Thursday, September 19, 2024

புரட்டாசி மாதம் வீடு குடி போகலாமா?


புரட்டாசி மாதம் வீடு குடி போகலாமா?

புரட்டாசி மாதத்தில் வீடு குடி போகக்கூடாது. ஏனெனில் இந்த மாதத்தில் தான் இரணியன் தனது அரண்மனையிலேயே நரசிம்ம மூர்த்தியினால் சம்ஹாரம் செய்யப்பட்டார்.

இரணியன் கதை :

இரணியன், பிரம்மனை நோக்கி நீண்டகாலம் தவமிருந்து, எவராலும், எந்த ஆயுதத்தாலும், பகலிலும், இரவிலும் தனக்கு மரணம் ஏற்படக்கூடாது என்று வரம் கேட்டான். பிரம்மனும்

தொழிநுட்பம் மட்டுமே வாழ்க்கை இல்லை!


வயதான  தந்தையுடன் ஒருவர் வங்கிக்கு செல்ல வேண்டி இருந்தது, சுமார் ஒரு மணி நேரம் ஆனது அவரது நண்பருக்கு பணம் அனுப்பி பின் அவருடைய ரிடயர்மென்ட் பணம் தொடர்பாக பேசி வீடு வந்து சேர!

ஆவல் மிகுதியில் அப்பாவிடம், ஏன் நீங்கள் ஆன்லைன்ல நெட் பேங்கிங் பண்ண கூடாது, நீங்க வங்கிக்கு போக தேவை இல்லை, நீண்ட

குங்கிலியம் - தினம் ஒரு மூலிகை

 *தினம் ஒரு மூலிகை* *குங்கிலியம்*


மலை காடுகளில் தானே வளரும் கருமருது எனப்படும் மரத்தின் பிசினே குங்கிலியம் எனப்படும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் தூய வெண்மையான நிறமான வெள்ளை குங்கிலியம் அக மருந்தாகவும் பழுப்பு நிறமுடைய புற மருந்தாகவும் பயன்படும் இதனை இளநீரில்

Wednesday, September 18, 2024

இன்றைய சிந்தனை (18.09.2024)

 🌹🌹💐💐 🙏🏻 💐💐🌹🌹..................................................................

*‘’அகம்பாவம் நம்மையே அழிக்கும்...!"*

.................................................................................

“நான்” என்னும் எண்ணம் ஒருவனுக்கு தோன்றுகிறது என்றால், அவன் தோல்விகளைச் சந்திக்கத் தயாராகிக் கொண்டு இருக்கின்றான் என்று பொருள்...

அறிவு அதிகமாக உள்ள ஒரு சிலருக்குத்தான் ஆணவம் வருகிறது. ஆனால்!, பெரும்பாலான

பூலாங்கிழங்கு

 *தினம் ஒரு மூலிகை* *பூலாங்கிழங்கு*

அல்லது *கிச்சிலி கிழங்கு* 

மஞ்சள் இனத்தைச் சார்ந்த சிறு செடி கிழங்குகள் வெள்ளை நிறமாகவும் மனம் உடையதாகவும் இருக்கும் வெள்ளை மஞ்சள் பூலாங்கிழங்கு எனவும் அழைப்பார்கள் வெள்ளை வில்லைகளாக நறுக்கி உணர்த்திய கிழங்குகள் நாட்டு மருந்து கடைகளில்

நீதிமன்றம் சாட்சிகளின் வகைபாடு*

 

*1. பொய் சாட்சி (Lying Witness) .*


*2. அதிகம் பேசும் சாட்சி ( Flippant Witness).*


*3. பிடிவாதம் பிடிக்கும் சாட்சி (Dogged Witness).*


*4. தயக்கம் காட்டும் சாட்சி (

Tuesday, September 17, 2024

காவட்டம்புல் - தினம் ஒரு மூலிகை


* *காவட்டம்புல்* ஆற்றோரங்களிலும் தரிசு நிலங்களிலும் தன்னிச்சையாய் வளரும் மனம் உள்ள புல்லினம் இதை மாந்தப்புல் காமாட்சி புல் வாசனைப் போல் என்றும் அழைக்கப்படும் புல்லில் இருந்து எடுக்கப்படும் என்னை மருத்துவ பயன் உடையவை இசிவு

