நாலு பங்கு சர்க்கரை சேர்த்து தேன் பதமாக காய்ச்சி வைத்துக் கொண்டு தாமரத்தம் மணப்பாகு பத்து மில்லி அளவாக காலை மாலை சாப்பிட்டு வர குளிர்ச்சி தரும் பசிமிகும் வாந்தியும் பித்தமும் குணப்படும் நன்றி.

திக்கா மல்லி-தினம் ஒரு மூலிகை

 *


*திக்கா மல்லி*  புதர் காடுகளில் காணப்படும் சிறு மரம் வெளியே அகன்ற இலைகளையும் வெண்ணிற பூக்களையும் உருண்டையான காய்களையும் உடையது வெள்ளை பாவட்டை என்றும் அழைப்பார்கள் காயிலிருந்து வெளிப்படும் பிசின் மருத்துவ குணம் உடையது முறை நோய் அகற்றுதல் வயிற்று வாயு அகற்றுதல் குடற்புச்சு கொள்ளுதல் உடல் தேற்றுதல் இசிவு அகற்றுதல் ஆகிய மருத்துவ குணம் உடையது பிசினை பொடித்து வெண்ணையில் குழைத்து மேற்பூச்சாக தடவி வர மூலப்புண் மேகப்புண் ஆகியவை விரைந்து ஆறும் திக்கா மல்லி பிசின் சாம்பிராணி கொம்பரக்கு சந்தனத்தூள் கஸ்தூரி மஞ்சள் ஜடா மஞ்சள் செம்மரத்தூள் ஆகியவற்றை இடித்து பொடித்து தலை முழுக தேவையான நல்லெண்ணையில் 5 கிராம் பொடியை போட்டு காய்ச்சி வடித்து தலை முழுகி வர தலை நீர் ஏற்றம் குணப்படும் தலைவலி தலைபாரம் நீர் பினிஷம் முதலியவை தீரும் நன்றி.

பொருள் கொண்ட பேர்கள் மனம் கொண்டதில்லை

 


*💕பொருள் கொண்ட பேர்கள் மனம் கொண்டதில்லை தரும் கைகள் தேடி பொருள் வருவதில்லை...!*


ஆம்... 

மேலே உள்ள

வரிகள் சற்றே

உண்மைதான்..!! 


🌸

பொருளாக

தர

இயலவில்லை 

என்ற நிலையில் மனப்பூர்வமான ஆதரவை தந்தால் 

அதுவே 

பெரிய மனிதநேயம்...!! 


🌸

நல்ல மனதோடு

நாம் செய்கிற

ஒவ்வொரு செயலும்

நிச்சயமாக யாருக்கேனும்

ஏதாவது ஒருவகையில்

பயன்படும்..!!


🌸

பயன்பட

வாழவேண்டும்

என்ற எண்ணம்

நமக்குள்

வந்துவிட்டாலே

பணம் ஒரு

பொருட்டல்ல...!! 


🌸

அருள்

கொண்டவர்களிடம்

பொருள்

தேடிவரும்

என்பது நிதர்சனம்...!! 


🌸

பொருள் கொண்ட

எல்லோருக்கும்

தரும் உள்ளம்

தானாக வரட்டும்...!!


🌸

நம் நல்ல

எண்ணங்கள்

செயலாகட்டும்,

நம் செயல்கள்

அனைத்தும்

சிறப்பானதாட்டும்...!!

🌸🌸🌸🌸🌸🌸


மூன்றாம் பிறை தரிசனம் பற்றிய சிறப்பு பதிவு!

ஒவ்வொரு அமாவாசைக்கு பிறகு வரும் மூன்றாம் நாள், மூன்றாம் பிறை நாளாகும். 



அமாவாசைக்கு மறுநாள் நிலவு தெரிவதில்லை. 


ஆனால் மூன்றாம் நாளான துவிதியை திதியில் தெரியும் நிலவு, அழகாகவும், பிரகாசமாகவும் இருக்கும். 


மூன்றாம் பிறையானது இரவு வருவதற்கு முன்னே 6.30 மணியளவில் தோன்றும் பிறையாகும். 


வானத்தில் சில நொடிகளே காட்சி தரும் மூன்றாம் பிறைச் சந்திர தரிசனமே மிகவும் அபூர்வமான தெய்வ தரிசனமாகும்.


