Tuesday, April 2, 2024

75 வயது ஆண் .. தன் மனைவியுடன் வாழ்ந்த அனுபவத்தை எழுதியிருக்கிறார்.. 😢


நாற்பதைந்து வருடம் - ஒரு நாளாவது அவளை கொண்டாடி இருக்கலாம்....
என் கோபத்தை தள்ளுபடி செய்து ஒரு நாளாவது அவளை கொண்டாடி இருக்கலாம்....
அவள் சமையலை ஒருமுறையாவது நான் மனம் நிறைய பாராட்டி இருக்கலாம்...
ஒரு நாளாவது நான் சமையல் செய்து அவளுக்கு ஊட்டி இருக்கலாம்...
ஒரு நாளாவது அவளுக்கு பதில் - நான் அவளது துணியையும் சேர்த்து துவைத்து இருக்கலாம்...
ஒரு நாளாவது TV யையும், Mobile லையும் அணைத்துவிட்டு, அவளை கொஞ்சி இருக்கலாம்...
ஒரு நாளாவது வேலை தளத்தின் கோபத்தையும் எரிச்சலையும் அங்கேயே விட்டு விட்டு வந்து இருக்கலாம்...
ஒரு நாளாவது, என் விடுமுறை நாட்களில் - அவளை சினிமாவுக்கு அழைத்து சென்று இருக்கலாம்...
ஊர் ஊராய் சுற்றி அவளை உற்சாகப்படுத்தி இருக்கலாம்...
அவள் விரும்பி கேட்காத போதும் - ஒரு புடவை வாங்கி கொடுத்து இருக்கலாம்...
ஒரு மாசமாவது− என் முழு சம்பளப் பணத்தை அவளிடமே கொடுத்து இருக்கலாம்...
ஒரு நாளாவது காலையில் அலாரத்தை கொஞ்சம் அணைத்து வைத்து அவளை தூங்க விட்டு இருக்கலாம்...
நீ சாப்பிட்டியா என்று அவளை ஒரு நாளாவது கேட்டு இருக்கலாம்...
நீயும் வா என்னுடன் வந்து சாப்பிடு என்று ஒரு நாளாவது சொல்லி இருக்கலாம்...
அவள் உடல் நலத்தைப் பற்றி ஒருமுறையாவது விசாரித்து இருக்கலாம்...
அவள் தன்னை கவனிப்பதை விடுத்து பிள்ளைகளை மட்டும் கவனிப்பதை கண்டு நான் கொஞ்சம் - அவளை
கவனித்து இருக்கலாம்...
அவள் நோயில் விழுந்த போது நான் கடன் பட்டேனும் அவளை காப்பாற்றி இருக்கலாம்...
என் தாயே! தாரமே ! − நீ என்னுடன் இருந்த போது நான் கம்பீரமாய் வாழ்ந்தேன்...
நீ என்னை விட்டு போனதும் நான் பலமுறை கால் தடுக்கி விழுகிறேன்...
என்னை தூக்கி விடவும் மூத்தவனுக்கு நேரம் இல்லை...
தேநீர் ஏதாவது போட்டுத்தரக் கேட்டால் இளையவளுக்கு சினம் வருது...
என் மனைவியே உன்னை நான் தினமும் கொண்டாடி இருக்க வேண்டும்...
நான் தவறுகள் இழைத்ததற்கு என்னை நீ மன்னித்து விடு...
ஒரு முழப் பூவாவது ஒரு நாளாவது உனக்கு வாங்கி தராதவன் நான்...
மூச்சு இழந்த - உன் புகைப்படத்துக்கு தினம் தினம் மாலை இட்டு உன்னிடம் மன்னிப்பு கேட்கிறேன்...
மனைவியே! என்னை மன்னித்து விடு...
மீண்டும் ஒரு பிறப்பு இருக்கும் என்றால் நீயே என் மனைவியாய் வந்து விடு... நான் உன்னை கொண்டாட வேண்டும்...
எழுபத்தைந்து வயதில்... இந்த நிலை யாருக்கும் வராமலிருக்க....
உங்கள் மனைவியை தினமும் நீங்கள் நேசியுங்கள்
வாழ்க்கை வசந்தமாகும்.

உங்களை பிறர் நேசிக்க சில மனதத்துவ அறிவுரை & யோசனைகள்.




உங்களை பிறர் நேசிக்க, உங்களை எல்லோருக்கும் பிடிக்க, உயர்வாக நினைக்க... சில மனதத்துவ அறிவுரை & யோசனைகள்...


*பேச்சு...

1) ஆணோ பெண்ணோ யாராக இருப்பினும் முதலில் அவர்களின் கண்களை பார்த்து பேசுக...




2) குழந்தைகளிடம் ஆர்வமாக பேசுக...




3) பெரியவர்களுடன் நலன் விசாரித்தப்படியே, கடவுளின் நம்பிக்கையுடனே பேசுங்கள்...




4) பெற்றோர்களிடம் அன்பாகவும், முதலாளிகள் மற்றும் உயர் அதிகாரிகளிடம் நேர்மையாகவும் பொறுமையாகவும் பேசுக...




5) கணவன் / மனைவியிடம் எதையும் மறைக்காமல் அக்கறையுடன் பேசுக...




6) நம்பிக்கையான நண்பரிடம் மட்டுமே தைரியமாக உண்மையை பேசுக...




7) உங்கள் குடும்பத்தினருக்கு அடிக்கடி பரிசு கொடுக்கும் பழக்கம் வைத்திருங்கள்...




8) அதிகமாக உங்கள் குடும்பத்தினரை பாராட்டி பேசுங்கள், அவர்கள் மீது நம்பிக்கை கொள்ளுங்கள்...




9) ஆடை அலங்காரங்களில்தான் நீங்கள் மற்றவர்களால் எளிதில் ஈர்க்கப்படுவீர்...




10) வெள்ளை ஆடைகள் அணிபவர்களுக்கு நம் நாட்டில் தனி மரியாதையே உண்டு... வாரம் ஒருமுறையாவது வெள்ளை உடை அணிவீர்...




11) உங்கள் நிறத்திற்கு ஏற்ற சரியான ஆடையை நீங்கள்தான் தேர்ந்தெடுக்க வேண்டும்...




12) தெரிந்தவர் தோரியாதவர் யாராக இருந்தாலும் கூட அவர்களுக்கு உங்கள் அழகிய புன்னகையை பரிசளியுங்கள்/ பெண்கள் தெரிந்தவர்களிடம் மட்டுமே புன்னகைத்து பேசுவது நலமே...




13) வாக்குகள் ஏதாவது கொடுத்தால் அதை முடிந்த வரை நிறைவேற்ற பாருங்கள்...




14) சுபநிகழ்ச்சிக்கு செல்லும்போது உங்கள் மனைவி மக்கள் மற்றும் உங்களின் குடும்பத்தினரிடமே இருங்கள்...




15) அழகிய உடை சட்டையில் வாசனை கையில் கடிகாரம் என உங்களை நீங்களே அழகுபடுத்திக் கொள்ளுங்கள்...




16) ஆடை அலங்காரம், பேச்சில் பொறுமையே உங்களை மற்றவர்களால் அதிகம் ஈர்க்கக்கூடும்...




17) பிடித்த உணவை தேர்ந்தெடுத்து அளவோடு சாப்பிடுங்க...




18) வயிறு முட்ட சாப்பிடவே கூடாது, பரபரப்பாக அவசர அவசரமாக சாப்பிட வேண்டாம்...




19) உங்கள் மனைவியோ, அல்லது அம்மா, சகோதரி சகோதரன் யாராக சமைத்திருந்தாலும் உணவு சமைத்தவரை பாராட்டுங்கள்...




20) உணவில் குறை கூறாதீர்கள், பிடிக்கவில்லை என்றால் விட்டுவிடுங்கள்...




21) குழந்தைகள் மற்றும் சகோதர சகோதரிகள் அருகில் அமர்ந்திருந்தால் அவர்களுக்கு வைக்காத உணவு உங்களுக்கு வைக்கப்பட்டால் அதை பரிமாறிக் கொள்ளுங்கள்...




22) சுத்தம் என்றால் முதலில் அதை உங்கள் வீட்டிலிருந்தே கடைபிடியுங்கள்...




23) வீட்டிற்கு வரும் நண்பர்கள் மற்றும் அக்கம் பக்கத்து விருந்தாலுகள் முகம் மலரும்படி என்றுமே உங்கள் வீட்டை சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள்...




24) உடல் சுத்தம், உடுத்தும் உடையில் சுத்தம், இருக்கும் இடம் மற்றும் பேச்சில் சுத்தம், போன்றவற்றே பிறர் உங்களை அதிகமாக நேசிக்க உதவிடும்...




25) சேமிப்பும், உதவிகளும் இந்த காலகட்டத்தில் மிகமிக அவசியம் வருமானத்தை கொண்டு சேமிக்க பாருங்கள், இயலாதவர்கள் உங்களை விட பொருளாதாரத்தில் தாழ்ந்தவர்களுக்கு அதிகமாக உதவிட பாருங்கள்...

