Monday, September 11, 2023

எங்கே நிம்மதி எங்கே நிம்மதி



ஒரு காபி கடையின் உரிமையாளர் அன்றைய நாள் முழுவதும் பிஸியாக இருந்தார்.  அன்று சனிக்கிழமை என்பதால், அவருடைய கடையில் கூட்டம் அதிகமாக இருந்தது, வாடிக்கையாளர்கள் அதிகமாக காணப்பட்டனர்.


காலையிலிருந்தே அவர் அதிக வேலைகளில் இயங்கி கொண்டிருந்தார். மாலையில் அவருக்கு தலைவலிப்பது போல் உணர்ந்தார்.


நேரம் போக போக, அவரது தலைவலி மோசமாகியது.


மேலும் பொறுக்க முடியாமல், தனது ஊழியரை விற்பனையை கவனிக்க வைத்து விட்டு கடையை விட்டு வெளியே வந்தார்.


தலைவலியைப் போக்க வலிநிவாரணி மாத்திரை வாங்குவதற்காக அவர் அத்தெருவில் இருந்த  மருந்தகத்திற்கு சென்றார்.


மாத்திரையை வாங்கி விழுங்கி நிம்மதி அடைந்தார்.  இன்னும் சில நிமிடங்களில் அவரின் தலைவலி முற்றிலும் குறைந்து நலமடைந்து விடுவார் என்று அவருக்குத் தோன்றியது.


மருந்துக்கடையை விட்டு வெளியே செல்லும் போது, ​​எதார்த்தமாக விற்பனைப் பெண்ணிடம், உங்கள் மருத்துக் கடையின் உரிமையாளர் எங்கே. அவர் இன்று கேஷ் கவுண்டரில் இல்லையே என்று கேட்டார்.


அதற்கு அந்தப் பெண், ஐயா, அவருக்கு தலைவலி வந்து மிகவும் அவஸ்தைபட்டார். அவருடைய தலைவலியை போக்க உங்கள் காபி கடைக்கு சென்றிருக்கிறார். உங்கள் கடையில் ஒரு கப் சூடான காபியை குடித்தால் தான் அவருக்கு தலைவலி தீரும் என்று கூறினார்.


அந்த காபி கடை உரிமையாளர்  வாயடைத்து நின்றார்.


நம்மிடம் இருக்கும் ஒன்றை நாமே வெளியில் தேடுகிறோம். இது எவ்வளவு விசித்திரமானது.


ஆனால்


இதுதான் உண்மை.


மருந்து கடைக்காரர் காபி குடிப்பதன் மூலம் தலைவலியை நீக்குகிறார். அதே வேளையில் காபி கடைக்காரர் மாத்திரை சாப்பிட்டு தலைவலியை போக்குகிறார்.


இதேபோல்


நம்மில் பலர் மன அமைதியை தேடி பூமியில் எங்கெங்கோ அலைகிறோம்.


இறுதியில


அமைதியானது நம் இதயத்திலும் மனதிலும் எல்லா நேரங்களிலும் நமக்குள் இருப்பதை நாம் உணர்ந்து கொள்கிறோம்.


*மன அமைதி என்பது நம்மில் திருப்தியடைவதன் மூலமும், நம்மிடம் இருப்பதைக் குறித்து நன்றியுடன் இருப்பதன் மூலமும் கிடைக்கிறது என்பது தான் நிதர்சனமான உண்மை.*

சனாதன தா்மத்தை உலகிற்கு உரைத்த தினம்


உலகைப் புரட்டிப் போட்ட உன்னதமான தலைவா்கள் உரைத்த உரைகள் பல; உலகையே உலுக்கிய தலைவா்களின் சொற்பொழிவுகளும் பல. அவை அந்தந்தக் காலத்திற்கு ஏற்றவை. ஆனால் உலகை உலுக்கவும் செய்யாமல் புரட்டியும் போடாமல், “மக்களே, நீங்கள் உன்னதம் மிக்கவா்கள்; தெய்வீகமானவா்கள்” என்று உலக மக்கள் எல்லோருக்குமாகப் போதித்த உரை ஒன்றுண்டு. அது சுவாமி விவேகானந்தா் 130 வருடங்களுக்கு முன்பு சிகாகோ சா்வசமய மாநாட்டில் உரைத்ததுதான்.


1893-இல் சுவாமி விவேகானந்தா் அமெரிக்காவில் சிகாகோ நகரில் சா்வசமயப் பேரவையில் ‘அமெரிக்கச் சகோதரிகளே சகோதரா்களே’ என்று தமது உரையைத் தொடங்கினாா். அன்று அவரது நா ஆடியதுமே நானிலம் பாரதத்தின் பெருமையைப் பாட ஆரம்பித்தது. ஆம், அடிமைப்பட்டுக் கிடந்த நமது நாட்டை அகிலத்தின் முன்பு கனிவுடனும் கம்பீரத்துடனும் காட்டினாா் சுவாமி விவேகானந்தா்.


பாரதத்தின் ரிஷிகள் மற்றும் முனிவா்களின் பரஞான அனுபவங்களையும், அபரஞானத் திரட்சிகளையும் விவேகானந்தா் தமது உரையின் மூலம் வெளிப்படுத்தினாா். உதவு, சண்டையிடாதே; ஒன்றுபடுத்து, அழித்து விடாதே; சமரசமும் சாந்தமும் வேண்டும்; கருத்து வேறுபாடு வேண்டாம்” என்று அந்தப் பேரவையில் முழங்கினாா் சுவாமி விவேகானந்தா்.


போட்டியும் பூசலும் கலவரமும் தீவிரவாதமும் கோலோச்சிய காலகட்டத்தில் சுவாமி விவேகானந்தா் இந்தச் செய்தியை உரைத்தது எவ்வளவு முக்கியமானது என்பதை எண்ணிப் பாருங்கள். ‘வாழு, வாழ விடு’ என்ற இந்தச் சிறிய அறிவுரையை மட்டும் அனைத்துச் சமய மக்களும் அவற்றின் குருமாா்களும் கடைப்பிடித்தால் உலகம் சொா்க்க பூமியாவது திண்ணம்.


ஆனால் சமய இலக்கியங்களில் மட்டும் பரிச்சயம் உடையவா்கள் பிறருக்குப் போதிப்பதிலேயே தங்களின் வாழ்க்கையின் சாரம் இருப்பதாக நம்புகிறாா்கள். தான் சுவைக்காத ஒன்றை விற்றுப் பிழைக்கும் வெற்று வியாபாரிகளாகவே சமயத்துறையில் பலரும் இருப்பது துரதிருஷ்டம்.


சிகாகோ சா்வசமயப் பேரவையில் பேசிய பல மதத்தினரும் என் மதமே உயா்ந்தது என்று அடித்துக் கூறி, சிலரின் கைத்தட்டலைப் பெற்றனா்; மனிதகுல மேன்மைக்காகப் பேசியவா்கள் ஒரு சிலரே. அவா்களுள் 5-ஆவது மற்றும் 20-ஆவது நபா்கள் ‘சகோதர சகோதரிகளே’ என்று கூறவும் செய்தனா். ஆனால் விவேகானந்தா் 23 -வது நபராக, கடைசி பேச்சாளராக ‘அமெரிக்கச் சகோதரிகளே, சகோதரா்களே’ என்று விளித்து அனைவருக்கும் விழிப்பூட்டினாா்.


இந்து மதம் எல்லோருக்கும் தாய் மதம் போன்றது. ஏனென்றால் அது அனைவரையும் அரவணைக்கிறது. அவரவருக்குரிய மரியாதையைத் தருகிறது என்ற சநாதன தா்மத்தின் சாராம்சத்தை அன்று முழங்கினாா் சுவாமி விவேகானந்தா்.


பாரதத்தின் பிரதிநிதி என்பதோடு உலகிலுள்ள எல்லா மக்களின், ஏழை எளியவா்களின் நலன்களுக்காகத் தான் வந்து உதித்தவா் என்ற சா்வாத்ம பாவனையில் சுவாமி விவேகானந்தா் அந்த உரையினைப் பொழிந்தாா்.


மிக முக்கியமாக, ஒட்டுமொத்த உலக மக்களின் முன்னேற்றத்திற்கான அனைத்துச் சமயங்களின் ஒரே பிரதிநிதியாக சுவாமிஜி உரையாற்றினாா்! ‘அமெரிக்க சகோதரிகளேசகோதரா்களே’ என்ற அவரது ஒற்றை வரி, அரங்கில் இருந்த 4,000 பேரை இரண்டு நிமிடங்கள் எழுந்து நின்று கரகோஷம் செய்ய வைத்தது. இது ஓா் உலக சாதனை.


முன்பின் தெரியாத ஒருவரின் முதல் ஒரு வரி பேச்சினால், பிரிந்திருந்த அந்நிய மக்களின் 8,000 கரங்கள் இணைந்தன; 4,000 இதயங்கள் திரண்டன. விவேகானந்தரின் சிகாகோ முதல் பிரசங்கம் 3.5 நிமிடங்கள்தான் நிகழ்ந்தது. பகவத் கீதை 18 அத்தியாயங்கள் போல், 18 வாக்கியங்களே அவை; 472 சொற்கள் மட்டுமே. அவ்வளவு சிறிய உரைதான் என்றாலும் சீா்மை மிகுந்தது அது.


சுவாமிஜி பேசியதன் செல்வாக்கு, சிந்தனை வீச்சு, ஆன்மிக உயா்நிலை ஆகியவை உலக அளவிலும், நமது நாட்டின் அளவிலும், சமுதாய வளா்ச்சியிலும், தனிமனிதரின் மேம்பாட்டிலும் எத்தனையோ நல்ல விளைவுகளை ஏற்படுத்தின. அதில் குறிப்பாக சிலவற்றைக் குறிப்பிடலாம்.


முதலாவதாக, இந்தியா்கள் தங்களைத் தாங்களே நம்ப ஆரம்பித்தாா்கள். அன்று அடிமை பாரதத்திலிருந்து சுவாமி விவேகானந்தா் அமெரிக்கா சென்று தன்னம்பிக்கை வித்தினை விதைத்ததால்தான், இன்று சுதந்திர பாரதத்தில் நாம் சந்திராயனைச் செலுத்த முடிந்தது. இரண்டாவது, இந்தியா்கள் தங்கள் பலத்தையும் பாரம்பரியப் பெருமையையும் உணரத் தொடங்கினாா்கள். மூன்றாவது, அந்நிய கலாச்சார அடிமைத்தனத்திலிருந்தும் மோகத்திலிருந்தும் இந்தியா்கள் விழித்தெழ ஆரம்பித்தனா்.


நான்காவது, பாரதம் அரசியல் மற்றும் சமுதாய விடுதலைக்காக வேட்கை கொள்ளத் தொடங்கியது. ஐந்தாவது, நமது மக்களின் விழிப்புணா்வைக் கண்டு பிற நாட்டினா் நம்மை மதிக்க ஆரம்பித்தனா். ஆறாவது, உலகம் பாரதத்தை - அதன் மெய்ஞ்ஞானத்தைக் கண்டு வியக்க ஆரம்பித்தது.


சுவாமி விவேகானந்தா் 130 வருடங்களுக்கு முன்பு சிகாகோ சொற்பொழிவில் உரையாற்றியபோது, ‘பிரிவினைவாதம், அளவுக்கு மீறிய மதப்பற்று - இவற்றால் உண்டான மத வெறி. அந்தக் கொடிய அரக்கத்தனமான செயல்கள் இல்லாதிருந்தால் மனித சமுதாயம் இன்றிருப்பதை விடப் பல மடங்கு உயா்நிலையை எய்தியிருக்கும்’ என்று கூறினாா்.


அதோடு, அந்நிய மண்ணில் அமெரிக்கா்கள் மத்தியில் அதுவும், கிறிஸ்தவா்களின் மத்தியில் சுவாமி விவேகானந்தா் சிங்கமென இவ்வாறு மொழிந்தாா்: ‘மக்கள் பாவிகள் அல்ல, தெய்வத்தன்மை வாய்ந்தவா்கள்’.