Monday, September 16, 2024

இன்றைய நாளில் பிறந்தவர்- 16 செப்டெம்பர்

 *இன்றைய நாளில் பிறந்தவர் ‌*

(16-செப்)

*எம்.எஸ்.சுப்புலட்சுமி.*

🎶 ராகம் பாடி ஈட்டிய பெருஞ்செல்வத்தை தானமாக நற்பணிகளுக்கும், சமூக சேவைக்கும் கொடுத்த ஒப்பற்ற இசைக்கலைஞர் எம்.எஸ்.சுப்புலட்சுமி 1916ஆம் ஆண்டு செப்டம்பர் 16ஆம் தேதி மதுரையில் பிறந்தார்.

🎶 1926ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஒரு எல்.வி. இசைத்தட்டில் 'மரகத வடிவும் செங்கதிர் வேலும்' என்னும் பாடலில் சண்முகவடிவின் வீணையும், எம்.எஸ்.சுப்புலட்சுமியின்

இன்றைய நாள்

 *இன்றைய நாள்*

(16-செப்)

*உலக ஓசோன் தினம்.*

🌀 பூமிக்கு கவசம் போல இருக்கும் ஓசோன் படலத்தின், அடர்த்தி குறைந்து ஓட்டை விழ ஆரம்பித்து விட்டதாக கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு பரபரப்பாக பேசப்பட்டது.

🌀 முதலில் அண்டார்டிகா பகுதியில் ஓசோன் அடர்த்தியை அளக்கும் டாப்சன் அலகில் பார்த்தபோது

கார்போகரிசி


தினம் ஒரு மூலிகை* *கார்போகரிசி* தரிசு நிலங்களில் தானே விளையும் சிறு செடியினம் மனமும் கசப்பு சுவையும் உடைய விதைகளை உடையது விதை நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் விதையே மருத்துவ பயன் உடையவை உடல் தேற்றுதல்

Sunday, September 15, 2024



*தினம் ஒரு மூலிகை* *காசினிக் கீரை* முள்ளங்கி இலை வடிவில் குத்தாக இளைவிடும் சிறு செடியினும் பூ விடும்போது தண்டு அழுத்தமானதாக வரும் இதில் கால்சியம் பாஸ்பரஸ் இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் ஏ பி சி ஆகிய சத்துக்கள் உள்ளன இதன் இலை பூ வேர் விதை ஆகியவை மருத்துவ பயன் உடையவை இலை

Saturday, September 14, 2024

 நான்கு தெய்வ பக்தர்கள் ஒரு மரத்தடியில் அமர்ந்து சொர்க்கத்துக்கு போவது பற்றி விவாதம் செய்து கொண்டிருந்தார்கள். 

சொர்க்கத்துக்கு செல்வதற்கான தகுதி தங்களில் யாருக்கு உண்டு என்பது அவர்கள் வாதத்தின் அடிப்படையாக அமைந்திருந்தது.

சோமநாதன் என்ற பக்தன் சொன்னான். 

நான் வேதங்களையும் மந்திரங்களையும் முறையாக கற்றுத்

 கருப்பை பலம் பெற:-


தே.பொருட்கள்..

வறுத்த வெந்தயம் – 50 கிராம்

வறுத்த சீரகம் – 25 கிராம்

பிளந்த மாங்கொட்டைப் பருப்பு – 25 கிராம்

சுக்கு – 20 கிராம்

காய்ந்த மல்லி – 25 கிராம்

ஏலக்காய் – 10

புளியங்கொட்டை – 50 கிராம்


செய்முறை:

     புளியங்கொட்டை, வறுத்த வெந்தயம், சீரகம், மாங்கொட்டை, வறுத்த சுக்கு இவைகள் அனைத்தையும் நன்றாக பொடி செய்து, காய்ந்த

 *இன்றைய நாளில் பிறந்தவர்.*

(14-செப்)

*வில்லியம் பெண்டிங் பிரபு.*

♚ பிரிட்டிஷ் இராணுவ வீரர் வில்லியம் பெண்டிங் பிரபு 1774ஆம் ஆண்டு செப்டம்பர் 14ஆம் தேதி இங்கிலாந்தில் பிறந்தார்.

