Saturday, May 4, 2024

செய்தித் துளிகள் - 4.05.2024 (சனிக்கிழமை)

⛑️⛑️கடந்த ஆட்சியில் தேர்வு செய்யப்பட்ட 18 மாவட்ட கல்வி அலுவலர்களின் பணி நியமனம் ரத்து-சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

👉பணி நியமனங்களில் இடஒதுக்கீடு முறையை அமல்படுத்துவதில் TNPSC குளறுபடி.

👉4 வாரத்திற்குள் முறையான இடஒதுக்கீடு முறையை பின்பற்றி, மாற்றியமைப்பட்ட

பட்டியலை வெளியிட உத்தரவு.

👉பணியாற்றி வரும் 4 அதிகாரிகளுக்கு சிக்கல்.                                                   ⛑️⛑️(NSNOP) நம்ம ஊரு நம்ம பள்ளி திட்டத்தின் கீழ் பள்ளிகளுக்கு பொருட்கள் கொள்முதல் செய்தல் - நிதி விடுவித்தல் சார்ந்து - Proceedings வெளியீடு.

⛑️⛑️அரசு பொதுத் தேர்விற்கு வருகை புரியாத மாணவர்கள் மற்றும் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி - SPD & DSE இணைச் செயல்முறைகள் வெளியீடு.

⛑️⛑️கடந்த பொது மாறுதலில் ஆணை பெற்று பணியில் சேராமல் உள்ள 105 ஆசிரியர் பயிற்றுநர்களை உடனடியாக புதிய பணியிடத்தில் சேர உத்தரவு - இயக்குநர் செயல்முறைகள் வெளியீடு.

⛑️⛑️9 ம் வகுப்பு பாட புத்தகத்தை தொடர்ந்து 10 ம் வகுப்பு தமிழ் பாட புத்தகத்திலும் கலைஞர் கருணாநிதி பற்றிய பாடம் அறிமுகம்

⛑️⛑️6-ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் உள்ள சீட்டு விளையாட்டை நீக்க கோரிக்கை

⛑️⛑️தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டப்படி வரும் 6ல் வெளியிடப்படும் - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

⛑️⛑️பொறியியல் சேர்க்கை விண்ணப்பப் பதிவு: மே 5 முதல் தொடங்க வாய்ப்பு

⛑️⛑️12 ( BRTEs) ஆசிரியர் பயிற்றுநர்கள் பள்ளிக்கு பட்டதாரி ஆசிரியர்களாக பணி மாறுதல் செயல்முறைகள் - இணைப்பு  BRTEs பட்டியல் வெளியீடு.

⛑️⛑️கல்வி நிறுவனத்தில் வர்த்தக கண்காட்சி கூடாது: சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு

⛑️⛑️ஜூன் 10ஆம் தேதி தனியார் பள்ளிகள் திறப்பு:-

👉மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை, கடும் வெயில் போன்ற காரணங்களால் பல தனியார் பள்ளிகள், பள்ளித் திறப்பை தள்ளிவைத்துள்ளன.

👉வழக்கமாக ஜூன் 3ஆம் தேதிக்குள் பள்ளிகள் திறக்கப்படும். ஆனால், இந்த முறை ஜூன் 10ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அட்மிஷன் படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

👉அதே நேரம், அரசு பள்ளிகளுக்கு பள்ளித்திறப்பு தேதி தொடர்பாக அதிகாரப்பூர்வமாக இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

⛑️⛑️இணையவழி சூதாட்டத்தை விளம்பரப்படுத்துவர்களுக்கு ஓராண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்படும் - தமிழ்நாடு அரசு எச்சரிக்கை

⛑️⛑️தஞ்சாவூர் பெரிய கோயில் குறித்து அவதூறு பரப்பினால் கடும் நடவடிக்கை பாயும் - இந்து சமய அறநிலையத்துறை எச்சரிக்கை

⛑️⛑️தமிழ்நாட்டில் மே 6 ஆம் தேதி வரை வெப்ப அலை வீச வாய்ப்பு - பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு வேண்டுகோள் 

⛑️⛑️வாகன நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஓட்டினால் அபராதம் விதிக்கும் முறை அமலுக்கு வந்தது - வாகனங்கள் தீவிர கண்காணிப்பு 

⛑️⛑️சென்னை மெட்ரோ ரயிலில் ஏப்ரம் மாதம் மட்டும் சுமார் 80.87 லட்சம் பேர் பயணம் செய்ததாக அறிவிப்பு 

⛑️⛑️புராதான சின்னங்களை பாதுகாப்பது தொல்லியல் துறையின் கடமையாகும் - சென்னை உயர்நீதிமன்றம் கருத்து

⛑️⛑️நீலகிரியில் வரலாறு காணாத வெப்பம் - கோடை விழாவை ரத்து செய்ய சமூக ஆர்வலர்கள் கோரிக்கை 

⛑️⛑️கன்னியாகுமரியில் விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலை இடையே விரைவில் கண்ணாடி கூண்டு பாலம் அமைக்கப்பட உள்ளதாக தகவல்

⛑️⛑️97.76 சதவிகித ரூ.2 ஆயிரம் நோட்டுகள் திரும்ப ஒப்படைக்கப்பட்டு விட்டதாக ரிசர்வ் வங்கி தகவல்

⛑️⛑️டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைதை கண்டித்து ஆம் ஆத்மி சார்பில் கையெழுத்து இயக்கம் தொடக்கம்

⛑️⛑️தனியார்மயமாக்கல் மூலமாக தாழ்த்தப்பட்டோரின் இடஒதுக்கீட்டை மத்திய அரசு பறிப்பதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டு

⛑️⛑️துபாயில் மீண்டும் கனமழை - பிற நாடுகளுக்கு செல்லக்கூடிய 15 விமானங்கள் ரத்து

⛑️⛑️உத்தரப்பிரதேசத்தின் ரேபரேலி தொகுதி வேட்பாளராக ராகுல்காந்தி போட்டியிடுவார் என காங்கிரஸ் கட்சி அறிவிப்பு. 

கேரளாவின் வயநாடு தொகுதியை தொடர்ந்து 2வது தொகுதியாக ரேபரேலியில் போட்டியிடுகிறார் ராகுல்

⛑️⛑️தங்கம் விலை குறைவு:

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ₹800 குறைந்து ₹52,920-க்கும், 1 கிராமுக்கு ₹100 குறைந்து ₹6,615-க்கும் விற்பனையாகிறது.

⛑️⛑️கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க 1 ரூபாய்க்கு  ஆவினில் மோர் வழங்க வேண்டும்

மே, ஜூன் மாதங்களில் 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்க வேண்டும்

-கோவை பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் வலியுறுத்தல்.

⛑️⛑️தமிழகத்தில் வரும் மே 6ம் தேதி வரை வட உள் மாவட்டங்களில் வெப்ப அலை நிலவும்

அடுத்த 5 தினங்களுக்கு தமிழகத்தின் உள் பகுதிகளில் கோடை மழை பெய்யக்கூடும்

சென்னையில் அடுத்த இரண்டு தினங்களுக்கு 39-40 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகும்.

⛑️⛑️கைதை எதிர்த்த டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலின் மேல்முறையீடு வழக்கு விசாரணை நிறைவடைய அதிக நாட்கள் ஆகும் பட்சத்தில் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் அளிப்பது குறித்து நாங்கள் பரிசீலிக்கலாம் - உச்சநீதிமன்றம்.

⛑️⛑️நீலகிரி வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை: 

நீலகிரி மாவட்ட பதிவெண் (TN 43) கொண்ட வாகனங்கள் உதகை செல்வதற்கு இ-பாஸ் தேவையில்லை; மே 7ம் தேதி முதல் நீலகிரி மாவட்டத்திற்கு வரும் அனைத்து வாகனங்களுக்கும் இ-பாஸ் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

⛑️⛑️மூத்த பத்திரிகையாளர் சண்முகநாதன் மறைவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்

⛑️⛑️சென்னையில் கோடை மழைக்கு வாய்ப்பே இல்லை: வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் பேட்டி

⛑️⛑️தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பத்திரிகைச் சுதந்திரம் முழு அளவில் பேணப்படுகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின்

⛑️⛑️விண்வெளியில் 14 கோடி மைல் தொலைவில் இருந்து பூமிக்கு வந்த சிக்னல்... நாசா ஆச்சரியம்.

⛑️⛑️இந்த ஆண்டுக்குள் 7,030 புதிய பஸ்கள்: போக்குவரத்துத்துறை தகவல்

⛑️⛑️திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஏப். மாதத்தில் ரூ.101 கோடி உண்டியல் காணிக்கை

👉திருப்பதி கோயிலில் ஏப்ரல் மாதத்தில் உண்டியல் காணிக்கையாக பக்தர்கள் ரூ.101.63 கோடியை செலுத்தியுள்ளனர்.                         👉திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஏப்ரல் மாதத்தில் 20.17 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர் என்று செயல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

⛑️⛑️என் கனவுத் திட்டமாக தொடங்கி பலரது கனவுகளை நான் முதல்வன் திட்டம் நனவாக்கி வருகிறது:

👉முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

👉என் கனவுத் திட்டமாக தொடங்கி பலரது கனவுகளை நான் முதல்வன் திட்டம் நனவாக்கி வருகிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

👉நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்று சாதனை படைத்தவர்களை குறிப்பிட்டு முதலமைச்சர் பெருமிதம் தெரிவித்தார்.

⛑️⛑️இஸ்ரேல் உடனான உறவை முறித்துக் கொள்வதாக கொலம்பியா அறிவிப்பு

⛑️⛑️எரிமலை வெடிப்பு காரணமாக இந்தோனேசியாவில் சர்வதேச விமான நிலையம் மூடல்

⛑️⛑️மகளிருக்கு இடஒதுக்கீடு: உச்சநீதிமன்றம் உத்தரவு

உச்சநீதிமன்ற வழக்கறிஞர் சங்க நிா்வாகிகள் குழுவில், மகளிருக்கு 3இல் 1 பங்கு இடஒதுக்கீடு வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நிா்வாகிகள் குழுவில் 3 இடங்களும், 6 முதுநிலை நிா்வாக உறுப்பினா் பதவியில் 2 இடங்களும், அலுவலா் பொறுப்பில் ஒரு இடமும் மகளிருக்கு ஒதுக்கப்பட வேண்டும்.

வரும் 2024-25 வழக்கறிஞர் சங்கத் தோ்தலில், பொருளாளா் பதவி மகளிருக்கு ஒதுக்கப்பட வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

⛑️⛑️⛑️⛑️⛑️⛑️⛑️⛑️⛑️⛑️

🌹🌹உடல் அசதியில் இருந்து விடுபட இயற்கை உணவுகள்:-

👉சிலருக்கு எந்த காரணமும் இன்றி உடல் எப்போதும் அசதியாக இருப்பது போல உணர்வார்கள். உடலில் ஊட்டச்சத்து குறைபாடு அல்லது நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால் கூட இவ்வாறு உடல் அசதி ஏற்படலாம். இதற்கு சில இயற்கை உணவுகளை எடுத்துக்கொண்டாலே உடல் அசதியை சீக்கிரம் போக்கலாம்.

👉அன்னாசிபழ‌ச்சாறுடன் மிளகுத்தூள் சேர்த்து அருந்தி வந்தால் உடல் சோர்வு குறையும். இதை தினமும் சாப்பிடலாம்.

👉அன்னாசிப் பழம், தேங்காய் துருவல் சேர்த்து அரைத்து தேன் கலந்து சாப்பிட உடல் சோர்வு குறையும். இதை காலையில் சாப்பிடும் கூடுதல் பலன் கிடைப்பதை காணலாம். அன்றைய தினம் முழுவதும் சுறுசுறுப்பாக வேலை செய்ய முடியும்.

👉மிளகை நெய்யில் வறுத்து தூள் செய்து வெல்லம் சேர்த்து சாப்பிட்டுவர உடல் சோர்வு குறையும்.

👉உலர்ந்த திராட்சையைப் பன்னீரில் ஊறவைத்து 2 மணி நேரம் கழித்துப் பிழிந்து அதன் ரசத்தைத் தொடர்ந்து 21 நாட்கள் சாப்பிட்டு வந்தால் படபடப்பு குறையும்.

👉உலர்ந்த திராட்சைப் பழம், ஆரஞ்சுச் சாறு, ஒரு வாழைப்பழம் முதலியவற்றை தினமும் சாப்பிட்டு வந்தால் சுறுசுறுப்புடன் இருக்கலாம்.

👉பேரீச்சம் பழங்களை தண்ணீரில் போட்டு ஊற வைத்து ஊறிய பேரீச்சம் பழத்தையும் அந்த தண்ணீரையும் அருந்த சோர்வு குறையும். இதை தினமும் செய்யலாம். தண்ணீரில் ஊறவைத்து குடிக்க பிடிக்காதவர்கள் சூடான பாலில் ஊறவைத்தும் சாப்பிடலாம்.

⛑️⛑️⛑️⛑️⛑️⛑️⛑️⛑️⛑️⛑️

🌹🌹அக்னி நட்சத்திரம்: விழிப்போடு இருங்கள்...

⛑️இன்று முதல் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் காலம் தொடங்குகிறது. ஒரு மாதம் நீடிக்கும் இந்த வெயிலின் தாக்கம் 110 டிகிரி வரை அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. எனவே இக்காலத்தில் கவனமாக இருக்குமாறு செய்திக்கதிர் கேட்டுக் கொள்கிறது.

👉வெயில் அதிகரிக்கும் போது ஆக்சிஜன் லெவல் மிகக் குறைவாக இருக்கும் எனவே மே மாதம் முடியும் வரை  மதியம் ஒரு மணி முதல் மாலை 5 மணி வரை 

பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை வெளியில் செல்வதை தவிர்க்கவும்.

👉நோயாளிகள் கர்ப்பிணிகள் சற்று எச்சரிக்கையுடன் இருங்கள்.

👉ஐஸ் கட்டிகள், ஐஸ் வாட்டர்,  கார்பனேட் குளிர்பானங்கள் கண்டிப்பாக தவிர்க்கவும். பழச்சாறு அருந்தலாம் அதுவும் ஐஸ் போடாமல், மற்றும் இளநீர்... இது எல்லாவற்றையும் விட மிகச் சிறந்தது மோர். பாட்டிலில் எடுத்து செல்லுங்கள்.‌

👉அனைவரும் காலையிருந்தே மோர் மற்றும் நீராகாரங்களை அடிக்கடி உட்கொள்ளுங்கள். 

