Tuesday, April 30, 2024

கர்ப்ப காலத்தில் மாதந்தோறும் வழிபட வேண்டிய தெய்வங்கள்!!

 


கர்ப்ப காலத்தில் மாதந்தோறும் வழிபட வேண்டிய தெய்வங்கள்!! 

வயிற்றில் கரு உருவானதிலிருந்து குழந்தை பிறப்பு வரையில் (10 மாதங்கள்) அதன் வளர்ச்சியில் கிரகங்கள் தங்கள் ஆதிக்கத்தை செலுத்துகின்றன. 


அதனால், கர்ப்பம் தரித்தது முதல் ஒவ்வொரு மாதமும் அந்தக் கருவை ஆளுமை செய்யும் கிரகத்துக்குரிய தெய்வத்தை வணங்குவது சிறப்பு.


1முதல் மாதம்: கரு உருவாகும். இதற்குக் காரக கிரகம் சுக்கிரன். ஸ்ரீபுவனேஸ்வரி, ஸ்ரீலட்சுமி மற்றும் இந்திராணியை வணங்கலாம்.


2-வது மாதம்: இந்த மாதம் கரு சற்று மென்மை தன்மையை அடைந்திருக்கும். செவ்வாய் அதிபதி. ஸ்ரீமுருகனையும், க்ஷேத்ர பாலகர்களையும் வணங்கவேண்டும்.


3-வது மாதம்: குழந்தையின் கை, கால்கள் உருவாகியிருக்கும்.

குரு அதிபதி. இந்திரன், பிரம்மா மற்றும் ஸ்ரீதட்சிணாமூர்த்தியை வணங்கவேண்டும்.


4-வது மாதம்: குழந்தையின் எலும்பு மற்றும் நரம்பு உருவாகும் மாதம். சூரியன் அதிபதி. சிவனாரை வணங்கினால், கரு நல்ல வளர்ச்சி பெறும்.


5-வது மாதம்: குழந்தையின் தோல் மூலம் உடலமைப்பு உருவாகிக் கொண்டிருக்கும். சந்திரன் அதிபதி. ஸ்ரீகௌரி மற்றும் ஸ்ரீதுர்கை அம்மனை வணங்கவேண்டும்.


6-வது மாதம்: குழந்தையின் அங்கம், ரோமம், நகம் உருவாகும். சனி அதிபதி. ஸ்ரீஆஞ்சநேயர், ஸ்ரீபைரவர் மற்றும் ஸ்ரீவிநாயகரை வழிபடவும்.


7-வது மாதம்: பிராணன் உருவாகும். புதன் அதிபதி. ஸ்ரீவிஷ்ணுவை வணங்கவேண்டும்.


8-வது மாதம்: கருவின் உடல் வளர்ச்சி பெருகும். ஸ்ரீவிநாயகரை வணங்கவேண்டும்.


9-வது மாதம்: கரு முழு வளர்ச்சி பெற்றிருக்கும். சந்திரனே அதிபதி. ஸ்ரீகௌரி மற்றும் துர்கையை வழிபட வேண்டும்.


10-வது மாதம்: குழந்தை பிறந்துவிடுவதால் ஆத்ம பலம் பெறும். இதற்கு ஆத்மகாரகனான சூரியன் அதிபதி. சிவனாரை வழிபட வேண்டும்.🌹

பாலுடா செய்வது எப்படி???? 👇👇👇👇


தேவையான பொருள்கள்:


வாழைப்பழம் - ஒன்று


ஆப்பிள் - ஒன்று


திராட்சைப்பழம் - ஒரு கப்


பால் - இரண்டு கப்


ஐஸ் கிரீம் - தேவையான அளவு (எந்த ப்ளேவர் ஆனாலும்)


சேமியா - அரை கப் (வேகவைத்து தனியாக வைக்கவும்)


ஜவ்வரிசி - அரை கப் (வேகவைத்து தனியாக வைக்கவும்)


பாதாம் பருப்பு - பத்து (வெந்நீரில் ஊறவைத்து பொடியாக நறுக்கி வைக்கவும்)


ரூ ஆப்ஸா (அ) ரோஸ் எசன்ஸ் - எட்டு டீஸ்பூன்


செய்முறை:


மூன்று பழங்களையும் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.


முதலில் ஒரு பெரிய ஜுஸ் டம்ளரில் வேகவைத்து வைத்திருக்கும் சேமியா ஒரு டேபிள் ஸ்பூன், பின் ஜவ்வரிசி வேகவைத்தது ஒரு டேபிள் ஸ்பூன், பிறகு கொஞ்சம் பால், அடுத்து ரூ ஆப்ஸா, அடுத்து வாழை,ஆப்பிள், கொஞ்சம் பால், பொடியாக நறுக்கிய பாதாம் பருப்பு ஆகியவற்றை போடவும்.


இதே போல் ஒன்றன் பின் ஒன்றாக போடவும்.


கடைசியில் ஒரு பெரிய கரண்டி ஐஸ் கிரீம், அதன் மேலே அலங்கரிக்க திராட்சை (அ) ஸ்ட்ராபெரி கூட போடலாம்.


சூப்பர் பாலுடா கடையில் தான் சென்று குடிக்கனுமா என்ன நாமே செய்யலாமே பழங்கள் உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப வேறு ஏதாவது சேர்ப்பதாக இருந்தால் சேர்த்து கொள்ளலாம்.

Monday, April 29, 2024

சின்ன நாட்டு வெங்காய குழம்பு

தேவையான பொருள்கள்:

சின்ன  வெங்காயம்   -  200 gram

புளி  - நெல்லிக்காய் அளவு

நல்லெண்ணெய் - 100 gram

குழம்பு மிளகாய்தூள்  - 3 ஸ்பூன்

தக்காளி  - 2

பூண்டு  - 10 பல்

கடுகு   - 1/2 ஸ்பூன்

வெந்தயம் - 1/2 ஸ்பூன்

பெருங்காயத்தூள்  - 1/2 ஸ்பூன்

மஞ்சள் தூள்  - 1/2 ஸ்பூன்

உப்பு - தேவைாயன அளவு



கடாயை அடுப்பில் வைத்து  எண்ணெய் ஊற்றி கடுகு ,வெந்தயம் போட்டு தாளித்து அதனுடன் பூண்டு ,சின்ன வெங்காயம் போட்டு நன்கு வதக்கவும்.


அதனுடன் கருவேப்பிலை போட்டு வதக்கி அதனுடன் மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், மிளகாய் தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.


மசாலா வாசனை போனவுடன் நறுக்கிய தக்காளியும் சேர்த்து நன்கு வதக்கவும்.


தக்காளி நன்கு வதங்கியவுடன் புளித்தண்ணீர் குழம்பிற்கு தேவையான தண்ணீர் ,உப்பு சேர்த்து நன்கு கொதித்து குழம்பு கெட்டியானவுடன் இறக்கினால் சூப்பரான சின்ன வெங்காய குழம்பு ரெடி.

பனைக்கு, ஏது இணை?

 🤷🏻‍♂️🤷🏻‍♂️🤷🏻‍♂️  

எவ்வளவு அட்டூழியம் அராஜகம் இருந்தாலும் வெள்ளையர்களிடம் ஒரு நேர்மை இருந்தது. ஆனால் இன்றைய நம் அரசியல்வாதிகளிடம் அந்த நேர்மை இல்லை.


வெள்ளையர்கள் ஆண்ட காலம். திருநெல்வேலிக்கு அருகே ரயில்பாதை அமைத்துக்கொண்

கிராமத்து சிக்கன் குழம்பு

தேவையான பொருட்கள்

சிக்கன் -   3/4  கிலோ

பெரிய வெங்காயம் -2

தக்காளி - 2 

தேங்காய் துருவல்-  கால் மூடி

முந்திரிப் பருப்பு - 5 

மஞ்சள் தூள் -  அரை ஸ்பூன்

நல்லெண்ணெய்  - 6  ஸ்பூன்

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2  ஸ்பூன்

உப்பு  - தேவையான அளவு


வறுத்து அரைக்க தேவையான பொருட்கள்


வரக்கொத்தமல்லி - 6  ஸ்பூன்

காய்ந்த மிளகாய்-  10

சின்ன வெங்காயம் -  15

மிளகு - 1 ஸ்பூன்

சீரகம் - 1  ஸ்பூன்

சோம்பு - 1  ஸ்பூன்

அரிசி - 1  ஸ்பூன்

பட்ட - 2  துண்டு

 கல்பாசி - 2  துண்டு

ஏலக்காய் - 2 

 கிராம்பு - 3 



பெரிய வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.


கடாய் அடுப்பில் வைத்து இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்த மிளகாய், கொத்தமல்லி போட்டு சிறிது வறுத்து விட்டு மிளகு, சோம்பு, சீரகம், பட்டை, ஏலக்காய், கல்பாசி,  கிராம்பு எல்லாம் சேர்த்து வாசனை வரும் வரை வறுத்து விட்டு அதனுடன்  அரிசி,   சின்ன வெங்காயம் இரண்டும் சேர்த்து   அடுப்பை மிதமான தீயில் வைத்து வறுக்க வேண்டும் கருகி விடக்கூடாது .


வறுத்த பொருட்களை ஆற வைத்து அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.


அதேபோல் தேங்காயும், முந்திரியையும்  தண்ணீர் சேர்த்து   அரைத்து வைத்துக் கொள்ளவும்.


கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் உற்றி சோம்பு, கருவேப்பிலை போட்டு தாளித்து நறுக்கிய வெங்காயம் போட்டு நன்கு கலர் மாறும் வரை வதக்கி விட்டு அதனுடன் இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.


அதனுடன் தக்காளியும் சேர்த்து நன்கு மசியும் வரை வதக்கவும்.


தக்காளி நன்கு வதங்கியவுடன்  கொத்தமல்லி மசாலா விழுது சேர்த்து சிறிது நேரம் வதக்கி விட்டு அதனுடன்  சிக்கன் தேவையான அளவு உப்பு சேர்த்து  2 நிமிடம் வதக்க வேண்டும்.


பின்பு அதனுடன்  4  டம்ளர் தண்ணீர் சேர்த்து கிளறி சிக்கனை வேக விட வேண்டும்.


சிக்கன் நன்கு வெந்தவுடன் அரைத்த தேங்காய் விழுது சேர்த்து நன்கு கலந்து விட்டு ஒரு கொதி கொதிக்க விட்டு கடாயை முடி அடுப்பை ஐந்து நிமிடம் சிம்மில் வைக்கவும்.


தேங்காய் பச்சை வாசனை போனவுடன் மல்லித்தழை தூவி இறக்கினால் மிகவும் சுவையான கிராமத்து ஸ்டைல் சிக்கன் குழம்பு ரெடி.

சிந்தனைத் துளிகள்


1.நாணயமாக இருப்பவனிடம் எப்போதும் குழந்தைத்தனம் காணப்படும்

2. உன் தகுதி பிறருக்குத் தெரியவேண்டுமானால் பிறர் தகுதியை நீ தெரிந்துகொள்.

3. திருட்டுப் பொருளை விலைக்கு வாங்குபவன் திருடனை விட மோசமானவன்.

4. தூக்கம் எப்போது குறைய ஆரம்பிக்கிறதோ அப்போதுதான் வாழ்க்கை ஆரம்பிக்கிறது.

5. அறிவுக்காக செய்யப்படும் முதலீடு எப்போதுமே கொழுத்த வட்டியையே தரும்.

6. நல்ல மனைவியை விட உயர்ந்த வரமும் இல்லை. கெட்ட மனைவியை விட மோசமான சாபமும் இல்லை.

7. முதலில் மனிதன் மதுவைக் குடிக்கிறான். பின்பு மது மனிதனை குடிக்கிறது.

8. ஆயிரம் பேர் சேர்ந்து ஒரு தொழிற்சாலையைக் கட்டி விடலாம். ஒரு வீட்டைக் கட்ட ஒழுக்கமான ஒரு பெண் வேண்டும்.

9. இரண்டு கால் உள்ள எல்லோரும் நடந்து விடலாம். ஆனால் இரண்டு கை உள்ள எல்லோருமே எழுதிவிட முடியாது.

10. உழைப்பு உடலை வலிமையாக்கும். துன்பங்களே மனதை வலிமையாக்கும்.

11.ஒருவன் தான் செய்த தவறை ஒத்துக்கொள்ள வெட்கப்படக் கூடாது. ஒப்புக்கொள்வதன் பொருள் என்ன? அவன் நேற்றைவிட இன்று அதிக

அறிவு பெற்று விட்டான் என்பதே.

12. வாழ்க்கை சுவையானது. உங்கள் அறியாமையினால் அதைக் கசப்பாக்கி விடாதீர்கள்.

13. பிறரைப் பாராட்டுங்கள். பாராட்டு கிடைக்கும். பிறரை மதியுங்கள். மதிப்புக் கிடைக்கும். அன்பு செலுத்துங்கள். அன்பு தேடி வரும். இவை ஒற்றைவழிப் பாதைகள் அல்ல. இரட்டை வழிப் பாதைகள். அன்பில் வணிகத்திற்கு இடமில்லை. வணிகத்தில் அன்புக்கு இடமில்லை.

14. தனக்கென வாழ்ந்தவன் தாழ்ந்தவன் ஆகிறான். பிறருக்கென வாழ்பவன் பெருவாழ்வு வாழ்கிறான். அடக்கம் அணிகலன் மட்டுமல்ல. அறத்தின் காவலன்.

15. சொற்கள் நம் சிந்தனையின் ஆடைகள். அவற்றைக் கந்தல்களாகவும், கிழிசல்களாகவும், அழுக்காகவும் உடுத்தக் கூடாது.

16. சோம்பேறிக்கு எல்லாமே கடினமாகத் தோன்றும். ஊக்கமுள்ளவனுக்கு எல்லாமே எளிதாகத் தோன்றும்.

17. எந்தவிதக் கொள்கையும், நோக்கமும் இல்லாத வாழ்க்கை திசைகாட்டும் கருவி இல்லாத கப்பல் நடுக்கடலில் நிற்பதற்கு ஒப்பாகும்.

18.எந்த மனிதன் தீவிரமாகவும், திடமாகவும், சிந்திக்கிறானோ அந்த சிந்தனைகளின் வளர்ச்சி கலையாகும். அவ்வாறு சிந்திக்கிறவனே கலைஞன் ஆவான்.