மார்கழி மாதத்தில் வரும் மூன்றாம் பிறை 

இன்று மாலை மார்கழி மாதத்தில் வரும் மூன்றாம் பிறை தரிசனம் காணவேண்டும்.


*மார்கழி மாதத்தில் வரும்* *மூன்றாம் பிறை தரிசனம்* *கண்டால் நமது சகல* *பாவங்களும் தொலையும்*!


மூன்றாம் பிறை சந்திரனை தரிசிக்கும் வேளையில், கையில் காசை வைத்து மூடிக்கொண்டு வலமாக 

மூன்று முறை சுற்றி, மீண்டும் ஒரு முறை பிறையை தரிசித்து வணங்க,  பெண்களுக்கு மாங்கல்ய பலம் ஏற்படுகிறது.


மூன்றாம் பிறை நாளில் 

சந்திர தரிசனம் காண்பவர்களுக்கு ஞாபக சக்தி அதிகரிக்கும். மனக்குழப்பம் நீங்கும். 


கண் பார்வை தெளிவாகும். மேலும் ஆயுள் கூடும் என்பது  நம்பிக்கை.


சந்திரனின் நட்சத்திரங்களான ரோகிணி, அஸ்தம், திருவோணத்தில் பிறந்தவர்கள் தங்களது வாழ்நாள் முழுவதும் இந்த மூன்றாம் பிறை தரிசனத்தை கண்டால்  சந்திரனின் பரிபூரண அருளைப் பெறலாம்.


மூன்றாம் பிறையை தரிசனம் செய்தால், சிவனின் சிரசையே நேரில் தரிசனம் செய்ததாக அர்த்தம். 


தொடர்ந்து மூன்றாம் பிறையை தரிசித்து வருபவர்கள் வாழ்வில்  வற்றாத செல்வ வளத்தை பெற்று பிரகாசத்துடன் திகழ்வார்கள்.


மூன்றாம் பிறையை பார்த்தால் மனநிறைவும், பேரானந்தமும், மன அமைதியும் கிடைக்கும். மனக்கஷ்டங்கள், வருத்தங்கள் எல்லாமே நீங்கும்


மூன்றாம் பிறை தரிசனம் முற்பிறவி பாவத்தைப் போக்கும் என்பார்கள். 


சிவன், பார்வதி, விநாயகப் பெருமான் போன்ற தெய்வங்கள் சூடும் இந்தப் பிறை தெய்வீக சின்னமாகும். 


காமம், வெகுளி, மயக்கம் இந்த மூன்று குணங்களையும் கடந்தவன் முக்தி அடையலாம் என்பதை நினைவுபடுத்துவதற்கே பெரியவர்கள் இதைக் காணவேண்டும் என்று கூறினார்கள்.


செவ்வாய், வெள்ளி மற்றும் சனிக்கிழமை களில் வரும் மூன்றாம் பிறை மிகவும் விசேஷமான ஒன்றாகும். 


குறிப்பாக சித்திரை, வைகாசி மாதங்களில் வரும் இப்பிறையைக் கண்டால் ஓர் ஆண்டு சந்திர தரிசனம் செய்த பலன் கிடைக்கும். , 


காலை வேளை பிரம்ம முகூர்த்தமாகும். 


மாலை வேளை விஷ்ணு முகூர்த்தமாகும். 


எனவே, அந்த வேளையில் சந்திர தரிசனம் செய்து, வீட்டில் விளக்கேற்றி வழிபட்டால் செல்வம் பெருகும். 


திருமணம் ஆனவர்கள் தம்பதி சமேதராக சந்திர தரிசனம் செய்யலாம். 


திருமணம் ஆகாதவர்கள் பெற்றோருடன் சேர்ந்து மூன்றாம் பிறையை தரிசிக்கலாம். 


இதனால் குடும்ப ஒற்றுமை பெருகும் என்பது நம்பிக்கை.


மூன்றாம் பிறை நிலவு சரியாக மாலை 6.30 மணியிலிருந்து 7.00 மணிக்குள் சில நிமிடங்கள் மட்டுமே தெரிவதற்கு வாய்ப்பு உள்ளது. 


சில நேரம் பிறை நிலவு தெளிவாக தெரியும். சில 

நேரம் பிறை நிலவு தெளிவாக தெரியாது. 


மேகங்களுக்கிடையே மறைந்திருக்கும்.


