Monday, March 4, 2024

அருகுலா கீரை - கேன்சர் நோயையும் விரட்டும்

ஆண்களுக்கு தலையில் "வழுக்கை" விழாமல் காக்கக்கூடிய அருமருந்து அருகுலா கீரைகள் ஆகும்.. ராக்கெட் கீரை என்றும் சொல்லப்படும் இந்த அருகுலா கீரையின் நன்மைகள் என்னென்ன தெரியுமா?


கிட்டத்தட்ட குப்பை மேனி தழைகளைபோலவே, எந்த இடத்திலும், எந்த சூழ்நிலையிலும் வளரக்கூடியதுதான் அருகுலா கீரைகள்.. அதனால்தானோ என்னவோ, பெரும்பாலானோருக்கு இதன் மகத்துவம் தெரியாமலேயே போய்விட்டது.


சத்துக்கள்: விளையாட்டு வீரர்கள் உட்பட அனைத்து தரப்பினருமே சாப்பிட வேண்டிய கீரை இதுவாகும். ஆரோக்கியமான கொழுப்பு, கார்போபோஹைட்ரேட், வைட்டமின் A, K, C, M, பொட்டாசியம், கால்சியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், இரும்புச்சத்து, மாங்கனீஸ், காப்பர், செலீனியம், ஜிங்க்,நிறைந்த அருகுலா கீரைகள் இதயத்துக்கு நன்மை தரக்கூடியது.

பெண்கள் கர்ப்ப காலத்திலும்சரி, தாய்ப்பால் புகட்டும் காலத்திலும் சரி, இந்த கீரையை உணவில் எடுத்து கொள்ளும்போது பலன்கள் இரட்டிப்பாகும்.. எனவே, டாக்டர்களின் ஆலோசனையின் பேரில் கர்ப்பிணிகள் இதை சாப்பிட வேண்டும்.

அனீமியா: அனீமியா பிரச்சனை இருப்பவர்களுக்கு கை கொடுக்கக்கூடியது.. கலோரிகள் இல்லாத இந்த கீரைகளை உடல் எடை குறைக்க முயற்சிப்பவர்களும் பயன்படுத்தலாம்.. இதனால் உடலிலுள்ள கெட்ட கொழுப்புகள் கரைந்து வெளியேறிவிடும்

அருகுலா கீரையுடன் சிறிது புதினாவையும் சேர்த்து அரைத்து, முகத்தில் பூசினால், பருக்கள், சிறுசிறு கட்டிகள் மறையும்.. சருமம் பாதுகாக்கப்படும்.. அதனால்தான், அழகு சாதன பொருட்கள் தயாரிப்புகள், மூலப்பொருட்களாக ராக்கெட் இலைகள் சேர்க்கப்படுகின்றன.. ஷாம்புகளிலும், கண்டிஷனர்கள் தயாரிப்பிலும் இந்த கீரைகளை சேர்க்கிறார்கள்..

ஆண்கள்: ஆண்களுக்கு வழுக்கை விழாமல், முடி உதிர்வை தடுக்கவும் இந்த கீரைகள் உதவி செய்வதால், இந்த கீரையை சமையலில் நேரடியாகவே சமைத்து சாப்பிட்டு பலன் பெறலாம்.

வழக்கமாக கீரை சாப்பிட்டு வருபவர்களுக்கு கண்கள் தொடர்பான பிரச்சனை ஏற்படாது.. ஆனால், இந்த பீட்டா கரோட்டின், வைட்டமின் A நிறைந்துள்ள, இந்த அருகுலா கீரையை சாப்பிட்டு வந்தால், கண்புரை உருவாகாமல் தடுப்பதுடன், மற்ற பார்வை குறைபாடுகளையும் முன்கூட்டியே தடுத்து நிறுத்திவிடுமாம். ஆத்ரைட்டிஸ் பிரச்சனைகள் தீர்கின்றன..

புற்றுநோய்: கேன்சர் செல்களின் வளர்ச்சியை தடுக்கக்கூடிய சக்தி இந்த இலைகளுக்கு உள்ளது.. ரத்தக்குழாய்களில் உருவாகும் ரத்தக் கட்டிகளையும் கரைக்கக்கூடிய தன்மையும் இந்த அருகுலா இலைகளுக்கு உள்ளதாம்.. சர்க்கரை, கலோரி, கொழுப்பு, கார்போஹைட்ரேட் போன்றவை குறைந்த அளவிலேயே உள்ளதால்தான், எடையை பராமரிக்க இந்த கீரை உதவுகிறது..

வழக்கமான கீரைகளை போலவே, இந்த அருகுலா கீரையை பருப்புடன் சேர்த்து கடைந்து சாப்பிடலாம்.. மசியல் செய்யலாம்.. சாலட் செய்யலாம், சூப் போன்று செய்யலாம்.. மிளகு, பூண்டு சேர்த்து சூப் வைத்து குடிக்கும்போது, செரிமான பிரச்சனை தீரும்..

சாலட்கள்: வாய்ப்புண், வயிற்றுப்புண்கள் ஆறிவிடும்.. ஆனால், பெரும்பாலும், சாலட்களில் இந்த கீரைகள் பயன்படுத்தப்படுகின்றன. இதனால், பார்ப்பதற்கு பச்சை பசேலென்று கலர்புல் + சத்து நிறைந்த சாலட்களுக்கு கிராக்கி அதிகம்.

No comments:

Post a Comment