Monday, January 8, 2024

உடலின் உறுப்புகளை பலப்படுத்துவது எப்படி?

நோயின்றி வாழ நமது உடலின் முக்கிய உறுப்புகளை பலப்படுத்துவது எப்படி?


நோயின்றி வாழ உடலின் முக்கிய உறுப்புகள்!!


இணைய வாசகர்களுக்கு இனிய வணக்கங்கள்!! நமது உடலின் இயக்கத்தை தீர்மானிப்பது இந்த ஐந்து உள்ளுறுப்புகள் தான். 

அவை நுரையீரல், இதயம், கல்லீரல், சிறுநீரகம், மண்ணீரல் ஆகியவையாகும்.

இந்த ஐந்து உறுப்புகளும் ராஜ உறுப்புகள் என்று அழைக்கப்படுகிறது. இது நன்றாக இயங்கினால் தான் மனிதனால் ஆரோக்கியமாக இருக்க முடியும். நம்முடைய பாரம்பரிய மருத்துவங்கள் இந்த ஐந்து உறுப்புகளுக்கும் மிக முக்கிய இடத்தை கொடுக்கின்றன. நமது உடலில் எந்த நோய் ஏற்பட்டாலும் இவர்களுக்கு தெரியாமல் ஏற்படாது. சொல்லப் போனால் எந்த நோய் ஏற்பட்டாலும் அதற்கு காரணமாக இருப்பது இவர்களாகத் தான் இருக்கும். கவனியுங்கள் இதில் நமது உடலின் தலைமைச் செயலகமான மூளை இடம்பெறவில்லை என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். கோமாவில் இருக்கும் நபரின் எல்லா உறுப்புகளும் தன்னிச்சையாக இயங்கி கொண்டிருக்கும். மூளை இறந்துவிட்டது என்று எந்த உறுப்பும் கட்டளைக்காக காத்திருக்காது. இந்த ஐந்து ராஜ உறுப்புகளும் வளமுடன் இருக்க என்ன செய்ய வேண்டும். வாருங்கள் உள்ளே சென்று பார்ப்போம்.


நுரையீரல்


நுரையீரல் உயிர் வாழ்வதற்கு ஆதாரமான ஆக்சிஜனை கொடுத்து உடலில் உள்ள கார்பனீராக்சைட்டை வெளியேற்றும் உயிர் தொழிற்சாலை நுரையீரல். ஒரு நாளைக்கு இருபதாயிரதிற்கும் மேற்பட்ட முறை இந்த சுவாசித்தல் பணி நடந்து கொண்டே இருக்கின்றது. மாசு நிறைந்த காற்றும் வாகன புகை சிகரெட் புகையும் நுரையீரலில் அழுக்காக படியும். இப்படி அழுக்கு படிவதால் நுரையீரலில் நஞ்சு சேர்ந்து கொண்டே போகும். பிறகு நுரையீரல் பாதிக்க தொடங்கும் இதனை சுத்தம் செய்வதற்கு ஒமேகா 3 நிறைந்த உணவுகளான நாட்டுக்கோழி ,முட்டை, மீன் எண்ணெய் மாத்திரைகள் காளான், பாதாம் பருப்பு, மற்றும் வால்நட் பருப்பு முள்ளங்கி, அகத்திக் கீரை பச்சை சோயா பீன்ஸ் போன்ற உணவு வகைகளை சாப்பிட வேண்டும்.


பூண்டு


பூண்டு ஒரு மூலிகை பொக்கிஷம் உடலில் இயற்கையாக எதிர்ப்பு சக்தி உருவாகும் உடலில் ஏற்படும் வீக்கத்தை குறைக்கும் கெட்ட கொழுப்பை கரைத்து ஆரோக்கியமாக வைக்கும். உணவில் அவ்வப்போது சிறிது பூண்டு சேர்த்து வந்தால் நுரையீரல் புற்றுநோய் வராமல் தடுக்க முடியும். இதில் உள்ள அலிசின் சத்து ஒரு இயற்கை ஆன்டிபயாட்டிக் பாக்டீரியா மற்றும் பூஞ்சை தொற்றிலிருந்து நுரையீரலைத் காக்கும்.


வைட்டமின் சி


உடலின் ஆக்சிஜனை முழுமையாக கடத்திச் செல்ல வைட்டமின் சி உதவும் நுரையீரலின் சீரான இயக்கத்திற்கும் உதவும். ஆஸ்துமா போன்ற பிரச்சினைகள் குறையும். தவிர்க்க வேண்டியது புகை பிடிப்பவர்கள் மற்றும் புகையிலை உபயோகிப்பவர்ள் முடிந்தவரை குறைத்துக் கொள்ளுங்கள் கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்திவிட்டால் உங்கள் உடலுக்கு நல்லது.


இதயத்தை பலப்படுத்துவது எப்படி?


இதயம் பாதிப்படைவதற்கு முக்கிய காரணம் உடலில் சேரும் அதிகப்படியான கொழுப்பு இது இரத்தத்தில் அதிகமாகி இதயத்திற்கு செல்லும் ரத்த நாளங்களில் ரத்த ஓட்டத்தைக் குறைத்து விடுவதால் இதய பாதிப்பு உண்டாகின்றது. மேலும் அதிகம் கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடுதல் அதற்கேற்ற உடல் உழைப்பு இல்லாமல் இருத்தல் மன அழுத்தம் ஆகியவை இதயம் பாதிப்படைவதற்கு முக்கிய காரணங்களாகும். இதன் அறிகுறிகள் என்ன என்று பார்க்கலாம் சுவாசிக்கும் மூச்சுக் சீரற்ற தன்மையை இழக்கும் உடல் பலம் இழந்தது போல ஒரு உணர்வு இருக்கும். சிறிது கடினமான பணிகளை செய்தாலே மூச்சுத்திணறல் ஏற்படுவது போன்ற ஒரு நிலை ஏற்படும். இதை எப்படி சரி செய்வது வைட்டமின் சத்துக்கள் அதிகம் நிறைந்த அன்னாசிப்பழம் மற்றும் ஆரஞ்சு பழங்களை அவ்வப்போது சாப்பிடவேண்டும்.


இதயத்தை பலப்படுத்தி சீராக்கும் அத்திப் பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும்.


பசும்பாலில் பூண்டு பற்கள் சிலவற்றை நசுக்கிப் போட்டு நன்கு காய்ச்சி வடிகட்டி குடிக்க வேண்டும்.


மாதுளம் பழச்சாற்றில் தேன் கலந்து குடிக்க வேண்டும்.


இஞ்சியை சிறு துண்டுகளாக நறுக்கி தேனில் ஊறவைத்து ஒரு மண்டலம் அதாவது 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் இதயம் பலம் பெறும்.


முடிந்த வரை காபி டீயை தவிர்ப்பது நல்லது.


காலையில் வெறும் வயிற்றில் இளம் சூடான தண்ணீரில் இஞ்சிசாறு எலுமிச்சைச்சாறு இவைகளை தேன் கலந்து குடித்தால் நல்லது.


கல்லீரல் பலப்படுத்துவது எப்படி?


மனித உடலிலேயே கல்லீரல் தான் மிகப்பெரிய உறுப்பு உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு பல்வேறு முக்கியமான செயல்களை கல்லீரல் செய்கின்றது. அது உடலில் சேரும் டாக்ஸின்களை வெளியேற்றுவது மற்றும் செரிமானத்திற்கு தேவையான பித்த நீரை சுரப்பது குறிப்பிடத்தக்கது. எனவே கல்லீரலின் சிறு பிரச்சினை என்றாலும் அதனால் உடலில் பல்வேறு செயல்பாடுகள் பாதிக்கப்படும்.


கல்லீரல் செயலிழந்து போனால் கால்களில் வீக்கம், வாந்தி, சோர்வு ,காய்ச்சல் தலை சுற்றல், குமட்டல், அடர் நிற சிறுநீர் போன்ற அறிகுறிகள் இருக்கும் கல்லீரல் பலம் பெறுவதற்கு கல்லீரலை வலுவூட்டி சீராக செயல்பட வைப்பது மாதுளம் பழம் துளசி இலைகள் 12 எடுத்து கழுவி அத்துடன் ஏலக்காய் 4 ஒரு சுக்கு துண்டு சேர்த்து நசுக்கி ஒரு குவளை நீரில் கலந்து காய்ச்சி அரை குவளையாக வடிகட்டி தேவையானால் சிறிது பால் தேன் கலந்து வாரம் மூன்று முறை என்று ஒரு மண்டலம் பருகி வந்தால் கல்லீரல் பலம் பெறும்.

வைட்டமின் சி அதிகமுள்ள நெல்லிக்காய்களை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கல்லீரலின் செயல்பாடுகள் நன்றாக இருக்கும். ஒரு நாளைக்கு ஐந்து நெல்லிக்காய்களை சாப்பிட்டு வந்தால் கல்லீரல் வலுவடையும் வேண்டுமானால் தயிர் உப்பு ஆகியவற்றுடன் நெல்லிக்காயைச் சேர்த்து பச்சடியாகவும் செய்து சாப்பிடலாம். ரத்தத்தில் உள்ள சில ஹார்மோன்கள் கல்லீரலை சில சமயம் சேதப்படுத்துகின்றன இதைத் தவிர்க்க ஆளி விதைகளை நமது உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் அரை டம்ளர் கேரட் ஜூஸ் தினமும் குடித்து வாருங்கள்.


சிறுநீரகம்


சிறுநீரகம் இதன் பொதுவான அறிகுறிகள் முகம் வீங்குதல், பசியின்மை, மற்றும் வாந்தி எடுத்தல், உயர்ரத்த அழுத்தம் ரத்தசோகையும் உடல் நலிவடைதலும் போன்றவையாகும்.


சிறுநீரகம் பலம் பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும்?


அடிக்கடி மாதுளம் பழம் எலுமிச்சை வாழைத்தண்டு முள்ளங்கி பூசணிக்காயை  உணவில் சேர்க்க வேண்டும்.


வெந்தயம் மற்றும் வெந்தயக் கீரையை தினமும் சாப்பாட்டுடன் சேர்த்து எடுத்துக் கொண்டால் சிறுநீரகப் பிரச்சினை என்ற வார்த்தைக்கு வழி இல்லாமல் போகும்.


வாரம் இரண்டு முறை கரும்பு ஜூஸ் சாப்பிட்டு வந்தால் சிறுநீரக பிரச்சனைக்கு வாய்ப்பில்லாமல் போகும் பாகற்காய் ஜூஸ் சிறுநீரக ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும்.


மண்ணீரல்


மண்ணீரலும் உடலில் ஒரு முக்கியமான பணியைச் செய்கிறது என்று உங்களுக்கு தெரியுமா? இது ஒருவரது கையளவு தான் இருக்கும் இது வயிற்றின் இடது பக்கத்தில் இரைப்பைக்கு சற்று மேலே அமைந்துள்ளது. மண்ணீரல் கிருமிகளை எதிர்த்துப் போராடும் ஒரு வகையான ரத்த வெள்ளை அணுக்களை உருவாக்கும் மேலும் மண்ணீரலும் இரத்தத்தை வடிகட்டுவது உடலை தாக்கும் பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ்களை எதிர்ப்பது பழைய அல்லது சிதைந்த ரத்த சிகப்பு அணுக்களை நீக்குவது மற்றும் மறுசுழற்சி செய்தல் என பல செயல்களை செய்கின்றது. எடை அதிகரித்தல் அடிவயிற்றில் பயங்கர வலி உண்டாதல் நாக்கு வரண்டு விரைப்புத்தன்மை அடைதல் வாயுக்களால் உடலெங்கும் வலி உண்டாதல் வாந்தி உடல் பலவீனம் அடைதல் போன்ற அறிகுறிகள் இருக்கும்.


மண்ணீரலின் ஆரோக்கியத்திற்கு தண்ணீர்  உறுதுணையாக இருக்கும்.


அதற்கு தினமும் 8 முதல் 10 டம்ளர் நீரை குடிக்கவேண்டும்  மண்ணீரலின் சிறப்பான செயல்பாட்டிற்கு தண்ணீர் மிகவும் அவசியமான ஒன்று ஒருவர் போதுமான அளவு தண்ணீர் குடிக்காவிட்டால் மண்ணீரலால் இரத்தத்தில்  உள்ள டாக்ஸின்களை வெளியேற்ற முடியாமல் போகும்.


காய்கறிகளையும் பழங்களையும் ஒருவர் அதிகமாக சாப்பிட்டு வந்தால் மண்ணீரல்  செயல்பாடு சிறப்பாக இருக்கும்.


வாரத்திற்கு மூன்று முறை மீன்களை உணவில் சேர்த்துக் கொண்டால் அது மண்ணீரலை  ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும். அதிலும் சால்மன் கானாங்கெளுத்தி மத்தி என்ற மீன்களில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் இருக்கின்றது.