19. பல அறிஞர்களுடன் பழகினால் நீ அறிவாளி ஆவாய். ஆனால் பல பணக்காரர்களுடன் பழகினாலும் பணக்காரன் ஆக மாட்டாய்.

20. இன்பத்தின் இரகசியம் எதில் அடங்கியிருக்கிறது தெரியுமா? நீ விரும்பியதைச் செய்வதில் அல்ல. நீ செய்வதை விரும்புவதில்தான்.

கவிழ்தும்பை - தினம் ஒருமூலிகை

  


கவிழ்தும்பை.  தும்பை இலை வடிவில் சொரசொரப்பான வெளிய முழுமையான இலைகளையும் தனித்த வெளிர் நீலா(அ) வெளிர் சிவப்பு நிறம் உடைய கவிழ்ந்து தொங்கும் மலர்களை உடைய சிறு செடி செடி முழுவதும் மருத்துவ குணம் உடையது கவிழ் தும்பை இலை குருவை அரிசி சம அளவு இடித்து மாவாக்கி பனைவெல்லம் கலந்து அளவாக காலை மாலை மூன்று நாள் உட்கொள்ள பெரும்பாடு தீரும் 50 கிராம் சமூகத்தை சிதைத்து ஒரு லிட்டர் நீரில் இட்டு 250 மில்லி ஆகுமாறு காய்ச்சி வடிகட்டி காலை மாலை 125 மில்லியாக சாப்பிட்டு வர சீதபேதி மூட்டு வலி பால்வினை நோயால் ஏற்படும் கட்டிகள் ஆகியவை குணமாகும் இலையை தேன் விட்டு வதக்கி நீரில் கொதிக்க வைத்து காலை மாலை சாப்பிட்டு வர சூதக வலி தீரும் பாஷாண வகையில் உள்ள ரசத்தை கட்டுப்படுத்துவதில் மிக வல்லமை வாய்ந்தது இம்மூலிகையில் செம்பு சத்து அதிகம் உள்ளது கழுத்து தோள்பட்டை முதுகு இடுப்பு முழங்கால் கணுக்கால் பகுதிகளில் உள்ள எலும்புகளில் ஏற்படும் தேய்மானம் ஜவ்வின் பலகீனம் தசை பகுதிகளில் எலும்பு இணைப்பு பகுதிகளில் அடிபடுவதாலும் வீக்கங்களாலும் வலி ஏற்படுகிறது அந்த பலவிதமான தசை வலிகளை நீக்கி உடலை சுறுசுறுப்பாக வைக்கும்.

 நன்றி

நாகர்கோவில் ஸ்பெஷல் அவியல் ரெசிபி!!!

நாகர்கோவில் ஸ்பெஷல் அவியல் ரெசிபியை வீட்டிலேயே செய்வது எப்படி? என்பதை இங்கு பார்ப்போம்.

நாகர்கோவில் உணவுமுறையில் கடல் சார்ந்த உணவுகளுக்கு மக்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர். நாகர்கோவில் மக்கள், சாளை மீன் குழம்பு வைத்தால் தெருவே மணக்குமாம். கிழங்கும், மீனும் இவர்களின் பிரதான உணவு பட்டியலில் இருப்பதால் சுற்றுலா பயணிகளும் நாகர்கோவில் சென்றால் வித்தியாசமான கடல் உணவுகளை ருசி பார்க்கவே அதிகம் ஆர்வம் காட்டுகிறார்கள். அதே போல் குறிப்பிட்ட சில உணவுகளைத் தேங்காய் எண்ணெயில் சமைப்பதும் நாகர்கோவில் மக்களின் ஸ்பெஷல்.

அந்த பட்டியலில் முதல் இடம்பிடிப்பது நாகர்கோவில் அவியல். அவியலில் பலவகையுண்டு. தயிர் சேர்த்த அவியல், தயிர் சேர்க்காத தேங்காய் அவியல், மலபார் அவியல், திருநெல்வேலி அவியல் என ஊருக்கு ஏற்றார் போல் அவியல் செய்முறை மாறும். கேரளாவுக்கு அடுத்தப்படியாகத் தமிழகத்தின் நாகர்கோவில் அவியல் அனைவரும் விரும்பிச் சாப்பிடும் ஒன்றாக உள்ளது. வாரத்தில் ஒருமுறை நாகர்கோவில் மக்கள் அவியல் செய்வது உறுதி.

நீங்களும் அந்த அவியல் செய்முறையைத் தெரிந்து கொள்ள வேண்டுமா? செய்முறையை இங்கே பகிர்கிறோம் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்

மாங்காய் - 1

வாழைக்காய் - 1

முருங்கைக்காய் - 1

கேரட் - 1

பீன்ஸ் - 5

கத்திரிக்காய் - 2

வெள்ளரிக்காய் - 1

புடலங்காய் - 1/2

கருணைக்கிழங்கு - 1/2

வெள்ளை பூசணிக்காய் - ½

சின்ன வெங்காயம் - 4

தேங்காய் எண்ணெய்

சீரகம் – ½ டீஸ்பூன்

பூண்டு – 2

பச்சை மிளகாய் – 2

மஞ்சள் தூள்

கறிவேப்பிலை

தேங்காய் – அரை மூடி


செய்முறை

முதலில் காய்கறிகளைத் தண்ணீர் ஊற்றி நன்கு அலசி அதை நீளவாக்கில் வெட்டிக் கொள்ளவும்.

பின்பு காய்கறிகளைக் கடாயில் போட்டு ½ கப் அளவு தண்ணீர் ஊற்றி வேக விடவும்.

இதற்கிடையில் மசாலாவை அரைத்துக் கொள்ளவும். அதற்கு தேங்காய் துருவல், பச்சை மிளகாய், சின்ன வெங்காயம், பூண்டு, சீரகம், மஞ்சள் தூள் மற்றும் சிறிதளவு கறிவேப்பிலை எடுத்துக் கொள்ளவும்.

இதை மிக்ஸியில் சிறிதளவு தண்ணீர் ஊற்றிப் பேஸ்ட் போல அரைத்துக் கொள்ளவும்.

இப்போது அரைத்த மசாலாவை வேக வைத்த காய்கறிகளுடன் சேர்த்து, தேவையான அளவு உப்பு தூவி கலந்து விடவும்.

மேலே கறிவேப்பிலை மற்றும் தேங்காய் எண்ணெய் சேர்க்கவும். விருப்பப்பட்டால் தேங்காய் எண்ணெயில் கறிவேப்பிலை தாளித்தும் இதில் சேர்க்கலாம்.

மசாலா, காய்கறிகளுடன் நன்கு சேர்ந்து அவியல் பதத்திற்கு வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்

இப்போது சூப்பரான நாகர்கோவில் ஸ்பெஷல் அவியல் தயார்.


குறிப்பு: அவியலில் மாங்காய் சேர்க்காமல் இருந்தால் புளிப்புக்கு சிறிதளவு தயிர் சேர்த்து கொள்ளவும்.

Sunday, April 28, 2024

சிந்தனைத் துளிகள் 28/04/24


மனிதனும் வாழைமரமும் ஒன்று தான்...

தேவைப்படும் வரை  வைத்து இருப்பார்கள்

தேவை முடிந்ததும் வெட்டி வீசி விடுவார்கள்.!


ஒருவரைப் பற்றி மற்றவரிடம் குறை சொல்லக்கூடாது. பிடிக்கவில்லை என்றால் அவரை விட்டு விலகி விட வேண்டும்.

அதைவிடுத்து குறை சொன்னோம் ஆனால்

அது உறவுக்கும் அழகில்லை,

நட்புக்கும் இலக்கிணமில்லை.!!


மனதில் பட்டதை  

சொல்லும்போது சில இடங்களில் பிரச்சனை முடிவுக்கு வருகிறது.

சில இடங்களில் பிரச்சனை ஆரம்பமாகிறது.!!!


தேவைகளையும், எதிர்பார்ப்புகளையும் 

எவ்வளவுக்கு எவ்வளவு 

குறைத்துக் கொள்கிறோமோ...

அவ்வளவுக்கு அவ்வளவு 

மன அமைதியும்,நிம்மதியும் கிடைக்கும்.!


இழந்ததை எண்ணி வருந்தாதே என்று சொல்வது மிகவும் சுலபம்...

ஆனால் இழந்து துடிப்பவர்களுக்குத்தான் தெரியும்...

அது எவ்வளவு பெரிய

வலி என்று.!!


கெட்டவனை நம்புங்கள்.

அவன் என்றாவது ஒருநாள் நல்லவனாக 

வாய்ப்பு உண்டு.

ஆனால் நல்லவன் போல் நடிக்கும் கெட்டவனை ஒருபோதும் நம்பாதீர்கள்.

ஏனென்றால் அவன் இந்த ஜென்மத்தில் திருந்தவேமாட்டான்.!!!

 

கரு ஊமத்தை - தினம் ஒரு மூலிகை


 *கரு ஊமத்தை*  அகன்ற இலைகளையும் வாயாக என்ற நீண்ட குழலுமான புனல் வடிவ மலர்களையும் முள் நிறைந்த காயையும் உடைய குறும் செடி இதில் மூன்று வகை உண்டு. வெள்ளை மலர் மஞ்சள் மலர் கருஞ்சிவப்பு மலர் உண்டு இதில் கருஞ்சிவப்பு மலர் உடைய செடி கரு ஊமத்தை எனப்படும் கரு ஊமத்தையின் மருத்துவ பயன் அனைத்து பாகங்களும் மருத்துவ குணம் உடையது பொதுவாக நோய் தணிப்பானாகவும் சிறப்பாக இசிவு நோய் தணிப்பானாகவும் பயன்படுகிறது இலையை நல்லெண்ணையில் வதக்கி கட்ட வாத வலி மூட்டு வீக்கம் வாயு கட்டிகள் அண்ட வாயு தாய்ப்பால் கட்டிக் கொண்டு வழித்தல் ஆகியவை தீரும் இலையை நீர் விடாது அரைத்து நல்லெண்ணையில் வதைக்கு நாய் கடி புண்ணில் கட்ட விரைந்து ஆறும் இலை சாறு மூன்று துளிகள் வெள்ளம் கலந்து மூன்று நாட்கள் கொடுக்க நஞ்சு தீரும் கடும் பத்தியம் பகலில் தயிர் சோறும் இரவில் பால் சோறும் உப்பில்லாது சாப்பிடவும் ஊமத்தை பிஞ்சை உமிழ்நீரில் மையாய் அரைத்து தடவ புழுவெட்டு தீரும் நன்றி.

நிம்மதி எங்கே இருக்கிறது..பெரியவர் சொன்ன ரகசியம்

ஒரு மனிதன்....

எந்தக் குறையும் இல்லை அவனுக்கு...

ஆனாலும் மனசில் நிம்மதி இல்லை.

படுத்தால் தூக்கம் வரவில்லை... 

சிரமப்பட்டான்...

அவன் மனைவி பரிதாபப்பட்டு ஒரு யோசனை சொன்னாள்.

பக்கத்துலே உள்ள காட்டுலே ஒர் ஆசிரமம் இருக்கு... 

அங்கே ஒரு பெரியவர் இருக்கார்... 

போய்ப் பாருங்கள்!"

ஆசிரமத்துக்குப் போனான்...

பெரியவரைப் பார்த்தான்.

ஐயா.... 

மனசுலே நிம்மதி இல்லே... 

படுத்தா தூங்க முடியலே!"

அவர் நிமிர்ந்து பார்த்தார்...

தம்பி... 

உன் நிலைமை எனக்குப் புரியுது... 

இப்படி வந்து உட்கார்!"

பிறகு அவர் சொன்னார்:

உன் மனசுக்குச் சில ரகசியங்கள் தெரியக்கூடாது...

தெரிந்தா உன் நிம்மதி போயிடும்!

அது எப்படிங்க?

சொல்றேன்... 

அது மட்டுமல்ல... 

மனம் தேவையில்லாத சமயங்களிலே, தேவையில்லாத சுமைகளைச் சுமக்கறதும் இன்னொரு காரணம்!

ஐயா  நீங்க சொல்றது எனக்கு புரியலே!

புரியவைக்கிறேன்....

அதற்கு முன் ஆசரமத்தில்

விருந்து சாப்பிடு.

வயிறு நிறையச் சாப்பிட்டான்.

பெரியவர் அவனுக்கு சுகமான படுக்கையைக் காட்டி, 

இதில் படுத்துக்கொள் என்றார்.

படுத்துக் கொண்டான்...

பெரியவர் பக்கத்தில் உட்கார்ந்து கதை சொல்ல ஆரம்பித்தார்...

கதை இதுதான்:

ரயில் புறப்படப் போகிறது... 

அவசர அவசரமாக ஒருவன் ஓடி வந்து ஏறுகிறான் அவன் தலையில் ஒரு மூட்டை...

ஒர் இடம் பிடித்து உட்கார்ந்தான்.

ரயில் புறப்பட்டது...

தலையில் சுமந்த வந்த மூட்டையை மட்டும் அவன் கிழே இறக்கி வைக்கவில்லை...

எதிரே இருந்தவர் கேட்கிறார்: 

"ஏம்ப்பா! எதுக்கு அந்த மூட்டையைச் சுமந்துக்கிட்டு வாறே?

இறக்கி வையேன்.

அவன் சொல்கிறான்:

"வேணாங்க! 

ரயில் என்னை மட்டும் சுமந்தா போதும்! 

என் சுமையை நான் சுமந்துக்குவேன்!'

பெரியவர் கதையை முடித்தார்.

படுத்திருந்த நம்ம ஆசாமி சிரித்தான்.

ஏன் சிரிக்கிறே?

பைத்தியக்காரனா இருக்கானே...

ரயிலைவிட்டு இறங்கும் போது, மூட்டையைத் தூக்கிட்டு இறங்கினா போதாதா?

அது அவனுக்கு தெரிய வில்லையே

யார் அவன்? இயல்பாக கேட்டான்

நீதான்!"

என்ன சொல்றீங்க?

பெரியவர் சொன்னார்:

வாழ்க்கை என்பதும் ஒரு ரயில் 

பயணம் மாதிரிதான்...

பயணம் பூராவும் சுமந்து கொண்டே போகிறவர்கள்

நிம்மதியாக வாழமுடியாது.

தேவைப்படுகிறது மட்டும் மனசில் வைத்துக்கொள்!