வாகனங்களில் பல்வேறு வண்ணங்களில் நம்பர் பிளேட்

#Vehicle #Number #Plate #number_plate, #data, #updates, #knowledge
வாகனங்களில் பல்வேறு வண்ணங்களில் நம்பர் பிளேட் (கருப்பு, மஞ்சள், பச்சை) இருப்பதன் காரணம் என்ன? ⬛ ⬜தனிநபர் (Private) பயன்படுத்தும் வாகனங்கள் வெள்ளை நிற பின்னணியில் கறுப்பு நிற எண்கள் பொறிக்கப்பட்டிருக்கும். ⬛ 🟨வணிகம் மற்றும் வாடகைக்கான (Commerical) வாகனங்களில் மஞ்சள் வண்ணம் பின்னணியில் கறுப்பு நிற எண்கள் பொறிக்கப்பட்டிருக்கும் . 🟨 ⬛ ஓட்டுநர் இல்லாமலேயே வாடிக்கையாளர்கள் (Rental ) தங்கள் தேவைக்கு வாடகைக்கு எடுத்து பயன்படுத்தும் வாகனங்கள் கறுப்பு வண்ண பின்னணியில் மஞ்சள் நிற எண்கள் பொறிக்கப்பட்டிருக்கும். 🟦 ⬜ வெளிநாட்டு தூதரக (Foreign Embassy ) வாகனங்களில் வெளிர் நீல நிற பின்னணியில் வெள்ளை நிற எண்கள் பொறிக்கப்பட்டிருக்கும். 🟩⬜ சுற்றுச்சூழலுக்கு உகந்த மின்கல (Electric) வாகனங்கள் பச்சை நிற பின்னணியில் வெள்ளை நிற எண்களைக்கொண்டிருக்கும்.

பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையில்



*பிறப்பிற்கும்*

*இறப்பிற்கும் இடையில்,*

*நீ செய்யும்* *பாவம்*

*புண்ணியம்* *மட்டுமே*

*உனக்கு மிஞ்சும்...*

*உன்னுடன் கடைசி*

*வரை வருவதும்*

*இதுவே...!!*




01) பெற்றோர்களை

நோகடிக்காதே...

நாளை உன் பிள்ளையும்

உனக்கு அதை தான்

செய்யும்...!!




02) பணம் பணம் என்று

அதன் பின்னால்

செல்லாதே...

வாழ்க்கை போய்

விடும்...

வாழ்க்கையையும்

ரசித்துக் கொண்டே

போ...!!




03) நேர்மையாக இருந்து

என்ன சாதித்தோம்

என்று நினைக்காதே...

நேர்மையாக இருப்பதே

ஒரு சாதனை தான்...!!




04) நேர்மையாக

இருப்பவர்களுக்கு

சோதனை வருவது

தெரிந்ததே, அதற்காக

நேர்மையை கை விட்டு

விடாதே...

அந்த நேர்மையே

உன்னை

காப்பாற்றும். ..!!




05) வாழ்வில் சின்ன சின்ன

விஷயத்திற்கெல்லாம்

கோபப்படாதே...

சந்தோஷம்

குறைவதற்கும்,

பிரிவினைக்கும் இதுவே

முதல் காரணம்...!!




06) உன் அம்மாவிற்காக

ஒரு போதும்

மனைவியை விட்டு

கொடுக்காதே...

அவள் உனக்காக

அப்பா அம்மாவையே

விட்டு வந்தவள்...!!




07) உனக்கு உண்மையாக

இருப்பவர்களிடம்...

நீயும் உண்மையாய்

இரு...!!




08) அடுத்தவர்களுக்கு தீங்கு

செய்யும் போது

இனிமையாகத்தான்

இருக்கும்...

அதுவே உனக்கு வரும்

போது தான், அதன்

வலியும் வேதனையும்

புரியும்...!!




09) உன் மனைவி

உண்மையாக இருக்க

வேண்டும் என்று, நீ

நினைப்பது போல்...

நீயும் உண் மனைவிக்கு

உண்மையாய் இரு,

எந்த பெண்ணையும்

ஏறெடுத்து பார்க்காதே,

அதுவே உன்

மனைவிக்கு கொடுக்கும்

மிகப்பெரிய பரிசு...!!




10) ஒருவன் துரோகி

என்று தெரிந்து

விட்டால்...

அவனை விட்டு

விலகியே இரு...!!




11) எல்லோரிடமும்

நட்பாய் இரு...

நமக்கும் நாலு

பேர் தேவை...!!




12) நீ கோவிலுக்கு

சென்று தான்

புண்ணியத்தை

சேர்க்க வேண்டும்

என்பதில்லை...

யாருக்கும் தீங்கு

செய்யாமல்

இருந்தாலே...

நீ கோவில்

சென்றதற்கு சமம்...!!




13) நிறை குறை இரண்டும்

கலந்தது தான்

வாழ்க்கை...

அதில் நிறையை மட்டும்

நினை...

நீ வாழ்க்கையை

வென்று விடலாம்...!!




14) எவன் உனக்கு உதவி

செய்கிறானோ,

அவனுக்கு மட்டும்

ஒரு நாளும் துரோகம்

செய்யாதே...

அந்த பாவத்தை நீ

எங்கு போனாலும்

கழுவ முடியாது...!!




15) அடுத்தவர்களைப்

போல் வசதியாக

வாழ முடியவில்லை

என்று நினைக்காதே...

நம்மை விட

வசதியற்றவர்கள்

கோடி பேர்

இருக்கிறார்கள்

என்பதை மனதில்

கொள்...!!




16) பிறப்பிற்கும்

இறப்பிற்கும் இடையில்,

நீ செய்யும் பாவம்

புண்ணியம் மட்டுமே

உனக்கு மிஞ்சும்...

உன்னுடன் கடைசி

வரை வருவதும்

இதுவே...!!




*விதி*

👆

👇

*வி*னை விதைத்தவன் வினை அறுப்பான் !

*தி*னை விதைத்தவன் தினை அறுப்பான் !!

கிரைய பத்திரம் பதியும் போது கவனிக்க வேண்டிய 16 விஷயங்கள்!


1. ஒரு நிலத்தை ஒரு நபரிடமிருந்து விலை கொடுத்து வாங்கி உங்கள் பெயருக்கு மாற்றி கொள்வதற்கு போடப்படும் ஆவணம் தான் கிரயப் பத்திரம் ஆகும்.

2. மேற்படி கிரயப்பத்திரம் முத்திரை தாள்களில் எழுதப்பட்டு சார்பதிவகத்தில் சாட்சிகள் முன்னிலையில் பதியப்படுவது தான் கிரயப் பத்திர பதிவு ஆகும்.

3. எழுதி கொடுப்பவரின் பெயரும் & இன்சியலும், அவரின் அடையாள அட்டை, பட்டா . மின் இணைப்பு, முன் பத்திரம் மற்றும் இதர ஆவணங்களில் உள்ளது போலவே பத்திரத்தில் எழுதப்பட்டுள்ளதா என பார்க்க வேண்டும்.

4. எழுதி கொடுப்பவர், ஏற்கனவே முன் வாங்கிய கிரயப்பத்திரத்தில் உள்ள அவரின் முகவரியும், தற்போது இருக்கும் முகவரியும் ஒன்றா என்று பார்க்க வேண்டும். இரண்டும் வேறு வேறு முகவரி என்றால் இரண்டு முகவரியும் இப்போது எழுதுகிற கிரைய பத்திரத்தில் காட்ட வேண்டும்.

5. கிரயம் எழுதி வாங்குபவரும் தன்னுடைய பெயர் , இன்சியல், முகவரி ஆகியவை அடையாள அட்டையுடன் பொருந்தும்படி பிழையில்லாமல் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.

6. கிரயம் எழுதி கொடுப்பவருக்கு சொத்து எப்படி வந்தது,

• அவர் வேறு நபரிடம் கிரயம் வாங்கி இருக்கலாம்.

• அவருடைய பெற்றோர்கள் மற்றும் குடும்பத்தாரிடம், இருந்து செட்டில்மெண்ட், பாகபிரிவினை, விடுதலைப் பத்திரம் மூலம் அடைந்து இருக்கலாம்.

• உயில் , தானம் மூலம் கிடைத்து இருக்கலாம்.

• பொது ஏலம், நீதிமன்ற தீர்வுகள் மூலம் கிடைத்து இருக்கலாம்.

• பூர்வீகமாக பட்டா படி பாத்தியப்பட்டு வந்து இருக்கலாம். அதனை கிரயம் எழுதி கொடுப்பவர் தெளிவாக ஆவண எண் விவரத்துடன் மேற்படி சொத்து எனக்கு கிடைத்தது என்று சொல்லி இருக்க வேண்டும்.

7. கிரயம் எழுதி கொடுப்பவருக்கு, யார் மூலம் சொத்து வந்தது என எழுதுவது மட்டும் இல்லாமல் அவருக்கு முன் கிரயம் பெற்றவருக்கு யார் மூலம் சொத்து வந்தது என்று நதிமூலம் ரிஷிமூலம், பார்த்து அணைத்து லிங்க் டாகுமென்ட்யையும் வாரலாறாக தற்போதைய கிரைய பத்திரத்தில் எழுதுவது மிக சிறப்பானது ஆகும்.

8. கிரயம் நிச்சயித்த உண்மை தொகை எழுத வாய்ப்பு இருந்தால் தெளிவாக எழுதுங்கள் (அல்லது) வழிகாட்டி மதிப்பு தொகை எழுதினாலும் எழுதுங்கள். எவ்வளவு பணம் அக்ரிமெண்ட் போடும்போது கொடுக்கப்பட்டது, எவ்வளவு பணம் காசோலையாக கொடுக்கப்பட்டது, எவ்வளவு பணம் வங்கி கணக்கில் கட்டப்பட்டது, எவ்வளவு பணம் ரொக்கமாக கொடுக்கப்படுகிறது, என தெளிவாக குறிப்பிட வேண்டும்.