இதைக் கேட்டுப் பலரும் வியப்புற்றனா். அதில் ஒருவா் இது பற்றி ஒரு கவிதையே எழுதிவிட்டாா். அந்தக் கவிதையின் கருத்து, ‘காவி உடையில் அழகுமிக்க ஓா் இந்து துறவியின் பேச்சைக் கேட்டேன். மானுடம் முழுவதும் கடவுளின் அம்சம் என்றாா் அவா்; நாம் பாவிகள் அல்ல என்றாா். இதைக் கேட்டதும் மீண்டும் கூறுங்கள் என்று குரல் கொடுத்தேன். சா்வசமய சபை அந்தக் கூற்றை ஏற்றுக்கொண்டு ஆரவாரம் செய்தது’ என்பதாகும்.


சுவாமிஜியின் சா்வமதச் சபையில் ஹிந்து சமயப் பேருரையைப் பற்றிய தமது கருத்தை சகோதரி அருமையாகக் கூறினாா்: “விவேகானந்தா் பேச தொடங்கியபோது ஹிந்துக்களின் சமய கருத்துகளைப் பற்றிக் கூறியதாகத் தோன்றிற்று. ஆனால் அவா் பேச்சை நிறைவு செய்தபோது இந்து சமயம் படைக்கப்பட்டது.”


சுவாமி விவேகானந்தா் படைத்த இந்து சமயம் எப்படிப்பட்டது?


‘கற்பு நெறியில் தன்னையும் காத்துக் கொண்டு தன் கணவனையும் காப்பாற்றி, தகுதி மிக்க புகழையும் காத்து உறுதி தளராமல் வாழ்கின்றவளே சிறந்த பெண்மணி’ என்றாா் திருவள்ளுவா். (குறள்- 56)


சுவாமி விவேகானந்தா் உரைக்கும் இந்துவானவன் கற்புடைய மங்கையா் போல் முதலில் தனது சமய நெறிகளைக் கடைப்பிடிப்பான்; தன் சமயத்தைக் காப்பாற்றுவான். கற்புடைய பெண் தன் கணவனைக் காப்பதுபோல், உண்மையான இந்துவானவன் தன்னைச் சோ்ந்தோரையும் தன் சமயத்தின் பாதுகாவலனாக மாற்றிவிடுவான். பிற சமயங்களையும் மதிப்பான். தன் சமயத்தையும் கடைப்பிடித்துக் காப்பாற்றி, பிற சமயங்களுடன் நல்லிணக்கம் வைத்து பொதுமக்களின் நன்மைக்காகப் பாடுபடுவதே இன்றைய இந்துவானவன் செய்ய வேண்டியது.


சுவாமி விவேகானந்தரின் சிந்தனைகளின்படி, ஒவ்வோா் இந்தியரும் தங்களது மதக் கோட்பாடுகளை முதலில் கடைப்பிடிப்பவராக விளங்க வேண்டும். தனது சமய வாழ்க்கையில் ஆழம் மிக்கவனாக, அனுஷ்டானம் கொண்டவராகத் திகழ வேண்டும்.


அவ்வாறு ஆன்மிகத்தில் வளா்ந்த பிறகு அவரது கவனம் எங்கே இருக்க வேண்டும் தெரியுமா? எங்கே இருக்கும் தெரியுமா? மக்களின் பொருளாதாரச் சீா்கேடு, வறுமை, கலாசாரச் சீரழிவு, கல்வி அறிவின்மை, பசி பஞ்சம் பட்டினி, திடீரென தாக்கும் தொற்றுநோய்கள், இயற்கைச் சீரழிவுகள் ஏற்படக் காரணங்கள் போன்ற உலக பொதுப் பிரச்னைகளைப் புரிந்து கொள்பவனாக அவா் விளங்க வேண்டும். அவற்றுக்கான தீா்வு காண்பவனாக இருக்க வேண்டும். மக்கள் துன்பப்படும்போது தான் வணங்கும் தெய்வமே துன்பப்படுவதாக நினைத்து ஜீவ சேவையான சிவ சேவை செய்ய வேண்டும்.


உன்னதமான இந்த மனநிலை, ஆன்மிக அனுபவம் ஹிந்து மதத்தினா் மட்டுமல்ல, எல்லா மதத்தினரும் புரிந்து கொள்ள வேண்டிய ஒன்றல்லவா? அதைத்தான் சுவாமிஜி பாரதத்தின் பெருமையாக, பண்பாடாகத் தமது சிகாகோ உரையில் உரைத்தாா்.


நூறு ஆண்டுகளுக்குப் பிறகு 1993, ஆகஸ்ட், 28 முதல் செப்டம்பா் 5 வரை நிகழ்ந்த சிகாகோ இரண்டாவது சா்வசமயப் பேரவையில் உலகெங்கிலுமிருந்து சுமாா் 6,000 போ் கலந்து கொண்டனா். அதில் ரோமன் கத்தோலிக்க தலைவா் ஜோஸப் பொ்னாண்டினும் தலாய்லாமவும் மற்றும் பலரும் கையொப்பமிட்ட ஓா் அறிக்கை வெளியிடப்பட்டது. உலக அமைதியும் நீதியும் தழைக்க எல்லா மதங்களின் ஒத்துழைப்பை நாட வேண்டும் என்ற அந்த அறிக்கை பின்வரும் உறுதிமொழியை மேற்கொள்ள வற்புறுத்தியது:


‘மதத்தின் பெயரால் இனிமேல் பிறரை நாம் அடக்கியாள மாட்டோம்; புண்படுத்த மாட்டோம்; மனித உயிா்களைக் கொல்ல மாட்டோம்; சித்திரவதை செய்ய மாட்டோம்’.


வாழு; வாழ விடு! இது சுவாமி விவேகானந்தா் அன்று சொன்னது; அதை என்று மக்கள் கேட்கிறாா்களோ அன்று உலகம் சொா்க்க பூமி ஆகிவிடும்.




- இன்று (செப். 11) சுவாமி விவேகானந்தா் சிகாகோ சா்வசமய மாநாட்டில் உரையாற்றிய தினம்.


கட்டுரையாளா்:

சுவாமி விமூர்த்தானந்தர்

தலைவா்,

ஸ்ரீராமகிருஷ்ண மடம், தஞ்சாவூா்.

அந்த ஞானச்சிறுவன்

 ஒரு உண்மைச் சம்பவம் -


தனது ஒன்பதாவது வயதில் தன் உடன் படித்த நண்பர்களோடு அந்தச் சிறுவன் _

தனது திருநகர் வீட்டிலிருந்து தினந்தோறும் திருப்பரங்குன்றம் சென்று முருகனை வழிபடுவது வழக்கம் -


அன்றும் அவன் வீதியில் சென்று கொண்டிருந்த பொழுது -


கிறிஸ்துவப் பாதிரியார் ஒருவர் மெகா போனை வைத்துக் கொண்டு மதப் பிரசங்கம் செய்து கொண்டிருந்தார் -


அந்தப் பிரசங்கத்தில் இந்து மதக் கடவுள் வழிபாட்டைக் குறை சொல்வதற்காக -

"ஏ.,.மானிடர்களே, நீங்கள் நடக்கின்ற சாலைகளிலே போடப்பட்டிருப்பது கல், உங்கள் வீட்டு வாயிற்படியில் போடப்பட்டிருப்பதும் கல், குளக்கரையில் துணி துவைக்க பயன்படுவதும் கல், நீங்கள் வணங்கும் கடவுள் அதுவும் கல்," -

"ஒரு காலத்தில் உங்கள் கால் பட்ட கல்லைத்தான் இப்பொழுது கோவிலில் வைத்துக் கடவுள் என்று சொல்கிறார்கள் " -


அதற்கு சக்தியுமில்லை, வணங்குகிற உங்களுக்குப் புத்தியும் இல்லை -


என்று பாதிரியார் பேசிக் கொண்டே போகிறார் -


இடையில புகுந்த அந்தச் சிறுவன் அவரது பேச்சைத் தடுத்து நிறுத்தி _


"எனக்கொரு சந்தேகம், கொஞ்சம் விளக்க முடியுமா?" என்று கேட்க -


அந்தச் சிறுவனை ஏற இறங்கப் பார்த்து கூடியிருந்த கூட்டத்தை நோக்கி "மகாகனம் மிக்க மக்களே, இதோ இந்தச் சிறுவன் என்னிடம் கேள்வி கேட்கப் போகிறான், நான் இப்பொழுது அவன் கேள்விகளுக்கு விளக்கமளிக்கப் போகி உங்கள் கவனத்தை என்பால் திருப்புங்கள்" என்றார் -


சிறுவன் கேட்டான் -


நமக்குப் பின்னால் பிறந்த ஒரு பெண்ணை என்னவென்று சொல்வோம்? -


" தங்கை என்போம், தமக்கை என்போம், சகோதரி என்போம் - என்றார் பாதிரியார்_


"நம்மைப் பெற்றவளை எப்படிச் சொல்வோம்?" _


"தாய் என்போம், அன்னை என்போம், அம்மா என்போம்" -


"நாம் மணந்து கொள்ளும் ஒரு பெண்ணை?" -


"மனைவி என்போம், துணைவி என்போம், இல்லத்தரசி என்போம்" -


இந்த மூன்று உறவும் உங்களுக்கு இருககிறதா?--


"தெரிந்துதான் கேட்கிறாயா? சிறுவனே _

தாயில்லாமல் யாரும் பிறக்க முடியாது -

என்ககுத் தாயும், இருக்கிறார் மனைவியும், இருக்கிறார் என்று ஏளனமாக பாதிரியார் பதிலளித்தார் -


"உடலால், உணர்வால், உறுப்புகளால் மூவரும் ஒரே தன்மை கொண்டவர்கள் தான் இல்லையா?" என்று அந்தச் சிறுவன் கேட்டான் -


பாதிரியார் "ஆமாம்" என்றதும் -


"உங்கள் மனைவியிடம் நீங்கள் நடந்து கொள்ளும் முறைக்கும், உங்கள் தாய் தங்கையிடமும் நடந்து கொள்ளும் முறைக்கும் வேறுபாடுகளும் வித்தியாசமும் இருக்கிறதா? இல்லை மூவரையும் ஒரே நோக்கோடுதான் பார்க்கிறீர்களா?" என்றதும் -


மெகா போன் கீழே விழுகிறது,

பாதிரியாரின் வாய் வார்த்தையின்றி திறந்தபடியே இருக்கிறது -

கூடியிருந்த கூட்டத்தார் பிரமிப்பும் பெருமிதமும் கொண்டு அந்தச் சிறுவனின் தோற்றத்தையும், வயதை மீறிய அறிவையும் போற்றிப் பாராட்டினர் -


பாதிரியார் தான் செய்த தவறுக்காக தன்னைக் குறுக்கிக் கொண்டு அந்தச் சிறுவன் முன் வந்து -

"தம்பி, இப்போது என் முதுகு மட்டும் உன் முன்னால் வளைந்திருக்கவில்லை, என் அறிவும் ஆணவமும் வளைந்து தான் இருக்கிறது", -


"எங்கள் மதத்தின் பால் கொண்ட ஈடுபாட்டால் சொல்லின் ஆழம் புரியாமல் பேசிவிட்டேன், மன்னித்து விடப்பா" என்று சொல்ல -


"பிற மதத்தைக் குறை சொல்லி உங்கள் மதத்தை வளர்க்கப் பார்க்காதீர்கள்" 

உங்கள் மதத்தின் மேன்மையைப் பிறருக்குப் புரிய வையுங்கள் -

பிடித்திருந்தால் அவர்கள் உங்களைத் தொடரட்டும் அதற்குத் தடையாக இங்கே எவரும் இருக்க மாட்டார்கள் -

