Thursday, November 30, 2023

அலிசிவிதை-தினம் ஒரு மூலிகை

 *

* *அளிவிதை* (அ)அலிசிவிதை சிறு செடியினம் சிறிய நீண்ட இலைகளையும் வெள்ளை நீளம் முதலிய நிறங்களில் பூவும் உருண்டையான காய்களையும் பளபளப்பான கடின ஓடுடைய சிறு விதைகளை உடையது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் விதையிலிருந்து என்னை எடுக்கப்படுகிறது மலர் விதை எண்ணை ஆகியவை மருத்துவ குணம் உடையது.

 காமம் மிகுத்தல் சளி அகற்றுதல் சிறுநீர் பெருக்குதல் சதை நரம்புகளை சுருங்கச் செய்தல் ஆகிய மருத்துவ குணம் உடையது இதயத்தை வளமாக்கும் விதை பொடித்து நல்ல நீரில் ஊற வைத்து வடிகட்டி கண்ணில் லிட்டு வர கண் எரிச்சல் கண் சிவப்பு கண் அரிப்பு ஆகியவை தீரும் விதை பொடியை ஊற வைத்து வறுத்தெடுத்த குழம்புடன் தேன் கலந்து கொடுக்க நீர்கோவை இருமல் தீரும் ஒரு குவளை நீரில் 10 கிராம் விதையை பொடித்து ஓர் இரவு ஊற வைத்து காலையில் சிறிது எலுமிச்சம் சாறு கலந்து பருகி வர இளைப்பு அழலை வியர்வை ஆகியவை தனியும் விதையை பொடித்து களியாக்கி கிளறி கட்டிகளுக்கு வைத்து கட்டி வர விரைவில் பழுத்து உடைந்து ஆறும் வயிறு நெஞ்சு முதலிய வலிக்கும் இடங்களில் தடவி வர குணமாகும் .


நன்றி

No comments:

Post a Comment