காபி டீ இன்னும் ஒரு மாதத்திற்கு வேண்டாம். காலையில் சுடுநீரில் இஞ்சி போட்டு சாப்பிட்டு வர பித்தம் தணியும். 

முதலுதவி போல எலுமிச்சை எப்போதும் வீட்டில் இருக்கட்டும். 

மாமிச உணவு, அதிக எண்ணெய் மற்றும் காரம் வேண்டாம்.

👉வெயிலில் இருந்து வந்தவுடன் சிறிது நேரம் சென்று வியர்வை தணிந்தவுடன் தண்ணீர் அருந்தவும். உடனே ஐஸ் வாட்டர் அருந்தினால் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும். மூளையில் இருந்து வரும் நரம்புகள் ஒலியின் வேகத்தை விட அதிக ஆற்றலை செலுத்தி என்ன நடக்கிறது என அறிய முயற்சி செய்யும். அந்த வேகத்தை இரத்தம் நாளங்கள் தாங்க முடியாமல் வெடித்து விட வாய்ப்புண்டு.

👉உடனே அருந்த வேண்டுமென்றால் சிறிதளவு மிதமான வெந்நீர் அருந்தினால் உடல் சமநிலை அடையும். ஆபத்தில் இருந்து தப்பலாம். 

👉மண் பானை நீர் நம்மை எல்லா காலத்திலும் காக்கும்.

கறிவேப்பிலை (அ) கறிவேம்பு - தினம் ஒரு மூலிகை

 *கறிவேப்பிலை (அ) கறிவேம்பு*


நறுமணம் உள்ள இலையையும் கொத்தாய் மலர்களையும் கரிய நிற பழங்களையும் உடைய சிறு மரம் சமையலுக்கு மணமூட்டியாக பயன்படுகிறது இலையே மருத்துவ பயன் உடையது இதை மருந்தாக பயன்படுத்துவதால் பசிமிகும் தாது பலம் பெருகும் வயிற்றில் வெப்பம் உண்டாகி வாயுவை தொலைக்கும் இலை சிறிதளவு மிளகாய் இவற்றை நெய்யில் வதக்கி பழம் புலி வருத்து உப்பு சேர்த்து துவையல் ஆக்கி முதல் கவலத்தில் பிசைந்து உன்ன குமட்டல் வாந்தி அஜீரண பேதி சீதபேதி சிரியா மாந்தம் வயிற்று கோளாறு ஆகியவை நீங்கும் கறிவேப்பிலை ஈர்க்கு முருங்கை ஈற்கே நெல்லி ஈற்கே வகைக்கு ஒரு பிடி சுக்கு மிளகு சீரகம் வகைக்கு 20 கிராம் அரை லிட்டர் நீரில் போட்டு கால் லிட்டராக காய்ச்சி வேலைக்கு ஒரு முடக்கு வீதம் தினம் 4 வேளை கொடுக்க சளி இருமல் ஜுரம் வாத ஜுரம் தீரும் ஒரு பிடி இலையுடன் சிறிது சீரகம் மஞ்சள் சேர்த்து அரைத்து புன்னகை அளவு வெறும் வயிற்றில் 45 நாட்கள் கொடுக்க பித்த மிகுதியால் வந்த பிதற்றல் பைத்தியம் தீரும் கருவேப்பிலை பொடியுடன் சிறிது சர்க்கரை பொடி கலந்து காலை மாலை ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு வர நீர் கோவை சூதக வாயு அகழும் .

காசறை(அ)புளிச்சக்கீறை - தினம் ஒரு மூலிகை


காசறை(அ)புளிச்சக்கீறைகை வடிவ பசிய இலைகளையும் சுனையுடைய சிறு கிளைகளையும் தனித்த மஞ்சள் நிற பூக்களையும் உருண்டை வடிவ விதைகளையும் உடைய செடியினம் புளிச்சக்கீரை என்றும் கூறுவார்கள் இலை பூ விதை மருத்துவ பயன் உடையது இலை எரிச்சல் தணித்தல் கொதிப்பு தணித்தல் காமம் பெருக்குதல் இலையை அரைத்து கட்டிகளுக்கு பற்றுப்போட கட்டிகள் உடைந்து ஆறும் பூவை பிழிந்து சாறு எடுத்து பத்து மில்லியில் ஒரு சிட்டிகை மிளகு பொடியும் சர்க்கரையும் கலந்து நாள்தோறும் காலை மாலை பருகி வர சுவையின்மை பித்த வாந்தி ஆகியவை குணமாகும் 250 கிராம் இளம் பிஞ்சுகளை சிதைத்து இரண்டு லிட்டர் நீரில் இட்டு அரை லிட்டர் ஆகுமாறு காய்ச்சி வடிகட்டி அதில் ஒரு கிலோ சர்க்கரை சேர்த்து தேன் பதமாக காய்ச்சி வைத்துக் கொண்டு 20 மில்லி செம அளவு நீரில் கலந்து காலை மாலை சாப்பிட்டு வர செரிமானமின்மை சரியாகும் பித்தம் தனியும் கீரையாக சமைத்து உன்ன உணவோடு உடலை தேற்றும்.

நன்றி.

Thursday, May 2, 2024

மாணவர்கள் பெற்றோர்களின் கவனத்திற்கு

கல்லூரியில் சேர்க்கைக்கு தயாராயிருக்கும் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களின் கவனத்திற்கு. 


2024 ஆண்டுக்கான +2 தேர்வு முடிவுகள் மே மாதம் 6 ஆம் தேதி வரவுள்ளது என்பதனை அறிவோம். 


இந்த 2024-25 கல்வியாண்டில்

கலை, அறிவியல், பொறியியல், மருத்துவம் மற்றும் சட்டக் கல்லூரிகளில் தங்கள் பிள்ளைகளை  சேர்க்க வேண்டும் என்று உள்ளவர்கள் கீழ்கண்ட விசயங்களை முதலில் சரிசெய்து வைத்து கொள்வது கடைசி நேர அலைச்சலையும் நேரத்தையும் மிச்சப்படுத்தும்.


🔵 மாணவர்களின் பாஸ்போர்ட் சைஸ் கலர் போட்டோ 10 ம், ஸ்டாம்ப் சைஸ் போட்டோ 4 ம் எடுத்து வைத்துக் கொள்ளவும். மேலும் அவற்றை டிஜிட்டல் வடிவிலும் வாங்கி வைத்துக்கொள்ளவும்.


🔵 மாணவர்கள் பெயரில் ஏதேனும் ஓர் தேசிய மயமாக்கபட்ட வங்கியில் [Nationalized bank] சேமிப்பு கணக்கு ஒன்று துவக்கி வைத்துகொள்ளவும், வங்கி கணக்கு துவங்க பான் கார்டு PAN CARD இல்லாதவர்கள்  விடுமுறையில் விண்ணப்பித்து எடுத்துக் கொள்ளவும்.


🔵 பிறப்பு சான்றிதழ் (Birth certificate) ஒரிஜினல் இல்லாதவர்கள் பஞ்சாயத் போர்டு /நகராட்சி/ மாநகராட்சி ஏதேனும் ஒன்றில் விண்ணப்பித்து புதிய பிறப்பு சான்றிதழ் வாங்கி  வைத்து கொள்வது நல்லது. 


🔵 சாதி சான்றிதழ் (Community certificate) இல்லாதவர்களும் / ஒரிஜினல் தங்கள் கைவசம் இல்லாதவர்ககளும் இது சமயம் புதியது ஒன்று வாங்கி வைத்து கொள்ளவும். இச்சான்று தற்போது QR code-உடன் கூடிய டிஜிட்டல்/பிடிஃஎப் வடிவில் கொடுக்கப்படுகிறது.


இந்த சான்றிதழ் கல்லூரியில் அரசு இடஒதுக்கீட்டில் இடம் கிடைக்க தேவை. மேலும் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க இது தேவை.


🔵 பிறப்பிட சான்றிதழ் (Nativity certificate) இல்லாதவர்கள் புதியது ஒன்று வாங்கி வைத்து கொள்ளவும். இச்சான்று தற்போது QR codeஉடன் கூடிய digital வடிவில் கொடுக்கப்படுகிறது.


இந்த சான்றிதழ் நீங்கள் தமிழ்நாட்டை சேர்ந்தவர்தான் என்பதை உறுதிபடுத்தி, பொறியியல்/ மருத்துவ கல்லூரியில் அரசு இடஒதுக்கீட்டில் இடம் கிடைக்க தேவை.


🔵 முதல் தலைமுறை பட்டதாரி (First generation graduate certificate) சான்றிதழை, தகுதியானவர்கள் வாங்கி வைத்துக்கொள்ளவும். முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு கல்லூரி கட்டணத்தில் சிறப்பு சலுகை வழங்கப்படுகிறது.


🔵 வருமான சான்றிதழ் (Income certificate) தேவையுள்ளவர்கள் வாங்கி வைத்துக்கொள்ளவும். இது பள்ளி, கல்லூரிகளில் கல்வி உதவித்தொகை மற்றும் வருவாய்வழி தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க தேவை.


முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ், வருமான சான்றிதழ், சாதி சான்றிதழ், பிறப்பிட சான்றிதழ் தேவையுள்ள மாணவர்கள் இப்பொழுதே  இ- சேவை மையங்கள் மூலம்  விண்ணப்பித்து வாங்கி வைத்து கொள்ளவும். 1-2 வாரங்களுக்குள் கிடைத்துவிடும்.


🔵 நீட் தேர்வு மற்றும் மருத்துவ சேர்க்கைக்கு (MBBS/ BDS) விண்ணப்பிக்க விரும்புவர்கள், போட்டோ மற்றும் கைரேகைகளை டிஜிட்டல் வடிவில் ஸ்கேன் செய்து வைத்திருக்கவேண்டும். மேலும் பெற்றோர்களின் சாதி சான்றிதழும் தேவை.


பெற்றோர்களுக்கான அறிவுரை,


1. மாணவர்களின் பெயர்கள் இதுவரை ரேஷன் கார்டு எனும் குடும்ப அட்டையில் சேர்க்காதவர்கள் இப்பொழுதே சேர்த்து  கொள்வது  நல்லது.


2. மாணவர்களின் மாற்று சான்றிதழ் (TC), மதிப்பெண் சான்றிதழ் (10th, 11th and 12th Mark sheets) மற்றும் எல்லா சான்றிதழ்களையும் ஜெராக்ஸ் எடுத்து வீட்டிலும் அல்லது எல்லா சான்றிதழ்களையும் கணிப்பொறியில் PDF/JPEG  வடிவில் சேமித்து வைத்துகொள்ளவும். குறைந்தது எல்லாவற்றிலும் 10 காப்பிகள் (ஜெராக்ஸ்) தேவை.


3. பிள்ளைகளுக்கு +2 பரிட்சை முடிவுகள் வரும் முன்பாக தாங்கள் பிள்ளைகளை எந்த கல்லூரியில்/ எந்த பாடப்பிரிவில் சேர்ப்பது என பேசி தீர்மானம் செய்து வைத்து கொள்வது நல்லது.


4. மாணவர்களின் பெயர்கள், பிறந்த தேதி, முகவரி, பெற்றோர்களின் பெயர்கள் எல்லா சான்றிதழ்களிலும், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம் போன்ற ஆவணங்களிலும்,  எழுத்துப்பிழை இன்றி சரியாக, ஒரே மாதிரியாக உள்ளதா என்று சரிபார்க்க வேண்டும்.


5. கல்லூரி சேரக்கை தகவல்களை நாளிதழ், டிவி மற்றும் தொடர்புடைய இணையதளம் மூலம் அறிந்து வரவும்.


6. தற்பொழுது பெரும்பாலான  கலை/அறிவியல்/பொறியியல் /சட்டக் கல்லூரி படிப்புகளுக்கு  சேருவதற்க்கு  ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.


7. பெரும்பாலான தனியார் கலை-அறிவியல் கல்லூரிகள் சேர்க்கை விண்ணப்ப விநியோகம்/ ஆன்லைன் பதிவை ஏற்கனவே ஆரம்பித்துவிட்டன. பிளஸ் 2 ரிசல்ட் வெளியான சில தினங்களில் பொறியியல் கலந்தாய்வு, பொது மருத்துவ கலந்தாய்வு மற்றும் வேளாண் படிப்புகளுக்கான அறிவிப்புகள் வெளியிடப்படலாம்.

குறைகளும், நிறைகளும்


ஒவ்வொருவரும் சில தனித்திறமைகள் பெற்று உள்ளோம் என்பதை யாரும் மறுக்க இயலாது._


_*எல்லோரிடமும் சில நல்ல குணங்களும் உள்ளன. சில கெட்ட குணங்களும் உள்ளன.*_


_உங்களின் குறை, நிறைகள் உங்களுக்குத் தெரிந்தால் அது உங்களின் வாழக்கையின் வெற்றிக்கு மிகவும் உதவும்._


_*நாம் எல்லோரும் சில தனித் திறமைகளைப் பெற்றே பிறந்து உள்ளோம். ஒரு சிலர் நன்றாகப் பாடுவார்கள். சிலர் நன்றாக நடனம் ஆடுவார்கள்.*_


_சிலர் கதை எழுதும் திறமைப் பெற்றுள்ளனர். சிலர் மேடையில் நன்றாகப் பேசும் திறமைப் பெற்றுள்ளனர்._


_*நீங்கள் திறமைகளையும், குறைகளையும் நன்றாக அறிந்து இருந்தால் அது உங்களின் முன்னேற்றத்திற்கு பெரிதும் உதவும்.*_


_நீங்கள் உங்களுக்குப் பிடித்த, சரியான துறையைத் தேர்ந்து எடுக்கலாம். அதில் நீங்கள் எளிதாக நிபுணர் ஆகலாம்._


_*நீங்கள் உங்களுக்கு வராத,பிடிக்காத துறையைத் தவிர்க்கலாம் அல்லவா?*_


_நீங்கள் நன்றாக வாதம் பண்ணும் திறமை பெற்று இருந்தால் வழக்கறிஞர் ஆகலாம்._


_*நீங்கள் விளையாட்டில் ஆர்வம் உள்ளவராக இருந்தால் ஏதோ ஒரு விளையாட்டைத் தேர்ந்தெடுதது அதில் பயிற்சியாளர் ஆகலாம்..*_ 


_உங்கள் குறைகள், நிறைகள், திறமைகள், பலவீனங்கள் தெரிந்து இருந்தால் அதற்கு ஏற்றார் போல் முடிவுகள் எடுக்கலாம்._ 


_*படிப்பையும், வேலையையும் சரியாகத் தேர்ந்து எடுக்கலாம்.*_


_ஒரு சிலர் தங்களது பலம் எது, பலவீனம் எது என்றே தெரியாமல் கடைசி வரை வாழ்ந்து மடிகிறார்கள்._


_*அவர்களால் பெரிய வெற்றிகளை அடைந்து இருக்க முடியாது என்பது உண்மை...*_


_உங்கள் குறைகள், நிறைகள், திறமைகள், பலவீனங்கள், பலங்கள் ஆகியவற்றை அறிந்துக் கொள்ளுங்கள்._


_*அதற்கேற்றார் போல் தொழிலிலும், சொந்த வாழ்க்கையிலும் முடிவுகளை எடுங்கள்.*_


_*வாழ்க்கையில் வெற்றி நிச்சயம்.*_

ஸ்ரீசதாசிவ பிரம்மேந்திரர் ஆராதனை ஸ்பெஷல்! 🔥🙏🏻

🔥#குருவாழ்க 

  குருவே துனை."💐


மக்களுக்கு நல்வழி காட்ட காலந்தோறும் அவதரித்து வரும் மகான்களில் ஒருவராக 17-ஆம் நூற்றாண்டில் தோன்றியவர் #சதாசிவப்பிரம்மேந்திரர். 