♚ இவர் ஒரு போர் வீரராக வாழ்க்கையைத் தொடங்கினார். 1803ஆம் ஆண்டு சென்னையின்

Sunday, September 8, 2024

 *இன்றைய நாள்...*

(08-செப்)

*தேசிய கண் தான தினம்.*

👀 இந்தியாவில் தேசிய கண் தான தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 8ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இந்நிகழ்வு ஆகஸ்ட் 25ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்டு செப்டம்பர் 8ஆம் தேதி முடிவடைகிறது. இக்காலக்கட்டத்தில் கண் தானம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், ஊக்குவிக்கும் வகையிலும் இந்திய அரசு சார்பில் இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.

*உலக எழுத்தறிவு தினம்.*

📝 உலகில் அனைவரும் எழுத்தறிவு பெற வேண்டும் என்ற

தன்னம்பிக்கை...

வாழ்க்கையின் மூலதனம்!

வாழ்க்கையில் நாம் தடுமாறும் போதெல்லாம், நம்மைத் தூக்கி நிறுத்துவது நம்பிக்கை மட்டுமே. 

தன்னம்பிக்கை இருக்கும் ஒருவரால் மட்டுமே  வாழ்க்கையில் வெற்றி பெற முடியும்.

தோல்விகளால் துவண்ட ஒருவருக்கு தற்கொலை செய்யும் எண்ணம் தோன்றியது. அதற்கான

 *இன்றைய நாளில் பிறந்தவர்.*

(08-செப்)

*தேவன்.*


✍ பிரபல நகைச்சுவை எழுத்தாளர்களுள் ஒருவரான தேவன் எனப்படும் ஆர்.மகாதேவன் 1913ஆம் ஆண்டு செப்டம்பர் 8ஆம் தேதி கும்பகோணத்தை அடுத்த திருவிடைமருதூரில் பிறந்தார்.


✍ இவரது பல படைப்புகள் சின்னத்திரையில் தொடர்களாக வெளிவந்துள்ளது. இவர்

Saturday, September 7, 2024

 *தினம் ஒரு மூலிகை* *கஸ்தூரி மஞ்சள்*

மஞ்சள் போன்ற சிறு செடியினும் உலர்ந்த கிழங்குகள் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் மனம் உடைய கிழங்குகளே மருத்துவ பயன் உடையவை வயிற்று வாய்வு அகற்றுதல் உடல் வெப்பம் மிகுத்தல் உடலுரமாக்குதல்

Wednesday, September 4, 2024

 *தினம் ஒரு மூலிகை* *ஆணை குன்றி*

இவை ஒரு மர வகை சிறகு கூட்டிலைகளையும் சிவப்பு நிற வட்ட வடிவ விதைகளையும் உடையது பவழக்குன்றி எனவும் மஞ்சாடி எனவும் அழைக்கப்படும் இதன் இலை விதை வேர் பட்டை ஆகியவை மருத்துவ

 *தினம் ஒரு மூலிகை* *ஆத்தி மரம்*

 தமிழக காடுகளில் தானே வளரும் ஒரு வகை மரம் திருவாத்தி காட்டாத்தி எனவும் அழைக்கப்படும் இரண்டாய் பிளந்த இலைகளையும் ஐந்து இதழ் உள்ள சிறு பூக்களையும் தட்டையான காய்களையும் உடையது இலை பூ மொட்டு காய் பிஞ்சு பட்டை ஆகியவை மருத்துவ குணம் உடையது சிறுநீர் பெருக்குதல் குருதிப் போக்கு அடக்குதல் சீத

Sunday, September 1, 2024

 🟦🟦🟦🟦🔵🟦🟦🟦🟦

*...........................................*

*'' மனதில் இருக்கட்டுமே மகிழ்ச்சி..''*

*...........................................*

மகிழ்ச்சி, அமைதியை தேடிப் பலரும் வெளியே அலைந்து கொண்டு இருக்கிறார்கள்.


