Friday, January 5, 2024

வெந்தயத்தை தினமும் சாப்பிடுவதனால் ஏற்படும் நன்மைகள்


வெந்தயத்தை தினமும் சாப்பிடுவதனால் ஏற்படும் நன்மைகள்


வெந்தயம் பலவகையான ஆரோக்கிய பிரச்சனைகளை சரி செய்வதில் வெந்தயம் ஒரு சிறந்த மருத்துவ பொருளாக விளங்குகிறது. வெந்தயம் ஒரு குளிர்ச்சி  வாய்ந்த பொருள். இதில் உடலுக்குத் தேவையான பல சத்துக்கள் அடங்கியுள்ளது.


வெந்தயத்தில் வைட்டமின் சி, புரோட்டீன்கள், நார்ச்சத்து, நியாசின், பொட்டாசியம், இரும்புச்சத்து மற்றும் அல்கலாய்டுகள் போன்றவை ஏராளமாக உள்ளது. மேலும்  இதில் டையோஸ்ஜெனின் என்னும் சேர்மம் உள்ளது.

 

இருதய பிரச்சனை, மூட்டு வலி மற்றும் உடல் பருமன் போன்றவற்றுக்கு நல்ல மருந்து. இதனை தினமும் ஊறவைத்து சாப்பிடலாம். அல்லது அப்படியே தண்ணீர்  கொண்டு முழுங்கலாம்.


நீரிழிவு பிரச்சனை உள்ளவர்களின் டயட்டில் ஏதாவது ஒரு வகையில் வெந்தயத்தை சேர்த்துக் கொள்வது அவசியம். இதனை பொடித்து மோருடன் கலந்து  சாப்பிடலாம்.


வெந்தயத்தை தினமும் சாப்பிட்டு வந்தால், உடலில் தங்கும் கெட்ட கொழுப்பு நீக்கும். மேலும் கொழுப்பு நிறைந்துள்ள உணவில் இருக்கும் டிரைகிளரசைட் என்ற  கொழுப்பினை ரத்தத்தில் சேர்க்காமல் பாதுகாக்கும்.

 

வெந்தயத்தில் அமினோ அமிலம், உடலில் இன்சுலின் சுரப்பதை அதிகரிப்பது மட்டும் இல்லாமல் உடலில் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டோடு வைத்துக்  கொள்ள உதவும்.


நார்சத்து அதிகம் இருப்பதால், உடலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்கி மலச்சிக்கல் மற்றும் செரிமான பிரச்சனை ஏற்படாமல் பாதுகாக்கும்.


அஜீரணத்தால் ஏற்படும் வயிற்றுவலிக்கு வெந்தய கஷாயம் மிகவும் நல்லது. வெந்தய பவுடரை தண்ணீரில் கொதிக்க வைத்து, வடிகட்டி காலை வெறும் வயிற்றில்  குடித்தால் மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும்.

Thursday, January 4, 2024

நம்மை நாமே நேர்மறையாக வைத்துக் கொள்வது எப்படி?

 


🍃1.பாசிட்டிவாக இருப்பவர்களோடு பழகுங்கள்

🍃நம்மைச் சுற்றி எப்போதுமே பாசிட்டிவ் வைப்ரேஷன் இருந்தால் நாம் இயல்பாகவே அதிக முனைப்போடு ஒரு விஷயத்தை செய்வோம்.

🍃எனவே எதிர்மறை எண்ணத்தோடு ஒரு செயலை செய்பவர்களை எப்போதும் பக்கத்தில் வைத்துக்கொள்ளாதீர்கள்.

🌼2) உற்சாகமாக இருங்கள் :-

🍃சோகத்தை விட்டொழியுங்கள். எப்போதும் உற்சாகம் கொப்பளிக்க வேலையையும் செய்யுங்கள்.

🍃இந்த வேலையைச் செய்ய வேண்டுமே என செய்து முடிக்காமல், இந்த வேலையை நம்மை விட வேறு யாரும் இவ்வளவு சிறப்பாக செய்துவிட முடியாது என்பதை மற்றவர்களுக்கு உணர்த்த வேண்டும் என எண்ணி வேலை பாருங்கள்.

🌼3. பவர்ஃபுல்லாக உணருங்கள் : -

🍃உடல் வலிமை, பண வலிமை எல்லாவற்றையும் தாண்டி மனவலிமை மிக முக்கியம்.

🍃உங்களை போல இந்த உலகத்தில் பவர்ஃபுல்லானவர் யாருமில்லை. உடனே சிரிக்காதீர்கள்.

🍃இது தான் நிஜம். உங்களின் பெஸ்ட் எது என்பது உங்களுக்கே இன்னும் தெரியவில்லை.

🍃உங்கள் வலிமையை உணர்ந்து செயலாற்றினால் நீங்கள் வேற லெவல் ஆள் பாஸ்.

🌼4. லவ் பண்ணுங்க :-

உங்களை நீங்களே நேசியுங்கள்.

🍃 இந்த உலகத்தில் தன்னை நேசிக்காத மனிதனால் வெற்றியடையவே முடியாது.

🍃உங்களை உங்களுக்கு பிடிக்க, உங்களை எப்படி மாற்ற வேண்டுமோ அப்படி மாற்றுங்கள்.

🍃 உங்கள் மீது நீங்களே அன்பு செலுத்துங்கள். நீங்கள் புறப்பட்டு எழுந்தால் உங்களை வெல்ல யாருமே இல்லை என்பதை உங்கள் மனதுக்கு புரியவையுங்கள்.

🍃 உங்களை போல அழகானவர் யாரும் இல்லை, உங்களை போல திறமையானவர் யாரும் இல்லை என்பதை மீண்டும் மீண்டும் உங்களுக்கே நினைவு படுத்திக் கொள்ளுங்கள்.

🌼5. பயணப்படுங்கள் :-

🍃வாழ்க்கை ஒரு பயணம். அடுத்த நிமிடம் உங்களுக்கு என்ன நடக்கும் என உங்களுக்கே தெரியாது.

🍃இந்த நீண்ட நெடும் பயணத்தில் ஒரு சிலருக்கு வெற்றிகள் எளிதில் வரும், சிலருக்கு தாமதமாக வரும்.

🍃அதற்காக சோர்ந்து விடக்கூடாது. வெற்றிக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை ஆராய்ந்து அதை தொடர்ந்து செயல்படுத்திக் கொண்டே இருங்கள்.

🍃 வாழ்க்கை நிரந்தரம் இல்லாதது.

🍃 ஆனால் பாசிட்டிவ் எண்ணத்துடன் தொடர்ந்து பயணம் செய்தால் உங்களுக்கு வெற்றி கிடைக்கிறதோ இல்லையோ, 

உங்கள் பயணம் மகிழ்ச்சியாகவும்,

உங்களுக்கு பிடித்தமானதாகவும் இருக்கும்.


நேர்மறை சிந்தனை நமக்கு அதிக நம்பிக்கையை கொடுக்கும். நம் எண்ணங்களை நல்வழிப்படுத்தவும் மன அழுத்தம் மற்றும் அது தொடர்பான நோய்களைக் குணப்படுத்தவும் செய்யும். நேர்மறை சிந்தனைகளின் சக்தி, நம் உடலுக்கும் மனதிற்கும் பல வகையான நலன்களைத் தரும்.

ஆக்கப்பூர்வமான நாளை தொடங்குங்கள்: ஒவ்வொரு நாளையும் நாம் நேர்மறை எண்ணங்களோடு தொடங்க வேண்டும்.

எதிர்மறை சிந்தனை மற்றும் பதற்றத்துடன் காலைப்பொழுதை தொடங்கினால் அந்த நாள் முழுவதும் நமக்கு அது வெற்றிகரமான பொழுதாக இருக்காது.

இந்த நாள் இனிதாக..!: நாள் முழுவதும் தடை களை எதிர்கொண்டால் அது சரியானதாக இருக்காது. அத்தகைய சவால்களை நீங்கள் சந்திக்கும் போது, சின்ன விசயமோ பெ ரிய விசயமோ அமைதியாக இருந்துவிடுவது நல்லது. போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டிருக்கும் போ து, நம்மைப் பதற்றப்படுத்திக் கொள்வதை விட இனிமையான இசையை கேட்டு, காத்திருக்கும் நேரத்தை கடந்து செல்வது எவ்வளவு நல்லதோ அதே போல் நாம் நமது நெ ருக்கடிகளையும் கடந்து செல்வது சிறந்தது.

நகைச்சுவை உணர்வோடு இருங்கள்: நெருக்கடியான நேரத்தில் கோபப்படுவதையோ , பதற்றமடைவதையோ விடுத்து நகைச்சுவை உணர்வோடு இருக்க கற்றுக்கொ ண்டா ல் எவ்வளவு பெரி ய பிரச்னையும் நம்மை இலகுவாகக் கடந்து சென்றுவிடும். "இதுவும் கடந்து போகும்' என்ற உணர்வோடு எல்லாச் சூழ்நிலைகளிலும் மனதை ஒரு நிலையோடு வைத்துக் கொள்ளபழகிக் கொள்ளுங்கள்

தோல்விகளில் இருந்து பா டம் கற்றுக் கொள்ளுங்கள்: நாம் எப்போதும் எல்லா நேரங்களிலும் மிகச்சரியாக எதையும் செய்து விடமுடியாது. தவறு செய்வது என்பது மனித இயல்பு. பல நேரங்களில் நாம் செய்யும் வேலைகளில் ஏற்படும் தவறுகளை - அதனால் அடைந்த தோல்விகளைப் பற்றியே சிந்தித்துக் கொண்டேயிருக்காமல் அடுத்த நிலையைப் பற்றியோசித்து வேகமாகவும், விவேகமாகவும் செயல்படத் தொடங்க வேண்டும். தோல்வி என்பது நிலையானது இல்லை என்பதை உணர்ந்து கொண்டால் போதும்.

நேர்மறை பேச்சு - செயல்களை நம்மிடம் இருந்து தொடங்க வேண்டும்: எந்த ஒரு செயலையும் செய்வதற்கு முன்பே இது என்னால் முடியாது என்ற தாழ்வு மனப்பா ன்மை யை த் தூக்கி எறிந்துவிட்டு தோல்வியே ஆனாலும் பரவாயில்லை ; அது ஓர் அனுபவமாக, படிப்பினையாக இருக்கட்டும் என்று எதிலும் முயற்சியை மேற்கொள்வது நமக்குள் நேர்மறை எண்ணத்தை வளர்க்கும்.

இந்த நேரத்தை கவனத்தில் கொள்ளுங்கள்: இன்று என்ன என்பதை விட இப்போது என்ன என்பதில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். பழையனவற்றை தூக்கி எறியுங்கள். கடந்த கால மோசமான அனுபவங்கள் எதுவானாலும் அந்த வலியைச் சுமந்து கொண்டு திரியாமல் அதன் தவறுகளை உணர்ந்து உங்கள் கடமைகளைச் சரியாக செய்வதில் மட்டும் கவனம் செலுத்துங்கள்.

நேர்மறையான நண்பர்கள், வழிகாட்டிகள், சக பணியாளர்களைக் கண்டறியுங்கள்: நம்மைச் சுற்றி எப்போதும் நேர்மறையான சிந்தனை கொண்டவர்கள் இருப்பார்களேயானால் நமது சிந்தனையும் நேர்மறையானதாகவே இருக்கும்.

எண்ணங்கள் நேர்மறையானதாக இருந்தால் செயல்கள் ஆக்கப்பூர்வமானதாக மாறும். எனவே எதிர்மறை எண்ணங்கள் நமக்குள்ளும் நம்மைச் சுற்றியும் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள். நாமும் மற்றவர்களுக்குள் நேர்மறை எண்ணங்களை விதைக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். அப்போதுதான் நீங்கள் வெற்றியாளராக முடியும்.

தமிழறிஞர் அரசஞ்சண்முகனார் வரலாறு!


தமிழறிஞர் அரசஞ்சண்முகனார் வரலாறு!

அரசன் சண்முகனார் (1868-1915), என்பவர் 20 ஆம் நூற்றாண்டு தமிழ் உரையாசிரியர் ஆவார். இவருடைய இயற்பெயர் சண்முகம். மதுரை நகருக்கு அருகில் உள்ள சோழவந்தான் என்னும் ஊரில் 1868 ஆம் ஆண்டு பிறந்தார். இவரது தந்தையார் பெயர் அரசப்பிள்ளை. தாயார் பெயர் பார்வதியம்மையார். 

இவர் சைவவேளாளர் குலத்தில் பிறந்தவர். இவர் இளமையிலே ஆர்வத்தோடு கல்வி கற்றுப் பெரும் புலமை பெற்றவர். தம் காலத்தில் பலர் போற்ற வாழ்ந்த பெரும் புலவராக விளங்கினார். ஆங்கிலம் படித்தால் நல்ல வேலை கிடைக்கும் என காரணத்தைக் காட்டி ஆங்கிலப் பாடத்துக்கு பாடநேரத்தைக் கூட்டியும் தமிழ்ப் பாட நேரத்தைக் குறைத்தும் தலைமை ஆசிரியர் ஆணைக் கொண்டுவந்தபோது அதனை எதிர்த்துப் பள்ளியிலிருந்து வெளியேறினார். 

மதுரை சேதுபதிப் பள்ளியில் பாரதியார் தமிழாசிரியராக வேலையில் சேருவதற்காக தாம் விடுப்புப் போட்டு அவர் இடத்தில் பாரதியார் பணி செய்ய வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தார்.


இவர் கலந்துகொண்ட புலமைப் போர்கள் பல. அவற்றுள் ‘உம்மை’யைப் பற்றி நிகழ்த்திய ஆராய்ச்சியும், மறுப்பும் குறிப்பிடத் தக்கவை. ‘உம்மை’ ஆராய்ச்சியில் ஈடுபட்டு வென்ற சண்முகனார் முடிவில், “இதுகாறும் உம்மை நிலை அறியாதிருந்த நீவீர் இனியேனும் உம்மை நிலை அறிவீராக” என்று இரு பொருள்பட எழுதினார்.

எனினும், இவரோடு யாழ்ப்பாண தமிழறிஞர் சி. கணேசையர் நடத்திய விவாதம் வரலாற்றுப் புகழ் வாய்ந்தது. ‘தொல்காப்பியப் பாயிரம் – முதற் சூத்திரம்’ ஆகியவற்றிற்கு அரசன் சண்முகனார் ‘சண்முக விருத்தி’ எனும் பெயரிலெழுதிய விருத்தியுரையில் ஆகுபெயர் வேறு – அன்மொழித்தொகை வேறு என நிறுவியிருந்தார். ஆனால் கணேசையர் இக்கருத்து முன்னோர்கள் முடிவிற்கு முரணானதென்றும், அவையிரண்டும் ஒன்றே என்றும் கணேசையரவர்கள் நிறுவினார்.

