சிலருக்கு உடம்பு முழுவதும் கொழுப்புக் கட்டிகள் இருப்பதைப் பார்த்திருப்போம். நவீன மருத்துவர்கள் வயதானால் இது கரைந்துவிடும் என பக்குவமாய் பதில் சொல்வார்கள். வேண்டுமானால் ஆப்ரேஷன் செய்து அகற்றிவிடலாம். என்பார்கள். ஒன்றா இரண்டா… உடம்பெல்லாம் கட்டிக்கு எங்கெல்லாம் ஆபரேஷம் செய்வது?
வேங்கை இலை - 100 கிராம்
வேங்கைப் பூ - 100 கிராம்
மகிழம்பூ - 100 கிராம்
ஆவாரம்பூ - 100 கிராம்
வேப்பம்பூ - 100 கிராம்
மாதுளம்பூ - 100 கிராம்
ஆகியவற்றை சேகரித்து ஒன்றாகக் கலந்து நன்கு பொடியாய் அரைத்து வைத்துக் கொள்ளவும். இதனை தினமும் தேவையான அளவு எடுத்து வெந்நீரில் கரைத்து உடம்பெல்லாம் பூசி, தொடர்ந்து குளித்துவர கொழுப்புக் கட்டிகள் கொஞ்சங் கொஞ்சமாய்க் கரைந்துவிடும்.
No comments:
Post a Comment