உலகில் பிறந்த எல்லாருமே மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று தான் விரும்புகிறார்கள். 


மனிதன் பொருட்களில், பணத்தில், பதவியில், பட்டத்தில் என்று பல வகைகளில் மகிழ்ச்சியைத்

 *தசாங்கம் என்றால் என்ன?*

தசாங்கம் என்பது தூபம்  (புகையூட்டுதல்) -லுக்கு பயன்படும் ஒரு வகை மூலிகை சாம்பிராணி வகை ஆகும். 

ஆதி காலத்தில் இருந்து தெய்வத்திற்கு தூபம் காட்ட பயன்படுத்தி வரும் மூலிகை பொருள் இவற்றில் அபிஷேகம் செய்ய சேர்க்கப்படுகின்ற மகத்துவம் மற்றும் மருத்துவ குணங்கள் நிறைந்த அற்புதமான  பொருள். 


இதன் புகையில் இருக்கும் பலன்கள் சொல்லில் அடங்காதவை என்றே கூறலாம். குழந்தைகளுக்கு சிறப்பான மருத்துவம் இது


தசாங்கத்தில் பத்து வகையான மூலிகை பொருட்கள் இருக்கின்றன. 


இந்த பத்து வகை மூலிகை பொருட்களும் மகத்துவம் வாய்ந்தவை இவை அனைத்தையும் ஒன்றாக கலந்தால் தான் தசாங்கம் என்கிற அற்புத பொருள் உருவாகிறது.


இவை சித்தர்கள் அருளிய குறிப்புகளில் இருந்து பெறப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. 


*தசாங்கத்தில் உள்ள மூல பொருட்கள்:*


*1. வெட்டி வேர்* 


*2. இலவங்கம்*


*3. வெள்ளை குங்குலியம்* 


*4. ஜாதிக்காய்* 


*5. மட்டிப்பால்*


*6. சந்தான தூள்*


*7. நாட்டு சர்க்கரை* 


*8. திருவட்ட பச்சை* 


*9. பால் சாம்பிராணி*


*10. கீச்சிலி கிழங்கு* 


*தசாங்கத்தின் பயனும் பலன்களும்:*


இந்த தசாங்கத்தின் புகையானது உடலின் பல்வேறு உடல் உள் உறுப்புகளின் வியாதிகளை குணப்படுத்தும் ஆற்றல் பெற்றது. இதன் நறுமணமே தெய்வீக உணர்வை உண்டாக்குபவையாக இருக்கும். துஷ்ட சக்திகளை இதன் புகை விரட்டி விடும். எனது பாட்டி/ எனது தாய் இவற்றை குழந்தைகளுக்கு திருஷ்டி கழிக்க உபயோகித்தார்கள் 


இதன் புகையை நுகர்வதால் நம் உடலும், மனமும் சோம்பேறித்தனம் நீங்கி சுறுசுறுப்பு அடைந்து விடும். வீட்டில் எதிர்மறை ஆற்றல் இருந்தால் அனைத்தும் மாயமாய் மறைந்தே போகும். இதற்கு அந்த அளவிற்கு மகத்துவம் வாய்ந்த சக்தி இருக்கிறது. கோவில்களில் இருக்கும் நறுமணம் போல் நமது வீட்டிலும் அதன் மனம் நிறைந்து இருக்கும். உங்கள் தெருவே மணக்கும். 


*தசாங்கம் பயன்படுத்தும் முறை:*


தசாங்கம் ஏற்றி வீடுகளில் மூலை, முடுக்குகள் விடாமல் காண்பிக்க வேண்டும். இப்படி செய்வதால் வீட்டில் உள்ள துர் சக்தி மற்றும் நச்சுப் பூச்சிகள் வராது பூஜை அறையில் இறைவனுக்கு காண்பிக்க வேண்டும். குழந்தைகளுக்கு உடல் முழுவதும் படும் படி காண்பிக்க வேண்டும். திருஷ்டி கழிப்பதற்கு யாருக்கு திருஷ்டி கழிக்க வேண்டுமோ அவர்களை கிழக்கு பார்த்து உட்கார வைத்து மும்முறை சுற்றி திருஷ்டி கழிக்கலாம்.