மேலும், எல்லா மதத்திலும் மையப் பொருளாக இறைவன் தான் இருக்கிறான் என்பதையும் மறந்து விடாதீர்கள் என்றான் அந்தச் சிறுவன் -


ஒன்பது வயதில் இந்து மதத்தின் காவலராக நின்று பேசும் சாமர்த்தியம் எந்தப் பாடத்தில் அவர் படித்தது?-

இயற்கையின் வெளிப்பாடுகள் எப்படி கற்றுக் கொள்ளாமல் நடைபெறுகிறதோ, அப்படித்தான் அதுவும் -


அந்த ஞானச் சிறுவன் வேறு யாருமல்ல -


பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் தான் -


🙏🙏🙏🙏

மல்பெரியின் மரபணு வளங்கள்!: சில சுவாரஸ்ய தகவல்கள்

 


பட்டுப்புழுக்களுக்கு முக்கிய தீவனமாக விளங்கும் மல்பெரி செடிகளில் மரபணு வளம் இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது. இதுகுறித்து அறிய கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் வனக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் பட்டுப்புழுவியல் துறை பேராசிரியர்கள் மங்கம்மாள், உலகநாதன், சோழன் ஆகியோரைச் சந்தித்தோம்.“பட்டுப்புழு வளர்ப்பில் முக்கியத்துவம் வாய்ந்த அனைத்து நாடுகளும் வேளாண் தட்பவெப்பநிலைகளுக்கு ஏற்றவாறு புதிய மல்பெரி ரகங்களை உருவாக்க முயற்சி செய்து வருகின்றன. எந்தவொரு பயிர் மேம்பாட்டுத் திட்டத்திற்கும் தாவர இனங்களின் மரபணு வேறுபாடு முக்கியமானதாக கருதப்படுகிறது.இத்தகைய மகத்துவம் வாய்ந்த மரபணு வேறுபாடுகள் பயிர் இனப்பெருக்க ஆராய்ச்சியாளர்களுக்கு புதையல் போன்றதாகும். இந்த மரபணு வளங்களைப் பயன்படுத்தி அதிக விளைச்சல் தரும் வகையிலும், நோய் எதிர்ப்புத்திறன் மற்றும் வறட்சியைத் தாங்கும் வகையிலும், வெவ்வேறு சூழல்களைத் தாங்கி வளரும் வகையிலும் புதிய ரகங்களை உருவாக்க முடியும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த மரபணு வளங்கள் சுற்றுச்சூழல் பாதிப்பு, காடுகளை அழித்தல், தொழில்மயமாக்கல் மற்றும் நகரமயமாக்கல் போன்ற காரணங்களால் வேகமாக மறைந்து வருகின்றன. எதிர்காலத் தேவைகளுக்காக அவற்றை உடனடியாக பாதுகாக்க வேண்டும்.மத்திய பட்டுப்புழு வளர்ப்பு மரபணு வள மையம் 1990- ம் ஆண்டு ஓசூரில் (தமிழ்நாடு) தொடங்கப்பட்ட நாட்டின் பட்டுப்புழு மற்றும் மல்பெரி பாதுகாப்பு மற்றும் பயன்பாட்டிற்கான முதன்மை மையமாகும். இந்த மையம் புதுதில்லியில் உள்ள தேசிய தாவர மரபணு வளங்களின் பணியகத்தால் (National Bureau of Plant Genetic Resources NBPGR) மல்பெரிக்கான தேசிய மரபணு செயல்பாட்டு தனமாக ( National Active Germplasm Sites NAGS) அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த மையம் மல்பெரி மரபணு தோட்டம் அமைத்தல் மற்றும் உயிரி தொழில்நுட்ப பாதுகாப்பு வழிமுறைகள் இரண்டையும் பயன்படுத்தி பட்டுப்புழு வளர்ப்பு மரபணு வள மேலாண்மை தொடர்ந்து செயல்பாடுகளை மேம்படுத்த ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது.இந்த மையத்தில் 1269 மல்பெரி மரபணுக்கள் தோட்டம் அமைத்து பாதுகாக்கப்படுகின்றன. இவற்றில் 999 மரபணுக்கள் இந்தியாவிலும், 270 மரபணுக்கள் வெளிநாட்டிலும் சேகரிக்கப்பட்டது. பதிமூன்று மோரஸ் இனத்தை சார்ந்த மல்பெரி மரபணு வளங்கள் 25 நாடுகளில் இருந்து சேகரிக்கப்பட்டன.தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் கோயம்புத்தூர் மேட்டுப்பாளையத்தில் உள்ள வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் பட்டுப்புழுவியல் துறை அமைந்துள்ளது. இங்கு மல்பெரி பயிர் மேம்பாட்டு ஆய்வுகளுக்காக 81 மரபணுக்கள் மத்திய பட்டுப்புழு வளர்ப்பு மரபணு மையத்தில் இருந்து பெறப்பட்டது. இந்த 81 மரபணுக்களும் மோரஸ் இண்டிகா, மோரஸ் ஆல்பா, மோரஸ் லாடி போலியா, மோரஸ் லேவிகேட்டா, மோரஸ் கெதையானா, மோரஸ் அஸ்ட்ராலிஸ், மோரஸ் பாம்பிசிஸ் மோரஸ் ரோட்டுண்டிலோபா, மோரஸ் மேக்ரோரா, மோரஸ் சயினென்சிஸ் மற்றும் மோரஸ் நயகரா ஆகிய 11 மோரஸ் இனத்தை சார்ந்தது. இந்த 11 மோரஸ் இனமானது அதிக இலை விளைச்சல் மற்றும் உயிர்ப்பொருள், அதிக பழங்கள், அதிக அறுவடை, இலை ஈரப்பதத்தைத் தக்கவைக்கும் திறன், அதிக வேர்விடும் தன்மை, சிறந்த உருவவியல் வளர்ச்சிப் பண்புகள் கொண்டது. வெப்பமண்டல மற்றும் வறண்ட பகுதிகளுக்கும், வெப்பமண்டல மற்றும் காரத்தன்மை மண்ணிற்கும், வெப்பமண்டல மற்றும் அதிக ஈரப்பதத்திற்கும், மிதமான குளிருக்கும் ஏற்றது. மேலும் நோய்கள் மற்றும் பூச்சிகளுக்கு எதிர்ப்புத்தன்மை கொண்டது. நுண்துகள் பூஞ்சை காளானுக்கு எதிர்ப்புத்தன்மை மற்றும் இலை சுருக்க நோய்க்கு எதிர்ப்புத் தன்மையும் கொண்டுள்ளது. இந்த 81 மல்பெரி மரபணு வளங்களும் 6X6 அடி இடைவெளியில், 15 மீட்டர் உயர மரமாக வளர்க்கப்பட்டுள்ளது. ஒரு வரிசைக்கு 5 மரம் என்ற எண்ணிக்கையில் நடப்பட்டுள்ளது. வருடத்திற்கு இரண்டு முறை கவாத்து செய்யப்படுகிறது.

மல்பெரி மேம்பாட்டு ஆய்வுகள் 1960ம் ஆண்டிலேயே தொடங்கப்பட்டன.அதிலிருந்து, நாட்டில் பட்டுப்புழு வளர்ப்புப் பகுதிகளில் அதிக எண்ணிக்கையிலான மல்பெரி ரகங்கள் உருவாக்கப்பட்டு விவசாயிகளுக்கு பரிந்துரைக்கப்படுகின்றன. இன்று இந்தியாவில் பயிரிடப்படும் பெரும்பாலான ரகங்கள், மத்திய பட்டு வாரியத்தின் கீழ் இயங்கும் பல்வேறு தேசிய ஆராய்ச்சி மையங்களில் பராமரிக்கப்படும் மல்பெரி மரபணுக்களின் மூலம் உருவாக்கப்பட்டவை ஆகும். புதிய ரகங்களை உருவாக்குவதில் பயிர் இனப்பெருக்க ஆராய்ச்சியாளர்களின் பங்கு மிகவும் இன்றியமையாத ஒன்றாகும். பயிர் இனப்பெருக்க ஆராய்ச்சியாளர்கள் அடிப்படையில் மரபணு பொறியாளர்களாவர். அவர்களின் முக்கிய நோக்கம் பல்வேறு இனப்பெருக்க நுட்பங்களைப் பயன்படுத்தி பயிர்களை மேம்படுத்துவதாகும்.தமிழ்நாட்டில் பட்டுப்புழு வளர்க்கும் பெரும்பாலான விவசாயிகள் வி1 மற்றும் எம்ஆர்2 போன்ற ரகங்களைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்த ரகங்கள் நல்ல இலை விளைச்சல் கொடுத்தாலும் நீண்ட நாட்களாக ஒரே ரகங்களைப் பயன்படுத்துவதால் நோய்த் தொற்றுக்கு எளிதில் பாதிப்படைய வாய்ப்புள்ளது. எனவே, காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப புதிய ரகங்களை உருவாக்குவது மிகவும் இன்றியமையாத ஒன்றாகும். புதிய ரகங்களை உருவாக்குவதில் மரபணு வளங்களில் உள்ள மரபியல் வேறுபாடுகள் முக்கியப்பங்கு வகிக்கிறது. இந்த மல்பெரி மரபணுக்களை பயன்படுத்தி உயர் விளைச்சல் ரகங்கள் மட்டுமல்லாது பூச்சிகள், நோய்கள் மற்றும் வறட்சி தாங்கி வளரக்கூடிய ரகங்களை உருவாக்க முடியும். இவ்வாறு புதிய மல்பெரி ரகங்கள் வெளியிடும்போது பட்டுப்புழு வளர்க்கும் பெரும்பாலான விவசாயிகளுக்கு பெரிதும் பயனுள்ளதாக அமையும்’’ என பல தகவல்களை தெரிவித்தனர்.

தொடர்புக்கு

பேராசிரியர் மங்கம்மாள்: 95979 56268

தாய் தந்தை வித்தியாசம்???

 என் அம்மா எப்போதும் எங்களிடம் கூறுவார்:


 தந்தை வீட்டிற்கு வரும்போது சிரித்த முகத்துடன் எதிர் கொள்ளுங்கள், ஏனேனில்

 வெளி உலகம் உங்கள் தந்தையை வெறுப்பேற்றி  அலைகழிக்கச் செய்கிறது.


 தாய் தந்தை  வித்தியாசம்???


 தாய் 9 மாதங்கள் 

தன் வயிற்றில் சுமக்கிறாள்...

  வாழ்நாள் முழுவதும் தந்தை தன் தோளில் உங்களை சுமக்கிறார்.. (நீங்கள் உணரமாட்டீர்கள்)


 அம்மா உங்களை  பசிக்காமல் பார்த்துக் கொள்கிறாள்...

  நீங்கள் பட்டினி கிடக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை உங்கள் தந்தை கற்பிக்கிறார்.. (உங்களுக்குப் புரிவதில்லை)


 அம்மா உங்களை மார்பில் சுமக்கிறாள்.

அவரை நீங்கள் பார்க்க முடியும்..

 தந்தை உங்களை தன் முதுகில் சுமந்து செல்கிறார்.. (அவரை நீங்கள் பார்க்க முடியாது)


 தாயின் அன்பு, அது நீங்கள் பிறந்ததிலிருந்தே உங்களுக்குத் தெரியும்...


 தந்தையின் அன்பு

அது நீங்கள் தந்தையாகும்போது தான் உங்களுக்குத் தெரியும்..(பொறுமையுடன் இருங்கள்)


 ஒரு தாய்... விலைமதிப்பற்றவள்

  தந்தை..... காலத்தால்  மீண்டும்  வழங்க இயலாத சொத்து.

அவர்களைக் கண்டு கொள்ளாதீர்கள்

 

நடிகவேள் எம்.ஆர்.இராதா தனது விலை உயர்ந்த காரை தனது வீட்டின் முன்பாக நிறுத்தியிருந்தார். அந்த வழியாக தெரு நாய் ஒன்று அதன் மீது சிறுநீர் கழித்தது

இதைப்பார்த்த எம்.ஆர்.இராதா சிரித்தார்.