9. கிரயம் எழுதி கொடுப்பவர், எழுதி வாங்குபவருக்கு கீழ்க்கண்ட உறுதி மொழிகளை கட்டாயம் கொடுத்து இருக்க வேண்டும்.

1.தானம்
2. அடமானம்
3. முன் கிரயம்
4. முன் அக்ரிமெண்ட்,
5. உயில்
6. செட்டில்மெண்ட்,
7. கோர்ட் அல்லது கொலாட்ரல் செக்யூரிட்டி,
8. ரெவின்யூ அட்டாச்மெண்ட்
9. வாரிசு பின் தொடர்ச்சி,
1௦. மைனர் வியாஜ்ஜியங்கள்.
11. பதிவு பெறாத பத்திரங்கள் மூலம் எழுதும் பாத்திய கோரல்கள்,
12.சொத்து ஜப்தி,
13.சொத்து ஜாமீன்,
14.பைசலுக்காக சர்க்கார் கடன்கள்,
15.வங்கி கடன்கள்,
16.தனியார் கடன்கள்,
17.சொத்து சம்மந்தமான வாரிசு உரிமை ,
18.சிவில், கிரிமினல் வழக்குகள்,
19.சர்க்கார் நில ஆர்ஜிதம்,
20.நிலகட்டுப்பாடு ,
21.அரசு நில எடுப்பு முன் மொழிவு நோட்டீஸ்,
22.நில உச்ச வரம்பு கட்டுப்பாடு,
23.பத்திரப்பதிவு சட்டம் 47(a) சட்டத்தின் கீழ் சொத்து இல்லை
24. இதில் சொல்லாத பிற வில்லங்கங்கள் இல்லை

போன்ற உறுதி மொழிகளை வில்லங்கம் இல்லை என்று கண்டிப்பாக உறுதி அளித்து இருக்க வேண்டும்.

1௦. சர்க்கார் வரி வகைகள் முழுவதும் கட்டியாயிற்று, சொத்து சம்மந்தமான அசல் நகல் ஆவணங்களை ஒப்படைத்து விட்டேன். எதிர்காலத்தில் பிழை இருந்தால் அல்லது வேறு ஏதாவது பத்திரம் இந்த சொத்து பற்றி எழுதி கொடுக்க சொன்னால் கைமாறு எதிர்பார்க்காமல் எழுதி கொடுக்கின்றேன் என்று கிரைய பத்திரத்தில் உறுதி அளித்து இருக்க வேண்டும்.

11. சொத்து விவரத்தில் மிக தெளிவாக மாவட்டம், வட்டம், கிராமம் புல எண், உட்பட அனைத்தையும் தெளிவாக குறிப்பிட்டு இருக்க வேண்டும். தெருவோ, கதவு எண்ணோ இருந்தால் நிச்சயம் குறிப்பிட்டு இருக்க வேண்டும். மின் இணைப்பு இருந்தால் மின் இணைப்பு எண், நிலத்தின் பட்டா எண், புதிய சர்வே எண், பழைய சர்வே எண், பட்டா படி சர்வே எண். தெளிவாக எழுதிருக்க வேண்டும்.

12. இடத்தின் அளவு நாட்டு வழக்கு முறையிலும் , பிரிட்டிஸ் அளவு முறையிலும், மெட்ரிக் அளவு முறையிலும் தெளிவுடன் எழுதி இருக்க வேண்டும். மெட்ரிக் அளவு முறையில் எழுதி இருந்தால் பட்டா மாற்றத்திற்கு உதவியாக இருக்கும் .

13. கிரைய சொத்தை சுற்றி இருக்கும் நான்கு பக்கங்களில் இருக்கின்ற சொத்துக்களை சிறு அளவு பிழை இல்லாமல் அடையாள படுத்த வேண்டும். நான்கு பக்கங்களில் இருக்கின்ற நீள அகல அளவுகளை தெளிவுடன் குறிப்பிட்டு இருக்க வேண்டும்.

14. பத்திரத்தின் எல்லா பக்கங்களிலும் எழுதி கொடுப்பவர் கையொப்பம் இட்டு இருக்கிறார்களா என்று சோதனையிட வேண்டும். எழுதி கொடுப்பவர் தரப்பின் சாட்சிகள், பெயர் & முகவரியுடன் கையொப்பம் இட்டு இருக்கிறார்களா என்று சரிபார்க்க வேண்டும்.

15. தேவையான பட்டா, வரைபடம், அடையாள அட்டை நகல்கள் பத்திரத்துடன் இணைக்கப்பட்டுள்ளதா , அதில் எழுதி கொடுப்பவர் கையொப்பம் இட்டு இருக்கிறார்களா என்று பார்க்க வேண்டும்.

16. முத்திரைத்தாள்கள் சரியாக வாங்கி இருக்கிறோமோ, பதிவுக்கட்டணம் DD சரியாக எடுத்துள்ளதா, ஆவண எழுத்தர் அல்லது வக்கீல் , ஆவணம் தயாரித்தவர் என்று கையொப்பம் இட்டு இருக்கிறார்களா என்று பார்க்க வேண்டும்.

மனைவி கணவனிடம் எதிர்பார்க்கும் 37 விசயங்கள்





01. அன்பாக , பிரியமாக இருக்க வேண்டும்.

02. மனது புண்படும்படி பேசக் கூடாது.

03. கோபப்படக்கூடாது.

04. சாப்பாட்டில் குறை சொல்லக் கூடாது

05. பலர் முன் திட்டக்கூடாது.

06. எந்த இடத்திலும் மனைவியை விட்டுக்

கொடுக்க கூடாது.

07. முக்கிய விழாக்களுக்கு சேர்ந்து போக வேண்டும்.

08. மனைவியிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும்.

09. சொல்வதைப் பொறுமையாகக்

கேட்க வேண்டும்

10. மனைவியின் கருத்தை ஆதரிக்க வேண்டும், மதிக்க வேண்டும்.

11. வித்தியாசமாக ஏதாவது செய்தால்

ரசிக்க வேண்டும் பாராட்ட வேண்டும்.

12. பணம் மட்டும் குறிக்கோள் அல்ல. குழந்தை, குடும்பம்

இவற்றிற்கும் உரிய முக்கியத்துவம் தந்து நடந்து

கொள்ள வேண்டும்.

13. வாரம் ஒரு முறையாவது. மனம் விட்டுப் பேச

வேண்டும்.

14. மாதம் ஒரு முறையாவது வெளியில்

அழைத்துச் செல்ல வேண்டும்.

15. ஆண்டுக்கு ஒரு முறையாவது சுற்றுலா

செல்ல வேண்டும்.

16. பிள்ளைகளின் படிப்பைப் பற்றி அக்கறையுடன் கேட்க

வேண்டும்.

17. ஒளிவு மறைவு கூடாது.

18. மனைவியை நம்ப வேண்டும்.

19. முக்கியமானவற்றை மனைவியிடம் கூற வேண்டும்.

20. மனைவியிடம் அடுத்த பெண்ணைப்

பாராட்டக் கூடாது.

21. அடுத்தவர் மனைவி அழகாக இருக்கிறாள் என்று

எண்ணாமல் தனக்குக் கிடைத்ததை வைத்து சந்தோசப்பட

வேண்டும்.

22. தனக்கு இருக்கும் கஷ்டம் தன் மனைவிக்கும்

இருக்கும் என்று எண்ண வேண்டும்.

23. உடல் நலமில்லாத போது உடனிருந்து கவனிக்க

வேண்டும்.

24. சின்ன, சின்னத் தேவைகளை நிறைவு செய்ய

வேண்டும்.

25. சிறு சிறு உதவிகள் செய்ய வேண்டும்.

26. குழந்தைகள் அசிங்கம் செய்து விட்டால் ‘இது

உன் குழந்தை ‘ என்று ஒதுங்கக் கூடாது.

27. அம்மாவிடம் காட்டும் பாசத்தை,

மனைவியிடமும் காட்ட வேண்டும். ஏனென்றால்

மனம் சலிக்காமல் அம்மாவை விட, அக்கா,

தங்கையை விட அதிகமாக கவனிக்க கூடியவள் மனைவி.

28. நேரத்திற்குச் சாப்பிட வேண்டும்.

29. சாப்பாடு வேண்டுமென்றால் முன்

கூட்டியே சொல்ல வேண்டும்.

30. எங்கு சென்றாலும் மனைவியிடம்

சொல்லி விட்டுச் சொல்ல வேண்டும்.

31. சொன்ன நேரத்திற்கு வர வேண்டும்.

32. எப்போதும் வீட்டு நினைப்பு வேண்டும்.

33. மனைவியின் பிறந்த நாள் தெரிய வேண்டும்.

34. மனைவிக்குப் பிடித்தவற்றைத் தெரிந்து வைத்திருக்க

வேண்டும்.

35. பொய், சூது, மது, மாது போன்ற தீய

பழக்கங்கள் கூடாது.

36. மனைவி வீட்டாரைக் குறை சொல்லக்

கூடாது.

37. கைச் செலவுக்கு பணம் தர வேண்டும்.

பொறுமையின் உதாரணம் - மூங்கில் செடி

பொறுமையின் உதாரணமாக மூங்கில் செடியைச் சொல்வார்கள்.