சகல விதமான ஐஸ்வர்யமும் வீட்டில் சேரும்.


மேலும் தொடர்ந்து பயணிப்போம் 


சித்தர்கள் நம்மை வழி நடத்தட்டும் 


நன்றி

 *தினம் ஒரு மூலிகை அருநெல்லி*



 தோட்டங்களில் பயிர் செய்யப்படும் சிறு மற வகை அடர்த்தியான இலைகளையும் புளிப்பு சுவை மிகுந்த உருண்டை வடிவ காய்களை உடையது இதன் இலை காய் விதை வேர் மருத்துவ பயன் உடையவை இலை வியர்வை பெருக்கியாகவும் விதை மலமிளக்கியாகவும் காய் பித்தத்தை சமன் செய்யவும் குளிர்ச்சி உண்டாக்கவும் பயன்படும் 10 கிராம் இலையை அரைத்து ஒரு குவளை மோரில் கலக்கி காலையில் மட்டும் மூன்று நாட்கள் கொடுத்து உப்பில்லா உணவு கொள்ள காமாலை தீரும் தொடர்ந்து பயன்படுத்தி வர கண் ஒளி பெறும் இலையை 10 மடங்கு நீர் சேர்த்து நாளில் ஒன்றாய் காய்ச்சி வடிகட்டிய குடிநீரை காலை மாலை உணவுக்கு முன் முப்பது மில்லி அளவு சாப்பிட்டு வர உடல் குளிர்ச்சி பெறும் வெள்ளை வெட்டை குணமாகும் விதை நீக்கிய காய்களை துவையலாய் அரைத்து சோற்றில் கலந்து சாப்பிட்டு வர வுட் சூடு மிகு பித்தம் மிகு தாகம் ஆகியவை தீரும் நெல்லிக்காய் சாறுடன் இரண்டு மடங்கு சர்க்கரை சேர்த்து மனப்பாகாக்கி 15 இல் இருந்து 30 மில்லி அளவாக தண்ணீரில் கலந்து காலை மாலை சாப்பிட்டு வர உச்சூடு மிகு பித்தம் மிகு தாகம் ஆகியவை தீரும் நன்றி.

 


*தினம் ஒரு மூலிகை*

*அகில் (அ)காழ்வை* என்று அழைப்பார்கள் அகில் கட்டை நறுமண பொருட்கள் தயாரிக்க பயன்படுகிறது இதன் தண்டு பகுதியில் சுரக்கும் பிசின் நறுமணம் உடையது அகில் கட்டையே மருத்துவ பயன் உடையது மண்டை இடி சில வகை காய்ச்சல் வாத நோய்கள் படை சர்வ நோய்கள் பித்த நீர் பெருக்குதல் உடல் வெப்பம் மிகுதல் வீக்கம் கரைத்தல் ஆகிய குணம் உடையது அகில் கட்டையை நீர் விட்டு சந்தனம் போல் அரைத்து உடலில் பூசி வர முதுமையில் தளர்ந்த உடல் இறுகும் அகில் கட்டையினை பொடித்து நெருப்பனலில் இட்டு புகைத்து அப்புகையை முகர்ந்தாலோ உடலில் படுமாறு செய்தாலோ உடல் பயிற்சி வாந்தி சுவை இன்மை ஆகியவை தீரும் வெட்டுக்காயம் புண் ஆகியவற்றின் வழி தீரும் அகில் கட்டையை ஒன்று இரண்டாய் இடித்து நேரில் இட்டு நாளில் ஒன்றாக காய்ச்சி வடிகட்டிய குடிநீர் நல்லெண்ணெய் பால் ஆகியவற்றை வகைக்கு ஒரு லிட்டர் கலந்து அதில் தான்றிக்காய் தோல் அதிமதுரம் வகை 40 கிராம் பொடித்து பாலில்லரைத்து சேர்த்து பலமுறை காய்ச்சி வடிகட்டிய தைலத்தை அதாவது அகில் தைலம் இதை முடி தைலமாக பயன்படுத்தி வர நீர் கோவை பினிஷம் மேகம் முதலியன குணமாகும் நன்றி.