இதனைப் பார்த்துக் கொண்டிருந்த இராதாவின் உதவியாளர் " ஐயா நீங்கள் ஏன் நாயைப் பார்த்து விரட்டி விடாமல் சிரித்துக் கொண்டிருக்கின்றீர்கள் " என்று ஆச்சரியத்துடன் கேட்டார்.

அதற்கு அவர் மிகவும் சாந்தமாக,

"அந்த நாய் அதன் அறிவிற்கு எட்டியதைச் செய்கின்றது. அதற்கு இக்காரின் மதிப்பைப் பற்றித் தெரியாது. அதைப்பற்றி சொன்னாலும் அதற்குப் புரியாது " என்று சிரித்துக் கொண்டே கூறினார். கேள்வி கேட்டவர் இப்படி ஒரு பதிலை சற்றும் எதிர்பார்க்கவில்ல


இது போலத்தான் உங்கள் வாழ்விலும் உங்கள் மதிப்பை அறியாதவர்கள் உங்களை அவமானப்படுத்தும் போதும், கேலி செய்யும் போதும் அவர்களைப் புன்னகையுடன் கடந்து செல்லுங்கள். ஏனென்றால் அந்த நாய்களுக்கு சொன்னாலும் புரியாது . நாம என்ன அறிவுரை சொன்னாலும் திரும்ப திரும்ப அது சொன்னதையே செய்யும். அதை சிரித்துக் கொண்டே கடந்து போங்கள்.


கார் அழுக்கானா கழுவி சுத்தம் போயிரும். கோவப்பட்ட நம்ம மனசு அழுக்காகும். எப்ப பார்த்தாலும் அந்த நாயை கல்லெடுத்து அடிக்கத் தோணும். அது நமக்கு நல்லதல்ல. இது எல்லா விசயத்துக்கும் பொருந்தும்.


உங்கள் கடமை எதுவோ அதைச் சரியாக செய்யுங்கள். நீங்கள் செயல் வீரராக இருங்கள் அவர்களைக் கண்டு கொள்ளாதீர்கள்..


படித்ததில் சுட்டது....


ஒரு நீதிபதியின் ஒப்புதல் வாக்குமூலம்!

 

நீதியரசர் சூரியமூர்த்தி  கூறுகிறார்,


"எனக்கு அப்போது ஒரு பதினைந்து பதினாறு வயது இருக்கும், தீவிர கடவுள் மறுப்பாளராக(!!) இருந்தேன். அந்த சமயத்தில், எங்கள் கிராமத்தில், எங்களுக்கு சொந்தமாக ஒரு தென்னந் தோப்பு இருந்தது. அதில், ஒரு இஸ்லாமிய குடும்பம் வாழ்ந்து வந்தது. அந்த குடும்பத்தில், ஒரு நபரிடம், மருத்துவமனைகளில் கைவிடப்பட்ட விஷக்கடி கண்ட மக்கள் வருவார்கள். அப்படி வரும் அவர்களிடம், அந்த நபர் அவர்கள் தலையின் மீது ஒரு வேப்பிலை கொத்து வைத்து, ஏதோ உச்சரிப்பார் ,பிறகு அந்த நோயாளி நலமுடன் வீடு திரும்புவார்!!! இது எனக்கு மிகப்பெரிய ஆச்சரியத்தை கொடுத்தது. அந்த இஸ்லாமிய நபரிடம், நீங்கள் முனுமுனுக்கும் விஷயம்தான் என்ன?? என்று நான் கேட்டபொழுது, உனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை, உன்னிடம் இதை கூற முடியாது. ஒருவேளை உனக்கு நம்பிக்கை வந்தால்!! பிறகு வா பார்க்கலாம் என்று கூறி அனுப்பிவிட்டார்.


    காலங்கள்  உருண்டோடின. நான் சட்டம் பயின்று, வேலை கிடைத்து, படிப்படியாக பாண்டிச்சேரியின் நீதிபதியாக  உயர்ந்துவிடடேன். இந்த காலங்களில் நான் தீவிர சமய நம்பிக்கையாளனாகவும் மாறி இருந்தேன். ஒரு நாள் எனக்கு அந்த இஸ்லாமிய நபரின் நினைவு வந்தது!!! உடனடியாக நேரில் எங்கள் தென்னந்தோப்புக்கு சென்று, அவரிடம், இப்பொழுதாவது கற்றுத் தருவீர்களா??? என்று கேட்க, ஆச்சரியத்துடன் என்னை நோக்கிய அவர், போய் குளித்துவிட்டு வா உனக்கு உபதேசிக்கிறேன் என்றார்.


 நான் குளித்து முடித்து வந்ததும், என்னைக் கீழே அமரச் செய்து என் காதில் அவர் அந்த மந்திரத்தை சொல்லச் சொல்ல எனக்கு ஆச்சரியம் தாளவில்லை!!! ஏனெனில்  அவர் ஓதியது திருநாவுக்கரசர், விஷம் கண்டு இறந்து விட்ட அப்பூதியடிகளின் மகனை காப்பாற்ற பாடிய தேவாரப் பாடல்!!!.


 அவர் அந்த முழு பதிகத்தையும் என் காதில் ஓதி முடித்தவுடன், இது எங்கள் தேவாரப்பாடல் ஆயிற்றே எனக்கேட்க?? அவர் எனக்கு இதெல்லாம் தெரியாது. என் குருநாதர் எனக்கு சொல்லி கொடுத்தார் அதைக்கொண்டு நான் வைத்தியம் செய்கிறேன் என்று கூறி எனக்கு மேலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தினார்''.


இன்னதென்று தெரியவில்லை!!, அதன் அர்த்தமும் தெரியவில்லை!! அதன் மூலமும் உணரவில்லை!!! ஆனாலும் நம்பிக்கையுடன் ஓதுபவர்களுக்கு அதன் பலன்கள்  கிடைக்கிறது. 


 "தேவாரப் பாடல்கள் அனைத்தும் மந்திரச் சொற்களால் நிரம்பியவை. அவைகள் தமிழ் வேதத்தின் ஒரு அங்கம். நம் தமிழ் மக்கள் குறைதீர்க்க இறைவன் நமக்கு அளித்த பொக்கிஷம்''' இது நம்மில் எவ்வளவு பேருக்கு தெரியும்?!!

படித்ததில் பிடித்தது அன்புடன் ஞானம்.

Sunday, September 10, 2023

கணவன்-மனைவி உறவில் பிரிவை தடுக்க உதவும் '7'

கணவன்-மனைவி ஒருவருக்கொருவர் மனம் விட்டு பேசாதது, நேரம் செலவழிக்காதது போன்ற காரணங்களால் பிரச்சினைகள் அதிகரிக்கும். அதனால், இருவர் மட்டும் எங்காவது வெளியே சென்றுவரலாம். அது ஒரு நாள் இன்பச் சுற்றுலாவாக இருப்பது சிறப்பு. கணவன்-மனைவி உறவு, காதல், நட்பு என்று நீண்ட கால உறவு எதுவாக இருந்தாலும், அதில் சில ஆண்டுகளில் தேக்க நிலை ஏற்படுவது இயல்பு. உளவியல் வல்லுநர்கள் கருத்துப்படி ஏழு ஆண்டுகளில், ஏதோவொரு விலகல் இருவருக்குள்ளும் ஏற்படுவது இயற்கையானது. உறவுக்குள் சலிப்பு தோன்றும் அந்த உணர்வை, உளவியலில் 'செவன் இயர் இட்ச்' (Seven Year Itch) என்கிறார்கள். உறவில் நம்மைப் புதுப்பித்துக்கொள்ளாததும், உற்சாகம் குறைவதும்தான் 'செவன் இயர் இட்ச்'-க்குக் காரணம். அந்த ஏழாம் ஆண்டை நல்லவிதமாகத் தாண்டிவிட்டால், அதன் பிறகு எந்தச் சிக்கலையும் எளிதாகக் கடந்துவிடலாம். ஆனால், சிலர் அதற்குள் அவசரப்பட்டு 'இது நமக்கு ஒத்துவராது' என்று குடும்ப உறவை முறித்துக்கொள்வார்கள். விவாகரத்து அதி கரிக்க இதுவும் ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது. இவ்வாறு கணவன்-மனைவி உறவுக்குள் பிரிவு நேராமல் காப்பதற்கு ஏழு வழிகள் உண்டு. அவை... 

1. ஆலோசனை அவசியம் 

பிரச்சினையை உங்கள் மனதுக்குள் போட்டுக் குழப்பிக் கொண்டிருக்காமல், உங்கள் நம்பிக்கைக்கு உரிய ஒருவரிடம் கருத்து கேட்கலாம். உங்கள் மனதை அரித்துக்கொண்டிருக்கும் சிக்கலு க்கு அவர் எளிதாகத் தீர்வு சொல்லக்கூடும். 

2. எழுதிப் பாருங்கள்

உங்கள் கணவரிடம் உங்களுக்குப் பிடித்தது எது, உங்கள் இருவருக்குள் பிரச்சினை எதனால் ஏற்படுகிறது என்பதை எந்தவிதமான சமரசமும் இல்லாமல் எழுதுங்கள். அதைப் படிக்கும்போது, நீங்கள் செய்யும் தவறு என்ன? என்பது புரிந்து மனம் தெளிவாகும். 3. தயக்கம் தவிருங்கள் கணவன்-மனைவி உறவுக்குள் இருக்கக் கூடாதது தயக்கம். இருவரும் தங்கள் தேவை என்ன, எதிர்பார்ப்பு என்ன என்பதை, எவ்வித தயக்கமோ, கூச்சமோ இல்லாமல் தங்கள் துணையிடம் சொல்ல வேண்டும். 'அவர் ஏதாவது நினைத்துக்கொள்வாரோ?' என்று அனைத்தையும் மனதுக்குள் போட்டு மூடி வைப்பதுதான் ஒரு நாள் பெரிதாக வெடித்துவிடுகிறது. 

4. பெரியவர்களிடம் கேளுங்கள் 

முன்பெல்லாம் கூட்டுக்குடும்பமாக இருந்தபோது, சிறியவர்களுக்கு ஏதாவது பிரச்சினை என்றால் வீட்டுப் பெரியவர்கள் தலையிட்டு தீர்த்துவைப்பார்கள். தனிக்குடும்பங்களில் அது சாத்தியமில்லை என்பதால், குடும்ப பெரியவர்கள் அல்லது மனநல ஆலோசகர்களை அணுகலாம். 5. சுற்றுலா செல்லுங்கள் கணவன்-மனைவி ஒருவருக்கொருவர் மனம் விட்டு பேசாதது, நேரம் செலவழிக்காதது போன்ற காரணங்களால் பிரச்சினைகள் அதிகரிக்கும். அதனால், இருவர் மட்டும் எங்காவது வெளியே சென்றுவரலாம். அது ஒரு நாள் இன்பச் சுற்றுலாவாக இருப்பது சிறப்பு. 

6. பரிசு அவசியம்

 கணவன்-மனைவி இருவருமே, அவ்வப்போது ஏதாவது திடீர் பரிசு கொடுத்து அசத்தலாம். அது பணம் செலவழித்து வாங்கும் பொருளாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. 

7. 'அதற்கும்' திட்டமிடுங்கள்

 சிலர், 'குழந்தைகள் பிறந்துவிட்டார்கள், வளர்ந்து விட்டார்கள்' என்று அதையே ஒரு காரணமாகச் சொல்லி தாம்பத்திய உறவைத் தவிர்ப்பார்கள். கணவன்-மனைவி உறவுக்குள் இதன் காரணமாகவும் இடைவெளி உண்டாகும். அதனால், மாதத்தில் இதற்கென்று சில நாட்களாவது தம்பதியர் திட்டமிட்டு ஒதுக்க வேண்டும்.