அவனுக்கு தனது குறை மெல்ல

புரிய ஆரம்பித்தது...

சுகமாக தூக்கம் வந்தது.

தூங்க ஆரம்பித்து விட்டான்... 

கண் விழித்த போது எதிரே பெரியவர் நின்று கொண்டிருந்தார்.

"எழுந்திரு" என்றார்

எழுந்தான்!

"அந்த தலையணையைத் தூக்கு!" என்றார். 

தூக்கினான்...

அடுத்த கணம்"ஆ"வென்று 

அலறினான்.

தலையணையின் அடியில் ஒரு நாகப்பாம்பு, சுருண்டு படுத்திருந்தது

ஐயா! என்ன இது?

உன் தலைக்கு வெகு அருகில் ஒரு பாம்பு... 

அப்படி இருந்தும் 

நீ நிம்மதியாய் தூங்கி இருக்கிறாய்...!

அது ... 

அது எனக்குத் தெரியாது...

பாம்பு பக்கத்தில் இருந்த ரகசியம் உன் மனசுக்குத் தெரியாது... 

அதனால் நிம்மதியாகத் தூங்கியிருக்கிறாய்!

அவன் புறப்பட்டான்,, 

நன்றி பெரியவரே... 

நான் போய் வருகிறேன்!

நிம்மதி எங்கே இருக்கிறது என்பதை புரிந்து கொண்டாயா?

புரிந்து கொண்டேன்!

என் மனசுக்குள்ளேயே ஒளிந்து கொண்டிருக்கிறது.

அறிவின் வெளிச்சத்தால்

அதைக் தேடிக் கண்டு பிடித்த விட்டேன் ஐயா.

முகநூலில் ரசித்தது.

செய்தித் துளிகள்- 28.04.2024 (ஞாயிற்றுக்கிழமை)

உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க அவகாசம்: 

👉அரசு கலை அறிவியல் கல்லூரி, அரசு கல்வியியல் கல்லூரியில் உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை மே 15-ம் தேதி மாலை 5 மணி வரை நீட்டித்து ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு.

🌅🌅2024 மே மாதம் நடைபெறவுள்ள துறை தேர்வுகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான அறிவிக்கை வெளியீடு.

🌅🌅தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நடத்துகின்ற விளையாட்டு விடுதிகளில் சேர்ந்து பயில விண்ணப்ப அறிவிப்பு வெளியீடு.

🌅🌅மாணவர் எண்ணிக்கைபடி அரசு பள்ளிகளில் 2,236 உபரி ஆசிரியர்கள்: பணிநிரவல் செய்ய கல்வித் துறை முடிவு.

🌅🌅வட்டாரக் கல்வி அலுவலர் பதவி உயர்வு - தகுதி பட்டியலில் 330 பேர் உள்ளனர்.

🌅🌅பள்ளியிலேயே சீருடையை தைத்து வழங்க முடிவு.

🌅🌅 2025-26 முதல் இரண்டு பொதுத் தேர்வு முறை: CBSE ஆயத்தப் பணி தொடக்கம்.

🌅🌅1282 பட்டதாரி ஆசிரியர் தற்காலிக பணியிடங்களுக்கு 6 மாதங்களுக்கான ஊதியக் கொடுப்பாணை வெளியீடு.

🌅🌅95 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு 30.09.2024 வரை 6 மாதங்களுக்கு தொடர் நீட்டிப்பு ஊதியக் கொடுப்பாணை வெளியீடு.

🌅🌅6156 தற்காலிகப் பணியிடங்களுக்கு 30.09.2024 வரை 6 மாதங்களுக்கு தொடர் நீட்டிப்பு ஊதியக் கொடுப்பாணை வெளியீடு.

🌅🌅கல்வி உரிமை சட்டத்தின்படி 6, 7, 8-ம் வகுப்புகளில் பயிலும் அனைவருக்கும் கட்டாய தேர்ச்சி வழங்க உத்தரவு.

🌅🌅JEE 2-ம் கட்ட முதன்மை தேர்வு முடிவு வெளியீடு

🌅🌅குரூப்-1, குரூப்-2, குரூப்-2A, குரூப்-4

உள்ளிட்ட தேர்வுகளுக்கான அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசு

🌅🌅நெல்லை மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகள் கூட விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் எச்சரிக்கை

🌅🌅சேலம் பெரியார் பல்கலை. மாணவர் சேர்க்கை தொடக்கம்!.

🌅🌅கல்லூரி இறுதி நாளில் பேராசிரியரை பிரிய மனமில்லாமல் கதறி அழுத மாணவன்

விருதுநகரில் கல்லூரி இறுதி நாளன்று தனது பேராசிரியரை பிரிய மனமின்றி மாணவர் ஒருவர் கதறி அழுதுள்ளார்.

சிவகாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இறுதி ஆண்டு மாணவர்களுக்கான வழியனுப்பு விழா நடைபெற்றது. அப்போது, மாணவன் கணேஷ்குமார், தனது பேராசிரியர் மகேஷ்வரனை பிரிய மனமின்றி, அவரை கட்டியணைத்து அழுதுள்ளார்.

அவரை, சக மாணவர்கள் மிகவும் சிரமப்பட்டு, பேராசிரியரிடம் இருந்து பிரித்து அழைத்து சென்றனர். இந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

🌅🌅"எங்களுக்கு கல்வி வேண்டும்;"

இலவச புடவை வேண்டாம்" கவனம் ஈர்த்த பழங்குடி பெண்களின் போராட்டம்...

மகாராஷ்டிர மாநிலம் பால்கர் மாவட்டத்தில் பழங்குடி பெண்களின் போராட்டம் தேசிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.

🌅🌅வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் தேவை: 

பொதுவாக, போரின்போது வீசப்படும் குண்டுகளில் குறைந்தது 10 சதவீதமாவது வெடிக்காமல் போகும்; அதனடிப்படையில் 1 கணக்கிட்டால், காஸாவில் இடிபாடுகளில் மறைந்திருக்கும் வெடிக்காத குண்டுகளைக் கண்டறிந்து முழுமையாக அகற்ற 14 ஆண்டுகள் ஆகும் 

-ஐ.நா. கண்ணிவெடி அகற்றல் நிபுணர் பெஹர் லோதம்மர்

🌅🌅கர்நாடகாவிற்கு வறட்சி நிவாரண நிதியாக ரூ.3,454 கோடி - மத்திய அரசு அறிவிப்பு

தமிழ்நாட்டிற்கு மிக் ஜாம் புயல் மற்றும் வெள்ளத்திற்கு நிவாரணமாக ரூ.275 கோடி அறிவிப்பு

'பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல… வன்மம், தீராத வன்மம்' 

-எம்.பி. சு.வெங்கடேசன் கண்டனம்

🌅🌅இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட தமிழ்நாடு மீனவர்கள் 24 பேர், கொழும்புவில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனர்.

🌅🌅தமிழ்நாடு முழுவதும் Rehydration Points! 

👉தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் வெயில் அதிகரித்து வரும் நிலையில், நீர்ச் சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்படுவோரை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு முழுக்க 1000 இடங்களில்  ORS பாக்கெட்களை வழங்க சுகாதாரத் துறை உத்தரவு. ஜூன் 30 வரை மையங்கள் செயல்படும்.

🌅🌅வாகனங்களில் தேவையற்ற ஸ்டிக்கர்கள் எதையும் ஒட்டக் கூடாது

மீறினால் மே 2ம் தேதி முதல் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - காவல்துறை எச்சரிக்கை

நம்பர் பிளேட்டுகளில் தேவையற்ற ஸ்டிக்கர் கூடாது.

🌅🌅சென்னைவாசிகளுக்கு ஓர் அறிவிப்பு..! 

சென்னையில் வீடுகளில் செல்லப்பிராணி வளர்ப்பதற்கான உரிமம் கட்டாயம் என சென்னை பெருநகர மாநகராட்சி அறிவிப்பு உங்கள் செல்லப்பிராணியின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தல்.

🌅🌅சென்னையில் மெரினா கடற்கரை எதிரே பிரமாண்டமாக அமைகிறது சுதந்திர தின அருங்காட்சியகம் 

ஹுமாயூன் மாஹாலில் 80,000 சதுரஅடியில் அருங்காட்சியகம் அமைகிறது - தமிழக அரசு

அருங்காட்சியகத்தில் வைக்க பொதுமக்கள் தங்களிடம் உள்ள பழங்கால பொருட்களை  வழங்கலாம் - தமிழக அரசு.

 கையெழுத் பிரதி, பழங்கால ஆவணம், செய்தித்தாள்கள், ஜெயில் வில்லைகள்,  இராட்டைகளை வழங்க அரசு கோரிக்கை.

பொருட்கள் நன்கொடை வழங்குவோரின் பெயர்கள் அருங்காட்சியகத்தில்  இடம்பெறும் எனவும் அரசு அறிவிப்பு.

75 வது சுதந்திர தினவிழாவில் சுதந்திர தின அருங்காட்சியகம் அமைக்கப்படும்  என முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

முதல்வர் ஸ்டாலின் கூறியதை தொடர்ந்து தமிழக அரசு சார்பில் அருங்காட்சியகம்  குறித்த அறிவிப்பு வெளியீடு.

🌅🌅உச்சநீதிமன்றத்தில் நோட்டோ விவகாரம்..

ஒரு தொகுதியில் வேட்பாளர்களை விட நோட்டாவிற்கு அதிக ஓட்டுகள் கிடைத்தால், எந்த வேட்பாளரும் வெற்றி பெறவில்லை என அறிவிக்க வேண்டும் எனக்கூறி உச்சநீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது சந்திரசூட் கூறியதாவது: இந்த மனுவை விசாரிப்போம். நோட்டீஸ் அனுப்புவோம். இதுவும் தேர்தல் நடைமுறை தொடர்புடையது தான் எனக்கூறியதுடன் நோட்டா தொடர்பான விதிமுறைகளை ஆய்வு செய்ய உத்தரவிட்டு உள்ளார்.                                                      🌅🌅தமிழகத்தில் மே 1 முதல் 9 மாவட்டங்களில் வெப்ப அலை

வெதர்மேன் பிரதீப் ஜான் எச்சரிக்கை

🌅🌅தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என வஞ்சிக்கும் மத்திய பாஜக அரசின் ஒவ்வொரு செயலையும் நம் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்!"

"வெள்ள நிவாரணம் - வஞ்சிக்கும் மத்திய அரசு"

முதல்வர் ஸ்டாலின்

🌅🌅அமலாக்கத்துறை குற்றச்சாட்டுகள் போலியானவை"

பதில் மனு தாக்கல் செய்த அரவிந்த் கெஜ்ரிவால்!"

அமலாக்கத்துறை குற்றச்சாட்டுகள் போலியானவை. எந்த அடிப்படை ஆதாரமும் இல்லாதவை.

பாஜகவும், மத்திய அரசும் அமலாக்கத்துறையை தவறாக பயன்படுத்தி, என்னை கைது செய்துவிட்டது

அமலாக்கத்துறையின் மனுவுக்கு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல்.

🌅🌅தேசிய அளவிலான மூத்தோர் தடகள போட்டியில் அசத்திய தமிழ்நாடு போலீஸ் கிருஷ்ணமூர்த்தி

👉மூத்தோர் தடகள போட்டியில் கலக்கிய தமிழ்நாடு போலீஸ்!

மும்பையில் நடந்து வரும் தேசிய அளவிலான மூத்தோர் தடகள போட்டியின் 5000 மீட்டர் நடை பிரிவில் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார் சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த எஸ்.ஐ கிருஷ்ணமூர்த்தி (54)

லண்டன், கனடா உள்ளிட்ட இடங்களில் நடந்த உலக அளவிலான காவல் துறையினருக்கான தடகள போட்டிகளில் 2 முறை தங்கமும், ஒரு முறை வெள்ளியும் நடை போட்டியில் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

🌅🌅அதிகரிக்கும் வெப்பம் - சுகாதாரத்துறை உத்தரவு

"தமிழகம் முழுவதும் வெப்பம் அதிகரித்து வரும் நிலையில் பொது இடங்களில் ஓஆர்எஸ் பாக்கெட்டுகளை விநியோகம் செய்ய வேண்டும்"

சம்பந்தப்பட்ட சுகாதார அதிகாரிகளுக்கு, பொது சுகாதாரத்துறை உத்தரவு

"கடும் வெப்பம் காரணமாக மக்களுக்கு உடல் சார்ந்த பாதிப்புகள் ஏற்படக் கூடும்" 

"உடலின் நீர் சமநிலையை மேம்படுத்த மாவட்டம் தோறும் பல்வேறு பகுதிகளில் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகள் வழங்க வேண்டும்"

ஜூன் 30ஆம் தேதி வரை மாவட்ட வாரியாக பொதுமக்களுக்கான மறுநீரேற்று மையங்களை அமைக்கவும் உத்தரவு.

🌅🌅கோடை காலத்தில் தண்ணீரின் தேவையும் அதிகம்.

கோடையில் தண்ணீர் கிடைப்பதும் குறைவு.

இதனை மனதில் வைத்து மக்களுக்காக அனைத்து துறையும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்

அனைத்துத் துறை அலுவலர்களும் கவனமாக செயல்பட்டு குடிநீர் பிரச்சனை நிலவக்கூடிய அனைத்து பகுதிகளுக்கும் சென்று, பிரச்சனைகளுக்கு உடனடியாகத் தீர்வு காண வேண்டும்

தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

🌅🌅மே 2ல் மழைக்கு வாய்ப்பு

மே 2ம் தேதி, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு

ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுவை பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்

தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மே 3ம் தேதி மழைக்கு வாய்ப்பு 

சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

🌅🌅கோடை காலத்தில் பொதுமக்களுக்கு இயன்ற உதவிகளை செய்க: 

கட்சியினருக்கு

பிரேமலதா வேண்டுகோள்

🌅🌅வந்தே பாரத் ரயில்களின் சேவை நீட்டிப்பு!.

சென்னை - எழும்பூர் - நாகர்கோவில் ரயில்சேவை 

மே 2 முதல் ஜூன் 27 வரை நீட்டிப்பு

🌅🌅விசில் மூலம் பேசி கொள்ளும் கிராமம்

துருக்கி நாட்டின் ஒரு பகுதியான கிஸ்காய் எனும் பகுதியில் 10,000 பேர் வசிகின்றனர்.