மூங்கிலைப் பயிரிட்டு தண்ணீர் ஊற்றுவார்கள். பருவங்கள் போகும். ஆனால் செடி வளரவே வளராது. ஒரு இன்ச் அளவு கூட வளராமல் அடம்பிடித்து அப்படியே இருக்கும்.  முழுசாய் நான்கு வருடங்கள் செடி அப்படியே இருக்கும். செடிக்குத் தண்ணீர் ஊற்றுபவர் பொறுமையுடன் அதை பராமரிக்க வேண்டும்.

நான்கு ஆண்டுகளாய் அவருக்கு சிலாகிக்கவோ, மகிழ்ச்சி கொண்டாடவோ எதுவுமே இருப்பதில்லை.

ஆனால் அதற்கு அடுத்த பருவத்தில் எல்லோரும் வியக்கும் வண்ணம் அந்த மூங்கில் வளரத் துவங்கும். அதுவும் எப்படி? சடசடவெனும் அசுர வளர்ச்சி. ஒரே ஆண்டில் அது எட்டிப் பிடிக்கும் உயரம் எவ்வளவு தெரியுமா? 80 அடிகள். நான்கு ஆண்டு காலமாக அமைதியாக இருந்த செடி, எப்படி ஐந்தாவது ஆண்டில் மட்டும் விஸ்வரூப வளர்ச்சியை எட்டுகிறது?

ஆராய்ந்து பார்த்தால் ஆச்சரியம் தரும் ஒரு ரகசியம் இதில் இருப்பதைப் புரிந்து கொள்ளலாம். இயற்கையின் அற்புதம், கடவுள் படைப்பின் மகத்துவம் இது.

முதல் நான்கு ஆண்டுகள் அந்த மூங்கில் வேர்களை பூமியில் நன்றாக இறக்கி மிகச் சிறந்த பிடிமானத்தை உருவாக்கிக் கொள்கிறது. ஐந்தாவது ஆண்டில்  என்பது அடி உயரமாக வளரப் போகிறேன், என்னைத் தாங்கிப் பிடிக்கும் வல்லமை என் வேர்களுக்குத் தேவை என மூங்கில் முழு மூச்சாய்த் தன்னைத் தயாரிக்கும்.

அதனால் தான் ஐந்தாவது ஆண்டில் அசுர வளர்ச்சி அடையும் போது அது தடுமாறுவதும் இல்லை, தடம் புரள்வதும் இல்லை!

பொறுமை உயரமான வெற்றிகளை உருவாக்குகிறது. அவசரப்பட்டு முளைத்து, சடசடவென வீழ்ந்து விடாமல், நமது அடித்தளத்தை வலுவாக்கிக் கொள்ள பொறுமை நம்மைத் தூண்டுகிறது.

மூச்சு உள்ளவரை முயற்சி செய்வோம். முடியாதது என்று இங்கு ஒன்றும் இல்லை!

படித்ததில் பிடித்தது

Monday, April 1, 2024

வண்டி எண் - 12083/ 12084 கோவை - மயிலாடுதுறை - கோவை

ஜன் சதாப்தி அதிவிரைவு வண்டி


காலை 7.15க்கு 

கோவையில் புறப்பட்டு..

மதியம்(13.50) 1.50க்கு 

மயிலாடுதுறை வந்தடையும்


கோவை -  (காலை)  07:15

இருகூர் -                     07:29.                 

திருப்பூர் -                     07:53.               

ஈரோடு                   - 08:38.                  

கரூர்                        - 09:28.                      

திருச்சி (முற்ப்பகல்) 10:50.                  

தஞ்சாவூர் -                  11:48.            

பாபநாசம் -                  12:11.             

கும்பகோணம் -          12:23.     

மயிலாடுதுறை -  மதியம்  13:50.   


மதியம் (14.50) 2.50 க்கு

மயிலாடுதுறையில் புறப்பட்டு

இரவு (21.15) 9.15 க்கு 

கோவைக்கு வந்தடையும்...


மயிலாடுதுறை -.மதியம் 14:50

கும்பகோணம் -.                 15:16

பாபநாசம் -                          15:29

தஞ்சாவூர் -      மாலை      15:53

திருச்சி -                               16:45

கரூர் -                                    17:18

ஈரோடு -                                18:23

திருப்பூர் -          இரவு        20:03

இருகூர் -                              20:29

கோவை -               இரவு .  21:15


தமிழ்நாட்டில் ஒடும் ஏழைகளின் சொகுசு ரயில். 


ஆனால் பொதுமக்கள் இன்னும் இந்த ரயிலைப் பற்றி போதுமான விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறார்கள். 


பொதுவாக கோவையில் இருந்து சிதம்பரம் சீர்காழி தஞ்சாவூர் மயிலாடுதுறை காரைக்கால் போன்ற பகுதிகளுக்கு செல்ல மிகக் குறைந்த அளவில் பேருந்துகள் உள்ளது.


அதிலும் மிக நீண்ட தூரம் பேருந்தில் செல்வதால் கடுமையான உடல் சோர்வு ஏற்படும். கட்டணமும் 400 ரூபாயில் இருந்து 500க்கும் மேல் வரை உள்ளது. 


ஆனால் சாமானிய மக்கள் இந்த ரயிலைப் பற்றி அறியாத காரணத்தால் இன்னும் பேருந்தில் தான் சென்று கொண்டிருக்கிறார்கள்.  


நமக்காக பல ஆண்டுகளாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த ஏழைகளின் ரதம், மொத்தம் 16 பெட்டிகளை கொண்ட ஒவ்வொரு பெட்டியிலும் சுமார் 100 பேர் பயணிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. 


மேலும் இது வெறும் ஆறு மணி நேரத்தில் மயிலாடுதுறை சென்று அடைந்து விடும். கோவையில் இருந்து புறப்படும் அதிவேக ரயில் களில் இது தான் முதன்மையானது.


கோவையில் இருந்து திருச்சிக்கு பணி நிமித்தமாக செல்பவர்கள் இந்த ரயிலை தான் அதிகம் பயன்படுத்துகிறார்கள் காரணம் வெறும் நான்கு மணி நேரத்தில் திருச்சியை அடைந்துவிடும்.


சொகுசான இருக்கைகள். கழிப்பறை வசதி நேரமும் மின் விசிறிகள் மற்றும் தென்றல் காற்று மூலம் குளு குளு பயணத்தை அனுபவிக்கலாம்.


மேலும் நியாயமான விலையில் தண்ணீர் பாட்டில் இருந்து உணவு பொருட்கள் வரை அனைத்தும் ரயில்வே மூலம் உள்ளேயே கிடைக்கிறது. 


இவ்வளவு வசதிகளும் வெறும் 170 ரூபாய் மட்டுமே. அட ஆமாங்க இந்த ரயிலில் கட்டணம் வெறும் 170 ரூபாய் மட்டும்தான். 


முழுவதும் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளை கொண்டதால் மிகவும் தூய்மையாக இருக்கும். 


இந்த ரயிலில் பயணிக்க முன்கூட்டியே நாம் டிக்கெட் எடுத்துக் கொள்ளலாம்


கடைசி நேரத்தில் பயணிக்கக்கூடியவர்களுக்கும் ரயில் புறப்படும் 30 நிமிடங்களுக்கு முன்பு வரை டிக்கெட்டுகள் வழங்கப்படுகிறது. 


மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் மதியம் 2 மணி வரை இந்த ரயிலுக்கான டிக்கெட்டுகள் கிடைக்கிறது.

சிந்தனை துளிகள் - 01.04.2024 (திங்கட்கிழமை)

உண்மைகள் சில நேரங்களில் தொலைந்து தான் போகுமே தவிர ...

ஒரு போதும் தோற்றுப் போகாது.!

உண்மையான உறவு என்பது,

நமக்காக விட்டுக்கொடுக்கும்.

ஆனால்,நம்மை அடுத்தவரிடம் எதற்காகவும் விட்டுக் கொடுக்காது.!!

குதிரை எவ்வளவு சிறப்பாக

வண்டியை இழுத்தாலும் அதற்கும்

சாட்டை அடி உண்டு...

அதே போல்

எத்தனை சிறந்த மனிதனாக

நீ இருந்தாலும் உனக்கும்

விமர்சனம் உண்டு.!!!


பச்சை வாழைப்பழத்தை விடாதீங்க

சர்க்கரை நோயாளி பச்சை வாழைப்பழத்தை சாப்பிடலாமா? இது பெஸ்ட் வாழைப்பழம்*

பச்சை வாழைப்பழத்தில் உள்ள நன்மைகள் என்னென்ன தெரியுமா? அப்படியே அசந்துடுவீங்க. அந்த அளவுக்கு மருத்துவ நன்மைகளை தரக்கூடியது.

வாழைப்பழங்களில் 60 விழுக்காடு நீர்ச்சத்து உள்ளதால் எளிதில் ஜீரணம் ஆகக்கூடிய உணவாக இருக்கிறது.. இதைத்தவிர, கார்போஹைட்ரேட், புரதச்சத்து, புரதம், இரும்புச்சத்து, பொட்டாசியம், சோடியம், பாஸ்பரஸ் இப்படி எல்லா சத்துக்களும் வாழைப்பழத்தில் இருக்கின்றன..

1 கிராம் பச்சை வாழைப்பழத்தில் 422 மில்லிகிராம் பொட்டாசியம் உள்ளது. சுக்ரோஸ், பஃரக்டோஸ், குளுக்கோஸ் போன்ற சர்க்கரை சத்துக்களும் இதில் உள்ளதால், உடல் சுறுசுறுப்படையும்.


