Thursday, February 8, 2024

மனிதர்கள் பல விதம்

உன்னை வாழ்த்த மனம் இல்லாதவர்கள் இருப்பார்கள். அவர்களைப் பற்றி கவலைப் படாதே.


நீ எதை செய்தாலும் அதில் ஒரு குறையை கண்டு பிடிக்கக் கூடிய மனிதர்களும் இருந்து கொண்டு தான் இருப்பார்கள். அதையும் பெரிது பண்ணாதே.


*உன் லட்சியம் எதுவோ அதை நோக்கி பயணம் போ.*


ஒன்றை மட்டும் தெரிந்து கொள்.


*ஒவ்வொரு மனிதனும்*

*தனித் தனி ஜென்மங்கள்.*


அவர்களுக்கென்று தனித் தனி ஆசா பாசங்கள் இருக்கும். குணங்களும் இருக்கும். அதன் வழியில் தான் அவர்களின் பயணமும் இருக்கும். அவர்களை ஒழுங்கு படுத்துகிறேன் என்று வேதனைகளை சுமந்து கொள்ளாதே. அவர்கள் போகும் வரை போகட்டும். போய் ஒரு அனுபவத்தை பெற்ற பின் திரும்பி வருவார்கள்.


அது வரை நீ பொறுமையாக இருக்க வேண்டும். அவர்கள் போன பாதை நல்லதா? கெட்டதா? என்பதை அவர்களாக உணர்ந்தால் தான் அவர்களுக்கு ஒரு உண்மை தெரியும்.

அந்த உண்மையை நீ முன் கூட்டியே சொன்னால் உன்னை அவர்களுக்கு பிடிக்காது.


இது தான் வாழ்க்கையின் உண்மை.


அவர்களது பூர்வ புண்ணியத்தின் அடிப்படையில் தான் அவர்களின் குணங்களும் செயல்களும் இருக்கும்.


அது உடன் பிறந்தவர்களாக இருந்தாலும்,

நண்பர்களாக இருந்தாலும், கணவன், மனைவியாக இருந்தாலும், பெற்ற

குழந்தைகளாக இருந்தாலும்,

பேரன் பேத்திகளாக இருந்தாலும்,

உறவுகளாக இருந்தாலும்,

அவர்களது பிறவிக் குணம் ஒரு போதும் மாறாது. எதைச் செய்ய வந்தார்களோ அதை செய்வது தானே அவர்களின் விதி.  இதை நீ மாற்றி அமைக்க முடியுமா?


ஒதுங்கி நின்று வேடிக்கை பார்! பந்த பாசத்தில் உள்ளே விழுந்து அறிவுரை சொல்லுகிறேன் என்று கெட்ட பெயரை சம்பாதித்துக் கொண்டிருக்காதே.


*அவர்களுக்கு அனுபவம் தான் குரு.*

அந்த அனுபவம் ஏற்பட்ட பிறகு தன்னை மாற்றிக் கொள்வதற்கு அவர்களுக்கு விதி இருந்தால் தன்னை திருத்திக் கொள்வார்கள். அது வரை நீ பொறுமையாக இரு.


செயற்கையாக ஒரு குணத்தை  உருவாக்கி உன்னிடம் அன்பை காட்டினாலும் தான் யார் ?, தன் குணம் என்ன ?, என்பதை ஒரு நாள் வெளிப் படுத்தி விடுவார்கள். 

எதையும் ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தோடு இருந்து கொள்ளப் பழகிக் கொள்.


நாம் வந்து போகும் உலகத்தில் பிறந்திருக்கிறோம்.

அவரவர்களுக்கு என்ன வேஷம் கொடுக்கப் பட்டிருக்கிறதோ அதைத் தவிர வேறு எதையும் செய்து காட்ட முடியாது.

எல்லையில்லாத அன்பை வைத்திருந்தேன் என்னை ஏமாற்றி விட்டார்கள் என்று புலம்பிக் கொண்டு இருக்காதே. கடலுக்கும் ஒரு எல்லை வைத்திருக்கிறான் இறைவன்.

அதையும் மீறி சில வேளைகளில் இறைவன் வகுத்த எல்லையை கடல் தாண்டி விடுகிறது. இயற்கையின் சுபாவங்கள் சில நேரங்களில் தங்களை வெளிப் படுத்தி விடும்.


நீ உன்னை எப்படி வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறாயோ அப்படி வைத்துக் கொண்டு வாழப் பழகிக் கொள். அதில் நன்மை வந்தாலும் , தீமை வந்தாலும் , உனக்கும் ஒரு அனுபவம் கிடைக்கும் .அதை வைத்து உன்னையும் திருத்திக் கொள்ளலாம்.


இன்பமானாலும் துன்பமானாலும்

அதை நீயே சந்திக்க கற்றுக் கொள்.

அதை பகிர்ந்து கொள்வதற்கு ஒரு துணையைத் தேடாதே.


*உன் இன்ப துன்பத்தில் பங்கு பெறுவதற்கு இந்த பிரபஞ்சத்தில் ஒருவர் பிறந்திருந்தால் நிச்சயம் அவர் உன்னை கைவிடாமல் உன்னோடு சேர்ந்தே பயணிப்பார். அது உன் பிறவி பிராப்தத்தை பொறுத்து இருக்கிறது அப்படி அது நடந்து விட்டால், எந்த சூழ்நிலையிலும் உன்னோடு இணைந்தே இருப்பார்*


பெண்ணாக இருந்தாலும் , ஆணாக இருந்தாலும் , வரும் துன்பத்தை எதிர் கொள்ளக் கூடிய ஆற்றலை உருவாக்கிக் கொள்.


*மனிதன் மீது வைக்கும் நம்பிக்கையை விட இறைவன் மீது வைக்கும் நம்பிக்கையை அதிகரித்துக் கொள்.*


உன் கண்ணீரும் உன் கவலையும்

உன்னை பலவீனமாக காட்டி விடும்.


அழுவதாலும் சோர்ந்து போவதாலும்

ஒன்றும் நடக்கப் போவதில்லை.

எப்படி இருந்தாலும் நீ தான் அந்த சுமையை சுமந்து ஆக வேண்டும்.


அழுது சுமப்பதை காட்டிலும். ஏற்று சுமப்பது உனக்கு சிரமம் இல்லாமல் இருக்கும்.


தைரியமும் தன்னம்பிக்கையும் தான் ஒரு மனிதனை உலகத்தில் வாழ வைக்கும் என்ற உண்மையை உணர்ந்து கொள்.


இந்த பக்குவத்தை அடைந்து விட்டால் எத்துன்பமும் உன்னை நெருங்காது என்பதை உணர்ந்து கொள்.


🟫🌗🌗🌗🌗🌗🌗🌗🌗🟫

மகள்கள் தேவதைகள்-அதிர்ஷ்டமான தந்தைகள்

ஒரு கர்ப்பிணிப் பெண் தன் கணவரிடம் கேட்டாள், நீங்கள் என்ன குழந்தையை எதிர்பார்க்கிறீர்கள்? ஆணா பெண்ணா?

கணவன்- "நமக்கு ஒரு பையன் பிறந்தால் , நான் அவனுக்கு கணிதம் கற்பிப்பேன், நான் அவன் விரும்பும் விளையாட்டுகளை கற்பிப்பேன், பொழுது போக்காக இசையை கற்றுக் கொடுப்பேன்."

மனைவி - "ஹா.. ஹா.. அதுவே ஒரு பெண்ணாக இருந்தால்?"

கணவன் - நமக்கு ஒரு பெண் பிறந்தால்.. நான் அவளுக்கு எதுவும் சொல்லிக் கொடுக்க வேண்டியதில்லை. ஏனென்றால் அவள்தான் எனக்கு எல்லா விஷயங்களையும் கற்றுத் தருவாள், எப்படி உடை உடுத்த வேண்டும், எப்படி பேசக்கூடாது., இதெல்லாம் மீண்டும் ஒருமுறை அவளிடம் கற்பேன். அவள் கற்பிப்பாள்.

சுருக்கமாக, சொல்ல வேண்டுமென்றால் அவள் என் இரண்டாவது அம்மாவாக இருப்பாள், நான் சிறப்பாக எதுவும் செய்யாவிட்டாலும் அவள் என்னை அவளுடைய ஹீரோவாகக் நினைப்பாள், நான் எப்போதெல்லாம் மறுப்பு சொல்வேன் என்று புரிந்துகொள்வாள்.

அவள் எப்போதும் தன் கணவனை என்னுடன் ஒப்பிட்டு பேசுவாள்.. எவ்வளவு வயதானாலும் அவளை என் குழந்தை போல நடத்த வேண்டும் என்று அவள் எதிர்பார்ப்பாள்.

மனைவி - "அப்படியானால், உங்கள் மகள் அதையெல்லாம் செய்வாள், ஆனால் உங்கள் மகன் செய்ய மாட்டான் என்று சொல்கிறீர்களா?"

கணவன் - "இல்லை.. இல்லை! அவரும் அதை செய்தாலும் செய்வார், ஆனால் அவர் அதையெல்லாம் செய்யக் கற்றுக் கொள்வார். ஆனால் மகள்கள் இவற்றையெல்லாம் தெரிந்துகொண்டே பிறக்கிறார்கள். ஒரு மகளுக்குத் தந்தையாக இருப்பது எந்த ஆணுக்கும் பெருமை."

மனைவி, "ஆனால், அவள் எப்போதும் நம்முடன் இருக்க மாட்டாளே."

கணவன் - "உண்மைதான், ஆனால் நாம் அவளுடன், அவள் இதயத்தில், என்றென்றும் இருப்போம். அதனால் அவள் நம்மை விட்டு எங்கு சென்றாலும் அது பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தாது."

மகள்கள் தேவதைகள்... நிபந்தனையற்ற அன்பு மற்றும் அக்கறையுடன்  பிறந்தவர்கள்... என்றென்றும்.

மகள்களுடன் ஆசிர்வதிக்கப்பட்ட அனைத்து அதிர்ஷ்டமான  தந்தைகளுக்கும் இது சமர்ப்பணம்.

வாழ்த்துக்கள் தந்தைகளே..!


தள்ளிப்போடுதலைச் சமாளிக்க 10 பயனுள்ள வழிகள்

 1. பணிகளைச் சிறிய படிகளாகப் பிரித்து, அவற்றை மிகக் குறைவானதாக மாற்றவும்.


 2. அவசர உணர்வை உருவாக்க குறிப்பிட்ட, அடையக்கூடிய இலக்குகளை காலக்கெடுவுடன் அமைக்கவும்.


 3. முக்கியத்துவத்தின் அடிப்படையில் பணிகளுக்கு முன்னுரிமை அளித்து, அதிக முன்னுரிமை உள்ள பொருட்களை முதலில் சமாளிக்கவும்.


 4. Pomodoro டெக்னிக் போன்ற கவனம் செலுத்தும் பணி இடைவெளிகளுக்கு டைமரைப் பயன்படுத்தவும்.


 5. அறிவிப்புகளை முடக்கி அல்லது பிரத்யேக பணியிடத்தை உருவாக்குவதன் மூலம் கவனச்சிதறல்களை நீக்கவும்.


 6. நேர்மறையான நடத்தையை வலுப்படுத்த பணிகளை முடித்த பிறகு நீங்களே வெகுமதி அளிக்கவும்.


 7. உந்துதலை அதிகரிக்கவும், தள்ளிப்போடுவதைக் கடக்கவும் இறுதி முடிவைக் காட்சிப்படுத்தவும்.


 8. உங்கள் இலக்குகளை யாரோ ஒருவருடன் பகிர்ந்துகொள்வதன் மூலமோ அல்லது உற்பத்தித்திறன் பயன்பாடுகளைப் பயன்படுத்துவதன் மூலமோ உங்களைப் பொறுப்பேற்கச் செய்யுங்கள்.


 9. பயம் அல்லது பரிபூரணவாதம் போன்ற தள்ளிப்போடுவதற்கான அடிப்படைக் காரணங்களைக் கண்டறிந்து அவற்றைத் தீர்க்கவும்.


 10. கட்டமைப்பை உருவாக்குவதற்கும் உற்பத்தித்திறனை ஒரு பழக்கமாக்குவதற்கும் ஒரு வழக்கமான அல்லது அட்டவணையை உருவாக்குங்கள்.