 


*தினம் ஒரு மூலிகை* *அதிவிடயம்* மலைச்சாரலில் அகன்ற கூர் நுனி உடைய நேராக உயர்ந்து வளரும் ஒரு செடி இனம் வேர்கள் கிழங்கு வடிவானவை வேர் மருத்துவ பயன் உடையது உலர்ந்த வேர் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் பசி தூண்டுதல் காமம் பெருக்குதல் உடல் பலம் மிகுதல் முறை காய்ச்சல் தணித்தல் ஆகிய குணம் உடையது அதிவிடயம் ஒரு கிராம் கழற்சி விதை இரண்டு கிராம் ஆகியவற்றை பொடித்துக் கலந்து வைத்துக் கொண்டு அரை கிராம் முதல் ஒரு கிராம் காலை மாலை தேனில் கொடுத்து வர பித்த காய்ச்சல் விட்டு விட்டு வரும் காய்ச்சல் ஆகியவை தீரும் அதிவிடயப் பொடியை 250மி.கி முதல்500மிகிராம் வரை நாளும் மூன்று வேளை கொடுத்து வர காய்ச்சலுக்குப் பின் ஏற்படும் அசதியை போக்கும் இடையே உடல் திடத்திற்கு ஏற்ப அளவை கூட்டியும் குறைத்தும் கொடுக்க தெரியாமை கழிச்சல் சீத கழிச்சல் வாதம் மூலம் மூலக்கடுப்பு ஆகியவை தீரும் அதிவிடயம் சிற்றாமுட்டி முத்தக்காசு கர்க்கடசிங்கி பேய்மிரட்டி ஆகியவற்றை சம அளவு உலர்த்தி பொடித்து அரை கிராம் முதல் ஒரு கிராம் வரை அளவாக தேனில் குழைத்து காலை மாலை கொடுத்து வர வயிற்றுப்போக்குடன் உள்ள காய்ச்சல் தீரும் நன்றி.

 *தினம் ஒரு மூலிகை* *அளிவிதை*

 


(அ)அலிசிவிதை சிறு செடியினம் சிறிய நீண்ட இலைகளையும் வெள்ளை நீளம் முதலிய நிறங்களில் பூவும் உருண்டையான காய்களையும் பளபளப்பான கடின ஓடுடைய சிறு விதைகளை உடையது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் விதையிலிருந்து என்னை எடுக்கப்படுகிறது மலர் விதை எண்ணை ஆகியவை மருத்துவ குணம் உடையது காமம் மிகுத்தல் சளி அகற்றுதல் சிறுநீர் பெருக்குதல் சதை நரம்புகளை சுருங்கச் செய்தல் ஆகிய மருத்துவ குணம் உடையது இதயத்தை வளமாக்கும் விதை பொடித்து நல்ல நீரில் ஊற வைத்து வடிகட்டி கண்ணில் லிட்டு வர கண் எரிச்சல் கண் சிவப்பு கண் அரிப்பு ஆகியவை தீரும் விதை பொடியை ஊற வைத்து வறுத்தெடுத்த குழம்புடன் தேன் கலந்து கொடுக்க நீர்கோவை இருமல் தீரும் ஒரு குவளை நீரில் 10 கிராம் விதையை பொடித்து ஓர் இரவு ஊற வைத்து காலையில் சிறிது எலுமிச்சம் சாறு கலந்து பருகி வர இளைப்பு அழலை வியர்வை ஆகியவை தனியும் விதையை பொடித்து களியாக்கி கிளறி கட்டிகளுக்கு வைத்து கட்டி வர விரைவில் பழுத்து உடைந்து ஆறும் வயிறு நெஞ்சு முதலிய வலிக்கும் இடங்களில் தடவி வர குணமாகும் நன்றி

 *இன்றைய நாள்.*

(01-செப்)

*உலக கடித தினம்.*


📝 ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 1ஆம் தேதி கடிதம் எழுதும் தினமாக உலக அளவில் கொண்டாடப்படுகிறது. உலக கடித தினம் என்று அழைக்கப்படும் இந்த நாள் கையால் கடிதம் எழுதும் முறையைjí பாராட்டும் விதமாக கொண்டாடப்படுகிறது.


