*
Thursday, February 29, 2024
சிவப்பு கொடி பசலை - தினம் ஒரு மூலிகை
உறுதியான மன உறுதி..
நெருக்கடி நிலைமையில் ஏதாவது ஒரு இக்கட்டான நிலையை எதிர் கொண்டால், நாம் உடனடியாக சூழ் நிலையை ஆராய வேண்டும்..*
*பின் விளைவுகளை யூகித்து சாமர்த்தியமாக, மன உறுதி, தைரியம் மற்றும் சரியான மனப்பான்மையுடன் முன் நோக்கிச் சென்று நிலைமையை தீர்க்க செயல்பட வேண்டும்.*
துன்பங்களை எதிர் கொள்ளும் போது, உங்கள் கனவுகளை நிறை வேற்றுவதற்கு தைரியமும், மன உறுதியும் இருந்தால் நீங்கள் எடுத்த செயலில் வெற்றி அடையலாம்..*
இந்த அழகான கதை, தென் அமெரிக்காவின் கிவேசுவா (இன்கன்) இந்தியர்களால் தோன்றுவிக்கபட்ட பிரபலமான நீதிக் கதைகளில் இதுவும் ஒன்று.*
ஒரு சமயம், தாசு என்ற ஒரு சிறிய பறவை பரந்த காட்டில் ஒன்றில் வாழ்ந்து வந்தது.*
கோடைக் காலத்தில் ஒரு நாள், கொடூரமான காட்டுத் தீயானது கொழுந்துவிட்டு எரிந்தது.அதன் தீப் பிழம்புகள் காட்டில் இருக்கும் பல மரங்கள்,விலங்குகளை விழுங்கிக் கொண்டிருந்தது.*
மற்ற பறவைகள், வானில் உயரமாக பறந்து, வெகு தொலைவிலுள்ள பாதுகாப்பான இடத்திற்கு சென்று கொண்டிருந்தன;*
ஆனால் தாசுவால், தன்னுடைய அருமையான இருப்பிடம் மற்றும் எரிந்து கொண்டு இருக்கும் இடத்தை விட்டுச் செல்வதற்கு மனம் வரவில்லை*
இரவும் பகலும், தன் ஆற்றல் முழுவதையும் உபயோகித்து, தனது சிறு அலகில் ஆற்று நீரை நிரப்பிக் கொண்டு, முன்னும் பின்னும் அலைந்து காட்டுத் தீயை அணைக்க தாசு முற்பட்டது.*
அந்த சிறிய பறவை தாசுவின் அரிதான துணிச்சலும், அசைக்க முடியாத மன உறுதியும் போற்றத்தக்க வகையில் இருந்தது.*
சிறிது நேரத்தில், பெரும் மழை காடுகளின் மீது பொழிந்து, காட்டுத் தீயை தணித்தது.*
*ஆம்.,தோழர்களே..,*
*உங்களிடம் உள்ள மன உறுதியை கொண்டு சுற்றுப்புற சூழ்நிலையையும் மாற்றிக்கொள்ளும் முயற்சிகளை இடைவிடாமல் தொடர்ந்து செய்து கொண்டே இருங்கள்.*
*பின்னர், உங்கள் தைரியத்தையும், திறமையையும், செயல்பாட்டையும் கண்டு ஊரே மெச்சுவார்கள். ஏன் நீங்களே வியப்பும், ஆச்சரியமும் அடைவீர்கள்..*
*உறுதியாக இருக்கும் ஒருவரின் மிகச் சிறிய செயல்கள் கூட உலகத்தையே மாற்றி அமைக்கும் வல்லமை பெற்றது.✍🏼🌹*
பணம் வந்து விட்டால் பத்து கெட்ட குணங்கள் வந்து விடும்
இதைத்தான் "பணம் பத்தும் செய்யும்" என்று சொல்லி வைத்தார்கள்...
அதாவது :
*
1. பேராசை.
.
2. தீய இச்சை.
.
3. கஞ்சத்தனம்.
.
4. காதல்.
.
5. அகம்பாவம். (ஈகோ)
.
6. பொறாமை.
.
7. ஆடம்பரம்.
.
8. "தனக்கு நிகர் எவரும் இல்லை" என்ற அகங்காரம்.
.
9. கர்வம்.
.
10. கெடுமனம் அதாவது "தனக்கு நேர்ந்த துன்பம் பிறருக்கும் ஏற்பட வேண்டும்" என்ற கொடிய புத்தி.
*
போன்ற பத்து தீய குணங்களும் வந்து சேர்ந்து விடுமாம்.
*
பணம் ஒருவனைச் சும்மா இருக்க விடாது என்பதற்காக சொல்லப்பட்டது தான் "பணம் பத்தும் செய்யும்" என்ற இந்தப் பழமொழி.....
எல்லா மௌனங்களும்/அமைதிகளும் திமிர் அல்ல.
சில மௌனங்கள்/அமைதிகள், சொல்ல முடியாத காயங்கள்/காயங்களின் வலிகள்.
இந்தியாவிலேயே பாதுகாப்பான கார் எது..? Global NCAP என்பது என்ன..?
இந்திய மக்கள் அதிக பணத்தை முதலீடு செய்து வாங்கும் முக்கியமான விஷயங்களில் வீட்டை தொடர்ந்து 2வதாக இருப்பது கார். இன்றைய வாழ்க்கை முறையில் கார் தேவை என்பதை தாண்டி அவசியமாக மாற்றியுள்ளது, அதிலும் குறிப்பாக கொரோனாவுக்கு பின் கார்களின் தேவை மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளதாகவே தரவுகள் கூறுகிறது. கார் என்பது ஒரு வாகனம், ஒரு பொருள் என்பதை தாண்டி மிகப்பெரிய நிதியியல் முதலீடாக பார்க்கப்படுகிறது. ஒரு காரை நீங்கள் வாங்க வேண்டும் என்றால், டிசைன், பிராண்ட் போன்றவற்றை தாண்டி நிதியியல் ரீதியாகவும் பார்க்க வேண்டியவை உள்ளது.
Source : Good Returns
நீங்கள் "பேசியே! கொல்வீர்கள்" என்று நான் நினைக்கவே இல்லை
கைபேசியான என்மீது குற்றம் சொல்லிக்கொண்டிருப்பதை விட்டுவிட்டு நீங்கள்
குற்றம் செய்யாமல்
இருக்க கற்றுக்கொள்ளுங்கள்.