காஞ்சி மடத்தின் 57-ஆவது பீடாதிபதியான சதாசிவேந்திர சரஸ்வதி சுவாமிகளிடம் சீடராக இருந்தவர்.

சதாசிவப் பிரம்மேந்திரர் திகம்பரராக வாழ்ந்தவர்.

#பல்வேறு அற்புதங்கள் புரிந்து, பலரது ஆன்ம ஞானம் சிறக்கக் காரணமாக இருந்த மகான் சதாசிவ பிரம்மேந்திரர், 1753-ம் ஆண்டில் சித்திரை மாதத்து தசமி திதி அன்று, கரூரை அடுத்த நெரூரில், ஜீவ சமாதி ஆனார்.


 #ராமேஸ்வரத்தில்

குடிகொண்டிருக்கும் ராமநாத சுவாமியின் அருளால் பிறந்த இவருக்கு பெற்றோர் இட்ட பெயர் சிவராமன் என்பது. அவர்களது குலதெய்வமான கிருஷ்ண பகவானின் பெயரையும்

இணைத்து சிவராம கிருஷ்ணன் என்று அழைக்கப் பெற்றார்.


#இளம் வயதிலேயே வேதம், புராணம், இதிகாசம், உபநிடதம், சாத்திரம், தர்க்கம் போன்றவற்றில் சிறந்த புலமை பெற்றார் சிவராம கிருஷ்ணன். இவரது தந்தை சோமநாத யோகி இல்லறத்தைத் துறந்து இமயம் சென்றுவிடவே, தாய் பார்வதியின் ஆதரவில் வளர்ந்து வந்தார். 


#சிவராமனின் பரந்த அறிவாற்றலைக் கண்ட தாய் அவரை காஞ்சி பீடாதிபதி சதாசிவேந்திர சுவாமிகளிடம் ஒப்புவித்தார். அங்கே இவரது அறிவு மேலும் சுடர்விட்டுப்

பிரகாசித்தது. தர்க்கத்தில் தன்னிகரற்றவராக விளங்கினார். பல இடங்களுக்கும் சென்று மிகச்சிறந்த வித்வான்கள் பலரையும் தன் வாக்கு சாதுர்யத்தால் மடக்கித் தோல்வியுறச் செய்தார். இதைக் கேள்விப்பட்ட குரு சதாசிவேந்திரர், இவ்வாறு தர்க்கத்தில் ஈடுபட்டு வெற்றிமேல் வெற்றி பெற்றால், சிறந்த கல்விமானாக

இருந்தாலும் அவன் மனதில் ஆணவம் குடியே றிவிடும்; அதனால் ஆன்ம முன்னேற்றம் தடைப்படும் என்றெண்ணி சிவராமனை காஞ்சிக்கு வரும்படி கட்டளையிட்டார். 


#அங்கு வந்த சிவராமன் வித்வான்களிடம் மிகப்பெரிய தர்க்கத்தில் ஈடுபட, குருவானவர் அவரை அழைத்து, ஊரார் வாயெல்லாம் அடக்க கற்ற நீ உன் வாயை அடக்க கற்கவில்லையே என்றார். அதுவே வேத வாக்காக- குரு ஆணையாக சிவராமனுக்குத் தோன்றியது. அந்த நொடியிலிருந்து பேசுவதையே நிறுத்திவிட்டார் சிவராமன். 


#சீடனின் பண்பட்ட நிலையை அறிந்து மகிழ்ந்த குரு, சிவராம கிருஷ்ணனுக்கு சதாசிவப் பிரம்மேந்திரர் என்று பெயர் சூட்டி சந்நியாச தீட்சையும் வழங்கினார். அதன்பின்னர் அத்வை தானந்த நிலையில் மூழ்கிய சதாசிவர் சிவன் சம்பந்தமான பல கிரந்தங்களை இயற்றினார்.


#சுமார் நூறாண்டு காலம் அவர் வாழ்ந்திருந்தார் என்று கூறுகிறார்கள். ஒருநாள் வழக்கம்போல் நிர்வாணமாக நடந்து போய்க் கொண்டிருந்தார். அது ஒரு முகம்மதிய மன்னரின் அந்தப்புரம். ராணிகள் குளித்துக் கொண்டிருந்தார்கள். ராஜாவும் அங்கே இருந்தார். சதாசிவப் பிரம்மேந்திரர் அந்தப்புரத்தின் வழியாக நடந்து அந்தப்புறம் போய்க் கொண்டே இருந்தார்! எந்தப் புறத்திலும் இறைவனையே தரிசிப்பவர் கண்களில் கடவுளைத் தவிர வேறு எதுவும் பட வாய்ப்பில்லை அல்லவா?


#ஆனால் முகம்மதிய மன்னர் தொலைவிலிருந்து அவரைப் பார்த்துவிட்டார். யார் இந்த ஆசாமி? ராணிகள் குளிக்கும் குளக்கரையில் நிர்வாணமாக- எதிலும் லட்சியமே இல்லாதவர்போல் நடந்து செல்கிறாரே! என்ன ஆணவம்! ஓடிச்சென்று அவரைப் பிடித்த மன்னர் அவரது வலக் கரத்தைத் தன் வாளால் வெட்டி வீழ்த்தினார். 


#குளித்துக் கொண்டிருந்த ராணிகள் எல்லாம் பதறியவாறு தங்கள் துணிகளை எடுத்துப் போர்த்திக்

கொண்டு திகைத்து நின்றார்கள். அவர்கள் திகைத்து நிற்கும்படி ஒரு விந்தையான செயல் அங்கே நிகழ்ந்து கொண்டிருந்தது. வலக்கரம் கீழே துண்டாய் விழுந்தபோதும், சதாசிவப் பிரம்மேந்திரர் தன் உடலில் நடந்தது என்னவென்றே தெரியாதவராய்த்

தொடர்ந்து நடந்துகொண்டிருந்தார்! அவர் வேதனையில் துடிதுடிக்கவும் இல்லை.


#வலக்கரம் துண்டுபட்டதைப் பற்றி லட்சியம் செய்யவும் இல்லை. இன்னும் சொல்லப் போனால், இறைவனையே அகக்கண்ணால் கண்டு ஆனந்தித்துக் கொண்டிருந்த அவருக்கு வலக்கரம் வெட்டுப்பட்டதே தெரியவில்லை! ராணிகள், நடந்து செல்பவர் யாரோ பெரிய மகானாக இருக்கவேண்டும். தெய்வக் குற்றமாகிவிடும். ஓடிப்போய் அவரிடம் மன்னிப்புக் கேளுங்கள்! என்று அரசரிடம் வேண்டினார்கள். அவர்கள் சொல்லாவிட்டாலும்கூட, உடனடியாக மன்னிப்புக் கேட்கும் எண்ணத்தில்தான் திகைத்தவாறு அந்த அரசர் நின்றுகொண்டிருந்தார். கண்முன் நடந்துசெல்லும் அந்த

அற்புதத்தை அவரால் நம்பமுடியவில்லை; நம்பாமலும் இருக்க முடியவில்லை.


#துண்டுபட்ட வலக்கரம் கீழே கிடக்கிறதே!


#வலக்கரத்தை எடுத்துக் கொண்டு பிரம்மேந்திரர் பின்னே ஓடினார் அரசர். அவரை நிறுத்தி அவர் உடலைப் பிடித்து உலுக்கினார். மெல்ல மெல்ல பிரம்மேந்திரருக்கு இந்த உலக நினைப்பு வந்தது. அரசரிடம், என்ன வேண்டும்? என்று பிரியமாகக் கேட்டார் பிரம்மேந்திரர்! அவர் பாதங்களில் விழுந்து வணங்கிய அரசர், தான் அவர் வலக்கரத்தை வெட்டிய செயலைக் கூறி வருந்தினார். கண்ணீர் சொரிந்தவாறே மன்னிப்புக் கேட்டார். அதனால் என்ன? பரவாயில்லை. போனால் போகிறது. இந்த உடல் முழுவதுமே ஒருநாள் போகத்தானே போகிறது. வலக்கரம் கொஞ்சம் முந்திக்

கொண்டுவிட்டது போலிருக்கிறது! என்று சொல்லி நகைத்தார் பிரம்மேந்திரர்.


#மன்னரின் துயரம் ஆறாய்ப் பெருகியது. .


#சுவாமி! ஒரு மகானின் வலக்கரத்தை வெட்டிய குற்ற உணர்ச்சி என் வாழ்நாள் முழுவதும் என்னை வருத்தும். இதற்கு என்ன பரிகாரம் என்று சொல்லுங்கள்! என்று கேட்டார் மன்னர். ஓ! எனக்கு வலக்கரம் இல்லை என்பது உனக்குக் கஷ்டம் தரும் என்கிறாயா? அப்படியானால் என் வலக்கரத்தை அது இருந்த இடத்தில் வைத்துவிடு! என்றார் பிரம்மேந்திரர். முகம்மதிய மன்னர் ஜாக்கிரதையாக தான் கையில் வைத்திருந்த அவரது வலக்கரத்தை அவரது வலது தோளில் பொருத்தினார். பிரம்மேந்திரர் தன் இடக்கையால் வலது தோளைத் தடவிக் கொண்டார். மறுகணம் வலக்கரம் முன்புபோலவே உடலோடு இணைந்துவிட்டது! சரி; இனி உனக்குக் குற்ற உணர்ச்சி இருக்காதில்லையா? என்று அன்போடு கேட்ட பிரம்மேந்திரர் அவர் தலையைத் தொட்டு ஆசீர்வதித்தார்.


#குளக்கரையில் கைகூப்பியவாறு தன்னைத் தொழுதுகொண்டிருந்த ராணிகளுக்கும் புதிதாய் ஒட்டிக் கொண்ட தன் பழைய வலக்கரத்தைத் தூக்கி ஆசி வழங்கினார். பிறகு மீண்டும் இறை தியானத்தில் மூழ்கியவராய் விறுவிறுவென்று நடந்து போய்விட்டார். மன்னர் கைகூப்பியவாறு அவர் செல்வதைப் பிரமிப்புடன் பார்த்துக்கொண்டே நின்று கொண்டிருந்தார்.


#இன்னொரு சமயம், காவிரிக்கரையில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களை அழைத்து, மணலில் ஆழமாகப் பள்ளம் தோண்டச் சொன்னார். அவ்வாறு தோண்டியவுடன் அதிலிறங்கி அமர்ந்து கொண்டவர் மண்ணைப் போட்டு மூடிவிடும்படிக் கூறினார். சிறுவர்களும் மூடிவிட்டுச் சென்று விட்டனர். இது நடந்து சுமார் மூன்று அல்லது நான்கு மாதங்கள் கழித்து அங்கிருந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள், இங்கு ஒரு சாமியார் இருந்தாரே... ரொம்ப நாட்களாகக் காணவில்லையே என்று பேசிக்கொண்டார்கள்.

அப்போதுதான் சிறுவர்கள் காவிரி மணலில் அவரைப் புதைத்த விஷயத்தைக் கூறினார்கள்.


#இதைக் கேட்டு பதைத்துப் போன கிராம மக்கள் காவிரிக் கரைக்குப் போய் சிறுவர்கள் குறிப்பிட்டுக் காட்டிய இடத்தில் மணலை மெதுவாக அகற்ற, நிஷ்டையிலிருந்த பிரம்மேந்திரர் சிரித்தபடி எழுந்து சென்றார். அதேபோல ஒரு முறை சில குழந்தைகளை

அழைத்து, நாமெல்லாம் மதுரை மீனாட்சி கல்யாண உற்சவத்தைக் காணப் போகலாமா? என்றார்.


#குழந்தைகள் குதூகலத்துடன் போகலாம் என்றனர். என்னைக் கட்டிக் கொண்டு கண்களை மூடிக் கொள்ளுங்கள் என்றார். குழந்தைகள் அவ்வாறே செய்ய, அடுத்த நிமிடம் அவர்களெல்லாம் மீனாட்சி அம்மையின் திருமண உற்சவ விழாவில் இருந்தனர். விழா

முடிந்ததும் முன்புபோலவே தன்னைக் கட்டிக்கொள்ளும்படி கூறினார். அவர்களும் அவ்வாறே செய்ய, மறு நிமிடம் எல்லாரும் தத்தமது வீடுகளுக்கு வந்து சேர்ந்தனர். இதுபோல பல அற்புதங்களை அவர் நிகழ்த்தியிருக்கிறார். தஞ்சையை அடுத்த

புன்னைநல்லூர் மாரியம்மன் ஆலயத்தைப் பற்றி அறிந்திருப்பீர்கள். பிரசித்தி பெற்ற வேண்டுதல் தலமான இக்கோவிலில் உள்ள மாரியம்மனின் திருமேனி புற்று மண்ணால் ஆனது. அதனால் அதற்கு அபிஷேகம் செய்யமாட்டார்கள்; புனுகு மட்டுமே

சாற்றுவார்கள். தஞ்சை மன்னரின் நோயைத் தீர்க்க சதாசிவப் பிரம்மேந்திரர் அமைத்த திருவுருவம்தான் இந்த புன்னைநல்லூர் மாரியம்மன்!