பணம் வெறும் காகிதம் ஆன கதை

 ஹோட்டல் முதலாளியின் மாப்பிள்ளை 500 ரூபாய் நோட்டு ஒன்றை அசல் நோட்டு போல தத்ரூபமாக ஜெராக்ஸ் செய்து கொண்டான். அந்த ஜெராக்ஸ் 500 ரூபாய் நோட்டை   சட்டைப் பையில் வைத்துக் கொண்டு தனது மச்சான் ஹோட்டலுக்கு போனான். கல்லாவில் இருந்த மச்சானிடம் சிறிது நேரம் பேசிவிட்டு பையிலிருந்த ஜெராக்ஸ் 500 ரூபாய் நோட்டை எடுத்து மச்சான் இடம் கொடுத்து மச்சான் இதை கொஞ்சம் வைத்துக் கொள்ளுங்கள் நான் பிறகு வந்து வாங்கிக் கொள்கிறேன் என்று சொல்லி அவரிடம் கொடுத்துவிட்டு போய்விட்டான்.


சிறிது நேரம் கழித்து ஹோட்டலுக்கு பால் ஊற்றுபவர் தனக்கு ஒரு 500 ரூபாய் அவசரமாக வேண்டியிருக்கிறது. தனக்கு வர வேண்டிய பால் பணத்தில் கழித்துக் கொள்ளலாம் என்று சொல்லி முதலாளியிடம் பணம் கேட்கிறார். கல்லாவில் 500 ரூபாய் சேரவில்லை. சிறிது நேரம் யோசித்த முதலாளி தனது மாப்பிள்ளை கொடுத்துவிட்டு சென்ற 500 ரூபாய்யை பால்காரரிடம் கொடுக்க அந்தப் பணத்தை வாங்கிக் கொண்டு கடையை விட்டு சென்று விடுகிறார்
மாப்பிள்ளை வருவதற்குள் வியாபாரத்தில் 500 ரூபாய் தேற்றிவிட முடியாதா என்ற நம்பிக்கையில் தான் அந்த பணத்தை எடுத்து பால்காரரிடம் கொடுத்து விட்டார் ஹோட்டல்காரர்.

ஹோட்டலில் இருந்து 500 ரூபாயை வாங்கி சென்ற பால்காரர் நேராக தனது மனைவிக்குப் பிரசவம் பார்த்த லேடிடாக்டரை சந்தித்து அவருக்கு பாக்கி வைத்திருந்த 500 ரூபாயை கொடுக்கிறார். டாக்டரும் அந்தப் பணத்தை வாங்கிக் கொள்ள அங்கு இருந்த தனது கார் டிரைவரிடம் அந்தப் பணத்தை கொடுத்து பஜாரில் இருக்கிற டெய்லர் கடையில் பழைய பாக்கிக்கு இந்த 500ரூபாய் பணத்தை கொடுத்துவிட்டு பிள்ளைங்களுக்கு எடுத்து வைத்திருக்கும் புது துணிகளை தைக்க அளவெடுக்க வரச் சொல்லவும் என்று சொல்லி டிரைவரை டெய்லர் கடைக்கு அனுப்புகிறார் டாக்டர்.
டிரைவரும் டெய்லர் கடைக்குப் போய் டாக்டர் அம்மா வீட்டு பாக்கிக்கு இந்த 500 ரூபாய்யை வாங்கிக் கொள்ளும். வீட்டில் பிள்ளங்களுக்கு புது துணி அளவெடுக்கும் வரச்சொன்னார்கள் என்று தகவல் சொல்லிவிட்டு நகர்ந்தார் டிரைவர்.

காஜாப் பையனிடம் கடையைப் பார்த்துக்கொள் என்று சொல்லி டிரைவர் கொடுத்த 500 ரூபாயை எடுத்துக்கொண்டு ஹோட்டலுக்கு கிளம்பினார் டெய்லர்.

கல்லாவில் அமர்ந்திருந்த ஹோட்டல் முதலாளியிடம் ஐயா என் மகளின் சடங்குக்கு தங்கள் கடையில் சாப்பாடு வாங்கிய வகையில் 500 ரூபாய் பாக்கி இருக்கிறது இந்த 500 ரூபாயை வாங்கிக்கொண்டு கணக்கை நேர் செய்து கொள்ளுங்கள் என்று டிரைவர் கொடுத்த 500 ரூபாயை ஹோட்டல் முதலாளியிடம் தருகிறார் டெய்லர். சரி அப்படியே செய்து கொள்ளலாம் என்றபடியே ஐநூறு ரூபாயை வாங்கி வைத்துக் கொண்ட முதலாளி அதை கல்லாவில் தனியே ஒரு டப்பாவில் போட்டு வைக்கிறார்.
ஏனென்றால் மாப்பிள்ளை வந்து கேட்டால் 500 ரூபாய் நோட்டு தரவேண்டுமே என்ற எண்ணத்தில் இந்த 500 முழு ரூபாய் நோட்டை பத்திரப்படுத்தி வைக்கிறார்.

சிறிது நேரத்தில் அவரின் மாப்பிள்ளை வந்து மச்சான் நான் கொடுத்த 500 ரூபாய் கொடுங்கள் என்று கேட்டு வாங்கிக் கொள்கிறார்.தான் கொடுத்த 500 ரூபாய்   ஜெராக்ஸ் நோட்ஸ் தான் அது என்பதை உறுதி செய்துகொண்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தார் முதலாளியின் மாப்பிள்ளை.
வெளியே வந்த மாப்பிள்ளை ஜெராக்ஸ் எடுத்த 500 ரூபாயை சுக்கல் சுக்கலாகக் கிழித்துக் காற்றில் பறக்க விட்டார். இந்த 500 ரூபாய் ஒரு சுற்று சுற்றி  வந்ததில்  நடந்தது என்ன என்று கொஞ்சம் பார்ப்போம்.
முதலாளி பால்காரனுக்கு கொடுக்கவேண்டிய 500 ரூபாய் பாக்கி கணக்கு நேராகிவிட்டது. அதுபோலவே பால்காரன் டாக்டருக்கு கொடுக்க வேண்டிய கடன் நேர் ஆகிவிட்டது. அப்படியே டாக்டர் டெய்லருக்கு கொடுக்க வேண்டிய கடன் நேராகிவிட்டது. அதுபோலவே டெய்லர் ஹோட்டலுக்கு கொடுக்க வேண்டிய கடன் நேராகிவிட்டது.

இப்பொழுது ஜெராக்ஸ் நோட்டும் சுக்கல் சுக்கலாகி காற்றில் பறந்து விட்டது.
ஆனால் இத்தனை பேர் கடனும் நேராகி இருப்பது நிஜமே. இதில் நஷ்டம் அடைந்தவர் யாரும் இருக்கிறாரா? அல்லது மாயாஜாலம் ஏதும் நடந்துள்ளதா? *ஆகையால் நண்பா்களே பணம் என்பது வெறும் காகிதம் மட்டுமே நட்பு உறவு இதற்கு மதிப்பளிப்போம்

சிந்தனை செய்-பாம்பாட்டி சித்தர் சொல்

 🍁ஆடு மாடு கோழி மீன் லாம் செத்தா அதோட பிணத்தை எவ்வளவு  காசு கொடுத்தும் வாங்க ஆட்கள் இருக்கு...


🍁ஆனால் 
நீ செத்தா சும்மா கொடுத்தாக் கூட எவனும் உன் பிணத்தை  வாங்கமாட்டான்.

🍁நீ ஆசையா கட்டிய சொந்த வீட்டிலேயே அதிகபட்சம் 24 மணிநேரம் தான் உன்னோட பிணம் கிடக்கும்.

🍁நீ வாங்கிய Bathroom cleaner கூட வீட்டுக்குள்ள இருக்கும் ஆனா உன்னோட பிணம் வெளியே கிடக்கும்.

🍁இப்படி யாருமே விரும்பாத உடலை வெச்சிக்கிட்டு என்னவெல்லாம் ஆட்டம் போடுகிறோம்

🍁நான் யார் தெரியுமா 
நான் அப்படி நான் இப்படி என்று சுயதம்பட்டம் அளப்பரைகள்

🍁விதவிதமான ஆடைகள்
1000, 2000, 25000த்தில் 1,00,000த்தில் 10 லட்சம் மதிபுள்ள ஆடைபோட்ட உடல் என்பதர்க்காக புதைக்காமலோ எரிக்காமலோ விட்டுவிடுவார்களா 

🍁விதவிதமான உணவுகள்
3 Star 5 Star 7 Star Hotel ல் சாப்பிட்டு வளர்ந்த உடலடா என்றால் மட்டும் வீட்டில் வைத்து பூட்டிக்கொள்வார்களா 

🍁உலக அழகியே ஆனாலும் அந்த உடலைவிட்டு உயிர் போய்விட்டால் அது பிணமென்று தான் கூறுவார்கள் அதிபட்சம் 24 மணிநேரத்தில் சொந்தவீட்டிலிருந்து வெளியே கிடத்திவிடுவார்கள்

🍁பெரிய பெரிய பிரபலங்கள் பயன் படுத்திய ஆடை உபகரணங்களை போட்டி போட்டு வாங்க ஆட்கள் உண்டு

ஆனால்...

அந்த பிரபலங்களின் பிணத்தை வாங்க எவர் உண்டு??

🍁இதைத்தான் பாம்பாட்டிச் சித்தர் இவ்வுடலானது அரைக்காசுக்கு ஆகாதென்று ஆடு பாம்பே என்று பாடுகிறார்...


சனாதன தர்மம் என்றால் என்ன?

 

இந்த கேள்வியை நாம் பலமுறை எதிர் கொண்டிருப்போம். ஆனால் நம்மில் பலருக்கு இதற்கான சரியான விடை தெரியுமா என்பது சந்தேகமே. ஹிந்து மதமே சனாதன தர்மம் என்று சிலர் நினைக்கிறார்கள். அது ஒரு வகையில் சரி என்றாலும், சனாதன தர்மம் என்பது  மதத்தைத் தாண்டிய விஷயமாகும். 

சனாதனம் என்பதற்கு ‘புராதனம் அல்லது காலத்தால் அழியாதது’ என்று பொருள். ஒருவர் தன் வாழ்வை ஒழுக்கமாகவும் நிறைவாகவும் வாழ உதவும் கோட்பாடுகளே சனாதன தர்மம் எனலாம்.   இந்தக் கோட்பாடுகள் வழிகளே அன்றி விதிகள் அல்ல. அதாவது ஒருவர் எந்த மதத்தவர் ஆனாலும் (அல்லது மதமற்றவராக இருந்தாலும் கூட ) அவர் சனாதன தர்மத்தைப் பின்பற்ற முடியும்.சனாதன தர்மத்தில் என்னவெல்லாம் இருக்கின்றன என்பதை பார்ப்போம். 


*உண்மை உரைத்தல்*
நமது வேத நூல்களில், உண்மை பேசுவது பற்றி பல மேற்கோள்கள் உள்ளன.  உபநிஷதங்களில் ‘சத்யம் வத‘ (உண்மையைப் பேசு) போன்ற வரிகள் உள்ளன. கீழே உள்ள நீதி ஸ்லோகமும் இதையே குறிப்பிடுகிறது:

“சத்யம் ப்ரூயாத் பிரியம் ப்ரூயாத் ந ப்ரூயாத் சத்யம் அப்ரியம்
ப்ரியம் சா ந அன்ருதம் ப்ரூயாத் ஏஷ தர்ம: சனாதன: “
அதாவது, “சத்தியமும் இனிமையும்  வாய்ந்தவற்றைப் பேசவேண்டும்.  உண்மையாய் இருப்பினும் கடுமையாக இருப்பதை பேசக் கூடாது. அதைப் போல இனிமையானதும் பொய்யானதையும் கூட பேசக்கூடாது. இதுவே சனாதன தர்மமாகும்.”
ஸ்ரீராமர் மற்றும் ராஜா அரிச்சந்திரனின் கதைகள் இந்தக் கருத்தை நமக்கு தெளிவாக விளக்குகின்றன.