நீங்கள் "பேசிக்கொள்வீர்கள்"
என்று தான் நான் நினைத்தேன்!
நீங்கள் "பேசியே! கொல்வீர்கள்" என்று நான் நினைக்கவே இல்லை.
"பொழுதுபோக்காக" என்னில் சில இருப்பது உண்மைதான்.
ஆனால் நீங்கள் அதில்
"பொழுதையே! போக்கினால்"
அதற்கு நான் பொறுப்பல்ல.
கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்று பேசுவீர்கள். அதெல்லாம்
வெறும் வாய் சொல்தானா?
குடும்பத்தோடு "பாசப்படங்கள்"
எடுத்து மகிழ்ச்சியடைய சொன்னால் குமரிகளின் "ஆபாசப்படங்களை" பார்த்து மகிழ்ந்தால் உங்களுடைய
ஆறாவது அறிவு எங்கே ? எதற்கு ?
பிள்ளைகள் விளையாட்டு விளையாடுவதால் படிப்பு கெட்டுப்போகிறது என்று குற்றங்களை என் மீது கொட்டுபவர்களே அன்று குழந்தை பருவத்தில் நிலாவைக்காட்டி
மலர்களைக்காட்டி பாடிக்காட்டி ஆடிக்காட்டி பாலும் சோறும்
ஊட்டினார்கள்.
நீங்களோ உங்களுடைய
சோம்பேறித்தனத்தால் "என்னை காட்டி சோறும் பாலும் ஊட்டி
கெட்ட பழக்க வழக்கங்களை
கற்று கொடுக்கின்றீர்கள்.
"தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை" என்பது உங்களுக்கு தெரியாதா என்ன ?
என்னுடைய நன்மைகளை நான் சொல்கிறேன் கொஞ்சம் கேளுங்கள்.
என்னில் கடிகாரம் இருக்கும்
கட்டவேண்டியதில்லை.
காலண்டர் இருக்கும்
கிழிக்க வேண்டியில்லை.
கேமரா இருக்கும் ஃபிலிம் போட
வேண்டியில்லை.
மின் விளக்கு இருக்கும் மின்சாரக்கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.
பாட்டு கேட்கலாம்
கேசட் போட வேண்டியில்லை.
கால்குலேட்டர் பயன்படுத்தலாம்
சக்தி தேவையில்லை.
வழி காட்டுவேன். யாரிடமும் கேட்க
வேண்டியதில்லை.
பணம் அனுப்புவேன் கூலி கொடுக்க
வேண்டியதில்லை.
தகவல்களை அனுப்பி வைப்பேன்
தேடிச்செல்ல வேண்டியதில்லை.
அவசரத்துக்கு மட்டுமல்ல அன்றாடம் உதவிகளையும் செய்வேன்
ஆனால் உங்களிடம் நன்றியகை்கூட
நான் எதிர்பார்ப்பதில்லை.
"சொல்லும் நேரத்திற்கு
எழுப்பி விடுவேன்"
என்றுமே தவறியதில்லை.
நினைவுப்படுத்த சொன்னதை
"நினைவுபடுத்துவேன்"
என்றுமே மறந்ததில்லை.
உங்களுக்கு ஒன்று தெரியுமா ?
காவலர்களுக்குப் பயப்படாத
அரசியல்வாதிகளும்சமூக விரோதிகளும் அதிகாரிகளும் கூட
என்னில் இருக்கும் சமூக ஊடங்களுக்கு பயப்படுவார்கள்
தெரிந்து கொள்ளுங்கள்.
"பகுதி நேர வேலை" வாய்ப்பைக்கூட
ஏற்படுத்திக்கொடுத்திருக்கிறேன்
கொஞ்சம் பார்த்து பேசுங்கள்.
எதில் இல்லை தீமை?
மின்சாரத்தை தவறாகத்தீண்டினால்
மரணத்தை ஏற்படுத்தவில்லையா?
நெருப்பை தவறாக பயன்படுத்தினால் எதுவானாலும் எரித்து சாம்பலாக்கவில்லையா?
வெள்ளமாக வரும் தண்ணீர்
ஊரையே அடித்துச்செல்ல வில்லையா?
பொறுமைக்கு உவமையாக சொல்லும் பூமியே!
நிலநடுக்கத்தால்
புதைக்குழியாகவில்லையா?
அளவுக்கு மீறி உண்டால் உணவே
ஆளைக்கொல்லவில்லையா?
"ஆறறிவு" படைத்தான் என்று மார்பு தட்டிக் கொள்ளும் நீ "ஓறறிவு" கூட இல்லாத நான் குற்றம் செய்வதாக
சொல்கிறாய். உன்னை நினைத்து
அழுவதா சிரிப்பதா என்றே
தெரியவில்லை.
வாகனம் ஒரு மனிதனின் மீது
மோதிவிட்டால் வாகனத்தைத்தானே
கைது செய்ய வேண்டும் ?
ஏன் வாகனத்தை இயக்கிய
ஓட்டுநரை கைது செய்கின்றீர்கள் ?
அப்படி என்றால்
நான் குற்றவாளியா?
என்னை இயக்கும்
நீங்கள் குற்றவாளியா.
மணத்தக்காளி கீரை கூட்டு - அல்சருக்கான அருமருந்து
மணத்தக்காளிக்கீரை கூட்டு:
தேவையான பொருட்கள்:
மணத்தக்காளிக் கீரை – 1கட்டு
துவரம் பருப்பு :- ஒரு கைப்பிடி
மஞ்சள் பொடி – கால் டீஸ்பூன்
சர்க்கரை – ஒரு சிட்டிகை
கட்டிப் பெருங்காயம் – ஒரு சிறிய அளவு
கல் உப்பு - தேவைக்கு ஏற்ப
அரைக்க வேண்டிய பொருட்கள்:
துருவிய தேங்காய் – ஒரு குழிக்கரண்டி அளவு
பச்சை மிளகாய் – 2 நம்பர்
ஜீரகம் – ஒரு டீஸ்பூன்
அரிசி மாவு – ஒரு டீஸ்பூன்
தாளிக்க வேண்டிய பொருட்கள்:
கடுகு – ஒரு டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – ஒரு டீஸ்பூன்
வற்றல் மிளகாய் – ஒரு நம்பர்
கடலெண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன்
செய்முறை:
முதலில் கீரையை மட்டும் ஆய்ந்துக்கொள்ளவும். தண்டு உபயோகப்படாது. பிறகு கீரையை நன்கு அலசவும். அதன் பிறகு பத்து நிமிடம் வடிதட்டில் வடிய விடவும். அடுத்து கீரையப் பொடியாக நறுக்கவும்.