இயற்றிய நூல்கள் :

சிதம்பர விநாயக மாலை
மாலை மாற்று மாலை
ஏக பாத நூற்றந்தாதி
இன்னிசை இருநூறு
மதுரை மீனாட்சி அம்மன் சந்தத் திருவடிமாலை
திருவடிப் பத்து
நவமணிக் காரிகை நிகண்டு
வள்ளுவர் நேரிசை
இசை நுணுக்கச் சிற்றுரை
தொல்காப்பியப் பாயிர விருத்தி
திருக்குறள் ஆராய்ச்சி
திருக்குறட் சண்முக விருத்தி
நுண் பொருட் கோவை

இவர் இயற்றிய உரை ஆராய்ச்சி நூல்கள் தொல்காப்பியப்பாயிர விருத்தி, திருக்குறள் உரை விளக்கம் ஆகியன செந்தமிழ் இதழ்களில் இடம் பெற்று வெளிவந்தன. தொல்காப்பியப்பாயிர விருத்தி, சண்முக விருத்தி என்ற பெயருடன் வெளிவந்துள்ளது. இந் நூலை இலக்கணப் புலமை பெற விரும்புவோர் விரும்பிப் பயில்கின்றனர். இந்நூல் ஓர் இலக்கண ஆராய்ச்சிக் களஞ்சியம் ஆகும்.

தினம் ஒரு மூலிகை-செந்தரா


*செந்தரா* சிறிய இலைகளையும் செந்நிற பூக்களையும் உருண்டையான விதைகளையும் உடைய தரையில் படர்ந்து வளரும் சிறு கொடி பரிசுகளிலும் தோட்டங்களிலும் ஈரமான இடங்களில் தானே வளர்கிறது செடி முழுமையும் மருத்துவ பயன் உடையது உடல் உரமாக்குதல் பசி மிகுதல் உடல் தேற்றுதல் சிறுநீர் பெருக்குதல் நுண் புழு கொல்லுதல் காய்ச்சல் தணித்தல் ஆகிய மருத்துவ குணம் உடையது 75 கிராம் சமூகத்தை ஒரு லிட்டர் நீரில் இட்டு 125 மில்லி ஆகும் வரை காய்ச்சி பிசைந்து வடிகட்டி 50 மில்லி அளவாக காலை மாலை ஆறிலிருந்து ஏழு நாட்கள் கொடுத்து வர இலையை சிறிது மிளகு கூட்டி அரைத்து 10 கிராம் அளவாகவும் கொடுக்கலாம் இதனால் கண்டமாலை குன்மம் மலச்சிக்கல் காமாலை காய்ச்சல் புழுநோய் ஈரல் சிறு குடல் ஆகியவற்றினில் காணும் நோய்கள் தீரும் நன்றி.

நாளைய நாட்களை நலமானதாக அமைக்க

 


மனித நேய

அடிப்படையில்

விட்டுக்கொடுத்தல்..!




🏅

பல்வேறு சந்தர்ப்பங்களில் வீனர்களை

கடந்து போதல்..!!




🏅

இக்கட்டான நிலையில் சகிப்பு

தன்மையை

நம்

வசமாக்கி

கொள்வது...!!




🏅

அர்த்தமற்ற

விமர்சனங்களை

புறந்தள்ளுவது...!!




🏅

அவசியமான

விடயங்களுக்கு

மட்டும்

ஆசைப்படுவது..!




🏅

ஆடம்பர

தேவைக்கு

கடன்

வாங்காமல் இருப்பது...!




🏅

நாளைய நாட்களை நலமானதாக அமைக்கும் காலச்சக்கரம் ஆகும்....!!



ரத்த சர்க்கரை அளவு குறைய ஒரு எளிய மூலிகை டீ

⚜️ *தேவையான மூலிகைகள்*⚜️



▪️சித்திரமூலம் - 25g

▪️வெப்பாலையரிசி - 25g

▪️ நெல்லிமுள்ளி - 25g

▪️ கடுக்காய்த் தோல் - 25g

▪️ தானிக்காய்த் தோல் - 25g

▪️ மரமஞ்சள் - 25g




⚜️ *செய்முறை விளக்கம்* ⚜️




மேற்கூறிய மூலிகைகள் அனைத்தையும் நாட்டு மருந்து கடைகளில் வாங்கி நன்கு சுத்தம் செய்து கொள்ளுங்கள், பிறகு சூரிய ஒளியில் நன்கு காயவைத்து கொள்ளுங்கள், நன்கு காய்ந்த அனைத்தையும் ஒன்றாக சேர்த்து அரைத்து பொடி செய்து கொள்ளுங்கள்




*கவனிக்க :* தேவைக்கு அரைத்து கொள்ளவும் அதிகம் அரைக்க வேண்டாம்




⚜️ *சாப்பிடும் முறை*⚜️




♟️தினசரி காலை இரவு உணவுக்கு முன் எடுக்க வேண்டும்




♟️200-மி சுடுநீரில் 1 ஸ்பூன் பொடியை கலந்து சூடாக டீ போல குடிக்கலாம் சுவைக்கு பணங்கற்கண்டு சேர்த்து பருகவும்




♟️கசப்பான சுவை சர்க்கரை நோயாளிக்கு மிக அவசியம் ஆகையால் இனிப்பு கலக்க கூடாது...




இந்த சூரணம் அனைவரும் பயன்படுத்தலாம்,சர்க்கரை அளவு கட்டுப்பாடாக இருக்கும்,உடல் சோர்வு நீங்கும்.

பாலும் கசக்கல, துணியும் கசக்கல.

திருவாளர் புலவர் சோழவந்தான் அரசஞ் சண்முகனார் சிறந்த தமிழ் அறிஞர்.



திருமுறைகள் பலவற்றையும் கற்றுத் தேர்ந்தவர்.

தமிழை மிகவும் நேசித்த புலவர். இவரது ஆற்றலைக்

கண்டு வியந்த பல திருமடங்களும் இவருக்குப் பரிசும், பட்டமும் அளித்துப்

பெருமைப் படுத்தின.




அவர் நோய் வாய்ப்

பட்டு தளர்ந்து போனார். அவர் ஒரு நாள் இறக்கும் தருவாயில், அவரது உறவினர்கள்,

அவர் அருகில் இருந்த ஒரு துணியை எடுத்து பாலில் நனைத்து,

அவரது வாயில் சொட்டுச்

சொட்டாக விட்டனர்.




பாலின் ஒரு சொட்டு அவரது வாயில் விழுந்தவுடன் அவரோ முகம் சுழித்தார்.




ஒரு வேளை பால் கசக்கிறதோ! என நினைத்த அவரது உறவினர்கள், ”கசக்கிறதா?” என்று அவரிடம் கேட்டனர். புலவர் அல்லவா? அரசஞ் சண்முகனார், மரணத்தின் விளிம்பிலும்,

வார்த்தைகளால் தமிழில் விளையாடினார். ”ஐயா பால் கசக்கல,

துணியும் கசக்கல!” என்று பால் நனைத்த துணி அழுக்காக இருப்பதைக் குறிப்பிட்டார்.




அப்போது தான் உறவினர்கள் அழுக்குத்

துணியை எடுத்து பாலில் நனைத்து,

அவரது வாயில் பால் விட்டது தவறு என்று உணர்ந்தார்கள்.



குழந்தைகளுக்கு நல்ல பழக்கங்களை கற்றுக் கொடுங்கள்


1. வாசிக்கும் பழக்கத்தைப் பள்ளி செல்லும் வயதிலேயே குழந்தைகளுக்கு அறிமுகம் செய்ய வேண்டும். நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து புத்தகத்தைப் படிக்கப் பழகிக்கொள்வது அவர்களின் கல்வி உயர்வுக்கும் உதவும். புத்தகங்களின் மூலம் அவர்களின் அறிவும் வளரும்.




2. உட்கார்ந்த இடத்திலேயே விளையாடும் வீடியோ கேம்களைப் பழக்காமல், வீட்டுக்கு வெளியில் சென்று வெயிலில் விளையாட அவர்களைப் பழக்குங்கள். அவர்களுக்கு அதில் உற்சாகமும் கிடைக்கும். மற்ற குழந்தைகளுடன் இணைந்து விளையாடுவதால், சமூகத்தில் பழகும் குணமும் பெறுவார்கள். உடலும் நலமாக இருக்கும். கை, கால்களின் இயங்குதிறனும் சிறப்பாக வளரும்.




3. பணத்தைச் சேமிக்கக் கற்றுக்கொடுங்கள். பணத்தின் மதிப்பையும் உணர்வார்கள். தங்கள் கண்ணெதிரே உயரும் சேமிப்பைப் பார்த்து, சேமிக்கும் பழக்கத்தையும் பெறுவார்கள்.




4. டி.வி. கம்ப்யூட்டர், செல்போன் என்று ஒளிரும் ஏதோ ஒரு திரையைப் பார்த்தபடியே இன்றைய குழந்தைகள் வளர்கின்றனர். அவற்றுக்கு அடிமையாகவிடாமல், நேரக் கட்டுப்பாட்டை அறிமுகம் செய்யுங்கள்.




5. எல்லாவற்றிலும் ஒழுங்கைக் கடைப்பிடிக்க அவர்களைப் பழக்குங்கள். பொம்மைகளைப் பிரித்துவைத்து விளையாடினால், மீண்டும் அவற்றை அடுக்கி வைக்கச் சொல்லுங்கள். படித்து முடித்ததும் புத்தகங்களை ஒழுங்காகப் பையில் அடுக்கி வைப்பது, தூங்கி எழுந்ததும் படுக்கையை ஒழுங்குபடுத்துவது என்று பழகினால், எல்லாவற்றையும் திட்டமிட்டு ஒழுங்காகச் செய்யும் திறமை அவர்களுக்குக் கிடைக்கும்.




6. தூங்கி எழுவது, குளிப்பது, சாப்பிடுவது, விளையாடுவது, படிப்பது என்று எல்லாவற்றையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வதற்கு அவர்களைப் பழக்குங்கள். அவர்களுக்குச் சோம்பல் பழகாது. எதையும் குறிப்பிட்ட நேரத்துக்குள் செய்வதற்குப் பழகிக்கொள்வர்கள்.




7. தாங்கள் இருக்கும் இடத்தையும் தங்களையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். ஆரோக்கியமான உணவு, இனிமையான தூக்கம், வியர்வை சிந்தும் விளையாட்டு என்று உடல்நலனுக்கு உகந்த வாழ்க்கைமுறையை அவர்களுக்கு அறிமுகம் செய்யுங்கள்.




8. பல் துலக்குவது, குளிப்பது, முறையாகக் கை கழுவுவது, உணவை வீணடிக்காமல் சாப்பிடுவது, வாயை மூடிக்கொண்டு இருமுவது, வெளியிலிருந்து வீட்டுக்குள் வந்ததும் கால்களைக் கழுவுவது என்று சுகாதாரமான நாகரிகங்களைக் குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுங்கள். வளர்ந்த பிறகு அவர்களை எல்லோரும் மதிப்பார்கள்.




9. அக்கம்பக்கக் குடும்பத்தினர், தங்கள் வயதில் இருக்கும் குழந்தைகள் என்று எல்லோருடனும் நட்பாகவும் அன்பாகவும் பழகச் சொல்லுங்கள். நட்புகளை உருவாக்கிப் பராமரிப்பது வாழ்க்கை முழுக்கத் தேவைப்படும் ஒரு பண்பு.




10. நேரத்தைச் சரியாகப் பயன்படுத்திக் கடின உழைப்பைக் கொடுக்க அவர்களைப் பழக்குங்கள். நேர்மையாகவும் உண்மையாகவும் இருப்பதன் மூலம் கிடைக்கும் மதிப்பை அவர்களுக்கு உணர்த்துங்கள். அவர்களை இது வாழ்க்கையில் உயர்த்தும்.

காய்ச்சலை குணப்படுத்த இந்த சூப் குடிங்க!!

வீட்டில் இருக்கும் அனைவருக்கும் ஒருவர் பின் ஒருவராக காய்ச்சல் வருவதை நாம் தவிர்க்க முடிவதில்லை.




காய்ச்சல் என்பது உடல் சூட்டை மட்டும் கொடுக்காது தலைவலி மற்றும் சளி போன்ற பிரச்சனைகளையும் கொடுக்கிறது.




இதை தடுக்க நாம் பல மருந்துகளை உபயோகித்தாலும், உணவே மருந்து என நமது தமிழ் மக்களின் கொள்கைப் படி இப்போது நாம் காய்ச்சல், தலைவலி, சளி போன்றவற்றை சரி செய்ய ஒரு உணவை தயாரிப்பது எப்படி என இங்கே காண்போம்.




இது ஒரு திரவ உணவு, சூடான சூப் வகையை சேர்ந்தது. இந்த சூப் உடல் சூடு மற்றும் நுண்ணுயிர்கள் எதிர்ப்பில் மிக சிறந்த பலன்களை கொடுக்க வல்லது.




*தேவையான_*

*பொருட்கள்:*




சீரகம் – 1/2 டீஸ்பூன்

இஞ்சி – 1 துண்டு

பட்டை – சிறிதளவு

வெள்ளை பூண்டு – 10 பற்கள்

மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்

தனியா – சிறிதளவு

கிராம்பு – 7

தண்ணீர் – 750 ml

உப்பு – தேவையான அளவு




*சூப் செய்முறை :*




ஒரு பிரஷர் குக்கரை எடுத்து அடுப்பில் வைக்கவும். குக்கரில் நாம் எடுத்து வைத்திருக்கும் 1/2 ஸ்பூன் சீரகத்தையும், மிளகையும், 1 டீஸ்பூன் மஞ்சள் தூளையும், தனியாவையும் போட வேண்டும். இந்த கலவையை நன்கு கிளறவும். பிறகு ஒரு 15 நொடிகளில் இருந்து 20 நொடிகளுக்கு பிறகு சிறிதளவு பட்டையையும், கிராம்புகளையும், இஞ்சி துண்டையும், தேவைக்கேற்ப உப்பையும் போட்டு அந்த கலவையை நன்கு கிளறவும்.




