Tuesday, November 14, 2023

உங்களுக்கு ஒன்பதாம் நம்பர் பெட் காலியாக உள்ளது


ஒருவர் பைத்தியக்கார ஆஸ்பத்திரியின் வாசல் நின்று போர்டை முறைத்து பார்த்துக் கொண்டு இருந்தார். பிறகு வேகமாக உள்ளே சென்று தலைமை டாக்டர் முன்னே அமர்ந்து அவரிடம் :

டாக்டர் ! இங்கே வருபவர்கள் மனநிலை பாதிக்கப்பட்டவர்களா என்று எப்படி முடிவு செய்து அட்மிட் செய்வீர்கள்?

அவர்களின் மனநிலையை சோதனை செய்து பார்த்த பின்பு அட்மிட் செய்து சிகிச்சை கொடுப்போம்.

என்ன சோதனை ?

டாக்டர் அவரை தோட்டத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கே ஒரு மிகப்பெரிய தொட்டியில் நீர் நிரம்பி இருந்தது. அருகில் ஒரு ஸ்பூன், ஒரு டம்ளர், ஒரு சிறிய பக்கெட் இருந்தது.

டாக்டர் அவரிடம் கேட்டார்:

தொட்டியை உடனே காலி செய்ய வேண்டும். தண்ணீரை சீக்கிரம் வெளியேற்ற என்ன செய்வீர்கள்?

இதோ இந்த பக்கெட் கொண்டு தண்ணீரை கீழே ஊற்றி தொட்டியை காலி செய்வேன்.

டாக்டர் தன் உதவியாளரை அழைத்து இவரை ரூம் நம்பர் எட்டில் அட்மிட் செய்து விடு. நாளை முதல் சிகிச்சை ஆரம்பம் என்றார்.

டாக்டர் நான் பைத்தியமில்லை.

டாக்டர் பதில் சொன்னார் : இவ்வளவு பெரிய தொட்டியை காலி செய்ய இந்த சின்ன பக்கெட்டை உபயோகித்தால் அரைநாள் ஆகும். கீழே உள்ள outletஐ அடைத்திருக்கும் அடைப்பை எடுத்தால் பத்து நிமிடங்களில் தொட்டி காலி ஆகிவிடும். 

சற்று மந்தமாக உள்ள உங்கள் மூளைக்கு சிகிச்சை தரவேண்டும். உள்ளே போங்கள்.


நீங்களும் பக்கெட்டை உபயோகிக்கலாம் என்றுதானே நினைத்தீர்கள். உங்களுக்கு ஒன்பதாம் நம்பர் பெட் காலியாக உள்ளது

No comments:

Post a Comment