ஒரு கிராமத்தில் உள்ள மக்கள் ஒன்று கூடி ஆற்றை கடந்து எங்கேயோ செல்ல குழுக்களாக தயாராகிகொண்டிருந்தனர்.
அப்பொழுது ஆற்றின் கரையருகில் மரத்தின் கீழ் அமர்திருந்த அவ்வூர் கிராம சாமியார் அக்குழுவிலிருந்து ஒருவரை அழைத்து எல்லோரும் எங்கே செல்கிறீர்கள் என கேட்டார் .
அவன் உடனே அவசரவசரமாக ஆற்றின் நடுவிலுள்ள மணல் மேட்டில் ஒரு சக்தி வாய்ந்த சாமியார் ஒருவர் பிரார்த்தனை செய்துக்கொண்டிருக்கிறார் அவரோடு சேர்ந்து நாங்களும் பிரார்த்தனை செய்ய போகிறோம் என்று கூறி மிக வேகமாய் தயாராகி கொண்டிருந்த குழுவில் கலந்தான்.
கிராமத்து சாமியாருக்கு தன்னை விட சக்தி வாய்ந்தவனா என்று ஒரு பக்கம் பொறாமையும் மறுப்பக்கம் மணல் மேட்டு சாமியாரை பார்க்க வேண்டுமென்கிற ஆர்வமும் அதிகமானது.
சாமியாரும் பரிசலில் ஆற்றை கடந்து மணல் மேட்டை வந்தடைந்தார். கிராம மக்களும் வந்தடைந்தனர்.
அங்கு சாமியார் ஒருவன் "இறைவா, நான் ஒருவன் மற்றும் எனது மக்களின் பிரார்த்தனை நிறைவேற அருள்புரிய வேண்டும் என மீண்டும் மீண்டும் கூறி பிரார்த்தித்து கொண்டிருந்தான்.
கிராம சாமியார் இதனை கண்டதும் கொல்லென்று சிரித்து மணல் மேட்டு சாமியாரை பார்த்து “எந்த மந்திரமும் உனக்கு தெரியாதா? பின் எப்படி? உன் பிரார்த்தனை நிறைவேறும்.வேண்டுமானால் என்னிடம் கேட்டு தெரிந்துக்கொள்.”என்று கூறி விட்டு கிராம சாமியார் நின்றார்.
ஆயினும் மணல் மேட்டு சாமியார் தனது பழைய மந்திரமான "இறைவா, நான் ஒருவன் மற்றும் எனது மக்களின் பிரார்த்தனை நிறைவேற அருள்புரிய வேண்டும் என கூறி மீண்டும் பிரார்த்தனையைதொடர்ந்தான்.
கிராமத்து சாமியாருக்கு ஒருமாதிரியாக ஆகிவிட்டது . தன்னை அவன் ஒன்றும் பொருட்படுத்தவே இல்லை என்றுஅறிந்துக்கொண்ட கிராமத்து சாமியார் கிராமத்துக்கு செல்ல ஆற்றங்கரைக்கு புறப்பட்டார்.
பரிசலில் அமர்ந்து ஆற்றின் நடுவே சென்று கொண்டிருந்த பொழுது "கொஞ்சம் நில்லுங்கள்” என குரல் கேட்டது.
கிராமத்து சாமியார் திரும்பி பார்க்க மணல் மேட்டு சாமியார் ஆற்றின் மேல் நடந்து வந்து பரிசலின் அருகில் நின்று "அய்யா நீங்கள் ஏதோ மந்திரமொன்றை தெரியும் என்று கூறினீர்கள் அதனை கூறினால் அதனையும் சேர்த்து பிரார்த்தனை செய்வேன் என்றார்.
கிராமத்து சாமியார் அதிசயத்து இதோ அந்த மந்திரம் இனி நீங்கள் “நாங்கள் இருவர் மற்றும் எனது மக்களின் பிரார்த்தனை நிறைவேற அருள்புரிய வேண்டும்” என கூறி பிரார்த்தனை செய்யுங்கள் என கூறினார் . பரிசலை மணல்மேட்டை நோக்கி செலுத்துமாறுபரிசல்க்காரனிடம் கிராம சாமியார் வேண்டுகோளிட்டார்
No comments:
Post a Comment