Thursday, November 30, 2023

அருநெல்லி-தினம் ஒரு மூலிகை

 


*அருநெல்லி* தோட்டங்களில் பயிர் செய்யப்படும் சிறு மற வகை அடர்த்தியான இலைகளையும் புளிப்பு சுவை மிகுந்த உருண்டை வடிவ காய்களை உடையது இதன் இலை காய் விதை வேர் மருத்துவ பயன் உடையவை இலை வியர்வை பெருக்கியாகவும் விதை மலமிளக்கியாகவும் காய் பித்தத்தை சமன் செய்யவும் குளிர்ச்சி உண்டாக்கவும் பயன்படும் 10 கிராம் இலையை அரைத்து ஒரு குவளை மோரில் கலக்கி காலையில் மட்டும் மூன்று நாட்கள் கொடுத்து உப்பில்லா உணவு கொள்ள காமாலை தீரும் தொடர்ந்து பயன்படுத்தி வர கண் ஒளி பெறும் இலையை 10 மடங்கு நீர் சேர்த்து நாளில் ஒன்றாய் காய்ச்சி வடிகட்டிய குடிநீரை காலை மாலை உணவுக்கு முன் முப்பது மில்லி அளவு சாப்பிட்டு வர உடல் குளிர்ச்சி பெறும் வெள்ளை வெட்டை குணமாகும் விதை நீக்கிய காய்களை துவையலாய் அரைத்து சோற்றில் கலந்து சாப்பிட்டு வர வுட் சூடு மிகு பித்தம் மிகு தாகம் ஆகியவை தீரும் நெல்லிக்காய் சாறுடன் இரண்டு மடங்கு சர்க்கரை சேர்த்து மனப்பாகாக்கி 15 இல் இருந்து 30 மில்லி அளவாக தண்ணீரில் கலந்து காலை மாலை சாப்பிட்டு வர உச்சூடு மிகு பித்தம் மிகு தாகம் ஆகியவை தீரும் நன்றி.

No comments:

Post a Comment