*ரஸ்தாளி:* 

எல்லா வகை வாழைப்பழங்களை போலவே ரஸ்தாளியிலும் சத்துக்கள் உள்ளன.. கைக்குழந்தைகளைவிட, வளரும் குழந்தைகளுக்கு இந்த பழம் கட்டாயம் தர வேண்டும். ரஸ்தாளிபழம் சாப்பிட்டவுடன் வயிறு நிரம்பியது போன்ற உணர்வை தரும் என்றாலும், சாப்பாடு சாப்பிட்டதுமே இதை சாப்பிடக்கூடாதாம்.. ஏனென்றால், மந்த தன்மையை தந்துவிடுமாம்.


அதனால், வளரும் குழந்தைகளுக்கு அரை ரஸ்தாளியை தேனில் கலந்து கொடுத்துவந்தால், குழந்தைகளின் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது என்கிறார்கள். ஆனால், ரஸ்தாளியைவிட கூடுதல் மருத்துவ குணம் நிறைந்தவை பச்சை வாழைப்பழம்.


*பச்சை வாழைப்பழம்* பச்சை வாழைப்பழம், குடல் புண்களை ஆற்றி, அல்சர் போன்ற தொந்தரவுகளை அண்டவிடாமல் செய்கிறது. வாழைப்பழத்தை சாப்பிட்டால், உயர் ரத்த அழுத்த நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.. இது ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும்.. வாழைப்பழத்திலுள்ள பொட்டாசியம் ரத்த நாளங்களின் சுவர்களை ஆரோக்கியமாக வைக்கிறது...


அதேபோல், டயட்டில் இருப்பவர்கள், அல்லது உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள், இந்த பச்சை வாழைப்பழத்தை தாராளமாக சாப்பிடலாம் என்கிறார்கள்.. காரணம், இதில் ஏராளமான ஆற்றல்கள் இருக்கின்றன..


*பொட்டாசியம்:* 

பற்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை சரிசெய்யவும் பச்சை வாழைப்பழமே முக்கிய உதவியாக இருக்கிறது.. அதனால்தான், குழந்தைகளுக்கும் பச்சை வாழைப்பழத்தை வாரத்திற்கு ஒருமுறையாவது தர வேண்டும் என்கிறார்கள்.


ஸ்டார்ச் சத்து அதிகமாக உள்ளதால், ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி, சர்க்கரையை கட்டுக்குள் கொண்டு வருகிறது.. எனவே, மருத்துவர்களின் ஆலோசனையை சர்க்கரை நோயாளிகளும் குறைந்த அளவு சாப்பிடலாம்.


*இதய ஆரோக்கியம்:* 

இதய ஆரோக்கியத்திற்கு பச்சை வாழைப்பழத்தை விட பெஸ்ட் வேறில்லை என்கிறார்கள்... அதிக அளவு பொட்டாசியம் சத்து உள்ளதால், இதய நோய்கள் வராமல் தடுக்கிறது.. வைட்டமின் B6 நிரம்பியிருப்பதால், ஆக்ஸிஜனேற்றத்திற்கு பேருதவி புரிகிறது..


அதிக கொலஸ்ட்ரால் இருப்பவர்களுக்கு மிகச்சிறந்த மருந்து இந்த பச்சை வாழைப்பழம்.. ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால் மற்றும் ட்ரைகிளிசரைடுகளின் அளவைக் குறைக்கிறது. ரத்த நாளங்களில் படிந்திருக்கும் கொழுப்பு மூலக்கூறுகளை உருக்கி வெளியேற்ற உதவுகிறது. அதனால், கொலஸ்ட்ரால் அதிகம் உள்ளவர்கள், பச்சை வாழைப்பழத்தை வேகவைத்து சாப்பிட்டால் நல்லது.


*கொலஸ்ட்ரால்:* அதாவது, பச்சை வாழைப்பழத்தை தண்ணீரில் போட்டு கொதிக்கவைத்து, அதில் உப்பு, மிளகாய், கொத்தமல்லி தழை, வெங்காயம் சேர்த்து வதக்கி சாப்பிட்டு வந்தால், உடலில் அதிகரிக்கும் கொலஸ்ட்ராலை குறைக்க பேருதவி புரியுமாம்.. எனவே, பச்சைவாழைப்பழம் குறித்த சந்தேகங்கள் எதுவாக இருந்தாலும், மருத்துவர்களை அணுகி ஆலோசனையை பெற்று பலன்பெறலாம்.

கை கால் எரிவு நோய் தீர

தே.பொருட்கள்..

திரிகடுகு    1/2 பலம்

(சுக்கு, மிளகு, திப்பிலி)

திரிபலை    1/2 பலம்

(கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய்)

சீரகம்       1/2 பலம்

பறங்கிப் பட்டை  2 பலம்

இவைகளை நன்கு இடித்துச் சூரணமாக்கி வைத்துக் கொள்ளவும். 

வெள்ளைக் குங்கிலியம் 5 பலத்தை எருக்கு இலைக்குள் வைத்து, பத்து வறட்டியில் புடம் போட்டு எடுத்து வைத்துக் கொண்டு, பிறகு வேப்பம் பட்டைக் குடிநீரில் துலாயந்திரமாகக் கட்டி சுத்தி செய்து, அதன் பிற எருமை வெண்ணெயில் போட்டுக் காய்ச்சி வெள்ளைத் துணியில் தோய்த்துப் பிழிந்து முன்சொன்ன சூரணத்துடன் இதையும் சூரணித்துக் கலந்து சாப்பிட வாதப்பிடிப்பு, தெறிப்பு, குடைச்சல், கை கால் எரிவு முதலியன தீரும்.

செய்தித் துளிகள் - 01.04.2024 (திங்கட்கிழமை)


🍒🍒முட்டாள்கள் தினத்துக்கான ஆணிவேர் எங்கிருந்து தொடங்கியது என இப்போது வரை சரியாக தெரியவில்லை என்றாலும்,இந்த நாளில் ஒருவருக்கொருவர் ஏமாற்றி கொள்வது என்பது உலக முழுவதும் பொதுவாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது...

👉ஏப்ரல் 1ஆம் தேதி உலகம் முழுவதும் ஆண்டுதோறும் முட்டாள்கள் தினம் என கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் மக்கள் ஒருவருக்கொருவர் பிராங்குகள் செய்து ஏமாற்றிக்கொள்வதும், ஜோக்குகளை பரிமாறுவதும் நெருக்கமானவர்கள் அல்லது நண்பர்களை குறுப்புத்தனமாக கவிழ்க்கும் ஐடியாக்கள் செயல்படுத்தும் இருந்து வருகிறார்கள்...

உலக முட்டாள்கள் தினம் இன்று.!

🍒🍒இதுவரை பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ள இரண்டு லட்சத்து 90 ஆயிரம் மாணவர்களையும் எமிஸ் இல் பதிவு செய்ய இயக்குநர் உத்தரவு.

🍒🍒ரம்ஜான் பெருநாளை முன்னிட்டு அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகளில் ஏப்ரல் 10 மற்றும் 12ம் தேதிகளில் நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகள், ஏப்ரல் 24 மற்றும் 25ம் தேதிகளில் நடத்தப்படும் 

தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்ககம்.

🍒🍒பள்ளிகளில் ஆண்டு இறுதித்தேர்வு தேதி மாற்றப்பட்டாலும் கோடை விடுமுறையில் மாற்றம் இல்லை என பள்ளிக்கல்வித்துறை விளக்கம்.

(நாளிதழ் செய்தி)

🍒🍒மற்ற மாநிலங்களில் உள்ளதைப் போலவே தமிழ்நாட்டிலும் TNTET தேர்வுக்கான தேர்ச்சி மதிப்பெண்கள் குறைக்கப்பட வேண்டும் - ஆசிரியர்கள் கோரிக்கை

🍒🍒தமிழ்நாட்டில் குழந்தைகளை அதிகம் தாக்கும் புட்டாலம்மை பாதிப்பு..!! மருத்துவர்கள் எச்சரிக்கை.

🍒🍒பத்தாம் வகுப்பு ஆங்கில வினாத்தாளில் பிழைகள்:கருணை மதிப்பெண் வழங்கக் கோரிக்கை.

🍒🍒ஆசிரியர் பயிற்றுநர் பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு - விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 20.4.2024.                                                             🍒🍒ராணுவ தொழில்நுட்ப கல்லூரியில் இளநிலை, முதுநிலை தொழில்நுட்ப படிப்பு சேர்க்கை அறிவிப்பு வெளியீடு.

🍒🍒தேர்தல் பத்திரங்கள் மூலம் ஒளிவு மறைவின்றி கட்சிகளுக்கு நிதி வழங்கப்படுகிறது.

2014 க்கு முன்பு கணக்கு காட்ட முடியாத எவ்வளவோ பணம் அரசியல் கட்சிகளுக்கு சென்றது.

தற்போது இதை நாங்கள் மாற்றி இருக்கிறோம்

-பிரதமர் மோடி                                                🍒🍒புதுச்சேரியில் தேர்தல் பிரசாரத்தின் போது மயங்கி விழுந்தார் காங். வேட்பாளர் வைத்திலிங்கம்.

ஜீவா நகர் பகுதியில், திறந்தவெளி ஜீப்பில் நின்று பிரசாரம் செய்த போது மயக்கம்

பிரசார வாகனத்தில் இருந்தவர்கள் உடனடியாக மீட்டு, அருகே இருந்த வீட்டில் ஓய்வெடுக்க வைத்தனர்

15 நிமிட ஓய்வுக்கு பின் மீண்டும் பிரசாரத்தை தொடங்கினார் வைத்திலிங்கம்.