ராஜ உறுப்புகள் பலமுடன் இருந்தாலே உங்களுக்கு எந்தவித நோயும் அண்டாது..


https://chat.whatsapp.com/Dn3lig9HNotCl0cyVt2oH8

தினம் ஒரு மூலிகை-செம்பருத்தி

 


*செம்பருத்தி* இனத்தைச் சேர்ந்த செந்நிற பூக்களை உடைய சிறு மரம் அழகு மரமாக வளர்க்கப்படுகிறது இதன் இலை பூ காய் பட்டை ஆகியவை மருத்துவ குணம் உடையது சிறுநீர் பெருக்குதல் குளிர்ச்சி உண்டாக்குதல் துவர்ப்பியாக செயல்படுதல் உள்ளழல்ஆற்றுதல் மலம் விளக்குதல் சளி அகற்றுதல் காமம் பெருக்குதல் ஆகிய மருத்துவ குணம் உடையது 10 கிராம் பூவிதழ்களை அரைத்து பாலில் கலந்து காலை மாலை ஐந்தில் இருந்து ஆறு நாட்கள் பருகிவர குருதி பிரமோகம் வெள்ளை குருதி வாந்தி உள் கொதிப்பு ஆகியவை தீரும் 10 கிராம் இலையை அரைத்து பாலில் கலக்கி காலை மாலை மூன்று நாள் குடித்து வர சீழ் பிரமேகம் குருதிபிரமேகம் உள் கொதிப்பு ஆகியவை தீரும் செம்பருத்தி பிஞ்சை அரைத்து 10 கிராம் அளவாக மோரில் கலக்கி காலை மாலை மூன்று நாள் கொடுத்து வர சீத கழிச்சல் குருதி கழிச்சல் ஆகியவை தீரும் வேரை பூலாக நறுக்கி நீரில் இட்டு காய்ச்சி வடிகட்டி குடித்து வர நாள் பட்ட காய்ச்சல் தீரும் நன்றி.

Sunday, January 7, 2024

எண்ணெய் குளியல்{ உடல் முழு நலம் பெறும் }



பயன்படுத்த வேண்டிய எண்ணெய் : - 


மர செக்கில் ஆட்டிய நல்லெண்ணெய் ( பாதுகாப்பானது)


[ஃ காய்ச்சாத பச்சை எண்ணையை பயன்படுத்த கூடாது ]


காலை வெயில் ஏறுவதற்கு முன்பே குளித்து முடித்து விட வேண்டும் 


ஞாயிற்றுக்கிழமை எண்ணெய் தேய்த்து குளித்தால் சுரம் ( காய்ச்சல்) வரும் வாய்ப்பு உள்ளது 


---> ஆண்கள் எண்ணெய் தேய்த்து குளிக்க சிறந்த கிழமைகள் - புதன்கிழமை மற்றும் சனிக்கிழமை


---> பெண்கள் எண்ணெய் தேய்த்து குளிக்க சிறந்த கிழமைகள் - செவ்வாய்க்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை


மனித உடல் மூன்று வகை :- ( தேகம் - உடல்)


1) வாத உடல் ( காற்று உடல்)


2) பித்த உடல் (நெருப்பு உடல் அல்லது வெப்ப உடல் அல்லது சூடான உடல்)


3 )கப உடல் ( நீர் உடல் அல்லது குளிர்ச்சியான உடல்)


எண்ணெய் தயாரிக்கும் முறை :-


✓ வாத உடல் உள்ளவர்கள் ( காற்று உடல் ) - 


சீரகம் சிறிது மற்றும் 2 பூண்டு பல் தட்டி நல்லெண்ணெயில் போட்டு காய்ச்சி பயன்படுத்தலாம்


✓ பித்த உடல் உள்ளவர்கள் ( நெருப்பு உடல் ,  வெப்ப உடல் , சூடான உடல்) -


 நல்லெண்ணெயை லேசாக சூடு பண்ணி 1 ஸ்பூன் அளவு சீரகம் போட்டு காய்ச்சி சீரகம் கருகும் முன்பு ஆதாவது சீரகம் உடைந்து வரும் நேரத்தில் அந்த பதத்தில் இறக்கி வைத்து பயன்படுத்தலாம்


 ✓ கப உடல் உள்ளவர்கள் ( நீர் உடல் அல்லது குளிர்ச்சியான உடல் ) -


 100 மில்லி நல்லெண்ணெயில் 1 கை அளவு மிளகு போட்டு 10 நாட்கள் வெய்யிலில் காய வைத்து விட்டு எடுக்க வேண்டும்…மிளகில் உள்ள மருத்துவ குணங்கள் நல்லெண்ணெயில் ஊறி எண்ணிக்கையில் மிளகின் ஆற்றல் இறங்கி கலந்து விடும்…அந்த எண்ணெயை குளிக்க பயன்படுத்தலாம்


✓ கப உடல் உள்ளவர்கள் உடனே அவசரமாக எண்ணெய் தேய்த்து குளிக்க தேவை என்றால் - நல்லெண்ணெயில் 2 மிளகாய் வற்றல் போட்டு காய்ச்சி கருகிய பிறகு கருகும் பதத்தில் அடுப்பை அணைத்து விடவும்…கருகிய 2 மிளகாய் வற்றலை வெளியே எடுத்து விடவும்…இந்த நல்லெண்ணெயை கண்களை மூடி கண்கள் மேல் படாமல்  தேய்த்து குளிக்க வேண்டும்…


✓ நமது உடல் வாத உடலா பித்த உடலா கப உடலா என்று தெரியவில்லை என்றால் - 


மூன்றையும் கலந்து பயன்படுத்த வேண்டும் - 1 பல் பூண்டு , சிறிது சீரகம் , ½ அளவு மிளகாய் வற்றல் நல்லெண்ணெயில் போட்டு காய்ச்சி பயன்படுத்தலாம்


பத்தியம் : -


எண்ணெய் தேய்த்து குளிக்கும் நாள் அன்று முழுவதும் 


1 ) குளிர்ச்சியான உணவுகள் உண்ண கூடாது 


2 ) அசைவம் ( மாமிசம் ) சாப்பிட கூடாது


3 ) மோர் , நெய் சாப்பிட கூடாது


4 ) பகலில் தூங்க கூடாது


5 ) வெய்யிலில் அதிகம் நிற்க கூடாது நடக்க கூடாது 


6 ) தாம்பத்யம் கூடாது.

எளிய முறையில் சரணாகதி விளக்கம்


மாட்டு வண்டிக்கு

உயிர் இல்லை


மாட்டுக்கு

உயிர், அறிவு

இரண்டும் உண்டு


ஆனால்


*வண்டிக்காரன்*


உயிரில்லாத

வண்டியை


அறிவுள்ள மாட்டுடன் பூட்டி


எந்த இடம் செல்ல

வேண்டும்


என்பதை தீர்மானித்து,


வண்டியை

செலுத்துவான்.


*எவ்வளவு தூரம்...*


*எவ்வளவு நேரம்...*


*எவ்வளவு பாரம்...*


அனைத்தையும்


*தீர்மானிப்பவன் வண்டிக்காரன் மட்டுமே*!


அறிவிருந்தும்.....


சுமப்பது தானாக இருந்தாலும்


மாட்டால்

ஒன்றும் செய்ய

இயலாது...


அதுபோல....


உடம்பு என்ற

ஜட வண்டியை


ஆத்மா, உயிர்

என்ற மாட்டுடன் பூட்டி


*இறைவன் என்ற வண்டிக்காரன்*


 ஓட்டுகிறான்....


*அவனே தீர்மானிப்பவன்*


*அவன் இயக்குவான்..*


*மனிதன் இயங்குகிறான்*


எவ்வளவு காலம்..


எவ்வளவு நேரம்..


எவ்வளவு பாரம்..


*தீர்மானிப்பது  இறைவனே*


இதுதான்


நமக்காக

இறைவன்

போட்டிருக்கும்

 *டிசைன்..*!


இதுதான்


இறைவன் நமக்கு

தந்திருக்கும்

*அசைன்மென்ட்*..!


*இதை உணர்ந்தவனுக்கு துயரம் இல்லை..*


*இதை*

*உணராதவனுக்கு*

*அமைதி இல்லை*.


*இருக்கும் காலங்களில்*

*இனியது செய்வோமே*!.

தலைவலி -ஒற்றைத் தலைவலி

தலைவலி -ஒற்றைத் தலைவலி

35 விதமான காரணங்கள் உண்டு. 


மலச்சிக்கல், அதிக சூடு, முன் கோபம், தூக்கமின்மை, பிடிக்காதவர்கள் வீட்டில் இருப்பது, அதிக வேலை, போன்றவை பொதுவான காரணங்கள். 


தலைவலிக்கு சுக்கு பவுடரை வெண்ணீரில் குழைத்து நெற்றியில் பற்று போடலாம். கடுகை தேவையான அளவு எடுத்து மிக்ஷியில் அடித்து சலித்து சுடுநீரில் குழைத்து நெற்றியில் பற்று போடலாம். சூடான சுக்கு காபி குடிக்கலாம்.

ஒற்றைத் தலைவலி 

தலையில் நீர் ஊற்றிக் குளிக்கும் பழக்கம் இல்லாதவர்கும், மலச்சிக்கல் உள்ளவருக்கும்,வேளைக்கு சாப்பிடாமல் பசி உள்ளபோது சாப்பிடாமல் தவிர்பதும், பசி இல்லாதபோது சாப்பிடுவர்களுக்கும், ஓய்வின்றி அலைபவருக்கும் வரும். ஒரே நேரத்தில் தலைவலி வரும். சிலருக்கு சூரியன் வந்து மறையும் வரை தலைவலி வரும்.


அவரவர் கைப்பிடி அளவு மிளகாய் வற்றல் எடுத்து இரவு படுக்கும் முன் வடிகஞ்சியில் ஊறப்போடவும்,விடிகாலை நான்கு மணிக்கு எழுந்து வடிகஞ்சியில் ஊறப்போட்ட மிளகாய் வற்றலை வெண்ணெய் போல் அரைத்து ஊறிய வடிகஞ்சியில் கரைத்து உச்சி முதல் உள்ளங்கால் வரை தேய்த்து அரைமணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் தலை குளிக்கவும். ஒற்றைத் தலைவலி என்றால் எரிச்சல் இருக்காது. குளு குளு வென இருக்கும். இதை ஞாயிற்றுக்கிழமை தோறும் மூன்று ஞாயிறு செய்யவும்.  


மிளகாய் தேய்த்துக் குளித்த அன்று காலை வெந்தயக் கஞ்சி சாப்பிடவும். மதியம் ரசம் சோறு சாப்பிடவும், இரவு உணவை ஆறு மணிக்குள் சாப்பிடவும்.


பத்தியம் -முட்டை, மாமிசம் வகை ,இனிப்பு பலகாரங்கள், நெய், தயிர், மோர், வாழைப்பழம், வேர்கடலை இவைகளை தவிர்க்கவும்.

தினம் ஒரு மூலிகை-செந்நாயுருவி

 *


 *செந்நாயுருவி*  அதிக மருத்துவ பயன் கொண்டது மூலிகைகளில் பெண் தன்மையும் தெய்வத்தன்மையும் இதற்கு உண்டு புதன் மூலிகை என்றும் அட்டகர்மா மூலிகை என்றும் அழைப்பார்கள் நீண்ட கதிர்களையும் துணியில் ஒட்டிக் கொள்ளக்கூடிய விதைகளையும் உடைய சிறு செடி தண்டு இலை கதிர் ஆகியவை செந்நிறமாய் இருக்கும் மலைப்பகுதிகளில் தானாகவே வளரக்கூடியது இதன் அனைத்து பாகங்களும் மருத்துவ பயன் உடையவை துவர்ப்பியாகவும் சிறுநீர் பெருக்கியாகவும் உடல் தேற்றியாகவும் முறை நோய் நீக்கியாகவும் செயல்படும் இலை சாறு ஐந்து மில்லி அளவு காலை மாலை கொடுத்து வர வயிற்று நோய் தீரும் 50 மில்லி அளவாக காலை மாலை கொடுத்து வர பெண்களின் மாதவிடாய் சிக்கல் தீரும் இலையை அரைத்து 10 கிராம் அளவாக நல்லெண்ணையில் கலந்து காலை மாலை ஏழு நாள் கொடுக்க குருதி மூலம் தீரும் இலையை அரைத்து கட்டிகளுக்கு வைத்துக் கட்ட அவை பழுத்து உடைந்து விரைந்து ஆறும் இலை சாற்றை படைகளுக்கு தடவி வர குணமாகும் இலையை கசக்கி தேய்க்க தேள் பூரான் வண்டு ஆகியவற்றின் நஞ்சு கடிகள் குணமாகும் இலையை நீரில் இட்டு நன்கு கொதிக்க வைத்து வடிகட்டி வாய் கொப்பளிக்க பல் வலி குணமாகும் நன்றி.