துவரம் பருப்பை குக்கரில் அல்லது தனியாகவோ மஞ்சள் பொடிப் போட்டு வேகவிடவும்.
ஒரு கடாயில் சிறிது அளவு தண்ணீர் ஊற்றவும். அது கொதிக்க ஆரம்பித்தவுடன் மஞ்சள் பொடி, உப்பு, சக்கரை, கட்டிப் பெருங்காயம் போடவும். பிறகு கீரையைச் சேர்க்கவும்.
அரைக்க வேண்டிய தேங்காய், பச்சை மிளகாய், ஜீரகம் மூன்றையும் ஒன்றாகப் போட்டு அரைக்கவும். நன்கு மசிந்தவுடன், அரிசிமாவு சேர்த்து ஒரு சுத்து சுத்தவும்.
கீரை வெந்தவுடன், வெந்த துவரம் பருப்பைச் சேர்க்கவும். அடுத்து தேங்காய் கலவையைச் சேர்க்கவும்.
கடைசியில் தாளித்துக் கொட்டவும்.
அருமையான மணத்தக்காளிக் கீரைக் கூட்டு ரெடி.
முக்கியக் குறிப்பு:
இக்கீரை நல்ல மருத்துவ குணம் உடையது. குறிப்பாக குடல்புண் என்கின்ற அல்சருக்கு அருமருந்து.
கீரையை நறுக்கியவுடன் சமைத்து விடணும். நேரம் கழித்து சமைத்தால் அதிக கசப்புத் தன்மைத் தெரியும்.
இக்கீரை மருத்துவ குணம் நிறைந்ததால் வெங்காயம், பூண்டு போடக்கூடாது. இவை இரண்டிற்கும் அமில, காரத் தன்மை இருப்பதால் குறிப்பாக அல்சர் உள்ளவர்களுக்கு தேவை இல்லை. அல்சர் உள்ளவர்கள் பச்சை மிளகாய்க்குப் பதில் சாம்பார் பொடி ஒரு ஸ்பூன் கீரை வேகும் போதே சேர்க்கலாம்.
அல்சர், நெஞ்சுஎரிச்சல், அசிடிட்டி, வயிற்று வேக்காளம் (காதில் உள் பக்கம் அரிக்கும்) உள்ளவர்கள் வாரத்தில் மூன்று நாட்கள் செய்து சாப்பிடலாம். நாளைடைவில் அல்சரின் தாக்கம் குறையும். ஆரோக்கியமாக வாழலாம்.
காலை எழுந்து பல் தேய்த்தவடன், வெறும் வயிற்றில் கீரைக் கூட்டை ஒரு சிறிய கப்பில் எடுத்துக்கொண்டு பொறுமையாகச் சாப்பிடவும். அரை மணி நேரம் கழித்து காபி அல்லது டீ குடிக்கலாம்.
இக்கீரை அதிக குளிர்ச்சி உடையது. அதனால் பாசிப்பருப்பும் குளிர்ச்சியாக இருப்பதால் சேர்க்க வேண்டாம். துவரம் பருப்பே போதுமானது.
பொதுவாக அல்சர் உள்ளவர்கள் காபி/டீ குடிக்காமல் தவிர்த்தால் நல்லது.
தினம் ஒரு மூலிகை - கட்டுக்கொடி
*
Wednesday, February 28, 2024
எண்ண அலைகளுக்கும் ஆற்றல் உண்டு
எண்ண அலைகளுக்கும் ஆற்றல் உண்டு. எண்ணங்கள் அலைகளாக மாறி நம் உடலிருந்து வெளியேறி நம்மை சுற்றியுள்ள காற்று மண்டலத்தில் கலந்து அப்படியே எங்கும் பரவி விடுகின்றது.*_
யாரைப்பற்றி நினைத்தோமோ, சிந்தித்தோமோ, திட்டினோமோ, மகிழ்வுற்றோமோ அனைத்தும் அந்தந்த நபரின் ஆன்ம உடலைச்சுற்றி பரவிக்கிடக்கின்றது._
அந்த ஆன்ம உடல் சமநிலையடையும்போது அது தன்னைச்சுற்றியுள்ள அலைகளை கிரகித்து அந்தந்த அதிர்வுகளுக்கு ஏற்ப தாக்கம் கொள்கின்றது. உணர்வு பூர்வமாக இதை உணரமுடியும்.*_
மன்னன் ஒருவன் வீதியுலா வரும்போது மக்கள் அனைவரும் வணங்கினர். சந்தன வியாபாரி ஒருவனும் வணங்கினான். அவனிடம் நிறைய சந்தனமரங்கள் விற்பனையின்றி இருந்தன. அந்த வருத்தத்தில் யாராவது பெரியமனிதர்கள் இறந்தால்கூட எரிப்பதற்கு சந்தன மரங்கள் வாங்குவர் என வருந்திக்கொண்டே வணங்கினான். அதன் தாக்கம் அவன் வணங்கியபோது மன்னருக்கு என்னவோ போலிருந்தது. அவனைப் பார்த்து எரிச்சலடைந்தார்._
ஓரு நீதிமான் காரனமின்றி கோபம், எரிச்சல் கொள்ளக்கூடது என்ற நினைவிலிருந்து, இது பற்றி அமைச்சரிடம் கூறினார். உண்மைகளை விசாரித்து அறிந்த அமைச்சர் வியாபாரியிடமிருந்த சந்தனமரங்களை அரசரின் பிறந்த நாள்விழா யாகத்திற்கு என வாங்கினார்.*_
மகிழ்வுற்ற வியாபாரி அடுத்தநாள் அரண்மனைக்கு சென்று, அரசரின் ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் சந்தனமரங்கள் விற்பனையாகவேண்டும் என்ற நினைப்பில், அரசர் பல்லாண்டு வாழ்க! என வணங்கினான்._
அன்று அவனைப் பார்த்ததும் அரசருக்கு எரிச்சலுமில்லை, கோபமும் வரவில்லை. இனிய புன்முறுவல் கொண்டார். இது பற்றி அமைச்சரைக் கேட்டபோது அவர் நடந்ததைக் கூறினார்.”*_
