Wednesday, November 1, 2023

பொது அறிவுத் தகவல்கள் 2

  அமில மழை உண்டாக காரணம், காற்று மாசுபடுதலாகும்.

* தமிழிசைச் சங்க தலைவர்களில் முதன்மையானவர் - ராஜா சர் முத்தையா செட்டியார்.

* நமது அசோகச் சக்கரத்தில் 6 விலங்குகள் உள்ளன.

* தமிழகத்தில் கிடைக்கும் தாதுப்பொருள் - அலுமினியத் தாது.

* நோபல் பரிசு பெற்ற இரண்டாவது தமிழர் - சந்திரசேகர சுப்பிரமணியம்.

* இந்தியாவில் முதல் மகளிர் காவல்நிலையம் கேரளமாநிலம் கோழிக்கோடு நகரில் உருவாக்கப்பட்டது.

* டாபர்மேன், ஜெர்மன் செப்பர்டு, அல்சேசியன் என ஒரு சில நாய்களைத்தான் உங்களுக்குத் தெரிந்திருக்கும். ஆனால் உலகில் சுமார் 200 வகை நாய்கள் உள்ளன

* மங்கோலியர்கள் இந்தியாவை தெய்வத்தின் நாடு என்று அழைத்தார்கள்.

* இந்தியாவின் வரைபடத்தை வரைந்தவர் டா ஆன்வில் என்ற பிரெஞ்சுக்காரர்.

* இந்தியாவில் முதன் முதலில் துவக்கப்பட்ட மாநிலம் உத்தரபிரதேசம்.

* இந்திய மொழிகளில் முதன் முதலாக கலைக்களஞ்சியம் தமிழில் உருவாக்கப்பட்டது.

* இந்தியாவில் அதிக நாட்கள் உயிர் வாழ்பவர்கள் பஞ்சாபியர்.

* உலகின் மிகப்பெரிய தங்கச் சந்தை இந்தியாவாகும்.

* தும்பா ராக்கெட் ஏவுதளம் கேரள மாநிலத்தில் உள்ளது.

* கார்த்திகை மலர் என்று அழைக்கப்படுவது காந்தள் மலர்.

* தென்கொரிய நாட்டின் தலைநகர் சியோல்.

* பாராசூட் போன்ற பெரிய பலூன்களில் நிரப்பப்படுவது ஹீலியம் வாயு.

* கோவா மாநிலம் பானாஜியில் கடல் ஆராய்ச்சி நிறுவனம் உள்ளது.

* இந்தியாவின் முதல் ரேடியோ டெலஸ்கோப் கொடைக்கானலில் 1952-ம் ஆண்டு நிறுவப்பட்டது.

* இந்தியாவின் முதல் நினைவு நாணயம் 1964-ல் வெளியிடப்பட்டது.

* இந்தியாவின் முதல் நீர்மின்நிலையம் கர்நாடக மாநிலம் சிவசமுத்திரத்தில் 1902-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. ஆசியாவின் முதல் நீர்மின் நிலையமும் இதுவே.

* இந்தியாவில் மூன்று கடல்கள் சந்திக்கும் இடம் கன்னியாகுமரி.

* இந்தியாவின் பெரிய நதிகளில் ஒன்றான யமுனை கடலில் கலப்பது இல்லை.

* இந்தியாவின் செயற்கைத் துறைமுகம் கொச்சின்.

* இந்தியாவின் பெரிய துறைமுகம் மும்பை துறைமுகம்.

* பாலூட்டி: கன்று ஈன்று பாலூட்டுபவை பாலூட்டிகளாகும். இவை காற்றை சுவாசிப்பவை. பெரும்பாலும் நிலத்தில் வாழ்பவை: மனிதன், மிருகங்கள். சில பாலூட்டிகள் நீரிலும் வாழும். உதாரணம்: திமிங்கலம்.

* பறவைகள்: பறக்க சிறகுகள் உடையவை. இவை முட்டையிட்டு குஞ்சு பொறிக்கும். பெங்குவின் போன்ற சில பறவைகளால் பறக்க முடியாது.

* ஊர்வன: குளிர் ரத்தப் பிராணிகள். சுற்றுப்புறச் சூழ்நிலைகளுக்கு தக்கபடி அது மாறவும் கூடும். உதாரணம்: ஓணான்.

* இருவாழ்விகள்: தரையிலும், தண்ணீரிலும் வாழக் கூடிய தன்மை பெற்ற உயிரினங்கள் இருவாழ்விகளாகும். அவை குளிர் ரத்தப் பிராணிகள். உதாரணம்: தவளை.

* மீன்கள்: தண்ணீரில் வாழும் முதுகெலும்புள்ள உயிரினங்கள் இவை. கடல் நீரில் அதிக மீன் இனங்கள் வாழ்கின்றன.

ஆதாரம் : தமிழ்நாடு திறன் மேம்பாட்டு பயிற்சி மையம்

No comments:

Post a Comment