அம்மக்கள் விசில் ஒலியை மொழியாக பயன்படுத்தி பேசுகிறார்கள்.

🌅🌅வானிலை முன்னறிவிப்புகளின் துல்லியத்துக்கு தமிழ்நாட்டில் 2 புதிய ரேடார் பொருத்த திட்டம்:

ராமநாதபுரம், சேலத்தில் அமைகிறது.                                             🌅🌅தங்கம் விலை உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்வு

ஒரு கிராம் தங்கம் ரூ.6,770க்கும், ஒரு சவரன் ரூ.54,160க்கும் விற்பனை

🌅🌅60 வயதில் 'மிஸ் யுனிவர்ஸ் பியூனஸ் அயர்ஸ்' பட்டம் வென்ற பெண்!

“உலக அழகிக்கு வயது 60"

60 வயதில் 'மிஸ் யுனிவர்ஸ் பியூனஸ் அயர்ஸ்' பட்டம் வென்ற அர்ஜென்டினாவைச் சேர்ந்த அலெஜந்திரா மரிசா ரோட்ரிகஸ். இதன்மூலம் அதிக வயதில் அழகிப்போட்டியில் பட்டம் வென்ற பெண் என்ற பெருமையை பெறுகிறார்.

உலக அழகிப்போட்டியில் 18 முதல் 28 வயதுடையவர்கள் மட்டுமே பங்கேற்க முடியும் என்ற விதி தளர்த்தப்பட்ட நிலையில் இது சாத்தியமாகியுள்ளது.

‘அழகுக்கு வயது வரம்பு இல்லை’ என ரோட்ரிகஸ் கூறுகிறார்.

🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅

🌹🌹மனிதனின் ஆயுட்காலம் குறுகிக் கொண்டே போவதற்கான காரணங்கள்:-

👉1.)உடல் பயிற்சி இன்மை / உடல் உழைப்பின்மை

👉2.)இரவில் கண் விழித்திருத்தல்

👉3.)காலை உணவை தவிர்த்தல்

👉4.)ஆரோக்கியமற்ற உணவுகளின் மீதுள்ள நாட்டம்

👉5.)பணத்தை நோக்கிய ஓட்டம்

👉6.)பழைய உணவுகளை சூடாக்கி சூடாக்கி உண்ணல்                         👉7.)கவலைகளை கட்டிக் கொண்டு இருத்தல்

👉வாழ்வில் உணவை முதன்மை படுத்துங்கள். உணவை தரமாக்குங்கள்

👉கண்டதையும் கொட்ட நம் உடல் குப்பை தொட்டி அல்ல

👉நேரத்துக்கு உறங்குங்கள். இரவு உறக்கத்தின் பொழுது தான் நம் உடல் தன்னை தானே சீராக்குகிறது

தினமும் காலையில் வெறும் வயிற்றில்  சூடாக நீர் அருந்துங்கள்.

👉தினமும் ஒரு பழத்தையேனும் வெறும் வயிற்றில் உண்ணுங்கள்.

👉போதியளவு நீர் அருந்துங்கள்.

👉இளநீர் போன்றவை மிக நல்லது

👉பச்சையாக உண்ணக்கூடிய தேங்காய், ஊற வைத்த நிலக்கடலை, வெள்ளரிப் பிஞ்சு, கேரட், சின்ன வெங்காயம், பழங்கள், நட்ஸ் போன்றவற்றில் முடிந்ததை தினமும்  உண்ணுங்கள்.

👉காலை உணவை தவிர்க்காது ஆரோக்கியமானதை தேர்வு செய்து உண்ணுங்கள்.

👉அளவாக உண்ணுங்கள்.

எப்போதும் சுறுசுறுப்பாக இருங்கள்.

👉தொடர்ந்து உட்கார்ந்து கொண்டு இருப்பதை குறையுங்கள்.

👉யோகா தியானம் உணவை போல் அத்தியாவசியமான ஒன்று.

👉மூன்று வேளை உண்பதால் இரண்டு வேளை அவசியம் 20 நிமிடம் நடை பயிற்சி செய்யுங்கள்.

👉இறுக்கமாக இருக்காது சிரித்து பேசி மகிழ்ச்சியாக இருங்கள்.

👉உங்கள் வட்டத்தை இயந்திரத்தோடு குறுக்கிக் கொள்ளாதீர்கள். 

👉அழுது வடியும் சீரியல்களை பார்த்து உங்கள் இதயத்தை வாட்டாமல், சிரிக்க வைக்கும் காட்சிகளை கண்டு களியுங்கள்

👉ஆளைக் கொல்லும் கவலைகளைப்  புறந்தள்ளி ஆளுமையைத் தரும் தன்னம்பிக்கையை ஆடையாக அணியுங்கள்.

👉மனதுக்கு பிடித்த விசயங்களை மட்டும் செய்து வரவும்.

Saturday, April 27, 2024

செய்தித் துளிகள்-27.04.2024(சனிக்கிழமை)

இடைநிலை ஆசிரியர்களின் மாநில முன்னுரிமைப் பட்டியல் வெளியிடப்பட்டது சார்ந்து தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு.

👉31.12.1997 வரை பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களின் மாநில முன்னுரிமை இறுதிப் பட்டியல் வெளியீடு.

⛑️⛑️ஓய்வூதியப் பலன்களை 30 நாட்களுக்குள் பெற்று வழங்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு

⛑️⛑️மாணவர்களுக்கு உடல் ரீதியான தண்டனை வழங்கும் நேர்வுகளில் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் - DSE & DEE இணைச் செயல்முறைகள் வெளியீடு.

⛑️⛑️ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் 2023-24 ஆம் கல்வி ஆண்டு மூன்றாம் பருவ தொகுத்தறி மதிப்பெண்களை EMIS வலைதளத்தில் பதிவு செய்தல் -சார்ந்து-வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கி தொடக்கக்கல்வி இயக்குநர் செயல்முறைகள் வெளியீடு.

⛑️⛑️கோடை விடுமுறை முடிந்து புதுச்சேரியில் வரும் ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என கல்வித்துறை அறிவிப்பு.

⛑️⛑️உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் Special SMC Meeting - 03.05.2024 அன்று நடைபெறுதல் சார்ந்து மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு.

⛑️⛑️வட்டாரக் கல்வி அலுவலர் பதவி உயர்வுக்கு 31.12.2011 க்கு முன்னர் பணியில் சேர்ந்து பணிபுரியும் தலைமையாசிரியர்களின் நடுநிலைப்பள்ளி தற்காலிக தகுதிவாய்ந்தோர் பெயர் பட்டியல் வெளியீடு

⛑️⛑️அரசு மேல்நிலைப் பள்ளிகளில் உயர் கல்வி வழிகாட்டி குழு - மாநில / மாவட்ட அளவிலான பயிற்சி வழங்குதல் - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது

⛑️⛑️JEE மெயின் தேர்வு முடிவு வெளியீடு:நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுத்து 56 மாணவர்கள் சாதனை 

⛑️⛑️ 90 காலிப் பணியிடங்களுக்கான குரூப் 1 முதல்நிலை தேர்வு ஜூலை 13ம் தேதி நடக்கும் - TNPSC அறிவிப்பு

⛑️⛑️நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருக்கும் மாணவர்களுக்கு தேர்வு மையம் எங்கு அமையவிருக்கிறது என்பதற்கான விவரம் வெளியீடு.

⛑️⛑️உணவு பொருட்களுடன் திரவ நைட்ரஜனை கலந்து விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை - தமிழ்நாடு அரசு எச்சரிக்கை

⛑️⛑️அதிகரிக்கும் கோடை வெப்பத்தை விவேகமான செயல்களால் வெல்வோம் - பொதுமக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் 

⛑️⛑️ஸ்ரீரங்கம் கோயில் தேரோட்டத்தை முன்னிட்டு மே 6 ஆம் தேதி திருச்சி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

⛑️⛑️உடல் பருமன் சிகிச்சைக்கு சென்ற இளைஞர் உயிரிழந்த பரிதாபம் - விசாரணை குழு அமைக்கப்பட்டதாக என அமைச்சர் மா.சுப்பிரமணியம் தகவல்

⛑️⛑️தேர்தல் நடத்தை விதிமீறல் புகார் - பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஏப்ரல் 29 ஆம் தேதிக்குள் விளக்கமளிக்க உத்தரவு 

⛑️⛑️உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியை இந்தியாவில் நடத்த முயற்சி செய்வதாக செஸ் சம்மேளனம் தகவல்

⛑️⛑️பாகிஸ்தான் அணிக்கெதிரான 4வது டி20 போட்டி - 4 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி 

⛑️⛑️சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.54,040-க்கும் ஒரு கிராமுக்கு ரூ.45 உயர்ந்து ரூ.6,755-க்கும் விற்பனையாகிறது.

⛑️⛑️EVM-VVPAT இயந்திரங்களில் பதிவாகும் வாக்குகளை 100% சதவீதம் சரிபார்க்க கோரிய மனுக்களை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்! 

⛑️⛑️மே 1 முதல் வெப்ப அலை உச்சத்தை தொட வாய்ப்பு:

வட உள் தமிழ்நாட்டில் மே 1 முதல் 4ஆம் தேதி வரை வெப்ப அலை உச்சத்தை தொட வாய்ப்பு காஞ்சிபுரம், திருவள்ளூர், சேலம், ஈரோடு, நாமக்கல், திருச்சி கரூர் ஆகிய மாவட்டங்களில் வெப்ப அலை வீசும் - தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான்

⛑️⛑️தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு வெப்ப அலை வீசும் எனக்கூறி இந்திய வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

⛑️⛑️சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கான்வேக்கு பதிலாக சேர்க்கப்பட்டுள்ள ரிச்சர்ட் க்ளீஸன் சென்னை வந்தடைந்தார்.

⛑️⛑️MTC பேருந்துகள் நிற்கவில்லையா?

சென்னை மாநகரப் பேருந்துகள் நிற்காமல் சென்றால் 149 என்கிற எண்ணில் புகார் அளிக்கலாம்  - பயணிகள் புகார் அளிக்க கட்டணமில்லா தொலைபேசி எண்ணை அறிவித்தது போக்குவரத்துத் துறை.

⛑️⛑️உலகக்கோப்பை டி20 தூதர் யுவராஜ்சிங் உலகக்கோப்பை டி20 தொடரின் விளம்பர தூதராக யுவராஜ் சிங் நியமனம் - சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவிப்பு.

⛑️⛑️தமிழ்நாட்டில் அதிகபட்சமாக நேற்று வெப்பநிலை பதிவான இடங்கள்!

👉ஈரோடு - 108°F

👉திருப்பத்தூர் - 107°F

👉சேலம் - 106°F

👉தருமபுரி - 106°F

👉கரூ‌ர் பரமத்தி - 106°F

👉திருத்தணி - 105°F

👉வேலூர் - 105°F

👉திருச்சி - 104°F

👉நாமக்கல் - 104°F

👉கோவை - 103°F

👉மதுரை விமான நிலையம் - 103°F

👉மதுரை நகரம் - 102°F

👉தஞ்சாவூர் - 102°F

👉பாளையங்கோட்டை - 100°F

⛑️⛑️பிரதமர் மோடி என்னை பற்றியும் எனது ஆட்டத்தை பற்றியும் பேசியது மிகவும் பெருமைக்குரிய விஷயம்; அதற்காக மிக்க நன்றி; ஓட்டுப்போடுவது அனைவரது உரிமை; யாருக்கு ஓட்டுப்போட்டுள்ளோம் என்று யாரிடமும் கூற வேண்டிய அவசியம் இல்லை. 

-முகமது ஷமி

⛑️⛑️தமிழ்நாட்டில் மறுவாழ்வு பெற்ற பாகிஸ்தான் பெண்: 

பாகிஸ்தானைச் சேர்ந்த ஆயிஷா ராஷனுக்கு (19) சென்னையில் பொருத்தப்பட்ட இதயம். தற்போது உடல் நலம் தேறிய அப்பெண், அரசுக்கும் மருத்துவர்களுக்கும் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார். 

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இதய பாதிப்பால் பாதிக்கப்பட்ட அவர், பாகிஸ்தானில் போதிய மருத்துவ உள்கட்டமைப்பு வசதி இல்லாததால் தமிழ்நாட்டை நாடினார். இதய மாற்று அறுவை சிகிச்சை செய்தாக வேண்டிய சூழ்நிலையில், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை முடிந்துள்ளது.

⛑️⛑️பாரிஸ் ஒலிம்பிக் பாய்மர படகோட்டுதல் போட்டிக்கு தமிழ்நாடு வீராங்கனை நேத்ரா குமணன் தகுதி பெற்றார்.

⛑️⛑️67 மாத்திரைகள் தரமற்றவை:

சளி, காய்ச்சல், உடல் வலி, செரிமான பாதிப்புக உள்ளிட்ட குறைபாடுகளுக்கு பயன்படுத்தப்படும் 67 மாத்திரைகள் தரமற்றவை;  

கடந்த மார்ச் மாதத்தில் 931 மருந்துகளின் மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. 

-மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரியம் தகவல்

⛑️⛑️முன்பதிவில்லா ரெயில் டிக்கெட்டுகள். -வீட்டில் இருந்தே எடுக்கலாம்.

-யுடிஎஸ் செயலியில் புது வசதி.

யூடிஎஸ் செயலி மூலம் ரெயில் நிலையம் உட்பகுதி தவிர வேறு எங்கிருந்து வேண்டுமானாலும் டிக்கெட் எடுத்துக் கொள்ளலாம்.

கவுன்ட்டரில் நீண்ட நேரம் காத்திருக்காமல், எளிதாக டிக்கெட் எடுக்கும் வகையில், யூடிஎஸ் மொபைல் செயலி மூலமாக முன்பதிவில்லாத ரெயில் டிக்கெட், நடைமேடை டிக்கெட், சீசன் டிக்கெட், மின்சார ரெயிகளுக்கான டிக்கெட் ஆகியவற்றை பெறும் வசதி உள்ளது.

இருந்த போதிலும், 'ஜியோ பென்சிங் என்ற கட்டுப்பாடுகள் இருந்ததால் குறிப்பிட்ட எல்லைக்கு வெளியே இருந்து டிக்கெட்களை பதிவு செய்ய முடியாத நிலை இருந்தது.