நேர்மையை விதையுங்கள்-தினம் ஒரு சிந்தனை



இன்று எங்குப் பார்த்தாலும் போலிகள், ஊழல்கள், மோசடிகள், எதிலும் பொய் மற்றும் நேர்மை இல்லாத தன்மைப் பெருகி விட்டது.._ 


_*அமெரிக்காவின் எழுத்தாளர் மேரிலேன்ட் மாகாணத்து ஆளுநருமான ஹிர்ஷ் கோல்ட்பெர்க் “The book of Lies” என்ற புத்தகம் எழுத, இவர் செய்த ஆய்வு இவரை இதற்குத் தூண்டியது.*_


_இந்தப் புத்தகம் எழுத இவர் சுமார் நான்கு வருடங்கள் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில் ஒரு நாளைக்கு சுமார் 200 முறை மனிதர்கள் சாதாரணமாகப் பொய்களை  உதிர்க்கிறார்கள் என்று கண்டு அறிந்தார்.._ 


_*இந்த நிலை நீடித்தால் பொய் என்பது வாழ்வியல் முறை என்றாகி விடும். நேர்மை என்ற ஒரு கோட்பாடு அழிந்து விடும் என்று அவர் கருதினார்.*_


_நேர்மை என்ற கோட்பாடு பாதுகாக்கப்பட வேண்டுமானால், வருடத்தில் ஒரு நாளாவது நேர்மையை நினைவு கூறுவது அவசியம் என்று அவர் கருதினார்._ 


_*இதனால் முட்டாள்கள் தினம் அனுசரிக்கப்படும் ஏப்ரல் மாதத்தின் கடைசி நாள் நேர்மை தினமாக அனுசரிக்கப்பட வேண்டும் என விரும்பினார்.*_


_இந்த நாளை அனுசரிக்கப் பல ஆலோசனைகளும் கோல்ட்பெர்க் தருகிறார்._ 


_*உலகின் மிக மோசமான ஊழல்கள் பற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது, நேர்மை பற்றி உலகப் புகழ் பெற்ற எழுத்தாளர்கள் என்ன கூறினார்கள் என்று அவரவர் வீட்டில், தெருவில், அலுவலகத்தில் பகிர்ந்துக் கொள்வது,*_


_இன்று ஒரு நாள் எக்காரணம் கொண்டும் பொய் பேசாமல், நேர்மையாக இருப்பேன் என்று தனக்குத் தானே உறுதி மொழி எடுத்துக் கொள்வது என்று நீண்டு கொண்டே போகிறது அந்தப் பட்டியல்._


_*அதே நேரம் நேர்மை பற்றி உலகப் பொதுமறையான திருக்குறளில் அய்யன் வள்ளுவர் என்ன சொல்கிறார் என்றால்.,*_


_''கேடும் பெருக்கமும் இல் அல்ல;_ _நெஞ்சத்துக்_

_கோடாமை_ _சான்றோர்க்கு அணி''.,_


_*இதன் கருத்து என்னவென்றால்..,.,*_


_பொருட்செல்வத்தைக் காட்டிலும், நேர்மை தான் சான்றோரின் விலை உயர்ந்த அணிகலன் என்பது._


_*இன்னொரு குறளில்..,.*_


_''வாய்மை எனப்படுவது யாதெனின்_ _யாதொன்றும்_

_தீமை இலாத_ _சொலல்.''_


_*மற்றவரை வருத்தப்படுத்தாத எந்தச் சொல்லும் வாய்மையாகக் கருதப்படும்.*_



_நாம் சொல்லும் சொல் , நாம் பயணிக்கும் பாதை நேர்மையாக இருந்தால் வெற்றிகள் நம்மைத் தேடி வரும்..._


_*வாழ்க்கையில் நேர்மையாக இருக்க முயல்வதும் ஒரு போராட்டம் தான்*_


_உண்மையும் நேர்மையும் நம்மைப் பாதுகாக்கும், நேர்மை ஒரு போதும் வீண் போகாது_ 


_*நேர்மையை விதையுங்கள்..,*_  


_*பதவியும் பணமும் உங்களை நாடித் தேடி வரும்.*_

Saturday, January 6, 2024

தஞ்சை பெரிய கோவில் கட்டுமான அமைப்பு

 தஞ்சை பெரிய கோவில் கட்டுமான அமைப்பானது, இலகு பிணைப்பு என்ற முறையில் உருவாக்கப்பட்டதாகும். அதாவது, இக்கோவிலின் கட்டுமானத்தின் போது, ஒவ்வொரு கல்லையும் பிணைக்கும் போது, ஒரு நூலளவு இடைவெளி விட்டு விட்டு பிணைத்துள்ளனர். அதாவது, இன்றைக்கும் கிராமப்புறங்களில் உள்ள வீடுகளில் பெரியவர்கள் கயிற்றுக் கட்டிலை பயன்படுத்துவதை அனைவரும் அறிவார்கள். அந்த கயிற்றுக் கட்டில் முறையைத் தான் பெரியகோவில் கட்டுமானத்திற்கும் பயன்படுத்தி உள்ளார்கள் என்பது ஆச்சரியம்.


பெரிய கோவில் என்று தஞ்சை தரணி மக்களாலும் உலக தமிழர்களாலும் பெருமிதத்துடன் அழைக்கப்படும் பிரகதீஸ்வரர் கோவில். கி.பி 1006ஆம் ஆண்டில் மாமன்னன் ராஜராஜசோழனின் ஆட்சியில் கட்டப்பட்டு, இன்றைக்கும் தமிழனின் கலை, அறிவியல் மற்றும் கட்டடக்கலைக்கு சான்றாக உள்ளதோடு, யுனெஸ்கோவின் பாரம்பரிய கலை மற்றும் பண்பாட்டு சின்னமாகவும் அரிய பொக்கிஷமாகவும் போற்றிப் பாதுகாக்கப்பட்டு வருகிறது.


இக்கோவில் வெளிநாட்டவர்களை கவர்திழுப்பதற்கு முக்கிய காரணம் அதன் கட்டுமானம் தான். வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளையும் ஆராய்ச்சியாளர்களையும் இந்த அளவுக்கு கவர்ந்திழுப்பதற்கு காரணமே அதன் அற்புதமான கட்டமைப்புதான்.

எப்படித்தான் கட்டியிருப்பார்களோ
எப்படித்தான் கட்டியிருப்பார்களோ
பெரியகோவிலை ஆராய்ச்சி செய்யும் வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்கள், இன்றைய அதி நவீன உத்திகளையும் விஞ்ஞானத்தின் துணையோடும், என்ன தான் தலைகீழாக நின்று அக்குவேறு ஆணிவேராக ஆராய்ச்சி செய்து பார்த்தாலும் அதன் கட்டுமான ரகசியம் இன்னும் பிடிபடாமல் தலையை பிய்த்துக்கொண்டுதான் உள்ளனர். இருந்தாலும் அவர்களாகவே ஒரு அனுமானத்திற்கு வந்து இப்படி கட்டியிருப்பார்கள், அல்லது அப்படி கட்டியிருப்பார்கள் என்று தீர்மானத்திற்கு வந்துவிடுகிறார்கள்.

1000 ஆண்டுகளுக்கு முன்பு கிரானைட் கற்கள்: 

கரிகால் சோழனால் கட்டப்பட்ட கல்லணையைப் பற்றிய முழுமையான ரகசியம் எப்படி பிடிபடவில்லையோ, அதே போல் தான் பெரிய கோவிலின் கட்டுமான ரகசியமும் இன்னமும் யாருக்கும் விளங்கவில்லை என்பது தான் உண்மை. காரணம் இக்கோவில் கட்டப்பட்ட விதமும், அதற்கு பயன்படுத்தப்பட்ட தூய்மையான கிரானைட் கற்களும் தான். கிரானைட் கற்கள் என்பது 20ஆம் நூற்றாண்டில் தான் அறிமுகப்படுத்தப்பட்டது என்று அனைரும் நினைத்து கொண்டிருக்கையில், சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்பே கிரானைட் கற்கள் கொண்டு இக்கோவில் பயன்படுத்தப்பட்டுள்ளது ஆச்சரியம் தான்.

எல்லாமே 80 டன்கள்:

மற்றொரு ஆச்சர்யம், கோவிலின் கருவறை மேல் உள்ள விமானம். இதன் மொத்த எடையானது 80 டன். பிரமாந்திரக்கல் என்றழைக்கப்படும் ஸ்தூபிக் கல் முழுக்க ஒரே கல்லால் உருவாக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. அது மட்டுமல்ல, இந்த விமானத்தை தாங்கும் சதுர வடிவிலான அடிக்கல்லும் கூட 80 டன் எடை கொண்டது. அதோடு, இந்த சதுர வடிவிலான கல்லின் நான்கு புறத்திலும் இரண்டு லிங்கங்கள் என 8 லிங்கங்கள் உள்ளன. ஒவ்வொரு லிங்கத்தின் எடையும் தலா 10 டன்கள் என இதன் மொத்த எடையும் 80 டன்களாகும்.

கோவிலின் அஸ்திவாரம்:

கருவரையின் மேலுள்ள விமானம், அதனைத் தாங்கும் சதுர வடிவிலான கற்கள், அதோடு சுற்றிலும் உள்ள 8 லிங்கங்கள் என இந்த மூன்றும் தான் ஒட்டு மொத்த கோவிலையும் தாங்கும் அஸ்திவாரமாக இருக்கின்றது என்பது தான் ஆச்சரியத்தின் உச்சமாகும். பொதுவாக அஸ்திவாரம் என்பது ஒரு கட்டிடத்தின் பாரத்தை தாங்கும் ஆதார சக்தியாகும். கட்டிடம் எந்த அளவுக்கு உயரமாக கட்டப்படுகிறதோ, அந்த அளவுக்கு அதன் அஸ்திவாரமும் ஆழமாகவும், வலுவாகவும் இருக்கவேண்டும் என்பது கட்டுமான விதியாகும். இல்லாவிட்டால் கட்டுமானம் ஆட்டம் காணும்.

அஸ்திவாரம் எத்தனை அடி ஆழம்:

உதாரணமாக நாம் ஒரு வீட்டையோ அலுவலகத்தையோ கட்ட வேண்டுமென்றால், அந்தந்த நிலத்தின் தன்மைக்கு ஏற்ப, குறைந்த பட்சம் 5 அடியாவது அமைக்கவேண்டும். அது போலவே, 216 அடி உயரத்துடனும், முழுக்க முழுக்க அதிக எடைகொண்ட கிரானைட் கற்களைக்கொண்டு கட்டப்பட்ட பெரிய கோவிலுக்கு எந்த அளவுக்கு அஸ்திவாரம் அமைத்திருக்க வேண்டும் என கற்பனை செய்து பாருங்கள். இன்றைய கட்டுமான வல்லுநர்களை கேட்டால், உடனடியாக கையில் மொபைல் ஃபோனை வைத்து தோராயமாக 50 அடி ஆழத்திலும், 50 அடி அகலத்திலும் போட்டால் போதும் என்று சொல்வார்கள்.

அஸ்திவாரம் 5 அடிதான்:

அப்படி 50 அடி ஆழத்திற்கு குழி தோண்டினால், தண்ணீர் தான் வரும், இல்லாவிட்டால் புழுதி மண்டலமாக இருக்கும். ஆனால், இவ்வளவு பெரிய பிரமாண்டமான பெரிய கோவிலுக்கு தோண்டப்பட்ட அஸ்திவாரம் வெறும் 5 அடி ஆழம் தான். அதெப்படி, நாங்கள் நம்ப மாட்டோம் என்று சொன்னாலும், அது தான் அறிவியல் உண்மையாகும். அங்கு தான் நம் தமிழனின் அறிவியல் திறமை வெளிப்பட்டிருக்கிறது.

கயிற்றுக் கட்டில் ரகசியம்:

பெரிய கோவில் கட்டுமான அமைப்பானது, இலகு பிணைப்பு என்ற முறையில் உருவாக்கப்பட்டதாகும். அதாவது, இக்கோவிலின் கட்டுமானத்தின் போது, ஒவ்வொரு கல்லையும் பிணைக்கும் போது, ஒரு நூலளவு இடைவெளி விட்டு விட்டு பிணைத்துள்ளனர். அதாவது, இன்றைக்கும் கிராமப்புறங்களில் உள்ள வீடுகளில் பெரியவர்கள் கயிற்றுக் கட்டிலை பயன்படுத்துவதை அனைவரும் அறிவார்கள். அந்த கயிற்றுக் கட்டில் முறையைத் தான் பெரியகோவில் கட்டுமானத்திற்கும் பயன்படுத்தி உள்ளார்கள் என்பது ஆச்சரியம்.

