Saturday, March 2, 2024

இலைகள் உதிர்வதை எந்த மரமும் கவலை கொள்வதில்லை

இலைகள் உதிர்வதை எந்த மரமும் கவலை கொள்வதில்லை மாறாக தழைக்கும் துளிர்களுக்கு புத்துணர்ச்சி தரும் மரங்களே செழிப்பாக வளர்கின்றன அதுபோல சிறு சிறு தோல்விகளை கண்டு துவலாமல் கிடைக்கும் பெரிய வெற்றியை நோக்கி நகர்ந்தால் எல்லாம் நம் வசப்படும்.


எந்த கடினமான சூழ்நிலையிலும் தகுதியும் திறமையும் கொண்டவர்கள் தப்பி பிழைப்பார்கள். இந்த உலகத்தில் சாதிக்க வேண்டும் என்றால் மிகையான போராடும் குணம் இருக்க வேண்டும்.


வாழ்க்கையில் ஏற்படும் சிரமங்களையும் தோல்விகளையும் எதிர்கொள்ள தயாராக இருந்தால் எவராலும் எதுவும் கற்க முடியும்.


வாழ்க்கையில் உழைத்து சோர்வடைவதற்கு முன்பே ஓய்வு எடுப்பதற்கு பெயர் தான் சோம்பேறி தனம்.


உங்களுக்கு அற்புதமான திறமைகள் இருக்கலாம். “என்னால் முடியும்” என்று சொல்லி உங்கள் மேல் நீங்கள் நம்பிக்கை கொள்ளுங்கள். அப்பொழுது தான் நீங்கள் எதையும் சாதித்துக் காட்ட முடியும்.


எதிர் காலத்தில் என்ன நேருமோ என்று கணக்குப் பார்த்துக் கொண்டே இருப்பவரால் எதையும் சாதிக்க முடியாது. முயன்று செயல்களை செய்பவரே வாழ்க்கையில் வெற்றி பெறுவார்.


உயரத்தில் செல்லச் செல்லத் தான் மனதில் பயமே தவிர, உயரத்தை அடைந்ததும் பயம் காணாமல் போகும்.


அது போல் தான் வெற்றி அடைவது கடினமாகத் தோன்றினாலும் முயற்சி கொண்டு கிடைக்கும் வெற்றி மிக எளிதாகத் தோன்றும்.


உங்களை வெல்ல யாரும் இல்லை, உறுதியுடன் போராடுங்கள். இலட்சியக் கனவை நிறைவேற்ற முயன்ற வரை முயற்சி செய்யயுங்கள், வீழ்வோம் என நினைக்காதீர்கள்.


எழுவோம் என உறுதி கொள்ளுங்கள், துவண்டுப் போகாமல் துணிவுடன் செல்லுங்கள். எந்நிலையிலும் கலங்காதீர்கள். எவருக்கும் அஞ்சாதீர்கள்.


*வேகமாய்ச் செல்லுங்கள். விவேகமாய் செல்லுங்கள். பேசுபவர் பேசட்டும். தூற்றுவர் தூற்றட்டும். பொறாமை நிறைந்த உலகை எதிர்கொள்ளுங்கள்,பொறுமையுடன் பொறுப்புடன் நிலைநாட்டு உங்கள் வெற்றிக் கொடியை நிலைநாட்டுங்கள் நன்றி.

No comments:

Post a Comment