*பெரியவர்களை மதித்தல்*
வேதங்களில் வயது முதிர்ந்தவர்களை மதித்தல் பற்றி பல இடங்களில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. தைத்திரீய உபநிஷத்தில் கூறப் பட்டவைகளில் முக்கியமானவை கீழே:
“மாத்ரு தேவோ பவ ; பித்ரு தேவோ பவ
ஆச்சார்ய தேவோ பவ ; அதிதி தேவோ பவ “
இந்த கலாச்சாரத்தில் தாய்-தந்தையர், குரு மற்றும் விருந்தினர்களுக்கு ஒரு மேன்மையான இடம் உண்டு. இன்றும் வீட்டில் ஒரு நல்ல சம்பவம் நடக்கும் போது நாம் நம் வீட்டு பெரியவர்களின் ஆசி பெற்றே அந்த செயலைத் தொடங்குகிறோம் அல்லவா ?

*சுத்தம் பேணுதல்*
நமது நூல்களில் சுகாதாரம் பேண விவரமாக பல விதிகள் உள்ளன. உதாரணமாக,  கழிப்பறைக்கு செல்லுதல் , கிரகணம் போன்ற நிகழ்வுகள் முதலானவைக்குப் பிறகு  குளித்தல் மிக அவசியமாகக் கருதப்படுகிறது. அதைப்  போல நோயாளிகள், முதியவர்கள் ஆகியவர்களிடம் பேசும் பொது இடைவெளி கடைபிடித்தல், துக்க நாட்ககளில் பிரிவு அனுஷ்டித்தல் போன்றவை பற்றிய பல குறிப்புகளும் நம்மிடம் உள்ளன. நம்முடைய (பிறரைத் தொடாமல்) கை கூப்பி வணங்கும் பழக்கம் ஒன்றே நம்முடைய சுகாதாரம் பேணும் முறைக்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டாகும்.

*உணவின் பங்கு*
நமது பாரம்பரிய மருத்துவமான ஆயுர்வேதத்தில் ஆரோக்கியமான வாழ்க்கைக்குத் தேவையான உணவுகள் பரிந்துரைக்கப் பட்டிருக்கின்றன. எந்த உணவுகளை சேர்த்து உண்ணலாம், எவற்றைச் சேர்க்கக் கூடாது, எவற்றை அன்றே உண்ண வேண்டும்  முதலான பல விதிமுறைகளை நாம் அதில் காணலாம். அதே போல  மஹாபாரதத்தில் வரும் சுக்ராச்சாரியார் மற்றும் கச-தேவயானி விருத்தாந்தம் மது வகைகளின் தீமை பற்றித் தெளிவாக விளக்குகிறது.
அஹிம்சைக்கு முக்கியத்துவம்
அஹிம்சை நமது கலாச்சாரத்தின் முக்கிய அங்கமாகும். ‘அஹிம்சா பரமோ தர்ம:’ (அஹிம்சையே மேலான தர்மம்) என்பது நமது கோட்பாடாகும். எனவே தான் நாம் பசு முதலிய விலங்குகளுக்கு நாம் இறை ஸ்தானம் தருகிறோம். ஜீவகாருண்யத்தின் மகத்துவத்தை உணர்ந்ததால் தான் நாம் துளசி போன்ற செடிகளின் இலைகளை பறிக்கும் முன் நாம் ஸ்லோகம் சொல்லி மன்னிப்பு கோருகிறோம்.

*ஒழுக்கமான வாழ்க்கை*
நமது வாழ்க்கையானது அறம், பொருள், இன்பம் மற்றும் வீடு ஆகிய பேறுகளை உள்ளடக்கியது. இவற்றைச் சரிவர பின்பற்றி வாழ்ந்தோமானால் வாழ்க்கை இனியதாக இருக்கும். அப்படி இல்லாமல் பொருள் மற்றும் பிற இன்பத்தில் மனதை செலுத்தினால் வாழ்வில் துன்பமே மிஞ்சும். இதையே ஆதிசங்கரரின் பஜகோவிந்தம் இப்படி குறிப்பிடுகிறது.
“அர்த்தம் அனர்த்தம் பாவய நித்யம்”    “ஏதத் மாம்சவஸாதி விகாரம்”
“பொருளைக் கண்டு மயங்காதீர் “, ” உடல் மீது உள்ள ஆசை நிலை இல்லாதது”

*ஒரு கடவுள், பல வடிவங்கள்*
சனாதன தர்மத்தின் முக்கிய நம்பிக்கைகளில் ஒன்று – கடவுள் ஒன்றே என்றாலும் அவர் பல வடிவங்களில் வழிபடக் கூடியவர். இதனால் தான் உருவ வழிபாடு, அருவ வழிபாடு, ஒளி வழிபாடு, இயற்கை வழிபாடு, த்யானம், நாம சங்கீர்த்தனம் என எந்த விதமான வழிபாட்டு முறைக்கும் நம் மதத்தில் இடம் இருக்கிறது. புத்தம், சமணம், சீக்கிய மதம் போன்ற கிளை மதங்கள், சாக்தம், சைவம், வைணவம் போன்ற குறிப்பிட்ட கடவுள் வழிபாடு முறைகளையும் நாம் இங்கு காணலாம். ஆச்சரியம் என்னவென்றால் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் கூட சனாதன தர்மத்தை கடைபிடிக்க முடியும். உதாரணமாக, இராமாயணத்தில் சக்கரவர்த்தி தசரதரின் அரசவையில் ஜாபாலி முனிவர் இத்தகைய கருத்துக்களை உடையவரே. எனினும் அரசவையில் வசிஷ்டர் முதலியவர்கள் நடுவில் அவரும் மதிக்கப் பட்டார். 

*ஆன்மிகத்தில் அறிவியல்*
பண்டைய கால மக்கள் ஆன்மிக வாழ்க்கை முறையைப் பின்பற்றினாலும், அறிவியல் உண்மைகளையும் அறிந்தவர்களாக இருந்தனர். இதற்குப் பல உதாரணங்கள் உள்ளன. பாணினி சம்ஸ்க்ருத இலக்கணத்திற்கான முதல் நூலை இயற்றினார். பதஞ்சலி முனிவர் யோக சாஸ்திரத்தின் தந்தையாகக் கருதப்படுகிறார்.  சுஷ்ருதர் மருத்துவத் துறைக்கு பெருஞ்சேவை செய்திருக்கிறார். சாணக்கியரின் அர்த்தசாஸ்திரம் இன்றும்  பொருளுடையதாக இருக்கிறது.  இவர்கள் அனைவரும்  சனாதன தர்மத்தை வளர்த்தவர்களே.

*உலக அமைதியே நோக்கம்*
நம் ஆன்மிக நூல்கள் அனைத்திலும்  உலக நன்மையே  பிரதான நோக்கமாக உள்ளது. அமைதி என்பது ஒரு நாட்டுக்கோ அல்லது ஒரு சமூகத்திக்காக மட்டும் அல்லாமல் இந்த ப்ரபஞ்சத்துக்கே ஏற்பட வேண்டும் என்பதே நம் நோக்கமாகும். அதுவும் மனித குலத்திற்கு மட்டும் அன்றி பறவைகள், விலங்குகள், தாவரங்கள் என அனைத்து ஜீவராசிகளுக்கும் நன்மை ஏற்பட நாம் விரும்புகிறோம்.

*பரிணாம வளர்ச்சி*
ஒன்றை கவனித்தோமானால் காலப் போக்கில் பல சாம்ராஜ்யங்கள், கலாச்சாரங்கள், பழக்கவழக்கங்கள் முதலியன வழக்கொழிந்து நசித்து போனதை உணரலாம். இதற்கு பல காரணங்கள் இருந்த போதும் மிக முக்கிய காரணம் அவை சூழலின் மாற்றத்திற்கேற்ப மாறாததே ஆகும். நம் நாகரீகம் மிகப் பழமையான நாகரிகங்களில் ஒன்று. ஆனால் இன்றும் அது தழைத்து வீறு நடை போட்டு வருகிறது. நாம் காணாத ஆபத்துக்களா, அனுபவிக்காத இன்னல்களா! எனினும் காலத்தின் சுழற்சியோடு நாம் மேன்மேலும் வலுப்பெற்றே வருகிறோம். 
மேலே குறிப்பிடப்பட்ட அம்சங்களை பார்த்தோமானால், பெரும்பாலானவைகளில் கடவுள் பற்றிய குறிப்பை நாம் பார்க்கவில்லை.  ஒரு வாழக் கூடிய வழியே நம் கண்களுக்குத் தெரிகிறது. எனவே தான் சனாதன தர்மம் என்பது ஒரு வாழும் முறையே அன்றி ஒரு மதம் அல்ல என்று நாம் கூறுகிறோம்.

நாம் அனைவரும் ஒன்று கூடி நமது பாரம்பரியத்தைப் பாதுகாப்போமாக!

ஆசைகள் ஓட்டை குடம் போன்றது.

 🌼ஒபாமா தனது 55 வது வயதில் அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறார்


🌼 ஆனால் டிரம்ப் தனது 70 வது வயதில் தான் அதிபர் ஆகிறார்

🌼பில்கேட்ஸ் தனது 30 களிலேயே உலகின் பெரிய செல்வந்தர் ஆனார்

🌼 ஆனால் INDITEX SPAIN நிறுவனத்தை தனது 50 ஆவது வயதில் தான் தொடங்கி அமான்சியோ ஓர்டேகா 80 வயதில் தான் உலகின் இரண்டாவது பெரிய செல்வந்தர் ஆனார்.

🌼இளமை காலங்களில் வாய்ப்பு கிடைக்காமலும் சரியான திரைப்படங்கள் அமையாமலும் தடுமாறிய விக்ரமிற்கு 34 வது வயதில் தான் சேது படம் அமைந்து திருப்பத்தை ஏற்படுத்தியது

🌼24 வயதில் திருமணம் செய்த ஒருவர் தனது 30 வது வயதில் இறந்தார், 

🌼தனது 40 வயதில் திருமணம் செய்தவர் தற்போது 62 வயதில் உடல் நலத்துடன் உள்ளார், தனது மகளுக்கு தெம்பாக வரன் பார்த்து வருகிறார்

🌼எல்லோருக்கும் எல்லாமும் அது அதற்கு உண்டான வயதில் கிடைப்பது அரிது.

🌼 எனவே உங்களுக்கு ஒன்று கிடைத்து விட்டால் அது கிடைக்காமல் போராடும் மற்றவரை ஏளனம் செய்யாதீர்கள்.

 🌼உங்களை மற்றவரோடு சதா ஒப்பிட்டு உங்களிடம் இல்லாததை நினைத்து புலம்பாதீர்கள்.

🌼யார் கண்டது, 
அடுத்த நொடி நமக்கு என்ன நடக்கும் என்று, இந்த உலகமே ஒரு பெரிய விபத்தால் உருவானது தான். 

🌼எனவே எதிர்காலத்தில் நடக்கவிருப்பதை எல்லாம் கட்டுப்படுத்த நினைப்பது முட்டாள்தனம்.

🌼 இங்கே இப்போது இந்த நொடியில் என்ன செய்து கொண்டு இருக்கிறீர்களோ அதை முழுமையாக விழிப்புணர்வுடன் செய்யுங்கள். 

🌼அடுத்த நொடி நிச்சயம் அழகாய் மலரும்.
தேவைகளை நிச்சயம் பூர்த்தி செய்து கொள்ள முடியும் 

🌼ஆனால் ஆசைகள் ஓட்டை குடம் போல எப்போதும் நிறைவு செய்ய  முடியாது.

சனாதனத்தை ஒரு நாளும் ஒழிக்க முடியாது!