📝 உலக கடித தினம் என்பது ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் ரிச்சர்ட் சிம்ப்கின் என்பவரால் 2014ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இன்றைய கணிப்பொறி உலகில் கடிதம் எழுதுவது என்பது ஒரு தனிப்பட்ட அனுபவமாகும். எனவே அதனை கொண்டாடும் விதமாக இத்தினத்தை அறிமுகப்படுத்தினார்


*முக்கிய நிகழ்வுகள்..*.


✍ 1980ஆம் ஆண்டு செப்டம்பர் 1ஆம் தேதி தமிழறிஞர், கல்வியாளரான சேவியர் தனிநாயகம் அடிகளார் மறைந்தார்.


✍ 1983ஆம் ஆண்டு செப்டம்பர் 1ஆம் தேதி விடுதலை போராட்ட வீரர் மறை.திருநாவுக்கரசு மறைந்தார்.

 *இன்றைய நாளில் பிறந்தவர்.*

(01-செப்)

*புலித்தேவர்.*


🐅 இந்திய விடுதலைப் போராட்டத்தை தமிழகத்தில் தொடங்குவதற்கு காரணமாயிருந்த முன்னோடி புலித்தேவர் 1715ஆம் ஆண்டு செப்டம்பர் 1ஆம் தேதி பிறந்தார். இவருடைய இயற்பெயர் 'காத்தப்ப பூலித்தேவர்' என்பதாகும். 'பூலித்தேவர்' என்னும் பெயர் 'புலித்தேவர்' என்று அழைக்கப்பட்டது.


🐅 இந்திய விடுதலை வரலாற்றில் 'வெள்ளையனே வெளியேறு' என்று முதல்முறையாக 1751ஆம் ஆண்டில் வீர முழக்கமிட்டவர். இதனால் இந்தியாவின் முதல் விடுதலைப்போர் எனக் கருதப்படும் சிப்பாய்க் கலகத்திற்கு (1857) முன்னோடியாகக் கருதப்படுகிறார்.


🐅 தமிழ்நாடு அரசு, திருநெல்வேலி மாவட்டம் சிவகிரி வட்டம் பகுதியிலுள்ள நெல்கட்டும்செவல் எனும் ஊரில் புலித்தேவர் நினைவைப் போற்றும் வகையில் புலித்தேவர் நினைவு மாளிகை, திருமண மண்டபம் ஆகியவற்றை அமைத்துள்ளது.


*அ.வரதநஞ்சைய பிள்ளை.*.


✍ 1877ஆம் ஆண்டு செப்டம்பர் 1ஆம் தேதி தமிழரசி குறவஞ்சி, கருணீக புராணம் போன்ற நூல்களின் ஆசிரியர் தமிழறிஞர் அ.வரதநஞ்சைய பிள்ளை பிறந்தார்.


✍ தமிழுடன் தெலுங்கையும், வடமொழியையும் அறிந்த இவர் கவிபாடுவதில் வல்லவர்.


✍ கரந்தைச் தமிழ்ச் சங்கத்தில் 'ஆசிரியர்' என்னும் சிறப்புப் பட்டம் பெற்றவர்.


✍ கரந்தைச் தமிழ்ச் சங்கத்தின் வெள்ளி விழாவின் பொழுது ஞானியாரடிகள் தலைமையில் தமிழரசி குறவஞ்சியை அரங்கேற்றிய இவர் 1956ஆம் ஆண்டு ஜூலை 11ஆம் தேதி மறைந்தார்.