இந்நிலையில், ஜியோ பென்சிங்கின் வெளிப்புற எல்லையை ரெயில்வே நிர்வாகம் நீக்கியுள்ளது.

இதனால் யூடிஎஸ் செயலி மூலம் ரெயில் நிலையம் உட்பகுதி தவிர வேறு எங்கிருந்து வேண்டுமானாலும் டிக்கெட் எடுத்துக் கொள்ளலாம். 

ஆனால், டிக்கெட் எடுத்த 2 மணி நேரத்துக்குள் பயணம் தொடங்கும் நிலையத்தை அடைந்துவிட வேண்டும்.

 இத்தகவலை ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

⛑️⛑️மீண்டும் பழைய வாக்குச்சீட்டு முறைக்கு மாற வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்தது உச்சநீதிமன்றம்

⛑️⛑️100% VVPAT வாக்கு எண்ணிக்கை கோரிக்கை நிராகரிப்பு.!

தேர்தல் ஆணையத்தை கண்மூடித்தனமாக நம்பாமல் இருப்பது தேவையற்ற சந்தேகங்களுக்கு வழிவகுக்கும் 

சந்தேகம் எழுப்பும் வேட்பாளர்கள் வேட்பாளர்கள் சொந்த செலவில் EVM மெமரியை ஏழு நாட்களுக்குள்  சோதனையிட அனுமதிக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு

⛑️⛑️வாக்கு பதிவில் குளறுபடி என சொல்லி யாரவது அதை சரி பார்க்க விண்ணப்பதால் அவர்கள் கட்டணம் செலுத்த வேண்டும்.

 EVM தவறாகக் செயல்பட்டது கண்டறியப்பட்டால், கட்டணம் திருப்பித் தரப்படும்: 

உச்சநீதிமன்றம்

⛑️⛑️புதிய பேருந்துகளை அரசு வாங்க வேண்டும் " -  

திருச்சியில் அரசுப் பேருந்து இருக்கை கழன்று விழுந்த சம்பவத்தை சுட்டிக்காட்டி

அன்புமணி ராமதாஸ்

⛑️⛑️அதிக பணம் கொடுத்தால் சூப்பர் Fast டெலிவரி

-விரைவில் அறிமுகமாகும் சொமேட்டோவின் புதிய அம்சம்

கூடுதல் தொகை செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு விரைவாக உணவை டெலிவரி செய்யும் வகையில் புதிய அம்சத்தை அறிமுகம் செய்வதற்கான சோதனை முயற்சியில் ஈடுபட்டுள்ளது Zomato

மேலும் ஒவ்வொரு ஆர்டருக்கும் உண்டான Platform Fee எனப்படும் கட்டணத்தையும் ₹5ஆக உயர்த்துகிறது.

⛑️⛑️⛑️⛑️⛑️⛑️⛑️⛑️⛑️⛑️

🌹🌹


*உடல் நல குறிப்புகள்*



 தினமும் காலையில் ஒரு அத்திப்பழம் சாப்பிட்டு வந்தால் அவ்வளவு நல்லது.

கூம்பு வடிவில், வித்தியாசமான நிறத்தில் இருக்கும் அத்திப்பழத்தின் நன்மைகளைப் பற்றி பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இந்த அத்திப்பழம் அனைத்து காலங்களிலும் கிடைக்காது.

இது மிகவும் சுவையாகவும், வித்தியாசமான சுவையுடனும் இருக்கும். இப்பழத்தில் கால்சியம், வைட்டமின் சி, இரும்புச்சத்து, மக்னீசியம், பொட்டாசியம், சோடியம் போன்றவை உள்ளது.

இத்தகைய சத்துக்கள் நிறைந்த அத்திப்பழத்தை தினமும் காலையில் ஒன்று சாப்பிட்டு வந்தால் அதிக பலன்களைப் பெறலாம்.

🌹👉நோய் எதிர்ப்பு:-

👉அத்திப்பழத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளது. அதிலும் மற்ற பழங்களுடன் ஒப்பிடுகையில் இதில் தான் நல்ல தரமான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளதாம்.

🌹👉எலும்புகளை வலிமையாக்கும்:-

👉ஒரு உலர்ந்த அத்திப்பழமானது அன்றாடம் தேவைப்படும் கால்சியத்தில் 3 சதவீதத்தை வழங்குகிறது. இதனை தினமும் உட்கொண்டு வந்தால், எலும்புகள் வலிமையுடன் இருக்கும்.

🌹👉நீரிழிவு:-

👉அத்திப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது.இருப்பினும் அத்திப்பழத்தில் சர்க்கரை அதிகம் இருப்பதால், மருத்துவரிடம் கலந்தாலோசித்து பின் எடுத்துக் கொள்ள வேண்டும்.

🌹👉மலச்சிக்கல் நீங்கும்:-

👉மூன்று துண்டுகளை அத்திப்பழத்தில் 5 கிராம் நார்ச்சத்து உள்ளது. இது அன்றாடம் தேவைப்படும் நார்ச்சத்துக்களின் அளவுகளில் 20 சதவீதத்தைத் தருகிறது. எனவே இவற்றை தினமும் காலையில் உட்கொண்டு வந்தால், செரிமானம் மேம்படுவதோடு, மலச்சிக்கல் பிரச்சனையும் நீங்கிவிடும்.

🌹👉இரத்த சோகை:-

👉அத்திப்பழத்தில் இரும்புச்சத்து உள்ளது. அதிலும் ஒரு உலர்ந்த அத்திப்பழத்தின் அன்றாடம் தேவைப்படும் இரும்புச்சத்தில் 2% கிடைக்கிறது. உடலில் ஹீமோகுளோபினை எடுத்து செல்வதற்கு இரும்புச்சத்து மிகவும் இன்றியமையாதது. எனவே இதனை தினமும் ஒன்று உட்கொண்டு வந்தால், இரத்த சோகை பிரச்சனை நீங்கும்.

🌹👉இரத்த அழுத்தம்:-

👉உப்பு அதிகம் எடுத்துக் கொள்ளும் போது, உடலில் சோடியத்தின் அளவு அதிகரிக்கும். இதனால் சோடியம் மற்றும் பொட்டாசியத்தில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டு, இரத்த அழுத்தம் அதிகரிக்கும். ஆனால் 1 அத்திப்பழத்தில் 129 மில்லிகிராம் பொட்டாசியம் மற்றும் 2 மிகி சோடியம் உள்ளது இதனால் இரத்த அழுத்தம் அதிகரிப்பதைத் தடுக்கலாம்.

🌹👉புற்றுநோய்:-

👉அத்திப்பழத்தில் உள்ள அதிக அளவு ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளால், ப்ரீ-ராடிக்கல்களின் மூலம் டி.என்.ஏ பாதிப்படைவது தடுக்கப்பட்டு,                  புற்றுநோய் வரும் அபாயம் குறையும்.

எடை குறையும்.

அத்திப்பழத்தில் நார்ச்சத்துக்கள் அதிகம் மட்டுமின்றி, கலோரிகள் குறைவு. ஒரு துண்டு அத்திப்பழத்தில் 47 கலோரிகள் உள்ளன. மற்றும் 0.2 கிராம் கொழுப்புக்கள் உள்ளது. எனவே எடையைக் குறைக்க நினைப்போர் இதனை ஸ்நாக்ஸாக உட்கொள்வது நல்லது.

 🌹👉இனப்பெருக்க மண்டல ஆரோக்கியம்:-

👉அத்திப்பழம் மிகவும் சிறப்பான ஓர் பாலுணர்வைத் தூண்டும் பழம். மேலும் அத்திப்பழம் கருவுறும் திறன் மற்றும் பாலுணர்ச்சியைத் தூண்டுவதற்கு காரணம், அதில் இனப்பெருக்க மண்டலத்தின் ஆரோக்கியத்திற்கு தேவையான ஜிங்க், மாங்கனீசு மற்றும் மக்னீசியம் நிறைந்துள்ளது.

🌹👉இதய நோய்:-

👉அத்திப்பழத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளதால், ப்ரீ-ராடிக்கல்களினால் இரத்த நாளங்கள் பாதிக்கப்படுவது தடுக்கப்பட்டு இதய நோய் ஏற்படும் அபாயம் குறையும்.

மேலும் இது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதால், இதய நோய் வரும் வாய்ப்பு குறையும்.

🌹👉அழகான சருமம்:-

👉தினமும் அத்திப்பழத்தை காலையில் சாப்பிட்டு வந்தால்,அழகான மற்றும் மென்மையான சருமம் கிடைப்பதோடு, இளமையையும் தக்க வைக்கலாம்.

திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயில் எப்படி உருவானது? அதன் வரலாறு என்ன?

காரைக்கால் மாவட்டம் திருநள்ளாற்றில், திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயில் அமைந்துள்ளது. 


இக்கோயில் சனிபகவானுக்கு உரிய பரிகாரத் தலமாகவும் திகழ்கிறது. அந்த வகையில், இக்கோயிலின் வரலாறு குறித்து காரைக்கால் தர்ப்பாரண்யேஸ்வரர் கோயில் குருக்களான சிவாச்சாரியார் கூறுகையில், “திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயில் நவக்கிரக கோயில்களில் ஒன்றாகும்.


மேலும், தர்ப்பை அடர்ந்து வளர்ந்திருந்த காரணத்தால், இந்தப் பகுதி தர்ப்பாரண்யம் என்று முதலில் வழங்கப்பட்டது. பின்னர், நகவிடங்கபுரம் என்றும் பெயர் பெற்றது. இங்கு அமர்ந்து இருக்கும் ஈசனின் திருப்பெயர் தர்ப்பாரண்யேஸ்வரர். 


அம்பிகையின் திருப்பெயர் பிராணேஸ்வரி. நளமகாராஜனை, சனிபகவானின் பீடிப்பிலிருந்து விடுவித்து, மறுபடியும் வளமான வாழ்க்கைக்கு ஆற்றுப்படுத்திய தலம் இது என்பதால், நள்ளாறு என அழைக்கப்படுகிறது.


சுயம்புவாக தர்ப்பைவனத்தில் தோன்றியதால் ஈசன் தர்ப்பைத் தழும்புகளுடன் காட்சி தருகிறார். இக்கோயில் 9ஆம் நூற்றாண்டில் சோழ மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டதாகும். 


பிறகு வந்த விஜயநகர பேரரசர்கள், இக்கோயிலை விரிவுபடுத்தினார்கள். சிவபெருமானின் பாடல் பெற்ற தலங்களில் இதுவும் ஒன்று.


சம்பந்தர், சுந்தரர், அப்பர், அருணகிரிநாதர் ஆகியோர் இத்தல சுவாமி பற்றி பாடி உள்ளனர். இத்தலத்தில் நள தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், வாணி தீர்த்தம் தவிர, அஷ்டதீர்த்தங்கள் எனப்படும் மொத்தம் 8 தீர்த்தங்கள் உள்ளன. 


விஷ்ணு, பிரம்மன், இந்திரன், அஷ்டதிக்கு பாலகர்கள், அகத்தியர், அர்ஜுனன், நளன் உள்ளிட்ட பலரும் வழிபட்ட ஈசன் இவர். சப்தவிடங்கத் தலங்களில் திருநள்ளாறும் ஒன்று.


தேவர்களை மறுத்து, நிடத நாட்டு மன்னன் நளன் சக்கரவர்த்தியை கரம் பிடித்தாள், சேதி நாட்டு இளவரசி தமயந்தி. இதனால் கோபமான தேவர்கள், சனிபகவானின் வழியாக நளனை கடுமையாக சோதித்தனர். 


எல்லா செல்வத்தையும் இழந்து, இறுதியில் தமயந்தியையும் பிரிந்து, சேவகனாக மாறினான் நளன் சக்கரவர்த்தி.


பின்னர், சகல தோஷங்களும் நீங்க வேண்டி, தான் இழந்த ராஜ்ஜியம், பதவி மற்றும் குடும்பம் இவைகள் மீண்டும் கிடைக்க வேண்டி, கலியுகத்தில் இறுதியாக இருந்த திருநள்ளாற்றில் உள்ள தர்ப்பாரண்யேஸ்வரரை வணங்கி, சனீஸ்வரனையும் சரணடைந்தார்.


இந்த ஷேத்திரத்தில் வழிபாடு செய்து அதன் மூலம், தான் இழந்த ராஜ்ஜியம், பதவி மற்றும் குடும்பம், மன சந்தோஷம் இவை அனைத்தும் தர்ப்பாரண்யேஸ்வரர் அருளால் கிடைக்கப் பெற்றார். 


எனவே, இக்கோயிலின் மூலமூர்த்தியாக விளங்கக்கூடிய தர்ப்பாரண்யேஸ்வரர்க்கு, நளேஸ்வரர் என்ற பெயர் வழங்களாயிற்று.


அதேபோன்று, அவருடைய பெயரில் நளத்திருத்தம் என்ற தீர்த்தம் இந்த ஷேத்திரத்தில் உள்ளது. இதில் பக்தர்கள் நீராடி வழிபடுவதற்கு ஏற்றவாறு அமையப் பெற்று இருக்கிறது. இவ்வாறு மூர்த்தி, தளம், தீர்த்தம் ஆகிய மூன்றும் நரேஷ் நலச்சக்கரவர்த்தியின் பெயரைத் தாங்கிய வண்ணம் உள்ளது.


நளனை பின்தொடர்ந்து வந்த சனீஸ்வர பகவான், தர்ப்பாரண்யேஸ்வரர் பெருமானின் அருளானையின் வண்ணம், கோயிலினுடைய ராஜகோபுரத்தின் இடதுபுறத்தில், காக வாகனத்தில் நின்ற கோலத்தில் அபயஹஸ்தம் என்று சொல்லக்கூடிய அனுக்கிரக திருமுகத்தோடு, கிழக்கு முகம் நோக்கி தனி சன்னதி, தனி விமானம் கொண்டு அருள் பாலித்து வருகிறார்.


நளன் சக்கரவர்த்தி விடுதலை பெற்று திருப்பணிகள் செய்து முடித்து, திருக்கோயில் அமைத்து இறைவனை பூசித்தார். யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற நல்ல எண்ணத்தினால், நளன் இறைவனிடத்தில் வரங்களை வேண்டினார். இங்கு என்னைப்போல் சனி பகவானை வந்து வணங்கும் பக்தர்களுக்கு சனிபகவான் அருள் செய்து, துன்பம் போக்கி, நலம் பல செய்திடல் வேண்டும் என்று ஒரு வரம் கேட்டார்.