🍒🍒இந்திய கூட்டணி கட்சி தலைவர்கள் போராட்டம்:-

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைதை கண்டித்து டெல்லியில் நேற்று போராட்டம் நடைபெற்றது.

👉டெல்லி ராம்லீலா மைதானத்தில் இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி,சரத் பவார், உத்தவ் தாக்கரே, அகிலேஷ் யாதவ், ஃபரூக் அப்துல்லா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

திருச்சி சிவா, திருமாவளவன் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்றனர்.

🍒🍒மதவாதத்தைச் சுட்டெரிக்கும் சின்னம் தீப்பெட்டி

 திருச்சியின் வெற்றி சின்னம் தீப்பெட்டி” 

மதிமுக வேட்பாளர் துரை வைகோ பேட்டி

🍒🍒கேரளத்தில் அட்டிங்கல் தொகுதியில் போட்டியிடும் மத்திய அமைச்சர்  வீ.முரளிதரனுக்கு டெபாசிட் தொகை கட்டிய மாணவர்கள்.

2022 ஆம் வருடம் போரில் ஈடுபட்ட உக்ரைன் நாட்டிலிருந்து பாதுகாப்பாக பாரதம் அழைத்து வரப்பட்ட மாணவர்கள் ஒன்றிணைந்து தங்கள் நன்றியினை தெரிவிக்கும் விதமாக வீ.முரளிதரனுக்கு டெப்பாசிட் தொகையை காட்டியுள்ளனர்.

🍒🍒அடுத்த வாரம் தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி!

செல்வபெருந்தகை

🍒🍒அயோத்தி ராமரை வெப்பத்திலிருந்து காக்க பருத்தி ஆடை அணிவிப்பு.

கோடைக் காலம் தொடங்கியதால் அயோத்தி ராமர் சிலைக்கு பருத்தியால் ஆன உடை அணிவிப்பு

கோடைக் காலம் தொடங்கி வெப்பம் அதிகரிப்பதால், அயோத்தி குழந்தை ராமருக்கு பருத்தியால் ஆன உடை அணிவிக்கப்படுவதாக என கோயில் நிர்வாகம் அறிவிப்பு.

🍒🍒உயிர் இருக்கும்போதுதான் உயிரைப் பாதுகாத்துக்கொள்ள முடியும் அதே போல.

சுதந்திரம் இருக்கும்போதுதான் சுதந்திரத்தைப் பாதுகாத்துக்கொள்ள முடியும்.

பாஜக ஆட்சியில் இருப்பது, நமது சுதந்திரத்துக்கு ஆபத்து..

சிவகங்கையில் காங்கிரஸ் எம்.பி. ப.சிதம்பரம்  பேச்சு

🍒🍒ஈரோடு கணேசமூர்த்தி குடும்பத்தினருக்கு முதல்வர் ஆறுதல்

மறைந்த ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தியின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆறுதல்

கணேசமூர்த்தியின் உருவப்படத்திற்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தினார் முதல்வர்.

🍒🍒ஓ.பி.எஸ் சுயேட்சை சின்னத்தில் போட்டியிடவில்லை.

சுயமரியாதை சின்னத்தில் போட்டியிடுகிறார்

தேனி எம்.பி ரவீந்தரநாத்

🍒🍒எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தமிழகத்தை மறந்து விடுகின்றனர்...

தமிழகத்தை மாற்றாந்தாய் பிள்ளை போல் பார்க்கின்றனர்...

நாம் தனித்து நிற்கின்றோம்.. சொந்த காலில் நின்கின்றோம்...

அதனால் தான் பாஜகவை விட்டு வெளியே வந்து தன்னந்தனியாக போட்டியிடுகின்றோம் 

 அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடலூரில் பேச்சு

🍒🍒"மற்ற மாநிலங்களுக்கு மட்டுமல்ல, நாட்டுக்கே முன்னோடியாக திகழ்கிறது தமிழ்நாடு

ஒரு மாநில அரசு எப்படிச் செயல்பட வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டு நாம்தான். மத்திய அரசு எப்படிச் செயல்படக்கூடாது என்பதற்கு பாஜகதான் எடுத்துக்காட்டு

மற்ற மாநிலங்களுக்கு மட்டுமல்ல, நாட்டுக்கே முன்னோடியாகத் திகழ்கிறது தமிழ்நாடு"

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

🍒🍒கரூர் தொகுதியில் அதிகபட்சமாக ஒரு வாக்குச்சாவடியில் 4 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும்: தேர்தல் அதிகாரி தகவல்.

🍒🍒மக்களவைத் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டது

ஐந்து லட்சம் அடையாள அட்டை அனுப்பும் பணி தொடங்கியது

தமிழகத்தில் 6 கோடியே 23 லட்சத்து 33 ஆயிரத்து 925 வாக்காளர்கள் உள்ளனர்

இறுதி வாக்காளர் பட்டியலை விட 4,43,577 வாக்காளர்கள் அதிகரிப்பு

🍒🍒பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஒருநாள் மற்றும் டி20 கேப்டனாக பாபர் அஸாம் நியமனம்.

 கடந்த ஆண்டு உலகக் கோப்பைக்கு பிறகு பாக். அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகினார்.

🍒🍒அறிமுகப் போட்டியில் களமிறங்கும் வீரர்களின் பந்துவீச்சு பதற்றத்தின் காரணமாக பெரிதளவில் பாதிக்கப்படுகிறது என பலரும் சொல்லி கேட்டிருக்கிறேன். அதனால், பதற்றமடையாமல் பந்துவீச வேண்டும் என்பதில்  கவனமாக இருந்தேன். முதலில், அவ்வப்போது ஸ்லோயர் பந்துகளையும் உபயோகப்படுத்துவதுதான் திட்டமாக இருந்தது. ஆனால், கேப்டன் உன்னிடம் இருக்கும் வேகத்தை பயன்படுத்து எனக் கூறினார். 

-ஆட்டநாயகன் விருது வென்ற மயங்க் யாதவ்

🍒🍒பாஜக மூத்த தலைவர் அத்வானிக்கு அறிவிக்கப்பட்ட பாரத ரத்னா விருதை அவரது இல்லத்திற்கே சென்று குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வழங்கினார்.

🍒🍒வரும் தேர்தலில் போட்டியிட விடாமல் என்னை தடுக்க பா.ஜ.க. சதி செய்கிறது: ராகுல்காந்தி பேச்சு

🍒🍒தமிழ்நாட்டில் பாஜகவை மக்களுக்கு அடையாளம் காட்டியதே அதிமுக தான்: எடப்பாடி பழனிசாமி.                       🍒🍒கொடைக்கானலில் டால்பின் நோஸ் மீது நடந்து சென்றபோது 100 அடி பள்ளத்தில் தவறி விழுந்த இளைஞர் மீட்பு.

இறைவனிடம் கையேந்துங்கள்

இறைவனிடம் கையேந்துங்கள் அவன்

இல்லையென்று சொல்லுவதில்லை

பொறுமையுடன் கேட்டுப்பாருங்கள் அவன்

பொக்கிஷத்தை மூடுவதில்லை

இல்லையென்று சொல்லும் மனம் இல்லாதவன்

ஈடு இணையில்லாத கருணையுள்ளவன்

இன்னல்பட்டு எழும் குரலைக் கேட்கின்றவன்

எண்ணங்களை இதயங்களைப் பார்க்கின்றவன்

(இறைவனிடம்)

ஆசையுடன் கேட்பவர்க்கு அள்ளித்தருபவன்

அல்லல் துன்பம் துயரங்களைக் கிள்ளியெறிபவன்

பாசத்தோடு யாவரையும் பார்க்கின்றவன்

பாவங்களைப் பார்வையினால் மாய்க்கின்றவன்

அல்லல்படும் மாந்தர்களே அயராதீர்கள்

அல்லாவின் பேரருளை நம்பி நில்லுங்கள்

அவனிடத்தில் குறையனைத்தும் சொல்லிக்காட்டுங்கள்

அன்பு நோக்குத் தருகவென்று அழுது கேளுங்கள்

(இறைவனிடம்)

தேடும் நேயர் நெஞ்சங்களில் குடியிருப்பவன்

தேடாத மனிதருக்கும் உணவளிப்பவன்

வாடும் இதயம் மலர்வதற்கு வழிவகுப்பவன்

வாஞ்சையோடு யாவருக்கும் துணை நிற்பவன்

அலைமுழங்கும் கடல்படைத்து அழகுபார்ப்பவன்

அலையின் மீதும் மலையின் மீதும் ஆட்சி செய்பவன்

தலைவணங்கிக் கேட்பவர்க்குத் தந்து மகிழ்பவன்

தரணியெங்கும் நிறைந்து நிற்கும் மகா வல்லவன்

இறைவனிடம் கையேந்துங்கள் அவன்

இல்லையென்று சொல்லுவதில்லை

பொறுமையுடன் கேட்டுப்பாருங்கள் அவன்

பொக்கிஷத்தை மூடுவதில்லை

நன்றி.

