Sunday, November 26, 2023

வெறும் காலில் நடப்பது நல்லதா.?

கரடுமுரடான தரையில் நடக்கும் போது பாதத்தின் கீழ் பாகம் நேரடியாக அழுத்தம் ஏற்படுகிறது. இது உடற்செயல்பாட்டை ஊக்குவிக்கும்.


பாதத்தின் அடியில் விரல்கள் முதல் குதிகால் வரை அமைந்திருக்கும் ஒவ்வொரு பாகங்களும் நரம்புகள், மூளை, இருதயம், சிறுநீரகம் முதலிய எல்லா உறுப்புகளுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டுள்ளன.

இதனால் ஒவ்வொரு பாகத்திலும் ஏற்படும் அழுத்தம், அதனுடன் தொடர்பு கொண்டுள்ள உறுப்பின் செயலாற்றலை துரிதப்படுத்தும். பாதத்துக்கடியில் ஊசிகள் குத்திச் செய்யும் அக்குப்பஞ்சர் என்னும் சிகிச்சையின் மறு உருவமே செருப்பில்லாமல் வெறும் காலில் நடப்பதில் இயற்கை நமக்களிக்கின்றது.
Source : ஓலைச்சுவடி, வெங்கானூர் பாலகிருஷ்ணன்

No comments:

Post a Comment