*10 நிமிடங்கள்* :

ஒரு 10 நொடிகளுக்கு பிறகு நாம் எடுத்து வைத்திருந்த 750 ml தண்ணீரை அதனுள் ஊற்றி நன்கு கலக்கவும். பிறகு அந்த பிரஷர் குக்கரை அடுப்பின் மிதமான சூட்டில் ஒரு 10 நிமிடங்கள் வைக்கவும்.




( *குறிப்பு* :- பிரஷர் குக்கர் உபயோகிக்க வில்லை எனில் வேறு ஒரு பாத்திரத்தில் நாம் சமைக்கலாம். ஆனால் தண்ணீர் 750 ml க்கு பதில் 1250 ml தண்ணீர் அதனில் கலக்க வேண்டும். மேலும் 10 நிமிடங்களுக்கு பதில் 45 நிமிடங்கள் அடுப்பின் மிதமான சூட்டில் வைக்க வேண்டும்.)




சூப் ரெடி : பிறகு அந்த திரவத்தை தனியே எடுத்து, அதனுள் இருக்கும் இஞ்சி முதலான பொருட்களை நன்கு மசிய வைக்க வேண்டும்.




பிறகு அந்த திரவைத்தை ஒரு வடிகட்டி மூலம் வடித்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்.




இப்போது அந்த திரவத்துடன், சிறிதளவு தேன் கலந்தால் நம் உடலைக் காக்கும் சூப் ரெடி.




*இந்த சூப்பில் உள்ள* *ஊட்டச்சத்துக்களின்* *விவரங்கள்:*




மொத்த கலோரிகள்:

36 கலோரிகள்

மொத்த கொழுப்பு: 0.5 கிராம்

சாச்சுரேட்டட் கொழுப்பு: 01. கிராம்

சோடியம்: 603 mg

மொத்த கார்போ ஹைடிரேட்: 3%




சளித் தொல்லை : இந்த சூப்பை காலை மாலை மற்றும் இரவு வேளைகளில் 3 நாட்களுக்கு பருகுவதால், உடல் வலி பறந்து போய் விடும்.




மிளகு, இஞ்சி போன்றவை சளி தொல்லைக்கு சிறந்தது என்பதால், சளி மூக்கின் வழியாக நீராக வந்து விடும். இந்த சூப்பை குழந்தைகளுக்கு கூட கொடுக்கலாம்.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

ஆட்டுக்கால் சூப்பு

ஒரு பங்கு ஆட்டுக்காலுக்கு மூன்று பங்கு வெங்காயம்,




மூங்கில் இலை ஒரு கைப்பிடி முடக்கத்தான் இலை ஒரு கைப்பிடி




சுக்கு மிளகு சித்தரத்தை இதில் மிளகின் அளவு மூன்று டீஸ்பூன்களுக்கும் அதிகமாக சேர்த்துக் கொள்ளலாம் . சுக்கு சித்தரத்தை அரை டீஸ்பூன் அளவு சேர்த்தால் போதுமானது‌.




வெள்ளைப் பூண்டு மலைப்பூண்டு சேர்க்க வேண்டும்




உப்பு மஞ்சள் தேவைக்கு




சீரகம் 2 டீஸ்பூன் வறுத்து போட வேண்டும்




உளுந்து வறுத்து உடைத்து போட வேண்டும்




பீன்ஸ் ஒரு 50 கிராம் அளவு சேர்த்தால் போதுமானது பட்டர் பீன்ஸ் முருங்கை பீன்ஸ் சோயா பீன்ஸ் இதில் எது வேண்டுமானாலும் சேர்த்துக் கொள்ளலாம் குறிப்பாக முருங்கை பீன்ஸ் ரொம்ப சிறந்தது.

Wednesday, January 3, 2024

நுரையீரல் சளியை வெளியேற்றும் ஒரு சிறந்த மூலிகை

 


நுரையீரல் சளியை வெளியேற்றும் ஒரு சிறந்த மூலிகை வைத்தியம்*


*தேவையான* *பொருள்கள்:*


துளசி இலை ஒரு கைப்புடி அளவு சின்ன வெங்காயம்50 கிராம்

இஞ்சி 20 கிராம்


*செய்முறை*


முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.


பிறகு இஞ்சியின் தோலை அகற்றி நன்கு கழுவி சுத்தம் செய்யவும்.


மேலும் இஞ்சியை சிறிய துண்டாக நறுக்கவும்.



பின்பு அரைத்த இஞ்சியை நன்கு பிழிந்து சாறு எடுத்துக்கொள்ளவும்.


இதை போல வெங்காயத்தையும் சிறிய துண்டாக நறுக்கவும்.



பின்பு அரைத்த வெங்காயத்தை நன்கு பிழிந்து சாறு எடுத்துக்கொள்ளவும்.



இதை போல துளசி இலையும் அரைத்து சாற்றை எடுத்துக்கொள்ளவும்.



பிறகு இந்த மூன்று சாறையும் ஒன்றாக கலந்து கொள்ளவும்.



இவ்வாறு உருவான சாற்றை காலை மற்றும் மாலை குடித்து வந்தால் நுரையீரல் சளி நீங்கும்.

3 சனவரி 1760 , வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த தினம்

*வீரபாண்டிய கட்டபொம்மன்*

*264*'வது *பிறந்த தினம்*

*3 சனவரி 1760* இன்று..


அவர் வரலாற்றின் சில சம்பவங்களை அதன் சிறப்பு கெடாமல் முடிந்த அளவு சுருக்கி தொகுத்து வழங்கியுள்ளேன்.!


பொம்மு நாயக்கர்கள் வம்ச வரலாறு.!


அழகிய வீரபாண்டியபுரம் எனும் ஊரில் (இன்றைய ஒட்டபிடாரம்) ஆட்சி புரிந்து வந்த ஜெகவீர பாண்டியனின் அவையில் அமைச்சராக பொம்மு என்கிற *கெட்டி பொம்மு* இடம் பெற்றிருந்தார். இவரது பூர்வீகம் அப்போதைய ஆந்திர மாநிலம், *பெல்லாரி* ஆகும். தற்போது *கர்நாடகத்தில் உள்ளது*


*வீரமிகுந்தவர்* என்ற பொருளை தெலுங்கில் உணர்த்தும் *கெட்டி பொம்மு* எனும் சொல் நாளடைவில் கட்ட பொம்மு என்று மாறி பின் தமிழில் *கட்ட பொம்மன்* என்ற சொல்லாயிற்று. ஜெகவீர பாண்டியனின் மறைவிற்குப் பின் அரச கட்டிலில் ஏறிய கட்ட பொம்மு பின் *ஆதி கட்ட பொம்மன்* என்று மக்களால் அழைக்கப் பட்டார். *இவரே பொம்மு மரபினரின் முதல் கட்ட பொம்மன்.!*


இந்த பொம்மு மரபில் வந்தவர்களே ஜெகவீர கட்டபொம்மன், ஆறுமகத்தம்மாள் தம்பதியர்.


இவர்களுக்கு *ஜனவரி 3, 1760* அன்று *பாஞ்சாலங் குறிச்சி*'யில் பிறந்தவர் *வீரபாண்டியன்* எனும் இயற்பெயர் கொண்ட *வீரபாண்டிய கட்ட பொம்மன்* ஆவர்.


இவர் நாயக்க வம்ச அரசாட்சியில் தொடர்ந்து வருவதால் இவர் *பொம்மு நாயக்கர்* என்று மக்களால் அழைக்கப்பட்டார்.


*பிப்ரவரி 2, 1790* அன்று *47ஆவது தலைமுறை*'யாக, தனது *30ஆவது வயதில் பாளையக்காரராக அரியணை ஏறுகிறார்* இவரது துணைவியார் *வீரசக்கம்மாள்.* இவர்களுக்குப் பிள்ளைப் பேறு இல்லை.


குமாரசாமி என்ற *ஊமைத்துரை, துரைச்சிங்கம்* என்ற இரு சகோதரர்களும், *ஈசுவரவடிவு, துரைக்கண்ணு* என்ற இரு *சகோதரிகளும்* இருந்தனர்.


*இவர் 9 ஆண்டுகள், 8மாதம், 14 நாட்கள் அரசுப் பொறுப்பிலிருந்தார்.!*


கிபி *17*'ம் நூற்றாண்டில், பாளையக்காரர்களாக தன்னாட்சி பெற்றாலும், *72 பாளையங்களை உள்ளடக்கிய பாஞ்சாலங்குறிச்சியே சிறந்து விளங்குகிறது.!*


இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சி உள்நுழைகிறது. *அளவுக்கதிகமாக கடன் வாங்கிய நவாபுகள் நேரிடையாக வரி வசூல் செய்யும் உரிமையை ஆங்கிலேயர்களுக்கு வழங்குகின்றனர்.* இதில் மற்ற பாளையக்காரர்கள் சரணாகதி ஆகிவிட, வரிதர மறுத்து எதிர்ப்பவர் *கட்டபொம்மனும்* இவருக்கு சில காலங்கள் முன்பு *பூலித்தேவரும் தான்.!* (இவர் தான் தமிழ் நாட்டில் மட்டுமல்ல *அன்றைய அகண்ட பாரத சுதந்திரப் போராட்ட வரலாற்றிலேயே ஆங்கிலேயரை எதிர்த்த முதல் சுதந்திர போராட்ட வீரர்.!*)


பாஞ்சாலங் குறிச்சியைத் தேடி, மன்னனை சந்திக்க‌ நெல்லையிலிருந்து வருகிறார், *ஆலன்.* ஆலனை எதிர்த்து தன்மானத்துடன் முழங்குகிறார், *வீரபாண்டிய கட்டபொம்மன்.* பாஞ்சாலங்குறிச்சியின் கோட்டைச் சுவர்களில் இன்னமும் எதிரொலிக்கிறது, அந்தக்குரல்.!


சாமாதான பேச்சு வார்த்தைக்காக, ஆங்கிலேயர்கள் அழைக்க, *ராமநாதபுரம், சேதுபதி அரண்மனையில் ஜாக்சனை காணச் செல்கிறார், கட்டபொம்மன்.* அங்கும் வரி, வட்டியைப் பற்றிய பேச்சுவர *ஜாக்சனை எதிர்க்கிறார் கட்டபொம்மன்.* மன்னரை சிறை பிடிக்க உத்தரவிடுகிறான் ஜாக்சன்.


வீரபாண்டிய கட்டபொம்மன், வாளால் பகைவரை வீழ்த்தி பாஞ்சாலங்குறிச்சிக்கு வருகிறார். வந்த பின்னரே, *தானாபதியை காணாமல் திகைக்கிறார்,* மன்னர். தானாபதி, சேதுபதி அரண்மனையிலே ஆங்கிலேயர்களிடம் மாட்டிக் கொண்டு விடுகிறார்.


சிலநாட்களில், தானாபதி விடுதலை செய்யப்பட்டு பாஞ்சாலங்குறிச்சிக்கு வருகிறார். *ஆங்கிலேயர்கள், வரியாக சேர்த்து வைத்திருந்த நெற்களஞ்சியத்தைக் கொள்ளையிடுகிறார்.*


இது, ஆங்கிலேயர்களை இன்னமும் கோபமூட்டியது. *ஆங்கிலேயரை பழி வாங்க தானாபதி வகுத்த இந்த வஞ்சகம், கட்டபொம்மனை தலைகுனிய வைத்தது.!*


இந்த *தானாபதி பிள்ளை* தான் *வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு அமைச்சராக மட்டுமல்ல* அவர் தூக்கிலிடப்பட்ட பின்னரும் *பல குறு நில மன்னர்களுக்கும் ராமநாதபுர சேதுபதி தொண்டைமான் வாரிசுகளுக்கும் சுதந்திர வேட்கையை உயிரூட்டி* சுதந்திரப் போராட்டத்தின் வேள்வித்தீயை அணையாமல் பார்த்துக்கொண்டவர்.!


〰️ ☘️ 🌺 ☘️ 🌺 ☘️ 〰️

பானர்மேன் தலைமையில், பீரங்கிப்படையுடன் ஆங்கிலேயரின் ஐந்து வகைப் படைகள் பாஞ்சாலங்குறிச்சியை சுற்றி வளைக்கின்றன. இது எதிர்பாராத போர் என்றாலும், பாஞ்சாலங் குறிச்சியின் வீரர்கள், எதிரிகளின் பலத்தைக் கண்டும் அஞ்சாமல் கோட்டையின் மீது நின்று போர் புரிகின்றனர். கவண்கற்களாலும், வேல்களலும் போரில் வெற்றி பெறுகின்றனர்.


(இந்தகோட்டையை, தகர்ப்பது பற்றிய *பானர்மேனின் ப்ளூபிரிண்ட் இன்றும் லண்டன் ஆவண காப்பகத்தில் இருக்கிறது.!*)


வீரன் வெள்ளையத்தேவன், இந்த போரில் தான் இறந்துபோகின்றான். ஆங்கிலேயர் பக்கத்திலும் நாசமே விளைகிறது. பாஞ்சாலங்குறிச்சி கோட்டையும் பாதிப்படைகிறது.


*போரில் இறந்த வெள்ளைத் தளபதிகளுக்கு, ஒட்டப்பிடாரத்தில் கல்லறையும், நினைவுச் சின்னமும் எழுப்பி உள்ளனர். எதிரிகளுக்கு நினைவுச் சின்னம் எழுப்பிய கட்ட பொம்மனின் பண்பு.! ஆங்கிலேயர் படைப்பிரிவினரிடையே அவருக்கு ஒரு மரியாதையை பெற்றுத்தருகிறது.!*


இதன் பிறகே, கட்டபொம்மனின் தலைக்கு விலை வைக்கப் படுகிறது. கோட்டையிலிருந்து தப்பித்து *விஜயரகுநாத தொண்டைமானின் அரண்மனையை அடைகிறார்,* கட்டபொம்மன்.


கோட்டையை கைப்பற்றுகின்றனர், ஆங்கிலேயர்கள். கோட்டையில் நாட்டப்பட்ட ஆங்கிலேயரின் கொடியை உடைத்து வீரச் சாவடைகிறார், *சுந்தரலிங்கம்* என்ற வீரர்.