ஆமணக்கு (அ) முத்து கொட்டை - தினம் ஒரு மூலிகை

 *ஆமணக்கு (அ) முத்து கொட்டை.* இதன் இலை எண்ணெய் மருத்துவ பயன் இலை வீக்கம் கட்டி ஆகியவற்றை கரைக்கக் கூடியது ஆமணக்கு நெய் மலம் மிளக்கும் தாது வெப்பு அகற்றும் இலையை நெய் தடவி அனலில் வாட்டி மார்பகத்தில் வைத்து கட்டி வர பால் சுரப்பு மிகும் இலையை பொடியாய் அறிந்து ஆமணக்கு நெய் விட்டு வதக்கி ஒத்தடம் கொடுத்து கட்டி வர மூலக்கடுப்பு கீல்வாதம் வாத வீக்கம் ஆகியவை தீரும் இலையுடன் சம அளவு கீழாநெல்லி சேர்த்து மை போல் அரைத்து 30 கிராம் காலை மட்டும் மூன்று நாள் கொடுத்து நான்காம் நாள் பேதிக்கு சாப்பிட காமாலை குணமாகும் கண் வலியின் பொழுது கண்ணில் மண் தூசி விழுந்தால் ஓரிரு துளி ஆமணக்கு எண்ணெய் விட வலி நீங்கும் 30 மில்லி ஆமணக்கு எண்ணெய்யுடன் சிறிது பசும் பால் இஞ்சி சாறு கலந்து கொடுக்க நான்கு ஐந்து முறை பேதியாகும் பசியின்மை வயிற்று வலி சிறுநீர் பாதை அழற்சி வெட்டை நீர்க்கடுப்பு மாதவிடாய் கோளாறுகள் இரைப்பிருமல் பாண்டு ஆறாத கட்டிகள் தொண்டை அழற்சி மூட்டு வலி ஆகியவை தீரும் தோல் நீக்கிய விதையை மை போல் அரைத்து பூசி வர ஆறாத புண்கள் ஆறும் கட்டிகள் பழுத்து உடையும் மூட்டு வலி கணு சூலை ஆகியவற்றில் தோன்றும் வீக்கம் குறையும்.

நமது உள்ளங்கையில் அடங்கி இருக்கும் ரகசியம்!

கொடுக்கப்பட்ட சக்திகளும். வேண்டி பெறப்பட்ட சக்திகளும். பூமியில் தோன்றுகிற அனைத்தும் இந்த பூமிக்கே சொந்தம் . 


அன்னை பூமாதேவி அனைத்தையும் ஆளக்கூடியவர், தாங்கக்கூடியவர், எந்த சக்தியையும் இழக்கக்கூடியவரும் இவரே . 


அழியும் எதுவும் மண்ணுக்கே போகும், மண்ணில் விளைந்ததை உண்டு வாழும் மனிதனாயினும் மண்ணுக்கே சொந்தம், 


ஆத்மா என்னும் நாராயணன் உள்ள வரை பூமாதேவி மனிதனை தின்னாமல் விட்டு வைப்பார் , (ஆத்மா பிரிந்த பின் உடல் எரிந்தாலும் சாம்பல் மண்ணில்தான் புதைய வேண்டும்) 


அதுசரி அன்னை பூமாதேவியை பற்றி இங்கு கூற காரணம் என்ன என்று கேட்கத்  தோன்றும் அல்லவா அறியுங்கள் - 


அன்னை பூமாதேவி சத்தியத்திற்கு கட்டுப்பட்டவள் எதையும் நாம் கொடுக்காமல் எடுக்கமாட்டாள், 


வாண சக்தியை மட்டும் நாமறியாமலேயே எடுத்துக்கொள்வார், (அதனால் தான் பிரபஞ்ச ஆற்றலை பெற்றவர்கள் பாத அணி இல்லாமல் நடக்க மாட்டார்கள்) 


அன்னை பூமாதேவிக்கு நாமாகக் கொடுக்கக்கூடியதாக ஒருமுறை உண்டு அது நம் இரு உள்ளங்கையையும் நன்கு பதியும்படி பூமியில் வைத்து அழுத்தினாலே நம்மிடம் உள்ள சக்திகளை எடுத்துக் கொள்வார், 


அது பாவ சக்தியானாலும் சரி. தர்ம சக்தி ஆனாலம் சரி, ஞான சக்தி ஆனாலும் சரி எடுத்துக் கொள்வார்,


 ஒட்டு மொத்தமாக எடுக்காமல் கொஞ்ச கொஞ்சமாக தர்மத்திற்கு கட்டுப்பட்டவர் போல் எடுத்துக்கொள்வார்,


 பாவத்தினால் அதிகமாக சிரமப்படுவர்கள் ஆலயத்தில் இரு உள்ளங்கையையும் வைத்து தன் பாவத்தை இறக்கி கொள்ள ஒரு கல் பூமியோடு பதித்து வைத்திருப்பார்கள்,


 அதற்கு பலிபீடம் என்று பெயர், (இன்றைக்கு இந்த பலிபீடத்திற்கு ஏதேதோ விளக்கம் கூறுகிறார்கள், நம் கர்ம வினை பாவத்தையெல்லாம் பலி செய்யும் இடமாகும்,


 மனதால் விடமுடியாத பாவங்களை தன் உள்ளங்கையால் விடமுடியும், மனதால் தாங்க முடியாத துன்பத்தை தன் உள்ளங்கையால் பூமிக்கு கொடுத்து ஆறுதல் தேட முடியும்,


 எனவே ஆலயங்களில் இந்தபலிபீடம் முக்கியம் வாய்ந்ததாகும்,


 அதே போல் சாப்பிடும்போது நம் கையை குறிப்பாக உள்ளங்கையை பூமியில் ஊன்றி சாப்பிட்டால் நம் சத்து முழுக்க பூமியில் உறிஞ்சப்பட்டு உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து விடும், 


அதே போல் சாமி கும்பிட்டபின் விழுந்து கும்பிட்டபின் இரு உள்ளங்கையையும் பூமியில் ஊன்றி எழுந்தால் அந்த ஆலயத்தில் பெற்ற சக்திகள் அனைத்து பூமியால் உறிஞ்சப்பட்டு வெறும் ஆளாய் வீட்டிற்கு வருவோம், 


( விழுந்து கும்பிடும்போதும். இரு உள்ளங்கையும் ஒன்றோடு ஒன்று ஒட்டினார்போல் கை வைத்து வணங்கி பின் கால் பலத்தால் எழலாம் 


அல்லது கை விரல்களின் பின்முட்டியால் ஊனி எழலாம்) 


பலரும் பல புண்ணிய ஆலயம் சென்று வந்தாலும் பலனில்லாமல் போவதற்கு காரணம் அவர்கள் உணர்ச்சி வசப்பட்டு விழுந்து வணங்கி எழும்போது உள்ளங்கை ஊனி சக்தியை பூமிக்கு தாரை வார்த்து கொடுப்பதே அதற்கு காரணமாகும், 


ஆலயம் சென்றவுடன் பலிபீடத்தில் உள்ளங்கை வைத்து பாவத்தை இறக்கிவிட்டால் மீண்டும் ஆலயம் விட்டு திரும்பும்போது எங்கும் கை வைக்கக்கூடாது, உள்ளங்கையில் அவ்வளவு சக்தி நிறைந்துள்ளது .


 மங்களவன் என்னும் செவ்வாயின் இடம் இந்த உள்ளங்கை தான் . அதில் எதை செய்தாலும் பெருகும், 


ஆலயத்தில் பிரசாதம். தீர்த்தம். விபூதி குங்குமம் அனைத்தும் உள்ளங்கையால் வாங்கியே சாப்பிடுகிறோம், ( நுனி விரலாம் சாப்பிடமாட்டோம் அது தவறு ) 


விபூதியாய் இருந்தாலும் விரலால் எடுத்து இட்டுக் கொள்ளாமல் அப்படியே எடுத்து பூசிக் கொள்ளும் பழக்கம் அப்போதைக்கு உண்டு .


இன்றைய காலத்தில் அலங்கார முகத்தில் விபூதி பூசினால் அழகு போய்விடும், விரலால் விபூதி வைத்து உள்ளங்கை சக்தியை பெற தவறுகின்றனர், 


தீர்த்தம் மட்டும் தான் உள்ளங்கையால் சாப்பிடுகிறார்கள், ஆக உள்ளங்கை மூலம் அன்னை பூமாதேவி சக்தியை உறிஞ்சி விடுவாள், அநாவசியமாக சத்தியம் பூமியில் அடித்து செய்யக்கூடாது என்பார்கள்,


 அதுவும் இதற்குத்தான், இந்த பூமிக்கும் நமக்கும் சம்மந்தப்பட்ட உடல் பாகம் நம்முடைய மோதிர விரல்தான் (மற்ற பாகங்கள் உள்ளே மறைந்துள்ளன),


 நம் முன்னோர்கள் ஒரு உபாயத்தை கண்டுணர்ந்தனர், மோதிர விரலில் ஒரு கட்டு இருந்தால் நம் உள்ளங்கை பூமியில் பட்டாலும் சக்தி விரையமாகாது என்பதை கண்டுணர்ந்தனர், 


அதன்படி மோதிரம் அணியும் முறை வந்தது . இந்த விரலில் கட்டு இல்லாமல் ஆகாய சக்திக்கு நாம் எதையும் கொடுக்க முடியாது . 


அதனால் தான் நம் பித்ருக்களுக்கு புண்ணியதானம் கொடுக்கும்போது தர்பையால் பவித்ரம் (மோதிரம்) மோதிர விரலில் அணியும் முறையும் கூடுதலாக கையாளப்பட்டது . 