#கரூர் அருகே மூன்று கி.மீ. தூரத்தில், தான்தோன்றி மலையில் அமைந்துள்ளது கல்யாண வேங்கடேசப் பெருமான் ஆலயம். பெயருக்கேற்ப இங்கே விளங்கு பவர் உற்சவமூர்த்தி.

இந்தத் திருவுருவிற்கு உயிரூட்டி கும்பாபிஷேகம் செய்வித்தவர் சதாசிவப் பிரம்மேந்திரர்தான். இதுவும் தற்போது சிறந்த பிரார்த்தனைத் தலமாக விளங்குகிறது. திருப்பதி செல்ல இயலாத வர்கள் தங்கள் வேண்டுதலை இங்கே நிறைவேற்றிக் கொள்கிறார்கள்.

புதுக்கோட்டை மன்னரின் வேண்டு கோளை ஏற்று, அவருக்கு சிறிது மணலை மந்திரித்துக் கொடுத்தார் சதாசிவர். அதை ஒரு தங்கப் பேழையில் வைத்து இன்றளவும் பூஜையறையில் பாதுகாத்து வருகின்றனர் அந்த வம்சத்தினர். இத்தகைய பெருமை வாய்ந்த சதா சிவப் பிரம்மேந்திரர் தன் சீடர்களிடம் ஒரு குழியை வெட்டச் சொல்லி, சித்திரை மாத சுத்த தசமி நாளில் ஜீவசமாதி அடைந்தார். மறுநாள் காலை காசியிலிருந்து சிவலிங்கம் ஒன்றை அங்கே ஒருவர் கொண்டு வந்தார். அதை அங்கே பிரதிஷ்டை செய்தனர்.

வில்வமரம் ஒன்றையும் நட்டனர். இவையெல்லாம் ஜீவசமாதி அடையும்முன் பிரம்மேந்திரர் சீடர்களிடம் கூறியபடி நடந்தவைதான். வில்வமரம் உள்ள இடமே அவர் ஜீவசமாதி ஆன இடம். எனவே நெரூர் பக்தர்களுக்கு ஓர் வரப்பிரசாதம் எனலாம்.


#சிருங்கேரி மடாதிபதி சச்சிதானந்த நரசிம்ம பாரதி சுவாமிகளுக்கு சில சந்தேகங்கள் ஏற்பட்டன. அவர் நெரூர் வந்து பிரம்மேந்திரரின் அதிஷ்டானத்தின் அருகே நிஷ்டையில் மூழ்கி னார். அப்போது அவருக்குக் காட்சி கொடுத்த பிரம்மேந்திரர் அவரது சந்தேகங்களைத் தீர்த்து வைத்தாராம். அதைப் பெரும் பாக்கியமாகக் கருதிய நரசிம்ம பாரதி சுவாமிகள், ஸ்ரீசதா சிவேந்திர ஸ்தவம் என்னும் 45 துதிகளால் பிரம்மேந்திரரை வழிபட்டார். அதில் 45-ஆவது துதி, சதாசிவ சுவாமிகளே! தாங்கள் எப்போதும் நிறைந்த மனதுடன் இருப்பவர். இந்த மந்த புத்தியுள்ளவனால் செய்யப்பட்ட துதிகளை ஏற்று மகிழ்வீராக என்பதாகும். இவர் பல நூல்களை எழுதியுள்ளார். கீர்த்தனைகள் பாடியுள்ளார். அத்வைத ரசமஞ்சரி, யோக சுகதாரம், ஆத்ம வித்யா விலாசம், சித்தாந்த கல்பவல்லி ஆகியவை இவரது நூல்கள். 


#இப்படி பல அதிசயங்கள்

செய்த அவர் கரூரிலிருந்து 11 கி.மீ. தூரத்தில் வாங்கல் செல்லும் வழியில் உள்ள நெரூரில் சமாதியானதாக தகவல் உண்டு. புதுக்கோட்டை மற்றும் மானாமதுரையில் இவரது அதிஷ்டானம் இருப்பதாகவும் கூறுகிறார்கள். சித்தர்களைப் பொறுத்தவரை, உடல்

அவர்களின் ஆன்மாவுக்கான உறை. அவ்வளவுதான். அந்த உறையை அவர்கள் உதறிவிட்டாலும்கூட ஆன்ம ரூபமாக அவர்கள் என்றும் வாழ்வார்கள். வேண்டும்போது அவ்விதமான உடல் என்னும் உறையை அவர்களால் உருவாக்கிக் கொண்டு அதில் புகுந்து காட்சி தரவும் இயலும். உடலுடனோ உடல் இல்லாமலோ தங்கள் அருட்சக்தியின் மூலம் தங்களின் அடியவர்கள் வேண்டும் வரங்களைத் தந்து அவர்களை ரட்சிக்கவும்

சித்தர்களால் முடியும். சதாசிவப் பிரம்மேந்திரரின் பாதம் பணிந்து குருவருளும் திருவருளும் பெறுவோம்!


🔥#ஸ்ரீ குருப்யோ நமஹ ! 🙏🏻

தேனீக்களை இந்த மாதிரி கண்டால், பயப்பட வேண்டாம்

 


தேனீக்களை இந்த மாதிரி கண்டால், பயப்பட வேண்டாம், தயவுசெய்து அவைகளைக் கொல்ல வேண்டாம்.

தேனீக்கள் அதிகதூரம் கூட்டமாக பயணம் செய்பவை, சில நேரம் உணவு கிடைக்காத களைப்பில் சோர்ந்து இம்மாதிரியான நிலையில் ஒய்வு எடுக்கும்... ஆனால் இந்த ஒய்வு 24 மணிநேரத்தை தாண்டாது... வேறு இடங்களுக்கு பறந்து சென்று விடும்... அதனால் அவைகளை தயவுசெய்து தொந்தரவு செய்யாதீர்கள்... நீங்கள் ஏதும் தொந்தரவு செய்யாமல் தேனீக்களாக உங்களை காயப்படுத்த மாட்டார்கள்.

நீங்கள் உதவ விரும்பினால், ஒரு தட்டையான தட்டில் சிறிது சர்க்கரை தண்ணீருடன் வைக்கவும்.

தேனீக்கள் சாப்பிட்டு, ஆற்றல் பெற்று பறந்துவிடும். 


புலம்பெயர்ந்த தேனீக்களை நாம் அனைவரும் பாதுகாக்க வேண்டும், அவைகள் நமது மனித உயிர்களின் காப்பீடு ஆகும். 


தேனீக்கள் இல்லாமல் போனால் இப்பூமியில் மனிதர்களும் இருக்க மாட்டார்கள்.



திருவனந்தபுரம் அரசு மருத்துவமனை



நமது  சொந்தங்களுக்கு... 

4-5 நாட்களுக்கு முன் நன்றாக இருந்த பெண் ( வயது 51) திடீர் என்று மயக்கம் போட, 


கோவையில் உள்ள பிரபல கல்லுரியின் மருத்துவமனையில் சேர்த்து இருக்கிறார்கள். 


மூளையில் ரத்தக்கசிவு,

உடனே அறுவை சிகிச்சை,

8ல் இருந்து 10 லட்சம் ஆகும் என அறிவித்தனர். 


மிரண்டு போன நண்பனின் மாமா செய்வது அறியாமல் திகைத்த நிலையில்...


அங்கேயே இருந்த ஒரு மருத்துவர் ஒரு நல்ல ஆலோசனை வழங்கினார்.


"மிகச்சிக்கலான இந்த அறுவைச் சிகிச்சை இங்கே மாதம் ஒன்றோ இரண்டோ நடக்கும் நிலையில், 


தினமும் ஐந்து -பத்து சாதாரணமாக நடக்கும் திருவனந்த புரம் அரசு மருத்துவமனைக்கு

 ( Thirvendram Medical college Hospital) உடனே எடுத்துச்செல்லுங்கள்", எனக்கூறினார். 


உடன், ஒரு கடிதமும் வாங்கிக்கொண்டு 

ஆம்புலன்ஸில் விரைந்து காலையில் அட்மிட் செய்துள்ளனர். 


உடனே, அட்மிஷன் செய்து நோயாளியின் தன்மைக்கு ஏற்ப பரிசோதனைகள் செய்து, 


அறுவைச் சிகிச்சைக்குத் தேவையான மருந்துகள் மட்டும் வாங்கித் தரச்சொல்கின்றனர்.

( ஒரு 40000 to 60000 ஆகலாம்). 


டாக்ட்டர் ஃபீஸ் இல்லை. 

சரியாகி வீடு திரும்பும்வரை அட்மிஷன் தருகின்றார்கள். 


உணவு,மருந்து மாத்திரைகள் 

நாமே வாங்கிக் கொள்ள வேண்டும்.


நண்பர்களே, 

ஏதோ நம் ஊர் அரசு மருத்துவமனையை மனதில் நினைத்துக்கொண்டு இருக்காதீர்கள். 


உலகத்தரம் வாய்ந்த, 

இராணுவக் கட்டுப்பாடுடன் கூடிய மருத்துவமனை அது. 


இதயம்,நரம்பு, மூளை போன்ற மிகச்செலவுப் பிடிக்கும் நோய்களுக்கு 


மிக மிகச் சிறப்பான , 

செலவு மிக மிகக் குறைவாக ஆகும் மருத்துவமனை. 


அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுங்கள். 


ரேஷன் அட்டை, 

ஆதார் அட்டை கொண்டு செல்லுங்கள். 


நகை நட்டை விற்று, 

வீடு தோட்டம் விற்று, 

நீண்ட நாள் சேமிப்பை இழக்காமல் 

சிறந்தச் மருத்துவம் பெறலாம். பயன்படுத்திக்கொள்ளுங்கள். 


Trivandrum Medical College Hospital

Casualty Enquiry Number

0471 - 2528300


Important Telephone Numbers...

Superintendent 2442234

RMO 2528246

Casualty 2528300

Blood Bank 2528230

Cath Lab (ICCU) 2528499

CT Scan 2528232

Nursing Superintendent 2528231

Mortuary 2528236

Security officer 2528398

Paying counter 2528461

Anasthaesiaology 2528233

Anatomy 2528371

Applied Nutririon 2528391

Biochemistry 2528399

Cardiology 2528267

Cardiothoracic surgery 2528293

Community Medicine 2528379

Dematology and Venerology 2528213

Forensic Medicine 2528373

Gasroentrology 2528241

Gastro Entrology Surgical 2528295

General Medicine 2528234

General Surgery 2528325

Infectious diseases 2528296

Micro Biology 2528372

Nephrology 2528268

Neurology 2528260

Neuro Surgery 2528224

Gynaecology 2528365

Orthopaedics 2528242

ENT 2528277

Paediatrics 2528331

Paediatric surgery 2528312

Pathology 2528376

Peed Cell 2528369

Pharmacology 2528379

Physical Medicine and Rehabilitation 2528237

Physiology 2528377

Plastic and Reconstructive surgery 2528299

Psychatry 2528222

Radio diagnosis 2528211

Radio therapy 2528232

Respiratory medicine 2448484

Urology 2528282


பிடித்திருந்தால் அதிகம் பகிருங்கள்...


#உடல்நலக்குறைவால்_அவதிப்படுவோருக்கு உதவக்கூடும்...


#Address:

Trivandrum Medical College, Medical College PO, Thiruvananthapuram,

Kerala State. India PIN -695 011


படித்துவிட்டு, இதனை பகிருங்கள், ஏதோ ஒரு உயிர் இதனால் காப்பாற்றப்படலாம்..!!

களாகாய் - தினம் ஒரு மூலிகை


*களாகாய்* முட்கள் உள்ள குறுஞ்செடி வெள்ளை நிற பூக்களும் சிவப்பு நிற காய்களும் கருப்பு நிற பழங்கள் உடையது பூவும் காயும் புளிப்பு சுவை உடையது பூ காய் பழம் வேர் மருத்துவ குணம் உடையது காய் பழம் பசி மிகுக்கும் வேர் வேர் தாதுக்களின் வெப்பு தணிக்கும் சளி அகற்றும் மாதவிலக்கை தூண்டும் காயுடன் இஞ்சி சேர்த்து ஊறுகாய் ஆக்கி உணவுடன் உட்கொள்ள பசியின்மை சுவையின்மை ரத்த பித்தம் தனியாக தாகம் பித்த குமட்டல் ஆகியவை தீரும் வேரை உலர்த்தி பொடித்து சமன் சர்க்கரை கலந்து 3 கிராம் காலை மாலை சாப்பிட்டு வர பித்தம் சுவையின்மை தாகம் அதிக வியர்வை ஆகியவை தீரும் களா பழத்தை உணவு உண்டபின் சாப்பிட விரைவில் சிரிக்கும் தூய்மையான களா பூவை நல்லெண்ணையில் இட்டு பூ மிதக்கும் வரை வெயிலில் வைத்திருந்து வடிகட்டி இரண்டு ஒரு துளிகள் நாள்தோறும் கண்களில் விட்டு வர கண்களில் உள்ள வெண்படலம் கரும்படலம் ரத்த படலம் சதை படலம் ஆகியவை தீரும் 50 கிராம் வேரை நசுக்கி அரை லிட்டர் நீரில் இட்டு 100 மில்லியாக காய்ச்சி வடிகட்டி காலை மாலை 50 மில்லி கொடுக்க மகப்பேற்றின் போது ஏற்படும் கருப்பை அழுக்குகள் வெளியேறும். 

நன்றி.

Wednesday, May 1, 2024

மே தினம் என்று சொல்லப்படும் உலகத் தொழிலாளர் நாள்

 


மே 1: மே தினம் என்று சொல்லப்படும் உலகத் தொழிலாளர் நாள் ஏன் உருவானது?* 


ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 20 மணி நேரம் உழைக்க வேண்டும், ஆனால் அதற்கு உரிய ஊதியம் கிடைக்காது, உழைப்புக்கு ஏற்ற ஊதியம் எங்களது உரிமை என்றெல்லாம் எதுவும் பேச முடியாது. இப்படி ஒரு சூழலில் நம்மால் வேலை செய்ய முடியுமா?


இப்படி ஒரு அடிமை வேலை வேண்டாம் என சொல்லிவிட்டு சென்றுவிடுவோம். இப்படிப்பட்ட உழைப்பு சுரண்டலுக்கும் கொத்தடிமை முறைக்கும் இன்று முடிவு கட்டியுள்ளோம்.