கயிற்று கட்டிலும் பெரிய கோவில் கட்டுமானமும்:

கயிற்றுக் கட்டிலில் பயன்படுத்தப்பட்ட கயிறானது பார்ப்பதற்கு இலகுவானதாக இருக்கும். ஆனால், அந்த கட்டிலில் ஆட்கள் உட்கார்ந்த உடனேயே பாரம் தாங்காமல் உள்வாங்கிக் கொண்டு, இறுக ஆரம்பிக்கும். இதனால், கயிறுகளின் பிணைப்பானது வலுவாகிவிடும். அந்த சூட்சமத்தை தான் பெரிய கோவில் கட்டுமானத்திற்கும் பயன்படுத்தி உருவாக்கியிருக்கிறார்கள். கோவிலின் கட்டுமானத்தில் அடியிலிருந்து கற்களை ஒவ்வொன்றாக நூலளவு இடைவெளி விட்டு மிகவும் இலகுவாக அடுக்கும்போது, கற்கள் பாரம் தாங்காமல் இறுக ஆரம்பித்து விடும்.

தோற்று ஓடிய நிலநடுக்கம்:

முழு கட்டுமானத்தையும் முடித்து கருவறை உச்சியில், மிகப்பிரமாண்டமான 80 டன் எடைகொண்ட, சதுர வடிவ கல், நந்தி, விமானம் என 240 டன் எடையை அழுந்தச் செய்வதன் மூலமாக பெரிய கோவிலின் ஒட்டுமொத்த கட்டுமானமும் பலம் பெற்றுவிடும். இப்படித்தான் பெரிய கோவிலின் அஸ்திவாரத்தை ஒட்டுமொத்தமாக கருவறை உச்சியில் கொண்டுபோய் வைத்தார்கள் அன்றைய நம் தமிழர்கள். இது வரையிலும் எத்தனையோ பூமி அதிர்ச்சி, நில நடுக்கம் என உருவாகி அசைக்க முயன்றாலும் கூட அவை அத்தனையும் பெரிய கோவில் கட்டுமானத்தின் முன்பு தோற்று மண்டியிட்டு வணங்கி சென்றது தான் மிச்சம். ஒரு துரும்பைக் கூட அசைக்க முடியவில்லை என்பது தான் அறிவியல் ஆச்சரியம்

தமிழ் மொழியின் சிறப்புகள்


உலக மொழிகளுள் மூத்ததும் முன்னோடியுமான மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்று என்றால் அது மிகையாகாது. உலகில் இருக்கும் மொத்த மொழிகளின் எண்ணிக்கை ஏறத்தாழ 3000-லிருந்து 8000-வரை இருக்கும் என்று மொழியியலாளர்கள் கூறுகிறார்கள். இவற்றுள் சில மொழிகளே எழுதவும் பேசவும் பயன்படுகின்றன. மேலும் வரிவடிவத்தில் எழுதப்படும் மொழிகள் அதனிலும் குறைவே! இவற்றிற்கெல்லாம் தாயாகத் திகழ்பவை ஆறு மொழிகள் என்று பகரலாம். அவை கீழ்வருமாறு:


• எபிரேய மொழி (பேச்சு வழக்கில் இல்லை)


• கிரேக்க மொழி (பேச்சு வழக்கில் இல்லை)


• இலத்தின் மொழி (பேச்சு வழக்கில் இல்லை)


• சமஸ்கிருத மொழி (பேச்சு வழக்கில் இல்லை)


• தமிழ் மொழி


• சீன மொழி


அவ்வகையில், இன்றும் எழுத்தளவிலும் பேச்சளவிலும் தன் தொண்மையைக் காத்து சீரும் சிறப்போடும் வாழ்ந்து கொண்டிருக்கிறது தமிழ் மொழி.


தமிழ் மொழி தொன்மை, முன்மை, எளிமை, ஒண்மை, இளமை, வளமை, தாய்மை, தூய்மை, செம்மை, மும்மை, இனிமை, தனிமை, பெருமை, திருமை, இயன்மை, வியன்மை என பலவகை சிறப்புகளை ஒருங்கேயுடையது என்கிறார் ஞா.தேவநேயப் பாவாணர்


அதுமட்டுமல்லாமல், தமிழ், ஆங்கிலம், பிராஞ்சு, இந்தி என பல மொழிகளில் புலமைபெற்றிருந்த முண்டாசு கவிஞன் மகாகவி பாரதி


யாமறிந்த மொழிகளிலே
தமிழ் மொழி போல்
இனிதாவது எங்கும் காணோம்;


என்று பாடியதும்,


தமிழுக்கும் அமுதென்று பேர் ! -- அந்தத்
தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் !



என்று பாவேந்தர் பாரதிதாசன் பாடியதும், தமிழ்மொழி எவ்வளவு சிறப்புவாய்ந்தது என்று ஒப்புநோக்க தக்கது.




மேலும், தமிழ்மொழி இயற்கையாகவே பேசுவதற்கு எளிமையாக அமைந்திருப்பதால் நாம் தமிழ் எழுத்துக்களை உச்சரிக்கும் போது சுவாசப் பையிலிருந்து குறைந்த காற்றே வெளியேறுகிறது. உலகிலுள்ள பல மொழிகள், பேசும் போது அதிகமான காற்று வெளியேற்ற கூடிய வகையில் அமைந்துள்ளன. பேசும் போது அதிகமான காற்று வெளியேறி செல்வதால் உடல் உறுப்புகளுக்கு அதிக தேய்மானம் ஏற்படுவதாக மொழியியலாளர் கூறுகின்றனர்.


அதுமட்டுமல்லாமல், நம் வாழ்நாளில் அதிக சுவாசக்காற்றை வெளியேற்றாமல் இருந்தோமனால் நீண்டநாள் வாழலாம் என்று ஓர் ஆய்வு எடுத்துக்காட்டுகிறது. ஆகவே தமிழ் மொழியைப் பேசினால் சுவாசக்காற்றை மிச்சப்படுத்தி நீண்டநாள் வாழலாம் என்பது எழுதப்படாத உண்மை!


அடுத்து, தமிழின் சிறப்புகளை எடுத்துரைக்கையில், திருக்குறளை விட்டுவைக்க முடியாது. இன்று உலகிலேயே அதிகாமான மொழிகளில் மொழிப்பெயர்க்கப்பட்ட நூல்களுள் திருக்குறளும் ஒன்று என்றால் அது மிகையாகாது. அறம், பொருள், இன்பம், என்னும் முப்பொருள் உண்மையை உலகிற்கு எடுத்துணர்த்தும் ஒரு பொதுமறையாகவே இது போற்றப்படுகிறது.


ஆறு அறிவு படைத்த மனிதன் வாழ வேண்டிய வாழ்க்கை நெறியினை திருவள்ளுவர் இதில் திட்டவட்டமாக வறையறை செய்துள்ளார். எத்தகைய வாழ்க்கையை வாழ விரும்பினாலும் அவரவருக்கு ஏற்ற வகையில் அறத்தை வடித்துக்கொடுத்துள்ளார்.



• அறத்தை உணரத் தலைபட்டவர்களுக்கு இஃது ஓர் அறநூலாகவும்,


• அரசியலை விரும்புவோர்க்கு ஒரு ஞானநூலாகவும்,


• கவிச்சுவையை விரும்புபவர்க்கு ஒரு காவியமாகவும்,


• காமச்சுவையை விரும்புபவர்க்கு ஒரு காமநூலாகவும்,


• வாழ்க்கை நெறியை விரும்புபவர்க்கு ஒரு வாழ்க்கை வழிகாட்டி நூலாகவும் திகழ்கிறது.


இது ஒன்று போதாதா தமிழ்மொழியின் சிறப்பை எடுத்துரைப்பதற்கு!


தமிழின் சிறப்பை உணர்ந்த மேலைநாட்டறிஞர் டாக்டர் ஜி.யு.போப், தமிழை நன்கு கற்று அதன் சிறப்பினை உணர்ந்ததால் தமது கல்லறையில் ‘ஒரு தமிழ் மாணவன்’ என்று பொறிக்கச் செய்தார்.


உலக மொழிகள் பலவற்றுக்கு எழுத்து, சொல், யாப்பு, அணி ஆகியன உண்டு. ஆனால் தமிழ் மொழிக்கு மட்டும்தான் பொருளுக்கு இலக்கணம் உண்டு. ஆகையால்தான் தமிழை ஐந்திலக்கணம் என்றனர். பொருளிலக்கணம் பிறந்த முறையினை ‘இறையனார் அகப்பொருள்’ எனும் நூல் வழி அறியலாம். மேலும் அகத்திண ஏழும் புறத்திணை ஏழும் பகுத்துத் தந்தது தமிழ்.


அக்கால மக்கள் வீர வாழ்க்கையையும் கொடைச் சிறப்பையும் கொண்டிருந்தனர் என்பதற்குச் சான்றாக திகழ்வது பத்துப்பாட்டும் எட்டுத் தொகையுமாகும். பிற மொழிகளில் இல்லாத அளவிற்கு தமிழில் மலையளவு அறநூல்கள் உள்ளன. ஆழ்ந்து அகன்று தேடினாலும் திருக்குறள் போல் வேறு மொழிகளில் அறநூலுண்டோ?.
மனத்தை நெகிழ்வித்து உருக்குவதற்குத் தேனூறும் தேவார திருவாசகம் தமிழில் வைரமாக ஒளிர்கின்றன.


வேற்று மொழிகளில் இல்லாத அளவிற்கு தொல்காப்பியம் தொடங்கி பன்னூறு இலக்கிய இலக்கண நூல்கள் தமிழுக்கு வளம் சேர்த்திருக்கின்றன. இன்றைய உலக மொழியான ஆங்கிலத்தில் கி.பி.14-ஆம் நூற்றாண்டில்தான் இலக்கியங்கள் தோன்றி இலக்கிய வளம் ஏற்பட்டது.


‘இனிமையும் நீர்மையும் தமிழென லாகும்’ - பிங்கலந்தை என்னும் நிகண்டு நூல்
‘தமிழ்’ என்னும் சொல்லின் பொருள் இனிமை, எளிமை, நீர்மை என்பதாகும்.


பெரும்பாலான வட இந்திய மொழிகளில் க,ச,ட,த,ப என்னும் ஐந்து வருக்கங்களில் ஒவ்வொரு ஒலிக்கும் நான்கு நான்கு எழுத்துகள் இருக்கின்றன. மேற்கூறப்பட்ட எழுத்துகளுள் தமிழில் ஒவ்வொன்றிற்கும் ஒரே எழுத்துதான். ஒலி வேறுபட்டபோதும் எழுத்து ஒன்றுதான். அதிக எழுத்துகளை நினைவில் வைத்துக் கொள்ளத் தேவையில்லை என்பதால் தமிழைக் கற்பது மிக எளிமையாகிறது.



தமிழ் எழுத்துகளின் ஒலிகள் மிக இயற்கையாக எளிமையாக அமைந்திருப்பதால் எவ்வித இடர்பாடுமின்றி ஒலிகளை ஒலிக்க இயலும். தமிழைப் பேசும்போது குறைந்த காற்றே வெளியேறுகிறது. எடுத்துக் காட்டாக சமஸ்கிருத மொழியை பேசும் பொழுது அதிகமான காற்று வெளியே செல்வதால் உடல் உறுப்புகளுக்கு அதிக தேய்மானம் ஏற்படுவதாக மொழியியலர் கூறுகின்றனர். இதைச் சோதனையாக சமஸ்கிருத மொழியை கற்கும்போது அனுபவித்து உணர்ந்தவர் மறைமலையடிகள்.


தமிழில் ற,ன,ழ,எ,ஒ ஆகிய ஐந்து எழுத்துகளையும் சிறப்பெழுத்துகள் என நற்றமிழ் இலக்கணம் எனும் நூலில் டாக்டர் சொ.பரமசிவம் குறிப்பிடுகிறார். இவ்வைந்து எழுத்துக்களைத் தவிர்த்து தமிழிலுள்ள பிற எழுத்துகள் வட மொழியிலும் உள்ளவை; இரண்டிற்கும் பொதுவானவை.
ற,ன,ழ,எ,ஒ ஆகிய ஐந்து எழுத்துகளூள் ‘ழ’வைத் தவிர்த்து பிற நான்கும் பிற திராவிட மொழிகளிலும் உலக மொழிகளிலும் காணப்படுகின்றன. ‘ழ’ கரம் தமிழைத் தவிர்த்து திராவிட மொழியான மலையாள மொழியிலும் உலக மொழிகளுள் பிரெஞ்சு மொழியிலும் மட்டுமே உள்ளது.