பல நல்ல நல்ல பதிவுகளை காண தொடர்ந்து இணைந்திருங்கள்! உங்கள் நண்பர்களுக்கும் இதனை பகிர்ந்து அவர்களும் பயனடைய நீங்களும் உதவலாமே 👇🏻👇🏻👇🏻

  

முசுமுசுக்கை - தினம் ஒரு மூலிகை

 *


*முசுமுசுக்கை.* தாவரவியல் பெயர் Mukia Madarspatana. சித்தர்கள் இதனை இரு குரங்கின் கை என அழைப்பார்கள் பித்தம் அதிகமானால் இம்மூலிகையை பறித்து லேசாக இடித்து ரசத்தில் போட்டு கொதிக்க வைத்து சாப்பிட குணமாகும் தலைசுற்றல் இம்மூலிகையை பறித்து இடித்து காடியில் புளித்த நீர் வதக்கி தலையில் வைத்து கட்டி நித்திரை செய்ய நோய்கள் தீரும் இதன் இலை காசம் கோழை சுவாசம் நெஞ்சில் புகை கம்மல் ஜலதோஷம் ஆகியவை நீக்கும் முசுமுசுக்கை வேறினால் துர்காந்தத்துடன் குறுகிய கோழை சாதாரண விஷம் சக ரோகம் மார்பு நோய் பக்கவாதம் இவைகள் போகும் பித்தம் தனியும் மூளை பலம் பெறும் இந்த மூலிகையில் சுண்ணாம்பு சத்தும் செம்புச் சத்தும் தாமிர சத்தும் அதிகம் உள்ளது நன்றி.

Tuesday, February 6, 2024

வேங்கை மரம் - தினம் ஒரு மூலிகை

 *


*வேங்கை மரம்*.    பச்சையான அழுத்தமான அகன்ற இலைகளையும் மஞ்சள் நிற பூக்களையும் உடைய பெரு மரம் வேங்கை இலை பட்டை பிசின் ஆகியவை மருத்துவ குணம் உடையது இலை வீக்கம் கரைக்கும் புன் அழுகல் அகற்றும் பட்டை துவர்த்தியாக செயல்படும் பிசின் துவர்பியல் குருதிப் போக்கு அடக்குதல் மலமிளக்குதல் குணம் உடையது வேங்கை பட்டையை உலர்த்தி பொடித்து ஐந்து கிராம் அளவாக சர்க்கரை கலந்து நாள்தோறும் மூன்று வேளை கொடுத்து வர சரியா கழிச்சல் சீத கழிச்சல் ஆகியவை தீரும் வேங்கை பிசினை உலர்த்தி பொடித்து அரை கிராம் முதல் ஒரு கிராம் அளவாக கொடுக்க வெள்ளை நீர்த்த கழிச்சல் சீத கழிச்சல் ஆகியவை தீரும் வேங்கை பிசின் பொடியை புண்களில் பூவ அவை விரைந்து ஆறும் இலையை அரைத்து கழியாக கிளறி பூசி வர கட்டிகள் கரையும் அல்லது பழுத்து உடையும் புண்கள் ஆறும் தோல் நோய்கள் தீரும் சிறு குழந்தைகளுக்கு வேங்கை சாந்து வைப்பதின் மூலம் திஷ்டி கழிவதாக ஒரு ஐதீகம் அதன்படி குழந்தைகளுக்கு நெற்றி உள்ளங்கை உள்ளங்கால்களில் வேங்கை சாந்தை வைப்பார்கள் நோய் எதிர்ப்பு சக்தியை சிறு வயதிலேயே குழந்தைகளுக்கு தர வல்லது நன்றி.

வாழ்வைக் கொண்டாடுவோம்

🍄 ஒரு நரி அதிகாலை எழுந்து மேற்கு நோக்கி வேட்டைக்குப் புறப்பட்டது. கிழக்கே இருந்து எழுந்த சூரிய ஒளியில் அதன் நிழல் வெகு நீளமாய் வெகு பிரமாண்டமாய்த் தெரிந்தது.

நரிக்கு ஏக குஷி…


🍄 “நான் ரொம்பப் பெரிய ஆளாக்கும். இவ்வளவு பெரிய எனக்குப் பசி தீர வேண்டும் என்றால் குறைந்தபட்சம் ஒரு யானை அல்லது ஒட்டகமாவது கிடைத்தால் தான் கட்டுப் படியாகும்!’ என்று ஊளையிட்டது.


🍄 கொஞ்சம் சின்ன விலங்குகளை ஏளனத்துடன் அலட்சியப் படுத்தியபடி தன் பசிக்குக் குறைந்தபட்சம் ஒரு யானை, யானை

என்றபடி காடு முழுவதும் ஓடிக் கொண்டே இருந்தது.

தேடிக் கொண்டே இருந்தது; பாவம், ஒன்றும் கிடைக்கவில்லை.


🍄 மதியம் தலைக்கு மேலே உச்சியில் சூரியன் வந்தபோது நரியின் நிழல் சிறுத்து அதன் காலடியில் விழுந்திருந்தது.”ஆஹா… பசியால்

நாம் எவ்வளவு இளைத்துப் போய்விட்டோம்…’ சிறுத்து விட்டோம் என்று வருந்தியது நரி.


🍄 இளைத்துப் போன இந்த அளவுக்கு ஒரு ஆட்டுக் குட்டியோ, கோழியோ கிடைத்தால் கூட போதுமானது என்று தேடியது. ம்ஹூம்,

பயனில்லை. மாலையில் மேற்கே வந்த சூரியனால் நரியின் நிழல் நரிக்குப் பின்பாக விழுந்தது… 


🍄 அதனால், நரிக்குத் தன் நிழலே

தெரிய வில்லை…”ஆஹா.. நாம் வெகுவாக இளைத்து விட்டோம்.

நாம் இல்லவே இல்லை போலிருக்கிறது… ஒரு வேளை இறந்து போய் விட்டோமோ?’ என்று பயந்தது.


🍄 பிறகு, “சீச்சி… நாம் உயிரோடு தான் இருக்கிறோம். இந்தப் பசிக்கு ஒரு கோழிக்குஞ்சு, ஏன், ஓர் எறும்பு கிடைத்தால் கூட போதும்..”‘ என்று நாக்கைத் தொங்க விட்டபடி தள்ளாடி, தள்ளாடி நடந்தது.


🍄 இந்த நரியின் கற்பனை மாதிரி தான்… சிலர் தங்களை வெகு பிரமாதமாக எண்ணிக் கொண்டு தங்கள் திருப்திக்கு எதை, எதையோ தேடுகின்றனர். கிடைத்த பல பரிசுகளை ஒதுக்கி விட்டு அலைகின்றனர். முடிவில் ஏதாவது கிடைக்காதா என்று ஏங்கி வாடுகின்றனர்.


🍄 காலை நரிபோல் கர்வத்தோடு தேடவும் வேண்டாம்; மாலை நரிபோல் கவலையோடு வாடவும் வேண்டாம்.


இயல்பாக இருப்போம்.

வாழ்வைக் கொண்டாடுவோம்.🌹

Sunday, February 4, 2024

பல் கவிதை

 


என் பல்லிடுக்கில் ஒரு 

பருக்கை புகுந்தது! 

பல நாளாய் அங்கு 

படுத்துக் கிடந்தது! 


என் பற்தூரிகை அதை

பார்க்க மறந்தது! 

பருக்கையோ வாயில்

இருக்கை அமைத்தது! 


பாக்டீரியாவை அது 

பந்திக்கழைத்தது! 

பற்றுயிரி என் 

பல் சிதைத்தது! 


பற்குழி வெட்டி

பாத்தி அமைத்தது! 

பல்லாங்குழியாய்

பரவி வளர்ந்தது! 


சிரிக்கையில் அது என்

சிங்காரம் கெடுத்தது! 

நரம்புவரை சென்று 

நங்கூரமிட்டது! 


கூச்சமும் வலியும்

கூட்டணி சேர்ந்து! 

அது கூரிய ஊசி 

குடைவதைப் போன்றது! 


வேம்பின் காம்புகள்

வீட்டில் சேர்ந்தது! 

கிராம்பு ஏலக்காய்

சீக்கிரம் தீர்ந்தது! 


வீட்டு வைத்தியம்

வீணென்றானது! 

விடிய விடிய என்

உறக்கம் போனது! 


பல் மருத்துவரை 

பார்க்க நேர்ந்தது! 

பரிசோதனைகள்

பலவும் நடந்தது! 


வேர் சிகிச்சைக்கென

நேரம் வந்தது! 

வேறு வழியில்லை - இதை

அவர்தான் சொன்னது! 


இரண்டே ஊசியில்

ஈறு மரத்தது!

அதன்பின் பல்லை

ஆயுதம் அறுத்தது! 


சொத்தைப் பல்லில் ஒரு

யுத்தம் நடந்தது! 

பல்லின் உயரமோ

பாதியாய் குறைந்தது! 


பொய் வேர் ஒன்று

பொருத்தப்பட்டது! 

கவசம் ஒன்று அதில்

கவிழ்த்தப்பட்டது! 


என் நீண்ட வலியது

நிறுத்தப்பட்டது! 

என் வங்கி அட்டைதான்

வருத்தப்பட்டது!


கல்லீரல் இதயம்

கண்ணில் வலியென்றால்

எல்லோருக்குள்ளும்

ஏதேதோ கலக்கம்! 


பல்லென்று வந்தால்

பலரின் மனங்களும்

பார்த்துக்கொள்ளலாம்

பிறகென்று நினைக்கும்! 


உள்செல்லும் உணவை

உகந்ததாக்கிட

பல் போல் வேறெதும்

படைக்கப்படவில்லை! 


முப்பத்தியிரண்டாய்

முன்வாயில் நிற்கும்

சிப்பாய்கள் அவர்களின்

சிறப்புக்கிணையில்லை! 


இரவு காலையென

இருமுறை தினமும்

பல் துலக்குதல்

பயன்தரும் பழக்கம்! 


இனிப்பை இயன்றவரை

குறைத்திடும் வரைக்கும்

பல்லுயிரி நமைப்

பகையென விலக்கும்! 


கவனமாகப் பல் 

காப்பது எப்படி? 

உணவு உண்டபின்

உடனே கொப்பளி! 


கசடு சேராமல்

கழுவுதல் ஒன்றே

நமது பற்களுக்கு

நாம் செய்யும் நற்பணி! 


- நிலவை பார்த்திபன்

காலையில் வெறும் வயிற்றில் டீ, காபி குடிக்கலாமா?



பொதுவாக, வெறும் வயிற்றில் டீ, காபி குடிப்பது நல்லதல்ல என்று தான் கூறப்படுகிறது. டீ மற்றும் காபியில் காஃபின் உள்ளது, இது வயிற்று அமிலத்தின் உற்பத்தியை அதிகரிக்கக்கூடும். இது வயிற்று எரிச்சல், நெஞ்செரிச்சல், குமட்டல் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். மேலும், காஃபின் சிறுநீரை அதிகரிக்கக்கூடும், இதனால் நீரிழப்பு ஏற்படலாம்.


சிலருக்கு, வெறும் வயிற்றில் டீ, காபி குடிப்பதால் தலைவலி, தூக்கமின்மை, பதட்டம் போன்ற பிரச்சனைகளும் ஏற்படலாம்.

எனவே, காலையில் வெறும் வயிற்றில் டீ, காபி குடிப்பதைத் தவிர்ப்பது நல்லது. காலை உணவுடன் அல்லது காலை உணவுக்குப் பிறகு டீ, காபி குடித்தால் இந்தப் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு குறைவு.

குறிப்பாக, பின்வரும் நபர்கள் வெறும் வயிற்றில் டீ, காபி குடிப்பதைத் தவிர்க்க வேண்டும்:


* வயிற்றுப் புண் உள்ளவர்கள்
* இரைப்பை அழற்சி நோய் உள்ளவர்கள்
* பதட்டம் அல்லது மன அழுத்தம் உள்ளவர்கள்
* தூக்கப் பிரச்சனைகள் உள்ளவர்கள்

இருப்பினும், சிலருக்கு வெறும் வயிற்றில் டீ, காபி குடிப்பதால் எந்தப் பிரச்சனையும் ஏற்படாது. அப்படிப்பட்டவர்கள் தங்கள் உடல்நிலைக்கு ஏற்றவாறு முடிவு எடுக்கலாம்.

சீதாப்பழம் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?





சீதாப்பழம் சாப்பிட்டால் பல நன்மைகள் கிடைக்கும். சீதாப்பழத்தில் வைட்டமின் சி, வைட்டமின் பி6, கால்சியம், இரும்புச்சத்து, ஆன்டி ஆக்ஸிடண்ட் போன்ற சத்துக்கள் உள்ளன. இவை உடலுக்கு பல்வேறு வழிகளில் நன்மை பயக்கின்றன.


சீதாப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் சில:

சீதாப்பழத்தில் உள்ள கால்சியம் மற்றும் மக்னீசியம் ஆகியவை எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு அவசியமானவை. சீதாப்பழம் சாப்பிடுவதால் எலும்புகள் வலுப்பெறவும், எலும்பு தேய்மானம் ஏற்படுவதைத் தடுக்கவும் உதவுகிறது.

சீதாப்பழத்தில் உள்ள இரும்புச்சத்து இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியை ஊக்குவிக்கிறது. இதனால் இரத்த சோகை ஏற்படுவதைத் தடுக்க உதவுகிறது.


சீதாப்பழத்தில் உள்ள வைட்டமின் ஏ கண் பார்வைக்கு அவசியமானது. சீதாப்பழம் சாப்பிடுவதால் கண் பார்வை மேம்படுகிறது.

சீதாப்பழத்தில் உள்ள ஆன்டி ஆக்ஸிடண்ட்கள் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகின்றன.

சீதாப்பழத்தில் உள்ள மக்னீசியம் மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.

சீதாப்பழத்தில் உள்ள நார்ச்சத்து செரிமானத்திற்கு உதவுகிறது. இதனால் உடல் எடை குறைக்க உதவுகிறது.

சீதாப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்த ஆய்வுகள் பல நடத்தப்பட்டுள்ளன. இந்த ஆய்வுகளின் முடிவுகள் சீதாப்பழம் சாப்பிடுவதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைப்பதை உறுதிப்படுத்துகின்றன.

எனவே, சீதாப்பழம் ஒரு ஆரோக்கியமான பழம். அதை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வதால் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.

கறிவேப்பிலை தொடர்ந்து சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?



கறிவேப்பிலை தொடர்ந்து சாப்பிட்டால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும். கறிவேப்பிலையில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள், பாக்டீரியா எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் உடலுக்கு பல நன்மைகளை வழங்குகின்றன.


கறிவேப்பிலையில் உள்ள சில முக்கிய நன்மைகள் பின்வருமாறு:

கறிவேப்பிலையில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உடலை பல்வேறு தொற்றுகள் மற்றும் கிருமிகளிலிருந்து பாதுகாக்கின்றன.

கறிவேப்பிலையில் உள்ள குரோமியம் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.


கறிவேப்பிலையில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றன.

கறிவேப்பிலையில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் சி கண் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றன.

கறிவேப்பிலையில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவுகின்றன.

கறிவேப்பிலையில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் வாய் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றன.

கறிவேப்பிலையை பச்சையாக மென்று சாப்பிடலாம் அல்லது உணவில் சேர்த்து சமைக்கலாம். ஒரு நாளைக்கு 10-20 கறிவேப்பிலையை சாப்பிடுவது நல்லது.

இஞ்சி சாப்பிட்டால் இத்தனை நன்மைகளா?



இஞ்சி சாப்பிட்டால் பல நன்மைகள் கிடைக்கும். இஞ்சியில் பல்வேறு வகையான ஆரோக்கிய நன்மைகளை வழங்கும் ஊட்டச்சத்துக்கள் மற்றும் வேதியியல் கலவைகள் உள்ளன. இஞ்சியின் சில முக்கிய நன்மைகள் பின்வருமாறு:


இஞ்சி செரிமான மண்டலத்தைத் தூண்டுகிறது மற்றும் வாயு, குமட்டல், வயிற்றுப்போக்கு மற்றும் பிற செரிமான பிரச்சனைகளைக் குறைக்க உதவுகிறது.

இஞ்சி வலி நிவாரணியாக செயல்படுகிறது மற்றும் மூட்டு வலி, தசை வலி, தலைவலி மற்றும் பிற வலிகளைக் குறைக்க உதவுகிறது.

இஞ்சி ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்டுள்ளது, இது செல் சேதத்தைத் தடுக்க உதவுகிறது மற்றும் புற்றுநோய் மற்றும் இதய நோய் போன்ற நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்கலாம்.


இஞ்சி இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகிறது, இது நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும்.

இஞ்சி இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது, இது இதய ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.

இஞ்சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது, இது தொற்றுநோய்களிலிருந்து பாதுகாக்க உதவுகிறது.

இஞ்சி பொதுவாக பாதுகாப்பானது, ஆனால் சிலருக்கு அது பக்க விளைவுகளை ஏற்படுத்தும். இஞ்சியை அதிகமாக உட்கொள்வது வயிற்றுப்போக்கு, அஜீரணம் மற்றும் வயிற்று வலியை ஏற்படுத்தும். கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் இஞ்சியை உட்கொள்வதற்கு முன் மருத்துவரிடம் ஆலோசிக்க வேண்டும்.

அடிக்கடி பாகற்காய் சாப்பிட்டால் ஏற்படும் நன்மைகள்..!



கசப்பு சுவை கொண்ட ஒரு காய்கறி என்றாலும், அதில் நிறைந்தமருத்துவ குணங்கள் இருப்பதால் பாகற்காய் நமக்கு பல நன்மைகளை வழங்குகின்றன. அடிக்கடி பாகற்காய் சாப்பிடுவதால் ஏற்படும் சில முக்கிய நன்மைகள் பின்வருமாறு:


பாகற்காயில் சாரோகின்** என்ற வேதிப்பொருள், இரத்தத்தில் உள்ள **குளுக்கோஸ் அளவை** கட்டுப்படுத்த உதவுகிறது. இதனால், சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இது ஒரு சிறந்த உணவாகும்.

பாகற்காயில் கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் இருப்பதால், இது எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு ஒரு சிறந்த தேர்வாகும்.

பாகற்காயில் உள்ள நார்ச்சத்து, செரிமானத்தை மேம்படுத்தவும், மலச்சிக்கலை போக்கவும் உதவுகிறது.


பாகற்காயில் உள்ள பொட்டாசியம், இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது.

பாகற்காயில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.

பாகற்காயில் உள்ள வைட்டமின் சி, சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், முதுமையை தடுக்கவும் உதவுகிறது.

பாகற்காயில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள், புற்றுநோய் செல்களை வளர்ச்சியடைவதை தடுக்க உதவும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

பாகற்காயில் உள்ள வைட்டமின் ஏ, கண் பார்வைக்கு நல்லது.

பாகற்காயில் உள்ள சத்துக்கள், முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும், முடி உதிர்தலை தடுக்கவும் உதவுகிறது.

பாகற்காயில் உள்ள பைட்டோகெமிக்கல்கள், கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

உணவில் வெந்தயம் சேர்ப்பாதல் ஏற்படும் நன்மைகள்..!



வெந்தயம் உணவில் சேர்ப்பதால் ஏராளாமான நன்மைகள் மருத்துவர்கள் மட்டுமின்றி நமது முன்னோர்களும் கூறியுள்ளனர். வெந்தயம் அடிக்கடி உணவில் சேர்ப்பதால் என்னென்ன நன்மைகள் என்பதை பார்ப்போம்,


வெந்தயத்தில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை மேம்படுத்தி, மலச்சிக்கலை போக்க உதவுகிறது.

வயிற்றுப்போக்கு மற்றும் அஜீரணத்தை சரிசெய்யவும் வெந்தயம் உதவுகிறது.

இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது


வெந்தயம் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.

நீரிழிவு நோயாளிகளுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

வெந்தயம் கெட்ட கொழுப்பின் அளவை குறைத்து, நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்க உதவுகிறது. இதனால், இதய நோய்களின் அபாயம் குறைகிறது.

வெந்தயம் மாதவிடாய் பிரச்சனைகளை சரிசெய்ய உதவுகிறது. மாதவிடாய் வலி மற்றும் அதிகப்படியான இரத்தப்போக்கு போன்ற பிரச்சனைகளுக்கு இது சிகிச்சையளிக்கிறது. அதேபோல் பாலூட்டும் தாய்மார்களுக்கு பால் உற்பத்தியை அதிகரிக்கிறது

மேலும் வெந்தயம் தலைமுடியை வளர்க்க உதவுகிறது. சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் வெந்தயம் உதவுகிறது. வெந்தயம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.

வெந்தயத்தை சாம்பார், ரசம், தோசை, இட்லி போன்ற உணவுகளில் சேர்க்கலாம். மேலும் வெந்தயத்தை வறுத்து பொடி செய்து, தண்ணீருடன் கலந்து குடிக்கலாம். வெந்தயத்தை ஊற வைத்து, அதன் தண்ணீரை குடிக்கலாம்.

கர்ப்பிணிப் பெண்கள் வெந்தயத்தை அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். வெந்தயம் ஒரு சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தக்கூடும். எனவே, வெந்தயத்தை சாப்பிடுவதற்கு முன் மருத்துவரை அணுகுவது நல்லது.

காலிபிளவரில் இத்தனை ஊட்டச்சத்துக்களா?


காலிபிளவர் சாப்பிடுவது உடலுக்கு நன்மை பயக்கும். காலிபிளவரில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உள்ளன, அவை உடலுக்கு பல நன்மைகளை வழங்குகின்றன. காலிபிளவரில் உள்ள முக்கிய ஊட்டச்சத்துக்கள் பின்வருமாறு:


வைட்டமின் சி: காலிபிளவர் வைட்டமின் சி-யின் சிறந்த மூலமாகும். ஒரு கப் காலிபிளவர் வைட்டமின் சி-யின் தினசரி தேவையின் 77%-ஐ வழங்குகிறது. வைட்டமின் சி ஒரு சக்திவாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்ட் ஆகும், இது செல்களை சேதத்திலிருந்து பாதுகாக்கிறது.

வைட்டமின் கே: காலிபிளவர் வைட்டமின் கே-யின் சிறந்த மூலமாகும். ஒரு கப் காலிபிளவர் வைட்டமின் கே-யின் தினசரி தேவையின் 105%-ஐ வழங்குகிறது. வைட்டமின் கே இரத்த உறைதலில் முக்கிய பங்கு வகிக்கிறது.

நார்ச்சத்து: காலிபிளவர் நார்ச்சத்தின் சிறந்த மூலமாகும். ஒரு கப் காலிபிளவர் நார்ச்சத்தின் தினசரி தேவையின் 20%-ஐ வழங்குகிறது. நார்ச்சத்து செரிமானத்தை மேம்படுத்தவும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.


மேலும் காலிபிளவரில் மெக்னீசியம், பொட்டாசியம், கால்சியம், புரதம் போன்ற பிற ஊட்டச்சத்துக்களும் உள்ளன.

நான் என்பது

நான் என்பது அகந்தை 

மிகக் கொண்டது....

அங்கே அன்பு இருக்காது.

உண்மை நிலவாது.....



*💕நான் தான் எல்லாம்* 

என்னும் உணர்வுக்கள் 

நம்மை ஆட்டிப் படைக்கும் 

தன்மை கொண்டது....!!!!


💛அது உங்களை மற்றவர்களிடமிருந்து 

பிரித்துத் தனிமைப் 

படுத்தும் எண்ணத்தைக் 

தோற்றுவிக்கக் கூடியது.....்!!!!!


*☀️🌖நான் தான்* என்று 

உச்சரிக்கும் போது ...

நீங்கள் அனைவரையும் 

விட்டு விலகிச் செல்கின்றீர்கள்.....

அது ஆணவத்தின் 

ஆரம்பம்.....!!!!


🌟நான் இல்லை என்றால் 

எதுவும் நடக்காது என்ற 

எண்ணம், ஓர் மமதை...

அது மயக்கத்தில் 

ஆழ்த்தும் எண்ணமாகும்........

இதைத் தவிர்த்தல் உங்கள் வாழ்க்கையில் 

முன்னேற்றத்திற்கு 

நன்மை பயக்கும்..!!!!

செம்பருத்தி பூ


செம்பருத்தி பூவின் சாற்றுடன் சம அளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து வாணலியில் இட்டு காய்ச்சி, வடி கட்டி, கண்ணாடி பாட்டில்களில் பத்திரப்படுத்த வேண்டும். இந்த எண்ணெயை தினமும் தடவி வர தலை முடி கருத்து அடர்த்தியாக வளரும்.


மாதவிடாய் காலத்தில் அதிகமாக உண்டாகும் குருதி பெருக்கிற்கு பத்து செம்பருத்தி பூவின் இதழ்களை நெய்யில் வதக்கி சாப்பிட வேண்டும்.


செம்பருத்தி பூ இதழின் வடிசாறு சிறுநீர் கழிக்கும் பொழுது உண்டாகும் எரிச்சலை நீக்கும். நீர் சுருக்கை போக்கி சிறுநீரை பெருக்கி நஞ்சுகளை வெளியேற்றும். இனப்பெருக்க  உறுப்பு நோய்களுக்கும் இது மருந்தாகின்றது.


செம்பருத்தி பூ இதய நோய் அணுகாமல் தடுக்கும் அற்புதமான டானிக். செம்பருத்தி பூவைப் பசுமையாகவோ, காய வைத்து பொடி செய்தோ வைத்துக் கொண்டு,  பாலில் கலந்து காலை, மாலை வேளைகளில் குடித்து வர இதய பலவீனம் தீரும்.

 

உடல் சூடு காரணமாக பலருக்கு வாய்புண், வயிற்றுப்புண் உண்டாகும். அவர்கள் தினம் 10 பூவின் இதழ்களை மென்று சாப்பிட்டால் புண்கள் ஆறும். ஒரு மாதகாலம் தொடர்ந்து சாப்பிட்டு வரவேண்டும்.


செம்பருத்தி பூ குளிர்ச்சி பொருந்தியது. சருமத்திற்கு இதமும், சுகமும் அளித்து ரத்தத்தை சுத்தம் செய்து உடலை பளபளப்பாக்கும்.

 

செம்பருத்தி பூக்களை அரைத்து தலையில் தடவி ஊற வைத்துக் குளிக்க தலைப் பேன்கள் குறையும். 10 செம்பருத்திப் பூ இதழ்களை நீரில் இட்டு காய்ச்சி  குடித்து வர சிறு நீர் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சல் குணமாகும்.

 

செம்பருத்தி பூ, உடல் வெப்பத்தை அகற்றி குளிர்ச்சியை உண்டாக்கும். கருப்பை நோய்கள், இதய நோய்கள், ரத்த அழுத்தம் போன்றவைகளுக்கு சிறந்த  நிவாரணியாகும். செம்பருத்தி பூவின் இதழ்களை 200 மி.லி. நீரில் கொதிக்க வைத்து, காலை நேரத்தில் அருந்தி வந்தால், ரத்த அழுத்தம் சீராகும்.

 

செம்பருத்தி பூத்தூளுடன் சம எடை அளவு மருதம் பட்டைத் தூள் கலந்து 1 தேக்கரண்டி அளவு காலை, மாலை சாப்பிட, இரத்தத்தில் இரும்புச் சத்து அதிகரித்து இரத்த சோகை நோய் குறையும்.


எத்னோஃபார்மகாலஜி பத்திரிகையில் வெளியிடப்பட்ட கருத்துப்படி செம்பருத்தி பூ டீயை தொடர்ந்து 12 நாட்கள் குடித்து வந்தால் சிஸ்டோலிக் இரத்த அழுத்தமானது 11.2% வரை குறைகிறது. டயஸ்டோலிக் இரத்த அழுத்தமானது 10.7% வரை குறைகிறது. உயர் இரத்த அழுத்தம் உடையவர்கள் செம்பருத்தி டீயை குடித்து வரலாம்.


உயர் இரத்த சர்க்கரை உங்கள் நரம்புகள், கண்கள் மற்றும் சிறுநீரகங்களின் செயல்பாட்டில் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. மேலும், இது இதய நோய் வருவதற்கான வாய்ப்புகளை குறைக்கிறது. எனவே செம்பருத்தி சாற்றை 21 நாட்கள் குடித்து வர இரத்த சர்க்கரை அளவு குறைகிறது.


இரத்த குழாயை அடைக்கும் கொழுப்பால் இதய நோய்கள் வரும் ஆபத்து அதிகம். இந் பூவின் சாற்றை பிழிந்து வாய்வழியாக எடுத்துக் கொண்டு வரும் போது இரத்த கொலஸ்ட்ரால் அளவு குறைகிறது. இது கொலஸ்ட்ரால் அளவை 22% வரை குறைக்கிறது.


இது நல்ல கொலஸ்ட்ரால் (எச். டி.எல்) அளவை அதிகரிக்கிறது. இந்த பூவில் உள்ள சபோனின் உடம்பானது கொழுப்புகளை உறிஞ்சுவதை தடுக்கிறது.


செம்பருத்தி பூ இலைகளைக் கொண்டு தயாரிக்கப்படும் பேஸ்ட்கள் அந்தக் காலத்தில் இருந்து கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கிறது. இது ஆரோக்கியமான முடி வளர்ச்சியை தூண்டுகிறது. முடியை பலப்படுத்துகிறது. எனவே செம்பருத்தி பூவைக் கொண்டு சாம்பு தயாரிப்பது உங்க கூந்தல் வளர்ச்சிக்கு சிறந்த ஒன்றாக அமையும்.


செம்பருத்திப் பூவை நிழலில் உலர்த்திப் பொடி செய்து கசாயமாகக் காய்ச்சி அருந்தி வந்தால், மாதவிலக்கு காலங்களில் ஏற்படும் அடிவயிற்று வலி, மயக்கம் போன்றவை குறையும்.


கருப்பை பாதிப்பினால் கருவுறாமல் இருப்பவர்களுக்கும், வயது அதிகம் ஆகியும் கரு உருவாகாமல் இருக்கும் பெண்களுக்கும் செம்பருத்திப்பூ சிறந்த மருந்து. செம்பருத்திப் பூவின் இதழ்களை அரைத்து மோரில் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் வெகுவிரைவில் கருப்பையில் உள்ள நோய்கள் குணமாகும். பூப்பெய்யாத பெண்களும் பூப்பெய்துவார்கள்.


செம்பருத்திப் பூ இதழ்களை கசாயம் செய்து அருந்தி வந்தால் வெள்ளைப்படுதல் குணமாகும். 


சிறுநீர் எரிச்சல் குணமாக 4 செம்பருத்தி இலைகளை 2 டம்ளர் நீர் விட்டு காய்ச்சி, வடிகட்டி வைத்துக் கொண்டு கற்கண்டு சேர்த்து கலக்கி குடிக்க வேண்டும். அல்லது 4 செம்பருத்தி பூ மொட்டுகளை 2 டம்ளர் நீர் விட்டு காய்ச்சி வடிகட்டி மேலே குறிப்பிட்ட முறையில் குடிக்க வேண்டும்.


மாதவிடாய் சரியாக வருவதற்கு நான்கு புதிய செம்பருத்தி பூக்களை அரைத்து, பசையாக அரைத்து கொள்ள வேண்டும். வெறும் வயிற்றில் காலை நேரத்தில் இந்தப் பசையை உட் கொள்ள வேண்டும். 7 நாட்களுக்கு இவ்வாறு செய்ய வேண்டும். அல்லது செம்பருத்தி பூக்களை நிழலில் உலர்த்தி தூள் செய்து கொள்ள வேண்டும். ஒரு தேக்கரண்டி அளவு தூளை காலையிலும், மாலையிலும் 7 நாள்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும்.


செம்பருத்தி பூ இதழ்கள் 15, ஆடாதோடை தளிர் இலைகள் 3, இரண்டையும் நசுக்கி 2 டம்ளர் நீரில் இட்டு கொதிக்க வைத்து வடிகட்டி ½ தேக்கரண்டி அளவு தேன் கலந்து தொடர்ந்து குடித்து வர வேண்டும். தினமும் காலை மாலை வேளைகளில் 3 நாட்களுக்கு குடித்து வந்தால்  இருமல் தீரும்.


செம்பருத்தி பூக்களை அரைத்து தலையில் தடவி ஊற வைத்துக் குளிக்க தலைப் பேன்கள் குறைய தொடங்கும். 10 செம்பருத்திப் பூ இதழ்களை நீரில் போட்டு காய்ச்சி குடித்து வந்தால் சிறு நீர் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சல் குணமாகும்.


செம்பருத்திப் பூவில் குறிப்பிடத்தக்க அளவு தங்கச் சத்து உள்ளதாக மருத்துவ நூல்களில் குறிப்பிடப்பட்டு உள்ளது. தலைமுடி கறுப்பாகவும், நீண்டு வளர காலம் காலமாக செம்பருத்தி இலைகள் தான் உபயோகப்படுத்துகின்றோம்.


செம்பருத்தி பூ இதய நோய் அணுகாமல் தடுக்கும் அற்புதமான டானிக். செம்பருத்தி பூவைப் பசுமையாகவோ, காய வைத்து பொடி செய்தோ வைத்துக் கொண்டு, பாலில் கலந்து காலை, மாலை என இரு வேளையும் குடித்து வந்தால் இதய உறுதியாக இருக்கும்.


செம்பருத்தி பூத்தூளுடன் சம அளவு மருதம் பட்டைத் தூளை கலந்து 1 தேக்கரண்டி அளவு காலை, மாலை சாப்பிட, இரத்தத்தில் இரும்புச் சத்து அதிகரித்து இரத்த சோகை குறைய தொடங்கும்.


செம்பருத்தி டீ

தேவையான பொருட்கள்

செம்பருத்தி பூக்கள் - 5

தண்ணீர் - 1 கப்

செய்முறை

ஒரு கப் கொதிக்கும் நீரில் 5 செம்பருத்தி பூக்களை சேர்க்கவும்.

2 நிமிடங்கள் கொதித்த பிறகு அடுப்பை அணைக்கவும்.

இதனை வடிகட்டி, சூடு தணிந்த பின் குடிக்கலாம்.


தலைமுடிக்கு செம்பருத்தி ஹேர் ரின்ஸ்

தேவையான பொருட்கள்

தண்ணீர் - 1 கப்

செம்பருத்தி பூக்கள் - 10

செய்முறை

முதலில் செம்பருத்தி பூக்களை 2 கப் தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைக்கவும்.

மறுநாள் காலையில் கைகளால் பூக்களை நன்கு பிழியவும்.

இதனை வடிகட்டி உங்கள் தலைமுடிக்கு தடவலாம்.

தேவைப்பட்டால் ஷவர் கேப்பை கொண்டு தலைமுடியை மூடி வைக்கலாம்.

20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் முடியை அலசவும்.


தலைமுடிக்கு செம்பருத்தி எண்ணெய்

தேவையான பொருட்கள்

செம்பருத்தி இலைகள் - 12,

செம்பருத்தி பூக்கள் - 5,

தேங்காய் எண்ணெய் - 1 கப்

செய்முறை

முதலில் செம்பருத்தி இலைகள் மற்றும் பூக்களை அரைத்து பேஸ்ட் தயார் செய்து கொள்ளவும்.

இதனை சுத்தமான தேங்காய் எண்ணெயில் கலக்கவும்.

இதில் உள்ள நீர் வற்றும் வரை குறைந்த தீயில் வைத்து கொதிக்க விடவும்.

இதை 48 மணி நேரம் வரை அப்படியே விட்டுவிடுங்கள்.

பிறகு இதனை வடிகட்டி சுத்தமான கண்ணாடி பாட்டிலில் சேமித்து வைத்து பயன்படுத்தலாம்.


இரத்த சோகைக்கு செம்பருத்தி


தேவையான பொருட்கள்

செம்பருத்தி மொட்டுகள் 20-30

தேன் - ½ டீஸ்பூன்


செய்முறை

செம்பருத்தி மொட்டுகளை நிழலில் உலர்த்தி நன்கு பொடித்துக் கொள்ளவும்.

இந்த பொடியை காற்று புகாத ஒரு பாட்டிலில் சேமித்து வைத்துக் கொள்ளலாம்.


உங்கள் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க 1/2 டீஸ்பூன் தேனுடன் சிறிதளவு செம்பருத்தி பொடி கலந்து சாப்பிடலாம். இதை ஒரு நாளைக்கு இரண்டு முறை எடுத்துக் கொள்ளலாம்.


செம்பருத்தி செடியின் இலை மற்றும் பூக்களில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. அதிலும் அதனுடைய பெரிய வண்ணமயமான பூக்கள் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். ஆனால் இது ஒரு அழகான அலங்கார பூ மட்டுமல்ல, இதில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளும் உள்ளன. இதில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், அந்தோசயினின்கள் மற்றும் ஃபிளாவனாய்டுகள் போன்ற அத்தியாவசிய சேர்மங்களும் உள்ளன.


செம்பருத்திப் பூக்கள் இனிப்பு மற்றும் துவர்ப்பு சுவை உடையதாக இருக்கும். இது குளிர்ச்சி தன்மை உடையது. செம்பருத்தி செடிகளில் பல வகை உண்டு, இவை மூலிகை மருந்துகளாக உலகம் முழுவதும் பயன்படுத்தப் பட்டு வருகின்றன.


செம்பருத்திப் பூக்களில் பித்தத்தை குறைக்கும் பண்புகளும், இரத்த கசிவு எதிர்ப்பு பண்புகளும் உள்ளன. இவை பின்வரும் பிரச்சனைகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்


ஒற்றைத் தலைவலி

முகப்பருக்கள்

அசிடிட்டி

அல்சர்

இரத்தக் கசிவு பிரச்சனைகள் (ஈறுகளில் இரத்தப்போக்கு மற்றும் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் அதிக இரத்தப்போக்கு)

இவை இதய ஆரோக்கியத்திற்கும் நல்லது. மேலும் இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்துவதற்கு பயனுள்ளதாக இருக்கும். இது இரத்த சோகை, மூலம், தூக்கமின்மை, சிறுநீர் பாதை தொற்று(UTI) மற்றும் இரத்தப்போக்கு பிரச்சனைகளை சமாளிக்க உதவுகிறது. இவை உடல் ஆரோக்கியத்தை பராமரிப்பதோடு மட்டுமின்றி சருமம் மற்றும் முடி சார்ந்த பிரச்சனை களையும் நீக்குகின்றன.


சர்க்கரை நோய், நரைமுடி, முடி உதிர்தல், கொலஸ்ட்ரால், மாதவிடாய் வலி, அசிடிட்டி, உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதர பித்தம் சார்ந்த பிரச்சனைகளுக்கு செம்பருத்தி டீ பயனுள்ளதாக இருக்கும். இது போன்ற பிரச்சனைகளுக்கு செம்பருத்தியை டீ வடிவில் எடுத்துக் கொள்வதே சிறந்தது.


செம்பருத்தி பூவின் அற்புத மருத்துவ பயன்கள்...!


செம்பருத்தி பூவின் சாற்றுடன் சம அளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து வாணலியில் இட்டு காய்ச்சி, வடி கட்டி, கண்ணாடி பாட்டில்களில் பத்திரப்படுத்த வேண்டும். இந்த எண்ணெயை தினமும் தடவி வர தலை முடி கருத்து அடர்த்தியாக வளரும்.
மாதவிடாய் காலத்தில் அதிகமாக உண்டாகும் குருதி பெருக்கிற்கு பத்து செம்பருத்தி பூவின் இதழ்களை நெய்யில் வதக்கி சாப்பிட வேண்டும். செம்பருத்தி பூ இதழின் வடிசாறு சிறுநீர் கழிக்கும் பொழுது உண்டாகும் எரிச்சலை நீக்கும். நீர் சுருக்கை போக்கி சிறுநீரை பெருக்கி நஞ்சுகளை வெளியேற்றும். இனப்பெருக்க உறுப்பு நோய்களுக்கும் இது மருந்தாகின்றது.


செம்பருத்தி பூ இதய நோய் அணுகாமல் தடுக்கும் அற்புதமான டானிக். செம்பருத்தி பூவைப் பசுமையாகவோ, காய வைத்து பொடி செய்தோ வைத்துக் கொண்டு, பாலில் கலந்து காலை, மாலை வேளைகளில் குடித்து வர இதய பலவீனம் தீரும்.

உடல் சூடு காரணமாக பலருக்கு வாய்புண், வயிற்றுப்புண் உண்டாகும். அவர்கள் தினம் 10 பூவின் இதழ்களை மென்று சாப்பிட்டால் புண்கள் ஆறும். ஒரு மாதகாலம் தொடர்ந்து சாப்பிட்டு வரவேண்டும்.

செம்பருத்தி பூ குளிர்ச்சி பொருந்தியது. சருமத்திற்கு இதமும், சுகமும் அளித்து ரத்தத்தை சுத்தம் செய்து உடலை பளபளப்பாக்கும்.


செம்பருத்தி பூக்களை அரைத்து தலையில் தடவி ஊற வைத்துக் குளிக்க தலைப் பேன்கள் குறையும். 10 செம்பருத்திப் பூ இதழ்களை நீரில் இட்டு காய்ச்சி குடித்து வர சிறு நீர் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சல் குணமாகும்.

செம்பருத்தி பூ, உடல் வெப்பத்தை அகற்றி குளிர்ச்சியை உண்டாக்கும். கருப்பை நோய்கள், இதய நோய்கள், ரத்த அழுத்தம் போன்றவைகளுக்கு சிறந்த நிவாரணியாகும். செம்பருத்தி பூவின் இதழ்களை 200 மி.லி. நீரில் கொதிக்க வைத்து, காலை நேரத்தில் அருந்தி வந்தால், ரத்த அழுத்தம் சீராகும்.

செம்பருத்தி பூத்தூளுடன் சம எடை அளவு மருதம் பட்டைத் தூள் கலந்து 1 தேக்கரண்டி அளவு காலை, மாலை சாப்பிட, இரத்தத்தில் இரும்புச் சத்து அதிகரித்து இரத்த சோகை நோய் குறையும்.

வெட்பாலை-தினம் ஒரு மூலிகை



*வெட்பாலை* நீண்ட பசிய இலைகளையும் வெள்ளை மலர்களையும் குறடு போன்ற இரட்டை காய்களையும் பஞ்சு சேர்ந்த விதைகளையும் உடைய இலையுதிர் மரம் கிரி மல்லிகை என்றும் அழைப்பார்கள் சரும நோய்களை எதிர்க்கும் வெப்பாலை பக்க விளைவுகளை உண்டாக்காத நரை முடியை மாற்ற வெட்பாலை இலையில் இருந்து எடுக்கப்படும் இயற்கையான சட்டை பயன்படுத்தலாம் இதன் இலைகளை கையில் வைத்து கசக்கி பார்த்தால் சிறிது நேரம் கழித்து பார்க்க கருநீலம் படிந்திருக்கும் இதை காளாஞ்சகப்படை சோரியாசிஸ் என்னும் சர்வ நோய்களுக்கு முதன்மையான மருந்தாக வெப்பாலை பயன்படுகிறது வெப்பாலை மர பொம்மைகள் மிகவும் புகழ்பெற்றவை குழந்தைகளுக்கு மர பொம்மைகளை கொடுக்கும் போது அதை கடித்து மற்றும் கைகளில் உருட்டி விளையாடும் போது வெட்பாலை மூலிகையின் மருத்துவ குணங்கள் பொம்மையின் மூலம் குழந்தைகளுக்கு கிடைக்கும் இதனால் பிற்காலங்களில் தோல் நோய்கள் சரும நோய்கள் வர வாய்ப்பு குறைவு பாலுள்ள மூலிகைகள் நிறைய உள்ளன அதில் சிறந்தது வெட்பாலை இதன் காம்பை உடைத்தால் வெளியாகும் பாலை காயங்களுக்கு சரும நோய்களுக்கு இதன் பால் சிறந்த நிவாரணம் தரும் இலைகளை மென்று துப்ப பல் வலி தீரும் நாளை...... நன்றி

Saturday, February 3, 2024

வெற்றி மந்திரம் | இந்த ‘ஆறு’ உங்களிடம் இருக்கிறதா?

எது வெற்றி என்பதில் பலருக்கும் பலவிதமான கருத்துகள் இருக்கின்றன. ஆசைப்பட்டதை அடைவது, கனவுகளை நனவாக்குது, போட்டிகளில் ஜெயிப்பது, எதிலும் முன்னணியில் நிற்பது,


தேர்வில் வெற்றிபெறுவது, நல்ல வேலையில் சேருவது, பதக்கங்களை வெல்வது, பிசினஸ், அன்பான குடும்பம், நிறைய பணம், சொந்த வீடு, கார், பங்களா என்று சொல்லிக்கொண்டே போகலாம்.

இப்படி வெற்றியின் நிறைவு, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமாக இருக்கிறது. உண்மையான வெற்றி எது என்பதை வேறு ஒருவர் நிர்ணயிக்க முடியாது. அதை அவரவரே நிர்ணயித்துக்கொள்ள வேண்டும். நீங்கள் திறமையானவரா இல்லையா என்பதை நீங்கள் அடையும் வெற்றியைப் பொறுத்துத்தான் இந்த உலகம் உணர்ந்துகொள்கிறது.



உயர்ந்த நோக்கம், சாதிக்க வேண்டும் என்கிற உத்வேகம், கடினமான உழைப்பு, நிர்ணயிக்கப்பட்ட இலக்கு, சரியான திட்டமிடல், நம்மால் முடியும் என்ற நம்பிக்கை. இந்த ஆறு விஷயங்களை நாம் கடைபிடித்தாலேயே போதும். வெற்றியைத் தேடி நாம் போக வேண்டியதில்லை. வெற்றி நம்மைத் தேடி வரும்.




இலக்கு

நம்முடைய இலக்கு எது என்று நாம் முதலில் நிர்ணயித்துக்கொள்ள வேண்டும். நம் வெற்றிக்கான இலக்குதான், நாம் என்ன செய்யப் போகிறோம், எதில் நாம் வெற்றிபெறப் போகிறோம், எதில் நாம் சாதிக்கப் போகிறோம் என்பதை நிர்ணயிக்கும். அந்த இலக்கை அடைய நாம் மேற்கொள்ளும் வழிமுறைகள்தாம் நமக்கு வெற்றியைத் தரும்.




உயர்ந்த நோக்கம்

நாம் வெற்றிபெற நமது நோக்கம் முக்கியப் பங்காற்றுகிறது. நமது நோக்கம், எண்ணம், ஆசை உயர்ந்ததாக இருக்க வேண்டும். இவை நம்மை வெற்றியின் பாதையை நோக்கி இழுத்துச் செல்லும்.
பணக்கார இளைஞன் ஒருவன் விலையுயர்ந்த தன் காரின் அருகே நின்றுகொண்டிருந்தான். ஏழைச் சிறுவன் ஒருவன் அந்த காரையே ஆசையுடன் பார்த்துக்கொண்டிருந்தான். பணக்கார இளைஞன் சிரித்துக்கொண்டே, “இது என் அண்ணன் எனக்குப் பரிசளித்தது” என்றான். சிறுவன் முகம் ஆச்சரியத்தில் விரிந்தது. “உனக்கு அப்படி ஓர் அண்ணன் இருந்திருக்கலாம் என்று ஆசைப்படுகிறாயா?” அந்த இளைஞன் கேட்டான். ஏழைச் சிறுவன் சொன்னான், “இல்லை! அப்படியோர் அண்ணனாக வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்”.
அந்தச் சிறுவனைப் போன்ற உயர்ந்த நோக்கம்தான் நமக்குத் தேவை.
வாங்கும் இடத்தில் இல்லாமல் வழங்கும் இடத்தில் இருப்பதே சிறந்தது என்பதை அந்தச் சிறுவன் உணர்ந்திருக்கிறான். அந்தச் சிறுவனைப் போல நாம் ஒவ்வொருவரும் இருக்க வேண்டும்.

உத்வேகம்

நம் ஒவ்வொருவருக்கும் சாதிக்க வேண்டும் என்கிற உத்வேகம் வேண்டும். அந்த உத்தேகம்தான், பின்னர் நாம் அடையப்போகும் வெற்றிக்குத் தூண்டுகோலாக இருக்கிறது.




சரியான திட்டமிடல்

வெற்றி பெற முக்கியத் தேவை, சரியான திட்டமிடல். வெற்றியை நோக்கி நாம் முதல் அடியை எடுத்துவைப்பதற்கு முன்பே, வெற்றியின் இலக்கை அடையும் பாதையைச் சரியாகத் திட்டமிட்டுக்கொள்ள வேண்டும். திட்டமிடல் இல்லாத எந்த ஒரு பயணமும் சரியான இலக்குக்கு நம்மைக் கொண்டுபோய் சேர்க்காது! சரியாகத் திட்டமிடுங்கள். திட்டமிடுவதற்கு முன் பலமுறை யோசனை செய்யுங்கள்.


கடின உழைப்பு

சரியான இலக்கை நிர்ணயித்தல், உயர்ந்த நோக்கம், சரியான திட்டமிடல், கடின உழைப்பு ஆகியவை இருக்க வேண்டும்.
உழைப்பு இல்லாத இலக்கு, நோக்கம், திட்டமிடல் எல்லாம் விழலுக்கு இறைத்த நீர் போன்று பயனற்றது. இப்போது நாம் கடுமையாக உழைத்தால்தான் அதன் பலன் நிச்சயம் கிடைக்கும்.

நம்பிக்கை

நம்பிக்கை, எரிபொருள் போன்றது. அது இருக்கும்வரை நம்மை இயக்கிக்கொண்டே இருக்கும். வெற்றியை நோக்கிய நமது பயணம் சுலபமாக இருக்கும். தன்னம்பிக்கை இல்லாத முயற்சி, எரிபொருள் இல்லாத வாகனம் போன்றது. ஒரே இடத்தில் தேக்கிவிடும். நம் மீது நாம் நம்பிக்கைவைக்காமல் வேறு யார் வைக்க முடியும்?
ஒரு மனிதனை ஒரே ஒருவரால் மட்டுமே உள்ளும் புறமும் அறிந்திருக்க முடியும். அந்த மனிதனின் பலம், பலவீனங்களை அறிந்திருக்க முடியும். அந்த நபர், அவரேதான்! பலவீனத்தை உதறுவோம். பலத்தை அதிகப்படுத்துவோம். வாழ்க்கையில் வெற்றி பெறுவோம்!