குறிப்பு இந்த வீரன் *சுந்தரலிங்கம்* பெயரை *விருதுநகரை மையமாகக் கொண்ட போக்குவரத்து கழகத்திற்கு வைத்ததினால் தான்.?* 90'களின் இறுதியில் தென் மாவட்டங்களில் இனக் கலவரங்கள் ஏற்பட்டு பிறகு ~பல்வேறு பெயர்களில் இயங்கி வந்த போக்குவரத்து கழகங்கள் அனைத்திலும் பெயர் நீக்கப்பட்டு~, *தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம்* என்ற *பொதுவான பெயர் கொண்ட நிறுவனமாக இயங்கி வருகிறது.!*


〰️ ☘️ 🌺 ☘️ 🌺 ☘️ 〰️


தொண்டைமானின் அரண்மனையிலோ, ஆங்கிலேயரின் நயவஞ்சகத்தால் கட்டபொம்மன் எதிரிகளிடம் காட்டிக் கொடுக்கப் படுகிறார். ஒப்புக்கு ஒரு விசாரணை வைத்து,


*கயத்தாறில் நெடுஞ்சாலை பகுதியின் புளியமரத்தின் தூக்குக்கயிறை சுருக்கி, வாழ்வை முடித்துக் கொண்டார்.!* மற்ற பாளையக்காரர்கள் எல்லாரும் வெறுமே பார்த்திருக்க, *வணங்காமுடியாக உயிர்துறந்தார் கட்டபொம்மன்.!*


அதன்பின் இவரது தம்பி *ஊமைத்துரை சூளுரைத்து இரண்டாம் முறையாக கோட்டையை கட்டுகிறார்.* இதைப்பற்றி, வரலாற்றில் படித்திருப்போம். முட்டையையும், வெல்லத்தையும், சுண்ணாம்பையும் கொண்டு ஆறே நாட்களில் ஏழாயிரம் வீரர்கள் எழுப்பிய கோட்டையென்று!

மெக்காலே போர் தொடுத்து, கட்டபொம்மனின் சகோதர்களை, ஏராளமான பாஞ்சாலங்குறிச்சி வீரர்களையும் அழித்தொழிக்கின்றர். ஊமைத்துரை, மருது சகோதர்களுடன் சேர்ந்து விடுகின்றார்.


போர் வரலாறு:


ஆங்கிலயர் கி.பி.1793 இல் கப்பம் கேட்டனர். கி.பி.1797 இல் முதன் முதலாக ஆங்கிலேய அதிகாரி ஆலன் துரை பாஞ்சாலங் குறிச்சிக் கோட்டைக்கு வந்தார்.


1797 - 1798இல் நடந்த முதல் போரில் வீர பாண்டிய கட்டபொம்மனிடம் ஆலன் துரை தோற்று ஓடினார். அதன் பின்னர் நெல்லை மாவட்டக் கலெக்டர் ஜாக்சன் வீரபாண்டிய கட்டபொம்மனைச் சந்திக்க அழைத்தார். கட்ட பொம்மனை அவமானப் படுத்த நினைத்து வேண்டு மென்றே பல இடங்களுக்கு அலைக் கழித்தார்.


இறுதியில் 10, 1798 இல் ராமநாதபுரத்தில் சந்தித்தார். அப்போது தந்திரத்தால் வீரபாண்டிய கட்டபொம்மனைக் கைது செய்ய முயன்றார். அதை முறியடித்து வீரபாண்டியக் கட்டபொம்மன் பாஞ்சாலங் குறிச்சியை வந்தடைந்தார்.


செப்டம்பர் 5, 1799 இல் பானர்மென் என்ற ஆங்கிலேயத் தளபதியால் பாஞ்சாலங் குறிச்சி கோட்டை முற்றுகை யிடப்பட்டது. அங்கு கடும் போர் நடைபெற்றது.


போரில் பல ஆங்கிலேயர்கள் உயிரிழந்தனர். இருப்பினும் கோட்டை வீழ்ந்து விடும் என்ற நிலையில் வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டையை விட்டு வெளியேறினார்.


செப்டம்பர் 9, 1799இல் ஆங்கிலேயர்களால் பாஞ்சாலங் குறிச்சி கோட்டை கைப்பற்றப் பட்டது.


அக்டோபர் 9, 1799 இல் புதுக்கோட்டை மன்னர் *விஜயரகுநாத தொண்டை மானால் வீரபாண்டிய கட்டபொம்மன் கைது செய்யப்பட்டு* கும்பினியாரிடம் (கிழக்கு இந்திய கம்பெனி) ஒப்படைக்கப்பட்டார்.


அக்டோபர் 16,1799இல் ஆங்கிலேயத் தளபதி பேனர்மேன் ஆணைப்படி கயத்தாற்றில் தூக்கிலிடப்பட்டார்.


கயத்தாறில், கட்டபொம்மன் உயிர் நீத்த இடத்தில் ஒரு *நினைவுச் சின்னம்* இருக்கிறது.

அவரை, *தூக்கு மாட்டிய புளியமரம் பட்டு போயிற்று.*


*வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலடப்பட்ட சம்பவமானது* அந்நாளில் மக்கள் மனது களில் நீங்காத நினைவாக படிந்து விட்டதால் *பின்னாளில் அதை தெருக்கூத்து நாடகங்களாக நடத்தி வந்திருக்கின்றனர்* அவற்றை வைத்து சில *வரலாற்று ஆசிரியர்கள்* கீழ்க்கண்டவாறு அந்த நிகழ்வை விவரிக்கின்றனர்.!


பேனர்மேன் தான் ஏற்கனவே திட்டமிட்டபடி கட்டபொம்மனுக்கு தூக்கின் மூலம் மரண தண்டனை விதித்திட வேண்டுமென்ற தீர்ப்பினை எழுதி, அத்துடன் இந்தத் தண்டனை இன்றைய தினத்திற்குள் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார். உடனிருந்த மற்ற வெள்ளை அதிகாரிகள் அங்கிருந்து எழுந்து சென்றார்கள். உடனடியாக கும்பெனிப் படையினரும், கும்பெனியின் விசுவாச ஊழியர்களும் கட்டபொம்மனை பொறுப்பேற்றுக் கொண்டார்கள். திட்டமிட்டபடி தூக்குத் தண்டனையை நிறைவேற்றிடத் தயாரானர்கள்.


கட்டைப் புளியமரத்தில் ஏற்கனவே தூக்கு மரமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த மரத்தடிக்கு கட்டபொம்மனை அழைத்துச் சென்றார்கள். ஒரு படை வீரன் மரத்தின் மீது ஏறினான். ஒரு கிளையிலிருந்து ஒரு கயிற்றைக் கட்டி அந்த முடிச்சை கீழே தொங்க விட்டான். மற்றொரு வீரன் ஒரு சிறிய ஏணிப்படியை அந்த தொங்கும் கயிற்றுக்கு அருகில் தள்ளி வைத்தான். தற்காலிகமாகச் செய்யப்பட்ட அந்த ஏணியின் ஐந்து படிகளில் கட்டபொம்மன் ஏறிச் சென்றார். நினைவுகளில் தன்னை மறந்தவராக, தொண்டையை கனைத்துக் கொண்டு தன்னைச் சுற்றிலுமிருந்த கூட்டத்தை கடைசியாகப் பார்வையிட்டார் கட்டபொம்மன். அதன் பின் அந்த தூக்கு முடிச்சைக் கையிலெடுத்து தனது கழுத்தை அதற்குள் தானே செலுத்திக் கொண்டார். வெள்ளைக்காரர்களுடன் சுதேசி வீரர்களும் கட்டபொம்மனைச் சுற்றி பேச்சற்ற நிசப்தமாக நின்று கொண்டிருந்தனர்.


கட்டபொம்மன் இறுதியாக மிகுந்த சப்தமிட்டு *"ஓ! முருகக் கடவுளே"* என்று திருச்செந்தூரின் முருகனை நோக்கிக் கூறிவிட்டு, தன் கீழுள்ள படியைத் தானே உதைத்துத் தள்ளினார். கழுத்து நெறிக்கப்பட்டு, கயிறு கழுத்தைச் சுற்றி இறுகியது. இரண்டு மனி நேரம் தொங்கிய உடல் இரண்டு மணிநேரம் எல்லோரும் பார்க்கும் வண்ணம், கட்ட பொம்மனது உடல் அந்த மரத்தில் தொங்கியது.


முந்தைய இரவில் கட்டபொம்மனுடன் சிறையிலிருந்த தம்பி *ஊமத்துரை*'யும், அவரது சொந்தப் பணியாளரும் கட்டபொம்மனின் இறுதிக்கிரியைகள் செய்வதற்காக அழைத்து வரப்பட்டார்கள். அருகிலிருந்த இடிந்து போன ஒரு கோயிலுக்குப் பக்கத்தில் காய்ந்து போன மரக்கிளையில் ஒரு பெரிய நெருப்பு உண்டாக்கப்பட்டது.


39 வயது நிரம்பிய தங்களது தலைவனுக்காகக் காத்துக் கொண்டிருந்த அந்தக் கூட்டத்திலிருந்த ஆண்களும், பெண்களும் அழுது கொண்டிருந்தார்கள். சுற்றியிருந்த கூட்டத்தினர் தலைவணங்க நின்று கொண்டிருக்க *கட்டபொம்மனது உயிரற்ற உடல் எரியூட்டப்பட்டது.!*


வீரமங்கை *ஆர்க்ஜோன்* பதினைந்தாம் நூற்றாண்டில் *வெள்ளையரை எதிர்த்து வீரப்போர் புரிந்த பிரெஞ்சு தேச வீர மங்கை.!*


*ஆர்க் ஜோனை* மக்கள் அறிய பொது இடத்தில் உயிரோடு தீ வைத்துக் கொளுத்திய வெள்ளையர்,


அன்று *கயத்தாற்றில் தூக்கிலிட்டு உயிர் பிரிந்த கட்டபொம்மனது உடலுக்கும் வெள்ளையர்கள் கொள்ளி வைத்தனர்.!*


அன்று மூண்ட தீ, நூற்றி ஐம்பது ஆண்டுகள் கழித்து அவர்களை அழிக்கும் ஊழித்தீயாக சுதந்திரத் தீபமாக ஜொலிக்கப் போகிறது என்பதனை அப்போது இறைவனைத் தவிர எவர் தான் அறிந்திருக்க முடியும்.?


*மீண்டும் எழுந்த பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டை.!*


கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டதோடு பாஞ்சாலக் குறிச்சியின் வரலாறு முடிந்து விடவில்லை. ஆங்கிலேயர்களால் பாளையங்கோட்டைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கட்டபொம்மனின் சகோதரர் ஊமைத்துரை பிப்ரவரி 02, 1801இல் பாஞ்சாலக் குறிச்சி வீரர்களால் மீட்கப்பட்டார். பாஞ்சாலக் குறிச்சிக் கோட்டைக்குப் புத்துயிர் கிடைத்தது. ஊமைத்துரையைக் கைது செய்ய வந்த மேஜர் மெக்காலே கோட்டையினுள் செல்ல முடியாமல் திரும்பினார். அவர் தலைமையில் ஒரு பெரும்படை மார்ச் 30, 1801இல் கோட்டையை முற்றுகையிட ஆரம்பித்து, மே 24, 1801இல் அதனைக் கைப்பற்றியது. அங்கிருந்து தப்பித்து, காளையார் கோவில், விருப்பாட்சி, திண்டுக்கல், பிரான்மலை என்று ஓடிய ஊமைத்துரையும் அவர் தம்பி துரைசிங்கமும் கைது செய்யப்பட்டு பாஞ்சாலங்குறிச்சி பீரங்கி மேட்டில் தூக்கிலிடப்பட்டனர். பாஞ்சாலங்குறிச்சி என்கிற பெயரையே தமிழகத்தின் வரைபடத்திலிருந்து நீக்கினர் வெள்ளையர். கோட்டை முற்றிலும் தகர்க்கப்பட்டுத் தரைமட்டமாக்கப்பட்டது.


1974 ஆம் ஆண்டு பாஞ்சாலங்குறிச்சியில் பழங்காலத்துக் கோட்டையின் வடிவினை ஒத்த ஒரு கோட்டையினை அப்போதைய தமிழக முதல்வராக இருந்த மு. கருணாநிதி எழுப்புவித்தார். அது இன்றளவும் வீரபாண்டியனின் புகழ்பாடி நிற்கிறது. கோட்டை, கொத்தளம், கொலுமண்டபம், ஜக்கம்மா தேவி ஆலயம் அனைத்தும் மீண்டும் தோன்றின. நினைவுக் கோட்டையை உள்ளடக்கிய 6 ஏக்கர் பரப்பினைச் சுற்றி மதில் சுவர் எழுப்பப்பட்டுள்ளது. உள்ளே தொல்பொருள் ஆய்வு மையமும் உள்ளது. மண்டபத்தின் உள்ளே கட்டபொம்மனின் வீரவரலாறு ஓவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளன. இக்கோட்டை 1977 முதல் சுற்றுலாத் துறையின் பராமரிப்பில் இயங்கி வருகிறது.



தற்போது 35 ஏக்கர் பரப்பிற்கு மேல் உள்ள பழைய கோட்டையின் அடிப்பகுதிக் கட்டிடங்கள் தொல் பொருள் ஆய்வுத் துறையின் பராமரிப்பின் கீழ் உள்ளன. கட்டபொம்மன் பயன்படுத்திய ஆயுதங்கள், அவர் காலத்து மக்கள் பயன்படுத்திய பல்வேறு பொருட்கள், அணிகலன்கள் நாணயங்கள் போன்றவை தொல் பொருள் ஆய்வுத் துறையினரால் கண்டெடுக்கப்பட்டுச் சென்னையில் தமிழ்நாடு அரசு அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.!