செங்கிஸ்கான் வரலாறு | Genghis Khan Biography

சிந்து சமவெளி நாகரிகத்தை போல், மெசொப்பொத்தேமியன் நாகரிகத்தை போல், சீனாவின் நாகரிகத்தை போல் எந்த ஒரு தொன்மையான நாகரிகத்தையும் மங்கோலியா கொண்டிருந்ததில்லை, தொன்மையான பல நாகரிகத்தில் உள்ள பல பிரம்மாண்டமான கட்டிடங்களோ கலைகளோ மங்கோலியாவில் இருந்ததில்லை. துணி நெய்யும் கலையோ, உலோகத்தை கையாளும் அறிவோ, மண் பாண்டங்கள் செய்யும் திறனோ, ஓவியங்கள் வரையும் நிபுணத்துவமோ அவர்களிடம் இருந்ததில்லை. எழுதக்கூட பலருக்கு தெரிந்ததில்லை. இருப்பினும் அத்தனை தொன்மையான நாகரிகங்கள் நிறைந்த பகுதிகளையும் மங்கோலியர்கள் தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்தனர்.


சீனா முதல் (பசிபிக் கடல் முதல்) மத்திய தரைக்கடல் கடல் (Mediterranean sea) வரை அவர்களின் ஆட்சி படர்ந்திருந்தது. 400 வருட காலத்தில் ரோமானியர்கள் கைப்பற்றிய பகுதியை விட அதிகமான பகுதிகளை மங்கோலியர்கள் 25 வருடத்தில் கைப்பற்றினார்கள்.


செங்கிஸ் கான் காலத்தில் இன்றைய மங்கோலியா என்று அழைக்கப்படும் பகுதியில் உள்ளவர்கள் புல்வெளி பழங்குடி மக்களாக (steppe tribe) பல பிரிவுகளாக இருந்தனர். பெண்கள் தங்களை விட வயது குறைந்த ஆண்களை திருமணம் செய்துகொள்ளும் வழக்கமும், பெண்ணின் பெற்றோருக்கு ஆண்கள் வரதட்சணை கொடுக்கும் வழக்கமும் அங்கு நடைமுறையில் இருந்தது.


ஒவ்வொரு இனமும் ஒருவருக்கொருவர் பெண்ணையும், பொன்னையும் களவாடிய வேளையில், செங்கிஸ் கான் சில புதிய நடைமுறைகளை புகுத்தினார்.
செங்கிஸ் கான் கால் ஊன்றிய காலம் முதல், பெண்களை களவாடும் முறைக்கு தடை விதித்தார். கைப்பற்றிய இனத்தின்/ பகுதியின்/ ராஜ்யத்தின் முக்கிய தலைகளை மட்டும் கொன்றுவிட்டு, ஏனையோரை தன்னுடன் இணைத்துக்கொண்டார்.

பிற தேசத்து பெண்களை தனது தேச மக்கள் திருமணம் செய்து கொண்டனர். குழந்தைகளை தத்தெடுத்துக்கொண்டனர். இதன் மூலம் புதிய உறவுகள் தோன்றியது.

பெரிய நாட்டை/ பகுதியை தன்னுடன் இணைத்த வேளையில், அந்நாட்டின் பெண்களை செங்கிஸ் கான் திருமணம் செய்துகொண்டார்.
தனது குடும்பத்தினருக்கு பதிவிகளை வழங்குவதை விட, தகுதியின் அடிப்படையில் தனது நாட்டில் உள்ள மக்களுக்கு பதவிகளை வழங்கினார்.
பிற நாட்டை கைப்பற்றும் வேளையில், ஒவ்வொரு வீரரும் பொருள்களை கொள்ளை அடிப்பதிலேயே அதிக கவனம் செலுத்தினர். இதனால் எதிரிகள் தப்பித்து, பின்னர் மீண்டும் தாக்க வந்தனர். ஆனால் செங்கிஸ் கான் இந்த வழக்கத்தை மாற்றி அமைத்தார்.



முதலில் எதிரிகளை முற்றிலுமாக துவம்சம் செய்யப்பட்டனர், பின்னர் பொருட்கள் கைப்பற்றப்பட்டது. எந்த ஒரு போரையும் ஒரு முறைக்கு மேல் புரியக்கூடாது என்பதில் செங்கிஸ் கான் தெளிவாக இருந்தார்.
பின்னர் கைப்பற்றப்பட்ட பொருட்கள் செங்கிஸ் கானின் முன் சமர்ப்பிக்கப்பட்டது. தனது பங்கை எடுத்துக்கொண்ட பின், அனைத்தும் சமமாக பிரிக்கப்பட்டு அனைவருக்கும் வழங்கப்பட்டது. இதனால் மக்களும் படை வீரர்களும் விசுவாசமாக இருந்தனர்.


போரில் இறந்த வீரர்களின் விதவை பெண்களுக்கும் பொருட்கள் வழங்கப்பட்டது. இதனால் தனது காலத்திற்கு பின்பும் செங்கிஸ் கான் தனது குடும்பத்தை கவனித்துக்கொள்வார் என்ற எண்ணம் போர் வீரர்களிடம் ஏற்பட்டது. குடும்பத்தை மறந்து மன்னருக்காக போரிட வீரர்கள் தயாராக இருந்தனர்.

ராணுவ முறை:

10 நபர் = 1 குழு (Squad)

10 குழு = 1 கழகம் (Company)

10 கழகம் = 1 பட்டாளம் (Battalion)

10 பட்டாளம் = 1 டுமேன் (Tumen)


10 நபர் கொண்ட குழுவில் பல இன மக்களை இடம்பெற செய்தார். அவர்கள் ஒன்றாக வசிக்க வேண்டும், ஒன்றாக பயிற்சி பெறவேண்டும், போர் களத்தில் ஒருவருக்கு ஒருவர் உதவிக்கொள்ள வேண்டும்.


ஒவ்வொரு கழகத்திலும், பட்டாளத்திலும், Tumen-யிலும் உள்ள படை வீரர்களின் உறவினர்கள் செங்கிஸ் கானின் கீழ் இருந்த ஒரு Tumen-னில் இருந்தனர். இதனால் மற்ற படை பிரிவுகளில் என்ன நடக்கிறது என்ற விஷயம் செங்கிஸ் கானின் காதுகளுக்கு எளிதில் எட்டியது. ஒவ்வொரு படை வீரரின் உறவினரின் எவரோ ஒருவர் செங்கிஸ் கானின் நேரடி படை பிரிவில் இருப்பதால் வீரர்கள் அனைவரும் ஆளுமைக்கு கட்டுப்பட்டு இருந்தனர்.


மங்கோலிய வீரர்கள் அணியும் ஆடையில், முன் புறம் மட்டுமே அம்பு துளைக்காத வகையில் திடமான மூலப்பொருளால் செய்யப்பட்டிருக்கும், பின் புற ஆடை அம்பு துளைக்கும் வகையில் இலகுவாகவே இருக்கும். எவரும் புறமுதுகிட்டு ஓடக்கூடாது என்பதே காரணம்.


இரவு பொழுதில் மலையில் தங்கும் ஒவ்வொரு படைவீரரும் 5 camp fire ஏற்படுத்திக்கொள்ளும் பழக்கமும் கடைபிடிக்கப்பட்டது. இதனால் படையின் எண்ணிக்கை மிகைப்படுத்தி காண்பிக்கப்பட்டது. எதிரிகளின் உறுதியையும் குலைக்க உதவியது.

குதிரையும் போர் தந்திரங்களும்:

மனிதர்களை விட மங்கோலியாவில் குதிரைகளே அதிகம் இருந்தது. (ஒரு நபருக்கு சுமார் 10 குதிரைகள்) போரில் குதிரைகளையே மங்கோலியர்கள் பயன்படுத்தினர் என்பது பலர் அறிந்ததே. குதிரைக்கு புல் (உணவு முக்கியம்) ஆதலால் ஒரு நாட்டின் மீது படையெடுக்க போகும் முன், ஒரு சிறு குழு, எதிரி நாட்டின் எல்லை வரை சென்று படையெடுப்புக்கான வழி தடத்தை (புல்வெளி நிறைந்த பகுதிகளாக) தயார் செய்துகொள்வர். திரும்ப வருவதற்கு மற்றொரு வழியையும் ஏற்படுத்திக்கொள்வர். (புல் தான் காரணம்).


காலாட்படை, குதிரைப்படை என்று பல நாடுகள் தனது படைகளை வைத்திருக்கும் வேளையில், மங்கோலியர்கள் குதிரையை மட்டுமே நம்பி இருந்தனர். எண்ணிக்கையில் அதிகமான அளவில் உள்ள நாட்டின் மீது படையெடுக்கும் போது, எதிரியை சீண்டிவிட்டு குதிரையில் ஓட ஆரம்பித்துவிடுவர். துரத்தி செல்லும் எதிரியின் குதிரைப்படை, குதிரையின் வேகத்திற்கு ஏற்றவகையில் சிதறி ஓடும், படையின் அடர்த்தி குறையும்.



இத்தனை கவசங்களுடன் (அதிகமான எடையுடன்) எதிரி நாட்டு குதிரையின் வேகம் குறையும், குதிரைகளும் எளிதில் களைப்படையும். வெற்றி உறுதி என்று மங்கோலியர்களை துரத்தி ஓடும் படை, நேரப்போக்கில் எடையை குறைக்க கவசங்களை கழற்றி எரியும்.


முன்னரே போர்க்களத்தை தேர்வு செய்து காத்திருக்கும் மங்கோலிய படைக்குமுன் சிறிது சிறிதாக வந்து சேரும் எதிரிகள் சுலபமாக களையெடுக்கப்படுவர்.


பின்னர் இந்த துரத்தல் பணி திசை மாறும், தோல்வி பயத்தில் கோட்டையை நோக்கி ஓடும் எஞ்சி இருக்கும் படைகளும் துவம்சம் செய்யப்படும். கோட்டையில் குறைவான எண்ணைக்கையில் உள்ள படைகளும் அழிக்கப்பட்டு, ராஜ்ஜியம் மங்கோலியர்களின் கையில் அகப்படும்.


சில சமயம் துரத்தி வரும் படையை அனைத்து திசைகளிலும் மங்கோலியர்கள் முற்றுகை செய்துவிடுவர். மறதியாக ஒரு பாதையை மட்டும் முற்றுகை இட மறந்ததை போல் ஒரு தோற்றத்தை எதிர்க்கு ஏற்படுத்துவர். இதனை பயன்படுத்தி தப்பிக்கும் எதிரிகள் சுலபமாக களையப்படுவர்.

மரக்கோட்டை (மரத்தினால் ஆன கோட்டை):

வழியில் கிடைக்கும் மரங்களை சாய்த்து, அதன் துணையுடன் கோட்டை சுவரை ஒட்டி (அம்பு பாயும் தொலைவுக்கு அப்பால்) உயரமான (மர) சுவரை மங்கோலியர்கள் அமைத்துவிடுவர். சுவருக்கு இந்தப்பக்கம் (மங்கோலியர்கள் பக்கம்) என்ன நடக்கிறது என்பது எதிரி நாட்டுக்கு தெரியாது. சில நாட்களில்/ மாதங்களில் கோட்டையின் உணவு/ நீர் இருப்பு குறைந்து விடும். (அண்டை கிராமங்களை முன்னரே தகர்த்ததால் அந்த கிராம மக்களின் ஜனமும் இந்த கோட்டையில் தான் தஞ்சம் புகுந்திருக்கும்). உணவு தட்டுப்பாடுடன் (கிராம மக்கள் கொண்டு சேர்த்த கதை) பீதியும் இணைத்த தருவாயில், நெருப்பு கல் ஏறி குண்டுகளும், புகையை ஏற்படுத்தும் பொருட்களும் கோட்டைக்குள் வீசப்படும் வீசப்படுவதன் மூலம் மேலும் குழப்பம் எழும். இதனை கைப்பற்றி மங்கோலியர்கள் எளிதில் கோட்டையை கைப்பற்றி விடுவார்.


தோற்கும் நாட்டில் தனக்கு தேவையானவர்களை (பொற்கொல்லர், ஓவியர், மொழிபெயர்ப்பாளர், etc etc) மங்கோலியர்கள் எடுத்துக்கொண்டு, எதற்கும் உதவாதவர்களை, அடிமையகளாக எடுத்துக்கொள்வார், மர கோட்டை அப்புறப்படுத்தப்படும், அடிமைகளின் துணையுடன் அடுத்த போர்க்களத்திற்கு அவைகள் எடுத்துச்செல்லப்படும்.


ஒரு ராஜ்யத்தில் தொடுக்கப்படும் போர் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் நடக்கும் (more than 2 front), இதனால் மூன்றவது இடத்தில் உள்ள இளவரசரால் தனது ஆளுமைக்கு உட்பட்ட இடத்தை விட்டு, போர் புரிந்துகொண்டிருக்கும் இரு இளவரசர்களும் உதவி புரியமுடியாது. மீறி சென்றால் மூன்றவது இடம் தாக்கப்படும். இந்த முறையில் எதிரியின் பலத்தை பிரிப்பதன் மூலம் மங்கோலியர்கள் வெற்றி சுலபமாகும்.

