Saturday, March 2, 2024

செருப்படை - தினம் ஒரு மூலிகை

 *


*செருப்படை*.   தாவரவியல் பெயர்:Clinus Laloides முழு தாவரமும் கார்புச் சுவையும் வெப்ப தன்மையும் கொண்டது உடல் வெப்பத்தை அதிகரிக்கச் செய்யும் மலம் சிறுநீர் ஆகியவற்றை பெருக்கும் சளியை முற்றிலும் குணப்படுத்தும் இதில் இரண்டு வகைகள் உண்டு. பெரும் செருப்பாடை சிறு செருப்படை இதில் சிறு செருப்படை மிகுந்த விசேஷ குணம் உடையது இதனை செந்தூர மூலி என கூறுவார்கள் வெள்ளைப்படுதல் சிறுநீர் எரிச்சல் ஆகியவை குணமாக செருப்படை முழு தாவரத்தையும் எடுத்து நீரில் சுத்தம் செய்து 20 கிராம் அளவு நசுக்கி நாலு டம்ளர் நீரில் இட்டு ஒரு டம்ளராக சுண்டக்காய் வடிகட்டி கொள்ள வேண்டும் இதனை வேலைக்கு 30 மில்லி அளவாக தேவையான அளவு பனைவெல்லம் சேர்த்து தினமும் இரண்டு வேளை குடித்து வர வேண்டும் இம்மூளிகை சிறுநீரகத்தில் உள்ள கற்களையும் கரைக்கும் சக்தி உண்டு இதில் ஈயச்சத்து செம்பு சத்து அதிகமாக உள்ளது நன்றி.

No comments:

Post a Comment