ஆனால் ஒரு காலத்தில் இது தொழிலாளர்களுக்கு விதிக்கப்பட்ட கட்டளை. தொழிலாளர்கள் முதலாளிகளால் கொத்தடிமைகளாக நடத்தப்பட்டார்கள்.


1800 ஆம் ஆண்டுக்குப் பிறகு பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி போன்ற ஐரோப்பிய நாடுகளில்  மிகப்பெரிய தொழிற்சாலைகள் நிறுவப்பட்டன. இதைத்தான் வரலாற்றில் தொழிற்புரட்சி என்று கூறுகிறோம்.  தொழிலாளர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டு ஒரு நாளைக்கு 15 முதல் 20 மணி நேரம் வரை உழைக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டனர்.


பெண்களும் உழைத்தே ஆக வேண்டும் என்ற கட்டாயம் இருந்தது. குழந்தைகளை வளர்க்கும் பெண்களும் உழைக்க வேண்டும் என்பதற்காகத்தான் குழந்தைகளுக்காக பள்ளிகள் உருவாக்கப்பட்டன. பள்ளிகள் என்றால் இப்போது உள்ள பள்ளிகள் அல்ல. குழந்தைகளை ஓரிடத்தில் அடக்கி ஒடுக்கி வைப்பதற்கு பள்ளிகள் தேவைப்பட்டன. வேலை செய்யும் வயது வரும் வரை குழந்தைகளுக்கு படிப்பையும் தொழிலையும் கற்றுக் கொடுக்க வேண்டிய தேவை இருந்தது.



இதனால் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என அனைவரும் கடும் அவதிக்கு ஆளாயினர். இந்த சூழலில் தான் காரல் மார்க்ஸும் பிரடரிக் ஏங்கல்சும் தொழிலாளர்களுக்கு உரிமையும் சுதந்திரமும் நல்ல வாழ்க்கையும் கிடைக்கச் செய்ய வேண்டும் என்பதை தங்களது வாழ்நாள் கடமையாக ஏற்றுக்கொண்டு செயல்பட்டனர். கம்யூனிசம் என்று சொல்லப்படுகின்ற தொழிலாளர் வர்க்க தத்துவத்தை உருவாக்கினர். தொழிலாளர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்தனர். 


அடிமைப்பட்டுக் கிடந்த தொழிலாளர்கள் தங்களின் விடுதலைக்காகவும் உரிமைக்காகவும் ஒன்று திரண்டனர்.  தொழிற்சங்க அமைப்புகளை உருவாக்கினர். சில இடங்களில் வேலை நிறுத்தங்களும் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்றன. 8 மணி நேரம் தான் வேலை என்ற கோரிக்கை உலகம் முழுவதும் பரவத் தொடங்கியது.


தொழிலாளர்களின் உரிமைக்காக 1886 ஆம் ஆண்டு அமெரிக்காவின் சிகாகோவில் நடைபெற்ற தொழிலாளர் போராட்டம் மிகப்பெரிய அளவில் அதிர்வை ஏற்படுத்தியது. கிட்டத்தட்ட இரண்டு லட்சம் தொழிலாளர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.


ஆனால், முதலாளிகள் தங்களுடைய காவல் படை மூலமாக  போராட்டத்தை ஒடுக்க முயற்சி எடுத்தனர். தொழிலாளர்கள் ஆயுதங்களால் தாக்கப்பட்டனர். ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ரத்தம் சிந்தினர். எண்ணற்ற தொழிலாளர்கள் இறக்க நேர்ந்தது. தொழிலாளர் வர்க்கத்தின் வீரம் செறிந்த போராட்டத்தால் 8 மணி நேர வேலை என்பது இன்று அனைத்து நாடுகளிலும் தொழிலாளர் நலச் சட்டமாக மாறி உள்ளது.

இந்தப் போராட்டத்தை நினைவு கூறவும், தொழிலாளர் உரிமைக்காகவும் குறிப்பாக 8 மணி நேர வேலை என்ற உரிமையை ஒரு போதும் கைவிட்டு விடக் கூடாது என்பதற்காகவும் ஆண்டுதோறும் மே 1 ஆம் நாள் உலகத் தொழிலாளர்  தினமாக உலகத் தொழிலாளர்கள் அனைவராலும் கொண்டாடப்படுகிறது.

நாமும் தனிச்சிறப்பு மிக்க இவ்வரலாற்று நாளை மகிழ்ச்சியோடும் போராட்ட உணர்வோடும் கொண்டாடுவோம்! உழைப்புச் சுரண்டல் இல்லாத உலகத்தையும் தொழிலாளர்கள்  உரிமைகளோடு வாழும் உலகத்தையும் உருவாக்குவோம்!

மே தினம் | வரலாறு


ஒவ்வொரு ஆண்டும் மே 1 அன்று, தொழிலாளர் தினத்தை நாம் கொண்டாடுகிறோம், இது மே தினம் அல்லது சர்வதேச தொழிலாளர் தினம் என்றும் அழைக்கப்படுகிறது. தொழிலாளர்கள் மற்றும் தொழிலாளர் இயக்கத்தின் பங்களிப்புகள் இந்த நாளில் நினைவு கூரப்படுகிறது. உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பையும் அங்கீகரிக்க இந்த நாள் ஒரு சிறந்த வாய்ப்பை ஏற்படுத்தி தருகிறது.

1880களில் உலகின் பல்வேறு நாடுகளிலும் மிகப்பெரிய தொழிற்சாலைகள் நிறுவப்பட்டன. அங்கே தொழிலாளர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டு ஒரு நாளைக்கு 15 முதல் 20 மணி நேரம் வரை உழைக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டனர்.

இதனால் தொழிலாளர்கள் கடும் அவதிக்கு ஆளாகினர். சில இடங்களில் வேலை நிறுத்தங்களும் போராட்டங்களும் அவ்வப்போது நடைபெற்றன. 8 மணி நேரம் தான் வேலை என்ற கோரிக்கை உலகம் முழுவதும் பரவத் தொடங்கியது.

19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தொழிற்சங்கங்களும், சோசலிசக் குழுக்களும் தொழிலாள வர்க்க மக்களுக்கு ஆதரவான நாளாக மே 1-ஐ அறிவித்ததை தொடர்ந்து இந்த நாள் தொழிலாளர் இயக்கத்துடன் தொடர்புடைய நாளாக மாறியது. கடந்த 1886-ஆம் ஆண்டில் மே முதல் நாள் அமெரிக்காவின் பிற நகரங்களில் நடைபெற்றது போலவே சிகாகோ நகரிலும் எட்டு மணி நேர வேலை நாள் கோரி தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் தொடங்கி நடைபெற்றது.

இதனை அடுத்து காவல்துறை போராடிய தொழிலாளர்கள் மீது அடக்குமுறையை ஏவியதை தொடர்ந்து வன்முறை வெடித்தது. சில தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். இதனைக் கண்டித்து சிகாகோவில் உள்ள ஹேமார்க்கெட் சதுக்கத்தில் அமைதி பேரணி நடைபெற்றது. இதனை கலைக்க வந்த காவல்துறை மீது குண்டு ஒன்று வீசப்பட தொழிலாளர் மீதான அடக்குமுறை தீவிரமானது. இறுதியில், வன்முறை முடிவதற்குள் 7 போலீஸ் அதிகாரிகள் கொல்லப்பட்டனர் மற்றும் 60 பேர் காயமடைந்தனர். நான்கு முதல் எட்டு பொதுமக்கள் இறந்ததாகவும், 30 முதல் 40 பேர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.


இந்த போராட்டத்தை நினைவு கூறவும், தொழிலாளர் உரிமைக்காக குறிப்பாக 8 மணி நேர வேலை என்ற உரிமையை ஒரு போதும் கைவிட்டு விட கூடாது என்பதற்காகவும் ஆண்டுதோறும் மே 1 ஆம் தேதி உழைப்பாளர் தினமாக கொண்டாடப்படுகிறது. 1889 ஆம் ஆண்டு பாரீசில் நடைபெற்ற சர்வதேச தொழிலாளர் கூட்டத்தில் 8 மணி நேர வேலைக்கான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வது என்றும், 1890 ஆம் ஆண்டு மே 1 தேதி முதல் உலகளாவிய தொழிலாளர் தினத்தை கொண்டாட வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


தொழிலாளர்களின் ஒற்றுமையைப் பறைசாற்றும் இந்த சம்பவத்தை நினைவுகூரும் வகையிலேயே ‘உழைப்பாளர் நாள்’ மே 1-ம் தேதி அனுசரிக்கப்படுகிறது.


தொழிலாளர்கள் மீதான உரிமை மீறல்கள், நீண்ட வேலை நேரம், மோசமான வேலை நிலைமைகளை அனுபவித்தவர்கள், குறைந்த ஊதியம் மற்றும் குழந்தைத் தொழிலாளர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்த பல போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை, மரண தண்டனை போன்றவற்றை அனுபவித்தனர். மேலும் காவல்துறை தாக்குதலில் உயிர்விட்டவர்கள் அனைவரும் ஹேமார்க்கெட் தியாகிகள் என போற்றப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக ஹேமார்க்கெட் விவகாரம் தொழிலாளர் இயக்கத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது மற்றும் உலகம் முழுவதும் தொழிலாளர்களுக்கு சிறந்த வேலை சூழல் ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை அழுத்தமாக முன்வைக்க உதவியது.


பலகட்ட உரிமைக்குரல்ககளை தொடர்ந்து 1894-ஆம் ஆண்டில் தொழிலாளர் தினத்தை அரசு விடுமுறையாக அமெரிக்கா முறையாக அங்கீகரித்தது. மேலும் இது ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் முதல் திங்கட்கிழமை கொண்டாடப்பட்டது. கனடாவும் இதைப் பின்பற்றியது. எனினும் நாளுக்கு 8 மணி நேரம் மட்டுமே வேலை நேரம் என்பதை அங்கீகரிக்க அமெரிக்காவிற்கு இதனை தொடர்ந்து எழுந்த எண்ணற்ற எதிர்ப்புகளுக்கு அடுத்து சுமார் 22 ஆண்டுகள் தேவைப்பட்டது.


அமெரிக்கா மற்றும் கனடா நாடுகள் செப்டம்பர் முதல் திங்கட்கிழமை தொழிலாளர் தினமாக அனுசரித்தாலும், மற்றவர்கள் அந்த நிகழ்வை வேறு தேதியில் கொண்டாட முடிவு செய்தனர். கடந்த 1889-ஆம் ஆண்டில், சோசலிஸ்ட் மற்றும் தொழிலாளர் கட்சிகளின் அமைப்பான Second International, இனி மே மாதம் முதல் நாள் சர்வதேச தொழிலாளர் தினமாக அனுசரிக்கப்படும் என்று அறிவித்தது. தொழிலாளர் தினத்தின் முதல் அதிகாரப்பூர்வ கொண்டாட்டம் ஒரு வருடம் கழித்து 1890-ல் தொடங்கியது.


தொழிலாளர் தினம் என்பது தொழிலாளர்களின் கடின உழைப்பை அங்கீகரிப்பது மட்டுமல்லாமல், அவர்களின் உரிமைகளைப் பற்றிய விழிப்புணர்வை அவர்களுக்கு கற்பிப்பதோடு, அதிகார வர்க்கத்தினரின் சுரண்டல்களில் இருந்து அவர்களைக் காப்பாற்றுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. கடந்த 1917-ல் ரஷ்யப் புரட்சிக்குப் பிறகு சோவியத் யூனியன் மற்றும் கிழக்கு பிளாக் நாடுகளால் தொழிலாளர் தின கொண்டாட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. பல நாடுகளில் மே 1 தேசிய விடுமுறையாக மாறியது. அணிவகுப்புகள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தன.


இந்தியாவை பொறுத்தவரை நாட்டிலேயே முதன்முறையாக மே தின விழாவை கொண்டாடியவர் தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் என்று அழைக்கப்படும் சிங்காரவேலனார் ஆவார்.அதுவும் தமிழகத்தில் தான் மே தினம் முதன்முதலில் கொண்டாடப்பட்டது.


இந்தியாவில் மே தினம் முதன்முதலில் சென்னை மெரினா கடற்கரையில் 1923-ம் ஆண்டு மே 1-ஆம் தேதி சிங்காரவேலனார் தலைமையில் கொண்டாடப்பட்டது.





கல்யாண முருங்கை - தினம் ஒரு மூலிகை


 *கல்யாண முருங்கை* இதில் இரண்டு வகை உள்ளன சிவப்பு பூ வெள்ளை பூ முறையே சிவப்பு கல்யாண முருங்கை வெள்ளை கல்யாண முருங்கை என அழைக்கப்படுகிறது இதில் சிவப்பு கல்யாண முருங்கையை பார்ப்போம் அகன்ற இலைகளையும் சிவப்பு நிற மலர்களையும் செந்நிற உருட்டு விதைகளையும் முட்கள் கொண்ட மென்மையான மரம் இதை முருக்க மரம் என்றும் கூறுவார்கள் இல்லை பூ பூ விதை பட்டை மருத்துவ பயன் உடையது இலை சிறுநீர் பெருக்கி மலமிளக்குதல் தாய்ப்பால் பெருக்குதல் மாதவிலக்கை தூண்டுதல் ஆகிய குணம் உடையது பூ கருப்பை குறை நீக்கியாகவும் பட்டை கோழை அகற்றி ஜுரம் நீக்கியாகவும் குடற் பூச்சி கொல்லியாகவும் செயல்படும் இலைச்சாறு 10 துளிகள் 10 துளி வெந்நீர் கலந்து குழந்தைகளுக்கு கொடுக்க வாந்தியாகி வயிற்றுப்புளிப்பு கபக்கட்டு கோழை நீக்கி பசியும் சிரிப்பு திறனும் உண்டாக்கும் குடல் பூச்சிகள் அகலும் இளைச்சாறு 30 மில்லி பத்து நாட்கள் கொடுக்க மாதவிடாய்க்கு முன் பின் காணும் வயிற்று வலி தீரும் இளைச் சாறு 30 மில்லி வெள்ளை வெங்காயச் சாறு 30 மில்லி அன்னக்கொடி நீருடன் காலை மட்டும் இளம் சூட்டில் உட்கொள்ள நாள்பட்ட இரைப்பு காசம் தீரும் புலால் புகை போகும் விளக்க வேண்டும்

அம்மன் சன்னதியில் மாவிளக்கு தீபம் ஏற்றப்படுவது ஏன்?