வால் மிளகு-தினம் ஒரு மூலிகை

 


*வால் மிளகு*.  மிளகு இனத்தை சார்ந்த படர் கொடி முதிர்வதற்குள் காம்புடன் பறித்து உலர்த்தப்பட்ட காய்கள் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் வால்மிளகின் உட்புறம் என்னை பசை உள்ளதாகவும் சற்றே காரத்துடன் கூடிய நறுமணம் உடையதாகவும் இருக்கும் உடல் வெப்பம் நாடி நடை மிகுத்தல் வயிற்று வாய்வு அகற்றுதல் சிறுநீர் பெருக்குதல் சளி அகற்றுதல் ஆகிய குணம் உடையது வால்மிளகு பொடி 300-400மி.கி அளவாக தேனில் குழைத்து சாப்பிட சிறுநீர் பாதையில் உண்டாகும் புண் தந்தி மேகம் பெண்களுக்கான வெள்ளைப் போக்கு பிரமேகம் முதுமையில் காணும் சளிக்கட்டு ஆகியவை தீரும் வால் மிளகு தூளுடன் வெடியுப்பு பொடி சமன் அளவாக கலந்து அரை கிராம் அளவு கொடுத்து வர வெள்ளை தீரும் 50 மில்லி கருவாபட்டை குடிநீரில் 250 மில்லி கிராம் வால் மிளகுத்தூள் கலந்து கொடுத்து வர இருமல் சளி அகலும் வால்மிளகு அதிமதுரம் திப்பிலி சிற்றரத்தை கடுக்காய் இவற்றின் தூள் வகைக்கு 10 கிராம் 800 மில்லி நீரில் இட்டு இருநூறு மில்லி ஆகுமாறு காய்ச்சி வடிகட்டி வைத்துக்கொண்டு 50 மில்லி அளவாக நாளும் நான்கு வேளை குடித்து வர இருமல் தீரும் நன்றி.

Friday, February 2, 2024

சிக்கனம் என்றால் என்ன ?

 சிக்கனம் என்றால் என்ன ? செலவே செய்யாமல் இருப்பதா சிக்கனம். இல்லை.. 


அநாவசிய செலவுகளைக் குறைப்பது, ஆடம்பரச் செலவுகளைத் தவிர்ப்பது இவற்றையே சிக்கனம் என்று சொல்லலாம்...


அவ்வாறு தேவையற்ற செலவுகளைக் குறைத்து சேமிப்பைப் பெருக்கினால் சிறப்பாக வாழலாம்.


தனிமனித சிக்கனம் வீட்டையும் மேம்படுத்தும். நாட்டையும் மேம்படுத்தும். 


வேலை செய்கின்ற ஒவ்வொருவரும் தனது சம்பளத்தின் முதல் செலவு என்பது சேமிப்பாகத் தான் இருக்க வேண்டும். 


தனது சம்பளத்தில் இருந்து சேமிப்புக்கு ஒதுக்கியப் பின்னர் தான் மற்ற செலவுகளுக்கான பட்ஜெட் போடப்பட வேண்டும். 


எது எப்படியிருப்பினும் சிக்கனம் இல்லையேல் சிறப்பான வாழ்க்கை வாழ முடியாது. நமது வளமான வாழ்க்கை நமது சிக்கனத்தைப் பொறுத்தது.


அமெரிக்காவின் ஆரம்ப வரலாற்றில்

 ஜான் டி ராக்பெல்லர் ஒரு மிகப் பெரிய கோடீஸ்வரர்


பிற்காலத்தில் எண்ணைய் நிறுவனங்களைத் தனது ஆதிக்கத்தில் வைத்து இருந்தவர். 


மிகச் சாதாரண நிலையில் வாழ்ந்தவர் அவர். தமது இளம் வயதில் சிறுகச் சிறுக சம்பாத்தித்தப் பணத்தில் சிக்கனத்தைக் கடைப்பிடித்து தனது வாழ்க்கையை உயர்த்திக் கொண்டவர். 


தான் வேலை செய்த நிறுவனத்திலயே பங்குகளை வாங்கி தொழிலில் கொடிக் கட்டிப் பறந்தவர். அவருடைய ஆரம்பம் அந்த சிக்கனம் தான்.


நீங்கள் சிக்கனமாக இருந்தால் வெளியில் இருந்து கேலிப் பேச்சுக்கள் வரத்தான் செய்யும். நண்பர்கள் பலர் நம்மைப் பலவிதமான பெயர்களில் அழைப்பார்கள்.


உங்கள் பெயரோடு கஞ்சன் என்னும் அடைமொழியும் சேர்ந்து கொள்ளும். கருமி, 

பிசினாறி என்று பிதற்றுவார்கள். உலோபி என்று உளறுவார்கள். 


இவைகளை எல்லாம் தாண்டித் தான் நீங்கள் சிக்கனத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.


ஒன்றை நினைவிற் கொள்ளுங்கள். பணம் உங்களுடையது. நீங்கள் உழைத்துச் சம்பாதித்தது.


அதனை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது உங்களைப் பொறுத்தது. 


சிக்கனம் என்பது உங்களின் வருங்கால வாழ்க்கைக்கு. உங்களைக் கேலி செய்வோர் நீங்கள் பணப் பிரச்சனையில் இருக்கும் போது யாரும் உங்களுக்கு உதவப் போவதில்லை.


இன்று பணத்தின் மீது நீங்கள் அசட்டையாக இருந்தால் நாளை பணம் உங்களை அசட்டை செய்து விடும். அதை மறந்து விடாதீர்கள்.


ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள். நமது கையில் இருக்கும் பணம் தான் நமக்கு உதவி செய்யும். 

வேறு யார் வீட்டுப் பணமும் நமது ஆபத்துக்கு உதவாது.


ஆம்.,நண்பர்களே..,


இது சுயநலமான உலகம். மற்றவர் படும் துன்பத்தைப் பார்த்து கண்டும் காணாமல் இருக்கும் உலகம். 


நமது உறவுகள், நண்பர்கள் ஆபத்துக் காலத்தில் உதவுவார்கள் என்று அசட்டையாக இருக்காதீர்கள்.


மீண்டும் மீண்டும் சொல்கிறேன். சிக்கனமாக இருக்கப் பழகிக் கொள்ளுங்கள். 


ஒரு மனிதனின் வெற்றி


ஒரு மனிதனின் வெற்றி. அவர் படித்த படிப்பினால் மட்டும் அமைவதில்லை. ஓரளவு பேச்சுத் திறமையுள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்... 


கற்பனைக் கதையாய் இருந்தாலும். சாவித்திரியின் திறமைதான் அவர் கணவரது வாழ்வைக் காப்பாற்றியது... 


பலமுறை அரசரின் மரண தண்டனையிலிருந்து தெனாலிராமனின் வாக்குத்திறமை காப்பாற்றி இருக்கிறது... 


பீர்பாலின் திறமையான பேச்சுக் கதைகளையும் நாம் அறிவோம்... 


நம் ஊர்களில் குப்பை பொருள்களை திறமையாகப் பேசி, நம்மிடம் புகுத்தும் விற்பனை அலுவலர்களை நாம் அறிவோம்... 


நம்மைப் பற்றி நம் பெற்றோர்கள் வருந்தும்போது கூறக்கூடிய வார்த்தை 'கொஞ்சம் கூட திறமை (சாமர்த்தியம்) போதாது இவனுக்கு" என்பதுதான்... 


இப்போது ஒரு சிறுகதை... 


ஒரு நிறுவனத்தில் செயலர் பதவிக்கு பலர் நேர்முகத் தேர்வுக்கு வந்திருந்தனர். அவர்களிடம் கேட்கப்பட்டது ஒரே கேள்வி... 


'பத்தடி ஆழம். பத்தடி அகலம் கொண்ட 


குழியில் நீங்கள் வீழ்ந்துவிட்டால் "எப்படி வெளியே வருவீர்கள்...?' என்பதுதான்... 


ஓலமிட்டு உரக்க ஒலி எழுப்புவேன் என்றார் ஒருவர். சிறுகச் சிறுக முயற்சித்து ஏறிவிடுவேன் என்றார் மற்றொருவர். இவர்கள் யாருக்கும் வேலை கிடைக்கவில்லை... 


கடைசியில் ஒருவர் கேட்டார்.., 


'தாழ்ந்த மரக்கிளை ஏதாவது குழிக்கருகில் இருந்ததா...?'

'இல்லை'என்றனர் தேர்வுக் குழுவினர்... 


'நான் விழுந்தது பகலிலா...? அல்லது இரவிலா...?'

'ஏதற்குக் கேட்கிறாய்...?'- என்றனர் தேர்வுக் குழுவினர்... 


இவர் கூறியதாவது... 


''பகலில் குழியில் விழ நானொன்றும் கண் பார்வையற்றவர் இல்லை. கவனக் குறைவானவரும் அல்ல... 


அடுத்தவர் மரத்திலிருந்து திருட்டுப் பழம் பறித்துத் தின்னும் மோசமானவனும் அல்ல... 


அதனால்!, கிளை முறிந்து குழியில் விழ வாய்ப்பில்லை என்றான்... 


அவர் பதில் மனநிறைவு ஏற்படுத்தியது தேர்வுக் குழுவினர்க்கு. அவரது வாக்குத்திறமை அவருக்கு வேலை வாங்கிக் கொடுத்தது... 


ஆளுமை என்பது ஒரு திறமை, அதுவே மிகை ஆற்றலாகும். திறமை என்பது மற்றவரை ஏமாற்றுவதோ, தன் செயலை சாதித்து கொள்வதோ இல்லை...!


திறமை என்பது பேச்சுத் திறமை, அறிவுக் கூர்மை, தெளிந்த சிந்தனை, நம்பிக்கை, சரியாக முடிவெடுக்கும் திறமை, முடிவெடுக்கும் திறன். எந்தத் தொழிலாக இருந்தாலும் எல்லோருக்கும் உயர்ந்த பீடம் கிடைத்து விடுவதில்லை...!!


உயரம் தொட்டவர்கள் அனைவருக்கும் அந்த இடம் தானாக வந்து சேர்வதுமில்லை.  தொடர்முயற்சி, கடினஉழைப்பு, புத்தி கூர்மை, சூழ்நிலைக்கேற்ப செயல்படும் திறமை, இவையெல்லாம்தான் ஒருவரைப் படிப்படியாக உயர்த்தி முன்னேற்றப் பாதையில் நடைபோட வைக்கும்...!!!




பல நல்ல நல்ல பதிவுகளை காண தொடர்ந்து இணைந்திருங்கள்! உங்கள் நண்பர்களுக்கும் இதனை பகிர்ந்து அவர்களும் பயனடைய நீங்களும் உதவலாமே ....👇🏻👇🏻👇🏻

 

கோவிந்தா ஹரி கோவிந்தா....

 கோவிந்தா கோவிந்தா என்றால் இறந்தவர்களுக்கு மோட்சம் கிடைக்கும்..



கோவிந்தா  கோவிந்தா என்றால் கொடுத் தது திரும்பவராது என்னும் தவறான  கரு த்தை கொண்டிருக்கிறார்கள் பக்தர்கள்.  


கடவுளின் திருநாமத்தில் ஏமாற்றம் எப்படி அடையமுடியும். கடவுளின் திருநாமத்தை தவறான செயலுக்கு  அர்த்தம் வருமாறு சொல்லலாமா?  கோவிந்தா என்னும் திரு நாமத்தைப் பற்றி சொல் வதற்கும் கேட்ப தற்கும் கால அவகாசம் போதுமா என்ன?  அவ்வளவு சிறப்புக்கள் பெற்றது கோவிந் தா கோவிந்தா என்னும் திருநாமம்.


காக்கும் கடவுளான ஸ்ரீ வேங்கடமுடையா னை பக்தர்கள்  கோவிந்தா என்று அழைத் தால்  ஓடோடி வந்து அருள் புரிந்துவிடுவா ர்.   கோ என்றால் உலகம். விந்தன் என்றா ல் காப்பாற்றுபவன் என்று பொருள். ஆக கோவிந்தன் என்றால் உலகையெல்லாம் உலகில் உள்ள ஜீவராசிகளையெல்லாம் காக்கும் கடவுள் என்று பொருள்.