செங்கிஸ் கானின் சிறப்பு:

நாடு பிடிப்பதை விட தனது வீரர்களின் உயிரின் மீதே செங்கிஸ் கானுக்கு அதிக அக்கறை இருந்தது. ஒரு சாம்ராஜ்யத்தை தனது ஆளுமைக்கு கீழ் கொண்டுவர தூதர்கள் அனுப்பி வைக்கப்படுவர், இசைந்த நாடுகளிடம் இருந்து கப்பம் பெற்றுக்கொண்டு மங்கோலியப்படை பாதுகாப்பு அளிக்கும். தூதர்களை கொன்றவர்களை செங்கிஸ் கான் அழிக்காமல் விட்டதில்லை.


சீனா முதல் அராபிய வரை உள்ள பகுதிகளை தனது ஆளுமைக்கு கீழ் கொண்டுவந்திருந்தாலும், இரு முனைக்கும் இடையே பாதுகாப்பான முறையில் சுமுக வர்த்தகம் ஏற்படும் வழித்தடத்தை (பட்டுப்பாதை) செங்கிஸ் கான் உறுதிப்படுத்தினார்.


பெருட்கள் பல கிடைத்தாலும், குடில் வாழ்கை முறையையே செங்கிஸ் கான் இறுதிவரை வாழ்ந்து வந்தார். உயிருடன் இருக்கும் போது தனக்கென்று ஒரு பிரம்மாண்ட கோட்டையோ, இறந்த பின் ஒரு கல்லறையையோ அவர் அமைத்துக்கொள்ளவில்லை. செங்கிஸ் கான் உறைவிடம் இன்று வரை கண்டறியப்படவில்லை.


சிந்து நதி வரை படை எடுத்து வந்த மங்கோலிய படை, மேலே தொடர முடியாமல் தோற்கடிக்கப்பட்டது. இந்தியாவின் வெப்பம் காரணமாகவும், காற்றில் உள்ள ஈரப்பத்தினாலும் மங்கோலியர்களின் வில் வலுவிழந்தது, அதனால் அம்பின் (இலக்கின்) துல்லியமும் பாதித்தது.

Friday, January 5, 2024

நடிகனாக ஜெயித்தார், பலரை வாழவைத்தார்-விஜயகாந்த்

விஜயகாந்த் எனும் நடிகரை தாண்டி, தோற்றுபோன அரசியல்வாதியினை தாண்டி ஒரு நல்ல மனிதன், பலருக்கு உதவிய ஒரு வெள்ளை உள்ளம் கொண்ட மனிதன் இறந்துவிட்டான் என்பது நிஜமாகவே மனம் வலிக்கும் தருணம்

அவர் போராடி வளர்ந்தவர், அதிக படிப்பில்லை, கிராமத்து பின்புலம், கரிய நிறம், தமிழ்மொழி தாண்டி நடிக்க தயக்கம் என எவ்வளவோ பலவீனங்கள் இருந்தாலும் கமலஹாசனும் சரத்பாபுவும் மிரட்டிய காலங்களில்  கிராமத்து மனிதனாக போராடி வளர்ந்தவர்

அவரிடம் ஒரு உணர்ச்சி இருந்தது, ஒரு துடிப்பு இருந்தது, மெல்லிய வசீகரமும் இருந்தது அதை கொண்டு போராடி தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்

நடிகனாக சரியாக ஜெயித்தார், பலரை வாழவைத்தார், எவ்வளவோ இயக்குநர்களை உருவாக்கினார், காலத்தால் அவர் கெட்டாரே தவிர அவரால் கெட்டவர்கள் என யாரையும் காட்டமுடியாது

அவ்வளவுக்கு சினிமா உலகில் தனக்கென ஒரு நல்ல அடையாளத்துடனேதான் வலம் வந்தார்

ஆனால்  காலம் மிக பொல்லாதது,  அது சரியான நேரத்தில் சரியான யோசனைபடி நல்ல முடிவினை எடுத்தவனை தேரில் ஏற்றி பறக்க வைக்கும்

அப்படியே உரிய நேரம் சரியான முடிவினை எடுக்காதவனை அதன் ரதங்கள் வேகமாக  இழுத்து சென்று தன் சக்கரங்களில் கட்டி நசுக்கும்

காலம் அப்படியானது, பின்னால் வரும் காலத்தை முன்னால் அறியும் சக்தி யாருக்கும் இல்லை எனினும் அந்நேரம் அவன் எடுக்கும் முடிவினைத்தான் விதி என்பார்கள், ஊழ்வினை என்பார்கள், ஜாதக பலன் என்பார்கள்

அப்படி காலம் சரித்துபோட்ட ஒருவர் விஜயகாந்த், அவருக்கென ஒரு எதிர்பார்ப்பு ஒரு காலத்தில் இருந்தது

ஆனால் அவர் திணறினார், தனக்கு இருந்த அரசியல் எதிர்காலத்தை திமுகவும் அதிமுகவும் கூட்டு சேர்ந்து குழிபறிப்பதை கண்ணார கண்டும் அவரால் தடுக்கமுடியவில்லை

அவர் கொஞ்சம் யோசித்திருக்கலாம் தனக்கான பின்புல சக்தி அரசியலில் அவசியம் என சற்று சிந்த்தித்திருக்கலாம்

அவர் மட்டும் சரியாக சிந்தித்து பாஜக பக்கம் சரிந்திருந்தால் இந்நேர்ம் அவர்தான் ராஜா சந்தேகமில்லை, பெரும் உயரம் அவருக்கு கிடைத்திருக்கும்

ஆனால் காலத்தை கணிக்க தவறினார், தனக்கொரு பெரும் பின்புலம் அவசியம் என்பதை யோசிக்க தவறினார், சினிமாவின் பலம் ஒன்றே அரசியலில் தன்னை காக்கும் என தவறான கணக்கிட்டார்

அதையும் தாண்டிகுடும்பத்தாரை முன்னிறுத்தி இன்னும் வீழ்ந்தார்

சினிமாவில் தன் காலால் பலரை உதைத்தே வளர்ந்த அவர் கால்விரல் வெட்டபட்டது என்பதையும், சிவாஜி கணேசனுக்கு பின் அணல் பறக்கும் வசனங்களை அசராமல் பேசிய அவரால் பேசமுடியவில்லை என்பதும் அவர் வீழ்ச்சியின் காட்சிகள்

இனி அவர் இல்லை, விஜயகாந்த் என சுமார் ஐம்பது வருடமாக தமிழக மக்களின் குடும்பத்தில் ஒருவராக இருந்த இனி அவர் இல்லை

எவ்வளவோ வசனங்கலை சிவாஜிக்கு பின் கம்பீரமாக பேசிய அவர் இதோ சடலமாக கிடக்கின்றார், துள்ளி துள்ளி அடித்த அவரின் கால்கள் முடங்கி கிடக்கின்றன‌

ஓயாமல் உழைத்தவன் என சொல்லபட்ட நடிகர் தீரா ஓய்வுக்கு சென்றுவிட்டார்,  உணவாகவும் பணமாகவும் அள்ளி அள்ளி கொடுத்த கரங்கள் அசையாமல் கிடக்கின்றன‌

தன் கர்மாவினை முடித்து அவர் கிளம்பிவிட்டார்

இது அவரின் நினைவில் மூழ்க வேண்டிய தருணம் 

ஆம்  அவருக்கும் ஒரு காலம் இருந்தது, அந்த காலத்தில் ஒரு வரலாறு இருந்தது என்பதும், அதையெல்லாம் விட அவருக்கு முரட்டு தைரியம் இருந்தது என்பதும் நிஜம்

அதை சற்று பின்னோக்கி பார்க்கலாம்

தமிழக நடிகர்களில் ஓரளவு பொதுநலனும் தைரியமும் கொண்ட நடிகர் அவர், தமிழை தவிர எந்த மொழிபடத்திலும் அவர் நடித்ததில்லை

கருப்பு நிறம், பெரும் திறமையாளர் என சொல்லமுடியாவிட்டலும் அவர் நடிப்பில் ஒரு உணர்ச்சி இருந்தது. அந்த வேகமும் உணர்ச்சியும்தான் அவரை உச்சிக்கும் கொண்டு சென்றது

உச்ச நடிகராகவும் இல்லாமல் அதே நேரம் காணாமலும் போகாமல் கங்கை ஓடும் நாட்டில் காவேரி போல அவரும் ஓடிகொண்டிருந்தார்

பெரும் சர்ச்சையிலோ ஏதும் முறைகேடுகளிலோ சிக்காத மிக சில நடிகர்களில் அவரும் ஒருவர். சினிமா எனும் மாய சுழலில் தன்னை தக்கவைத்து கொண்ட வெகுசிலரில் அவரும் ஒருவர்

கருணாநிதி தலமையில் திருமணம் செய்யும் அளவிற்கு அவருக்கு தமிழக சூழலும் தெரிந்திருந்தது.

எந்த சர்ச்சையிலும் சிக்காமல் மிக வேகமாக வளர்ந்தார், உணர்ச்சி மிக்க நடிப்பால் புரட்சி கலைஞர் எனவும் அழைக்கபட்டார்

ஒரு விஷயம் நிச்சயமாக சொல்லமுடியும். நிச்சயம் விஜயகாந்த் நல்ல நிர்வாகி

எம்.ஜி ராமசந்திரனும் , சிவாஜியும் இது நடக்காது என தூர எறிந்த நடிகர் சங்கத்தை, ரஜினியும் கமலும் ஏற்க தயங்கிய பொறுப்புகளை அவர் ஏற்று நடத்தி சங்கத்தை கடனில் இருந்து மீட்டார்

நடிகர் சங்கம் வித்தியாசமானது, புரிந்துகொள்ளமுடியா குழப்பம் கொண்டது, எம்ஜிஆரை வள்ளல் என்பார்கள், பிரபல போராளிகளுக்கே  100 கோடி கொடுத்த கொடையாளன் என்பார்கள்

ஆனால் நடிகர் சங்கத்து சில லட்ச கடனை அவர் கட்டவில்லை, இவ்வளவிற்கும் அவரிக்கு ஏணியாக இருந்ததே அந்த திரையுலகம், ஏன் எம்ஜிஆர் அந்த கடனை கட்டவில்லை என்பது தெரியவில்லை

சிவாஜி, ஜெமினி என சொத்துக்களை குவித்த நடிகர்களும், பெரும் பணம் குவித்த ரஜினியும், 6 வயதிலே சம்பாதிக்க தொடங்கிய கமலும் முன்வரவில்லை

ஆனால் நடிகர் சங்க பொது நலனுக்காக வந்து அதை செய்தும் காட்டியவர் விஜயகாந்த்

இப்படிபட்ட ஆர்வம்தான் அவரை அரசியலுக்கும் இழுத்தது. 

ஆனானபட்ட மூப்பனாரே அய்யோ என அலறி தன் கட்சியினை காங்கிரசோடு இணைக்கும் அளவிற்கு அவருக்கு மர்ம அடி முதுகில் விழுந்தது அப்படிபட்ட அரசியல் இது

இன்னொரு பக்கம் ஜெயா இரும்பு பெண்மணி, இன்னொரு பக்கம் சிரித்துகொண்டே தந்திர அரசியல் செய்யும் கருணாநிதி

இவர்களை எதிர்த்து தைரியமாக கட்சி கண்டது விஜயகாந்த் ஒருவர்தான். அன்றும் ரஜினி அமைதி, மகா அமைதி தியானம்

 மய்யம் முழுக்க‌ அடக்கமாகி இருந்தது

அன்றும் திரைதுறையில் இருந்து  விஜயகாந்துக்கு ஒரு ஆதரவுமில்லை

உண்மையில் விஜயகாந்த் யாரையும் மிரட்ட கட்சி தொடங்கவில்லை, மக்களுக்கு ஏதோ செய்ய நினைத்தார்.

மனதில் பட்டதை பேசியதில் தமிழக அரசியல்வாதிகளில் காமராஜருக்கு அடுத்த ஒருவர் விஜயகாந்த் மட்டும்தான் என்பதை மறுக்கமுடியாது.

அவரின் மண்டபம் எல்லாம் இடிக்கபட்டிருக்க வேண்டியதே இல்லை, இன்று அதன் அருகே நின்று பார்த்தாலும் குழந்தையே சொல்லும், இந்த சாலை ஏன் இங்கு வளைகின்றது?