இரண்டாவதாக இத்தலத்தில் சனிபகவான் அனுக்கிரஹ பார்வை உடையவராக இங்கு இருப்பவர்களுக்கு நன்மையளிக்க வேண்டும் என்றார்‌. மூன்றாவதாக, இந்த பகுதிக்கு இன்று முதல் மூர்த்தி, தீர்த்தம், திருத்தலம் ஆகிய மூன்றும் என் பெயரில் விளங்கிட வேண்டும் என்றும் வரங்களை வேண்டினார்.


இதை பரம கருணாநிதியான இறைவனும், சனி பகவானும் மகிழ்ந்து ஏற்றுக் கொண்டு அவ்வாறு அருள் செய்தனர். அந்த வகையில், இங்கு நளனுக்கு விமோசனம் அளித்தபடியால், இறைவனுக்கு நளலேஸ்வரர் என்ற பெயரும், திருக்குளத்திற்கு நளத்தீர்த்தம் என்ற பெயரும், இவ்வூருக்கு திருநள்ளார் என்ற பெயரும் விளங்கலாயிற்று. இவ்வாறு புராணச் சிறப்பும், வரலாற்றுச் சிறப்பும் பெற்ற ஸ்தலம் திருநள்ளாறு ஆகும்.


மற்ற கிரகங்களுக்கு இல்லாத தனிச்சிறப்பாக, மற்ற கிரகங்களுக்கு பகவான் என்ற பதத்தோடு அவருடைய திருநாமம் அமைய பெற்றிருக்கிறது. வேறு கிரகங்களுக்கு இல்லாத தனிச்சிறப்பாக, ஈஸ்வர பட்டத்தை சனீஸ்வர பகவானுக்கு வழங்கி, தர்ப்பாரண்யேஸ்வர் அருளால் சனீஸ்வர பகவானாக இவ்வாலயத்தில் அபயம் தரும் சாந்த மூர்த்தியாக அருள் பாலித்து வருகிறார்.


பொதுவாக ஒருவருடைய வாழ்ந


ாளில், வாழ்நாள் என்பது 120 ஆண்டுகளாக கணக்கிடப்பட்டு உள்ளது. அந்த வகையில், ஒவ்வொரு 30 வருடத்திற்கும் சனீஸ்வர பகவானுடைய ஏழரை சனியின் காலம் ஒருவருடைய மானிட வாழ்வை மாற்றுகிறது.


இவைகள் மங்கு சனி, பொங்கு சனி, தங்கு சனி, மரண சனி இவ்வாறாக நான்கு சுற்றுகளை உடையதாக, நான்கு முப்பது ஆண்டுகளாக சொல்லப்பட்டு உள்ளது. மேலும் ஏழரை சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி உள்ளிட்ட காலங்களிலும் ஜாதக ரீதியாக 19 ஆண்டுகள் சனி திசை.


அதில், சனி புக்தி நான்கு ஆண்டுகள் நடைபெறுகின்ற பக்தர்கள், இவ்வாறு பல வேண்டுதல்கள் நிமித்தமாகவும், ஜாதகர்கள் நளதீர்த்தம் சென்று, ஆத்ம பிரதக்ஷணம் வலமாகச் சுற்றி வணங்கி, குளத்தின் நடுவே இருக்கும் நளன், தமயந்தி சிலைகளை வணங்க வேண்டும். நல்லெண்ணெய் தேய்த்து, வடக்கு அல்லது கிழக்கு திசை பார்த்து நின்று 9 முறை மூழ்க வேண்டும்.


குளித்து, துவட்டி வேறு ஆடை அணிந்த பிறகு, திருக்கோயிலினுள் இருக்கும் ஸ்வர்ண கணபதி, முருகர் சன்னதியை வணங்கி, திருநள்ளாற்றின் நாயகர் தர்ப்பாரண்யேஸ்வரரையும், அடுத்து தியாகேசரையும் வணங்க வேண்டும். தொடர்ந்து, பிராணேஸ்வரி அம்மனை வணங்கிய பின்னரே, இங்கிருக்கும் சனிபகவானை தரிசிக்க வேண்டும் என்பது ஐதீகம்.


எள் தீபம் ஏற்றுவது தொடங்கி, அவரவர் வசதிக்கு ஏற்ப பூஜைகளைச் செய்து சனிபகவானுக்கான பரிகாரங்களைச் செய்து கொள்ளலாம். சனிபகவானை சனிக்கிழமை மட்டுமின்றி, வாரத்தின் எல்லா நாட்களிலும் வரும் சனிஹோரை நேரத்தில் வழிபடலாம். இதனாலும் கூடுதல் பலன் கிட்டும்.


கடுமையான சனிதோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் பாதிப்பிலிருந்து விடுபட, சனிபகவானை பிரார்த்தித்து, சனிக்கிழமைதோறும் ஒருவேளை உபவாசம் இருத்தல் நல்லது. சனிபகவானுக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து, கறுப்பு வஸ்திரம், வடைமாலை சாத்தி, எள்ளுச் சாதம் நெய்வேத்தியம் செய்யலாம்.


எள்ளால் ஆன இனிப்புப் பலகாரங்களைப் பெருமாளுக்கும், சனிபகவானுக்கும் படைக்கலாம். சனிபகவானின் அருளினைப் பெற ஆஞ்சநேயர், கணபதியை வணங்கலாம். சனிபகவான் நீதிமான், நியாயவான் என்று போற்றப் பெறுபவர்.


நமக்குரிய கடமைகளைத் தவறாமல் செய்து, ஈஸ்வரனை வழிபட்டு வந்தால் அதிக பாதிப்பின்றி நற்பலன்களை பெற்று வாழலாம். இத்தகைய பல்வேறு சிறப்புகளை உடைய இந்தக் கோயிலுக்கு, பல்வேறு மாநிலங்களில் இருந்தும், பல்வேறு நாடுகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்கின்றனர்”.



🌷🌷

நாளும் ஒரு சிந்தனை

➰➰➰➰➰➰➰➰➰➰

எல்லா இடத்திலும்

நேர்மையாக இருப்பவர்கள்

பணத்தை விட...

பகையை

வேகமாக சம்பாதிக்கிறார்கள்..!!!


🏚️   *நாளும் ஒரு வீட்டுப் பண்டுவம்*


     பித்தநீர், சிறுநீரகம் சம்மந்தப்பட்ட அனைத்து நோய்களையும்  *வெள்ளரிக்காய்* குணப்படுத்துகிறது.


📰  *நாளும் ஒரு செய்தி*


     இந்தியாவின் முதல் தபால் நிலையம் *'கொல்கத்தாவில்'* அமைக்கப்பட்டது.


🥘  *நாளும் ஒரு சமையல் குறிப்பு*


     எலுமிச்சம் சாதம் செய்யும்போது ஒரு தேக்கரண்டி வதக்கிய வெங்காய துருவலை சேர்த்தால் மணமாக இருப்பதுடன் சுவையாகவும் இருக்கும்.


💰  *நாளும் ஒரு பொன்மொழி*


     எல்லா உயிர்களிலும் இறைவன் உள்ளார். எனவே, அனைவருக்கும் தொண்டு செய்ய வேண்டும்.


         *-ராமகிருஷ்ண பரமஹம்சர்*


📆 *இன்று ஏப்ரல் 27-*


          🌸 *பிறந்த நாள்* 🌸


⭕1945- *பிரபஞ்சன்* (எழுத்தாளர்)



காலை நேர சிந்தனை - ( 27.04.2024)

நம் மனதில் பதிவாகியுள்ள பல அனுபவப் பதிவுகள்  நாம் அறியாதவை. அது ஓர் தொடர்ச்சியான தொகுப்பு. அதன் காலத்தை அறுதியிட்டுக் கூற இயலாது. 


அத்துடன், இப்போதும் நாம் விரும்பும், பார்த்தும், கேட்டும், சுவைத்தும், நுகர்ந்தும் அனுபவித்துக் கொண்டிருக்கும் பலவிதமான  அனுபவங்களிலிருந்தும், மனதில் நல்லதாகவோ, தீயதாகவோ தகவல்கள் உருவாகிப் பதிவாகின்றன. 


ஆக எண்ணங்கள் தோன்றுவதற்கு நம் மனதில் உள்ள அனுபவப் பதிவுத் தளங்களில், அன்றாடம் நாம் சேர்க்கும் தகவல்களும், ஆதியிலிருந்தே பதிவாகி, நாம்  அறியாது, நம்முள் உறைந்திருக்கும் பல கோடிக்கணக்கான தகவல்களும் காரணமாக உள்ளது. 


ஒரு எண்ணம் நம் மனதில் உருவாகும் போது அதனுடன் கற்பனையில் நாம் உறவாடுகிறோம்.  நாம் அந்த எண்ணத்துடன் உறவாடவில்லை எனில் அந்த எண்ணம் தானாகவே மறைந்து விடும். 


எந்த எண்ணத்தோடு கற்பனையில் உறவாடுகிறோமோ, அது காட்சிகளாக விரிந்து, வார்த்தைகளாக, செயல்களாகப் பரிணமிக்கிறது. 


அப்போது அதனால் உண்டாகும் நல்ல, தீய பாதிப்புகளை நாம் அனுபவிக்கிறோம். அதுவும் ஒரு மனப் பதிவாகிறது. 


எத்தனை துயரம் தருவதாக இருந்தாலும், சில வலிமையான எண்ணங்களோடு கற்பனையில் உறவாடுவதை நம்மால் எளிதாகக் கட்டுப்படுத்த முடியாது. அது அத்தனை வீரியமானது. 


மனதில் பதிந்து இருக்கும் அனுபவப் பதிவுகளின் அடிப்படையிலேயே பெரும்பாலான எண்ணங்கள் தோன்றுகின்றன. ஆக மனப் பதிவுகளில் பதிந்து இருக்கும், நாம் உணராத, அறியாத, எண்ணிக்கைக்கு அடங்காத பல கோடி தீய பதிவுகள் நீக்கப்பட வேண்டும். 


அனுதினம் பல  நல்ல பதிவுகள், மனதில் பதிவு செய்யப்படவேண்டும். அதனால் நல்ல செய்திகள் கேட்பது, நற் செயல்களில் ஈடுபடுவது, நல்ல நூல்களை வாசிப்பது, என மனதில் ஒருபுறம் பயனுள்ள அனுபவப் பதிவுகளை உருவாக்கிக் கொண்டே இருத்தல் வேண்டும். 


மனம் ஒரு நிலத்தைப் போன்றது. நிலத்தின் கரடு முரடான கற்களை அகற்றி, சரியாகக் கொத்தி, பண்படுத்தி, நல்ல விதைகளை ஊன்றி, நீர் பாய்ச்சி, உரமிட்டு, வேலியடைத்துக் காப்பாற்றினால், 


அந்த விதை வளர்ந்து, பெருகி, நற்பலன்களைத் தரும். இது ஒரு பெரும் பொறுமையுடன் நீண்ட காத்திருப்போடு செய்ய வேண்டிய தவம். 


அப்போது மனம் பக்குவப்படும். அதிலிருந்து தோன்றும் எண்ணங்களும் பயனுள்ளவையாக இருக்கும். 


நம் மனதில் தோன்றும் எண்ணங்களை விழிப்புடன் கண்காணிக்கும் பழக்கம் இயல்பாகிவிடும். 


தேவையற்ற எண்ணங்களில் கற்பனையில் உறவாடுவதிலிருந்து தற்காத்துக் கொள்ள, நான் வேறு – எனக்குள் தோன்றும் இந்த தேவையற்ற சிந்தனைகள் வேறு, என்ற தெளிவான புரிதலும் ஏற்படும். 


இந்த தெளிவு மனதில் எந்தளவு உறுதியாக உள்ளதோ, அந்தளவிற்கு மனதில் தோன்றும் தேவையற்ற எண்ணமும், சிந்தனையையும் உங்களால் இலகுவாக உதறித் தள்ள முடியும். அந்த தீய எண்ண ஓட்டங்கள் உங்களைப் பாதிக்க முடியாது.


மனதில் தோன்றும் பலவகையான எண்ண ஓட்டங்களை நம்மால் கட்டுப்படுத்த முடியாது, ஆனால் அவ்விதமாகத் தோன்றும் எண்ணங்களுக்கு எவ்விதம் எதிர்வினை ஆற்ற வேண்டும் என்பது நமது அர்ப்பணிப்பில் தான் உள்ளது. 


மனதை தன் வசப்படுத்துவதை விட மனிதருக்கு வேறு எது இந்த உலகில் மிகப் பெரிய சவாலாக இருக்கக் கூடும்?


┈❀🌿🀼󟽀┈❀🌿🌺🌿❀┈❀🌿🌺🌿❀┈ 


முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும் எழுந்து புதிய நாளை துவங்க இறைவன் அருள் புரியட்டும்…!


நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும்.

நல்ல எண்ணங்களுடன் இன்றைய நாளை தொடங்குவோம்...


இந்த நாள் இனிய நாளாகட்டும்




🌴🎋🌴🎋🌴🎋🌴🎋🌴🎋🌴🎋

இன்றைய சிந்தனை (27.04.2024)

 *🌹🌹🌹🙏🏻💐💐💐*                                                      


*"பெரிய சவால்களை"*               ................................. ....  


பெரிய சவால்களை எதிர்கொள்ள மிகுந்த தைரியமும், திறமையும் வேண்டும்.. எளிய செயல்கள் அரிய பலன்களைத் தருகின்றன.அரிய செயல்கள் சாதனைகளாக மலர்கின்றன. அதனால் அவற்றுக்கு என்றுமே மதிப்பு அதிகம்............... 