எனவே நம்மைப்பற்றிய பிறரது நல்ல எண்ணங்கள் நமக்குள் மகிழ்ச்சியும் தீய எண்ணங்கள் வருத்தத்தையும் ஏற்படுத்தும்._
அந்தளவிற்கு எண்ணங்களின் அலைகள் நம் மனதை பாதிக்கின்றன. மற்றவர்களையும் பாதிக்கும். சொற்களில், செயல்களில் வன்முறையுடன் வாழ்பவர்கள் தாங்கள் சைவம் என்று சொன்னால்கூட பின்னாளில் அவர்கள் கூறிய சொற்களை அவர்களே உண்ண வேண்டி இருப்பதால் அவர்களும் அசைவம்தான்.*_
சைவம் அசைவம் என உணவில் இல்லை. சிகப்பு நிறம் கொண்ட இரத்தம் ஓடும் உயிரினங்கள் மற்ற உயிர்களைப் பிடித்து தின்ன ஆர்வம் காட்டுகின்றன. அது வக்ர எண்ணங்களை அதிகம் தூண்டுகிறது._
மான், குரங்கு, முயல் போன்றவைகள் சிகப்பு ரத்த ஓட்டத்துடனிருந்தாலும் அவை சைவ உணவுகளை அதாவது சிகப்பு இரத்தம் இல்லா பொருட்களை உணவாக கொள்கிறது.*_
ஆனால் மரம், செடி, கொடிகளுக்கும் இரத்த ஓட்டம் கொண்டுதான் அவைகள் உயிர்வாழ்கின்றன. ஆனால் அந்த இரத்தம் வெண்ணிறமுடையது._
பொதுவாக இரத்த ஓட்டங்கள் வெள்ளை அல்லது சிகப்பு நிறம் கொண்டுள்ளது, அவ்வளவுதான். உயிர் உள்ள இரத்தம் ஓடும் மரம், செடி, கொடிகளின் பொருட்களை சைவம் எனக்கூறினாலும் அதுவும் அசைவம்தான். அவை உயிர் உள்ளவற்றின் அங்கங்கள்.*_
அந்த பொருட்களும் வக்ர எண்ணங்களைத் தூண்டுபவையே!_
அதனால் மனிதன் உண்ணும் உணவில் ஏதுமில்லை. அவன் எண்ணும் எண்ணங்கள், அது நடைபெற முயற்சிக்கும் வழிமுறைகள்தான் வக்கிரமானவையாக இருக்கின்றது.*_
அதனால் நல்ல வக்ரமில்லாத எண்ணங்களுக்காக மனதை பக்குவப்படுத்திக் கொள்ளல் வேண்டும்._
அதற்காக மனதை காலியாக வைக்க வேண்டும். தீய எண்ணமின்றி நல்லெண்ணங்களை நிரம்பி வழியச்செய்வோம். நல்லவண்ணம் வாழ உன்னை உன்னுள் தேடு.
பணம் வந்து விட்டால் பத்து கெட்ட குணங்கள் வந்து விடும்
பணம் வந்து விட்டால் பத்து கெட்ட குணங்கள் வந்து விடும்...
இதைத்தான் "பணம் பத்தும் செய்யும்" என்று சொல்லி வைத்தார்கள்...
அதாவது :
1. பேராசை.
.
2. தீய இச்சை.
.
3. கஞ்சத்தனம்.
.
4. காதல்.
.
5. அகம்பாவம். (ஈகோ)
.
6. பொறாமை.
.
7. ஆடம்பரம்.
.
8. "தனக்கு நிகர் எவரும் இல்லை" என்ற அகங்காரம்.
.
9. கர்வம்.
.
10. கெடுமனம் அதாவது "தனக்கு நேர்ந்த துன்பம் பிறருக்கும் ஏற்பட வேண்டும்" என்ற கொடிய புத்தி.
*
போன்ற பத்து தீய குணங்களும் வந்து சேர்ந்து விடுமாம்.
*
பணம் ஒருவனைச் சும்மா இருக்க விடாது என்பதற்காக சொல்லப்பட்டது தான் "பணம் பத்தும் செய்யும்" என்ற இந்தப் பழமொழி.....
எல்லா மௌனங்களும்/அமைதிகளும் திமிர் அல்ல.
சில மௌனங்கள்/அமைதிகள், சொல்ல முடியாத காயங்கள்/காயங்களின் வலிகள்.
பல நல்ல நல்ல பதிவுகளை காண தொடர்ந்து இணைந்திருங்கள்! உங்கள் நண்பர்களுக்கும் இதனை பகிர்ந்து அவர்களும் பயனடைய நீங்களும் உதவலாமே 👇🏻👇🏻👇🏻
வலி
வலிகளை ஏற்றுக் கொள்ளாத வரையில் வாழ்க்கையில் வளங்களைக் காண முடியாது. பெரும்பாலான வெற்றியாளர்களின் சாதனைகளை உரம் போட்டு வளர்ப்பதே அவர்களின் பெருந் தோல்விகளும், பொறுக்க முடியாத வலிகளும் தான்...
வலி வந்த போது தான் நாம் இந்த பூமிக்கு வருகிறோம். வலியோடு தான் நம் தாய் நம்மைப் பிரசவிக்கிறாள். வலிகளால் நிரப்பப்பட்டது தான் இந்த வாழ்க்கை...
உடற்பயிற்சி செய்யும் போது ஏற்படும் வலிகளைப் பொறுத்துக் கொண்டு மீண்டும் மீண்டும் பயிற்சி செய்யும் போது தான் அழகான உடற் கட்டைப் பெற முடிகிறது...
இப்படித் தான் இந்த வாழ்க்கையிலும் வலிகளை ஏற்றுக் கொள்ளும் போது தான் வளமான வாழ்க்கை வாழ முடியும்..
'வலியை அனுபவியுங்கள்'; அதை பரிபூரணமாக உணருங்கள், ஒரு கட்டத்திற்குப் பின், அந்த வலியிலிருந்து நீங்கள் விலகி நின்று கவனிக்க ஆரம்பித்து விடுவீர்கள்...
'வலி குறைந்த பின், அதற்கான தீர்வு எளிதாகி விடும்', வலி என்பது ஒரு துன்பம். அந்த துன்பம் ஓர் எச்சரிக்கை; அது ஒரு வழி காட்டியும் கூட...!