அரசியல் என்பது மர்ம சதுரங்கம், அதில் விஜயகாந்த் தடுமாறினார். நடிகராக ஜொலித்த அவர் பின்னாளில் அரசியலில் கலக்கினார், எதிர்கட்சி தலைவராக கூட இருந்தார்

அன்று ஜெயலலிதா முன்னால் தம் கட்டி நின்ற விஜயகாந்தினை மறக்க முடியாது, இன்றைய எதிர்கட்சி தலைவர் எதற்கெடுத்தாலும் ஓடிவந்து நடுரோட்டில் அமரும் பொழுது, அன்று தில்லாக நாக்கை கடித்து நின்ற விஜயகாந்த் நினைவுக்கு வந்துதான் போவார்

அரசியலின் மர்ம நகர்வில் விஜயகாந்த் சிக்கினார், ஒருவித அதீத நம்பிக்கையும் அவருக்கு வந்தது

விளைவு படுதோல்வி அடைந்தார், மீண்டு வந்துவிடலாம் ஆனால் உடல்நலம் ஒத்துழைக்கவில்லை

நோயின் தாக்கத்தை அவர் குடிகாரர் என்றார்கள், ஏன் ரஜினிக்கு இருந்த குடிபழக்கம் ஊர் அறிந்தது, சிங்கப்பூர் சிகிச்சைக்கு அதுதான் காரணம்

ஆனால் யாராவது அவரை சொல்வார்களா? இல்லை

விஜயகாந்த் குடிகாரர் என்பது ஊதிபெருக்கபட்ட பிம்பம், நோயின் தாக்கமே அவரை வீழ்த்தியது

இப்பொழுதும் விஜயகாந்திற்கு வாய்ப்பு இருந்தது, பாஜக பக்கம் சென்றிருந்தால் அவரின் நிலை பெரிதும் உயர்ந்திருக்கும் ஆனால் அப்படி செய்யாமல் தன்னை அவரே சரித்து கொண்டார்

ஒரு விஷயத்தில் விஜயகாந்த் மிக பரிதாபமானவர்

அவர் தமிழகத்துக்கு ஏதோசெய்ய நினைத்தார், காலம் அறியாமல் இறங்கியதில் திணறினார், உண்மையில் அவர் அரசியலுக்கு வந்து அவர் இழந்துதான் மிக அதிகம்

அதில் சொத்துக்கள், நண்பர்கள், உடல்நலம் என ஏகபட்ட இழப்புகள் உண்டு,

வடிவேல் கூட அவருக்கு எதிரியானார்

அவர் எந்த நடிகர் சங்கத்திற்கு உழைத்தாரோ அது கொஞ்சமும் கண்டுகொள்ளவில்லை

அவரின் 40ம் ஆண்டு விழாவினையும் திரையுலகம் கண்டுகொள்ளவில்லை, நன்றிகெட்டதனத்திற்கு இவ்வுலகில் ஒரு உதாரணம் வேண்டுமென்றால் தமிழக திரையுலகத்தை சொல்லலாம்

அரசியலை விடுத்து முன்னொரு காலத்தில் சங்கத்தினை மீட்டவர் என்ற வகையிலாவது அவரை கொண்டாடியிருக்க வேண்டும்

இந்த பூவுலகில் நன்றி ஒரு மில்லி கிராம், அல்லது அரை மிமீட்டர் கூட இல்லாத ஒன்று தென்னிந்திய நடிகர் சங்கம்

அதற்காக உழைத்த மனிதனை இப்படி மறக்க கூடாது, நிச்சயம் அந்த நன்றி மறந்த சங்கம் உருப்படாது.

அட அவர்களுக்குத்தான் நன்றி இல்லை

விஜயகாந்திற்கும் காமராஜருக்கும் கிட்டதட்ட ஒரே ராசி

அவர்கள் யாருக்கெல்லாம் உழைத்தார்களோ அவர்களே நன்றிமறந்து ஓட அடிப்பார்கள்

சினிமா உலகமும் நன்றி மறந்தது, தமிழகமும் விஜயகாந்தினை புரிந்துகொள்ள தடுமாறியது

இன்று அவரைபோல் எதிர்கட்சி தலைவர் வேண்டும் என தேடுகின்றது. நிச்சயம் சட்டசபையில் அப்படி ஒரு மனிதன் தைரியமாக‌ இனி சீறபோவதில்லை

சினிமாவிலும் அரசியலிலும் எத்தனையோ பேரை கைதூக்கிவிட்டவர் விஜயகாந்த்

ஆக போலிகளுக்காக உழைத்தாலும் தன்னை அறியாமல் நன்றிகுரிய சிலரை சம்பாதித்திருக்கின்றார்

விஜயகாந்த் சம்பாதித்ததிலே மிக உயர்ந்தது இம்மாதிரி ரசிகர்கள்தான்.

இனி விஜய்காந்த் இல்லை என்பதை நினைக்கும் போது கண்ணீர்தான் முட்டுகின்றது

எப்படியோ வாழ்ந்து எங்கோ சென்றிருக்க வேண்டிய மனிதர் வார்த்தை பேசமுடியாமல் கால்களில் விரல் இழந்து பொம்மை போல் அமர்ந்திருந்து இப்போது விடைபெற்றதெல்லாம் அவரின் விதிபயன் என்பதை தவிர சொல்ல ஒன்றுமில்லை

இரக்கமில்லா காலம் எப்படியெல்லாமோ அவரை இழுத்து சென்று ஒடுக்கி அடக்கி வைத்துவிட்டது

விஜயகாந்தின் பரிதாப வீழ்ச்சிசொல்வது ஒன்றுதான்

இனி வரும் காலத்தில் தமிழகத்தில்  தேசியம் பேசாமல் மாநில திராவிட அரசியல் பேசி ஒரு நடிகன் அரசியலுக்கு வந்தால் எப்படி வீழ்வான் என்பதுதான் அது

ஆம், தேசாபிமானம் கொண்டு முழு இந்தியனாக ஒரு நடிகனோ அல்லது நடிகன் அல்லாதவனோ கட்சி தொடங்கி, இனியும் திராவிடம் தமிழகம் என எதையோ சொல்லி குழப்பி  அரசியல் செய்தால் என்னாகும் என்பதற்கு விஜயகாந்தே சாட்சி

அவரின் இப்போதைய நிலை முதல்வர் கனவில் வலம் வரும் எல்லா தமிழ்நடிகர்களுக்கும் பெரும் எச்சரிக்கை சாட்சி

இனி ஒரு நடிகனோ இல்லை மக்கள் அபிமானம் பெற்றவனோ தேசியம் பேசாமல் மாகாண பழைய திராவிட பல்லவிபாடி மாகாண அரசியல் ஆட்டத்தில் சிக்கினால் என்னாவான்? இந்து ஆதரவினை பகிரங்கமாக பேசாமல் மதசார்பற்ற, முற்போக்கு, சமதர்மம் என பேசினால் அவனும் அவன் கட்சியும் என்னாகும் என்பதற்கு விஜயகாந்த் பெரும் எடுத்துகாட்டு

எப்படி தலைவனாக உயரவேண்டும் என பெரும் உதாரணமாக வரவாய்ப்பு இருந்த விஜயகாந்த், தேசிய அடையாளம் பெறாமல் திராவிட அரசியலில் விழுந்து வீழ்ந்து சரிந்து மிக தவறான உதாரணமாகிவிட்டதெல்லாம் வலியான விஷயங்கள்

இன்றிருக்கும் நடிகர்களுக்கும் இதர அரசியல் இம்சை அபிலாஷை கொண்டவர்களுக்கும் வாழும் சாட்சியாக இருந்த விஜயகாந்த் விடைபெற்றுவிட்டார்

வறுமை,சினிமா என போராடி வென்று பின் அரசியலில் தோற்று பின் நோயுடனும் தோற்றுபோன அவர் கிளம்பிவிட்டார்

அவர் வணங்கிய மதுரை மீனாட்சி அம்மனும், சொக்கநாதரும், ஆண்டாளும், அந்த மலைகோவில் அழகரும் அந்த ஆத்மத்துக்கு நற்கதியினை அருளட்டும், அந்த ஆத்மா நற்கதி அடையட்டும்

நடிகர்களில் நாட்டுபற்றோடும், தெய்வபற்றோடும் வந்தவர் அவர்,  சினிமாவில் அதையே பின்பற்றினார்

அவ்வகையில் தேசாபிமானிகளின் ஒரு இரக்கமான பார்வை எப்போதும் அவர்மேல் உண்டு, அந்த பார்வை இப்போது கண்ணீர்துளிகளால் மறைந்து ஈரமாகின்றது, அந்த ஈரகண்களின் மங்கிய நிழலில் தெரியும் விஜயகாந்தின் புன்னகை பூத்த முகத்துக்கு தேசாபிமானிகள் ஆழ்ந்த அஞ்சலி செலுத்துகின்றார்கள்

சினிமா, அரசியல், குடும்ப சொந்தபந்தம், கட்சி, பத்திரிகை ஊடகம் , தமிழக மக்களின் மடமை என எல்லாவற்றின் இன்னொரு பக்கத்தை காட்டிவிட்டு விடைபெற்று செல்லும் அவருக்கும் ஆழ்ந்த அஞ்சலிகள்

பரந்தாமனின் அருள் அவருக்கு இருந்தது, பூரணமாக இருந்தது என்பதை மார்கழி மரணம் காட்டிவிட்டது

1980களில் வந்த கள்ளங்கபடமில்லா அந்த புன்னகையும்,  அப்பாவிதனமான சிரிப்பும், துடிப்பான அந்த குரலும் மறக்க கூடியது அல்ல, அந்த நினைவுகளை  சில சொட்டு கண்ணீர் வராமல் எப்படி கடக்க முடியும்?

செம்பருத்திப்பூ,கிராம்பு,பாகற்காய்,மணத்தக்காளி,கடுக்காய்-மூலிகை மருந்து



சிறு உடல் பாதிப்புகளுக்கு மருத்துவரைத்தான் தேடிப் போகவேண்டும் என்று அவசியமில்லை. ஒவ்வொரு மூலிகையும் ஒரு அற்புத மருந்தாகும். நம் கண் முன்னே பல மூலிகைகள் இருந்தாலும் அதன் பயன் மற்றும் நன்மைகளை தெரிந்து கொள்ள முற்படுவதில்லை. இயற்கையில் கிடைக்க கூடிய பொருட்களின் பயன்களை பற்றி அறிந்துகொள்வோம்.


செம்பருத்திப்பூ: அனைத்து வகையான இதய நோய்க்கும் சிறந்தது. செம்பருத்திப்பூ சாப்பிட்டால், தங்க பஸ்பம் சாப்பிடுவதை போல. ஏனென்றால் செம்பருத்திப் பூவில் தங்கச்சத்து இருக்கிறது. வயிற்று வலி, வயிற்றுப் போக்கு, வயிற்று உப்புசம் பிரச்னைகளுக்கு, செம்பருத்திப்பூ கஷாயம் நல்ல மருந்து.

கிராம்பு: சமையல் உப்புடன் சிறிது கிராம்பை சாப்பிட்டால் தொண்டை எரிச்சல், கரகரப்பு நீங்கி தொண்டை சரியாகும். தொண்டை அடைப்பால் ஏற்படும் எரிச்சலைத் தவிர்க்க, சுட்ட கிராம்பு மிகச் சிறந்தது.

பாகற்காய்: குடல்வால் புழுக்கள் அழிக்கும். சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும். கல்லீரலை பாதுகாக்கும். தினந்தோறும் பாகற்காய் சாறு அருந்தினால் கல்லீரல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் நீங்கும். அதிலும் ஒரு வாரம் தொடர்ந்து குடித்து வந்தால், இதன் பலனைக் காணலாம்.


மணத்தக்காளி: குடல் புண், வாய்புண், தொண்டைபுண் நீங்கும். கபம் கரையும். ஆஸ்த்துமா, நீரிழிவு, காசம் முதலிய நோய் உடையவர்கள், மெலிந்த உடலினை உடையவர்கள் அனைவருக்கும் இது சிறந்தது.

கடுக்காய்: கடுக்காய்த் தூளை நீரிலிட்டு கொதிக்க வைத்து ஆற வைத்து அந்த நீரால் ஆசன வாயைக் கழுவி வர மூல எரிச்சல் புண் ஆகியன ஆறும். தினசரி ஒரு ஸ்பூன் அளவு இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வர நோயில்லா நீடித்த வாழ்க்கையைப் பெறலாம்.