கடவுள் சன்னதியில் ஏற்றப்படும் தீபம்களில் மாவிளக்கு தீபம் ஒன்று. இதை பிரார்த்தனையாக செய்வது வழக்கத்தில் உள்ளது. 


அதுவும் ஆடி வெள்ளி அன்று அம்மனுக்கு மாவிளக்கு ஏற்றினால் மிகவும் நல்லது. இது பல காலமாக முன்னோர்களால் செய்யப்பட்டு வரும் ஒரு பிரார்த்தனை. 

பச்சரிசி மாவையும், வெள்ளை சர்க்கரை, ஏலக்காய் போன்ற வாசனைப் பொருட்களையும் சேர்த்து சிறிது நெய் விட்டு மாவாக பிசைந்து அதை வாழை இலையின் நடுவே விளக்கு போல் அமைத்து, அதில் நெய் அல்லது எண்ணெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்றி, தெய்வ சன்னதியில் முக்கியமாக அம்மன் சன்னதியில் வைத்து வழிபாடு செய்தல் மாவிளக்கு போடுதல் என்று கூறப்படுகிறது.

இவ்வாறு செய்யும் போது குடும்பத்தில் திருமணம், கிரகப்பிரவேசம் போன்ற மங்கள நிகழ்ச்சிகள் எந்தவித தடங்கலுமின்றி நடைபெறும் என்று நம்பப்படுகிறது.

ஒவ்வொரு குடும்பத்திலும், குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக சேர்ந்து வருடத்துக்கு ஒருமுறை குலதெய்வம் கோயிலுக்கு சென்று அங்கு உரலில் பச்சரிசி மாவு இடித்து, தீபம் ஏற்றினால் குடும்பம் மென்மேலும் செழிக்கும் என்று நம்பப்படுகிறது.

நேர்த்திக்கடனை இறைவனுக்கு நிறைவேற்றாவிட்டால் தெய்வ குற்றம்

 நேர்த்திக்கடனை இறைவனுக்கு நிறைவேற்றாவிட்டால் தெய்வ குற்றம் வருமா?... 

தெய்வத்தின் சாபத்திற்கு நம் குடும்பம் ஆளாகி விடுவோமா?...


கஷ்டம் என்று வரும்போது இறைவனை வழிபாடு செய்து, அந்த கஷ்டங்கள் தீருவதற்கு வேண்டுதல் வைப்பது! கஷ்டம் தீர்ந்தவுடன் சூழ்நிலை காரணமாக அந்த வேண்டுதலை நிறைவேற்றாமல் இருப்பது! என்ற இந்த சூழ்நிலை எல்லா மனிதர்களுக்கும் ஏதாவது ஒரு கட்டத்தில் வரும். 


இதனை நேர்த்திகடன் பாக்கி இருக்கு என்றும் சிலர் சொல்வார்கள். கடவுளுக்கு நேர்த்திக்கடன் செய்து கொண்டு, அந்த நேர்த்திக் கடனை நிறைவேற்றா விட்டால் தெய்வ குத்தம் ஆகிவிடுமா? இந்த நேர்த்திக்கடனை நிறைவேற்றாமல் இருப்பதம் மூலம் அடுத்தடுத்து நம்முடைய குடும்பத்திற்கு வரக்கூடிய பாதிப்புகளுக்கு, அந்த தெய்வத்தின் சாபமும், கோபம் தான் காரணமா?...


இந்த சந்தேகம் உங்களுடைய மனதில் இருந்தால் இதை தெளிவு படுத்துவதற்காக கொடுக்கப்பட்டுள்ள பதிவுதான் இது...


ஒரு விஷயத்தை மட்டும் நாம் நன்றாக புரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். ‘எந்த தெய்வமும், நம்மிடம் வந்து கஷ்டம் வரும்போது என்னை வழிபாடு செய்ய என்று சொல்லுவது கிடையாது. எந்த தெய்வமும், எனக்கு இதை செய்ய வேண்டும் அதை செய்ய வேண்டும் என்று கேட்பதும் கிடையாது. எந்த தெய்வமும் நம்மிடத்தில் இருந்து எதையும் எதிர் பார்ப்பதும் கிடையாது’. நம்மிடம் இருக்கும் எல்லாமும் அந்த இறைவன் உடையதுதான். அந்த இறைவன் நமக்கு கொடுத்தது தான். அப்படி இருக்கும்போது எந்த தெய்வமும் நீங்கள் செய்துகொண்ட வேண்டுதலை நிறைவேற்றாத பட்சத்தில் கோபப்படவும் போவது கிடையாது.


‘நீ எனக்கு பூஜை புனஸ்காரங்களை செய்தால் தான், பதிலுக்கு பிரதிபலனாக நான் உனக்கு வரங்களை தருவேன் என்று!’ என்றுமே கடவுளாக பட்டவன் சொல்லவில்லை. நாமே நம்முடைய மன திருப்திக்காக இறைவனுக்கு இதை செய்கின்றேன், அதை செய்கின்றேன் என்று வேண்டிக் கொள்கின்றோம் அவ்வளவுதான். வேண்டுதலை நிறைவேற்றாததன் மூலம் எந்த தெய்வமும் மனிதப் பிறவிக்கு சாதம் கொடுப்பது இல்லை. அந்த அளவிற்கு இறைவன் ஒன்றும் பழிவாங்கும் குணம் கொண்டவன் அல்ல.


ஆனால், இதற்காக நேர்த்திக்கடனை நிறைவேற்றாமல் விட்டுவிட்டால் எந்த பாதிப்பும் நமக்கு வரவே வராது என்று ஆணித்தனமாக அடித்துச் சொல்லிவிட முடியாது. 

என்னங்க? குழப்பமாக உள்ளதா?... ‘நேர்த்திக்கடனை நிறைவேற்றா விட்டால், தெய்வ குத்தம் வருமா? வராதா?’ என்ற கேள்வி உங்கள் மனதில் எழுவது நன்றாக புரிகின்றது.


நேர்த்தி கடனை நாம் இறைவனுக்கு நிறைவேற்றாவிட்டால் அந்த இறைவனின் மூலம் நமக்கு எந்த பாதிப்பும் வராது. ஆனால் மனித தர்ம சாஸ்திரத்தில் நேர்மை, நாணயம், வாக்கு தவறாமை, என்ற ஒன்றும் கட்டாயம் இருக்கின்றது. மனிதராகப் பிறந்தவர்கள் சொன்ன வாக்கில் சரியாக இருக்க வேண்டும்.


அது கடவுளுக்கு கொடுத்த வாக இருந்தாலும் சரி, மனிதர்களுக்கு கொடுத்த வாக இருந்தாலும் சரி, நாணயத்தில் நாம் தவறும் போது நமக்கான தண்டனை நிச்சயம் கிடைத்தே தீரும். ஆகவே, நம்மால் என்ன செய்ய முடியுமோ, அதை தான் நம்முடைய வாயால் சொல்ல வேண்டும். சொல்லி விட்டால் அதை செயல்படுத்தி விட வேண்டும். வாக்குத் தவறக்கூடாது. சொன்ன சொல்லை மாற்றக்கூடாது. இதுதான் நேர்மைக்கான அடையாளம். நல்ல மனிதருக்கான அடையாளம்.


ஆகவே நான் நேத்திக்கடன் செய்யாவிட்டால் இறைவன் நமக்கு தண்டனை கொடுக்கப் போவதில்லை. நாம் வாக்கு தவறியதற்கு, நாம் நேர்மை இல்லாமல் நடந்து கொள்வதற்கு, தர்ம சாஸ்திரத்தின் படி நமக்கு தண்டனை கொடுக்கப்படும். இதுதான் உண்மை. 

இதை தான் நாம் இறைவன் நம்மை தண்டித்து விட்டதாக சொல்லிக் கொண்டு இருக்கின்றோம். 


இப்போதாவது எல்லோருக்கும் புரிந்ததா? இறைவன் என்பவன் நேர்மையில், உண்மையில், நம்பிக்கையில், வாக்குத் தவறாமையில் தர்மத்தின் அடிப்படையில் தான் இந்த பூமியில் இருக்கிறார்.

குலதெய்வத்திற்கு இந்த ஒரு பூவை கொடுத்து அர்ச்சனை செய்தால்

 *...*

வறுமையில் இருக்கும் வீட்டில் கூட வருமானம் கொட்டோ கொட்டென்று கொட்ட தொடங்கும். 


நிறையபேர் வீடுகளில் நிரந்தரமாக ஒரு வருமானம் இல்லாமல் வறுமையில் கஷ்டப்பட்டு வருகிறார்கள். ஒரு வேளை சாப்பிட கூட வழி இருக்காது. வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு புதிய துணி எடுத்துக் கொடுக்க காசு இருக்காது. அவர்களை படிக்க வைப்பதற்கு சரியாக வசதி இருக்காது. வீட்டு வாடகை கொடுப்பதற்கு வழி தெரியாமல் திக்குமுக்காடி திணறி வருவார்கள். ஒரு நாளை கடத்தி செல்வதை பெரும்பாடாக இருக்கும்.

இப்படிப்பட்ட கஷ்டத்தில் இருப்பவர்கள் தொடர்ந்து இந்த பரிகாரத்தை செய்து வந்தால் அவர்களுடைய நிலை ஒரு சில நாட்களிலேயே நிச்சயமாக மாறும். 

இப்படி ரொம்பவும் பணம் காசு இல்லாமல் கஷ்டப்படுபவர்கள் ஒரு பக்கம் இருக்க, இன்னும் சில பேர் தட்டித் தடுமாறி ஓரளவிற்கு நடுத்தர வாழ்க்கையை வாழும் அளவிற்கு வசதியாக இருப்பார்கள். ஆனால் அவர்களால் வாழ்க்கையில் அடுத்த நிலைக்கு செல்ல முடியாது. அதாவது பணம் சம்பாதித்து சொத்து சுகம் சேர்ப்பது, நகைகள் வாங்குவது போன்ற விஷயங்களை செய்ய முடியாமல் தவித்து வருவார்கள். 

இப்படி நீங்கள் எந்த சூழ்நிலையில் இருந்தாலும் சரி, உங்கள் குலதெய்வக் கோவிலுக்கு இந்த பொருளை வாங்கி கொடுத்து அபிஷேகம் செய்யுங்கள். நிச்சயமாக நீங்கள் இருக்கக்கூடிய நிலையிலிருந்து அடுத்த நிலைக்கு சீக்கிரமே முன்னேறி விடுவீர்கள். 


உங்களுடைய குல தெய்வம் எந்த தெய்வமாக இருந்தாலும் அந்த தெய்வத்திற்கு வாரம் ஒரு முறை தாமரை பூவை வாங்கி கொடுத்து அர்ச்சனை செய்ய வேண்டும். ரொம்பவும் வறுமையில் இருப்பவர்கள் ஒரே 1 தாமரைப்பூவை மட்டுமாவது உங்களுடைய குல தெய்வத்திற்கு வாங்கிக் கொடுத்து அந்தத் தாமரை இதழ்களால் குல தெய்வத்திற்கு அர்ச்சனை செய்யுங்கள். 


கொஞ்சம் வசதி வாய்ப்பு உடையவர்கள், இருக்கும் நிலையில் இருந்து மேலே செல்ல வேண்டுமென்றால் 21, 51 என்ற கணக்கில் கூட குலதெய்வ கோவிலுக்கு தாமரைப் பூவை வாங்கி கொடுப்பது மிக மிக விசேஷமான பலன்களை கொடுக்கும்.

அடுத்தபடியாக சிவப்பு நிறத்தில் இருக்கக்கூடிய குங்கும அர்ச்சனை குலதெய்வத்திற்கு செய்துவர வேண்டும். 

உங்கள் குல தெய்வம் ஆண் தெய்வமாக இருந்தால் குங்குமத்தை வாங்கி கொடுத்து அதை கோவிலுக்கு வருபவர்களுக்கு பிரசாதமாக தரலாம்.  

வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்து கொண்டு மேலே சொன்ன இரண்டு விஷயங்களை பின்பற்றி வாருங்கள். வாரத்தில் ஒரு நாள் தாமரைப்பூ வாங்கிக் கொடுத்தால், அடுத்த வாரம் ஒருநாள் குங்குமம் வாங்கி கொடுக்கலாம். இப்படி மாற்றி மாற்றி இரண்டு பொருட்களையும் தொடர்ந்து குலதெய்வ கோவிலுக்கு வாங்கி கொடுக்கும் போது நம் குடும்பத்திற்கு தொடர்ந்து பல நன்மைகள் நடந்துகொண்டே இருக்கும். 


நம்பிக்கையோடு செய்து பாருங்கள். இந்த பரிகாரம் செய்வதற்கு கணக்கெல்லாம் கிடையாது. உங்களால் எத்தனை வாரங்கள் இப்படி செய்ய முடியுமோ அத்தனை வாரங்கள் செய்து வரலாம். 


எங்களுடைய குலதெய்வம் ரொம்பவும் தொலைவில் உள்ளது. வாரம் ஒருமுறை அவ்வளவு தூரம் செல்வது கடினம் என்பவர்கள் என்ன செய்வது. உங்களுடைய குலதெய்வம் பழனி முருகர் என்று வைத்துக் கொள்ளுங்கள்‌. உங்கள் வீட்டின் அருகில் ஏதாவது முருகர் கோவில் இருக்கும் அல்லவா அந்த முருகர் கோவிலுக்கு நீங்கள் சென்று அந்த பழனி முருகனை வேண்டிக் கொண்டு, இந்த பொருட்களை வாங்கிக் கொடுத்து அபிஷேகமோ அல்லது அர்ச்சனையோ செய்து கொள்ளலாம். தவறு கிடையாது. 


குலதெய்வமே தெரியாது என்பவர்கள் உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் ஏதாவது அம்மன் கோவில்களுக்கு தாமரை பூவையும் குங்குமத்தையும் வாங்கி கொடுக்கலாம் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையோடு இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள். நிச்சயமாக உங்கள் வீட்டில் இருக்கும் கஷ்டத்திற்கு கூடிய சீக்கிரம் ஒரு விடிவு காலம் பிறக்கும்.

இன்று (01.05.2024) - குரு பெயர்ச்சி

 குரு வாழ்க! குருவே துணை!