வலி நம்மை நம் சூழ்நிலைகளுக்கு ஏற்ப வாழத் தூண்டி, அதன் மூலம் சுய மேம்பாட்டிற்கு வழி காட்டும்...
நமக்கு ஏற்படும் அனைத்து வலிகளையும், நமக்கான மாற்றத்திற்கானதாக மாற்றிக் கொள்ளும் சூத்திரம் தெரிந்தால் போதும்; அது உடல் வலியானாலும், மன வலியானாலும் நம்மை ஒன்றும் செய்து விட முடியாது...
வலிகளை வெற்றிகளாக்கும் நுட்பங்களைக் கற்றுக் கொள்வோம். ஒவ்வொரு வலியிலிருந்தும் எதையாவது கற்றுக் கொள்வோம்...
அனைத்து வலிகளும் நம்மைப் பக்குவப் படுத்தவே என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்...!
நாம் குறிக்கோளை எட்டிட வேண்டுமானால் சிறிய வலிகளைப் பொறுத்துத் தான் ஆக வேண்டும்...!!
வலிகளையும், இடையுறுகளையும் தாண்டிச் செல்பவர்களே வாழ்க்கையில் வெற்றி பெறுகின்றார்கள்...!!!
🏝⛱🏝⛱🏝⛱🏝⛱
இன்பம் மற்றும் துன்பம்
நாம் நமது வாழ்கையில் பல இன்பம் மற்றும் துன்பங்களை எதிர்கொள்கிறோம். ஆனால் நம்மில் பலர் தான் அனுபவித்த துன்பங்களை மட்டுமே நினைத்து வருந்திக்கொண்டே இருக்கிறார்கள். நாம் ஒரு செயலை தேர்வு செய்யும் போதே அதில் இன்பம் மற்றும் துன்பம் இரண்டுமே கலந்து தான் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளாததே வருத்தத்திற்கு காரணமாக அமைகிறது.
இன்பம் வரும் போது சந்தோசமாக ஏற்றுக்கொள்ளும் நாம் துன்பத்தை மட்டும் ஏற்றுக்கொள்ள மறுப்பது ஏன். நம்மில் வரும் இன்பம் மற்றும் துன்பம் இரண்டிற்குமே காரணம் நமது மனநிலை தான். நாம் எதிர்கொள்ளும் எந்த ஒரு விசயத்தையும் எத்தகைய மனநிலையில் இருந்து அணுகுகிறோம் என்பதை பொருத்தே இன்பமோ அல்லது துன்பமோ நம்மை நெருங்குகிறது.
நாம் எதிர்கொள்ளும் துன்பத்திற்கு காரணம் நாம் மட்டுமே. நாம் மேற்கொள்ளும் செயலில் முழுகவனத்தை செலுத்தும் போது அச்செயலில் தவறுகள் ஏற்பட வாய்ப்பு குறைவு, மற்றும் வரும் தவறுகளையும் உடனே கண்டறிந்து அதனை சரிசெய்தும் கொள்ள முடியும். நாம் மேற்கொள்ளும் செயல்களில் கவனம் சிதறுவதாலேயே நமது வாழ்கையில் பல தருணங்களை நாம் சிதறடித்துக்கொண்டு இருக்கிறோம்.
மனிதன் ஒருவனுக்கு மட்டும் தன்னை உருவாக்கி கொள்ளவும், தன்னை தானே அளித்துக்கொள்வதற்குமான சக்தி அவனிடத்திலேயே இந்த பிரபஞ்ச பேராற்றல் வழங்கியுள்ளது. காரணம் நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நோக்கத்திற்க்காக இப்பிரபஞ்சத்தில் பிறப்பெடுத்திருக்கிறோம். யாரொருவர் அதனை சரியாக புரிந்துகொண்டு தன்னை தானே சரியாக வழி நடத்திக் கொள்கிறார்களோ அவர்கள் அவர்களுடைய வாழ்கையின் நோக்கத்தை பூர்த்தி செய்கிறார்கள்.
நமது வாழ்கையில் நாம் எதிர்கொள்ளும் ஒவ்வொரு சவால்களும் நம்மை அடுத்த நிலைக்கு கொண்டு செல்லவே வருகின்றன என்கிற புரிதல் மிக அவசியம். நாம் எதிர்கொள்ளும் சவால்களை யாரொருவர் பிரச்சனைகளாக பார்க்கிறார்களோ அவர்களால் தொடர்ந்து முன்னேற முடியாது. மேலும் அவர்கள் தனக்கான வாழ்கை பாதையில் இருந்து விலகி நிச்சயம் மாற்று பாதையில் செல்ல எத்தணிக்கும் போது மேலும் பல பிரச்சனைகளை சந்தித்தே தீர வேண்டும், இது உலக நீதி.
நாம் நமது வாழ்கையில் இல்லாததை எண்ணியே பல சமயங்களில் வருந்திக்கொண்டு இருக்கிறோம். இதனால் எதிர்மறையான எண்ணகளுடைய ஆதிக்கமே நம்மில் அதிகமாக இருக்கும். அப்போது நமது செயல்கள் மற்றும் உணர்ச்சிகளிலும் எதிர்மறையான தாக்கங்களே அதிக அளவில் வெளிப்படும். இது நம்மை பாதிப்பதோடு மட்டும் அல்லாது நம்மை சார்ந்தவர்களையும் பாதிக்கிறது.
நம்மிடம் இல்லாததை எண்ணி வருந்துவதை காட்டிலும் நம்மிடம் இருப்பவைகளுக்குக்காக பிரபஞ்ச சக்திக்கு மனதார நன்றி செலுத்த கற்றுக்கொள்ளுங்கள். பிரபஞ்சசக்தி தேவையானவற்றை தேவையான தருணங்களில் நம்மிடம் கொண்டு வந்து சேர்க்கும்.
நாம் ஒரு செயலை மேற்கொண்டு இருக்கும் போது நம்மை திசை திருப்ப பல கவனச்சிதறல்கள் நம்மில் உண்டாவது இயற்கையே. இதில் தான் நாம் திசைமாறி விடுகிறோம். இதில் எப்போதும் விழிப்புணர்வுடன் செயல்படுவது அவசியம்.
நாம் வாழும் வாழ்கையை சொர்க்கமாக மாற்றிக்கொள்ள சில வழிமுறைகள்...
உங்களது மனதை நிகழ்காலத்தில் சிந்திக்க பழக்கப்படுத்துங்கள். தேவையற்ற சிந்தனைகளிலிருந்து விடுபட முடியும்.
உங்களுக்கான சுயஒழுக்க விதிமுறைகளை பின்பற்ற தொடங்குங்கள். உங்களுக்கான வெற்றிப்பாதை எது என்பது தெரியும்.
எச்சூழலிலும் உங்களை பற்றி நீங்களே தாழ்வாக எண்ணாதீர்கள்.
காலை நேரத்தை உங்களில் முதலீடு செய்ய கற்றுக்கொள்ளுங்கள். உங்களின் சுயமுன்னேற்றத்திற்க்காக செலவிடுங்கள்.
எப்போதும் ஏதாவது ஒரு செயலில் உங்களை ஈடுபடுத்திக்கொண்டே இருங்கள்.
எந்த ஒரு செயலை செய்யவும் நேரத்தை நிர்ணயம் செய்து கொள்ளுங்கள். அந்த நேரத்திற்குள் அந்த செயலை செய்து முடிக்கும்போது மனது உற்சாகமடையும்.
எந்த ஒரு செயலிலும் முழுகவனத்தை செலுத்தி செய்ய பழகிகொள்ளுங்கள். இறுதிவிளைவை பற்றி சிந்தித்து செயலை செய்யும் போது செயலில் கவனம் குறைந்து விடும் .
எந்த ஒரு செயலை செய்து முடித்த பின்பும் உங்களை நீங்களே ஊக்குவித்துக்கொள்ள மறவாதீர்கள்.
மற்றவர்களின் புகழ்ச்சி மற்றும் இகழ்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காதீர்கள் . அது உங்களை பலவீனப்படுத்தக்கூடும்.
உங்களால் இயன்ற உதவிகளை மற்றவர்களுக்கு செய்யுங்கள். முக்கியமான தருணங்களில் அதனுடைய பலன்களை நீங்கள் அனுபவிப்பீர்கள்.
பல நல்ல நல்ல பதிவுகளை காண தொடர்ந்து இணைந்திருங்கள்! உங்கள் நண்பர்களுக்கும் இதனை பகிர்ந்து அவர்களும் பயனடைய நீங்களும் உதவலாமே 👇🏻👇🏻👇🏻
Monday, February 26, 2024
ஓமவல்லி - வியர்வை சளியை அடித்து விரட்டும் அருமருந்து!

நியூட்ரினோவிற்கு ‘'பிசாசு துகள்'’ என அறிவியல் உலகம் பெயரிட்டுள்ளது.
ரத்தன் டாடா சொன்ன வரிகள்


இன்றைக்கு வேண்டுமானால் எதிரியின் கை ஓங்கி இருக்கலாம். நம் துக்கத்தின் அளவு உயர்ந்து இருக்கலாம். அது நிரந்தரமான ஓங்குதல் இல்லை. அது வலிமையான துக்கமில்லை. துக்கத்தின் சுவடு நிச்சயமாகக் கரையும்.


இங்கு யாருக்குத்தான் பிரச்சினையில்லை? எறும்பிலிருந்து யானை வரைக்கும் அத்தனை உயிரினங்களுக்கும் பிரச்சினைகள்தான்.













Sunday, February 25, 2024
கோபுரம் தாங்கி - தினம் ஒரு மூலிகை
Saturday, February 24, 2024
அப்படி இந்த ‘நாலு’ க்கு என்னதாங்க ஸ்பெஷல்....???? Power of 4 (Four)
01. ‘நாலு’ பேரு ‘நாலு’ விதமா பேசுவாங்க.
02. ‘நாலு’ பேருக்கு நல்லது நடக்கும்னா எதுவும் தப்பில்ல.
03. ‘நாலு’ காசு சம்பாதிக்கவாது படிக்கணும்ல....????
04. ‘நாலு’ ஊரு சுற்றினாதான் உலகம் புரியும்.
05. அவரு ‘நாலு’ம் தெரிஞ்சவரு., ‘நாலு’ம் புரிஞ்சவரு.
06. ‘நாலு’ வார்த்த நறுக்குன்னு நல்லா கேக்கணும்.
ஏன் இந்த ‘நாலு’ மட்டும் இவ்ளோ ஸ்பெஷல்....
சங்க இலக்கியத்தில் பதினெண்கீழ்கணக்கு நூல்களில்., பெயருடன் நான்கு சேர்ந்து வரும். சில நாலு., நாற்பது மற்றும் எட்டுத்தொகையில் நானூறு., பிரபந்தத்தில் நாலாயிரம் என ‘நான்கு’ வரும்.
நாலடியார்., நான்மணிக்கடிகை.,இன்னா நாற்பது., இனியவை நாற்பது
அக நானூறு., புற நானூறு., நாலாயிர திவ்ய பிரபந்தம்....
“பாலும்., தெளிதேனும்., பாகும்., பருப்பும் இவை ‘நாலு’ம் கலந்து உனக்கு நான் தருவேன்”
ஔவையாரின் ‘நால்’வழி நீதி நூலில் கடவுள் வாழ்த்து பாடல்.
நாலும்., இரண்டும் சொல்லுக்குறுதி... இதில் ‘நாலு’ என்பது.. நாலடியார்....
“காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார் தமை நன்நெறிக்கு உய்ப்பது
‘வேதம் நான்கினும்’ மெய்ப்பொருளாவது
நாதன் நாமம் நமச்சிவாயவே”
‘நான்மறை’.... என்பது வேதங்கள் ‘நான்கு’.
சைவ நெறியைப் பரப்பிய நாயன்மார்களில் முதன்மையானவர்கள் ‘நான்கு’ பேர்.
அப்பர்., சம்பந்தர்., சுந்தரர்., மாணிக்க வாசகர். இவர்களை நால்வர் என அழைக்கிறோம்.
மஹாவிஷ்ணுவின் பத்து (ஒன்பதில்) அவதாரங்களில் ‘நான்கு’ அவதாரங்களுக்கு மட்டுமே மனிதனாக (கர்பவாசத்தில்) எடுத்ததாகும்.
வேதங்களை நான்காகப் பகுத்த வேத வியாசர்., அவற்றை ‘நாலு’ ரிஷிக்களிடம் பரப்பும் பொறுப்பை ஒப்படைத்தார். அவர்கள்
ருக் ═ பைலர்., யஜூர் ═ ஜைமினி., சாம ═ வைசம்பாயன., அதர்வண ═ சுமந்து.