பெருமாளுக்கு ஸ்ரீ விஷ்ணு சகஸ்ர நாமத் தில்  ஆயிரம் நாமங்கள் உண்டு. அவற்றி லும் சிறப்புமிக்க நாமங்கள் பன்னிரண்டு.  அவற்றிலும் சிறப்பு மிக்க நாமம் கோவிந் தா என்னும் நாமம். ஆதிசங்கரர் பஜகோ விந்தத்தில் கோவிந்த நாமத்தைதான் குறிப்பிட்டு சொல்லியிருக்கிறார்.


கோவிந்தா என்றால் போனால் திரும்ப வராது என்னும் அர்த்தத்தையும் கொண்ட து. அதாவது பூவுலகில்  மனிதப்பிறவியா ய் அவதரித்து அவதிப்படுபவன் இத் திரு நாமத்தை  விடாது பற்றிக்கொண்டால் மீண்டும் இப்பூமியில் பிறப்பெடுக்க மாட் டான் என்பதையே குறிக்கும். கோவிந்த நாமம் சொல்ல சொல்ல  போன உயிர் மீண்டும் திரும்பாது என்பதே இதன்  பொ ருள். அதாவது மறுபிறவி யில்லாத நிலை என்று சொல்லலாம்.


கோ என்றால் பசு என்பதை குறிக்கும். இது அனைவருக்கும் தெரிந்ததே. விந்தன் என்றால் காப்பவன். ஆக  பசுக்களின் தலைவன் என்று பொருள்படும். தானத்தி ல் சிறந்த பசுதானம் செய்த புண்ணியத் தைத் தருவது  கோவிந்தா என்று சொல்ல க் கூடிய திருநாமம்.


பக்தர்கள் அபயம்  வேண்டி மனம் முழுக்க வேங்கடவனை நினைத்து கோவிந்தா என்று முழங்கினால் செய்யும் பணிகளை விடுத்து  தேடிவருவான் கோவிந்தப் பெருமாள். 


மகாபாரதத்தில் திரெளபதியின்  சேலை யை  துரியோத னன் துகிலுரிந்த போது அதைப் பார்த்து பீஷ்மர், துரோணர்,  கிரு பாச்சாரியார், விதுரர், பாண்டவர்கள்  தலை குனிந்தார்கள். ஒன்றும் செய்ய இயலாமல்  அமைதியாக இருந்தார்கள். செய்வதறியாமல் திகைத்தார்கள். 


ஆனா ல் திரெளபதி கோவிந்தனை மட்டு மே நம்பினாள். கோவிந்தனின் திருநாம த்தை உச்சரித்தாள். இருகைகளையும் மேலே எழுப்பி கோவிந்தா  கோவிந்தா என்னை காப்பாற்று என்றாள். கோவிந்த னின் திருநாமத்தால் அவளது ஆடையின் அளவும் நீண்டுக் கொண்டே சென்றது. அவ்வளவு சக்தியைக் கொண்டது கோவி ந்தனின் திருநாமம்.


வைணவத்தலங்கள் எங்கு சென்றாலும் அங்கு கோவிந்தா என்ற குரல் உரக்க முழக்கமிடுவதை கேட்கிறோம்.  கோவிந் தா கோவிந்தா என்னும்  முழக்கம் திரும லையில் ஸ்ரீ வேங்கடமுடையானின் தல த்தில் மட்டுமல்லாமல் திருமலை முழுக்க எதிரொலிக்கிறது. கேட்கும் நமக்கு அளவி ல்லா ஆனந்தத்தையும் அமைதியையும் தரும் திருநாமமாய்  ஜொலிக்கிறது.


ஒருவர் இவ்வுலக வாழ்வை விட்டு செல் லும் இறுதி நேரத்தில் சுற்றி இருப்பவர்க ள் கோவிந்தா கோவிந்தா என்று சொல்வா ர்கள். இப்படி சொல்வது அவருக்கு நாம் செய்யும் ஆத்மார்த்தமான ஆன்மிக உதவி. இறந்தவர்களுக்கு மோட்சத்தை தருவது கோவிந்தப்பெருமாள் மட்டுமே தரமுடியும்.


ஓம் நமோ நாராயணா.... நீயே கதி உன் திருவடிகளே சரணம் ஐயா....


கோவிந்தா ஹரி  கோவிந்தா....

வயிற்றுவலி குறைய.. இய‌ற்கை வைத்திய குறிப்புகள்

1) அஜீரணத்தால் ஏற்படும் வயிற்று வலிக்கு 50 கிராம் ஓமத்தை ஒரு சட்டியில் வறுத்து அதை முறத்தில் கொட்டித் தேய்க்க உமி நீங்கிச் சுத்தமாகும். அதைப் புடைத்து அம்மியில் வைத்து அத்துடன் அதே அளவு பனை வெல்லத்தையும் சேர்த்து அரைத்து அதில் சிறிதளவு காலை மாலை இரு வேளை வீதம் சாப்பிட்டு வெந்நீர் அருந்திவர வயிறு குணமாகும். உப்புசமும் நீங்கும்.


2) முருங்கை இலையை உப்புச் சேர்த்து லேசாக நசுக்கி கசக்கிப் பிழிந்து வரும் சாற்றில் இரண்டு ஸ்பூன் சாப்பிட உடனே வயிற்றுவலி நீங்கும்.


3) வெந்தயத்தை ஓர் இரவு ஊற வைத்து மறுநாள் காலையில் எடுத்து தயிரில் சேர்த்துச் சாப்பிட வயிற்றுவலி குணமாகும்.


4) சுக்கு, மிளகு, திப்பிலி வகைக்கு 10 கிராம், பனை வெல்லம் 5 கிராம் இவற்றில் சுக்கைத் தோல் நீக்கிவிட்டு பின் மற்ற சரக்குகளையும் தூளாக்கி அத்துடன் பனை வெல்லத்தையும் சேர்த்து அரைத்துக் காலையில் சிறிதளவு உள்ளுக்கு அருந்தி வர அஜீரண சம்பந்த வயிற்றுவலி குணமாகும்.


5) குழந்தை வயிற்று வலியால் துடித்தால் வசம்பு சுட்ட சாம்பலுடன் சிறிது தேன் சேர்த்துக் குழைத்து நாக்கில் தடவி விடுவதோடு, வசம்பு சுட்டகரியைச் சிறிது நீர்விட்டு குழைத்து வயிற்றில் கனமான பற்று போட்டுவந்தால் குணமாகும்.


6) வயிற்றுக் கடுப்பு அதிகமாக இருக்குமானால் தொட்டால் சிணுங்கி செடியின் இலையை அரைத்து சுண்டைக்காயளவு தயிரில் கலந்து சாப்பிட குணமாகும்.


7) சிறிது பெருங்காயத்தை பொரித்து நீர் மோரில் சேர்த்து அத்துடன் கறி மஞ்சள் தூளில் ஒரு சிட்டிகை போட்டு கலக்கி ஒரு நாளைக்கு மூன்று வேளை அருந்தினால் வாயு சம்பந்த வயிற்றுவலி நீங்கும்.

வாழ்க வளமுடன்

பிருத்வி முத்திரை...செய்முறை



விரிப்பில் கிழக்கு அல்லது மேற்கு திசை நோக்கி நிமிர்ந்து உட்காருங்கள்.


வஜ்ராசனம் அல்லது பத்மாசனம் அல்லது சுகாசனத்தில் அமரவும்.


கண்களை மூடி ஒரு நிமிடம் இரு நாசி வழியாக மெதுவாக மூச்சை உள் இழுத்து மிக மெதுவாக மூச்சை வெளியே விடவும்.


பின் பெருவிரல் மோதிர விரலின் நுனிப்பாகம் தொட்டு அழுத்தம் கொடுக்கவும்.


மற்ற விரல்கள் தரையை நோக்கி இருக்க வேண்டும்.


இரு கைகளிலும் இவ்வாறு செய்யவும்.

முதலில் 3 நிமிடங்கள் செய்யவும்.

பின் 5 முதல் 10 நிமிடங்கள் வரை இந்நிலையில் இருக்கலாம்.


காலை, மதியம், மாலை மூன்று நேரம் சாப்பிடும் முன் செய்யலாம்.


மூன்று வேளை செய்ய முடியாதவர்கள் இரு வேளை செய்யலாம்.


*பலன்கள்*


தோல் பளபளப்பாகும்.


உடல், மன சோர்வு நீங்கும்.


மிகவும் மெலிந்து பலவீனமாய் உள்ளவர்கள் இந்த முத்திரை செய்தால் உடல் எடை படிப்படியாக கூடும்.


உடலில் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.


வாயு தொல்லை தீரும்.


சைனஸ் நீங்கும்.


மூட்டு வாதம், மூட்டு வலி தீரும்.


நரம்பு பலவீனம் குணமாகும்.


கழுத்து, முதுகெலும்பு திடம்பெறும்.


முகம் நல்ல பொலிவுடன் இருக்கும்.


உடல் வெப்பம் சம நிலையில் இருக்கும்.


உணவு எளிதில் ஜீரணமாகும்.


மனதில் தெளிவு கிடைக்கும்.


பொறுமை மற்றும் தன்னம்பிக்கை கிடைக்கும்.

வாலுழுவை-தினம் ஒரு மூலிகை

 


*வாலுழுவை* மலைக் காடுகளில் வளரும் ஒரு கொடி வகை கனத்த கொடியாக வளரும் பல்லுள்ள நீள் வட்ட இலைகளையும் கொத்து கொத்தான காய்களையும் உடையது இலை விதை மருத்துவ குணம் உடையது விதைகள் வாலுழுவை அரிசி என்ற பெயரில் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் உடல் தேற்றுதல் வியர்வை பெருக்குதல் உடல் வெப்பத்தையும் நாடி நடையையும் மிகுதல் காமம் மிகுதல் நரம்புகளை வலுப்படுத்துதல் மற்றும் நினைவாற்றலையும் அறிவுத்திறனையும் மிகுக்கும் விதை பொடித்து அரை கிராம் அளவாக சர்க்கரையில் கலந்து நாள்தோறும் மூன்று வேளை சாப்பிடலாம் அல்லது இரண்டு கிராம் வாலுழுவை அரிசியை பாலில் அரைத்து பாலில் கலந்து வடிகட்டி நாள்தோறும் ஒருவேளை குடித்து வர வயிற்றுக் கடுப்பு குருதி கழிச்சல் பெரும்பாடு பித்தம் இருமல் மலச்சிக்கல் ஆகியவை தீர்ந்து உடல் பல பலப்பாகும் விதை பொடியை களியாக்கி கிளறி நாள் பட்ட புண்களில் வைத்துக் கட்ட அவை விரைந்து ஆறும் வாலுழுவை அரிசி மரமஞ்சள் கடுகு ரோகிணி அதிவீடயம் கொடிவேலி பட்டை வட்டத்திற்கு ஆகியவற்றை சம எடையாக பொடித்து ஒரு கிராம் அளவாக சர்க்கரை கலந்து நாள்தோறும் இரண்டு வேளை சாப்பிட்டு வர இரைப்பை தொடர்பான பல நோய்கள் தீரும்.

மனித நேயம்


இன்றைய வாழ்க்கை நிலையைக் கவனிக்கும்போது நாம் தெரிந்தோ தெரியாமலோ சில கருத்துக்களை நம் மனத்தில் பதிய வைத்துக் கொள்கிறோம். நட்புறவை வளர்க்கும் சில கருத்துக்களை ஏற்று வருகிறோம். அதோடு சில வெறுப்புணர்ச்சியூட்டும் கருத்துக்களையும் நாம் பதிவு செய்துகொண்டு வருகிறோம்.


மொத்தத்தில் பார்த்தால் உலகில் நட்புணர்ச்சியைவிட வெறுப்புணர்ச்சி தான் அதிகமாகக் காணப்படுகிறது. கட்சிப்பற்று காரணமாக சாதிப்பற்று காரணமாக நாட்டுப்பற்று குடும்பப்பற்று காரணமாகவும் வெறுப்புணர்ச்சியே வளர்க்கப்பட்டு வருவதைக் காண்கிறோம். இந்த வெறுப்புணர்ச்சி பெரிதும் கருத்து வேறுபாடுகள் காரணமாகவே எழக் காண்கிறது._


ஒருவர் செய்கிற காரியமோ பேசுகிறபேச்சோ நமக்குப் பிடிக்காத காரணத்தால் கோபம் எழும்போதே அது மூலையிலுள்ள சிற்றறைகளைத் தாக்கி வெறுப்புணர்ச்சியை பதிவு செய்துவிடுகிறது. கணவன் மனைவி உறவில் இவ்வித வெறுப்புணர்வு ஏற்பட்டுவிடுமானால், அந்த குடும்பத்தில் ஒருபோதும் அமைதி இருக்காது. ஒருத்தரை ஒருவர் சபித்துக் கொள்வதாகத்தான் இருக்கும். ஆனால் இதை அவர்கள் உணர்ந்து கொள்வதில்லை. இதனால் ஒருத்தருக்கொருத்தர் தமக்கே தம் குடும்பத்திற்கே தீமை விளைவித்துக் கொண்டிருக்கிறோம் என்பதைப் புரிந்து கொள்வதில்லை.