தினம் ஒரு மூலிகை-செந்துருக்கை

 *


 *செந்துருக்கை*   வட இந்திய பகுதிகளில் பயிரிடப்படும் ஒரு எண்ணெய் வித்து தாவரம் குசும்பா செடி எனவும் அழைக்கப்படும் செம்மஞ்சள் நிற மலர்களை உடைய து விதைகளில் இருந்து சமையலுக்கு பயன்படும் இளம் மஞ்சள் நிற எண்ணெய் கிடைக்கும் செடி பூ விதை வேர் ஆகியவை மருத்துவ குணம் உடையது மலமிளக்கியாகவும் சிறுநீர் பெருக்கியாகவும் செயல்படும் பூ இதழ்களை உலர்த்தி பொடித்து ஒரு தேக்கரண்டி அளவாக காலை மாலை கொடுத்து வர காமாலை தீரும் பூ இதழ்களை தேனில் அரைத்து பூசி வர படைகள் ஆறும் சமூகத்தை நல்லெண்ணையில் இட்டு காய்ச்சி வடிகட்டி சொறி சிரங்குகளுக்கு தடவ அவை ஆறும் கை கால் பிடிப்பு பரிசு வாதம் கணுக்களில் தோன்றும் வீக்கம் வலி ஆகியதற்கு தடவ குணமாகும் 10 கிராம் உலர்ந்த பூ இதழ்களை அரை லிட்டர் நீரில் இட்டு முந்நூறு மில்லியாக காய்ச்சி வடிகட்டி காலை மதியம் மாலை 50 மில்லி அளவாக சாப்பிட்டு வர காமாலை நீர் கோவை கை கால் பிடிப்பு ஆகியவை குணமாகும் நன்றி.

கொத்தமல்லி இலையில இவ்ளோ இருக்கா?


கொத்தமல்லி இலையில இவ்ளோ சத்து இருக்கா?... வாரத்துல மூனு நாள் சாப்பிட்டா என்ன நடக்கும்...

கொத்தமல்லி இலைகள் ஏராளமான மருத்துவ குணங்களைக் கொண்டு உள்ளது. கொத்தமல்லி தாவரத்தின் தண்டு, இலை மற்றும் வேர் என அனைத்தும் மருத்துவ பயன் கொண்டவை. கொத்தமல்லி இலைகளை இந்தியாவில் உள்ள மக்கள் தங்கள் சமையல்களில் அதிகமாக பயன்படுத்துவது உண்டு. கொத்தமல்லி இலையின் அனைத்து பகுதிகளும் உண்ணக்கூடியவையாக உள்ளன. கொத்தமல்லி விதைகள் தனியா என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இந்த மூலிகை கி. மு 5000 க்கு முன்பு இருந்தே பயன்படுத்தப்பட்டு வருகிறது. சரி வாங்க கொத்தமல்லி இலைகளின் நன்மைகள் பற்றி நாம் அறிந்து கொள்வோம்.

​கொத்தமல்லி இலைகளின் ஊட்டச்சத்து அளவுகள்

கொத்தமல்லி இலைகளில் விட்டமின் ஏ, சி என எல்லா விட்டமின்களும் உள்ளன. கொத்தமல்லி இலைகளில் நார்ச்சத்துக்கள், இரும்புச் சத்து, மாங்கனீஸ், கால்சியம், விட்டமின் கே, பாஸ்பரஸ் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.


கொத்தமல்லி இலைகளில் 11 அத்தியாவசிய எண்ணெய்கள் காணப்படுகிறது. இதில் நிறைவுற்ற கொழுப்பு மிகக் குறைந்த அளவே உள்ளது. இதில் லினோலிக் அமிலம் காணப்படுகிறது. இதில் ஏராளமான சுகாதார நன்மைகள் காணப்படுகிறது. NIN இன் படி, 100 கிராம் கொத்தமல்லி இலைகளில் 31 கிலோகலோரி, 2 கிராம் கார்போஹைட்ரேட், 4 கிராம் புரதம், 0.7 கிராம் கொழுப்பு, 146 மி.கி கால்சியம், 5.3 மி.கி இரும்பு, 4.7 கிராம் நார்ச்சத்துக்கள் , 24 மி.கி வைட்டமின் சி, 635 மி.கி வைட்டமின் ஏ போன்றவை உள்ளது.

​ஆரோக்கியமான கண் பார்வையை தருகிறது


ஆரோக்கியமான கண் பார்வைக்கு கொத்தமல்லி இலைகள் சிறந்தது. ஏனெனில் கொத்தமல்லி இலைகளில் விட்டமின் ஏ, விட்டமின் சி, விட்டமின் ஈ மற்றும் கரோட்டினாய்டுகள் போன்றவை உள்ளன. இது நமக்கு நல்ல கண் பார்வையை அளிக்கிறது. கொத்தமல்லியின் தினசரி நுகர்வு வயது தொடர்பான மாகுலர் சிதைவை தாமதப்படுத்தவும், வெண்படலத்தை குணப்படுத்தவும் உதவுகிறது.

​நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க


கொத்தமல்லி இலைகளில் விட்டமின் சி மற்றும் விட்டமின் ஈ, விட்டமின் ஏ சத்துக்கள் உள்ளன. இவை நம் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. விட்டமின் சி இரத்த வெள்ளை அணுக்களை திறம்பட செயல்பட வைக்க உதவுகிறது. இரும்புச் சத்தை உறிஞ்சுவதற்கு உதவுகிறது.

​இரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்க


கொத்தமல்லி இலைகளின் பிரகாசமான பச்சை நிறத்திற்கு அதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்கள் தான் காரணமாகும். இது நொதி செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது. இது இன்சுலின் சுரப்பை தூண்டுகிறது. இது இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவையும் குறைத்து விடும். கொத்தமல்லி தண்ணீரை தினமும் குடிப்பது உயர் இரத்த சர்க்கரை அளவால் பாதிக்கப்பட்ட நபருக்கு நன்மை அளிக்க பயன்படுகிறது.

கெட்ட கொழுப்பை குறைக்க உதவுகிறது


கொத்தமல்லி இலைகளை வழக்கமாக உட்கொள்வது எல். டி. எல் போன்ற கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க பயன்படுகிறது. நல்ல கொழுப்பை மேம்படுத்த உதவுகிறது. கொலஸ்ட்ரால் பிரச்சினை உள்ளவர்களுக்கும் உடல் பருமன் பிரச்சினை உள்ளவர்களுக்கும் மிகச் சிறந்தது.

​எலும்பு ஆரோக்கியத்தை பலப்படுத்த


கொத்தமல்லி இலைகளில் எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடிய கால்சியம், மாங்கனீஸ், மக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற தாதுக்கள் இதில் அதிகளவு காணப்படுகிறது. கொத்தமல்லி இலைகளின் அழற்சி எதிர்ப்பு செயல்பாடு எலும்பை மூட்டுவலி தொடர்பான வலியிலிருந்து பாதுகாக்க பயன்படுகிறது.

​குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த

கொத்தமல்லி இலைகளில் நார்ச்சத்துக்கள் அதிகளவில் காணப்படுகின்றன. இது செரிமான பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்க உதவுகிறது. வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, குடல் பிடிப்பு, வாயு அல்லது குமட்டல் போன்ற பல்வேறு செரிமான பிரச்சினைகளுக்கு உதவுகிறது.

சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த

இரும்பு, வைட்டமின் ஈ மற்றும் வைட்டமின் ஏ ஆகியவற்றின் சக்தியாக இருப்பதால், இது சருமத்தை சேதப்படுத்தும் ஃப்ரீ ரேடிக்கல்களுக்கு எதிராக போராடுகிறது. கொத்தமல்லி இலைகள் எண்ணெய் சருமத்திற்கு ஒரு தீர்வாக செயல்படுகிறது. இதன் ஆன்டி செப்டிக், ஆன்டி மைக்ரோபியல் மற்றும் பூஞ்சை பண்புகள் சருமத்தை ஆற்றவும், குளிர்விக்கவும் உதவுகிறது.

கொத்தமல்லி இலைகளை புத்திசாலித்தனமாக பயன்படுத்துவது எப்படி

கொத்தமல்லி இலைகளை உங்கள் உணவில் பருப்புகள், சாம்பார், சப்ஜிகள், சாலட்டுகள் அல்லது ரைதாக்களில் சேர்த்து முயற்சிக்கலாம். கொத்தமல்லி பேஸ்ட்டை உங்க சருமத்தில் தடவி 15 நிமிடங்களுக்கு பிறகு கழுவுங்கள். ஒரு நாளைக்கு ஒரு கிளாஸ் ஜூஸ் என பருகி வரலாம். 1 அல்லது 2 டீ ஸ்பூன் சாற்றை மோரில் கலந்து குடிக்கலாம்.


கொத்தமல்லி இலைகளைக் கொண்டு காலை உணவு மற்றும் ஸ்நாக்ஸ் வகைகளை தயாரித்து வரலாம். தனியா பரோட்டா, கொத்தமல்லி தக்காளி சால்சா, கொத்தமல்லி வடை போன்றவற்றை நீங்கள் சாப்பிட்டு வரலாம்.


கொத்தமல்லி இலைகள் அரோமேட்டிக் நறுமணம் கொண்டது. இதை நீங்கள் பருப்பு, சப்ஜி, சூப் மற்றும் கறிகளில் சேர்த்து பயன்படுத்தி வரலாம். கொத்தமல்லி இலைகள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கவும் சருமத்தை ஆற்றவும், சீரண சக்தியை எளிதாக்கவும், இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும், எலும்பு ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது.


கொத்தமல்லியின் (Coriander) இலை, தண்டு, வேர் அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டவை. சாம்பார், ரசம் போன்ற தமிழர் சமையலில் இதன் விதைகள் பயன்படுகின்றன. கொத்தமல்லி விதையை தனியா என்றும் அழைக்கின்றனர்.

கொத்தமல்லி இலையை தினமும் அளவோடு உணவில் சேர்துக்கொள்வது மிகவும் நல்லது அது நரம்பு, எலும்பு மற்றும் தசை மண்டலங்களில் ஏற்படும் பாதிப்புகளை குணமாக்கும். இது நன்கு பசியைத் தூண்டும் ஒரு மூலிகைத் (Herbal) தாவரம். வாயு பிரச்சனையை குணமாக்கும்.


கொத்தமல்லியின் மருத்துவ பயன்கள்!கொத்தமல்லி இலையில் உள்ள கால்சியம் (Calcium), இரும்பு (Iron) உள்ளிட்ட சத்துக்கள் இணைந்து செயலாற்றும்போது, ரத்தக் குழாய்களில் உள்ள அழுத்தம் நீங்கி, ஓய்வு பெறுகிறது. இதன்மூலம், இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருப்பதுடன் மாரடைப்பு, இதய நோய்க்கான வாய்ப்பும் குறைகிறது.

கர்ப்பிணிகள் கர்ப்பம் தரித்த மாதத்தில் இருந்து சாப்பிட்டு வந்தால் குழந்தை மிக ஆரோக்கியமாக வளரும். குழந்தையின் எலும்புகள், பற்கள் உறுதி அடையும்.

கொத்தமல்லி இலையில் இரும்புச்சத்து இருப்பதால், இரத்தசோகை (Anemia) வருவதற்கான வாய்ப்புக் குறைகிறது. உடலின் ஆற்றலை அதிகரிக்க, எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு, உறுப்புக்களின் இயல்பான இயக்கத்துக்கு என்று பெரிதும் உதவுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

எலும்புகளின் ஆரோக்கியத்துக்குத் தேவையான விட்டமின் E (Vitamin E) இதில் நிறைவாக உள்ளது. செரிமானத்திற்க்கு உதவும் என்சைம்கள் (Enzymes) சுரப்பதைத் தூண்டுவதைப்போல, இன்சுலின் சுரப்பையும் கொத்தமல்லி இலை தூண்டுகிறது. இதன்மூலம், ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு கட்டுக்குள் வருகிறது. எனவே, சர்க்கரை நோயைத் தவிர்க்க விரும்புகிறவர்கள், சர்க்கரை நோயாளிகள் கொத்தமல்லி இலையைத் தினமும் சேர்த்துக்கொள்ளலாம்.





இதில் உள்ள விட்டமின் A, C, பாஸ்பரஸ் (Phosparas) உள்ளிட்ட தாதுஉப்புக்கள், அத்தியாவசியக் கொழுப்பு அமிலங்கள் பார்வைக் குறைபாடுகள் வருவதற்கான வாய்ப்பைக் குறைக்கின்றன. கண்ணில் ஏற்படக்கூடிய அதிகப்படியான அழுத்தத்தைப் போக்குகிறது.

இரவில் நன்றாக தூக்கம் வர கொத்தமல்லியை சேர்த்துக்கொண்டால் நல்ல பலனை தரும். உடல் சூட்டைக் குறைக்க கொத்தமல்லி இலையை ஒரு கைபிடி எடுத்து நன்கு கழுவி மென்று தின்றால் உடல் சூடு குறையும் மற்றும் பசியை தூண்டி விடும்.

வயதாகும்போது ஏற்படக்கூடிய பார்வைக் குறைபாடுகளைத் தாமதப்படுத்துகிறது. கொத்தமல்லி (Coriander) இலையைத் தொடர்ந்து சாப்பிட்டுவருபவர்களுக்கு செரிமானப் பிரச்னை பெரும் அளவுக்குக் குறைந்திருப்பதை ஆய்வுகள் உறுதிசெய்துள்ளன.