தசரதனுக்கு ‘நான்கு’ பிள்ளைகள்.
‘நான்கு’ புருஷார்த்தங்கள்....
அவை தர்ம., அர்த்த., காம., மோட்சம்.
மனிதன் பிறப்பு முதல் இறப்பு வரை
கடக்க வேண்டிய நிலைகளும் ‘நான்கு’
அவை ~ பிரம்மசர்யம்., கிருஹஸ்தாச்ரமம்., வானப்ரஸ்தம்., சந்யாசம்.
பிரம்மாவின் மானஸ புத்திரர்கள் ‘நான்கு’ பேர். சநகர்., சநாதனர்., சநந்தனர்., சனத் குமாரர்.
பிரம்மாவுக்கு ‘நான்கு’ தலைகள். சதுர்முகன் என்ற பெயர் பிரம்மாவுக்கு உண்டு.
ஆதிசங்கரர் பாரத நாட்டின் ‘நான்கு’ திசைகளிலும்/மூலைகளிலும் ‘நான்கு’ மடங்கள் நிறுவி., ‘நான்கு’ சீடர்களை நியமித்தார்.
அக்னிக்கு கம்பீரா., யமலா., மஹதி., பஞ்சமி என ‘நான்கு’ வடிவங்கள்.
திசைகள் ‘நான்கு.’
ஹரித்வார்., அலஹாபாத் (பிரயாகை, த்ரிவேணி சங்கமம்)., நாசிக்., உஜ்ஜையினி என ‘நான்கு’ இடங்களில் கும்ப மேளா நடைபெறும்.
ரத., கஜ., துரக., பதாதி (தேர்., யானை., குதிரை., காலாட் படைகள்.... என ‘நால்’ வகைப் படைகள்.
அஹம் பிரம்மாஸ்மி., தத்வம் அஸி., பிரக்ஞானம் பிரம்ம., அயமாத்ம ப்ரம்ம.... உபநிஷத்தில் கூறப்படும் ‘நாலு’ மஹா வாக்யங்கள்.
வெல்ல முடியாத ‘நாலு’
“நித்ரா., ஸ்வப்ன., ஸ்த்ரீ., காமஅக்னி இந்தன கரா பாண”
கனவு காண்பது தூக்கத்தை நிறைவு செய்யாது.,
பெண்களுக்கு ஆசை நிறைவு செய்யாது.,
தீயை விறகு நிறைவு செய்யாது.,
குடிகாரனை குடி நிறைவு செய்யாது.
“ந ஸ்வப்னேன ஜயேத் நித்ராம் ந காமேன ஜயேத்ஸ்திரியஹ
ந இந்தனேன ஜயேதக்னீம் ந பானேன கராம் ஜயேத்.” விதுர நீதி
இதையே ஹிதோபதேசம்
“அக்னியை விறகு அணைக்காது.,
சமுத்திரத்தை ஆறுகள் நிறைக்காது.,
யமனை எல்லா உயிர்களும் சேர்ந்தாலும் வெல்ல முடியாது.,
அழகிகளை ஆண்கள் த்ருப்தி செய்ய முடியாது” என சொல்கிறது
யுகங்களும்.... கிரதம்., திரேதம்., துவாபரம்., கலி என ‘நான்கு’
அச்சம்., மடம்., நாணம்., பயிர்ப்பு... பெண்டிரின் ‘நால்’ வகை குணங்கள்
சிவராத்ரியில் ‘நாலு’ கால பூஜை நடக்கும்.
‘நான்கு’ வேதங்களும் கற்றவர்களை சதுர்வேதி என்பார்கள்.
‘நான்கு’ என்ற எண் சிறப்புக்கள் கொண்டிருந்தாலும்.,
‘நாலு’ பேரை போல வாழ்வில் நல்லா இருக்கனும்....
“செத்தாலும்.,
நல்லதுக்கும்.,
கெட்டதுக்கும்., ‘நான்கு’ பேர் வேண்டும்”
என்ற கருத்தாக்கத்தையும் கொண்டுள்ளது.
*ஒரு ‘நாலு’ பேருக்குக்கு தெரியட்டும் என்று.
, ‘நாலு’ பத்தி எழுதினதை.,
ஒரு ‘நாலு’ பேராவது படிச்சா சரி....*
நம்மால் முடிந்தது ஒரு
நாலு பேருக்கு அனுப்பிவைப்போம்.
🪷🪷🪷🌹👍🌹🪷🪷🪷
2000 ஆண்டுகளுக்கு முன்னர் உலகில்
2000 ஆண்டுகளுக்கு முன்னர் உலகில் ஆறே ஆறு சமுதாய மக்களே முக்கியமானவர்கள்.
1. *தமிழர்கள்*
2. *சீனர்கள்.*
3. *ஆரியர்கள்.*
4. *அரபியர்கள்.*
5. *ரோமர்கள்.*
6. *கிரேக்கர்கள்.*
கிரேக்கர்கள் தங்களை கிரேக்கர்கள் அழைத்துக் கொண்டதோடு மற்றவர்களை பிசாசுகள் என அழைத்தனர்.
ரோமர்கள் தங்களை ஆளப்பிறந்தவர்கள் எனவும் மற்றவர்கள் வாழத்தகுதியற்றவர்கள் எனக் கருதினர்.
அரபியர்கள் தங்களைப் பேசத்தெரிந்தவர்கள் எனவும் மற்ற மக்களை அஜமிகள் அதாவது ஊமையர்கள் எனவும் கூறினர்.
ஆரியர்கள் தங்களை உயர்ந்தவர்களாகவும் கடவுளுக்கு நிகரானவர்கள் என்றும் மற்றவர்களை மிலேச்சர்களாக அதாவது கீழானவர்களாகவும் கருதினர்.
சீனர்கள் தங்களை முதலாளிகளாகவும் மற்றவர்களை அடிமைகளாகவும் நடத்தினர்.
தமிழர்கள் மட்டும் '
*யாதும் ஊரே யாவரும் கேளீர்* என்றனர்.
ஏனென்றால் தமிழர்கள் மட்டும்தான் இந்த உலகில் இருக்கும் அனைத்து உயிர்களையும் நேசிக்க தெரிந்தவர்கள்.