தினம் ஒரு மூலிகை-சீமையத்தி



 *சீமையத்தி* அத்தியில் நாட்டு அத்தி வெள்ளை அத்தி பேயத்தி சீமையத்தி என பல வகை உண்டு அத்திப்பழத்தை உலர்த்தி பொடி செய்து காலை மாலை இரண்டு வேளை பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் இதயம் வலிமை அடையும் அந்த வகையில் சீமையத்தி பார்ப்போம் அகன்ற இலைகளை உடைய சிறு மரவகைச் சார்ந்த நாட்டு அத்திப்பழத்தை விட சற்று பெரியதாகவும் செந்நிறம் பொருந்தியதாகவும் இருக்கும் பதப்படுத்தப்பட்ட பழங்கள் கடைகளில் கிடைக்கும் இதன் பழங்களே மருத்துவ பயன் உடையவை அக வெப்பம் தணித்தல் வறட்சி அகற்றுதல் உடல் பலம் மிகுத்தல் மலமிளக்குதல் ஆகிய குணங்களை உடையது மூன்று அல்லது நான்கு பழங்களை மாலை வேளையில் நாள்தோறும் சாப்பிட்டு வர சுத்தமான ரத்தம் பெருகும் மலச்சிக்கல் அருண் தொண்டை மார்பு இவற்றில் உண்டாகும் வறட்சி நீங்கி இருமல் தீரும் 100 கிராம் சீமை அத்தி பழம் சோம்பு 100 கிராம் ரோசா மொட்டு 200 கிராம் ஆகியவற்றை ஐந்து லிட்டர் குடிநீரில் இட்டு ஒருநாள் ஊறிய பின் 3 லிட்டர் ஆகுமாறு சுண்டக்காய்ச்சி பிசைந்து வடிகட்டி அதில் இரண்டரை கிலோ சீனி சேர்த்து தேன் பதமாக காய்ச்சி அதாவது சீமை அத்தி மணப்பாகு வைத்துக் கொண்டு 40 மில்லி பாகில் நீர் சேர்த்து அருந்தலம்

தினம் ஒரு மூலிகை-சுக்காங்கீரை

 


*சுக்காங்கீரை* தடித்த ஓடியக்கூடிய அரைவட்ட வடிவ இலைகளை உடைய சிறு செடி இனம் புளிப்புச் சுவை உடையது கீரையாக பயிரிடப்படுகிறது இதன் இலை விதை வே ர் ஆகியவை மருத்துவ குணம் உடையது பசி மிகுதல் துவர்ப்பியாய் செயல்படுதல் தாது வெப்பு அகற்றுதல் ஆகிய குணம் உடையது இலைகளை சமைத்து உண்டுவர செரிமான ஆற்றலை மிகுத்து பசிமிகும் சூட்டை தணித்து வாயு நெஞ்சு எரிச்சல் பித்தம் மிகுதியினால் வந்த ஊறல் குருதி கழிச்சல் ஆகியவை குணமாகும் இலையை இடித்து பிழிந்த சாராகவோ ஒரு தேக்கரண்டி அளவாக நாள்தோறும் மூன்று வேளை 50 கிராம் இலையை பொடியாய் அறிந்து அரை லிட்டர் நீரில் இட்டு இருநூறு மில்லியாக காய்ச்சி வடிகட்டி எடுத்த குடிநீராகவோ 30 மில்லி அளவாக நாள்தோறும் மூன்று வேளை குடித்து வர குருதி தூய்மை அடையும் உடல் தசைகளில் அடங்கியுள்ள மாசுக்கள் அகன்று சொறி சிரங்கு ஆகியவை குணமாகும் வேரை கொண்டு பல் துலக்கி வர ஈறு சிதைவு ஈற்றுப் புண் ஆகியவை குணமாக விதை பொடியை ஒரு கிராம் அளவாக காலை மாலை கொடுத்து வர பசியின்மை சுவை இன்மை ஆகியவை குணமாகும் விதையை வாயிலிட்டு மென்று தின்ன தேள் கடி நஞ்சு நீங்கும் நன்றி.

நான் உங்களை விட நன்றாகவே முன்னேருக்கேன்

ஒரு பெரியவர் சமோசா விற்றுக் கொண்டிருந்தார்.அந்த வட்டாரத்தில் இவர் கடை பிரபலம்....

ஒரு நாள் அந்த கம்பெனி மேனேஜர் கடைக்கு வந்து சாப்பிட்டுக் கொண்டே....
"நீங்க நல்லா நிர்வாகம் பண்ணுறீங்க....
தொழிலை நல்லா வளர்த்திருக்கீங்க...
இதுவே என்னைப் போல பெரிய கம்பெனில வேலையில் இருந்திருந்தா நீங்களும் என்னைப்போல பெரிய அளவு முன்னேரிருக்கலாம் இல்ல" என்றார்....

பெரியவர் புன்னகைத்துவிட்டு சொன்னார்...
"இல்லை, நான் உங்களை விட நன்றாகவே முன்னேரிருக்கேன்"
"எப்படி?"
"பத்து வருஷத்துக்கு முன் நான் இந்த தொழிலில் நுழைந்து கூடையில் சமோசா விற்ற போது நீங்கள் இந்த கம்பெனியில் வேலைக்கு சேர்ந்திருந்தீங்க...
அப்போ என் வருமானம் மாசம் ஆயிரம் ரூபா...
உங்கள் வருமானம் மாசம் பத்தாயிரம்...
நீங்க இப்போ மேனேஜர் ஆகிட்டீங்க...
மாசம் ஒரு லட்சம் சம்பளம் வாங்குறீங்க....
இப்போ எனக்கு சொந்தமா இந்த கடை இருக்கு...
இந்த வட்டாரத்தில் நல்ல பேர் (Good Will) இருக்கு...
நானும் மாசம் ஒரு லட்சமோ இல்லை அதைவிட அதிகமாகவே சிலசமயம் சம்பாரிக்கிறேன்....
நாளை என் வாரிசுகளுக்கு இந்த தொழிலை நான் தர முடியும்...

அவர்கள் என்னைப்போல ஜீரோவில் இருந்து துவங்க வேண்டாம்...
நேரடியாக முதலாளியாக வந்து கடையை வளர்த்தால் போதும்...


ஆனால் உங்களுக்கு அப்படியில்லை...
உங்கள் பதவியை உங்கள் மகனுக்கு அப்படியே தர முடியாது...

உங்கள் இத்தனை வருஷ உழைப்பின் பலன் உங்கள் முதலாளி மகனுக்குத்தான் போகும்....
உங்கள் மகன் மீண்டும் ஜீரோவில் இருந்து துவங்க வேண்டும்...

நீங்கள் பட்ட அத்தனை கஷ்டத்தையும் அவனும் படுவான்....
உங்கள் மகன் உங்களைப் போல மேனேஜர் ஆகும்போது, என் மகன் எந்த நிலையில் இருப்பான் என்று நீங்கள் கணக்குப் போட்டுக்கோங்க....
ஒருவேளை என் மகனிடம் வேலைக்கு வந்தாலும் வரலாம்" என்றார்....

நானும் கல்யாணத்துக்கு முன்ன "புலிதாண்டா "


ஒரு புலி கல்யாணம் பண்ணிட்டு ரிஷப்ஷன் வச்சுது.......எல்லா விலங்குகளும் விருந்து சாப்டுட்டு , புலி ஜோடியை நாலு அடி தள்ளி நின்னே வாழ்த்திட்டு போச்சு.
மாப்பிளை புலிக்கோ... கர்வம் தாங்கல.

திடீர்னு ஒரு பூனை மட்டும், சரசரன்னு... புலிக்கிட்ட போய் கை கொடுத்து வாழ்த்து சொல்லிடுச்சு.
புலிக்கு ஆத்திரம் வந்துடுச்சு. பூனையப் பார்த்து கர்ஜனையோட,
"டேய் இத்தனைப் பேரு என்னய தூரமா நின்னு வாழ்த்திட்டு போறானுங்க.....
ஒனக்கு மட்டும் எவ்வளவு தைரியம் இருந்தா என்கிட்ட வந்து வாழ்த்து சொல்லுவ !
நான் புலிடா" ன்னு சொன்னுச்சு.

அந்த பூனையோ கெக்க பிக்கன்னு சிரிச்சுட்டே "அடேய் கிறுக்கு பயலே !
நானும் கல்யாணத்துக்கு முன்ன "புலிதாண்டா " ன்னு சொல்லிட்டு ஓடிப் போச்சு ! ???

உண்மையை நீ புரிந்து கொள்ள வேண்டும்


ஒருவன் அதிகாலை எழுந்து காலைக்கடன்களை முடித்து ஆற்றில் குளித்து அருகில் உள்ள கோவிலுக்கு செல்வதை வழக்கமாக வைத்திருந்தான். கோவிலில் இறைவன் முன்பு ஏதாவது கோரிக்கைகள் சொல்லியே வழிபடுவது வழக்கமாக இருந்தான். பலநாட்கள் இதைப்பார்த்த ஒரு பெரியவர் அவனை அழைத்து அவனிடம் ஒரு கதை சொன்னார்.

ஓர் தத்துவஞானி செருப்புக்கூட அணியாதவர். தினமும் கடைவீதி செல்வார். ஒவ்வொரு கடையிலும் சிறிது நேரம் நின்று பார்த்து விட்டு அடுத்த கடைக்கு செல்வார். எல்லாம் பார்ப்பதுடன் சரி. எதையும் வாங்கியதே இல்லை. எல்லாவற்றையும் பார்த்துவிட்டு வெறுமனே திரும்பி வந்து விடுவார்.


அவருடைய நண்பர் நீ ஏன் தினமும் கடைவீதி செல்கின்றீர் எனக் ஞானியிடம் கேட்க, அங்கு என்னென்ன பொருள்கள் விற்கின்றன என்பதைப் பார்க்க என்றார். நீங்கள் அந்த பொருள்களிலிருந்து எதையும் வாங்கி வந்ததாக இதுவரை தெரியவில்லையே என்பதற்கு ஞானி, “அங்கு விற்கப்படும் பொருட்கள் இல்லாமல் நான் எவ்வளவு நிறைவாக வாழ்ந்து கொண்டிருக்கின்றேன் என்பதைப் புரிந்து கொள்வதற்காக எனச் சொன்னார்.”


இந்தக் கதையை கேட்ட இளைஞன் இதை ஏன் என்னிடம் கூறுகின்றீர்கள் என்றான். அதற்கு பெரியவர் பக்தி என்பது உனக்கு என்ன தேவை என்பதை சொல்லிக் கொண்டிருக்க அல்ல. பக்தியின் மூலம் உனக்கு தேவையற்றதை தெரிந்து ஒதுக்குவதற்குத்தான் என்ற உண்மை நீ புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.

தொழிலதிபருக்கு இரண்டு மகன்கள்

தொழிலதிபரை பார்க்க அவர் நண்பர் வந்திருந்தார். தொழிலதிபருக்கு இரண்டு மகன்கள். தொழிலதிபர் தன்னுடைய தொழிற்சாலைக்கு எம்.டி யாக அவரது இளைய மகனை நியமித்ததுவிட்டார். “மூத்த மகன் இருக்க எப்படி உங்கள் இளைய மகனுக்கு நிர்வாக பொறுப்பை கொடுத்திர்கள்?” என நண்பர் உரிமையோடு கேட்டார் .
தொழிலதிபர் தன் இரு மகன்களையும் அழைத்தார்.

“ஆறு மாதத்துக்கு முன்பு உங்கள் இருவர்க்கும் கொஞ்சம் தங்கம் தந்து பத்திரமாக வைத்திருங்கள் என்று சொன்னேனே? என்ன செய்தீர்கள்?” என கேட்டார்.

இருவரும் பேங்கில் பத்திரமாக உள்ளது என கூறினார்.

நண்பர் தொழிலதிபரை மேலும் கீழும் பார்த்து பார்வையாலேயே கேட்டார்.. இரண்டு பேரும் ஒரே வேலையே தானே செய்துளார்கள்?

தொழிலதிபர் இப்போது பாருங்கள் என பார்வையாலையே சொல்லிவிட்டு மூத்த மகனிடம்“எப்படி பத்திரமாக வைத்திருகிறாய்?”

” வெரி சிம்பிள்பா!!! லாக்கர்லே வச்சுட்டேன் .வருசத்துக்கு 12,000 ரூபாதான் வாடகை.”

இளைய மகனிடம் திரும்பினார். அவன் சொன்னான்.

” நான் அத அதே பேங்க்ல அடமானம் வச்சுட்டேன்.அதனால தங்கத்தோட மதிப்புலே 80% பணம் திரும்ப கிடைச்சுடுச்சு. அத நம்ம பிசினச்சுலே போட்டு அதுலே நல்ல ரோட்டேசனும் ஏகப்பட்ட லாபமும் பண்ணிகிட்டேன். . அந்த பணத்தால நமக்கு வருசத்துக்கு 1 லட்சம் லாபம் வருது.வருசதுதுக்கு 8000 ரூபாத்தான் வட்டியா போகுது. இப்போ நம்ம நகைகள் நம்மை பொறுத்தவரை இலவசமா பாதுகாக்க படுது.நகைகளில் போட்ட பணம் நகையில் முடங்காம பார்த்துகிட்டேன்.நகைய பாதுகாக்க சொந்த காசு போகாம வச்சுகிடேன்.”

இந்த பழம் மிகவும் புளிப்பாக உள்ளது


ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார்.

பழங்களை எடை போட்டு வாங்கி பணம் கொடுத்த பின் அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய்த்து வாயில் போட்டு விட்டு,
இந்த பழம் மிகவும் புளிப்பாக உள்ளது என்று அந்த பாட்டியிடம் கொடுத்து சாப்பிட சொல்லி புகார் செய்வார்.

உடனே பாட்டி ஒரு சுளையை வாயில் போட்டு விட்டு இல்லையேப்பா நல்லா தானே இருக்கு என்பார்.

உடனே அந்த இளைஞர் எதுவும் பேசாமல் மீதி பழங்களை எடுத்துக் கொண்டு செல்வார்.

இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அவர் மனைவி அவரிடம்,
ஏங்க..பழங்கள் நல்லா இனிப்பாக தானே இருக்கு….!!
என் தினமும் இப்படி நல்லா இல்லைனு சொல்லி டிராமா போடறீங்க

உடனே அந்த இளைஞர் சிரித்து கொண்டு மனைவியிடம்…..,

அந்த பாட்டி நல்ல இனிப்பான பழங்களை தான் விற்கிறாங்க”….!!

ஆனாலும்…,
தனக்கென்று ஒரு பழத்தைக் கூட சாப்பிட்டு இருக்க மாட்டாங்க…..!!

நான் இப்படி குறை கூறி கொடுப்பதால்…..,
தினம் அவர் காசு இழப்பின்றி ஒரு பழத்தை சாப்பிடுறாங்க என்றார்……!!

தினமும் நடக்கும் இந்த நாடகத்தை அருகில் இருந்த காய்கறி வியாபாரி கவனித்து விட்டு……,

அந்த பாட்டியிடம்,

அந்த ஆள் தினமும் உன் பழங்களை குறை கூறுகிறான்…..!!

இருந்தும் நீ ஏன் அவனுக்கு எடை அதிகமாக போட்டு பழங்களை கொடுக்கிறாய்….?

உடனே அந்த பாட்டி புன்னகைத்துவிட்டு….,

அவன் என்னை தினமும் ஒரு பழத்தை சாப்பிட வைப்பதற்காகவே இப்படி குறை கூறுவது போல கூறி கொடுத்து சாப்பிட வைக்கிறான்……!!

இது எனக்கு தெரியாது என்று நினைக்கிறான்…!!

நான் எடை அதிகமாக பழங்களை போடுவதில்லை..!!

