Sunday, September 29, 2024

மன்னராட்சியில் இளவலும் குமரரும்

மன்னராட்சியில் இளவலும் குமரரும்  பட்டத்து இளவரசராக குறித்த வயதில் பட்டம் சூட்டப்படுவது இயல்பே.

குசேலர் போன்ற வறிய நிலையில் உள்ள ஓணாண்டிப் புலவர் பெருமக்களும் தம் வறுமையொழிய ஏதாவது 23, 24 ஆவது புலிகேசிகளைப் பார்த்து புகழ்பாடி பரிசில் பெற்றுச் செல்வது என்பது வழக்கம் என்று பாணாற்றுப் படை நூல்கள் குறிப்பிடுகின்றன.

காலம் மாறினாலும் காட்சி மாறாது, இன்றைய புலவர் பெருமக்களும் அவ்வழியே புகழுக்கு

மயங்கும் இளவரசர்களை நோக்கிப் படையெடுக்கத் தொடங்கி விட்டனர்.


அடியெடுத்து வைக்கிறார் இரண்டாம் மீசைக் கவிஞர்... 


விளையாட்டுத் துறை அமைச்சரான பின்னர்தான் தமிழ்நாடு இந்தியாவின் முதல் மாநிலமாக மாறியது என்கிறாரா கவிஞர்?


கவிஞரின் பாட்டுக்குத் திரையில் வாயசைத்ததுதான் இளவரசரின் வளர்ச்சிக்குக் காரணம் என்கிறாரா கவிஞர்?


திமுகவில் யாருமே இளவரசர் அளவுக்கு உழைக்கவில்லை என்கிறாரா கவிஞர்?


ஒவ்வோர் நகர்வும் என்ற சொற்கள் எந்தப் பல்கலைக்கழகத்தில் அங்கீகரிக்கப்பட்டவை?


- முள்ளக்காடு 

ஆ இர விக்ற்றர் ஜாண்சன் 

-------------------------------------------------------


இதோ அந்த வாழ்த்துப் பா.


 *உதயநிதிக்கு வைரமுத்து வாழ்த்து!* 


தமிழ்நாடு துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் நேற்று நியமனம் செய்யப்பட்டார். அதை தொடர்ந்து அவருக்கு பல்வேறு தலைவர்கள், பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் கவிஞர் வைரமுத்து தனது இணையதள பக்கத்தில் கவிதை ஒன்றை வெளியிட்டுள்ளார்.


துணை முதல்வராகும்

உதயநிதி ஸ்டாலின் அவர்களே

உங்களை வாழ்த்துகிறேன்


உங்கள்

அன்னையைப் போலவே

நானும் மகிழ்கிறேன்


இந்த உயர்வு

பிறப்பால் வந்தது என்பதில்

கொஞ்சம் உண்மையும்

உங்கள் உழைப்பால்

வந்தது என்பதில்

நிறைய உண்மையும் இருக்கிறது


பதவி உறுதிமொழி ஏற்கும்

இந்தப் பொன்வேளையில்

காலம் உங்களுக்கு

மூன்று பெரும் பேறுகளை

வழங்கியிருக்கிறது


முதலாவது

உங்கள் இளமை


இரண்டாவது

உங்கள் ஒவ்வோர் அசைவையும்

நெறிப்படுத்தும் தலைமை


மூன்றாவது

உச்சத்தில் இருக்கும்

உங்கள் ஆட்சியின் பெருமை


இந்த மூன்று நேர்மறைகளும்

எதிர்மறை ஆகிவிடாமல்

காத்துக்கொள்ளும் வல்லமை

உங்களுக்கு வாய்த்திருக்கிறது


உங்கள் ஒவ்வோர் நகர்வும்

மக்களை முன்னிறுத்தியே

என்பதை

மக்கள் உணரச் செய்வதே

உங்கள் எதிர்காலம்


என் பாடலைப் பாடிய

ஒரு கலைஞன்

துணை முதல்வராவதை எண்ணி

என் தமிழ் காரணத்தோடு

கர்வம் கொள்கிறது


கலைஞர் வழிகாட்டுவார்


துணை முதல்வராகும் நீங்கள்

இணை முதல்வராய்

வளர வாழ்த்துகிறேன் 


என பதிவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment