நன்றி.
Wednesday, March 27, 2024
தினம் ஒரு மூலிகை - தினம் ஒரு மூலிகை
நன்றி.
Tuesday, March 26, 2024
NRE மற்றும் NRO வங்கி கணக்குகளுக்கு இடையே உள்ள வேறுபாடு என்ன?
நாமெல்லாம் சேவிங்ஸ், ஓவர் டிராஃப்ட், ஃபிக்ஸட் டெபாசிட் என வைத்துக் கொள்வதுபோல, புலம் பெயர்ந்த இந்தியர்கள் (NRI) அங்கிருந்தபடியே இயக்க வழி செய்யும் இரண்டு கணக்குகள்:-
1. NRE,
2. NRO.
இப்படி அந்த அமெரிக்க NRI, இந்தியாவில் வைத்திருக்கும் முதலீடுகள், வீடு, தோட்டம், தொழில்கள், சொத்துகள் வழியே ஈட்டும் வருவாயை டெபாசிட் செய்ய வழிவகுப்பது NRO.
அவர் அமெரிக்காவில் ஈட்டிய பணத்தை மட்டும் சேமிக்கவும், இந்தியாவில் முதலீடு செய்யவும் வைத்திருப்பது NRE.
நன்றி: கூகிள்.
வங்கி பணப்பரிமாற்றத்தில் NEFT, RTGS , IMPS
பணத்தின் நேர மதிப்பு" (Time value of money)
ஆம், நாள் ஆக ஆக பணத்தின் மதிப்பு கண்ணுக்குத் தெரியாமல் குறைந்து கொண்டே போகிறது. இதை "பணத்தின் நேர மதிப்பு" (Time value of money) என்பர். இதற்குக் காரணம்: விலைவாசி / பணவீக்க ஏற்றத்தால் வாங்கும் திறன் குறைகிறது.
விலைவாசி என்றால் ஒரு பொருளின் விலையேற்றத்தை வைத்து விலைவாசி எனக் கூறலாகாது. சராசரி நபர் பயன்படுத்தும் பொருட்களின் (அதாவது, a basket of products = பொருட்களின் கூடை) ஒட்டுமொத்த விலை பொதுவாக ஏறிக்கொண்டே போகிறது. ஆனால் ஏறும் வீதம் நாளுக்கு நாள் வேறுபடலாம். பொருளாதார வல்லுநர்கள் இதைக் கண்காணித்துக் கொண்டு வருவார்கள். "நுகர்வோர் விலைக் குறியீட்டு எண்" மற்றும் "மொத்த விலைக் குறியீட்டு எண்" போன்ற விலைக் குறியீடுகளைக் கண்காணிப்பர்.
விலைவாசி ஏற ஏற, பணத்தைக் கொண்டு வாங்கும் திறன் (Purchasing power) குறைந்து கொண்டே போகிறது. வெறும் பணமாக கையிலிருந்தால், அதன் மதிப்பு விலைவாசி ஏற்றத்தால் குறைந்து விடும். வாங்கும் திறனை எவ்வாறு மேம்படுத்துவது? ஒன்று, உற்பத்தியாகும் பொருட்களின் - சரியாகச் சொன்னால், பொருட்கூடையின் - விலையைக் குறைக்க வேண்டும். பெரும்பாலும் இது நடக்காது. ஏனென்றால் உற்பத்தியாளர்களுக்கு உற்பத்தி செலவும் (எ.கா. மூலப் பொருட்கள் விலை உயர்வு, தொழிலாளர் கூலி உயர்வு) அதிகரிப்பதால் விற்பனை விலையை குறைக்க முடியாமல் போகலாம்.
உங்களிடமுள்ள பணத்தை நல்வழியில் முதலீடு செய்து பணத்தை "வளர்க்க" வேண்டும். அப்படிப்பட்ட பண வளர்ச்சியின் வீதம் விலையேற்ற வளர்ச்சி வீதத்தை வீட அதிகமாக இருக்க வேண்டும். அப்போது தான் அதலிருந்து வரும் வருமானம் விலைவாசியை முறியடிக்கும்.
மிகவும் எளிதாக்கப்பட்ட ஒரு உதாரணம்:
பொருட்கூடையில் உள்ள பொருட்கள்: 100 வெவ்வேறு பொருட்கள் என்றும் ஒவ்வொன்றும் ஒரே விலையாக (₹1000) கடந்த ஆண்டு இருந்தது எனவும் கற்பனை செய்து கொள்வோம்.
₹1,00,000 தொகையில் கடந்த ஆண்டு வாங்கக்கூடிய பொருட்கள் = 100 (அதாவது, கடந்த ஆண்டில் வாங்கும் திறன்)
இந்த ஆண்டு பொருட்களின் விலை 4% உயர்ந்து விட்டது. அதாவது, ஒவ்வொன்றின் விலை ₹1040.
₹1,00,000 தொகையில் இந்த ஆண்டு வாங்கக்கூடிய பொருட்கள் = 96 (= 100000/1040) அதாவது, வாங்கும் திறன் நூறிலிருந்து 96 ஆக குறைந்து விட்டது. அதனால் தான், பெயரளவில் ₹1,00,000 கையிலிருந்தால் கூட அதன் உண்மையான மதிப்பு ₹96,000 ஆகும்!)
(அ) பணத்தின் வளர்ச்சி = 0
(ஆ) (விலைவாசி ஏற்றத்தால் ஏற்படும்) பணவீக்க வளர்ச்சி = 4%
(இ) வாங்கும் திறனில் மாற்றம் = (அ) - (ஆ) = (-)4%
இதையே இன்னொரு வகையில் கூறலாம்:
(i) பணமாக வைத்திருப்பதால் வரும் பெயரளவு வருமான (Nominal rate of return %) வளர்ச்சி = 0
(ii) (விலைவாசி ஏற்றத்தால் ஏற்படும்) பணவீக்க வளர்ச்சி = 4%
(iii) பணமாக வைத்திருப்பதால் வரும் உண்மையான வருமான (Real rate of return %) வளர்ச்சி = (i) - (ii) = -4% (அதாவது, 4% வீழ்ச்சி அடைந்திருக்கிறது.
பணமாக வைத்திருக்காமல் மூதலீடு செய்தால் கூட முதலீட்டின் வளர்ச்சி விலைவாசி / பணவீக்க வளர்ச்சியை (4%) மிஞ்ச வேண்டும். முதலீடு 3% உயர்ந்தால் கூட உண்மையில் 1% வீழ்ச்சி தான். 3% - 4% = -1
பண வீக்கம் என்பது என்ன? அதை எளிமையாக விளக்க இயலுமா?
பண வீக்கம் ஏற்படுவதற்கு பொதுவான காரணங்கள் எவை?
அதிக நாணயங்களை அச்சிடுவது எவ்வாறு உயர் பணவீக்கத்திற்கு வழிவகுக்கிறது?
கள்ள நோட்டு அச்சிடுவதால் பணவீக்கம் ஏற்படுவது எப்படி?
தினம் ஒரு சிந்தனை - 26.03.2024
அழகான நாள்கள் உங்களைத் தேடி வருவதில்லை.
நீங்கள்தான் அவற்றை நோக்கி நகரவேண்டும்.
செய்தி ஒரு பார்வை :-
உச்ச நீதிமன்றம் ஆளுநருக்கோ, ஜனாதிபதிக்கோ உத்தரவிட முடியுமா?.
உயர் நீதிமன்றம் அளித்த ஒரு தீர்ப்பை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைப்பது, அல்லது தீர்ப்பை ரத்து செய்வது இரண்டும் ஒன்று தானா?. இரண்டு கேள்விக்கும் ஒரே விடை சரிதானா?.
குற்றவாளி என்று தீர்ப்பிடப்பட்டு தண்டனை விதிக்கப்பட்ட ஒருவர் வயதையோ, நோயையோ காரணம் காட்டி தண்டனையை நிறுத்தி வைக்க கோரியதன் பேரில் உச்சநீதிமன்றம் தண்டனையை நிறுத்தி வைத்தால் அந்த நபர் குற்றவாளி இல்லை என்று பொருளா?...
உச்ச நீதிமன்றம் ஊழல் வழக்குகளில் முன்பு வழங்கிய தீர்ப்புக்களையும், பதிவு செய்த வார்த்தைகளையும் அனைத்து ஊழல் வழக்குகளிலும் பின்பற்றாமல் வெவ்வேறு விதமான வார்த்தை பிரயோகங்களை செய்து ஊழல் வழக்குகளுக்கு பல கோணங்களை உருவாக்குவது ஊழல்வாதிகளுக்கு எப்படியாவது தப்பி விடலாம் என்று எண்ணத்தை தான் உருவாக்கும்.
காலை மாலை எனப்பெயர் வந்த காரணம் தெரியுமா?
ஒரு முறை நாரதர் சூரியதேவரிடம் நீ
உதயமாகும் போதும்,
மறையும்போதும் பார்ப்பது என்ன?என்ற கேள்வியை கேட்டார்.
_அதற்கு சூரிய தேவர்_
_தான் உதயமாகும் போது பாற்கடலில் பள்ளி_ _கொண்டிருக்கும்_
_சர்வ வியாபியான விஷ்ணுவின்_ _தாமரைத் திருவடிகளைச்_ _சரணடைந்து தன் அன்றாட_ _பணியைத் தொடங்குவதாகவும்,_
_தான் மறையும் மாலைப் பொழுதில்_ _திருமாலை அடி_
_முதல் முடி வரை_ _முழுமையாகத் தரிசிப்பதுடன்_ _திருமால்_
_கழுத்தில்_ _அணிந்திருக்கும் மாலையையும் தரிசிப்பதாகவும் கூறினார்._
_சூரியன் உதிக்கும் காலைப் பொழுதில்_ _திருமாலின்_
_திருவடிகளை (கால்கள்) தரிசிப்பதால் அந்த நேரத்தை _*காலை வேளை*_ _எனவும்_
_சூரியன் மறையும் மாலைப் பொழுதில் திருமாலின் கழுத்தில் அணிந்துள்ள மாலையை தரசிப்பதால் அந்த நேரத்தை _*மாலை* *வேளை*_ _என்றும் பெயர் வரக்காரணமாயிற்று._
நடைப் பயிற்சியின் முக்கியம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
முதுமை பாதத்திலிருந்து மேல் நோக்கித் தொடங்குகிறது!
உங்கள் கால்களை செயல்பாட்டிலும் & வலுவாக வைத்திருங்கள் !!
Keep your Legs Active and Strong !!!
தினசரி வயதாகிக்கொண்டே இருக்கும்போது, நம் கால்கள் எப்போதும் சுறுசுறுப்பாகவும் வலுவாகவும் இருக்க வேண்டும். நாம் தொடர்ந்து வயதாகும்போது, நம் தலைமுடி நரைத்து (அல்லது) சருமம் தளர்ந்து (அல்லது) முகத்தில் சுருக்கங்கள் வருவதற்கு நாம் பயப்படக்கூடாது.
நீண்ட ஆயுளின் அறிகுறிகளில், பிரபலமான அமெரிக்க பத்திரிகை "வருமுன் தடுப்பு" (prevention) மூலம் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு, வலுவான கால் தசைகள் அனைத்திற்கும் மேலே மிக முக்கியமான மற்றும் இன்றியமையாத ஒன்றாக பட்டியலிடப்பட்டுள்ளன. தயவுசெய்து தினமும் *நடந்து செல்லுங்கள்*.
உங்கள் கால்களை இரண்டு வாரங்களுக்கு அசைக்கவில்லை என்றால், உங்கள் உண்மையான கால் வலிமை 10 வருடங்கள் குறையும்.
*நடந்து செல்லுங்கள்*.
டென்மார்க்கில் உள்ள கோபன்ஹேகன் பல்கலைக்கழகத்தின் ஒரு ஆய்வு, முதியவர்கள் மற்றும் இளைஞர்கள், இரண்டு வாரங்கள் செயலற்ற நிலையில் இருந்தால் கால் தசை வலிமை மூன்றில் ஒரு பங்கு பலவீனமடையலாம் என்கிறது. இது 20-30 வருடங்கள் முதுமையடைவதற்கு சமம் !!
எனவே, *நடந்து செல்லுங்கள்*.
கால் தசைகள் பலவீனமடைவதால், நாம் மறுவாழ்வு மற்றும் உடற்பயிற்சிகள் செய்தாலும், மீட்க நீண்டகாலம் பிடிக்கும். நடங்கள். அதனால், நடைபயிற்சி போன்ற வழக்கமான உடற்பயிற்சி மிகவும் முக்கியமானது.
நமது முழு உடல் எடை/ சுமையை கால்களே தாங்குகிறது.
கால்கள் ஒரு வகையான தூண்கள், மனித உடலின் முழு எடையையும் தாங்கும்.
*தினமும் நடைபயிற்சி.*
சுவாரஸ்யமாக, ஒரு நபரின் எலும்புகளில் 50% & தசைகளில் 50%, இரண்டு கால்களிலும் உள்ளன.
*நடந்து செல்லுங்கள்*
மனித உடலின் மிகப்பெரிய மற்றும் வலுவான மூட்டுகள் மற்றும் எலும்புகளும் கால்களில் உள்ளன.
10,000 அடிகள் / நாள்
வலுவான எலும்புகள், வலுவான தசைகள் மற்றும் நெகிழ்வான மூட்டுகள் உடலின்
இரும்பு முக்கோணத்தை உருவாக்கி
மனித உடலைச் சுமக்கிறது.
ஒருவரின் வாழ்க்கையில் 70% மனித செயல்பாடு மற்றும் ஆற்றல் எரித்தல்(burning the calories) இரண்டு கால்களால் செய்யப்படுகிறது. இது உங்களுக்கு தெரியுமா?
ஒரு நபர் இளமையாக இருக்கும்போது, அவருடைய/ *தொடைகள் 800 கிலோ எடையுள்ள ஒரு சிறிய காரைத் தூக்கும் வலிமை கொண்டவை.
*கால் உடல் நடமாட்டத்தின்(locomotion) மையம் *.
இரண்டு கால்களும் சேர்ந்து மனித உடலின் 50% நரம்புகளையும், 50% இரத்தக் குழாய்களையும், 50% இரத்தத்தையும் அவற்றின் வழியே பாய்கிறது. இது உடலை இணைக்கும் மிகப்பெரிய சுழற்சி நெட்வொர்க். *எனவே தினமும் நடந்து செல்லுங்கள்.
கால்கள் மட்டும் ஆரோக்கியமாக இருக்கும்போது, இரத்த ஓட்டத்தின் வளமையான மின்னோட்டம் சீராக செல்லும். எனவே வலுவான கால் தசைகள் உள்ளவர்கள் கண்டிப்பாக வலுவான இதயத்தைக் கொண்டிருப்பார்கள்.
ஒருவரது வயது, பாதத்தில் இருந்து மேல் நோக்கித் தொடங்குகிறது. ஒரு நபர் இளமையில் இருப்பது போலல்லாமல் வயதாகும்போது, மூளை மற்றும் கால்களுக்கு இடையே நடைபெறும் ஆணைகள் பரிமாற்றத்தின் துல்லியம் மற்றும் வேகம் குறைகிறது.
*தயவுசெய்து நடந்து செல்லுங்கள்*
கூடுதலாக, எலும்பின் உரமான கால்சியம் என்று அழைக்கப்படுவது விரைவில் அல்லது பின்னர் காலப்போக்கில் இழக்கப்படும், இதனால் வயதானவர்கள் எலும்பு முறிவுகளுக்கு ஆளாகிறார்கள்.
*நடங்கள்.*
வயதானவர்களில் எலும்பு முறிவுகள் தொடர்ச்சியான சிக்கல்களைத் தூண்டும், குறிப்பாக மூளை த்ரோம்போசிஸ் போன்ற ஆபத்தான நோய்கள்.
பொதுவாக வயதான நோயாளிகளில் 15%, தொடை எலும்பு முறிவு ஏற்பட்ட ஒரு வருடத்திற்குள் இறந்துவிடுவார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?
*தவறாமல் தினமும் நடந்து செல்லுங்கள்*
▪️ *கால்களுக்கு உடற்பயிற்சி செய்வது, 60 வயதிற்கு பிறகும் கூட தாமதமல்ல. * நம் கால்கள் படிப்படியாக வயதாகிவிட்டாலும், நம் கால்களுக்கு உடற்பயிற்சி செய்வது வாழ்நாள் முழுவதும் வேலை.
*10,000 அடிகள் நடக்க*
எப்பொழுதும் கால்களை அடிக்கடி வலுப்படுத்துவதன் மூலம், ஒருவர் மேலும் வயதானதை தடுக்கலாம் அல்லது குறைக்கலாம்.
*365 நாட்கள் நடைபயிற்சி*
உங்கள் கால்களுக்கு போதுமான உடற்பயிற்சி கிடைப்பதற்கும், உங்கள் கால் தசைகள் ஆரோக்கியமாக இருப்பதை உறுதி செய்வதற்கும்
*தயவுசெய்து தினமும் குறைந்தது 30-40 நிமிடங்கள் நடக்க வேண்டும்.*
வெயில் ஓவரா இருக்கு.பறவைகளுக்கு தண்ணீர் வைப்போம்
வெயில் ஓவரா இருக்கு.
முடிந்த வரை பிளாஸ்டிக்கை தவிர்ப்போம்,,, பிளாஸ்டிக் டப்பா, மற்ற பிளாஸ்டிக் பொருட்களில் தண்ணீர் வைப்பதை தவிர்ப்போம்,,,
சிறிய மண் பானை,, சிறிய மண் பாத்திரம்,, மற்ற சிறிய வெங்கலம், ஸ்டீல் பாத்திரத்தில் தண்ணிர் வைப்போம் ,, கூட கொஞ்சம் உணவு வைப்போம் ,,
வயதானால் என்ன?வாழவே முடியாதா?
வயதாகிப் போனதால் வேலையில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் பலரும் கேட்கும் கேள்வி, நாங்கள் என்ன வாழத் தகுதி அற்றவர்களா? என்று தான்.
ஏன் அவர்களுக்கு இந்தக் கேள்வி எழுகிறது என்று சிந்தித்தால்,
அவர்களை வீட்டிலே உள்ளவர்களே முதலில் மதிப்பதில்லை.
அவர்களை "தேவையற்ற சுமை" என்று தான் நினைக்கிறார்கள்.
வயதானவர்களே
வாய்ப்புக்களுக்காகக் காத்திருக்காமல், நீங்களே வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ளுங்கள்.
சேவை செய்ய நீங்கள் விரும்பினால் அதற்குரிய நிறுவனங்களுக்குச் சென்று
தொண்டாற்றுங்கள், அல்லது
அருகிலுள்ள திருக்கோவிலுக்குச் சென்று தொண்டாற்றுங்கள். மாற்றுத் திறனாளிகளுக்கு உற்ற துணையாக நின்று உதவுங்கள்.
இலவசமாக குழந்தைகளுக்கு பாடங்களைச்
சொல்லிக் கொடுங்கள்.
உங்களை முழுமையாக மற்ற சேவைகளில் ஈடுபடுத்திக் கொள்ளுங்கள்.
சற்று யோசித்துப் பாருங்கள். உங்களைச் சுற்றிச் சேவை செய்ய எத்தனையோ வாய்ப்புகள் உள்ளதை உணர முடியும்.
மகிழ்வோடு வாழுங்கள்.
🟩🟩🟩🟩🟢🟩🟩🟩🟩
தயக்கம் தவிர்!
பிறர் என்ன நினைப்பார்களோ
என்ற பயத்தில்
மனதில் உள்ள எண்ணங்களை
வெளிப்படுத்தப் பலருக்குத் தயக்கம்..
மனைவியுடன்
நிறைய பேச ஆசை
ஆனால் ஒரு தயக்கம்..
பிள்ளைகளிடம்
பேச நிறைய விஷயம்
ஆனாலும் இயலாது..
எனக்குத் தெரிந்தவரை
காதலர்கள்
காதல் மயக்கத்தில் பேசுவார்கள்..
ஆனால்
இருவரும் ஒருவருக்கொருவர்
உண்மையைப் பேசத் தயங்குவார்கள்..
சக பணியாளர்களிடம்
அதுவும் உயரதிகாரிகளிடம்
மரியாதை கருதி
பேசத் தயங்குவது பலரது பலவீனம்..
நண்பர்களிடம்
மனம் விட்டுப்
பேசுவதற்குக் கூட
தயங்கும் மனிதர்கள் உண்டு..
பேச வேண்டிய இடத்தில்
பேசாதவற்றை
முன்பின் தெரியாத
பொது வெளி மனிதர்களிடம்
பேசிக்கொண்டிருப்பார்கள்..
தங்களது உணர்ச்சிகளை
ஊறுகாயாக ஊறப்போடுவார்கள்..
தயங்காமல்
மனம் விட்டுப்பேசுங்கள்..
உணர்ச்சிகளை
வெளிக்காட்டாமல்
மூடி மறைத்தால் மன இறுக்கம்..
நாளடைவில் அதுவே மன அழுத்தம்..
தயக்கம் தவிர்!
🌹🌹
தன்னை அறிதல்
*தனக்குத்தானே தேர்ந்தெடுத்துக்கொண்ட வாழ்க்கையை.*_
_*எந்தப் புகாருமில்லாமல்*_
_*அதன் போக்கில்*_
_*அனுபவித்து வாழ்வதே*_ _*ஞானம்.*_
_பிரச்சனை தனித்தனியான மனிதரிடம் தான் இருக்கிறது._
_ஒவ்வொரு தனி மனிதனும் தன்னைச் சரிசெய்து கொள்ள வேண்டும் என்பதுதான் ஆன்மீகம் என்று அழைக்கப்படுகிறது._
_ஆன்மீகம் என்பது தன்னில் மூழ்குதல்._
_*நான் யார் என்பதனுடைய வேறு ஒரு வடிவம்தான் எது நான்.*_
_*இந்த விஷயம் இன்னும் செத்துப் போகவில்லை.*_
_*எங்கோ சிறிய புல்தண்டாய்,*_ _*எங்கோ ஒரு சிறிய இளம் செடியாய் வெவ்வேறு இடங்களில் கிளை விட்டுக் கொண்டுதான் இருக்கிறது.*_
_இது பெரும் மரமாகவோ, பெரும் காடாகவோ வளரவேயில்லை என்பதுதான் மிகப் பெரிய வேதனை. ஏன் வளரவில்லை என்பதுதான் கேள்வி._
_*இதற்கு அசாத்தியமான ஒரு உண்மை தேவைப்படுகிறது.*_
_*குழுவாக இருக்கிறபோது இந்த உண்மை மறைக்கப்பட்டுவிடும்.*_
_*காது கேட்காமல் அடைக்கப்பட்டுவிடும்.*_
_உண்மை_
_அறிந்து_ _கொள்ளப்படாததற்கு காரணம் மனிதருள் நேர்மை இல்லை._
_ஒவ்வொரு தனி மனிதருள்ளும்_
_நேர்மை இல்லை._
_*நேர்மையாக இருப்பது கடினமாக இருக்கிறது. உண்மையாக இருப்பது பெரும் சுமையாக இருக்கிறது. அமைதியாக இருப்பது என்பது பிடிக்காத விஷயமாக இருக்கிறது.*_
_எனவே, எந்த குழுவிலும் சேராமல், எந்த ஜாதி பெயரையும் சேர்த்துக் கொள்ளாமல் வெறுமே, வெறுமே உள்ளே பார்த்துக் கிட. நல்ல குரு உள்ளே தள்ளிவிட்டு விடுவார்._
_*யார் நல்ல குரு. தவித்து தவித்து தண்ணீராய் உருகு. எனக்கு நல்ல குரு வேண்டுமே என்று அலறு. அழு. உன் அலறலும், அழுகையும் நல்ல குருவை உனக்கு கொண்டுவந்து சேர்க்கும்.*_
_மற்றபடிக்கு கள்ளத்தனம் செய்பவரை கண்டு வெட்கி நகர்ந்துவிடுவாய். இப்படி இருக்கக்கூடாது என்பதைப் புரிந்து கொள்ளலாம்._
_*எனவே, உங்களை அவதானிப்பதற்குண்டான விஷயங்களைத் தெளிவாக தேர்ந்தெடுத்து அவைகளை தனியாக கடைப்பிடிக்கும் போது தெளிவு அதிகமாகிறது.*_
_குழுவாக கை சேர்க்கும் போது_
_அவர் இழுத்த பக்கம் நீயும்,_
_நீ இழுத்த பக்கம் அவரும்_
_ஆட வேண்டியிருக்கிறது._
_*தனியாகத் தானே பிறந்தாய்.*_
_*தனியாகத் தானே சாகப்போகிறாய்.*_ _*எனவே தனியாகவே போராடு.*_
_*எவரும் இல்லை என்பதைப் புரிந்துகொள்.*_
_*அது மிகப் பெரிய ஒரு உண்மை.*_
_மனைவி, குழந்தை, தாய், தந்தை, சகோதரன், நண்பன் எல்லோரும் தற்காலிகமானவரே. நீயே நிரந்தரம். உன்னுடைய சத்தியமே நிரந்தரம். உன்னுடைய ஆத்ம இருப்பே நிரந்தரம்._
_*அது பல ஜென்மங்கள் தாண்டி வந்ததப்பா. இன்னும் பல ஜென்மங்கள் தாண்டப்போகிறது. ஏதோ ஒரு இடத்தில் அது கரைந்து காணாமல் போகும். இதையெல்லாம் எழுத்தாக்கிக் கொண்டிருக்க முடியாது.*_
_அந்த ஆள் நடிகரானதற்கும், அந்த ஆள் ஆஃபிஸரானதற்கும், இவர் ஓவியர் ஆனதற்கும், இந்த ஆள் கூலித் தொழிலாளியாய் வாழ்வதற்கும் என்ன காரணம் இருக்க முடியும். எந்தக் காற்றோ தூக்கியது. எந்தக் காற்றோ அழுத்தியது. எந்தக் காற்றோ, எப்போது எப்படி எதனால்._
_*தன்னை அறிவது மட்டுமே நோக்கமாக, எது உன் மனம், மனம் எங்கிருக்கிறது என்று தேடுகின்ற வாழ்க்கையே நோக்கமாக இருப்பதுதான் உன்னை நல்ல கதிக்கு சேர்க்கும்.*_
_இதை தெரிந்து கொண்டால் போதும். இதை புரிந்து கொண்டால் போதும். இதற்குப் பிறகு கற்க வேண்டியது எதுவுமே இல்லை என்று அறிந்து கொண்டால் போதும். இது படித்தால் போதும். இது போதும்._
_*எல்லாமும் இது தானே கொண்டுவந்து கொடுக்கும். எது கொடுத்தாலும் அதை எந்தவித ஆவலும் இன்றி அனுபவிக்கத் தோன்றும்.*_
_எங்கே எங்கே அலையாது_ _வந்தவை வரவில் வைக்கப்படும்._ _வராதவை பற்றி ஞாபகமே இருக்காது._
_அடாடா அடாடா என்ன அமைதி இது. என்ன சந்தோஷம் இது._
_என்ன நிறைவு இது._
_*இது போதும்*_ _*என்று*_ _*இருப்பதற்கு*_
_*என்ன*_ _*வேண்டியிருக்கிறது.*_
_*யார் தருவார்கள். உள்ளே கேட்கத் துவங்குங்கள். உள்ளே பார்க்கத் துவங்குங்கள்.*_
_ஒரு பாறையின் மீது நின்று உரக்க வெட்டவெளி_ _பார்த்து கத்துவது போல_ _விஷயத்தைச்_
_சொல்லி முடித்து விட்டேன்._
_*எந்த கடினமான*_
_*சூழ்நிலையிலும*_ _*தகுதியும் திறமையும்*_
_*கொண்டவர்கள் தப்பி*_
_*பிழைப்பார்கள்.*_
_இந்த உலகத்தில் சாதிக்க வேண்டும் என்றால் மிகையான போராடும் குணம் இருக்க வேண்டும்._
_*வாழ்க்கையில் ஏற்படும் சிரமங்களையும் தோல்விகளையும் எதிர்கொள்ளத் தயாராக இருந்தால் எவராலும் எதுவும் கற்க முடியும்.*_
_வாழ்க்கையில் உழைத்து_ _சோர்வடைவதற்கு முன்பே_
_ஓய்வு எடுப்பதற்கு பெயர் தான் சோம்பேறி தனம்.*_
_*வெற்றிக்கான நிரந்தர வழி தோல்வி அடைந்த பிறகும், இன்னும் ஒரு முறை முயற்சி செய்வதே.*_
_தோல்வியில் இருந்து எதையும் கற்றுக்கொள்ளவில்லை என்றால் அதுதான் உண்மையான தோல்வி._
_*உங்களை*_ _*வெல்லும் தகுதி*_
_*தோல்விக்கே*_ _*இருக்கும் போது.*_ _*தோல்வியை வெல்லும் தகுதி*_ _*உங்களுக்கு*_
_*இல்லாமலா போய்விடும்.*_
_காலத்தின் மீது பழி போடாமல்_
_உங்கள்_ _முயற்சியைக் கை விடாமல் தொடருங்கள்._
_*விளக்கால்*_
_*வெளிச்சத்தைத்தான் காட்ட முடியும்.*_ _*பாதையில் நாம்தான் பார்த்துப் போகவேண்டும்.*_
ஆகாய தாமரை - தினம் ஒரு மூலிகை
Bioclock என்றால் என்ன?
நாம் வெளியூர் செல்ல வேண்டும் என்றால் அதிகாலை 4.00 மணிக்கு அலாரம் செட் பண்ணிவிட்டு தூங்கி விடுவோம். ஆனால் அலாரம் அடிப்பதற்கு முன் எழுந்து விடுவோம். இது தான் Bioclock.
நமக்கு தெரிந்த வட்டத்தில் எல்லோரும்
60 - 70 வயதில் இறந்து விடுகிறார்கள். எனவே நாமும் 60-70 வயதில் இறந்து விடுவோம்.
50 வயதில் எல்லா நோய்களும் வந்து விடும் என்று நம்பி நமது Bioclock இல் செட் செய்துவிடுகிறோம்.
அதனால்தானோ என்னவோ 50 வயதில் நோய் வருகிறது.
70 வயதில் செத்து விடுகிறோம். நமக்கு தெரியாமலே நமது Bioclock ஐ தவறாக செட் செய்து விடுறோம்.
ஜப்பானில் பெரும்பாலோனார் 100 வயது வாழ்கிறார்கள். அவர்களது Bioclock அப்படி செட் செய்யப் பட்டுள்ளது.
எனவே நண்பர்களே,
1. நாம் குறைந்தது 100 வயது வரை வாழ்வோம் என்று Bioclock ஐ மாற்றி அமைப்போம்.
2. நமக்கு இந்த சின்ன வயதில் (40 இலிருந்து 60 வயதுக்குள்) எந்த நோயும் வர வாய்ப்பே இல்லை என நம்புவோம்.
3. டை அடியுங்கள் (முடி இருந்தால் 😂). இளமையாக தோற்றம் அளியுங்கள் . வயதான தோற்றத்தை அனுமதிக்காதீர்கள்.
4. சுறுசுறுப்பாக இருங்கள். வாக்கிங் போங்கள்.
5. வயதாக வயதாக ஆரோக்கியம் கூடும் என்று நம்புங்கள். (அது தான் உண்மை).
6. எல்லாத்துக்கும் இந்த மனசு தான் காரணம். Never, ever allow the bioclock set your ending.
எண்ணங்களே வாழ்க்கை.
உங்கள் தொகுதியில் யார் யார் வேட்பாளர்கள்.?
*கன்னியாகுமரி*
காங்கிரஸ்-விஜய் வசந்த்
பாஜக-பொன் ராதாகிருஷ்ணன்
அதிமுக-பசிலியான் நசரேத்
நாம் தமிழர்-மரிய ஜெனிபர்
*திருநெல்வேலி*
காங்கிரஸ்-ராபர்ட் ப்ரூஸ்
பாஜக-நயினார் நாகேந்திரன்
அதிமுக-ஜான்சி ராணி
நாம் தமிழர்-பா.சத்யா
*தென்காசி*
திமுக-ராணி ஸ்ரீகுமார்
தமமுக-ஜான் பாண்டியன்
புதிய தமிழகம்-கிருஷ்ணசாமி
நாம் தமிழர்-இசை மதிவாணன்
*தூத்துக்குடி*
திமுக-கனிமொழி
தமாகா-SDR.விஜயசீலன்
அதிமுக-சிவசாமி வேலுமணி
நாம் தமிழர்-ரொவினா ருத்ஜேன்
*இராமநாதபுரம்*
ஐயுஎம்எல்-நவாஸ்கனி
ஓபிஎஸ் அணி-ஓ.பன்னீர்செல்வம்
அதிமுக-ஜெயபெருமாள்
நாம் தமிழர்-சந்திரபிரபா ஜெயபால்
*விருதுநகர்*
காங்கிரஸ்-மாணிக்கம் தாக்கூர்
பாஜக-ராதிகா சரத்குமார்
தேமுதிக-விஜய பிரபாகர்
நாம் தமிழர்-கெளசிக்
*தேனி*
திமுக-தங்க தமிழ்செல்வன்
அமமுக-TTV.தினகரன்
அதிமுக-நாராயணசாமி
நாம் தமிழர்-மதன் ஜெயபால்
*மதுரை*
மா.கம்யூனிஸ்ட்-வெங்கடேசன்
பாஜக-ராம சீனிவாசன்
அதிமுக-சரவணன்
நாம் தமிழர்-சத்யா தேவி
*சிவகங்கை*
காங்கிரஸ்-கார்த்தி சிதம்பரம்
இ.ம.க.மு.க-தேவநாதன் யாதவ்
அதிமுக-சேவியர் தாஸ்
நாம் தமிழர்-எழிலரசி
*தஞ்சாவூர்*
திமுக-முரசொலி
பாஜக-முருகானந்தம்
தேமுதிக-சிவநேசன்
நாம் தமிழர்-ஹூமாயின் கபீர்
*நாகப்பட்டினம்*
இ.கம்யூனிஸ்ட்-செல்வராஜ்
பாஜக-ரமேஷ்
அதிமுக-சுர்ஜித் சங்கர்
நாம் தமிழர்-கார்த்திகா
*மயிலாடுதுறை*
காங்கிரஸ்-அறிவிக்கப்படவில்லை
பாமக-ஸ்டாலின்
அதிமுக-பாபு
நாம் தமிழர்-காளியம்மாள்
*சிதம்பரம்*
வி.சிறுத்தைகள்-தொல் திருமாவளவன்
பாஜக-கார்த்தியாயினி
அதிமுக-சந்திரஹாசன்
நாம் தமிழர்-ஜான்சிராணி
*கடலூர்*
காங்கிரஸ்-விஷ்னு பிரசாத்
பாமக-தங்கர் பச்சான்
தேமுதிக-சிவக்கொழுந்து
நாம் தமிழர்-மணி வாசகன்
*பெரம்பலூர்*
திமுக-அருண் நேரு
ஐ.ஜே.கே-பாரிவேந்தர்
அதிமுக-சந்திரமோகன்
நாம் தமிழர்-தேன்மொழி
*திருச்சிராப்பள்ளி*
மதிமுக-துரை வைகோ
அமமுக-செந்தில்நாதன்
அதிமுக-கருப்பையா
நாம் தமிழர்-ஜல்லிக்கட்டு ராஜேஷ்
*கரூர்*
காங்கிரஸ்-ஜோதிமணி
பாஜக-செந்தில்நாதன்
அதிமுக-தங்கவேல்
நாம் தமிழர்-கருப்பையா
*திண்டுக்கல்*
மா.கம்யூனிஸ்ட்-சச்சிதானந்தம்
பாமக-திலகபாமா
எஸ்.டி.பி.ஐ-முபாரக்
நாம் தமிழர்-கைலைராஜன் துரைராஜன்
*பொள்ளாச்சி*
திமுக-ஈஸ்வரசாமி
பாஜக-வசந்தராஜன்
அதிமுக-அப்புசாமி கார்த்திகேயன்
நாம் தமிழர்-சுரேஷ்குமார்
*கோயம்புத்தூர்*
திமுக-கணபதி ராஜ்குமார்
பாஜக-K.அண்ணாமலை
அதிமுக-சிங்கை ராமச்சந்திரன்
நாம் தமிழர்-கலாமணி ஜெகநாதன்
*நீலகிரி*
திமுக-ஆ.ராசா
பாஜக-எல்.முருகன்
அதிமுக-லோகேஷ்
நாம் தமிழர்-ஜெயக்குமார்
*திருப்பூர்*
இ.கம்யூனிஸ்ட்-சுப்பராயன்
பாஜக-முருகானந்தம்
அதிமுக-அருணாச்சலம்
நாம் தமிழர்-சீதாலட்சுமி
*ஈரோடு*
திமுக-பிரகாஷ்
தமாகா-விஜயகுமார்
அதிமுக-ஆற்றல் அசோக்குமார்
நாம் தமிழர்-கார்மேகன்
*நாமக்கல்*
கொமதேக-மாதேஷ்வரன்
பாஜக-கே.பி.ராமலிங்கம்
அதிமுக-தமிழ்மணி
நாம் தமிழர்-கனிமொழி
*சேலம்*
திமுக-செல்வகணபதி
பாமக-அண்ணாத்துரை
அதிமுக-விக்னேஷ்
நாம் தமிழர்-மனோஜ்குமார்
*கள்ளக்குறிச்சி*
திமுக-மலையரசன்
பாமக-தேவதாஸ் உடையார்
அதிமுக-குமரகுரு
நாம் தமிழர்-இயக்குனர் ஜெகதீசன்
*விழுப்புரம்*
வி.சிறுத்தைகள்-ரவிக்குமார்
பாமக-முரளி சங்கர்
அதிமுக-பாக்கியராஜ்
நாம் தமிழர்-இயக்குனர் களஞ்சியம்
*ஆரணி*
திமுக-தரணி வேந்தன்
பாமக-கணேஷ்குமார்
அதிமுக-கஜேந்திரன்
நாம் தமிழர்-பாக்கியலட்சுமி
*திருவண்ணாமலை*
திமுக-அண்ணாத்துரை
பாஜக-அஸ்வத்தாமன்
அதிமுக-கலியபெருமாள்
நாம் தமிழர்-ரமேஷ் பாபு
*தருமபுரி*
திமுக-ஆ.மணி
பாமக-செளமியா அன்புமணி
அதிமுக-அசோகன்
நாம் தமிழர்-அபிநயா
*கிருஷ்ணகிரி*
காங்கிரஸ்-கோபிநாத்
பாஜக-நரசிம்மன்
அதிமுக-ஜெயப்பிரகாஷ்
நாம் தமிழர்-வித்யா வீரப்பன்
*வேலூர்*
திமுக-கதிர் ஆனந்த்
புதியநீதிக் கட்சி-ஏ.சி.சண்முகம்
அதிமுக-பசுபதி
நாம் தமிழர்-மகேஷ் ஆனந்த்
*அரக்கோணம்*
திமுக-ஜெகத்ரட்சகன்
பாமக-கே.பாலு
அதிமுக-விஜயன்
நாம் தமிழர்-அப்சியா நஸ்ரின்
*காஞ்சிபுரம்*
திமுக-செல்வம்
பாமக-ஜோதி வெங்கடேஷ்
அதிமுக-ராஜசேகர்
நாம் தமிழர்-சந்தோஷ்குமார்
*ஸ்ரீபெரும்புதூர்*
திமுக-டி.ஆர்.பாலு
தமாகா-வேணு கோபால்
அதிமுக-பிரேம்குமார்
நாம் தமிழர்-ரவிச்சந்திரன்
*மத்திய சென்னை*
திமுக-தயாநிதி மாறன்
பாஜக-வினோஜ் செல்வம்
தேமுதிக-பார்த்தசாரதி
நாம் தமிழர்-கார்த்திகேயன்
*தென் சென்னை*
திமுக-தமிழச்சி தங்கப்பாண்டியன்
பாஜக-தமிழிசை செளந்தரராஜன்
அதிமுக-ஜெயவர்தன்
நாம் தமிழர்-தமிழ்செல்வி
*வட சென்னை*
திமுக-கலாநிதி வீராச்சாமி
பாஜக-பால் கனகராஜ்
அதிமுக-இராயபுரம் மனோ
நாம் தமிழர்-அமுதினி
*திருவள்ளூர்*
காங்கிரஸ்-சசிகாந்த் செந்தில்
பாஜக-பாலகணபதி
தேமுதிக-நல்லதம்பி
நாம் தமிழர்-ஜெகதீஸ் சந்தர்
*புதுச்சேரி*
காங்கிரஸ்-அறிவிக்கப்படவில்லை
பாஜக-நமச்சிவாயம்
அதிமுக-தமிழ்வேந்தன்
நாம் தமிழர்-மேனகா
உடலை பட்டினி போடப்படும் போது என்ன நடக்கிறது...?
உடல் 8 மணி நேரத்திற்கு குறையாமலும் 16 மணி நேரத்திற்கு கூடாமலும் பசியுடன் இருக்கும்போது, அது தன்னைத்தானே உண்ணுகிறது, அல்லது உடல் செல்கள் தன்னைத்தானே உண்டு புதுப்பித்துக் கொள்கிறது என்ற மருத்து உண்மையை கண்டு பிடித்தார்.
மேலும் இந்த செயல்முறை பற்றி ஓசுமி கூறும் போது, உடல் பட்டினியாக இருக்கும் போது, உடலின் அனைத்து திசுக்களில் இருந்தும் விசேட புரதங்கள் சுரந்து, அவைகள் பெரும் துடைப்பங்கள் போன்று சுற்றித் திரிந்து, உடலில் காணப்படும் இறந்த செல்கள், புற்றுநோய் செல்கள் மற்றும் சிதைவுற்ற செல்களை மறுசுழற்சி செய்து, புதுப்பித்துவிடுகின்றன.
இப்போதும் கூட மேற்கத்திய நாடுகளில் மருத்துவர்கள் தங்கள் நோயாளிகளை
வாரத்தில் குறைந்தது இரண்டு நாட்களாவது உண்ணாமல் குடிக்காமல் பட்டினிக்கு உட்படுத்தி "பட்டினி சிகிச்சை"
அளித்து வருகின்றனர்.
நோன்பு பற்றி வான் மறை வசனம் ஒன்று பின்வருமாறு கூறுகிறது:
"நீங்கள் நோன்பு நோற்பதானது உங்களுக்கே நன்மையானதாகும்."*
முருங்கைக்காய் மாங்காய் அவியல் - சமையல் குறிப்புகள்
முருங்கைக்காய் மாங்காய் அவியல் - Drumstick Raw Mango Aviyal:*
*தேவையான பொருட்கள்:*
முருங்கைக்காய் - 2
மாங்காய் - பாதியளவு
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுந்து - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 10 இலைகள்
தேங்காய் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
*அரைக்க:*
தேங்காய்த்துருவல் - 1/2 கப்
மிளகாய்வற்றல் - 2
சின்ன வெங்காயம் - 4
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
*செய்முறை:*
1. முருங்கைக்காயை 2 அங்குலத் துண்டுகளாக நறுக்கி பின் நடுவில் பாதியாக நறுக்கிக் கொள்ளவும். மாங்காயை அதே அளவில் தோலோடு நறுக்கிக் கொள்ளவும்.
2. ஒரு சிறிய மிக்ஸி ஜாரில் அரைக்க குறிப்பிட்டுள்ள பொருட்களை சிறிது தண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ளவும்.
கனமான பாத்திரத்தில் நறுக்கிய முருங்கைக்காய் துண்டுகளை சேர்த்து 1/2 கப் தண்ணீர் ஊற்றி மூடி வைத்து வேகவிடவும்.
3. முருங்கைக்காய் பாதி வெந்ததும் நறுக்கிய மாங்காயை சேர்த்து வேகவிடவும்.
4. முருங்கைக்காயும், மாங்காயும் வெந்ததும் அதில் தேவையான அளவு உப்பு மற்றும் அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து நன்கு கலந்து மிதமான சூட்டில் வைத்து கொதிக்கவிடவும்.
5. அவியல் நன்கு பச்சை வாசனை போகும் வரை கொதித்ததும் 1 டேபிள்ஸ்பூன் தேங்காய் எண்ணெய் கலந்து இறக்கவும்.
6. வாணலியில் 1 டேபிள்ஸ்பூன் தேங்காய் எண்ணெய் விட்டு சூடானதும் அதில் கடுகு உளுத்தம்பருப்பு சேர்த்து தாளிக்கவும். பின் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து சூடான அவியலில் கலந்து கொள்ளவும்.
இந்த அவியலுக்கு முருங்கைக்காய் முத்தலாகவும் பிஞ்சாகவும் இல்லாமல் அளவான காயை தேர்ந்தெடுக்கவும். இதில் மாங்காய் சேர்ப்பதால் தயிர் அல்லது புளி சேர்க்க வேண்டாம்.
இட்லி பொடி - Idli Podi - சமையல் குறிப்புகள்
சமையல் குறிப்புகளில் இன்று இட்லி பொடி செய்முறை பார்ப்போம் வாருங்கள்...!*
*தேவையான பொருட்கள்:*
கடலைப்பருப்பு - 1/2 கப்
உளுத்தம்பருப்பு - 1 கப்
வெள்ளை எள் - 1/4 கப்
மிளகாய் வற்றல் - 20
கறிவேப்பிலை - ஒரு கொத்து
பெருங்காயத்தூள் - 1 டீஸ்பூன்
பூண்டு பற்கள் - 15
கல் உப்பு - தேவையான அளவு
நல்லெண்ணெய் - 2.5 டேபிள் ஸ்பூன்
*செய்முறை:*
1. கனமான இரும்பு வாணலியை சூடாக்கி அதில் வெள்ளை எள்ளை சேர்த்து மிதமான சூட்டில் சட சடவென பொரிந்து வரும் வரை வறுக்கவும். பின் ஒரு தட்டில் மாற்றிக் கொள்ளவும்.
2. அதே வாணலியில் 1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு சூடானதும் 1/2 கப் கடலைப்பருப்பை சேர்த்து மிதமான சூட்டில் வறுக்கவும். கடலைப்பருப்பு லேசாக நிறம் மாறி வரும் போது உளுத்தம்பருப்பை சேர்த்து கைவிடாமல் மிதமான சூட்டில் நன்கு சிவந்து வாசம் வரும் வரை வறுக்கவும். பின் தட்டில் மாற்றிக் கொள்ளவும்.
3. பின் 1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு அதில் மிளகாய் வற்றல் சேர்த்து மிதமான சூட்டில் வறுக்கவும். ஒரு நிமிடம் வறுபட்டவுடன் ஒரு கொத்து கறிவேப்பிலையை சேர்த்து கைவிடாமல் வறுக்கவும். மிளகாய் வற்றல் மற்றும் கறிவேப்பிலை முறுகலானதும் தட்டில் மாற்றி கொள்ளவும்.
4. பின் மீதமுள்ள எண்ணெய் விட்டு தட்டிய பூண்டு பற்களை சேர்த்து நன்கு சிவந்து வரும் வரை வறுக்கவும். பின் அடுப்பை அணைத்து விடவும்.
5. வறுத்து வைத்துள்ள பொருட்களை ஆறவைத்துக் கொள்ளவும்.
6. மிக்ஸி ஜாரில் வறுத்து ஆறவைத்த பருப்பை சேர்த்து கொர கொரப்பாக அரைத்து பின் வறுத்த மிளகாய் வற்றல் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து பொடிக்கவும்.
7. கடைசியாக பெருங்காயத்தூள், வறுத்த எள்ளு, வறுத்த பூண்டு மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கொர கொரப்பாக அரைத்துக் கொள்ளவும். மணக்க மணக்க இட்லி பொடி தயார்.
8. பொடியை ஆறவைத்து காற்று புகாத டப்பாவில் மாற்றிக் கொள்ளவும்.
மொட்டை போடுதல் ஆரோக்யமான வாழ்வுக்காகவே
கோவிலுக்கு நேர்ந்திருந்தேன் அதான் மொட்டை போட்டேன் என்று சொல்வார்கள். முடி வளர்றதலாதானே மொட்டை போட்டிருக்கே... விரலை வெட் டுவியா என்று கிண்டலடிப்பார்கள். ஆனால் முடி காணிக்கை என்பது மரணத்துக்கு ஒப்பானது என்பது தெரியுமா?
மகாபாரத போர் நடக்கும் போது இறுதி நாளில் குரு துரோணாச்சாரியாவின் புதல்வன் அஸ்வத்தாமன் திரெளபதியின் ஐந்து குழந்தைகளையும் பாண்டவர்கள் என்று நினைத்து வெட்டி சாய்த்தான். விடிந்ததும் குழந்தைகளைக் கண்டு சொல்லொணா துயரம் அடைந்தார்கள் பாண்டவர்கள்.
இத்தகைய கொடூரச் செயலை செய்த பாதகனை வெட்டி வீழ்த்தாமல் விடமாட்டேன் என்று அர்ஜுனன் சபதமிட்டான். அன்று மாலையே கள்வன் அஸ்வத்தாமன் என்று தெரிந்து இழுத்துவரப்பட்டான்.
குருவின் மகனா என்று பாண்டவர்களும், திரெளபதியும் அதிர்ந்து போனார்கள்.
யாராக இருந்தால் என்ன.. இவன் தலையைக் கொய்தாமல் விடமாட்டேன் என்றான் அர்ஜுனன்.
அர்ஜுனனை யாராலும் தடுக்க முடியவில்லை. அப்போது அங்கு வந்த ஸ்ரீகிருஷ்ணர் “அவன் தலையை எடுக்க வேண்டுமென்பதில்லை அர்ஜுனா.. அவன் சிகையை மழித்துவிடு.. அது அவன் மரணத்துக்கு ஈடானது” என்றார்.
அதற்கு பிந்தைய நம் மூதாதையர்கள் தவறு செய்பவர்களை மொட்டை அடித்து செம்புள்ளி, கரும்புள்ளி வைத்து கழுதை மேல் ஊர்வலம் வரச் செய்ததையும் இத்தருணத்தில் நினைவுபடுத்தி பார்க்க வேண்டும்.
உங்கள் ஜாதகத்தில் கிரகங்கள் கடும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை அறிந்தாலோ... உங்களுக்கு மரணதிசை நடக்கிறது என்பதை முன் கூட்டியே தெரிந்து கொண்டாலோ உங்கள் குலதெய்வம் அல்லது இஷ்ட தெய்வத்திடம் மொட்டை போடுவதாக முடி காணிக்கை செலுத்துவதாக வேண்டிக் கொள்ளுங்கள்.
தலை போகும் பேராபத்திலிருந்தும் தப்பித்துக் கொள்வீர்கள்
பிறந்த குழந்தைக்கு 1,3, என்னும் ஒற்றைப்பட வயதில் குலதெய்வ கோயிலில் பூஜை செய்து மொட்டை அடிப்பது வழக்கம்.
விஞ்ஞான ரீதியாக கருவில் இருக்கும் குழந்தை இரத்தம், மலம், சிறுநீர் போன்ற அழுக்குகள் சூழ இருக்கும்.
இந்த கழிவுகள் குழந்தையின் கேசம், மயிர் கால்கள் வழியாக வெளியேறுவதால் மொட்டை போடுவது அவசியமாகிறது. இல்லையெனில் அக்கழிவுகள் வழியாக நோய்கள் பரவும் அபாயமும் உண்டு என்கிறது விஞ்ஞானம்.
விஞ்ஞானத்திலும் மெய்ஞானத்திலும் மொட்டை போடுதல் ஆரோக்யமான வாழ்வுக்காகவே என்று நிரூபிக்கப்பட்டுள்ளது!
படித்ததில் தெரிந்து கொண்டதை பகிர்கின்றேன்.!*
பிரிட்ஜ் அதிகமா கரண்ட் எடுக்காம இருக்க சூப்பர் ஐடியா
பிரிட்ஜ் பயன்படுத்தும் முறையும் பராமரிப்பு முறையும் பிரிட்ஜ் நம் பொருட்களை அதிக அளவில் அடக்கி வைப்பதின் தவிர்க்க வேண்டும். ஒரு சிலர் பிரிட்ஜில் மற்ற பொருட்களை வைக்க கூட இடம் இல்லாததற்கு பொருட்களை வைத்திருப்பார்கள். அப்படி வைத்து அது மட்டும் இதில் வைக்கும் பொருட்களை திறந்த நிலையில் வைத்து அனைத்தையும் மூடி போட்டு தான் வைக்க வேண்டும். -
அதே போல் பிரிட்ஜில் அடிக்கடி திறந்து மூடவும் கூடாது. இதனால் குளிர்ந்த காற்று வெளியேறி வெப்ப காற்று உள்ளே செல்வதால் அதிக அளவில் மின்சாரம் செலவாகும். ஒருமுறை பிரிட்ஜை திறக்கும் போதே தேவையான அனைத்தையும் எடுத்து பயன்படுத்த பழகுங்கள். இது அனைத்திலும் விட பிரிட்ஜில் ஃப்ரீசரில் ஐஸ் கட்டி சேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஐஸ்கட்டி அதிக அளவில் சேர்ந்து கொள்வதாலும் மின்சாரம் அதிகமாக செலவாகும். அதுமட்டுமின்றி பிரிட்ஜ் சீக்கிரம் பழுதாகி விடும். அதை சரி செய்ய ஒரு சுலபமான டிப்ஸ் .
அதற்கு முதலில் ஒரு சிறிய தட்டை எடுத்துக் கொள்ளுங்கள். அதன் மேல் டீ வடிக்கட்டும் பில்டரை வைத்து அதில் சால்ட் உப்பை தூவி விடுங்கள். இதை தட்டுடன் நேரடியாக ப்ரீசர் பாக்ஸ் உள்ளே எடுத்துச் சென்று இப்போது பில்டரை மட்டும் எடுத்து அதில் இருக்கும் சால்ட் ஃப்ரீசருக்குள்ளாக தூவி விடுங்கள். இதனால் ஐஸ் கட்டிகள் சேராது அதே சமயத்தில் மின்சாரமும் குறைவாக செலவாகும். இதை கையிலே தூவலாமே எதற்கு பில்டர் என கேட்கலாம். பில்டரை கொண்டு தூவும் போது உப்பு எல்லா இடத்திலும் பரவலாக பரவும். அப்படி மில்லாமல் போனால் உப்பு ஒரே இடத்தில் கொட்டி இது மற்ற இடங்களுக்கு பரவாமல் போய் விடும்.
அதுமட்டுமின்றி பிரிட்ஜை இரண்டு மாதத்திற்கு ஒரு முறை சுத்தப்படுத்த வேண்டும். அந்த சமயத்தில் உள்ளே இருக்கும் பொருட்களை எல்லாம் வெளியில் எடுத்து வைத்த பிறகு தான் சுத்தப்படுத்த வேண்டும். இதற்கு குளிர்ந்த நீரை பயன்படுத்தாமல் கொஞ்சம் வெதுவெதுப்பான நீரை காட்டன் துணியில் நனைத்து நன்றாக பிழிந்து அதை வைத்து சுத்தம் செய்ய வேண்டும்.
மேற்சொன்ன முறைகளை எல்லாம் கடைப்பிடிக்கும் பொழுது பிரிட்ஜ் அதிக நாள் உழைப்பதுடன், மின்சார செலவும் குறைவாக ஆகும். நமக்கும் பிரிட்ஜை அடிக்கடி பராமரிக்க வேண்டிய செலவு இருக்காது. இந்த குறிப்புகள் உங்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என நினைத்தால் நீங்களும் இதை பயன்படுத்தி பலன் அடையலாம்.
செய்தித்துளிகள் - 26/03/2024 (செவ்வாய்க்கிழமை)
🌅🌅இன்று முதல் 10ம் வகுப்பு அரசு பொது தேர்வு தொடங்குகிறது.
👉தேர்வு எழுதும் அனைத்து மாணவ, மாணவியர்களும் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று வெற்றி பெற தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் சார்பாக நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
🌅🌅10-ம் வகுப்புப் பொதுத்தேர்வை எழுதவுள்ள எனதருமை மாணவச் செல்வங்களே... All the best.: முதல்வர் ஸ்டாலின்
நீங்கள் பதற்றமின்றித் தேர்வை எதிர்கொள்ளத்தான் வினாத்தாளைப் படித்துப் பார்க்க முதலில் 10 நிமிடங்கள் வழங்கப்படுகிறது.
அதை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
இதனை மற்றுமொரு தேர்வாகக் கருதி நம்பிக்கையோடு எழுதி வெற்றி பெறுங்கள்.
பெற்றோர்களும் உங்கள் பிள்ளைகள் உரிய நேரத்தில் தேர்வு மையத்துக்குச் சென்றிடுவதை உறுதிசெய்யுங்கள்.
இன்று10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து.
🌅🌅டெல்லி நேரு பல்கலைக்கழக தேர்தலில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து.
🌅🌅அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் ஆய்வக உதவியாளர் பணியிடங்கள் பணிநிரவல் செய்வது மற்றும் காலிப் பணியிடங்கள் பகிர்ந்தளிக்க அனுமதி வழங்கி அரசாணை வெளியீடு.
🌅🌅அரசுப்பள்ளி மாணவர்களுக்கு நேற்று முதல் நீட் தேர்வு பயிற்சி தொடக்கம்.
🌅🌅பிளஸ் 2 பொதுத் தேர்வில் கணிதம், வணிகவியல் தேர்வுகள் எளிது : ‘சென்டம்’ அதிகரிக்க வாய்ப்பு
🌅🌅விபத்து உள்ளிட்ட காரணங்களால் தேர்வு நேரத்தில் சலுகை கோரும் மாணவர்களுக்கு, மாவட்ட கல்வி அலுவலர்களே அனுமதி வழங்கலாம் என்று தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது.
🌅🌅ஜனவரி பருவ மாணவர் சேர்க்கை 31 வரை நீட்டிப்பு : இக்னோ பல்கலைக்கழகம் அறிவிப்பு.
🌅🌅மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பள்ளிகள் மட்டுமின்றி கல்லூரிகளுக்கும் உத்தரப்பிரதேசத்தில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
🌅🌅Lok Shaba Election 2024 - Remuneration - மக்களவைத் தேர்தல் 2024 - வாக்குப்பதிவில் ஈடுபடும் அலுவலர்களுக்கான உழைப்பூதிய விவரம் வெளியீடு.
🌅🌅ஆசிரியர் பயிற்சிக்கான தொடக்க கல்வி பட்டயத் தேர்வு: தனித்தேர்வர்கள் ஏப்ரல் 1 முதல் விண்ணப்பிக்கலாம்
🌅🌅ஆசிரியையிடம் இணைய வழியில் ரூ.3.55 கோடி மோசடி: 6 குற்றவாளிகளை கைது செய்த ஐபிஎஸ் தமிழருக்கு பாராட்டு.
🌅🌅இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வுக்கு 24 லட்சம் பேர் விண்ணப்பம்: நாடு முழுவதும் மே 5-ம் தேதி தேர்வு 🌅🌅திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களுக்கு வழிகாட்டுதல்: கவனமாக செயல்பட யுஜிசி எச்சரிக்கை
🌅🌅உதவிப் பேராசிரியர் பணிக்கான ‘செட்' தேர்வு கட்டணத்தை குறைக்க பட்டதாரிகள் வலியுறுத்தல்
🌅🌅ஜூனியர் உயர்நிலைப் பள்ளி உதவி ஆசிரியர்களுக்கு TET கட்டாயமில்லை – உயர்நீதிமன்றம் அதிரடி
🌅🌅புதிய பென்சன் திட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்த மத்திய அரசு முடிவு
(1 முதல் அமலாகும் புதிய விதி)
🌅🌅பாஜக ஆட்சியை வீட்டிற்கு அனுப்பும் வரை எங்களுக்கு தூக்கம் கிடையாது - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திட்டவட்டம்
🌅🌅தமிழ்நாட்டில் திமுக மற்றும் அதிமுக இடையேதான் போட்டி என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
🌅🌅கெஜ்ரிவால் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் மாபெரும் பேரணி நடத்தப்படும் என I.N.D.I.A கூட்டணி அறிவித்துள்ளது.
🌅🌅பதவி விலகக் கோரும் பாஜகவுக்கு பதிலடி; அமலாக்கத்துறை விசாரணைக்கு நடுவே முதல் உத்தரவு பிறப்பித்தார் அரவிந்த் கெஜ்ரிவால்.
🌅🌅இந்திய விமானப்படை முன்னாள் தளபதி ஆர்.கே.எஸ்.பதவுரியா பாஜகவில் இணைந்தார்.
🌅🌅பெங்களூருவில் கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டு வரும் நிலையில் காவிரி நீரை அவசியமற்ற நோக்கங்களுக்கு பயன்படுத்தியதற்காக 22 குடும்பங்களுக்கு தலா ரூ.5000 அபராதம்
🌅🌅ஐபிஎல் போட்டிகளுக்கான 2ஆம் கட்ட அட்டவணை வெளியீடு.
இறுதிப் போட்டி சென்னையில் மே 26ஆம் தேதி நடைபெறுகிறது.