போராசியர் ஒருவர் மூன்று கேள்விகளை மாணவர்களிடம் கொடுத்துப் பதில் எழுதித் தரச் சொன்னார். அதில் மிகவும் கடினமான கேள்விகளுக்கு 100 மதிப்பெண்களும், கொஞ்சம் கடினமான கேள்விகளுக்கு 60 மதிப்பெண்ணும் தந்து இருந்தார்.. தேர்வு முடிந்ததும் மாணவர்களின் 

விடைத்தாள்களின் விடைகளைப் பார்க்காமல் மிகவும் கடினமான கேள்விகளைத் தேர்வு செய்தவர்களுக்கு முதல் நிலையும், அடுத்தவர்களுக்கு முறையே இரண்டாம்,  மூன்றாம் நிலையும் தந்தார்.. மாணவர்களோ, "பதில்களைப் பார்க்காமல் மதிப்பெண் தருகிறீர்களே"? என்று கேட்க, பேராசிரியரோ" உங்கள் பதிலுக்காக நான் இந்தத் தேர்வை வைக்கவில்லை...... உங்கள் இலக்கு என்ன என்று அறியவே இந்தத் தேர்வை வைத்தேன்.. கடினப்பட்டு உழைப்பவர்களே அனைத்திலும் முதல்நிலை அடைவார்கள்" என்று உங்களுக்கு உணர்த்தவே இந்தத் தேர்வு என்று  சொல்லி முடித்தார்...                


*ஆம், தோழர்களே....*              


*விடாமுயற்சியுடன், சலியாத உழைப்பும் இருந்தால் மிகவும் கடினமான செயல்களை  எளிதில் வெல்லலாம்.✍🏼🌹*

தினம் ஒரு மூலிகை - கட்டு கொடி



கட்டு கொடி.*

 முனை மங்கிய இலைகளுடன் வேலிகளில் படர்ந்து வளரக்கூடிய ஏறுக்கொடி இனம் சாற்றை நீரில் கலந்து வைக்க சிறிது நேரத்தில் கட்டியாகும் சிறு கட்டுக்கொடி பெரும் கட்டுக்கொடி என இரண்டு வகை உண்டு மருத்துவ குணங்கள் இரண்டும் ஒன்று குளிர்ச்சி உண்டாக்குதல் உமிழ்நீர் பெருக்கியாகவும் செயல்படும் 10 கிராம் இலையை மென்று தின்ன ரத்த பேதி சீதபேதி மூலக்கடுப்பு எரிச்சல் தீரும் இலை வேப்பம் கொழுந்து சம அளவு அரைத்து காலையில் மட்டும் கொடுத்து வர நீரழிவு களைப்பு தேகறிவு அதி தாகம் பகுமூத்திரம் தீரும் சிறுநீர் சர்க்கரையும் தீரும் இலையுடன் மாம்பருப்பு சமன் அரைத்து பால் சர்க்கரை சேர்த்து காலை மாலை கொடுக்க பேதி தீரும் சிறிதளவு வேருடன் ஒரு துண்டு சுக்கு நாலு மிளகுடன் காய்ச்சி கொடுக்க வாத வலி வாத நோய் கீழ்நோய் நீங்கும் இளைச்சாற்றை சர்க்கரை கலந்து நீரில் கலக்க வைத்து சிறிது நேரத்தில் கட்டியாகும் இதை அதிகாலையில் சாப்பிட்டு வர வெள்ளை வெட்டை சீத கழிச்சல் ரத்த கழிச்சல் ஆகியவை தீரும் வேறையும் கயச்சி பருப்பையும் இழைத்து விழுதாக்கி கலந்து அரை தேக்கரண்டி நீரில் கலந்து கொடுக்க குழந்தைகள் வயிற்று வலி நீங்கும் நன்றி.

அன்பு என்பது - மனதை தொட்ட பதிவு

நான் காலேஜ் படிக்கும் போது நானும் என் தந்தையும் சர்க்கஸ் பார்க்க சென்றோம்.


டிக்கட் வாங்குவதற்காக வரிசையில் நின்று கொண்டிருந்தோம். 


கடைசியாக எங்களுக்கும் டிக்கட் கவுண்ட்டருக்கும் இடையில் ஒருவர் மட்டுமே நின்று கொண்டிருந்தார். அவருடன் வந்த அவருடைய குடும்பம் என்னை மிகவும் ஈர்த்தது. 


மொத்தம் எட்டு குழந்தைகள் இருந்தார்கள், அனைவருமே பணிரெண்டு வயதுக்கு உள்ளானவர்கள். 


அவர்கள் உடை அணிந்தவிதம் மிகவும் டாம்பிகமாக இல்லாவிட்டாலும் மிகவும் நேர்த்தியாக இருந்தது.


அந்த குழந்தைகள் மிகவும் நேர்த்தியாக நடந்து கொண்டார்கள்.வரிசையாக இரண்டு இரண்டு பேராக அவர்கள் பெற்றோர்கள் பின்னால் நின்று கொண்டு வந்தார்கள். 


அவர்கள் அங்கிருந்த மிருகங்களையும், ஜோக்கர்களின் புகைப் படத்தையும் பார்த்து ஆர்வத்துடன் பேசிக் கொண்டு வந்தார்கள்.


இன்னும் சிறிது நேரத்தில் தாங்கள் அவற்றை நேரிடையாக காணப் போவதை பற்றி பேசி மகிழ்ந்து கொண்டு வந்தார்கள். 


அவர்கள் பேச்சிலிருந்து, அவர்கள் இதுவரை சர்க்கஸுக்கு இதற்க்கு முன் வந்ததில்லை என்பது நன்றாக புரிந்தது, அவர்களுடைய மிக பெரிய வாழ்க்கை சந்தோஷமாக இதனை கருதினார்கள். 


அந்த குழந்தைகளின் பெற்றோர் மிகவும் பெருமையோடும் பூரிப்போடும்  வரிசையின் முதலில் நின்று கொண்டிருந்தார்கள். 


அந்த தாய் அவளது கணவனின் கைகளை நன்றி உணர்வோடு பற்றிக் கொண்டிருந்தாள். அவள் கணவன் அவனது குடும்பத்தின் சந்தோஷத்தை கண்டு மகிழ்ந்து கொண்டிருந்தான். 


கவுண்டரில் இருந்த பெண் அந்த நபரிடம் எத்தனை டிக்கட் வேண்டும் என்று கேட்டாள். உடனே அவர் குழந்தைக்கான டிக்கட் எட்டு, பெரியவர்களுக்கான டிக்கட் இரண்டு என்று கூறினார். கவுண்டரில் இருந்த பெண்ணும் அதற்கான பணத்தை கணக்கிட்டு கூறினாள்.


அவர் அவருடைய மனைவியிடம் நீ குழந்தைகளை அழைத்துக் கொண்டு முன்னே செல் என்று கூறிவிட்டு, மீண்டும் அந்த கவுண்டரில் இருந்த பெண்ணிடம் எவ்வளவு தொகை என்று கேட்டார். 


அந்த நபரிடம் போதுமான பணம் இருக்கவில்லை. அவருக்கு இந்த சூழ்நிலையை எப்படி சமாளிப்பது என்று தெரியவில்லை. சந்தோஷத்தில் இருக்கும் தன குழந்தைகளிடம் எப்படி சென்று இதனை கூறுவது என்று புரியாமல் தவித்தார். 


இதனை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த என் தந்தை, அவரது பாக்கேட்டிலிருந்து ஒரு நூறு ரூபாய் தாளை எடுத்து தரையில் போட்டார். (நாங்கள் ஒன்றும் சொல்லிக் கொள்ளும் படி பெரிய செல்வந்தர் எல்லாம் இல்லை). 


என் தந்தை குனிந்து அந்த பணத்தை தரையில் இருந்து எடுத்து, அங்கிருந்த நபரிடம் கொடுத்துவிட்டு.. "சார், இந்த பணம் உங்க பாக்கெட்டிலிருந்து கீழே விழுந்துவிட்டது" என்றார். 


அந்த நபருக்கு நன்றாக புரிந்தது என் தந்தையின் உதவும் மனநிலை. அவர் எங்களிடம் யாசகம் கேட்கவில்லை, எனினும் அந்த கையறுந்த நிலையில் அவரால் அதை மறுக்க முடியவில்லை. 


அவர் எனது தந்தையின் கண்களை நேராக பார்த்து, என் தந்தையின் இரணடு கைகளையும்  பணத்துடன் கைகளுக்குள் வைத்து கண்களில்  ஒரு சொட்டு கண்ணீர் சிந்தியவாறே, "நன்றி... மிக்க நன்றி சார், இந்த பணம் எனக்கும் என் குடும்பத்தாருக்கும்  இப்பொழுது மிகவும் மதிப்பில்லாதது" என்றார். 


நானும் என் தந்தையும் பைக்கில் வீட்டிற்கு திரும்பினோம். என் தந்தை அவருக்கு கொடுத்த அந்த பணத்தில் தான் நாங்க சர்க்கஸுக்கு போக நினைத்து வைத்து இருந்த பணம்.  


அன்றிரவு நாங்கள் சர்க்கஸுக்கு செல்லவில்லை என்றாலும், நாங்கள் அடைந்த சந்தோஷத்திற்கு, மனநிறைவுக்கும் அளவே இல்லை. 


அன்று நான் கற்றுக் கொண்டேன் "பிறருக்கு உதவுவதில்" உள்ள சந்தோஷத்தின் மதிப்பை. 


அன்பு எனப்படுவது.. "பிறரிடம் இருந்து பெறுவதில் இல்லை, பிறருக்கு கொடுப்பதிலேயே உள்ளது". 


*படித்ததில் வலித்தது....*

Friday, April 26, 2024

✈️வெளிநாட்டுக்கு போய் கற்றுக்கொள்ளும் பாடங்கள் ✈

இத்தனை வருட வெளிநாட்டு வாழ்க்கையில் ஒரு பிரயோஜனமும் இல்லை என்று சொல்பவர்களுக்கு,

👉ஒரு கப் நெய் சோறு அரிசிக்கு இரண்டு கப் தண்ணீர் ஊற்ற வேண்டும் என்று படித்ததும் இங்கேதான்.


 👉நாம சாப்பிட்ட, குடிச்ச பாத்திரத்தை நாம்தான் கழுகி வைக்க வேண்டும் என்று படித்ததும் இங்கேதான்.


👉 எந்த உணவு சாப்பிட்டாலும் அதில் உப்பில்லை, காரமில்லை, சுவை இல்லை என்று குறை சொல்லக்கூடாது என்றும் படித்தது இங்கேதான்.


👉 இன்று பிரிட்ஜில் வைத்து நாளை சூடாக்கி சாப்பிட்டாலும் ஒன்றும் ஆகாது என்று படித்ததும் இங்கேதான்.


👉 வாழ்க்கையில் சரியான நேரத்திற்கு அலாரம் வைத்து எழுந்திருக்கவும், உறங்கவும் படிச்சது இங்கேதான்.


👉சத்தம் இல்லாமல் கதவை திறக்கவும் மூடவும் படித்தது இங்கேதான்.


👉 தனது கனவு தேவதையாக தலையணையை கட்டிப்பிடித்து உறங்கி பழக படிச்சதும் இங்கேதான்.


👉 பொறுமை என்ற 3 எழுத்திற்கு அர்த்தம் என்ன என்பதை படித்ததும் இங்கேதான்.


 👉எவ்வளவு கும்மிரட்டிலும் ரூமில் உறங்குப வர்களுக்கு தொந்தரவு செய்யாமல் ஆடை அணியவும், சாப்பாடு சாப்பிடவும் படித்தது இங்கேதான்.


👉 நூறு கிடைத்தாலும் பத்து ரூபாய் கடன் வாங்கி 110 ஆக நாட்டுக்கு அனுப்ப படித்ததும் இங்கேதான்.


👉மின்சாரத்தையும், தண்ணீரையும், சோப்பையும், பற்பசையையும் சிக்கனமாக உபயோகிக்க படித்ததும் இங்கேதான்.


👉பள்ளிக்கூடத்தில் 

10 அல்லது 15 வருடங்களில் படிக்காத பல மொழிகளைப் படித்ததும் இங்கேதான்.


👉வாழ்க்கையில் இன்ப துன்பங்களை தாங்கி வாழ பழகி படிச்சதும் இங்கேதான். 


👉சொந்தமாக ஒரு சாயா கூட போட தெரியாதவன் வெளிநாட்டுக்கு வந்து ரெண்டு  மூணு மாதங்களுக்குள் பிரியாணியும் கப்சாவும் போட படித்ததும் இங்கேதான். 


👉உலகத்தில் எங்கேயும் படிக்க கிடைக்காத பொருளாதார சாஸ்திரத்தை படித்ததும் இங்கேதான். 


👉தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, வெள்ளைப்பூடு, மஞ்சப்பொடி, மிளகாய் பொடி, மல்லி பொடி ஆகியவை சூடாக்கிய எண்ணெயில் போட்டு வதக்கி மீன் போட்டால் மீன் குழம்பும், சிக்கன் போட்டால் சிக்கன் குழம்பும், மட்டன் போட்டால் மட்டன் குழம்பும், மோர் ஊற்றியால் மோர் குழம்பும் ஒன்றும் போடவில்லை  என்றால் அது தக்காளி குழம்பும் என்கிற வெளிநாட்டு வித்தையை வேற ஏதாவது யுனிவர்சிட்டிலோ அல்லது ஹோம் சயின்ஸ் பாடத்திலோ படித்திருக்க முடியுமா❓


 *வெளிநாட்டு வாழ்க்கை*,

 *அது ஒரு கதை. யாரும் சொல்லாத கதை*


 *சொல்ல மறந்த கதை*🦊.

 *வெளிநாட்டுக்காரர்களை வாழ்த்துகிறேன்.*


 *நானும் உங்களில் ஒருவன் என்று பெருமை கொள்கிறேன்.*


🤝🤷🏻‍♂️🤝🤷🏻‍♂️🤝🤷🏻‍♂️🤝🤷🏻‍♂️🤝🤷🏻‍♂️🤝🤷🏻‍♂️

செய்தித்துளிகள் 26.04.2024(வெள்ளிக்கிழமை)


*சிந்தனை துளிகள்*

நொடிக்கு நொடி மாறிக் கொண்டிருப்பது நேரமும் காலமும் மட்டுமல்ல பல மனிதர்களின் மனமும் குணமும் தான்.!

ஒருவர் நம்மை நம்பி ஒரு உண்மையை அல்லது  

தன் உணர்வுகளை சொல்கிறார் என்றால்...

அந்த இடத்தில் அவர் உங்களை தெய்வத்தை விட மேலாக மதிக்கிறார் என்று 

அர்த்தமாகும்.!!

அடுத்தவர் மீது பழிபோடுவது மிகவும் சுலபம் ஆனால் அதே பழியை  

நாம் சுமக்கும் போதுதான் அடுத்தவரின் வலி என்னவென்று நமக்குத் தெரியும்.!!!

