Friday, March 1, 2024

மண்பானை தண்ணீர் குடிப்பதால் உடலுக்கு இத்தனை நன்மைகளா?


தற்போதைய காலத்தில் பிரிட்ஜ் இல்லாத வீடுகளே இல்லை. அந்த பிரிட்ஜ் தண்ணீரைவிட குளிர்ச்சியானது, ஆரோக்கியமானது மண்பானை தண்ணீர்...

மண்பானை தண்ணீரை அருந்துவது நமக்குப் புதிதல்ல... இருப்பினும் நாம் மறந்து போன மண்பானை தண்ணீரில் எவ்வளவு நன்மைகள் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்வோம் வாங்க..


*மண்பானை தண்ணீர் ஏன் குளிர்ச்சியாக இருக்கிறது?*

பொதுவாகவே மண்பானையில் வைத்துள்ள தண்ணீரை அருந்தினால் குளிர்ச்சியானதாக இருக்கும்.

ஏனெனில், மண்பானையில் உள்ள சிறு நுண்துளைகளின் வழியாக தண்ணீர் கசிந்து வெளியேறும். இவ்வாறு கசிந்து வெளிவரும் தண்ணீர் ஆவியாகும் பொழுது அதற்கு வேண்டிய வெப்பத்தை பானையில் இருந்தும், பானையில் உள்ள தண்ணீரில் இருந்தும் பெறும். இதனால், அதனுள் வைக்கப்பட்ட தண்ணீர் குளிர்ச்சியாக இருக்கும். 

பிளாஸ்டிக், ஸ்டீல் பாத்திரத்தில் வைத்திருக்கும் தண்ணீரை விட மண்பானை தண்ணீரானது மிகுந்த குளிர்ச்சியுடன் இருப்பதால் நம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.


மண்பானை தண்ணீரின் பயன்கள்:

வெயிலில் சென்று வந்தபின் தண்ணீரை அருந்தும் போது அமிர்தம் போல் உள்ளது என்று அனைவருமே கூறுவோம். ஆனால் உண்மையான அமிர்தமான தண்ணீர் என்பது மண்பானை தண்ணீரை அருந்தும் போது நமக்கு கிடைக்கும்.

மண்பானையில் தண்ணீரை சேமித்து வைப்பதால் இயற்கையான முறையிலேயே தண்ணீரானது குளிர்விக்கப்படுகிறது.

மண்பானைகள் களிமண்ணிலிருந்து தயாரிக்கப்படுவதாகும். களிமண்ணில் இயற்கையாகவே காரத்தன்மை இருப்பதால், இதில் சேமித்து வைக்கப்படும் தண்ணீரின் pH அளவு சமநிலைப்படுத்தப்படுகிறது. இதன் காரணமாக இரைப்பை தொடர்பான பிரச்சனைகள் ஏற்படுவதிலிருந்து தடுக்கப்படுகிறது.

மண்பானையில் உள்ள தண்ணீரில் இயற்கை தாதுக்கள் அதிகம் நிறைந்துள்ளது. இதை தினமும் குடிப்பது வளர்சிதை மாற்றத்திற்கு மிகவும் நல்லது.

மண்பானை தண்ணீர் உடல் உஷ்ணத்தை தணிப்பதில் முக்கியமான ஒன்றாக உள்ளது. 

வெயில் காலங்களில் ஏற்படும் மலச்சிக்கல், கண் எரிச்சல், வாய்ப்புண் போன்ற பிரச்சனைகளை நீக்குகிறது.

பிரிட்ஜ் தண்ணீர் குடிப்பதால் சிலருக்கு தொண்டை பகுதியில் எரிச்சல் போன்ற உபாதை ஏற்படும். இதனை தவிர்க்க மண்பானை தண்ணீர் சிறந்தது.

மண்பானைகள் தண்ணீரை குளிர்விப்பதோடு மட்டுமல்லாமல், இயற்கையாகவே சுத்திகரிப்பு செய்யும் தன்மை கொண்டவை. இதனால் தண்ணீரில் உள்ள அசுத்தங்களை நீக்குவதோடு, நுண்ணுயிர் கிருமிகளை எதிர்த்து போராடுவதிலும் உதவுகிறது.

மண்பானை தண்ணீரில் இரசாயனங்கள் ஏதும் இல்லை என்பதால், நம் செரிமான செயல்பாட்டிற்கு மிகவும் நல்லது.

மண்பானையில் குடிதண்ணீரை ஊற்றி 2 மணி நேரம் முதல் 5 மணி நேரம் வரை வைத்திருந்தால், அந்தத் தண்ணீரில் உள்ள மாசுப் பொருட்கள் பலவற்றையும் மண்பானை உறிஞ்சி விடும். பிறகு இதனை நாம் அருந்தலாம்.

No comments:

Post a Comment