🌅🌅வாக்காளர் சீட்டிற்கு பதிலாக வாக்காளர் தகவல் சீட்டினை அச்சிட்டு வழங்க இந்திய தேர்தல் ஆணையம் முடிவு - Press News
🌅🌅Election 2024 - வாக்குச்சாவடி அலுவலர்கள் கவனத்திற்கு ... இம்முறை QR Special Pink Seal அறிமுகம்.! 🌅🌅வரும் மக்களவைத் தேர்தலில் காகித பயன்பாட்டை குறைக்குமாறு கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்
முடிந்த அளவு டிஜிட்டல் பயன்பாட்டை பயன்படுத்தி காகிதப் பயன்பாட்டை குறைக்கவும் வேண்டும்
ஒருமுறை மட்டும் பயன்படுத்தக்கூடிய பாலித்தீன் பைகளை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்
என அறிவுறுத்தியுள்ளது.
🌅🌅தமிழ்நாட்டில் 40 தொகுதியிலும் INDIA கூட்டணி தான் வெற்றி பெரும்
விஜய் வசந்த் காங் எம்.பி
🌅🌅தமிழ்நாடில் மேலும் 20 சுங்கச்சாவடிகளைத் திறக்க மத்திய அரசு திட்டம்
👉தமிழ்நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் அடுத்த 2 ஆண்டுகளில் மேலும் 20 புதிய சுங்கச்சாவடிகளை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல்
👉பெங்களூரு-சென்னை விரைவுச் சாலையில் 6,
👉விழுப்புரம்-நாகை தேசிய நெடுஞ்சாலையில் 3,
👉விக்கிரவாண்டி - நாகை நெடுஞ்சாலையில் 3,
👉ஓசூர்-தருமபுரி தேசிய நெடுஞ்சாலையில் 3,
👉சித்தூர்-தச்சூர் விரைவுச் சாலையில் 3,
👉மகாபலிபுரம் - புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் 2 என
மொத்தம் 20 சுங்கச்சாவடிகள் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
🌅🌅சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 அதிகரிப்பு
ஒரு கிராம் தங்கம் ரூ.6,205க்கும், ஒரு சவரன் ரூ.49,640க்கும் விற்பனை
🌅🌅மதிமுக, விசிக, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்கீடு செய்வது தொடர்பாக, இந்திய தேர்தல் ஆணையத்திடம் இருந்து இதுவரை எந்த உத்தரவும் வரவில்லை
தமிழ்நாடு மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல்.
🌅🌅இரட்டை இலை சின்னம் தொடர்பாக ஓ.பி.எஸ் தேர்தல் ஆணையத்தை அணுகலாம் எனக் கூறிய நீதிபதிகள், வழக்கை இறுதி விசாரணைக்காக வரும் ஜூன் 10ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
🌅🌅100% வாக்குப்பதிவை வலியுறுத்தி புதிய தலைமுறை தொலைக்காட்சி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்திவருவது பாராட்டுக்குரியது.
புதிய தலைமுறைக்கு சத்யபிரதா சாஹு பாராட்டு
🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅
🌹🌹ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்கும் நீட்தேர்வு விண்ணப்பம் தமிழகமும் முன்னேற்றம்
👉இந்த ஆண்டு நீட் தேர்வுக்கு மொத்தம் 23,81,833 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர்
👉அதில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள்,
👉13 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் மற்றும் 24 மாணவர்கள் ‘மூன்றாம் பாலினம்’ பிரிவின் கீழ் பதிவு செய்துள்ளனர்.
👉பதிவுசெய்யப்பட்ட 23 லட்சம் மாணவர்களில், 10 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் OBC NCL பிரிவைச் சேர்ந்தவர்கள்,
👉6 லட்சம் பொதுப் பிரிவு மாணவர்கள்,
👉3.5 லட்சம் பேர் பட்டியல் சாதி (SC) மாணவர்கள்,
👉1.8 லட்சம் மாணவர்கள் Gen-EWS பிரிவைச் சேர்ந்தவர்கள் மற்றும்
👉1.5 லட்சம் மாணவர்கள் பழங்குடியினர் (ST) பிரிவைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
👉உத்தரபிரதேசம் 3,39,125 பதிவுகளுடன் அதிக எண்ணிக்கையிலான விண்ணப்பதாரர்களை பதிவு செய்துள்ளது, அடுத்த இடங்களில் மகாராஷ்டிரா 279904. ராஜஸ்தான் 1,96,139 ஆகியவை உள்ளன.
👉தென் மாநிலங்களில் தமிழ்நாட்டில் 155216 விண்ணப்பங்களும், கர்நாடகாவில் 154210 விண்ணப்பங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கையில் கூட, கடந்த ஆண்டு, உத்தரப் பிரதேசத்தில் 1.4 லட்சம் விண்ணப்பதாரர்களுடன் அதிக எண்ணிக்கையிலான விண்ணப்பதாரர்கள் இருந்தனர், அதைத் தொடர்ந்து மகாராஷ்டிரா (1.3 லட்சம்) மற்றும் ராஜஸ்தான் (1 லட்சம்) ஆகியவை இருந்தன.
🌹👉முந்தைய ஆண்டுகளின் ஒப்பீடு
👉கடந்த ஆண்டு, மொத்தம் 20,87,449 விண்ணப்பதாரர்கள் நீட் (NEET UG 2023) தேர்வுக்கு பதிவு செய்தனர் மற்றும் தேர்வு மே 7 அன்று நடைபெற்றது, அவர்களில் 97.7 சதவீதம் பேர் தேர்வு எழுதினர் மற்றும் மறுதேர்வு கிட்டத்தட்ட 8,700 விண்ணப்பதாரர்களுக்கு நடத்தப்பட்டது. இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள 499 நகரங்களில் 4097 மையங்களில் தேர்வு நடத்தப்பட்டது. 👉கடந்த சில ஆண்டுகளாக நீட் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவுகளின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. 2022ல் 18 லட்சமாக பதிவு செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 2023ல் 20.87 லட்சமாக உயர்ந்து, இந்த ஆண்டு கிட்டத்தட்ட மூன்று லட்சம் அதிகரித்துள்ளது.
👉தேர்வு எழுதும் மற்றும் தகுதிபெறும் மாணவர்களின் எண்ணிக்கையிலும் இதேபோன்ற போக்கு காணப்பட்டுள்ளது, 2022 இல் 17 லட்சமாக இருந்த மாணவர்களின் எண்ணிக்கை 2023 இல் 20.36 லட்சமாக அதிகரித்துள்ளது மற்றும் இந்த ஆண்டு இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தகுதி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 2022ல் 9.93 லட்சத்தில் இருந்து 2023ல் 11.45 லட்சமாக அதிகரித்துள்ளது.
🙏🙏🙏
Monday, March 25, 2024
இப்ப எல்லோரும் போலிஸில் மாட்டிகிட்டோம்
ஒருவர் காரில் தன் மனைவி , அம்மா எல்லோருடனும் சென்று கொண்டிருந்தார் . நீண்ட நேரமாக அவரை ஒரு போலிஸ் ஜீப் தொடர்ந்துக் கொண்டிருந்தது.
சிறிது நேரத்துக்கு பிறகு போலிஸ் ஜீப் அவர் காரை முந்திக்கொண்டு சென்று , அவர் கார் முன் நின்றது.
இறங்கி வந்த போலிஸ் , அவரிடம் 'குட் ஈவ்னிங் சார்..
'அவர் 'குட் ஈவ்னிங், ஏதாவது பிச்சனையா?'.
போலிஸ், 'நாங்கள்,, உங்கள் காரை அரை மணி நேரமாக கவனித்து வருகிறோம்...... "நீங்கள் போக்குவரத்து விதிகளை மீறாமல், ஸ்பீட் லிமிட்டை ஒரு மைல் கூட அதிகரிக்காமல், சக டிரைவர்களை மதித்து காரை ஓட்டிய விதத்தை நாங்கள் பாராட்டுகின்றோம்." அதனால், சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு, உங்களை சிறந்த டிரைவராக தேர்வு செய்து, 10,000 டாலருக்கான இந்த செக்கை அன்பளிப்பாக கொடுக்கிறோம் பெற்றுக் கொள்ளுங்கள்'.
அவர் ஒரு சந்தோஷமாக ஒரு பெருமூச்சுவிட்டு விட்டு சொன்னார், 'இந்த பணத்தை வைத்து எப்படியாவது டிரைவிங் லைசன்ஸ் கட்டாயம் எடுத்துடனும்' என்று சொன்னார்.
போலிஸ் ஒருமாதிரி பார்க்க, உடனே அவரின் மனைவி 'சாரி சார் தப்ப நினைக்க வேண்டாம், அவர் குடிச்சிட்டு உளறுகிறார்' என்றார்.
இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அவரின் காது கேட்காத அம்மா சொன்னார், 'நான் அப்பவே சொன்னேன் கேட்டியா, திருட்டு காரை எடுத்துகிட்டு வந்ததால், இப்ப எல்லோரும் போலிஸில் மாட்டிகிட்டோம்.....



.jpeg)