குரு பெயர்ச்சி - 2024

திருக்கணித பஞ்சாங்கப்படி நிகழும் குரோதி வருடம் சித்திரை மாதம் 18 ஆம் தேதி, 01.05.2024  புதன்கிழமை, தேய்பிறை அஷ்டமி திதி அன்று பகல் 01.00 மணிக்கு குரு பகவான் மேஷம் ராசியில் இருந்து ரிஷபம் ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்.

கோட்சார ரீதியாக குரு பகவான் ஒருவரது ஜென்ம ராசிக்கு 2, 5, 7, 9, 11 ஆம் வீட்டில் பிரவேசம் செய்யும் காலம் நன்மை தரும் என்று ஜோதிட சாஸ்திரத்தில் கூறபட்டுள்ளது.


குரு பெயர்ச்சியால் நன்மை பெறும் ராசிகள் :


மேஷம், கடகம் , கன்னி , விருச்சிகம், மகரம் 


குரு பெயர்ச்சியில் மத்திம பலன் பெறும் ராசிகள்


மீனம், சிம்மம், கும்பம் 


குரு பெயர்ச்சி முதல் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்


ரிஷபம், மிதுனம், துலாம், தனுசு


குரு பெயர்ச்சியில் எப்போதும் கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திர காரர்கள் ( லக்கினம், லக்கின அதிபதி அல்லது சந்திரன் வாங்கிய நட்சத்திரம்)


பூசம், விசாகம், சதயம் ( மரபணு ஜோதிட முறைப்படி).

கர்மவினை நீங்கி வீட்டில் வறுமை ஒழிந்து செல்வம் பெருக

*கர்மவினை நீங்கி வீட்டில் வறுமை ஒழிந்து செல்வம் பெருக உங்களுடைய நட்சத்திரத்திற்கு நீங்கள் வழிபட வேண்டிய முதல் தெய்வம் என்ன தெரியுமா?*

கிருத்திகை, உத்திரம் மற்றும் உத்திராடம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் சனிக்கிழமை தோறும் ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது மற்றும் அவருக்கு வெண்ணை சாற்றி, ஸ்ரீ ராம நாமம் ஜெபிப்பது போன்ற செயல்களை தொடர்ந்து செய்து வரும் பொழுது உங்களுடைய பாவங்கள் அனைத்தும் நீங்கி வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றல்கள் விலகி செல்வம் கொழிக்கும்.

ரோகிணி, ஹஸ்தம் மற்றும் திருவோணம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் சிவபெருமானை தொடர்ந்து வழிபட்டு வந்தால் நிச்சயம் உங்களுடைய துன்பங்கள் அனைத்தும் விலகி நிறைய நன்மைகள் உண்டாகும். திங்கட்கிழமை தோறும் விரதமிருந்து சிவ வழிபாடு செய்வது பாவங்கள் நீங்க வழிவகுக்கும்.

மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் ஆகிய மூன்று நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் ராகு கால துர்க்கை பூஜை செய்து வர அவர்களுக்கு தொட்டதெல்லாம் துலங்கும். தடைபட்ட அத்தனையும் வெற்றி அடையும். பாவங்கள் நீங்கி குடும்பத்தில் வறுமை ஒழிந்து செல்வம் மென்மேலும் பெருகும்.

திருவாதிரை, சுவாதி, சதயம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் பைரவ வழிபாடு செய்வது தன்னம்பிக்கையை அதிகரிக்கச் செய்யும். பகைவர்கள் தொல்லை ஒழியவும், பாவங்கள் நீங்களும் பைரவர் வழிபாடு தொடர்ந்து செய்து வந்து பாருங்கள் நிச்சயம் நல்ல மாற்றம் தெரியும்.

புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் ராகவேந்திரரை வழிபட்டு வாருங்கள், நிறைய நன்மைகள் உண்டாகும். மனித ரூபத்தில் வாழ்ந்து வந்த இவரை நீங்கள் தொடர்ந்து வழிபட்டு வந்தால் உங்களுடைய பாவங்கள் அனைத்தும் நீங்கி குடும்பத்தில் லக்ஷ்மி கடாட்சம் உண்டாகும்.

பூசம், அனுஷம், உத்திரட்டாதி ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் ஈசன் வழிபாடு செய்வது மிகவும் நல்லது. பிரதோஷம் ஆகிய விசேஷ தினங்களில் சிவ வழிபாடு செய்வது என்பது கூடுதல் பலன்களை கொடுக்கும். அவர்களுக்கு உரிய அபிஷேக பொருட்களை வாங்கிக் கொடுத்தால் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கி குடும்பத்தில் சுபிட்சம் நிலவும்.

ஆயில்யம், கேட்டை, ரேவதி ஆகிய நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பெருமாளை வழிபட்டு வர போராட்டமெல்லாம் தணியும். நீங்கள் எதற்காக போராடிக் கொண்டு இருக்கிறீர்களோ! அத்தனையும் நிறைவேறும், அற்புத மாற்றங்கள் நிகழும். குடும்பத்தில் வறுமை நீங்கி படிப்படியான முன்னேற்றம் கண்டு செல்வம் செழிக்க தொடர்ந்து பெருமாளை வணங்கி வருவது உத்தமம்.

நலம் தரும் நல்வாழ்வு தரும் நான்கு ராமேஸ்வரம்கள்

1) ராமேஸ்வரம்,


2) திருராமேஸ்வரம்,


3) குருவிராமேஸ்வரம்,


4) காமேஸ்வரம்,


ஆகிய நான்கும் சதுர்த்த ராமேஸ்வரம் எனப் போற்றப்படுகின்றன.

 இந்த நான்கு திருத்தலங்களிலும் மகா கணபதிக்கான `சதுராவ்ருத்தி தர்ப்பணம்' எனும் விசேஷமான பூஜையை, ஆகமப் பூர்வமாக அகத்தியரின் முன்னிலையில்,  ஸ்ரீராமபிரான் நிகழ்த்தியாக ஞானநூல்கள் சொல்கின்றன.


தொடர்ந்து நான்கு மாதங்கள்... ஒவ்வொரு மாதத்தின் அமாவாசை திதியில் ஒரு திருத்தலம் என்ற கணக்கில்,


 ராமேஸ்வரம் தொடங்கி இந்த நான்கு தலங்களுக்கும் சென்று, இறை தரிசனத்தோடு பிதுர் வழிபாடு செய்து வருவது மிகவும் விசேஷம். இதனால், நமக்கும் நம் சந்ததியினருக்கும் சகல நன்மைகளும் உண்டாகும்.


1. ராமேஸ்வரம்


தென்னாட்டு புண்ணிய க்ஷேத்திரங்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ராமேஸ்வரத்தின் மகிமைகளும் திருக்கதைகளும் நம்மில் பெரும்பாலானோர் அறிந்தவையே. ஆகவே, இத்தலம் குறித்த அபூர்வ தகவல்களைத் தெரிந்துகொள்வோம்.


ஸ்ரீராமர் - சீதாதேவி இருவரும் ராமேஸ்வரம் கடற்கரையில் சிவலிங்க பிரதிஷ்டை செய்து வழிபடுவதற்கு முன்பே, இந்தத் திருத்தலம் `அக்னித் தீர்த்த நீராடல்' தலமாக, வெவ்வேறு திருப்பெயர்களில் பிரசித்தி பெற்றிருந்ததாம். இங்கிருந்து தனுஷ்கோடிக்குச் செல்லும் பாதையில், சுமார் 4 கி.மீ தொலைவில் கோயில் கொண்டிருக்கிறாள் நம்புநாயகி அம்பிகை. நம்பு, நம்பன், நக்கன் என்றால் ஈஸ்வரனையே குறிக்கும். இந்த நம்புநாயகி அம்மன் கோயிலிலிருந்து சிறிது தூரத்தில் ஜடாயு தீர்த்தம் உள்ளது. ஸ்ரீராமர் நீராடிய ஜடாயு தீர்த்தத்தின் மகத்துவத்தை சுகபிரம் மருக்கு வியாசர் விளக்கியுள்ளார். நம்புநாயகி அருளும் பூமியும், ஜடாயு தீர்த்தமும் ராமநாத சுவாமிப் பிரதிஷ்டைக்கும் மூத்தவை.


அதேபோல், ராமேஸ்வரம் சிவாலயத்தில் சேதுமாதவ பெருமாள் சந்நிதி அருகில் புண்ணிய தானேஸ்வரர், பாபபட்சேஸ்வரர் சந்நிதிகளும் உண்டு. ராமநாத ஸ்வாமியைத் தரிசிக்கச் செல்லும் அன்பர்கள், இந்த மூர்த்திகளையும் அவசியம் தரிசித்து வாருங்கள்.


கால விரயம், பொருள் விரயம் செய்ததால் ஏற் படும் பிரச்னைகளும், அறியாத வகையில் தவறான வழிகளில் பொருளீட்டியதால் ஏற்பட்ட பாவங்களும், பித்ரு தோஷங்களும் நீங்கிட ராமேஸ்வரம் சென்று வழிபடவேண்டும். இங்கு ஒரே நாளில் 32 தீர்த்தங்களில் நீராடுவது விசேஷம்.


2. திருராமேஸ்வரம்


மன்னார்குடி - திருத்துறைப்பூண்டி மார்க்கத் தில், சுமார் 22 கி.மீ தொலைவில் உள்ள திருத்தலம் திருராமேஸ்வரம். சீதாதேவிக்கு, அவள் மகா லட்சுமியின் அவதாரம் என்று ராமபிரான் உணர்த்திய திருத்தலம் என்பார்கள்.


திருமகள், சீதாலட்சுமியாக சிவலிங்க மூர்த்தத் துக்கு பூஜை செய்யும் அபூர்வ திருக்கோலத்தை இங்கே தரிசிக்கலாம்.  வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளிலும், துவாதசி மற்றும் பஞ்சமி திதி நாள்களிலும், அனுஷ நட்சத்திர நாளன்றும், இங்கு உரலில் மஞ்சள் இடித்து மங்களாம்பிகைக்குச் சாற்றி வழிபடுவார்கள். இதனால் மங்கலகரமான வாழ்வு ஸித்திக்கும் என்பது நம்பிக்கை. சுவாமியின் திருப்பெயர் ஸ்ரீராமநாதஸ்வாமி. ஏமாந்து இழந்த பொருள் மற்றும் சொத்துகளை மீட்டெடுக்க அருள் வழங்கும் தலம் என்பார்கள் பெரியோர்கள். இங்கு, தீர்த்த நீராடல் விசேஷமானது.


3. குருவி ராமேஸ்வரம்


திருவாரூாிலிருந்து கிழக்கே சுமார் 4 கி.மீ தொலைவில் உள்ளது குருவி ராமேஸ்வரம்; கேக்கரை எனும் ஊர் வழியாகச் செல்லலாம். ஸ்ரீராமர், குருவிக்கு முக்தி தந்தத் தலம்.  இத்தலத்துக்கு திருப்பள்ளிமுக்கூடல் என்றும் திருப்பெயர் உண்டு. இங்கே அருள்பாலிக்கும் இறைவன் ஸ்ரீமுக்கோணநாதேஸ்வரர்; அம்பாளின் திருநாமம் ஸ்ரீஅஞ்சனாட்சி.


ஜடாயுவுக்கு அவரது முக்தியைக் குறித்து ஈஸ்வரன் எடுத்துரைத்த தலம் இது. அப்போது, ராவணனால் நான் மடிந்தால், புண்ணிய தீர்த்தங் களில் நீராடிய பலன் கிடைக்காமல் போகுமே' என்று வருந்தினாராம் ஜடாயு. அவருக்காக இங்கே இறைவன் உருவாக்கிய தீர்த்தமே திருமுக் கூடல் தீர்த்தம் என்கின்றன ஞானநூல்கள்.


ராமாவதாரத்துக்கு முன்பே ராம நாமத்தை ஜபித்து வாழ்ந்தவர்கள் `ராமகே(தி)'. இவர்கள் திரேதா யுகத்தில் பல்லாயிரக்கணக்கில் வசித்த `ராமகே' எனும் இடமும் கயாவுக்குச் சமமாகப் போற்றப்படும் கேக்கரையும் குருவி ராமேஸ்வரத் தின் அருகிலிருப்பது விசேஷம்.


4. காமேஸ்வரம்


நாகப்பட்டினம் - வேதாரண்யம் இடையே அமைந்திருக்கிறது, காமேஸ்வரம். புனிதமான அரிச்சந்திரா நதி, கடலில் கலக்கும் பிதுர்முக்தி பூமி காமேஸ்வரம். சிவாலயம், விஷ்ணு ஆலயம் இரண்டும் அமைந்த க்ஷேத்திரம்.


இதன் தொன்மைப் பெயர் `ராமேஸ்வர ராமேஸ்வரம்'. பின்னர் காமேஸ்வரம் என்றாயிற்று. நல்லவிதமான விருப்பங்களுக்கு ‘காமம்’ என்று பொதுப்பெயர் உண்டு. அப்படியான நம்முடைய நல்ல விருப்பங்களை நிறைவேற்றும் திருத்தலம் இது என்றும் சொல்லலாம். அருள்மிகு காமேஸ் வரரும், காமாக்ஷி அம்பிகையும் அருளும் இந்தத் தலத்தில், திரேதா யுகத்தில் ராமனும், துவாபர யுகத்தில் கிருஷ்ணனும் வழிபட்டுள்ள


ார்கள். வாழ்வில் அறிந்தோ அறியாமலோ நாம் சொன்ன பொய்யுரைகளால் ஏற்பட்ட பாவங்கள், நமது வாக்கால் ஏற்பட்ட தோஷங்கள் நீங்குவதற்கு  வழிபட வேண்டிய திருத்தலம் இது. இந்தக் காமேஸ்வரம் திருத்தலத்துக்குச் சென்று, அரிச்சந்திரா நதி கடலில் சங்கமமாகும் பகுதி யிலோ, காமேஸ்வரம் கடற்கரையிலோ நீராடுவ தால் சகல பாவங்களும் நீங்கும்; வாழ்க்கைச் செழிக்கும்.

மூச்சும் காற்றும் மனிதனை இயக்கும் ரகசியம்

** : 

**********************************

*கோரக்கர் சந்திரரேகை* என்ற நூலில் கோரக்கர் சித்தர் ,  மூச்சுப் பயிற்சி செய்யும் பொழுது வடக்குப் பக்கம் பார்த்தவாறு கைகால்களை ஆட்டாமல் அசைக்காமல் நிமிர்ந்த வாக்கில் அமர்ந்து கொண்டு மூச்சை சூரிய கலையிலும், சந்திர கலையிலும் மாற்றி மாற்றி இழுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். ஆனால் கைகால்களை ஆட்டாமல் கை வைக்காமல் மூச்சுப் பயிற்சி எப்படி செய்வது , அவ்வாறு செய்யும் முறை உண்டா?