 ஆர்.ரங்கராஜ் பாண்டே, பத்திரிகையாளர்,

'சாணக்யா - யு டியூப் சேனல்' நிறுவனர்

'ஆம்படையான் அடிச்சாலும் அடிச்சான், கண் பூளை கலைஞ்சது' என்று ஒரு பழமொழி சொல்வது உண்டு. அப்படித்தான், தமிழக அரசின் காலை சிற்றுண்டி திட்டம் பற்றி, 'தினமலர்' நாளேட்டின் ஈரோடு, சேலம் பதிப்பு செய்திக்குப் பின், சனாதனம் பற்றிய விவாதம் இன்னொரு முறை எழுந்திருக்கிறது.
சனாதனம் பற்றி பேசுவதற்கு நான், தகுதியானவன் இல்லை. தகுதியானவர்கள் அமைதியாக இருப்பதாலும், எல்லாரும் பேச ஆரம்பித்து விட்டதாலும், நாமளும் எழுதி வைப்போமே என்பதே இந்தக் கட்டுரை.இன்னொரு காரணமும் இருக்கிறது. அது, பா.ஜ., பற்றிய விமர்சனமாக இருந்தால் அவர்கள் பதில் சொல்லட்டும் என விட்டு விடலாம்; அ.தி.மு.க., மீதான குற்றச்சாட்டாக இருந்தால், பழனிசாமி பார்த்துக் கொள்வார் என அமைதியாகலாம். இது, சனாதனம் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால், ஒவ்வொரு ஹிந்துவும் பேச வேண்டும் என நினைக்கிறேன்.

முன்னுரை முடிந்தது. இனி என்னுரை.

சனாதனம் என்றால் என்ன என்று நான் சொன்னால், சண்டைக்கு வருவர். ஜாதி, மதம், எழுதுகிற நாளேடு எல்லாமே வம்புக்கு உள்ளாகும். அதனால், ஆரிய, வந்தேறி, பார்ப்பனர்கள் நடத்துகிற விக்கிப்பீடியா என்ன சொல்கிறது என தேடிப் பார்த்தேன்.

Santana Dharma - is an endonym used by Hindus to refer to Hinduism.

அதாவது, சனாதன தர்மம் என்பது இந்து மதத்தை குறிப்பிடுவதற்கான வார்த்தை என அர்த்தம்.

சரி, அவர்கள் ஒருவேளை பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் கையாளாக இருக்கலாம் என்பதால், இந்த Britannica என்ன சொல்கிறது என எட்டிப் பார்த்தேன்.



Sanatana Dharma, in Hinduism, term used to denote the 'eternal' or absolute set of duties or religiously ordained practices incumbent upon all Hindus, regardless of class, caste, or sect.

அதாகப்பட்டது, சனாதன தர்மம் என்பது பிரிவு, ஜாதி, இனம் என்ற எந்த பாகுபாடும் இல்லாமல், ஹிந்துக்களால் கடைபிடிக்கப்படும் நிலையான அல்லது முழுமையான கடமை மற்றும் மத வழக்கம்.

அடப்பாவமே... அவர்களுமே இந்து மதத்தின் பூர்வீகப் பெயர் தான் சனாதனம் எனச் சொல்லிவிட்டார்களே... அமித் ஷா வேலையாக இருக்குமோ என அஞ்சி, சுப்ரீம் கோர்ட் ஏதாவது சொல்லி இருக்கிறதா என்று பார்த்தேன்...

இந்த ஆண்டு பிப்ரவரியில் நீதியரசர் நாகரத்னா, 'Hinduism is a way of life. Because of that India has assimilated everybody. Because of that we are able to live together' என, ஒரே போடாக போட்டுவிட்டார். 

'ஹிந்து மதம் என்பது ஒரு வாழ்க்கை முறை. அதனால் தான் இந்தியா எல்லாரையும் அரவணைக்கிறது. அதனால் தான் நாமெல்லாம் ஒற்றுமையாக வாழ முடிகிறது' என்று இதற்கு அருஞ்சொற்பொருள். அவரும் பா.ஜ., தான் என யாரும் சொல்ல மாட்டார்கள் என நினைக்கிறேன்.

இப்படி கல் தோன்றி மண் தோன்றா காலத்து முன் தோன்றிய மூத்த மதத்தை ஹிந்து மதம் எனக் குறிப்பிடாமல் ஏன் இவர்கள் சனாதனம் என்றே அழைக்கின்றனர்?

1. வழக்கு போட்டால் தப்பிக்கலாம். 

2. யாரையோ சொல்வதாக அப்பாவி மக்கள் நினைத்துக் கொள்வர். 

3. அப்போது தான், 'சனாதனத்தை ஒழிக்க வேண்டும்' என்று பேசிவிட்டு, 'நான் எந்த மதத்துக்கும் எதிராக பேசவில்லை' என சொல்ல முடியும்.

அதையெல்லாம் விடுங்கள்... 

ஹிந்து மதத்தை இழிவுபடுத்துவது, தமிழகத்தில் காலம் காலமாக நடப்பது தானே... அப்போதெல்லாம் உணர்ச்சிவசப்படாதவர்கள், திடீரென துாங்கி எழுந்து, இந்திரா காந்தி இறந்துவிட்டாரா என 'ஷாக்' ஆவது ஏன்? என்று ஒரு கேள்வி வரலாம்.

இதற்கு முன்னர் இருந்தவர்கள் எல்லாம், அரசு பதவியில் இருந்தவர்கள் இல்லை அல்லது, அரசு பதவியில் இருந்தபோது பேசியதில்லை. இப்போது, ஒரு அமைச்சரின் முன்னிலையில் இன்னொரு அமைச்சரே பேசியதால் தான் இவ்வளவு பரபரப்பும்.

சரி, பேச்சுக்கு வருவோம்!

சனாதனம் எதிர்க்கப்பட வேண்டியது அல்ல; ஒழிக்கப்பட வேண்டியது.

சூப்பர். அப்படியானால், 'இந்தியா' கூட்டணியின் அடுத்த கூட்டத்தில் இது ஒரு தீர்மானமாக நிறைவேற்றப்படுமா? பிரதான கூட்டணியாக இருந்து, மும்பை விருந்து வழங்கிய சிவசேனா... என்ன சேனா? சிவசேனா... இந்தக் கூற்றை ஏற்குமா?

சரி, எதனால் சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்? ஏனென்றால் அது வர்ணாசிரமத்தை வளர்க்கிறது; ஜாதியை துாக்கிப் பிடிக்கிறது என்கின்றனர்.



முதலில் வர்ணாசிரமத்தை பார்ப்போம். வர்ணாசிரமம், இந்து மதத்தில் அதிகாரப்பூர்வமாக உள்ளது தான். மறுப்பதற்கோ, மறைப்பதற்கோ இல்லை. ஆனால், இதை ஒரு அதிகாரப் படிநிலையாக தான் இந்து மதம் சொல்லி இருக்கிறதே தவிர, பாகுபாடாக குறிப்பிடவில்லை. 

ஒரு கட்சியில், எப்படி தலைவர், துணைத் தலைவர்,பொதுச்செயலர், பொருளாளர், மாவட்ட தலைவர்,நகரச் செயலர் என வேறு வேறு பதவிகளுக்கு, வேறு வேறு அதிகாரங்களும் உரிமைகளும் இருக்கின்றனவோ, அது போல நான்கு வர்ணங்களுக்கு பொறுப்புகள் வழங்கப்பட்டன. 

நான்கு வர்ணத்தவருக்கும் பூணுால் உண்டு என்பது, உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்? இன்றளவும், ஆசாரி, செட்டியார், நாயுடு, வன்னியர் உள்ளிட்ட பல்வேறு சமுதாய மக்களை, நல்ல / பொல்லா நாட்களில் பூணுால் அணிவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இந்த வர்ணங்கள், பிறப்பால் அமைக்கப்பட்டவை இல்லை. அவரவர் செய்யும் தொழிலால் வகுக்கப்பட்டவை. வேலை தெரிந்தவர்கள், தங்களுடைய தொழில் திறமையை, தங்களது குடும்பத்திற்கு மட்டுமே சொல்லிக் கொடுத்ததால், அந்தத் தொழில்கள் குலத் தொழில்களாக மாறின. 

இப்போதும் கூட அரசியல் கட்சித் தலைவர்கள், தங்களுடைய குடும்பத்தினரை அடுத்த வாரிசாக கொண்டு வருவதைப் பார்க்கிறோம். அப்படி அவரவர் குடும்பத்திற்கு சொல்லிக் கொடுத்த தொழில்நுட்பத்தின் விளைவாகத் தான் இந்த வர்ணாசிரமம், பிறப்பு அடிப்படையில் மாறியது.

எல்லாரும் சமம் என்பது, எழுதவும் பேசவும் இனிப்பாக இருக்கும்; நடைமுறையில்அது சாத்தியமில்லை. ஒரே காரில் பயணிப்பதால், உரிமையாளரும் டிரைவரும் ஒன்றில்லை. 

'எங்களை என்ன தாழ்த்தப்பட்டவர் என்று நினைத்தார்களா?' என்று, ஒரு முன்னாள் மத்திய அமைச்சர் பேசுகிறார். 'பட்டியல் சமூகத்துக்கு நாங்கள் போட்ட பிச்சை' என இன்னொரு பிரமுகர் பேசுகிறார். பாகுபாடு காட்டுவது சனாதனம் என்றால், இவர்களுடைய பேச்சு என்ன தனம் என தெரிந்து கொள்ள முயற்சிக்கிறேன்.

வர்ணாசிரமம் ஹிந்து மதத்தில் உள்ளது தான் என்று ஏற்கும் அதே நேரத்தில், ஜாதி பற்றி ஹிந்து மத நுால்கள் எவையேனும், எங்கேயும் பேசி இருக்கின்றனவா என அறிய விரும்புகிறேன். 

ஜாதி என்பது ஒரு மதம் சார்ந்து உருவானது அல்ல. அந்தந்த சமூக குழுக்கள், அவர்களுக்கு உள்ளாகவே உருவாக்கிக் கொண்டது. 

அதனால்தான் நான்கு வர்ணங்களும், வடமொழி பெயரில் இருக்கும்; ஆனால் ஜாதிப் பெயர்கள் அந்தந்த மாநில மொழிகளில் இருக்கும். வன்னியர், நாடார், செட்டியார், முக்குலத்தோர் போன்றவை எல்லாம், வடமொழி பெயர்கள் என, யாரும் சொல்ல மாட்டார்கள் என நினைக்கிறேன்.

சரி, இந்த பாகுபாடு ஹிந்து மாதத்தில் மட்டும் தான் இருக்கிறதா? மற்ற மதங்களில் இல்லையா? 

கிறிஸ்துவத்திலும் பாகுபாடு இருக்கிறது என, என்னுடைய நேர்காணலில், அருட் தந்தை ஜெகத் கஸ்பரே ஒப்புக்கொண்டார். இஸ்லாத்தில் பாகுபாடு இல்லை என்றால், பாகிஸ்தானிலும், ஆப்கானிஸ்தானிலும் ஏன் குண்டு வெடிக்கிறது என ஆராய்ச்சி செய்ய வேண்டும். 

எனவே, மதங்கள் பாகுபாடு காட்டுவதில்லை; மதத்தின் பெயரால் மனிதர்கள் பாகுபாடு காட்டுகின்றனர்.

அப்படியே ஹிந்து மதத்தில்ஏற்றத்தாழ்வு இருப்பது உண்மை என்றால், அந்த ஏற்றத்தாழ்வைத் தான் சரிசெய்ய வேண்டுமே தவிர, ஒட்டுமொத்த மதத்தையே அழிப்போம் என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. 

இந்த ஆண்டு ஆடி மாதம், சென்னை கோயம்பேடில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் நிகழ்ச்சியில், பாதுகாப்புக்கு நின்ற பெண் போலீசுக்கே பாலியல் தொந்தரவு கொடுத்ததால், தி.மு.க., பிரமுகர் கண்ணன் என்பவர் கைது செய்யப்பட்டார். இப்போது கண்ணனை குற்றம் சொல்லாமல், ஒட்டுமொத்த தி.மு.க.,வையே ஒழிக்க வேண்டும் என யாராவது சொன்னால் ஏற்க முடியுமா?

