Friday, March 1, 2024

தைவேளை - தினம் ஒரு மூலிகை

 *தைவேளை* தாவரவியல் பெயர்:Gynandrodsis pntaphylla தைவேளை (அ) நல் வேலை என்று அழைப்பார்கள் தீராத ஒரு பக்க தலைவலிக்கு சிறிது இலை எடுத்து அதனுடன் சிறிய வெங்காயம் ஒரு பல் சேர்த்து கையில் வைத்து நன்கு கசக்கி பிழிந்த சாறு எடுத்து இடது பக்கம் தலைவலி எனில் வலது புற காதில் நான்கு சொட்டு சாறை விட வேண்டும் சிறிது நேரத்தில் வழி எடுக்கும் அப்பொழுது உடனே தலையை சாய்த்து சாறை வெளியேற்ற வேண்டும் இதுபோல் வலது பக்க தலைவலி எனில் இடது புற காதில் மேற்கூறியவாறு செய்ய தலைவலி குணமாகும் சிலந்தி கட்டி சமூலம் அரைத்து பூச குணமாகும் இம்மூலிகையின் வேரை பறித்து சுத்தம் செய்து அதனை அரைத்த பாலில் போட்டு காய்ச்சி நன்கு கொதிக்க வைத்து சாப்பிட குளுக்கோஸ் உடலில் ஏற்றிய தெம்பு கிடைக்கும் இவ்வாறு வாரம் ஒரு முறை செய்ய உடலுக்கு மிகவும் நன்று இம்மூலிகையில் சுண்ணாம்பு சத்து அதிகம் உள்ளது மற்றும் வாத நோய்களுக்கான அற்புத மருந்து பூஞ்சை தொற்றுகள் பாக்டீரியாவுக்கு எதிராகவும் இதன் சாரங்கள் செயல்படுகிறது இதிலிருந்து எடுக்கப்படும் என்னை சிறுசிறு பூச்சிகளுக்கான பூச்சி விரட்டியாக பயன்படுகிறது நன்றி.

No comments:

Post a Comment