ஓமம் - 200 கிராம்
சீரகம் - 200 கிராம்
கெந்தி உப்பு - 100 கிராம்
மூன்றையும் அரைத்து தனித்தனியே அரைத்து சளித்து ஒன்று சேர்க்கவும். அவ்வளவு தான் மருந்து.
அளவு : திரிகடி அளவு முதல் 1 கிராம் வரை(உடல் எடை, பிரச்னையை பொருத்து அளவு மாறும்.
நாளைக்கு 2 முதல் 3 வேளை தரலாம்.
பயன்கள் : பசியை தூண்டும், செரியா கழிச்சல், வயிற்று பொருமல், வயிற்று வலி, குன்மம், வறட்டு இருமல், மேல் மூச்சுடன் கூடிய இருமல், மண்ணீரல் நோய்கள் நீங்கும், நீரை பிரிக்கும், ஈரல் நோய், காசம், வளிநோய்கள், கண்ணுக்கு குளிர்ச்சியை உண்டாக்கும், அசீரணம், நெஞ்செரிச்சல், புளித்த ஏப்பம், கண் எரிச்சல், ஆசன கடுப்பு போன்றவை தீரும்.
அனைத்தும் நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்.
நன்றி,
No comments:
Post a Comment