Thursday, November 30, 2023

கொடுக்காய் புளி-தினம் ஒரு மூலிகை



கொடிக்காய் என கூறினால் பலருக்கு தெரியாமலே இருக்கலாம். கொடுக்காபுளி  என சொன்னதும் எல்லாருக்கும்  உடனே ஞாபகம் வரும்.

இது ஒரு மரமாக இருந்தாலும்,இதன் காய்கள் கொடிபோன்று தொங்கும் கிளைகளில் காய்த்து தொங்குவதால் இதனை கொடிக்காய் என்கின்றனர்.

கொடி போல நீண்டு சுருண்டு நடுவில் கொட்டையும் புறத்தில் மெலிதான சதைப்பற்றும் மேலே பாதுகாப்புக் கவசமாகத் தோல் பகுதியையும் கொண்டுள்ள இப்பழம் கிட்டத்தட்டப் புளியம் பழத்தை ஒத்திருப்பதால் கொடுக்காப் புளி பழம் என்றும் பரவலாக அறியப்படுகிறது.


தமிழகத்தின் ஒவ்வொரு பகுதிகளிலும் கூளம் பழம், சீனிப் புளியம்பழம், கொறுக்காப் பழம், கோணபுளியம்பழம் எனப் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது.

கொடுக்காப்புளி பழமானது நமது வழக்கமான பழங்களைப் போலத் தீஞ்சுவை உடையது அல்ல. இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு ஆகிய முதன்மைச் சுவைகளோடு மற்ற சுவைகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது.

உண்ணும் பொருள் எதில் பல்வேறு சுவைகளும் ஆதிக்கமின்றி கலந்த நிலையில் சேர்ந்துள்ளனவோ அதில் சத்துக்கள் பலவும் கூட்டணி அமைத்துள்ளன என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்

சிறு வயதில் பள்ளி ரோட்டில் ஒரு சிறிய கடை வைத்து இந்த கொடுக்காபுளியை விற்றிருப்பார்கள்.

அதற்கு பின்னால் வெறும் வியாபாரம் மட்டும் இல்லை. மருத்துவமும் இருக்கின்றது. 

சிறு குழந்தைகள் இதை சாப்பிடுவது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நீர்கடுப்பு, ஆஸ்துமா போன்ற பிரச்சனைகள் வராமலும் அதை குணப்படுத்தவும் செய்கிறது இந்த கொடிக்காய். 

கொடுக்காய் புளி கல்லீரலில் உள்ள அனைத்து நச்சுப்பொருட்களையும் நமது உடலில் இருந்து வெளியேற்ற உதவுகிறது.

குடல் புண்ணை ஆற்றுவதில் வேறெந்த பழங்களையும் விட, வேறெந்த மருந்தையும் விட அளப்பரிய துணை செய்கிறது கொடுக்காப்புளி. கொடுக்காப்புளியில் உள்ள துவர்ப்புச் சுவை தளர்ந்த குடலை இறுகச் செய்வதன் மூலம் பெருங்குடலை நிரந்தரமாக குணப்படுத்தி விடுகிறது. 

இதில் உள்ள பைட்டோ கெமிக்கல்கள் நமது உடலில் உள்ள கொழுப்பைக் குறைத்து குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

இதிலுள்ள ஆக்ஸிஜனேற்ற பண்புகள் இதயத்தை ஆக்ஸிஜனேற்ற அழுத்த பிரச்சனைகளிருந்து பாதுகாக்க உதவுகின்றன.

சர்க்கரை நோயாளிக்கு ஒரு முக்கிய மருந்துபொருள் இந்த கொடுக்காய்புளி. சர்க்கரை நோயாளிகள் எடுத்துக்கக்கூடிய 30% மருந்தின் பயன் இந்த கொடிக்காயில் அடங்கியிருக்கிறது.

இதன் இலையிலும் இன்சுலினுக்கு நிகரான சத்து அடங்கியிருக்கிறது.

குறிப்பாக இதன் இலையை வைத்து தயாரிக்க கூடிய கசாயம், ஆண், பெண் மலட்டுத்

தன்மையை குணமாக்கும்.இதில் இருக்கும் விதை அல்சரை குணமாக்க பயன்படுவதாகும் என ஆய்வுகள் சொல்லுகிறது.

தினமும் மூன்று கொடிக்காயை சாப்பிட்டால் எழும்பு பலவீனம், ரத்த சோகை நீங்கும்.

கொடுக்காய்ப்புளி மரம் மண்ணில் நைட்ரஜனை நிலைநிறுத்தி மண்ணினை வளப்படுத்துவதுடன் ஆண்டுக்கு 180 கிலோ பிராண

வாயுவையும் அளித்து சுற்றுச்சூழலை மேம்படுத்துகிறது.

நமது மண்ணில் இயற்கையாக வேர் விடும் எதுவும் ஒற்றைப் பலனோடு நின்று விடுபவை அல்ல. பன்முகப் பயன் தருபவை. எனவே அந்தப் பின்னணி கொண்டு அவற்றைப் பாதுகாப்பதும், பயன்படுத்துவதும் வருங்காலத் தலைமுறைக்கு நாம் விட்டுச் செல்லும் செல்வங்களாக இருக்கும்...!! 

No comments:

Post a Comment