மனிதனை மனிதன் நேசிக்க வேண்டும். மதித்து நடக்க வேண்டும். கூடுமானவரை ஒருவரை ஒருவர் எப்போதும்   வாழ்த்திக் கொண்டே இருக்க வேண்டும். அப்போது தான் நேசம் வளரும், வெறுப்பு நீங்கும் நன்மை ஏற்படும்."


பல நல்ல நல்ல பதிவுகளை காண தொடர்ந்து இணைந்திருங்கள்! உங்கள் நண்பர்களுக்கும் இதனை பகிர்ந்து அவர்களும் பயனடைய நீங்களும் உதவலாமே 👇🏻👇🏻👇🏻

   


வாழ்க்கை என்ற ஒரு அமைப்பில் “உணவென்பது” அத்தியாவசியம்!

 



பிடி உணவாக இருந்தாலும் சரி

பிடித்தமான உணவாக இருந்தாலும் சரி

ஒவ்வொரு உணவின் பின்பும்

ஒரு உற்பத்தி உண்டு!!

அதில்

உழைப்பும் உண்டு– அவ்வாறு

உழைக்கும் உழவனின்

உழைப்பை இங்கு

வார்த்தையாக படைக்கிறேன்…

பிடித்திருந்தால் படித்து பாருங்கள்!!


கஷ்டம் வந்த போதும்

காயும் வெயில் வந்த போதும்

வாய் திறந்து கடவுளை அழைக்கும்

முன்பு இங்கு

அனைவரின் கண்களையும்

தேடவைப்பது “வானம் தான்”…….


வான்மழை வந்தாள் மட்டுமே

விளைச்சல் என்ற ஒன்று

வீரியம் பெரும்


விரிசல் விட்ட எங்கள்

நிலங்களில் — வானம்

மனம் வைத்தால் மட்டுமே

மழைத்துளி

உயிர்த்துளியாக உருவடுக்கும்– அன்றதான்

என் உழவர் இனங்களுக்கு

நம்பிக்கை பிறக்கும்


பானைகளில் பாதுகாத்த விதைகள்

பாதைகளின் இடையே– வெயிலின்

பார்வைக்கு வைக்கப்படும்


விதைநெல்லின் மேல் அவனின்

விரல்படும் போதும்

வியர்வை விழும் போதும்

தன்னை மீறிய பற்றொன்று

பாதுகாத்த விதையை நனைக்கும்!!


மணலில் மறைத்து வைத்து!

மழைநீர் சொட்டும் வரை– நித்தம்

அதனை பிரியாமல்

நெடுநேரம் காவல் புரிவான்!!

விதைகளை முழு வெளிச்சத்தில்

பார்க்கும்போது அளவில்லா

ஆனந்தம்– அன்றுதான்

அவன் முகத்தில் தாண்டவமாடும்!!


பழுதென்று நினைத்த நிலங்களை

உழுது பார்க்க நேரம் வந்த போது

உறக்கமென்பது அவன்

உடலில் இருக்குமா?


தன் பொன் பாதங்களை

அம்மண்ணில் பதித்து

உழுவான்….!

கட்டித் தழுவான்…!!

கண்ணீர் விட்ட நிலத்தில்

தண்ணீர் விட்டு

முளைத்துவந்த விதைகளை

முழுவதுமாக பதிக்க முற்படுவான்!!


அன்பு கொண்ட அவனின்

கைகள் விதைகளை விதைக்கும்போது

முதன் முறை தெரியும்!

அவனின் பொறுமை எதுவென்று…!!


விதைக்கப்பட்ட விதையானது

வேர்ஊன்றி நிற்கும் வரை

அவனுக்கு வேறுவேலை

எதுவுமில்லை,

மண்ணில் இறங்கிய வேர்கள்

முளைத்து வந்த சிறு விளைச்சல்

இரட்டிப்பாக– இங்கு

மருந்து தேவை!

அதையும்

மறவாமல் செய்வான்!!

ஒருமுறை

நீர் இறைக்க

நாள்தோறும் வாய்காலினை சுற்றியே

அவனின் கண்கள்

அலைமோதும்!!

நிலம் காய

ஒரு மருந்து…

நிரந்தரமாக களைய

ஒரு மருந்து என

விருந்தாக எண்ணி விளைச்சலுக்கு

மருந்து தெளிப்பான்!!


பயிரிட்டு பாதுகாத்த தண்டில்

தானக கதிர் வந்து

கதிரவனை தேடும் போது

அவனின் கண்கள்

கணக்கில்லாமல் களிப்படையும்!!


வாய்கால்களில்

கொளைநெல் வந்து

வரப்பின் மேலா தலைசாய்ந்து

பூமியை வணங்கும் வரை– புரியாத

ஒரு பூகம்பம்

அவனை புரட்டி போட்டுச் செல்லும்!!


தலை வணங்கிய செந்நெல்லை

தான் வணங்கி

“அறுவடை செய்யும் நாள்”

வரும் வரை

அவனின் இன்னல்கள் எத்தனை?

அடிக்கும் காற்றிடம்

கைக்கட்டி நிற்பான்….

அண்ணாந்து பார்க்கும் வானத்திடம்

ஆதாரம் கேட்டு நிற்பான்….


ஆதரம் கேட்டு நின்றபோதும்

“அறுவடை நாளில்”

ஆயிரம் பேருக்கு உணவளிக்க

அவன் உண்டு— ஆனால்

தன்னுடை அடிவயிறு காய்ந்து

“நித்தம் உழைத்த உழவனுக்கு”

உற்பத்தியின் (உழைப்பின்) உண்மை

ஊதியத்தை கொடுக்க

யார் உண்டு?


பச்சை கட்டிய

பசுமை வயலில்

கதிர் வராமல் போனால்

“கடன் வாங்கி பயிரிட்ட”

அவனின் கதி என்ன?…..


இறுதி மாதம் நிறைவேறும்

தருணத்தில் — இருக்கும்

விளைச்சல் இயற்கை காரணியால்

நீரில் மூழ்கினால்

அவன் எதை நினைத்து பார்ப்பான்?


வயிற்றுக்கு கஞ்சி இல்லாத போதும்

“உழவன்” வாழவைத்த பயிர்களுக்கு

விலை நிர்ணயம்”

யார் முடிவு செய்வது?….

உற்பத்தி செய்தவனுக்குத் தான் தெரியும்

உழைப்பின் மதிப்பு– ஆனால்

அவனின் ஊதியத்தை

உரிமை குரல்விட்டு

கேட்ட முடியுமா?….


தான் விளைவித்த விளைச்சலுக்கு

தரம் தெரியாத ஒருவர்

விலை கொடுத்தால்– தாங்காத

அவனினா நெஞ்சம்

என்ன செய்யும்?…


தானக பசித்து

தாமதமாக புசிக்கும் போது

தன்னையறிமால் சிந்தனையொன்று

கசிந்தது சிந்தித்துப் பாருங்கள்

அப்போது புரியும்

உழவனின் வியர்வை துளிகளுக்கு

விலைமதிப்பே இல்லையென்று…!!


(ஒவ்வொரு உடல் வாழவும் உணவு என்பது அத்தியாவசியம். நாங்கள் அந்த உணவினை கேட்கவில்லை. உணவினை நாங்கள் உற்பத்தி செய்ய உறுதுணையாக இருந்து ஊக்கமளித்தால் போதும்.)


உழைப்பை மதிப்போம்…!

உழவனை மதிப்போம்…!!

விவசாயம் காப்போம்…!!



வட்ட திருப்பி - தினம் ஒரு மூலிகை


*வட்ட திருப்பி அல்லது மலை தாங்கி பூண்டு* மழை காலத்தில் அடர்ந்து வளரும் சிறு செடி அமைப்பில் அரிவாள் முனை பூண்டு போல தோற்றம் அளிக்கும் இலை முழுவதும் பல் உள்ளதாகவும் குட்டையான பூ காம்புகளை உடையது மதியத்தில் மலரும் மஞ்சள் நிற சிறு பூக்களை உடையது இலை வேர் ஆகியவை மருத்துவ குணம் உடையது சிறுநீர் பெருக்குதல் பசி தூண்டுதல் உடலுரம் மிகுத்தல் காய்ச்சல் போக்குதல் உள்ளழல் ஆற்றுதல் வியர்வை மிகுத்தல் ஆகிய குணம் உடையது மலைதாங்கி இலையை நல்லெண்ணெய் விட்டு வதக்கி கட்டிகளின் மேல் வைத்து கட்ட அழுந்தி விடும் அல்லது பழுத்து உடைந்து ஆறும் வேர் 10 கிராம் இஞ்சி 10 கிராம் சிதைத்து நான் ஒரு மில்லி நீரில் இட்டு 100 மில்லி ஆகுமாறு வட்ட காய்ச்சி வடிகட்டி இரண்டு வேளை பாதி பாதியாய் பருகிவர காய்ச்சல் தணியும் தேவைப்பட்டால் வேரின் அளவை அதிகப்படுத்தி கொள்ளலாம் நன்றி.

Wednesday, January 31, 2024

முகத்தில் உள்ள கரும்புள்ளியை போக்க

மோரை இப்படி பயன்படுத்திப் பாருங்க!

மோர் ஒரு சத்தான பானம். இதில் புரதம், கால்சியம், பொட்டாசியம், வைட்டமின் ஏ, வைட்டமின் பி6 மற்றும் வைட்டமின் சி உள்ளது. இந்த சத்துக்கள் சருமத்திற்கு ஊட்டமளித்து, சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. மேலும், மோர் ஒரு நல்ல நீரேற்றம். இது சருமத்தில் ஈரப்பதத்தை தக்க வைக்க உதவுகிறது. சருமம் வறண்டு காணப்பட்

மோரில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் சருமத்தில் உள்ள சுருக்கங்கள் மற்றும் வயது புள்ளிகளை குறைக்க உதவுகிறது. மேலும், இதில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் சரும தொற்றுகளை தடுக்க உதவுகிறது. சூரிய ஒளியில் இருந்து சருமத்தைப் பாதுகாக்கும் தன்மையும் இதற்கு உண்டு.


கரும்புள்ளிகளை ஒழிக்க ஈசி டிப்ஸ்:

சருமத்தில் உள்ள முகப்பருவை நீக்க நாம் பல வழிகளில் மோர் பயன்படுத்தலாம். ஒரு தேக்கரண்டி மோரில் ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து நன்கு கலக்கவும். இந்த கலவையை உங்கள் முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவவும். இது வெளியே சென்று வந்ததால் முகத்தில் ஏற்படக்கூடிய கரும்புள்ளிகளை அகற்ற உதவும்.

இதேபோல், தயிரில் ஒரு டீஸ்பூன் ஆலிவ் எண்ணெயைச் சேர்த்து நன்கு கலக்கவும். இந்தக் கலவையை முகத்தில் தடவி நன்கு மசாஜ் செய்யவும். 15 நிமிடம் கழித்து கழுவவும். அல்லது குளிப்பதற்கு முன் மோரில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து, இந்தக் கலவையை முகத்தில் தடவி 5 நிமிடம் கழித்து கழுவினால், சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்குவதோடு, கரும்புள்ளிகள் இல்லாமல் சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்கும்.


மோர் பயன்படுத்தும் முன்பு இதை கவனியுங்கள்:

சருமத்தின் மீது மோரை பயன்படுத்துவதால் பல நன்மைகள் இருந்தாலும் சில கவனிக்க வேண்டிய விஷயங்களும் உள்ளன. அதிக மோர் பயன்படுத்துவது சரும ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல, குறிப்பாக உங்களுக்கு வறண்ட சருமம் இருந்தால், மோரை பயன்படுத்தும் போது அது மேலும் வறண்டு போகக்கூடும்

சருமம் வறண்டு போகும் போது, ​​சருமத்தில் அதிகப்படியான பருக்கள் ஏற்படும். மேலும், தோல் மீது அரிப்பு போன்ற ஒவ்வாமை எதிர்வினைகள் ஏற்படவும் வாய்ப்புண்டு. எனவே, முகத்திற்கு மோர் பயன்படுத்தும் போது, ​​ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே பயன்படுத்துவது சிறந்தது. குறிப்பாக வெளியில் செல்லும் போது பயன்படுத்துவது நல்லது.