பிறை நிலவு தெரிந்தாலும் தெரியவில்லை என்றாலும் மூன்றாம் பிறை நாளாகிய இன்று நீங்கள் இந்த வேண்டுதலை மாலை 6.30 மணிக்கு வெட்டவெளியில் செய்ய வேண்டும்.


பிறை நிலவை தரிசனம் செய்யும் போது உங்களுடைய கையில் வெள்ளி நகை அல்லது தங்க நகை வைத்துக்கொள்வது நல்லது. 


எதுவுமே இல்லை என்றால் ஐந்து ரூபாய் நாணயத்தை மட்டுமாவது கையில் வைத்துக்கொள்ளுங்கள். (கையில் நாணயம் வைத்திருந்தால் தரிசனத்தை முடித்துவிட்டு அந்த ரூபாய்க்கு கோவிலுக்கு கற்பூரம் வாங்கிக் கொடுத்து விடலாம். அல்லது உண்டியலில் போட்டு விடலாம்.)


பிரார்த்தனை செய்து முடித்துவிட்டு ‘ஓம் சந்திரமவுலீஸ்வராய நம’ என்ற மந்திரத்தை கண்களை மூடி தியான நிலையில் உச்சரிக்கவேண்டும். 


ஒரு இடத்தில் அமர்ந்து பிறை நிலவை பார்த்தபடி உச்சரிக்க முடியும் என்றால் இன்னும் சிறப்பு. அமர முடியவில்லை என்றால் நின்று கொண்டு இரண்டு கைகளை ஏந்தி 

இந்த மந்திரத்தை 108 முறை உச்சரித்து விட்டு பிறைநிலவு தரிசனத்தை நிறைவு செய்து கொள்ளுங்கள். 


நிச்சயம் வாழ்க்கையில் நீங்கள் நம்ப முடியாத வளர்ச்சி உங்களை தேடி வரும்.

மூன்றாம் பிறை பிறந்த கதை:

ஒருமுறை விநாயகப்பெருமான், சிவனின் அதிகாரத்தையும், பொறுப்புகளையும் ஏற்றுக்கொண்டார். பொறுப்பினை ஏற்றுக்கொண்ட பின் விநாயகர் அனைத்து உலகங்களையும் பார்வையிட சென்றார். எல்லா உலகத்தையும் பார்வையிட்ட விநாயகர் சந்திரனையும் பார்க்க சென்றார். சந்திரன் ஒரு முழுவெண்மதி என்பதால், விநாயகரின் திருவுருவை பார்த்து பரிகசித்தான்.


இதனால் கோபமுற்ற விநாயகப்பெருமான் உன் அழகு இன்று முதல் இருண்டு, உன்னை உலகத்தார் வணங்க மாட்டார்கள் என்று சாபமிட்டார். விநாயகரின் சாபத்தால் சந்திரனின் அழகு குன்றியது. பின் சந்திரன் பொலிவிழந்தான். இதனால் கவலை அடைந்த சந்திரன் மனம் வருந்தினான். பின் சிவனை நோக்கி கடும் தவம் இருந்து தன் பழைய அழகை பெற்றான்.

சந்திரனை தரிசிக்கும் வேளையில், கையில் காசை வைத்து மூடிக்கொண்டு வலமாக மூன்று முறை சுற்றி, மீண்டும் ஒரு முறை பிறையை தரிசித்து வணங்க, பெண்களுக்கு மாங்கல்ய பலம் ஏற்படுகிறது.

மூன்றாம் நாளில் சந்திர தரிசனம் காண்பவர்களுக்கு ஞாபக சக்தி அதிகரிக்கும். மனக்குழப்பம் நீங்கும். கண் பார்வை தெளிவாகும். மேலும் ஆயுள் கூடும் என்பது நம்பிக்கை.

சந்திரனின் நட்சத்திரங்களான ரோகிணி, அஸ்தம், திருவோணத்தில் பிறந்தவர்கள் தங்களது வாழ்நாள் முழுவதும் இந்த மூன்றாம் பிறை தரிசனத்தை கண்டால் சந்திரனின் பரிபூரண அருளைப் பெறலாம்.


மூன்றாம் பிறையை தரிசனம் செய்தால், சிவனின் சிரசையே நேரில் தரிசனம் செய்ததாக அர்த்தம். தொடர்ந்து மூன்றாம் பிறையை தரிசித்து வருபவர்கள் வாழ்வில் வற்றாத செல்வ வளத்தை பெற்று பிரகாசத்துடன் திகழ்வார்கள்.