கை மணிக்கட்டில் கட்டுப் போட்டாலும் பூமி நம் சக்தியை உறிஞ்சாது . பூமி நம் சக்தியை உறிஞ்சுவதால் பாவம் மட்டும் போனால் பரவாயில்லை, புண்ணியமும் சேர்ந்து போய்விடும்,


 இதுதான் பிரச்சனை, எனவே தான் பெரியவர்கள் மோதிர விரலில் ஒரு வளையமாவது இருக்க வேண்டும் என்றார்கள், சக்திகளை தூண்டக்கூடியதும் வெளியேற விடாமல் தடுக்கக்


கூடியதும் மோதிர விரலே . அது நிலம் என்றும் சூரியன் என்றும் பெயர் உண்டு,


பெண்களுக்கும் ஆண்களுக்கும் மெட்டி கால் மோதிர விரலில் அணியும் பழக்கமும் இந்த கை மோதிர விரல் பழக்கத்தால் வந்ததே, எனினும் உள்ளங்கால் பூமியில் பதிவதால் சக்தி ஆன்மிக சக்தி பெற்றவருக்குத்தான் உறிஞ்சும்,


 சாமான்யருக்கு உறிஞ்சாது . அப்படி இருந்தும் ஏதாவது ஒரு காலில் கருப்பு கயிறு. கால் மணிக்கட்டில் கட்டிக்கொள்வார்கள், 


சாமான்யர்கள் மெட்டி போட்டுக் கொள்வார்கள் அல்லது இருக்கப்பட்டவர்கள் கையில் மோதிரம் அணிந்து கொள்வார்கள், 


இப்பழக்கமெல்லாம் இன்று நாகரிக விஷயமாக பலமாற்றங்கள் உண்டானாலும் பூமி தன் சக்தியை குறிப்பாக சுப சக்தியை உறிஞ்சாமல் பாதுகாக்க பயன்கொள்ளப்பட்டதே ஆகும் .


இங்கு ஒரு விஷயத்தை கவனிக்க ஆலயத்தில் பலி பீடம் மூலம் பாவத்தை போக்க எத்தனித்தாலும். சத்தியம் செய்வதானாலும். மாந்திரிக சக்தி வேலை செய்ய வேண்டுமானாலும் கை. கால். மணிக்கட்டுகளில் எந்த மோதிரமும் இருக்கக் கூடாது 


 இல்லையேல் பலன் அளிக்காது , பெண்கள் மெட்டியை கழட்ட அஞ்சுவார்கள், அதனால் அக்காலத்தில் புது மெட்டி மாற்றும் தருவாயில் பலிபீட பிராத்தனை செய்து வணங்கி பின் புது மெட்டியை அணிந்து கொள்வார்கள், 


யாவரும் இந்த முறையை கடைபிடிக்கலாம், கைகளில் சூரிய விரலில் மோதிரம் இருந்தால் எதிரியின் மாந்திரிக சக்தி கூட அவ்வளவு எளிதில் வேலை செய்யாது , 


மணிக்கட்டில் செம்பினால் ஆன ஒரு வளையம் அணிந்திருந்தால் ஒருவர் சாபம் கூட எளிதில் அண்டாது


 இது ஆண்களுக்கு பொருந்தும், பெண்களுக்கு காலில் தண்டை அல்லது கொலுசு அணிவதால் தடுக்கலாம், அக்காலத்தில் ஒரு காலிலாவது வசதிக்கேற்றவாறு தண்டை அணியும் பழக்கம் இருந்தது ,


 இந்த பழம் பெரும் தகவலை உங்களுக்கு கூற காரணம் இந்த முறையில் பலர் தான் பெற்ற சுப சக்திகளை விரையம் செய்கின்றனர், அதற்காகவே இந்த எச்சரிக்கை .


உள்ளங்கை ஒரு வசிய பீடம் போன்றது , ஒருவரோடு ஒருவர் கை குலுக்கினால் கூட சக்தி பரிமாற்றம் உண்டாகும், 


கோபமாக கை குலுக்கினால் வக்ர குணம் உண்டாகும், அன்பாய் குலுக்கினால் நட்பு வசியமாகும், 


அதே போல் தூங்கும்போது கன்னத்திலோ. தலையிலோ உள்ளங்கை வைத்தால் மூதேவி நம்மிடம் குடிகொள்ளும், 


அதுவே யோசனை செய்யும்போது உள்ளங்கை தலையில் வைத்தால் ஞானம் பெருகும், 


சூரியனுக்கு நேராக நம் உள்ளங்கையை காண்பித்து பின் உச்சந்தலையில் வைத்தால் ஆற்றல் சக்தி உண்டாகும்,


 உள்ளங்கையில் தண்ணீர் ஊற்றி ஆசீர்வதித்தாலும் பலிக்கும், சாபம் கொடுத்தாலும் பலிக்கும்,


 ஏன் இந்த உள்ளங்கைக்கு மட்டும் இத்தனை சக்தியெனின் முப்பெரும் தேவியரும் சங்கமிக்கும் இடம் இவ்விடமே,


 இந்த மூவருக்கும் பூமாதேவியுடன் இணையும்போது உடல் சக்தி உறிஞ்சப்படும் இதன் மூலமாகவும் சுப சக்தியான மகாலட்சுமியை இழக்கக்கூடும் கவனம் .


 புராணத்தில் கூட ஸ்ரீ மகாவிஷ்ணு மோதிரத்தை பூமியில் வைத்து வைகையை உற்பத்தி செய்ததாக புராணம் கூறுகிறது,


 ஏனெனில் மோதிர விரல் பூமியுடன் தொடர்பு உள்ளதை சுட்டிக்காட்டுகிறது, 


உள்ளங்கை யார் தலையில் படுகிறதோ அது தீட்சையாகும், அதனால்தான் அநாவசியமாக யார் தலையிலும் கை வைக்கவோ. விடவோ கூடாது என்பார்கள்,


 உள்ளங்கையில் விட்டு குடிக்கும் நீர் கூட நோயை போக்கும் சக்தியை கொடுக்கும் மந்திர நீர் ஆகும், 


தர்மம் கூட உள்ளங்கையில் இட்டால் கொடுத்தவரை விட வாங்கியவருக்கு சக்தி போய்விடும், 


அதனால் தான் பாத்திரத்தில் தான் பிச்சை இட வேண்டும், கையில் தரக்கூடாது என்பார்கள், 


ஒரு தாயின் கையால் நம் உள்ளங்கையால் அன்னம் வாங்கி சாப்பிட்டாலோ. பணம் பெற்றாலோ சக்தி பன்மடங்காக பெருகும் என்பதால் தாயின் கையால் சாப்பிடுவார்கள், 


காரணம்  சக்தி கூடும் என்பதால் தான் (இந்த ரகசியத்தை அறிந்த காலத்தில் வெறும் கையாலே அன்னமிடும் பழக்கம் இருந்தது,


 அன்னவெட்டியெல்லாம் அன்னியருக்குத்தான், இன்று மகத்துவம் புரியாமல் எல்லாமே ஸ்பூனாகி போனது),


 எவர் கையால் நாம் உணவு வாங்கி சாப்பிட்டாலும் நாம் அவருக்கு துரோகம் செய்தால் நாம் அழிந்து போவோம்,


 காரணம் உள்ளங்கை சத்தியத்திற்குரியது , அதனால் அன்னம் இடும்போது அந்த உள்ளங்கையால் எடுத்த அன்னத்தில் சத்தியம் கலந்திருக்கும் 

.

நாம் இட்டவருக்கு கட்டுப்பட்டவராவோம், அதனால் அவர் இடும் சாபமோ நாம் அவருக்கு செய்யும் துரோகமோ நமக்கு துன்பத்தை தருகிறது. 


அக்காலத்தில் இதற்காக பாடல்களே கூட பாடப்பட்டது . அன்னமிட்ட வீட்டில் கண்ணக்கோள் சாட்டினாள். மண்ணோடு மண்ணாக போவாய் என உரைத்தனர். 


இந்த சக்தி தாய்க்கு அதிகம் இருக்க காரணம் தன்பிள்ளைகளுக்கு அதிகமாக அன்னம் படைக்கும் வாய்ப்பும், தலையில் கை வைக்கும் வாய்ப்பும் அதிகமாக ஒரு தாய்க்கே கிடைக்கிறது . 


அதனால் தான் தாய் மகனை சபித்தாள். அப்படியே பலிக்கிறது . இவ்வளவு மகத்துவம் மிக்க உள்ளங்கை பூமியில் பட்டால் மட்டும் அனைத்தும் பறிபோய்விடும்.

 

ஏன் தெறியுமா இந்த உடல் வளர்ந்தது இந்த பூமியால்தான். நம்மை சுமப்பதும் இந்த பூம


ிதான். எனவே நம் சக்தியை உறிஞ்சும் அத்தனை உரிமையையும், பூமாதேவிக்கு உண்டு. 


எனவே இந்த சக்தியை கொடுப்பதும் தக்க வைத்துக் கொள்வதும் நம்மிடம்தான் உள்ளது .

 

  பூமியில் உள்ளங்கை பதியும் போது (ஆலய பலிபீடம் தவிர்த்து மற்ற இடங்களில்) முதலில் நம்மிடம் இருந்து வெளியேறும் சக்தி மங்களகரமான சக்திகளே. 


காரணம் பூமாதேவிக்கும் மங்களசக்தி மகாலக்ஷ்மிக்கும் நெருங்கிய உறவு உண்டு. அதுவே காரணமாகும். 


இந்த விரிவான அத்தியாயம் ஏனெனில் இந்த முறையிலும் நீங்கள் செல்வத்தை பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவே கூறியுள்ளேன்.