சரி, சனாதானம் தான் பாகுபாடு பார்க்கிறது என்றால், அதே மேடையில் இருந்த பீட்டர் அல்போன்சை, காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆக்காததற்கு என்ன காரணம்? அவரே என் நேர்காணலில் குறிப்பிட்டிருக்கிறார், நான் கிறிஸ்துவன் என்பதால் தான், மாநிலத் தலைவர் ஆக்கப்படவில்லை என!

சரி, ராமானுஜர் சனாதனவாதியா இல்லையா? அவரைப்பற்றி எதற்காக, ராமானுஜ காவியம் எழுதப்பட்டது?

சனாதனத்துக்கு வக்காலத்து வாங்கும் பா.ஜ.,வில் அகில இந்தியத் தலைவராக ஒரு பட்டியலினத்தவர் இருந்திருக்கிறார். பட்டியலினத்தவர்கள் இரண்டு பேர், மாநிலத் தலைவர் ஆக்கப்பட்டிருக்கின்றனர். சனாதனத்தை ஒழிக்கக் குரல் கொடுக்கும் கட்சியில் அது சாத்தியமா?

சனாதனத்தை ஒழிக்க வேண்டுமென்றால், அவற்றின் ஆணி வேராக இருக்கும் கோவில்களில் மூக்கை நுழைப்பது ஏன்? அறநிலையத் துறையை கலைத்துவிட வேண்டியது தானே?

சனாதனம் என்றால், அழியாதது என்று அர்த்தம். முடிவில்லாதது என்று பொருள். எப்போதும் இருப்பது. சந்திர சூரியர்கள் உள்ளவரை இருக்கும். 

கடந்த, 1323இல், திருவரங்கத்தில் உல்லுக் கான், 12,000 வைஷ்ணவர்களின் தலையைத் துண்டித்த பின்னரும், சனாதனம் இருந்தது. அவுரங்கசீப் ஆட்சிக் காலத்தில், இந்துவாக இருப்பதற்கே 'ஜிஸ்யா' வரி விதித்தபோதும், சனாதனம் இருந்தது. 

சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் கட்டிய அரண்மனை இல்லை; சனாதனத்தின் சாட்சியாக, அவர்கள் கட்டிய கோவில்கள் இருக்கின்றன.

சர்வே ஜனா சுகினோ பவந்து (எல்லா உயிர்களும் இன்புற்று இருக்கட்டும்) என சொல்லிக்கொடுத்த உபநிஷதம், சனாதானத்தின் அடையாளம்.

'வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்' என்ற வள்ளலார், சனாதனத்தின் உச்சம்.

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என தமிழிலும், வசுதைவ குடும்பகம் (உலகமே ஒரு குடும்பம்) என வடமொழியிலும் சொல்லிக் கொடுத்தது சனாதனம்.

'கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின்' என கேள்வி எழுப்பிய வள்ளுவம், சனாதனத்தின் சாட்சி.

அடியேன் என்றும், தாசன் என்றும், தொண்டரடிப்பொடி என்றும், சிவனடியார் என்றும், பணிவைச் சொல்லிக் கொடுத்தது சனாதனம்.

அன்பே சிவம் என்பது சனாதனம்.

அன்பே தகளியா ஆர்வமேநெய்யாக இன்புருகு சிந்தை இடுதிரியா - நன்புருகி ஞானச் சுடர் விளக்கு ஏற்றியது சனாதனம்.

நிற்க.

தான் ஒரு கிறிஸ்துவன் எனக் கூறிக்கொள்வதில் பெருமை கொள்கிறேன் என்ற அமைச்சர் உதயநிதியும், பெருமைக்குரிய கிறிஸ்துதவராக இருக்கும் பீட்டர் அல்போன்சும், ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சரும் அந்த மேடையில் இருந்தது கவனிக்க வேண்டிய விஷயம். 

அதை விட முக்கியமான விஷயம், அந்த மாநாட்டை நடத்தியவர்கள். த.மு.எ.க.ச., என்றழைக்கப்படும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம். இவர்களுடைய குழுமம் தான் தமிழக அரசோடு இணைந்து புத்தகத் திருவிழாக்களை நடத்தி வருகின்றன.

ஆக, இவர்களுடைய நோக்கம் தெளிவாகிவிட்டது. அது நடக்கப்போவதில்லை என்பதும் உறுதியாகிவிட்டது.

ஏனென்றால் இது சனாதானம்!

செக்குமாடு-சின்னஞ்சிறு கதை

சில வாரங்களுக்கு முன்பு நண்பருடைய மகள் திருமணத்திற்காக கடலூர் அருகில் உள்ள கிராமத்திற்கு சென்றிருந்தேன்...


 காலை திருமணம் முடிந்ததும் கிராமத்தைச் சுற்றி வரலாம் என்று கிளம்பினேன்,..


 ஊர் ஓரமாக செக்குமாடு ஒன்று சுற்றிக் கொண்டிருப்பதை கவனித்து ஆச்சரியமாக அதன் அருகில் சென்றேன்...


 நமது பகுதியில் எந்திரம் வைத்து செய்வதைப் பார்த்த நமக்கு செக்குமாடு வைத்து எண்ணெய் ஆட்டுவதை பார்க்கும் பொழுது மகிழ்ச்சியாகவும், வித்தியாசமானதாகவும் இருந்தது.….


யாருடைய மேற்பார்வையும் இன்றி மாடு தானாக சுற்றிக் கொண்டிருந்தது...


 அருகில் யாரும் இல்லை.. பக்கத்தில் ஒரு குடிசை இருந்தது.. அங்கே சென்று பார்த்தால் பெரியவர் ஒருவர் பழைய கூழ் குடித்துக் கொண்டிருந்தார்....


 அவரிடம் ஐயா செக்குமாடு உங்களுடையதா? என்று கேட்டேன்..


 ஆமாம் தம்பி என்றார்... வியாபாரம் நன்றாக போகிறதா? என்று கேட்டேன்..…. இப்போது பரவாயில்லை தம்பி என்றார்...

 இப்படித்தான் முதலில் எண்ணெய் ஆட்டி பயன்படுத்திக் கொண்டு இருந்தோம்.. இடையில்தான் யாரோ சிலர் கிளப்பிவிட்டதை நம்பி சூரியகாந்தி எண்ணெய் என்றெல்லாம் மாறிவிட்டோம்... அவ்வளவு சூரியகாந்தி விதை உலகில் உற்பத்தியாகிறதா என்றுகூட யோசிக்கவில்லை.... மறுபடியும் மாற்றம் வந்தது மகிழ்ச்சி தம்பி என்றார்...


 ஐயா எந்திரம் வைத்தால் வேலை சுலபமாக முடியுமே... இன்னும் செக்குமாடு வைத்து செய்கிறீர்களே? என்று கேட்டேன்...

 தம்பி ...எந்திரம் வைத்தால் எண்ணெய்  சூடாகி அதன் தன்மையையே மாற்றிவிடும்... இதுபோல செக்கில் ஆட்டும் போது தான் எண்ணெய் இயல்பான குணத்தை கொண்டிருக்கும்... உடலுக்கும் ஆரோக்கியமாக இருக்கும்... என்று அனுபவித்து சொன்னார்... மன மகிழ்ச்சி அடைந்த  நான் *ஐயா நீங்கள் இங்கே கூழ் குடித்துக் கொண்டிருக்கிறீர்களே.. அங்கே மாடு சுற்றாமல் ஏமாற்றினால் என்ன செய்வீர்கள்?* என்று அறிவாளி தனமாக (?)கேட்டேன்...


 அவர் என்னை வித்தியாசமாக பார்த்துவிட்டு *தம்பி ..மாட்டின் கழுத்தில் ஒரு மணி கட்டி இருக்கின்றேன்.. சுற்றிவரும் பொழுது அதன் சத்தம் கேட்கும்.. கேட்காவிட்டால் வாயால் ஒரு சத்தம் போடுவேன்.. உடனே மாடு சுற்ற ஆரம்பித்துவிடும்* என்று சொன்னார்...


 நான் குசும்புத் தனமாக *ஏங்க பெரியவரே.. மாடு சுற்றாமல் ஒரே இடத்தில் நின்று கொண்டு கழுத்தை மட்டும் ஆட்டினால் என்ன செய்வீர்கள்.. அப்போதும் சத்தம் கேட்குமே* என்று கேட்டேன்..


அவர் என்னை வித்தியாசமாக பார்த்துவிட்டு *என்ன படித்திருக்கிறீர்கள்?* என்று கேட்டார்..


 நான் பெருமையாக *எம்எஸ்சி , எம்எட் எல்லாம் படித்து இருக்கிறேன்* என்று சொன்னேன்.


 அந்தப் பெரியவர் சொன்னார் *உங்களைப் போல் எல்லாம் யோசித்து ஏமாற்றக்கூடாது என்பதற்காகத் தான் என்னுடைய மாட்டை எல்லாம் நான் படிக்க வைக்கவில்லை* என்று சொன்னார். எனக்கு சவுக்குக் குச்சியால் அடி விழுந்தது போல் இருந்தது...


 *யோசித்துப் பார்த்தால் நாட்டில் நடக்கும் எல்லா திட்டமிட்ட, நுணுக்கமான திருட்டுகளுக்கும், குற்றங்களுக்கும் பின்னால் எல்லாம்  படித்தவர்களின் மூளை பயன்பட்டுக் கொண்டிருக்கிறது* என்பதை அந்தப் பெரியவர் வார்த்தைகளால் சுட்டிக்காட்டினார்...


 நேர்மை, வாய்மை, ஒழுக்கம் எல்லாவற்றையும் படித்த நாம் அதையெல்லாம் பின்பற்றி வாழ்கிறோமா? என்ற கேள்வி எழுந்தது...


கற்றபின் *நிற்க அதற்குத் தக* என்றார் வள்ளுவர்.. ஆனால் நாம் அதை *விற்க அதற்குத் தக* என்று மாற்றி விட்டோமே...


 உண்மைதானே....


யோசிப்போம்.,..

மேகங்களின் வகைகள்

மேகங்கள் உயரம் பொறுத்து எத்தனை வகையாக பிரிக்கப்படுகிறது - 4




1. கீழ்மட்ட மேகங்கள்


2. இடைமட்ட மேகங்கள்


3. உயர்மட்ட மேகங்கள்


4. செங்குத்து மேகங்கள்




 *1. கீழ்மட்ட மேகங்கள்:* 


இதன் உயரம் - 5000 மீ


இம்மேகத்தினை - கீற்று மேகங்கள் எனஅழைப்படுகிறது


இம்மேகம் வேறுபெயர் - சிரஸ்


இவ்வகையான மேகங்கள் ஒருபோதும் மழை தராது

2. இடைமட்ட மேகங்கள்:


இது கடல் மட்டத்தில் இருந்து 2000 மீ உயரம் வரை இருக்கும்


இம்மேகத்திற்கு வேறுபெயர் - படை மேகங்கள் (தாழ் மேகங்கள்)


ஸ்ரேடஸ் என்றும் அழைக்கப்படும்


இம்மேகம் அடர் சாம்பல் நிறம் கொண்டது




3. உயர்மட்ட மேகங்கள்:


கடல் மட்டத்தில் இருந்து 12,000 மீ வரை இருக்கும்


வெடித்த பருத்து போன்று காணப்படுகிறது.


அணியணியாக காணப்படும்.


வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது - திரள் மேகங்கள்


மின்னல், இடி மற்றும் மழை கொடுக்கும் மேகங்கள்


கியூமிலஸ் என்றும் அழைக்கப்படுகிறது.




4. செங்குத்து மேகங்கள்:




வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது - கார்படை மேகங்கள்


இதன் நிறம் - கருமை (அ) சாம்பல்


ஆலங்கட்டி மழை பெய்ய காரணமான மேகம்


நிம்பஸ் என்றும் அழைக்கப்படுகிறது