மாறாக…
அவனது அன்பில் எனது தராசு கொஞ்சம் சரிந்துவிடுகிறது என்றார் அன்போடு….,

அடித்தாலும் அணைத்தாலும் நீ தான் என் அம்மா


ஒரு நாள் அலுவலகத்திற்கு புறப்பட்டுக் கொண்டிருக்கையில் என் மகள் காலை உணவு உண்ண அடம் பிடித்துக் கொண்டிருந்தாள். அம்மா ஊட்டி விட்டா தான் சாப்பிடுவேன் என்று. சரி வா என்று அவசர அவசரமாக உணவு ஊட்டினேன். கடைசி வாய் உணவு ஊட்டுகையில் என் கையை நறுக்கென்று கடித்து விட்டாள். வலி பொறுக்காமல் கன்னத்தில் ஒரு அறை அறைந்துவிட்டு வேக வேகமாக அலுவலகத்திற்கு சென்றுவிட்டேன். என் மகள் தவறு செய்தால் கூட திட்டுவேனே ஒழிய அவளை அடித்ததில்லை.. அவளை அடித்தது மிகவும் உறுத்தலாகவே இருந்தது.
“அவளை அடித்ததாலோ என்னவோ தெரியவில்லை அன்று முழுக்க நான் எந்த ஒரு செயலை செய்தாலும் அது தவறாகவே முடிந்தது..”

மனது முழுக்க என் மகளின் நினைப்பு தான். நான் அவளை அடித்த கோவத்தில் எங்கு என்னோடு பேசாமல் போய்விடுவாளோ என்று நடுக்கம். எப்படி அவளை எதிர்கொள்ள போகிறேன் என்று தெரியாமல் தவித்தேன். அலுவலகம் முடிந்ததும் அவளுக்கு பிடித்த பொருட்களை வாங்கிக்கொண்டு வீட்டிற்கு சென்றேன். வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தாள். என்ன செல்லம் என்ன பண்ணுறீங்கனு கேக்க யாமினி பதிலே பேசாமல் நின்று கொண்டிருந்தாள். வாங்கிய பொருட்களை கொடுத்தேன் வாங்க மறுத்தாள். அய்யோ பிள்ளைய அடித்ததுனால கோவத்துல நம்மகிட்ட பேச மாட்டேங்கிறாளேன்னு மனவருத்தம் அடைந்தேன். என் மகளிடம் சென்று நீ ஏண்டா அம்மாவ கடிச்ச அம்மாவுக்கு வலிச்சது அதுனால தான் வலி தாங்காம அடிச்சுட்டேன் அம்மாவை ரெண்டு அடி வேணாலும் அடிச்சுடு பேசாம இருக்காதடானு சொன்னதும் உங்ககிட்ட ஒன்னு கேக்கணும் அம்மா ? என்றாள்… என்னடா கேளு என்றேன். அலுவலகத்திற்கு சென்றவுடன் நீங்கள் ஒரு தடவையாவது என்னை நினைப்பீர்களா என்று கேட்டாள். இல்ல டா அலுவலக வேலைகள் அதிகம் அதனால் யாரையுமே நினைக்க மாட்டேன் என் வேலைகளை தான் நினைப்பேன் என்றேன். இன்று என்னை நினைத்தீர்களா ?? என்று கேட்டாள்… இன்று முழுவதும் உன்னை பற்றி தான் நினைத்தேன், உன்னை அடித்துவிட்டேனே என்று உன்னை நினைத்து வருந்திக்கொண்டே இருந்தேன் என்றேன்.

“உங்களோடு என்னால் ஒரு நாள் முழுவதும் செலவிட முடியவில்லை என் நினைவாவது உங்களோடு நாள் முழுக்க இருக்க வேண்டும் என்று நினைத்தேன் அதனால் தான் கடித்தேன்” என்று சிரித்தபடி பதில் அளித்தாள். நான் பிறக்கும் பொது நான் உனக்கு கொடுத்த வலியை விடவா நீ அடித்தது எனக்கு வலித்து விட போகிறது??? நீ என்னை அடித்தாலும் அணைத்தாலும் நீ தான் என் செல்ல அம்மா எனக்கு உன்ன “ரொம்ப பிடிக்கும் அம்மா” என்று என்னை “முத்தம் கொஞ்சினாள்”.

Tuesday, January 2, 2024

கண்ணாடி தரும் மூன்று பாடம்


அந்தப் பெரியவரின் கையில் ஒரு கண்ணாடி. அடிக்கடி அதைப் பார்ப்பார்.
பிறகு ஏதோ சிந்தனையில் மூழ்கிவிடுவார்.

பக்கத்து வீட்டு இளைஞனுக்குக்
குறுகுறுப்பு…!

‘அந்தக் கண்ணாடியில் அப்படி என்னதான்இருக்கிறது?
பெரியவர் அடிக்கடி அதையே உற்று உற்றுப் பார்க்கிறாரே!
ஒருவேளை மாயா ஜாலக் கண்ணாடியோ?’

அவனால் ஆவலைக் கட்டுப்படுத்த முடியவில்லை பெரியவரை நெருங்கினான்.

“ஐயா…!”

“என்ன தம்பி?”

“உங்கள் கையில்
இருப்பது கண்ணாடிதானே?”

“ஆமாம்!”

“அதில் என்ன தெரிகிறது?”

“நான் பார்த்தால் என் முகம் தெரியும், நீ
பார்த்தால் உன் முகம் தெரியும்!”

“அப்படியானால் சாதாரணக்
கண்ணாடிதானே அது?”

“ஆமாம்!”

“பிறகு ஏன் அதையே பார்த்துக்
கொண்டிருக்கிறீர்கள்?”

பெரியவர் புன்னகைத்தார்.

“சாதாரணக் கண்ணாடிதான், ஆனால்
அது தரும் பாடங்கள் நிறைய!”

" பாடமா… ??? கண்ணாடியிடம் நாம் என்ன பாடம் பெற முடியும்?"

அப்படிக் கேள்.

“உங்களில் ஒவ்வொருவரும் மற்றவர்க்குக் கண்ணாடி போன்றவர்கள்”

' எத்துணை ஆழமான உவமை இது! '

“இந்த உவமையில் என்ன இருக்கிறது?

எனக்கு ஒன்றும் புரியவில்லை!

“ஒருவர் மற்றவரின் குறைகளை எப்படிச்
சுட்டிக்காட்ட வேண்டும், எப்படிச் சீர்திருத்தம் செய்ய வேண்டும்
என்பதையெல்லாம் இந்தச் சின்ன உவமை தெளிவுபடுத்துகிறது. "

“எப்படி?”

“நம் முகத்தில் ஏதேனும் அழுக்கோ கறையோ பட்டு விட்டால்
கண்ணாடியில் அது தெரிகிறது. அந்தக் கறையைக் கண்ணாடி, கூட்டுவதும்
இல்லை, குறைப்பதும் இல்லை. உள்ளது உள்ளபடி காட்டுகிறது அல்லவா? "

“ஆமாம்”

“அதே போல் உன் சகோதரனிடம்- நண்பனிடம் எந்த
அளவுக்குக் குறை இருக்கிறதோ அந்த
அளவுக்குத்தான் அதனைச் சுட்டிக்காட்ட வேண்டும்.
எதையும் மிகையாகவோ, ஜோடித்தோ சொல்லக் கூடாது.

துரும்பைத் தூண் ஆக்கவோ, கடுகை மலையாக்கவோ கூடாது.
இது கண்ணாடி சொல்லும் முதல் பாடம்!”

“அடடே…! வெரி இன்ட்ரஸ்டிங்! அடுத்து…?”

“கண்ணாடிக்கு முன்னால் நீ நிற்கும்
போதுதான் உன் குறையைக் காட்டுகிறது. நீ அகன்று விட்டால்
கண்ணாடி மௌனமாகிவிடும்.
இல்லையா?”

“ஆமாம்!”

“அதே போல் மற்றவரின் குறைகளை அவரிடம்
நேரடியாகவே சுட்டிக்காட்ட வேண்டும். அவர் இல்லாத போது முதுகுக்குப் பின்னால் பேசக்கூடாது. இது கண்ணாடி தரும் இரண்டாவது பாடம்!”

“கிரேட்! அப்புறம்?”

“ஒருவருடைய முகக் கறையைக் கண்ணாடி காட்டியதால் அவர் அந்தக்கண்ணாடி மீது கோபமோ, எரிச்சலோ படுகிறாரா?”

“இல்லையே…! மாறாக அந்தக்கண்ணாடியைப் பத்திரமாக அல்லவா எடுத்து வைக்கிறார்!”

“சரியாகச் சொன்னாய். அதே போல் நம்மிடம்
உள்ள குறைகளை யாரேனும் சுட்டிக் காட்டினால் அவர் மீது கோபமோ,
எரிச்சலோ படாமல் நன்றி கூற வேண்டும்.
அந்தக் குறைகள் நம்மிடம் இருக்குமேயானால் திருத்திக்கொள்ள வேண்டும்.
இது கண்ணாடி தரும் மூன்றாவது பாடம்!”

“ஐயா…! அருமையான விளக்கம். நீங்கள் கூறிய கண்ணாடி உவமையில்
இத்தனை கருத்துகளா…! அப்பப்பா!”

“யோசித்தால் இன்னும் கூடப் பல விளக்கங்கள் கிடைக்கும்!”

“இனி கண்ணாடி முன்னால் நின்று என் முகத்தை அலங்கரிக்கும் போதெல்லாம் இந்த அறிவுரைகள் என் மனத்தை அலங்கரிக்கும்."

பெரியவர் இளைஞனின் முதுகில் செல்லமாய்த் தட்டிக் கொடுத்தார்.

படகோட்டி


ஒரு கடலோர நகரில் ஒரு திறமையான படகோட்டி தினமும் படகில் மக்களை அருகிலுள்ள தீவுக்கு அழைத்துச் சென்று திரும்பி வருவது அவரது தொழிலாகும். ஒரு நாள் சில இளைஞர்கள் அவரது படகில் பயணம் செய்தனர். படகை கிளப்பும் முன் படகோட்டி கடவுளை நோக்கி பிரார்த்தனை செய்தார். கடலும் வானமும் அமைதியாக இருந்த அந்த நேரத்தில் பிரார்த்தனை செய்த அவரை பயணிகள் சிரித்து கிண்டல் செய்தனர். அதை பொருட்படுத்தாமல் படகோட்டி படகை கிளப்பினார். படகு நடு கடலை அடைந்தபோது திடீரென்று புயல் வந்தது. படகு மேலும் கீழும் ஆடி தத்தளித்தது. பயந்து போன பயணிகள் கடவுளை நோக்கி பிரார்த்தனை செய்தனர்.

படகோட்டியையும் பிரார்த்தனை செய்ய அழைத்தனர். அதற்கு படகோட்டி இப்பொழுது படகை சரியாக செலுத்துவதே எனது கடமையாகும். அதை மட்டுமே செய்வேன் என்றார். சிறிது நேரத்திற்கு பிறகு புயல் திசை மாறி சென்றது. கடலும் அமைதியானது. 

அதுவரை படகு கவிழாமல் திறமையாக அதை ஓட்டிய படகோட்டி, துடுப்பு தள்ளுவதை நிறுத்தி விட்டு கடவுளுக்கு நன்றி கூறி பிரார்த்தனை செய்தார். இப்பொழுது, மற்றவர்களும் அவருடன் சேர்ந்து பிரார்த்தனை செய்தனர்.

மழை பெய்ததும், பயிராகி விடும்

ஒரு நாட்டில் கடுமையான பஞ்சம் ஏற்பட்டது. அந்த நாட்டில் உணவுப் பற்றாக்குறையால் மக்கள் அவதிப்பட்டார்கள். இதனால் அந்நாட்டு அரசனிடம் சென்று முறையிட்டார்கள்.


பஞ்சத்தைத் தீர்க்க அரசனும் யோசித்தான். அவனுக்கு மிகவும் மோசமான யோசனை தோன்றியது.


மக்கள் தொகை குறைந்தால் பஞ்சமும் குறையும் என்று நினைத்தான்.


"எழுபது வயதுக்கு மேல் உள்ள பெரியவர்கள் யாரும் உயிருடன் இருக்கக் கூடாது. அவர்களுக்கு வேலை செய்யும் ஆற்றல் இல்லை. ஆனால் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதனால்தான் பஞ்சம் ஏற்படுகிறது. எனவே எழுபது வயதுக்கு மேலிருக்கும் அனைவரையும் கொன்றுவிட வேண்டும் என்று உத்தரவிட்டான்.


மக்கள் அனைவரும் அழுது புலம்பினார்கள்.


அரசனின் உத்தரவை மீற முடியாமல் வீட்டிலிருந்த பெரியவர்களைக் கொன்று புதைத்தனர்.


பிறகும் பஞ்சம் தீர்ந்தபாடில்லை.


மக்கள் தாங்கள் வைத்திருந்த விதை நெல்லை அவித்து, அரிசியாக்கிச் சாப்பிட்டார்கள்.


திடீரென்று மழை வரும் போல் தோன்றியது.


ஒருவன் மட்டும் தனது தந்தையை யாருக்கும் தெரியாமல் வீட்டிலிருந்த பாதாள அறையில் மறைத்து வைத்திருந்தான்.


அவன் தந்தையிடம் சென்று, "அப்பா! மழை வரும் போலிருக்கிறது. ஆனால் விதைக்க விதை நெல் இல்லை" என்று வருத்தத்துடன் சொன்னான். "கவலைப்படாதே மகனே" என்ற பெரியவர் "நீ உன் நிலத்தை உழுது போடு" என்றார். அதன்படி அவனும் நிலத்தைம் உழுதான்.


அடுத்த நாள் மழை பெய்தது. இரண்டு நாட்களில் பயிர் முளையிட்டது. செழிப்பாக வளர்ந்தது. அந்த ஊருக்கே சாப்பாடு போட்டது.


அரசன் மிகவும் மகிழ்ந்து போய் அவனை அழைத்து வரச் செய்தான். "விதைக்காமல் உன் நிலம் எப்படி விளைந்தது?" என்று கேட்டான்.


என் அப்பா சொன்னபடி செய்தேன். நிலத்தில் பயிர் விளைந்தது. என்றும் தன் தந்தையை வீட்டில் பாதாள அறையில் மறைத்து வைத்திருக்கும் தகவலையும் சொன்னான்.


பெரியவரை அழைத்து வரும்படி தனது வீரர்களிடம் தெரிவித்தான். அவர்களும் போய் அழைத்து வந்தார்கள்.