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏



*செய்தி துளிகள்*


 மாணவர்களுக்கு  சீருடை தைக்க SMC மூலம் தலைமையாசிரியர்கள் உள்ளூரில் தையல்காரர்களை நியமனம் செய்தல் சார்ந்து உறுப்பினர் செயலரின் கடிதம் வெளியீடு.

🍒🍒அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியீடு.

🍒🍒JEE மெயின் தேர்வு முடிவு வெளியீடு: நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுத்து 56 மாணவர்கள் சாதனை

🍒🍒90 காலிப் பணியிடங்களுக்கான குரூப் 1 முதல்நிலை தேர்வு ஜூலை 13ம் தேதி நடக்கும் - TNPSC அறிவிப்பு

🍒🍒NILP   புதிய பாரத எழுத்தறிவு திட்டம் வருகிற கல்வி ஆண்டிற்கான (2024-25) கற்போர் மற்றும் தன்னார்வலர்களை கணக்கெடுக்க உத்தரவு இயக்குனர் செயல்முறைகள் வெளியீடு.

🍒🍒அரசு மேல்நிலைப் பள்ளிகளில் உயர் கல்வி வழிகாட்டி குழு அமைத்தல், மாநில / மாவட்ட அளவிலான பயிற்சி வழங்குதல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு.

🍒🍒பள்ளிக் குழந்தைகளுக்கு தண்டனை கொடுக்கக் கூடாது: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு 

🍒🍒அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் வீடுகட்ட முன்கடன் உள்ளிட்ட கடன்களை கழிக்காமல் வரி பிடித்தம்: ஆசிரியர் சங்கங்கள் கண்டனம்.

🍒🍒பள்ளிக்கல்வித்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.

தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய விதிகளை அமல்படுத்த வேண்டும்.

விதிகளை மீறி குழந்தைகளுக்கு தண்டனை வழங்கப்பட்டது தொடர்பாக புகார்கள் வந்தால், அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.*

🍒🍒குறுகிய கால எம்பிஏ படிப்புக்கு அனுமதியில்லை: மாணவர்களுக்கு யுஜிசி எச்சரிக்கை

🍒🍒திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெவ்வேறு நிலைகளில் பணியாற்றும் 3 பெண் ஊழியர்கள் Group 1 தேர்வில் வெற்றி பெற்று அசத்தல்

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெவ்வேறு நிலைகளில் பணியாற்றும் 3 பெண் ஊழியர்கள் Group 1 தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர்

நித்யா (26) உதவி ஆட்சியராகவும், இந்திரா பிரியதர்ஷினி (28) வணிக வரித்துறையில் உதவி ஆணையராகவும், சுபாஷினி (26) கூட்டுறவுத்துறையில் துணைப் பதிவாளராகவும் தேர்வாகியுள்ளனர்.

🍒🍒Middle School HM to BEO Panel 2024 - Temporary Panel Published - Appointed Before 31.12.2011 - Director Proceedings வெளியீடு.

👉நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு மூலம் வட்டார கல்வி அலுவலராக பதவி உயர்வு பெற தகுதி வாய்ந்தோர் பட்டியல் வெளியீடு.

🍒🍒உயர்நிலை மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு Summer Camp - SPD proceedings வெளியீடு.

🍒🍒MBA - போலியான அறிவிப்புகளை மாணவர்கள் நம்ப வேண்டாம் - UGC எச்சரிக்கை

🍒🍒NILP -  திட்டத்துக்கு கற்போர் , தன்னார்வலர்களைக் கண்டறிதல் - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு.                         🍒🍒விரைவில் Surplus கலந்தாய்வு - அறிவுரைகள் வழங்கி தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு

👉தொடக்கக் கல்வித் துறையில் விரைவில் பணிநிரவல் கலந்தாய்வு நடைபெற வாய்ப்பு.

தொடக்கக்கல்வி துறையில் 01.08.2023 நிலவரப்படி ஆசிரியருடன் உபரியாக உள்ள 2236   இடைநிலை ஆசிரியர்களுக்கு விரைவில் பணி நிரவல் கலந்தாய்வு      30.04.2024 க்குள் கூடுதல் மாணவர்களை சேர்த்துவிட்டால் பணிநிரவலில் இருந்து தவிர்க்கலாம்- தொடக்கக்கல்வி இயக்குனர்.

🍒🍒நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் இன்று 2ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது

🍒🍒அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெறவுள்ள டி20 கிரிக்கெட் உலகக்கோப்பைக்கான Brand Ambassador-ஆக தடகள வீரர் உசேன் போல்ட் நியமனம்.

🍒🍒தமிழகத்தில் 14 மாவட்டங்களில் வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கரூர், தி.மலை, தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், திருச்சி, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், கிருஷ்ணகிரி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் மஞ்சள் எச்சரிக்கை.

🍒🍒சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸில் இணைய மன்சூர் அலிகான் கடிதம்:

இந்திய ஜனநாயக புலிகள் கட்சி தலைவரும், பிரபல நடிகருமான மன்சூர் அலிகான் தன்னை காங்கிரஸ் கட்சியில் இணைத்துக்கொள்ள கடிதம். 

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையை சந்தித்து கடிதம் அளித்தார்.

🍒🍒முகூர்த்தம் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு ஏப்.26 ஆம்  முதல் ஏப்.28 ஆம் தேதி  வரை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்  - போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் தகவல் 

🍒🍒தமிழகத்தில் வரும் ஏப்ரல் 29ம் தேதி வரை 108 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.

அதிகபட்சமாக வேலூரில் 108.68°F, ஈரோட்டில் 107.6°F, திருப்பத்தூரில் 106.52 6°F, சேலத்தில் 105.98°F, கரூரில் 105.8°F வெப்பநிலை பதிவு.

🍒🍒பசும்பாலிலும் பறவைக் காய்ச்சல் ஏற்படுத்தும் வைரஸ் - உலக சுகாதார நிறுவனம் விடுத்த எச்சரிக்கை 

இந்நிலையில் கேரளாவை போல  தமிழ்நாட்டிலும் பறவைக் காய்ச்சல் நோய் பரவாமல் இருக்க அதிகாரிகள்  தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுவருகின்றனர் 

🍒🍒முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை! 

'அடுத்த 5 நாட்களுக்கு வடதமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் அதிக வெப்பமும் வெப்ப அலையும் ஏற்படக்கூடும்' என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

பொதுமக்கள் கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும். வெப்ப அலை காலத்தை விவேகமான செயற்பாடுகளால் வெல்வோம்.

🍒🍒இனி 1/2 லிட்டர் தண்ணீர் தான்:

குடிநீர் வீணாவதை தடுக்க வந்தே பாரத் ரயிலில் இனி பயணிகளுக்கு 1 லிட்டருக்கு மாற்றாக 500ml தண்ணீர் பாட்டில் வழங்கப்படும். 

தேவையேற்படின் கூடுதலாக 500ml தண்ணீர் பாட்டில் விலையின்றி வாங்கி கொள்ளலாம்

இந்தியன் ரயில்வே அறிவிப்பு.

🍒🍒உம்ரா செல்ல விசா கிடைக்காததால் ஆயிரக்கணக்கான பயணிகள் தவிப்பு

சவூதி மற்றும் இந்திய அரசு நடவடிக்கை எடுக்க உம்ரா பயணிகள் கோரிக்கை

🍒🍒உயர் கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசை  பட்டியலில் சேலம் அரசு கலைக் கல்லூரி இந்திய அளவில் 46வது இடம் தமிழக அளவில் நான்காம் இடம் பெற்றுள்ளது.

🍒🍒அதிக பயணிகளை கையாண்டதில் சென்னை விமான நிலையம் 3ஆவது இடம்!..

மும்பை, டெல்லி முதல் இரு இடங்களை பிடித்துள்ளன

🍒🍒தங்கம் சவரனுக்கு ரூ.160 குறைவு

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்துள்ளது

தங்கம் ஒரு கிராம் ரூ.6,710க்கும், ஒரு சவரன் ரூ.53,680க்கும் விற்பனையாகிறது

🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒

🌹🌹நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருக்கும் மாணவர்களுக்கு தேர்வு மையம் எங்கு அமையவிருக்கிறது என்பதற்கான சிட்டி இன்டிமேஷன் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

👉நாடு முழுவதும் எம்பிபிஎஸ், பிடிஎஸ், பிஎஸ்எம்எஸ், பிஏஎம்எஸ், பியுஎம்எஸ், ஹோமியோபதி உட்பட இளங்கலை மற்றும் முதுகலை மருத்துவ படிப்புகளுக்கும் தேசிய அளவில் நீட் தேர்வு (தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு) நடத்தப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் இந்த தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்துகிறது.

நீட் தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில், கலந்தாய்வின்போது மருத்துவக் கல்லூரிகள் ஒதுக்கப்படும். 

அந்த வகையில், இந்த ஆண்டுக்கான இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு மே 5-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்வு முடிவுகள் ஜூன் 14-ம் தேதி வெளியாக உள்ளது.  

இந்த தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு பிப்ரவரி மாதம் 9-ம் தேதி தொடங்கி, மார்ச் 16 ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது.

இந்த நிலையில், இந்த தேர்வுக்கு நாடு முழுவதும் 23 லட்சத்து 81,833 பேர் விண்ணப்பித்துள்ளதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.  இதில் 10,18,593 பேர் ஆண்கள், 13,63,216 பெண்கள்,  24 பேர் திருநங்கைகள். 

மேலும்,  தமிழ்நாட்டில் 1.55 லட்சம் பேர் விண்ணிப்பித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

மாநிலங்களின் வரிசையில் அதிகபட்சமாக உத்தரபிரதேசத்தில் 3,39,125 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

இந்நிலையில், நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருக்கும் மாணவர்களுக்கு தேர்வு மையம் எங்கு அமையவிருக்கிறது என்பதற்கான சிட்டி இன்டிமேஷன் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

அதிகாரப்பூர்வ  இணையதளத்தில், நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருக்கும் மாணவர்கள், நீட் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிட்டு, தங்களது தேர்வு மையம் எந்த நகரத்தில் அமையவிருக்கிறது என்பதை உறுதி செய்து நகல் எடுத்துக்கொள்ளலாம்.

விரைவில், நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டும் இணையதளத்தில் வெளியிடப்படவிருக்கிறது.அதனையும் மாணவர்கள் நகல் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒

🌹🌹ஜேஇஇ மெயின் தேர்வு முடிவு வெளியீடு:

 நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுத்து 56 மாணவர்கள் சாதனை.

ஜேஇஇ மெயின் தேர்வில் 56 மாணவர்கள் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்து உள்ளனர்.

ஐஐடி, என்ஐடி உள்ளிட்ட மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் சேர்வதற்காக தேசிய தேர்வு முகமை(என்டிஏ) ஜேஇஇ மெயின் தேர்வில் வெற்றி பெறுவது அவசியம்.

 2024 - 25 கல்வியாண்டில் சேர்வதற்காக இந்த தேர்வை கடந்த ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதங்களில் இரண்டு கட்டங்களாக நடத்தியது. 

13 மொழிகளில் நாடு முழுவதும் 319 நகரங்களில் நடத்தியது. வெளிநாட்டிலும் தேர்வு நடந்தது. 

முதல் கட்ட தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், இரண்டாம் கட்டமாக நடந்த தேர்வு முடிவினை என்டிஏ வெளியிட்டு உள்ளது.

இந்த தேர்வை எழுத 11,79,569 பேர் பதிவு செய்த நிலையில் 10,67,959 மாணவர்கள் தேர்வு எழுதினர்.

இந்த தேர்வில் 56 மாணவர்கள் நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுத்துள்ளனர்.

அவர்களில் 15 பேர் தெலுங்கானா, மஹாராஷ்டிரா மற்றும் ஆந்திராவை சேர்ந்த தலா 14 பேர் மற்றும் டில்லியைச் சேர்ந்த 6 பேர் அடங்குவர்.

டில்லியைச் சேர்ந்த ஷாய்னா சிங், மாதவ் பன்சால், தான்யா ஜா, இப்சிட் மிட்டல், பவேஷ் ராமகிருஷ்ணன் கார்த்திக் மற்றும் அர்ஷ் குப்தா ஆகியோர் நூறு மதிப்பெண்கள் பெற்று உள்ளனர்     

🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒

🌹🌹அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிப்பு

👉2024-25 ஆம் கல்வி ஆண்டில் அரசு பள்ளிகளில் இதுவரை 3,24,884 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வி துறை  தெரிவித்துள்ளது. 

👉இந்தியாவில் அதிக அரசு பள்ளிகள் உள்ள மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. மாநிலம் முழுதும் 38,000 அரசு பள்ளிகளும், 8,000 அரசு உதவி பெறும் பள்ளிகளும் உள்ளன.

👉இதில் அரசு உதவி பெறும் பள்ளிகள் தனி நிர்வாகத்தை கொண்டு இருந்தாலும், பள்ளியின் பாடத்திட்டம் தொடங்கி தேர்வுகள், விடுமுறை விதிகள் எல்லாம் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன.

👉இந்நிலையில் கோடை விடுமுறைக்கு முன்னரே  அரசு பள்ளிகளில் 2024-2025 ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை மார்ச் ஒன்றாம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. மாணவர் சேர்க்கை தொடங்கிய முதல் 5 நாட்களிலேயே எண்ணிக்கை 34 ஆயிரத்தை தாண்டியது.

👉இந்நிலையில் நேற்று வரை 3,24,884 மாணவர்கள் அரசுபள்ளியில் சேர்ந்துள்ளதாக பள்ளிக்கல்வி துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

👉அதிகபட்சமாக சேலம் மாவட்டத்தில் 21,793 மாணவர்கள் அரசு பள்ளிகளில் சேர்ந்துள்ளனர்.

👉குறைந்தபட்சமாக நீலகிரி மாவட்டத்தில்1,741 மாணவர்கள் அரசு பள்ளியில் சேர்ந்து உள்ளனர்.

👉தமிழ்நாட்டில் உள்ள அரசு, தொடக்க, நடுநிலை,உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்தும் வகையில் இல்லம் தேடி கல்வி, எண்ணும் எழுத்தும் மற்றும் நான் முதல்வன் திட்டங்களுடன் தற்காப்பு கலைப் பயிற்சி, கல்வி சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.