*" காற்றே கடவுள் "*

**********************


அனைவரும் மறைத்து வைத்த சூட்சுமத்தை திறக்கின்றோம். இந்த சரீரத்துள்ளே எண்ணற்ற ரகசியங்களை இறைவன் புதைத்து வைத்துள்ளான். அது எவ்வாறு என்று வெளிப்படையாக கூறுகின்றோம்.


ஒரு நாழிகைக்கு *360* சுவாசம் , ஒரு நாளைக்கு *21,600* சுவாசம். மூச்சுப் பயிற்சியில் *" பூரகம் "* என்பது மூச்சை உள்ளே இழுப்பது, *" கும்பகம் "* என்பது உள்வாங்கிய மூச்சை (காற்று) உள்ளே நிறுத்துவது, *" ரேசகம்* " என்பது மூச்சை வெளியிடுவது. நமக்கு எந்த நாசியில் சுவாசம் ஒடுகின்றதோ அதற்கு *"பூரணம் "*என்று பெயர்.


*" சீதாக்காயம் "*என்று கோரக்கர்  சித்தர் கூறியிருக்கிறார். சீதாக்காயம் என்பது நமது நாசி (மூக்கு ) தான். நாசிக்குமேல் காசி என்று கூறுவார்கள். அது என்னவென்றால் " சுழிமுனை" என்து ஆகும்.


              நமக்கு இடது நாசி சந்திரகலை. அதில் வரும் காற்று குளிர்ச்சியாக இருக்கும். வலது நாசியில் சூரியகலை. அதில் வரும் காற்று உஷ்ணமாக இருக்கும்.


 இரண்டு நாசிகளிலும், *மூச்சுக் காற்று வந்தால் அதற்கு " சுழிமுனை "* என்று பெயர். பொதுவாக மழைக் காலங்களில் இயற்கையாகவே சூரிய கலையில் ஓடும். அதிக வெயில் அடிக்கும் பொழுது சந்திர கலையில் சுவாசம் ஓடும். இது இயற்கையாகவே அமைந்துள்ள அற்புதம் ஆகும். ஏனெனில் உடலில் சூடும், குளிர்ச்சியும், சமநிலையில் இருக்க வேண்டும். இதில் எந்த ஒரு குறைபாடு இந்தாலும் நமது உடலல் பல உபாதைகள் ஏற்படும். நம் மூச்சுக் காற்றிலே இறைவன் எவ்வளவு சூட்சுமத்தை வைத்துள்ளான் பார்த்தீர்களா?


*உடலைச் கீங்காரித்தாய் !*

*உயிர்க்கு என்ன செய்தாய் ?*


மேலும் ஒருவருக்கு சூரியகலையில் சுவாசம் மூன்று நாட்கள் ஓடினால் அவருக்கு ஒரு வருடத்தில் மரணம் சம்பவிக்கும். ஒரே நாசியில் பத்து நாட்கள் தொடர்ந்து ஒடினால் மூன்று மாதத்தில் மரணம் ஏற்படும். சூரிய கலையில் ஓடக்கூடிய காற்று 8 அங்குலம் . சந்திர கலையில் ஓடும்

காற்று 16 அங்குலம்.


 மூச்சுப் பயிற்சி செய்யும் பொழுது 12 அங்குலம் காற்றை உள்ளிழுத்து 8 அங்குலம் நிறுத்தி 4 அங்குலம் வெளிவிட வேண்டும். இதே முறையில் ஒரு வனுக்கு சுவாசம் தொடர்ந்து ஓடினால் அவன் 120 வருடங்கள் வாழ்வான். இவ்வாறு சுவாசம் குறைய ஆயுளும் கூடும். சுவாசம் அதிகரிக்க அதிகரிக்க ஆயுள் குறையும்.


               அதனால்தான், சுவாசத்தை அடக்குவதால் ஆமைகள் 300 வருடங்கள், 400 வருடங்கள் வாழ்கின்றன. அதேபோல்தான் பாம்பு 800 வருடம், 1000 வருடம் வாழ்கின்றன.


 இதைப் பற்றி உணர்ந்த நாம் பின்பற்றுவதில்லை.


நம்முள் சுவாசம் நடக்கும் அளவு


அமர்ந்திக்கும் போது - 12 அங்குலம்


நடக்கும் போது             - 16 அங்குலம்


ஓடும் போது                  - 25 அங்குலம்


உறங்கும் போது          - 36 அங்குலம்


உடலுறவு கொள்ளும் - 64 அங்குலம் போது


*சுவாசம் குறைத்தால் ஏற்படும் நன்மைகள்*


*11 அங்குலமாக குறைந்தால் உலக இச்சை நீங்கும்*


*10 அங்குலமாக குறைந்தால் ஞானம் உண்டாகும்*


*9 அங்குலமாக குறைந்தால்  விவேகி ஆவான்*


*8 அங்குலமாக குறைந்தால்  தூர திருஷ்டி காண்பான்*


*7,அங்குலமாக குறைந்தால் ஆறு சாஸ்திரங்கள் அறிவான்*


*6,அங்குலமாக குறைந்தால் ஆகாய நிலை அறிவான்*


*5, அங்குலமாக குறைந்தால் காயசித்து உண்டாகும்*


*4,அங்குலமாக குறைந்தால் அட்டமாசித்து உண்டாகும்*


*3,அங்குலமாக குறைந்தால் நவகண்ட சங்சாரம் உண்டாகும்.*


*2, அங்குலமாக குறைந்தால் கூடுவிட்டு கூடுபாய்தல்*


*1, அங்குலமாக குறைந்தால் ஆன்ம தரிசனம்*


உதித்த இடத்திலேயே நிலைத்தால் சமாதி நிலை அன்ன பாணம் நீங்கும்


எந்தெந்த நாட்கள் எந்த சுவாசம் ஓட வேண்டும்  என்பதைப் பற்றி காண்போம்


ஞாயிறு, செவ்வாய் , சனி – இம் மூன்று நாட்களிலும் சூரியகலை ஓட வேண்டும்.


வெள்ளி, திங்கள் , புதன் – இம் மூன்று நாட்களிலும் சந்திரகலை ஓட வேண்டும்.


வியாழக்கிழமை -பூர்வபட்சம் (வளர்பிறை) –சந்திர கலை ஓட வேண்டும்.


அமரபட்சம் (தேய்பிறை ) – சூரிய கலை ஓட வேண்டும்.


இம் முறையில், அதிகாலை 4 மணிக்கு சுவாசம் நடக்கு வேண்டும். இவ்வாறு தொடர்ந்து நடந்தால் காரியங்கள் அனைத்தும் சித்தியாகும்.

 சனிக்கிழமை மட்டும் அதிகாலை 4 மணி முதல் இரவு 12 மணி வரை சூரிய கலையில் சுவாசம் ஓட வேண்டும்.


 - *சித்தர்களின் சுவடி  பொக்கிஷங்களிருந்து    சேகரிக்கப்பட்டவை.*

கோவில் சுவர்களில் "சிகப்பு வெள்ளை" வர்ணம் பூசுவது ஏன்?

எத்தனை முறை கோவிலுக்கு போயிருப்போம், ஒருமுறையாவது கோவில் சுவர்களில் "சிகப்பு வெள்ளை" வர்ணம் பூசுவது ஏன்? என்று யோசித்து பார்த்திருக்கிறோமா?...


இதற்கு பின்னால் உள்ள அறிவியல் காரணத்தை தெரிந்து கொள்வோம்...

கோயில் இல்லாத ஊரில் குடியிருக்காதே என்பது நம் முன்னோர் வாக்கு.! ஆலயம் செல்வதன் மூலம் தனிமனித ஒழுக்கமும் பேணப்படும் என்பதால் அடிக்கடி கோயிலுக்குச் செல்லும் ஆன்மீகப் பழக்கம் மிக முக்கிய பண்பாகக் கருதப்படுகிறது....


○ வாருங்கள் கோவிலைப் பற்றி பல தகவல்களை தெரிந்துகொள்வோம்...!!!


○கொடிமரம் என்பது இறைவனை குறிக்கும்.


○கொடிக்கயிறு சக்தியைக் குறிக்கும்.


○உயரே செல்லும் கொடிச்சீலை உயிர்களைக் (மனிதர்கள் உள்ளிட்ட உயிரினங்கள்) குறிக்கும். 

நந்தி தர்மத்தை குறிக்கும்.


○கர்பகிரகத்தில் இருக்கும் *இறைவன்* எப்போதும் *தர்மத்தையே* பாக்கிறான் என்பதே அர்த்தம்.


○பெரிய நான்கு கோபுரவாசல் ஆலயங்கள் நான்கு வழிகளை காட்டுகின்றன. 

அவை.....


*பக்திவழி,*

*ஞானவழி,*

*ராஜவழி,*

*கர்மவழிகளை* குறிக்கும்.


எந்த வழிகளாலும் *நீ இறைவனை காணலாம்* என்பதே அதன் அர்த்தம்.


இங்கே நான்கு வாசல் வைக்கப்பட்ட ஆலயமானாலும் கர்பகிரத்துக்கு ஒருவாசல் தான் வைத்தார்கள் ஏன் என்றால் *தாயின் கருவறையும் ஆலய கர்பகிரகமும்* ஒன்றுதான்.


அதனாலேயே *கர்பகிரகத்தை இருளாகவும்* அதன் விதானத்தையும் அரைகோளவடிவமாக வைத்தார்கள். 


வெளியில் உள்ள ஒளிகதிர்களை கோபுரம் வாங்கி கர்பகிரத்து அனுப்புகிறது.


கர்பகிரகம் இருளாக இருப்பதால் அந்த ஒளிக்கதிர்கள் தங்கமுடியாமல் வெளியேறிகொண்டு இருக்கும். 


*கருவறையில் ஒளிக்கும்...*

வேத மங்கள மந்திர அலைகள் இதனாலே வெளியே பரவுவதால் அவை உடலில் படவேணும் என்பதற்காகவே திருக்கோவில் ஆண்கள் சட்டை அணிவது இல்லை...


கர்பகிரகத்துள் இறைவன் ஏன் வந்தான் என பார்போம்....

*ஆண் பெண் கலவையிலேயே கர்பம் தரிக்க முடியும்.*


அந்த கலவையின் நிறமாகதான் 

*ஆணின் வெள்ளையணுவை* (வெள்ளை) நிறமாகவும் 

*பெண்ணின் கருப்பை நிறத்தை காவி* (சிவப்பு) நிறமாகவும் 

*ஆலய வெளிச்சுவரில் வெள்ளையும் காவியுமாக வர்ணம் தீட்டிணார்கள்...*


இந்த *கலவையில்தான் இறைவனின் ஆன்மா* தாயின் கர்பகிரகத்துள் பிண்டவடிவில் தோண்றுகிறான். 

இந்த பிண்ட வடிவம்தான் லிங்கத்தின் உறுளை வடிவமாக வைத்தனர். *மிருகங்கள் கூட பிண்டவடிவிலேயே தோண்றுகின்றன.*


அதனால் இவை எல்லா உயிகளின் தோற்றம் இறைவன் இயக்கம் என்பதை உணர்த்துவதே.இறைவனை வேதமந்திர மூலமாக.. 


ஆகாயத்தில் இருந்து காற்றுக்கு அணுப்பி காற்றில் மூலமாக யாகத்துக்குள் அணுப்பி வைத்து யாக அக்னியில் இருந்து நிறைகும்பத்துக்கு மாற்றி அந்த நீரை விக்ரகத்துள் அனுப்பி பஞ்சபூதத்தை அந்த *விக்ரகத்துள் அடக்கியே நாம் இறைவனை வழிபடுகிறோம்.* அதனாலேயே *பிராணபிதிஷ்டை என அழைக்கிறோம்...!!!*


என்ன ஒரு தெய்வீக அறிவியல் கலந்த ஆன்மிக தகவல் வியப்பூட்டுகிறது அல்லவா...

*இந்து தர்மத்தை நினைத்து நாம் அனைவரும் பெருமை கொள்ள வேண்டும்...!!!*


இனி கோயில்களில் சுவர்களில்❗❕ *சிவப்பு வெள்ளை நிறங்களை பற்றி நாமே இனி தெரிந்து கொள்வோம்....*


○கோவிலில் வாயில் படியை ஏன் தொட்டுக் கும்பிட வேண்டும் தெரியுமா?*

அறிவியல் பூர்வமான விளக்கம்...


கோவிலில் வாயில்படி இருந்தால், அதை பெரும்பாலான பக்தர்கள் தொட்டு கும்பிடுவதை பார்த்து இருப்பீர்கள். வாயில் படியை ஏன் தொட்டுக் கும்பிட வேண்டும். இதில் அறிவியல் பூர்வமான ஒரு செயலை நம் முன்னோர்கள் வைத்து இருக்கிறார்கள்.


ஒரு பக்தன், *கோவில் வாசல்படியை தொட குனியும் போது அது முதலில் அவனிடம் பணிவை ஏற்படுத்துகிறது.* அடுத்து அது அவன் உடம்பில் உள்ள சூரிய நாடியை இயக்குகிறது. படிக்கட்டை தொட்ட பிறகு வலது கை விரல்களை நம் நெற்றியில் புருவ மத்தியில் உள்ள *ஆக்ஞா சக்கரம் மீது வைத்து அழுத்த வேண்டும்.*


இது *நம்மிடம் உள்ள தீய சக்திகளை விரட்டும்.* அதோடு தெய்வ சன்னதிகளில் இருந்து வரும் அருள் அதிர்வலைகளை மிக எளிதாக நமக்குள் கிரஹிக்க செய்யும். 


எனவே அடுத்த தடவை கோவிலுக்கு செல்லும் போது படிகளை வலது கையால் தொட்டு, உங்கள் புருவ மத்தியில் சற்று அழுத்தம் கொடுத்துப் பாருங்கள்....


அது *உங்களை புது மனிதனாக்கி, புத்துணர்ச்சியுடன் கோவிலுக்குள் செல்ல வைக்கும்...!!!*


*நமது முன்னோர்கள் இந்து தர்மத்தையும், அதன் கலாச்சாரத்தையும், மிகவும் சிறப்பாக வழிநடத்தி உள்ளார்கள்...*