அரசன் அந்தப் பெரியவரிடம், "விதையில்லாமல் நிலத்தை வெறுமனே உழுது போட்டால் பயிர் முளைக்கும் என்று எப்படி சொன்னீர்கள்?" என்று கேட்டான்.


"எலிகளும், எறும்புகளும் தங்கள் தேவைகளுக்காக தானியங்களைச் சேர்த்து வைத்திருக்கும். அந்நிலத்தை உழும் போது அவை எல்லாம் வெளியில் வந்துவிடும். மழை பெய்ததும், பயிராகி விடும்" என்றும் பெரியவர் சொன்னார்.


"ஆ, இப்படி அரிய பல யோசனைகளை அனுபவப்பூர்வமாகச் சொல்லும் பெரியவர்களை எல்லாம் கொல்லும்படி உத்தரவிட்டுத் தவறு செய்து விட்டேனே.." என்று அரசன் வருந்தினான்

முதல் நாளே பெரிய விஷயம் புரிந்துவிட்டதே!


ஒரு பெரிய பண்டிதர் ஆன்மீக குரு ஒருவரை தேடி வந்தார். “நீங்கள் நூல்களில் இல்லாத பெரிய விஷயங்களைக்கூடக் காட்டிக் கொடுக்கிறீர்களாமே?” குரு புன்னகைத்தார். பண்டிதர் விடவில்லை. “எனக்கு நீங்கள் கட்டாயமாக ஏதேனும் காட்டிக் கொடுக்க வேண்டும்.” “சரி, இப்போது மழைக் காலமில்லையா? இன்று மழை வரும் போல இருக்கிறது. மழை பெய்யும்போது மைதானத்தில் சென்று கைகளை உயர தூக்கிக் கொண்டு நில். ஏதேனும் புரியலாம்.” அடுத்த நாள் பண்டிதர் வெகு கோபமாக வந்தார். “என்ன ஆயிற்று?” “நீங்கள் சொன்னதுபோல மழையில் நேற்று மாலை நின்றேன்.” “ம்?” “முழுக்க நனைந்து போனேன். எல்லாரும் சிரித்தார்கள். நான் என்னை ஒரு பெரிய முட்டாளாக உணர்ந்தேன்!” “பரவாயில்லையே? முதல் நாளே பெரிய விஷயம் புரிந்துவிட்டதே!”

எங்கள் ஆட்சியை காப்பாற்றுங்கள்

ஆட்சியாளர்கள் மக்களை கொள்ளையடித்தனர். வதைத்தனர் .உயிர்ப்பலியும் அதிகமானது .
அயல்நாடுகள் மக்களுக்காக அனுதாபம் காட்டின.

“மக்களைக் கொல்லாதே” என்றன .


“இது உள் நாட்டு விவகாரம் இதில் பிற நாடுகள் தலையிடுவது உலக அரசியலுக்கு முரண்பாடானது” .


அந்த நாடுகள் வாயை மூடிக்கொண்டன.


உயிர் போகும் வேளையில் போராடாமல் மடிவதைவிட போராடி மடிவதே மேல் என மக்கள் எண்ணினர்.


ஆயுதங்களை கையில் எடுத்தனர்.


அச்சமடைந்த ஆட்சியினர் வெளிநாடுகளுக்கு அவசர செய்தி அனுப்பினர்.


“புரட்சி வெடித்து விட்டது ஆயுதங்களை அனுப்பி எங்கள் ஆட்சியை காப்பாற்றுங்கள் “

குரங்கு வியாபாரி

ஒரு கிராமத்தில் அதிகமான குரங்குகள் இருந்தன. அதனால் அந்த கிராம மக்களுக்கு மிக தொல்லையாக இருந்தது. அக்கிராமத்திற்கு ஒரு வியாபாரி வந்தான். அவன் அக்கிராமத்தில் உள்ள குரங்குகளை பார்த்தான். 

அக்கிராமத்து மக்களிடம் எனக்கு நிறைய குரங்குகள் தேவை படுகிறது. ஒரு குரங்கை பிடித்து கொடுத்தால் ஒரு குரங்கிற்கு பத்து ரூபாய் வீதம் தருகிறேன் என்றும் கூறினான். கிராமத்து மக்கள் சிலர் உனக்கு எதற்கு குரங்கு? என கேட்க, மருத்துவ ஆராய்ச்சிற்கு தேவைப்படுகிறது என்று வியாபாரி கூறினான். கிராம மக்களும் பணத்திற்கு பணமும் ஆயிற்று, குரங்கின் தொல்லையும் குறையும் என்று எண்ணி அவரவரால் எத்தனை குரங்கினை பிடிக்க முடியுமோ அத்தனை குரங்கினை பிடித்து பத்து ரூபாய் வீதம் பல பத்து ரூபாய்க்களை பெற்றனர் .

கிராமத்தில் உள்ள அனைத்து குரங்குகளையும் மக்கள் பிடித்து கொடுத்து பணம் பெற்றனர். கிராமத்தில் குரங்குகள் தீர்ந்து போயின. குரங்கு வியாபாரி எல்லா குரங்குகளையும் எடுத்துக்கொண்டு கிராமத்தை விட்டு கிளம்புவதற்க்கு முன் கிராம மக்களிடம் எனக்கு இன்னும் நிறைய குரங்குகள் தேவை படுகிறது. இனி பிடித்து கொடுக்கும் ஒவ்வொரு குரங்கிற்கும் ஐநூறு ரூபாய் வீதம் தருகிறேன் என்றும் கூறினான். 

கிராமத்திலோ ஒரு குரங்குக்கூட இல்லை . ஒரு குரங்கிற்கு ஐநூறு ரூபாய் கிடைக்கும் என்பதால் கிராம மக்கள் அனைவரும் குரங்கிற்காக தேடித்தேடி அலைந்தனர். ஒரு குரங்கும் கிடைக்க வில்லை. சில நாட்களுக்கு பிறகு ஒரு வியாபாரி இந்த கிராமத்திற்கு வந்தான். அவன் கிராமத்து மக்களிடம் என்னிடம் நிறைய குரங்குகள் உள்ளது,ஒரு குரங்கு நூறு ரூபாய் ஆகும் என்றான். கிராம மக்கள் அனைவரும் இந்த வியாபாரியிடமிருந்து நூறு ரூபாய்க்கு வாங்கி முதலில் வந்த குரங்கு வியாபாரியிடம் ஐநூறு ரூபாய்க்கு விற்கலாம் என்றெண்ணி போட்டிப்போட்டுக் கொண்டு வாங்கிக் கொண்டனர் . 


குரங்குகள் தீர்ந்து போயின.வியாபாரி கிளம்பினான் . 

கிராமமக்கள் ஐநூறு ரூபாய்க்கு வாங்கி கொள்ளப் போகும் வியாபாரிக்காக காத்துக்கொண்டிருந்தனர்.அந்த வியாபாரிவரவேயில்லை. அவன் வரப்போவேதேயில்லை. 

ஏனெனில் அந்த வியாபாரித்தான் வேறொருவனை அனுப்பி பத்து ரூபாய்க்கு வாங்கிய குரங்கை நூறு ரூபாய்க்கு விற்றுவிட்டான் .

கிராமத்து சாமியார் மந்திரம்

ஒரு கிராமத்தில் உள்ள மக்கள் ஒன்று கூடி ஆற்றை கடந்து எங்கேயோ செல்ல குழுக்களாக தயாராகிகொண்டிருந்தனர்.

அப்பொழுது ஆற்றின் கரையருகில் மரத்தின் கீழ் அமர்திருந்த அவ்வூர் கிராம சாமியார் அக்குழுவிலிருந்து ஒருவரை அழைத்து எல்லோரும் எங்கே செல்கிறீர்கள் என கேட்டார் .


அவன் உடனே அவசரவசரமாக ஆற்றின் நடுவிலுள்ள மணல் மேட்டில் ஒரு சக்தி வாய்ந்த சாமியார் ஒருவர் பிரார்த்தனை செய்துக்கொண்டிருக்கிறார் அவரோடு சேர்ந்து நாங்களும் பிரார்த்தனை செய்ய போகிறோம் என்று கூறி மிக வேகமாய் தயாராகி கொண்டிருந்த குழுவில் கலந்தான்.


கிராமத்து சாமியாருக்கு தன்னை விட சக்தி வாய்ந்தவனா என்று ஒரு பக்கம் பொறாமையும் மறுப்பக்கம் மணல் மேட்டு சாமியாரை பார்க்க வேண்டுமென்கிற ஆர்வமும் அதிகமானது.


சாமியாரும் பரிசலில் ஆற்றை கடந்து மணல் மேட்டை வந்தடைந்தார். கிராம மக்களும் வந்தடைந்தனர்.


அங்கு சாமியார் ஒருவன் "இறைவா, நான் ஒருவன் மற்றும் எனது மக்களின் பிரார்த்தனை நிறைவேற அருள்புரிய வேண்டும் என மீண்டும் மீண்டும் கூறி பிரார்த்தித்து கொண்டிருந்தான்.

கிராம சாமியார் இதனை கண்டதும் கொல்லென்று சிரித்து மணல் மேட்டு சாமியாரை பார்த்து “எந்த மந்திரமும் உனக்கு தெரியாதா? பின் எப்படி? உன் பிரார்த்தனை நிறைவேறும்.வேண்டுமானால் என்னிடம் கேட்டு தெரிந்துக்கொள்.”என்று கூறி விட்டு கிராம சாமியார் நின்றார்.

ஆயினும் மணல் மேட்டு சாமியார் தனது பழைய மந்திரமான "இறைவா, நான் ஒருவன் மற்றும் எனது மக்களின் பிரார்த்தனை நிறைவேற அருள்புரிய வேண்டும் என கூறி மீண்டும் பிரார்த்தனையைதொடர்ந்தான்.



கிராமத்து சாமியாருக்கு ஒருமாதிரியாக ஆகிவிட்டது . தன்னை அவன் ஒன்றும் பொருட்படுத்தவே இல்லை என்றுஅறிந்துக்கொண்ட கிராமத்து சாமியார் கிராமத்துக்கு செல்ல ஆற்றங்கரைக்கு புறப்பட்டார்.


பரிசலில் அமர்ந்து ஆற்றின் நடுவே சென்று கொண்டிருந்த பொழுது "கொஞ்சம் நில்லுங்கள்” என குரல் கேட்டது.


கிராமத்து சாமியார் திரும்பி பார்க்க மணல் மேட்டு சாமியார் ஆற்றின் மேல் நடந்து வந்து பரிசலின் அருகில் நின்று "அய்யா நீங்கள் ஏதோ மந்திரமொன்றை தெரியும் என்று கூறினீர்கள் அதனை கூறினால் அதனையும் சேர்த்து பிரார்த்தனை செய்வேன் என்றார்.


கிராமத்து சாமியார் அதிசயத்து இதோ அந்த மந்திரம் இனி நீங்கள் “நாங்கள் இருவர் மற்றும் எனது மக்களின் பிரார்த்தனை நிறைவேற அருள்புரிய வேண்டும்” என கூறி பிரார்த்தனை செய்யுங்கள் என கூறினார் . பரிசலை மணல்மேட்டை நோக்கி செலுத்துமாறுபரிசல்க்காரனிடம் கிராம சாமியார் வேண்டுகோளிட்டார்

உருவத்தைப் பார்த்து எவரையும் எடைபோடாதே


அப்போது எங்கிருந்தோ அதிவேகமாக வந்த பென்ஸ் கார் ஒன்று கிரீசசிட்டு நின்றது. ஆட்டுக்காரன் ஆச்சரியத்துடன் திரும்பிப் பார்த்தான்.
அமெரிக்க பாணியில் கோட்டும் சூட்டுமாக இறங்கிய மிடுக்கான வாலிபன் ஆட்டுக்காரனிடம் வந்து "உன் மந்தையிலிருக்கும் ஆடுகளின் எண்ணிக்கையை

நான் சரிவரக் கூறினால் நீ எனக்கு நான் கேட்கும் ஆட்டைப் பரிசாகத் தருவாயா? " எனக் கேட்டான்.

ஆட்டுக்காரன் செய்வதறியாமல் 'சரி'' எனத் தலை அசைத்து வைத்தான்.

உடனே, அவ்வாலிபன் தன் வாகனத்துக்குத் திரும்பி அதிலிருந்த லாப் டாப்பை எடுத்தான். தன் செல்பேசியையும் வேறு சில கருவிகளையும் அத்துடன் பொருத்தினான். அதிலிருந்த கருவி ஒன்றை எடுத்து திறந்த வெளியைப் படமெடுத்து ஏதேதோ கணித்தான். பிறகு தன்னிடமிருந்த சிறிய அச்சுப் பொறியை எடுத்து அதிலிருந்து நூற்றிருபது பக்க அறிக்கையை அச்செடுத்தான்.

பின்னர் நேரே ஆட்டுக்காரனிடம் வந்து " உன் மந்தையில் 1346 ஆடுகள் உள்ளன. சரியா? '' என்றான்.

ஆட்டுக்காரன் ஆச்சரியமும் புன்னகையும் கலந்த முகத்துடன் " நீ சரியாகக் கூறினாய். ஆகவே, உனக்குப் பிடித்த ஆட்டை நீ எடுத்துக் கொள் " என்றான்.

அவ்வாலிபனும் மந்தைக்குள் தேடி தனக்குப் பிடித்த பிராணியைப் பிடித்து தன் வாகனத்தின் பின்னால் திணித்துக் கொண்டான்.

அந்த நேரத்தில் அவனருகில் வந்த ஆட்டுக்காரன், " சரி, இப்போது நான், நீ செய்யும் தொழில் எது என்பதைச் சரியாகக் கூறினால் நீ என்னிடம் பெற்ற பிராணியை எனக்குத் திருப்பித் தருவாயா? '' எனக் கேட்டான். அவ்வாலிபனும் சம்மதித்தான்.

ஆட்டுக்காரன் கேட்டான், " நீ தகவல் தொழில்நுட்ப ஆலோசகன் தானே? "

அவ்வாலிபன் கேட்டான், " உனக்கு எப்படித் தெரிந்தது.? "

ஆட்டுக்காரன் சொன்னான், அதுவா? மிக எளிது! முதலாவதாக நீ எவருடைய அழைப்புமின்றி இங்கு வந்தாய். அடுத்ததாக நீ எனக்கு நன்றாகத் தெரிந்த ஒன்றுக்காக என்னிடமே கட்டணமாக ஒரு பிராணியைக் கேட்டாய். மூன்றாவதாக, உனக்கு என்னுடைய தொழிலைப் பற்றி எதுவுமே தெரியாது. ஆகவே, இப்போது நான் என்னுடைய நாயை திரும்ப எடுத்துக் கொள்ளலாமா? " என்றான்.

'உருவத்தைப் பார்த்து எவரையும் எடைபோடாதே' என்று அப்பா சொன்னது நினைவுக்கு வர, அவ்வாலிபன் தனது காரை முடுக்கினான்.

உங்களுக்கு மிகவும் இளகிய மனது


ஒரு பணக்கார மேனேஜர் ஒருவர் காரில் போய்க்கொண்டிருந்த பொழுது சாலையில் இருவர் புற்களை சாப்பிட்டுக் கொண்டிருப்பதை பார்க்கிறார்.இதைப் பார்த்ததும் அவர் வியப்புற்று டிரைவரிடம் காரை நிறுத்தக் கூறுகிறார்.

பின் அந்த இருவரின் அருகில் சென்று," நீங்கள் ஏன் இப்படி புற்களை உண்கிறீர்கள் எனக் கேட்கிறார்.

உடனே அவர்களில் ஒருவன்," எங்களிடம் உணவு சாப்பிடுவதற்கான பணம் இல்லை, எனவே நாங்கள் புற்களை தான் உண்ண வேண்டும் என்கிறார்.

உடனே அந்த மேனேஜர், சரி நீங்கள் என் வீட்டிற்கு வாருங்கள், நான் உங்களுக்கு உண்ண கொடுக்கிறேன் என்கிறார்.

உடனே அந்த ஏழை," ஐயா.. எனக்கு ஒரு மனைவியும் ஐந்து குழந்தைகளும் இருக்கிறார்கள், அதோ அந்த மரத்தடியில் இருக்கிறார்கள் என்கிறார்.

உடனே மேனேஜர்," அவர்களையும் அழைத்து வா எனக் கூறி விட்டு, பக்கத்தில் நின்றிருந்த மற்றொரு ஏழையிடம்.. "நீயும் இவர்களுடன் வரலாம் " என்கிறார்.

உடனே அந்த மற்றொரு ஏழை," ஐயா.. எனக்கு ஒரு மனைவியும் ஏழு குழந்தைகளும் இருக்கிறார்கள் என்கிறார்.

உடனே அந்த மேனேஜர்," சரி அவர்களையும் அழைத்து வா" என்கிறார்.
இவர்கள் அனைவரையும் அந்த பெரிய காரில் அமர்த்தி அந்த மேனேஜர் அவர் வீட்டை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்.

அப்பொழுது அந்த ஏழைகளில் ஒருவர், " ஐயா.. உங்களுக்கு மிகவும் இளகிய மனது, எங்கள் எல்லோரையும் உங்களுடன் இப்படி அழைத்துக் கொண்டு செல்கிறீர்களே" என்கிறான்.

மேனேஜர் உடனே," இது எனக்கு மிகவும் சந்தோஷத்தை கொடுக்கின்றது, உங்களுக்கு என் வீடு அமைந்துள்ள இடம் மிகவும் பிடிக்கும். ஏறத்தாழ அங்கே உள்ள புற்கள் ஒரு மீட்டர் அளவிற்கு வளர்ந்து இருக்கின்றது என்றார்.

மேனேஜர்களை எப்பொழுதும் நம்பாதீர்கள்.....

அரசியல்வாதியா,கொக்கா?

புதிதாக பதவிக்கு வந்த ஒரு அமைச்சருக்கு ஒரு பெரிய தொழில் அதிபர் விருந்து வைத்தார்.
தனது தொழிற்சாலையில் தயாரான உயர்ந்த கார் ஒன்றை அவருக்கு அன்பளிப்பாகக் கொடுக்க முன் வந்தார்.

உடனே அமைச்சர்,''இது ஊழலுக்கு வழி வகுக்கும்.

நான் என்னுடைய பதவி காலத்திலேயே எதையுமே இலவசமாக வாங்குவதில்லை என்று முடிவு செய்துள்ளேன்.'' என்றார்.

தொழில் அதிபர் உடனே ''சரி, அப்படி நீங்கள் உறுதியாக இருந்தால் இந்தக் காரை இலவசமாகப் பெற்றுக் கொள்ள வேண்டாம்.

இந்தக் காரின் விலை ஒரு ரூபாய்.
ஒரு ரூபாய் கொடுத்துவிட்டு இந்தக் காரை வாங்கிக் கொள்ளுங்கள்.'' என்றார்.

உடனே அமைச்சர்,''ரொம்ப சந்தோசம்,''என்று சொல்லிக் கொண்டே பையிலிருந்து ஒரு பத்து ரூபாய் நோட்டை எடுத்து அவரிடம் கொடுத்து,

''அப்படியானால் எனக்கு பத்து கார் கொடுங்கள்.''என்றாரே பார்க்கலாம்!.

தொழில் அதிபரே அசந்து விட்டார்.


அரசியல்வாதியா,கொக்கா?

Monday, January 1, 2024

ஆங்கிலப் புத்தாண்டு வரலாற்றுப் பார்வை.


ஜனவரி1ஆங்கிலப் புத்தாண்டின் வரலாற்றைக் கொஞ்சம் இங்கே அலசுவோம்!

ஜனவரி முதல் டிசம்பர் வரை உள்ள இந்த ஆங்கில ஆண்டு முறை கிறிஸ்தவ காலண்டர் அல்ல. மாறாக இயேசுவின் பிறப்பிற்கு முன்னரே உள்ள காலண்டர் முறை ஆகும். இது பண்டைய #ரோம_கிரேக்கர்களின் காலண்டர் முறையாகும். இந்த மாதங்களும், அதற்கான

காரணங்களையும் நாம் ஆய்வு செய்தால் அது விளங்கி விடும்.


#ஜனவரி : ‘ஜானஸ்’ என்பது ரோமக் கடவுளின் பெயர். இந்தப் பெயரை காலண்டரில் கி.மு.46 ஆம் ஆண்டு ஜூலியஸ் ஸீஸர் மன்னர்தான் சேர்த்தார்.


#பிப்ரவரி : இது லத்தீன் மொழி வார்த்தை. ரோமத் திருவிழா ‘பிப்ரேரியஸ்’ இன் நினைவாக வந்த மாதம்.


•#மார்ச் : இதுவும் லத்தீன் வார்த்தை. ரோமக் கடவுள் ‘மார்ஸ்’ இன் பெயராலே அழைக்கப்படுகிறது.


•#ஏப்ரல் : லத்தீன் மொழியில் ‘ஏப்ரலிஸ்’ என்பதுதான் ஏப்ரல் என்றாகி விட்டது. இதன் பொருள் ‘திறப்பது’ என்பது ஆகும். ஆரம்பத்தில் #ஆண்டின்_தொடக்கம் ஏப்ரல் மாதத்தில்தான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.


16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ‘#போப்பாண்டவர்’ தான் புத்தாண்டை ஏப்ரலிலிருந்து ஜனவரிக்கு மாற்றினார்! இதனை ஒரு சாரார் ஏற்றுக்கொள்ளவில்லை. 

எனவே

ஜனவரி 1 ஆம் நாளை புத்தாண்டின் முதல் நாளாக ஏற்றுக் கொண்ட ஐரோப்பியர்கள் மற்ற ஐரோப்பியர்களைப் பார்த்து ஏப்ரல் 1 ஆம் நாள் ‘#முட்டாள்களின்_தினம்’ என்று அழைக்கத் தொடங்கினர்! இப்படி பிறந்தது தான் முட்டாள்கள்தினம்!


•#மே : ‘மேயஸ்’ என்ற கிரேக்கப் பெண் கடவுளின் பெயரால் இது அழைக்கப்படுகிறது.


•#ஜூன் : ரோம கடவுள் ‘ஜுனோ ’வின் பெயரால் இம்மாதம் அழைக்கப்படுகிறது.


•#ஜூலை : மன்னர் ‘#ஜூலியஸ்_ஸீஸர் ’ பெயரால் அழைக்கப்படுகிறது.


•#ஆகஸ்ட் : மன்னர் ‘#அகஸ்டிஸ்_ஸீஸர் ’ பெயரால் அழைக்கப்படுகிறது.


•மீதமுள்ள செப்டம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய நான்கு மாதங்களும் 9,10,11,12 ஆகிய லத்தீன் எண்களின் பெயரிலிருந்து எடுக்கப்பட்ட வார்த்தைகளாகும். ஆக மாதங்களின் பெயர்களில் பெரும்பாலானவை #கடவுளின் பெயர்கள்தாம்.


இது ஒரு புறமிருக்க,,இந்தக் காலண்டரின் மாதங்களின் நாள்களை முடிவு செய்ததிலும் ‘ஒரு முட்டாள்தனமான’ வரலாறு உள்ளது!


முதலில் மாதங்களின் நாள்கள் ஜனவரி முதல் டிசம்பர் வரை 30 நாள்களும் 31 நாள்களும் மாறி மாறி வந்தன.


அதாவது ஜனவரி 31 நாள்கள், பிப்ரவரி 30 நாள்கள், மார்ச் 31 இதனை #ஜூலியஸ்_ஸீஸர் ஏற்றுக் கொள்ளவில்லை. பிப்ரவரி மாதத்திலிருந்து ஒரு நாளை பிடுங்கி தன் பெயரில் உள்ள மாதத்திற்கு அதாவது ஜூலை மாதத்திற்குச் சேர்த்தார்! அதனால் 30 நாளாக அதுவரை இருந்த ஜூலை மாதம் 31 நாளாக மாறியது! காலண்டர் மொத்தமும் மாற வேண்டியது வந்தது. ஆகஸ்ட் 30 நாளானது இப்படிக் கொஞ்ச காலம் போனது.


பின்னர் #அகஸ்டியஸ்_ஸீஸரின் ஆதரவாளர்கள் ஆகஸ்ட் மாதமும் 31 நாளாக இருக்க வேண்டும் என்று கோரினர். மீண்டும் பிப்ரவரி மாதத்திலிருந்து ஒரு நாள் பிடுங்கி ஆகஸ்டில் சேர்க்கப்பட்டது.

ஆக இத்தனைக் குழப்பத்திற்குப் பின்னர்தான் நாம் வைத்திருக்கும் இந்தக் காலண்டர் தயாரிக்கப்பட்டது. இது ‘#கிரீகோரியன்’ (Gregorian) காலண்டர் என்று அழைக்கப்படும்.


இப்படி ‘முட்டாள்தனமான’ ஒரு வரலாற்றை மூடிமறைத்து நம்மைப் பின்பற்ற வைத்துள்ள மேற்கத்தியர்களை உண்மையில் ‘அறிவாளிகள்’ என்ற சொல்ல வேண்டும்! ஆக இந்தக் காலண்டருக்கும் #இயேசுவிற்கும் எவ்விதத் தொடர்புமில்லை.


ஆனால் எப்பொழுது கிறிஸ்தவம் ‘ரோமன் கத்தோலிஸம்’ என்று மாறியதோ, அந்நாள் தொடங்கி கொள்கை முதல் கலாச்சாரம் வரை அனைத்திலும் ரோம கிரேக்க அநாகரிகம் (Paganism) ஊடுருவி விட்டது!


இந்த நாளைத்தான் கண்விழித்து கேக் வெட்டி, யாரையும் தூங்கவிடாம, வாழ்த்துச் சொல்லியே சாகடிக்கிறோம். அதுவும் முகநூல், வாட்சப், மெசஞ்சர் எல்லாம் கற்பமான காட்டுயானமாதரி உப்பிபோய் இருக்கிறது.


சரி இவ்வளவு தூரம் நேரவிரயம் செய்து அர்த்தமற்ற முட்டாள்களின் காலண்டர் முறையின் வரலாற்றை படித்து விட்டீர்கள், கொஞ்சம் நேரம் ஒதுக்கி அறிவியல் பூர்வமாக கிரக சுழற்சியை வைத்தும், அதனால் ஏற்படும் காலநிலை மாற்றம் இவற்றை அடிப்படையாக வைத்தும் கணிக்கப்பட்ட நம் தமிழர் நாள்காட்டி பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள்.



#தமிழ்நாள்காட்டி


பழந்தமிழர் காலத்தைப் #பெரும்பொழுது_சிறுபொழுது என இரண்டாகப்பிரித்தனர்.



ஒரு வருடத்தை இளவேனில் (சித்திரை, வைகாசி) முதுவேனில் (ஆனி, ஆடி), கார்(ஆவணி, புரட்டாதி) கூதிர் (ஐப்பசி, கார்த்திகை) முன்பனி ( மார்கழி, தை, )பின்பனி ( மாசி, பங்குனி) என்று #ஆறாகப் பிரிப்பதுதான் பெரும் பொழுது.



ஒரு தினத்தை வைகறை, காலை, நண்பகல், எற்பாடு, மாலை, யாமம் என்று #ஆறாகப் பிரிப்பதுதான் சிறுபொழுது.



ஒரு தினம் 60 நாழிகை கொண்டது என்றும் கணக்கிட்டனர். ஒரு நாழிகைக்கு 24 நிமிடங்கள். இன்றைய 24 மணிநேரம் கொண்ட ஒருநாள் இந்த கணக்குக்கு சரியாகப் பொருந்துகிறது.



தமிழில் நாட்களுக்கு ஞாயிறு என்று சூரியனின் பெயரும் கிரகங்களின் பெயர்களும் வைக்கப்பட்டுள்ளன.



நட்சத்திரங்களை முன்வைத்தும் பூமியின் சுழற்சியை அடிப்படையாக வைத்தும் உருவாக்கப்பட்டதாகத் தமிழ் காலண்டர் உள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.



சித்திரை1 அன்று புத்தாண்டு தொடங்குவது என்பது தமிழில் மட்டும் அல்ல. #அஸ்ஸாம்_வங்காளம்_கேரளம்_பஞ்சாப் உள்ளிட்ட பல மாநிலங்களிலும் சித்திரை1 தான் புத்தாண்டு.



இந்தியாவுக்கு வெளியிலும் #பர்மா_கம்போடியா_லாவோஸ்_நேபாளம்_தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளிலும் இந்தத் தேதிதான் புத்தாண்டு.



பழமையான வான சாஸ்திரமான #சூரிய_சித்தாந்தம் எனும் சமஸ்கிருத நூலில் நட்சத்திரங்களின் சுற்றுப்பாதையின் காலமாக 60 வருடங்கள் கணிக்கப்பட்டுள்ளன. அதில்தான் இன்று நாம் கடைப்பிடிக்கிற தமிழ் வருடங்களின் பெயர்ப் பட்டியல் முதலில் காணப்பட்டுள்ளது.