*இதுவே தமிழர் பண்பாடு*
நாக்கோட்டான் பழம் (அ) நரி விழாம்பழம் - தினம் ஒரு மூலிகை
நிலவாகை (அ) நிலாவரை - தினம் ஒரு மூலிகை
*
மனோரஞ்சிதம் செடி - தினம் ஒரு மூலிகை
*
மாசி மகம் என்றால் என்ன
மாசி மகம்* என்றால் என்ன..... *மகாமகம்* என்றால் என்ன..... வேறுபாடு தெரிந்து கொள்வோமா......
மாசி மகமும், மகா மகமும்
பொதுவாகவே சூரியன் கும்ப ராசியில் இருக்கக்கூடிய மாசிமாதம் முழுக்கவே புனித நீராடலுக்கு மிக உயர்ந்த மாதம் என்று சொல்லப் பட்டாலும், மாசி மாதத்தில் வருகின்ற பௌர்ணமி தினம் மகம் நட்சத்திரத்தில் வருவதால், பௌர்ணமி நீராடல் என்பது மிக மிகத் தூய்மையானதாகவும், புண்ணியம் ஆனதாகவும் கருதப்படுகிறது. இப்பொழுது, குரு பகவான் கும்ப ராசியில் இருக்கிறார்.
இவர் சிம்ம ராசிக்கு வருகின்ற பொழுது, குருவும் சந்திரனும் ஒன்றாகச் சேர்வார்கள். இப்போது பார்வைத் தொடர்பு. அப்போது சேர்க்கை தொடர்பு. அப்போது அவர்கள் இருவரையும் சூரியன் கும்ப ராசியில் இருந்து பார்ப்பார். இந்த பௌர்ணமி தினமானது 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும். இதை “மகாமகப் பெருநாள்” என்று கொண்டாடுகிறோம். மகாமகத்தை பேச்சு வழக்கில் ``மாமாங்கம்’’ என்று கூறுகின்றனர்.
மாசி மகம் என்பது வருண பகவானுக்கு ஏற்பட்ட தோஷத்தை நீக்குவதற்காக சிவபெருமான் வருணனுக்கு அருள் செய்த தினமாகும். தான் நலன் பெற்றதை போல் இந்த நாளில் புனித நீராடு வழிபடுபவர்களின் பாவங்களும் தோஷங்களும் தீர வேண்டும் என வருண பகவான் வேண்டிக் கொண்டதாலேயே இந்த நாள் புனித நீராடுவதற்கு உரிய நாளாக கருதப்படுகிறது. அதே போல் கோவில்களில் தீர்த்த உற்சவம் இந்த நாளில் நடத்தப்படுவதும் வழக்கமானது. மற்ற இடங்களில் நீராடுவதை விட கும்பகோணம் மகாமகம் குளத்தில் மாசி மகத்தன்று நீராடுவது சிறப்பானதாகும். மற்ற இடங்களில் செய்த பாவங்களை போக்கிக் கொள்வதற்காக அனைவரும் கங்கையில் சென்று நீராடுகின்றனர். ஆனால் அந்த கங்கையே தன்னுடைய பாவத்தை போக்கிக் கொள்ள மாசி மகத்தன்று கும்பகோணம் *மகாமகம் குளத்தில்* எழுந்தருளுவதாக ஐதீகம்.
கும்பகோணம் மகாமகம் குளத்தில் வருடந்தோறும் நடைபெறுவதை மாசிமக நீராடல் என்றும், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் மாசி மகத்தை மகாமகம் என்றும் கொண்டாடுகிறோம். அதனால் கங்கையை விட புனிதமானது கும்பகோணம் மகாமகம் குளத்தில் நீராடுவது. மாசி மகத்தன்று நாட்டில் உள்ள அனைத்து புண்ணிய நதிகளும் தங்களின் பாவங்களை போக்கி, புனிதத் தன்மையை புதுப்பித்துக் கொள்வதற்காக மகாமகம் குளத்தில் எழுந்தருள்வதாக ஐதீகம். அன்றைய தினம் மகாமகம் குளத்தில் நீராடுபவர்களுக்கு இந்த 9 நதிகளும் அனைத்து நலன்களையும் வழங்குவதாக சொல்லப்படுகிறது. ஆனால் அனைவராலும் கும்பகோணம் சென்று மகாமகம் குளத்தில் மாசிமகத்தன்று நீராட முடியாது. இப்படி முடியாதவர்கள் வீட்டிலேயே நவநதிகளில் நீராடிய பலன்களை பெற முடியும்.
தெரிந்து கொள்ளுங்கள்......
மனிதனாக வாழ்வது எப்படி ?
மனிதனாக வாழ்வது எப்படி ?
இந்த உலகத்தில் மனிதனாக பிறந்த நாம் ,மனிதனாக வாழ வேண்டும் .
சரி..மனிதனாக வாழ்வது எப்படி ?
எல்லா உயிர் இனங்களை காட்டிலும் உயர்ந்த அறிவு மனிதனுக்கு கொடுக்கப்பட்டு உள்ளது
இந்த உலகத்தில் மனிதன் வாழ்வதற்கு எல்லா வசதிகளும் கொடுக்கப்பட்டு உள்ளது .
மனிதன் அனுபவிக்கலாம் ஆனால் எதையும் எடுத்துச் செல்ல முடியாது என்பது இயற்கையின் சட்டமாகும்.
அடுத்து சாதி,சமய ,மதக் கொள்கைகளை மனிதனால் உருவாக்கியதாகும்.. அதைப் பிடித்துக்கொண்டு மனிதன் தற்போது அழிந்து கொண்டு இருக்கிறான்....
உலகில் உண்டாகும் அனைத்து போராட்டங்களுக்கும் அடிப்படைக் காரணம் சமய, மத ,சாதி, வேற்றுமை களால்தான்.. இதை உண்டாக்கியவர்கள் ஆதிக்க எண்ணம் படைத்தவர்கள். இந்த
பொய்யான மதங்களை உண்மை என்று எண்ணி அவர்கள் காட்டிய கொள்கையில் வாழ்வதால், மனித நேயம் இல்லாமல் ஒற்றுமை இல்லாமல் வேறுபட்டு வாழ்ந்து வருகிறான்.
அவற்றை முழுவதும் விட்டு விட்டால் ,மனிதன் மனிதனாக வாழ்ந்தவனாகக் கருதப்படுவான் ,
அடுத்து பொருள்.. அனைருக்கும் பொதுவானது. அதை அனைவருக்கும் பொதுவாக, சமமாக பகிர்ந்து வாழப் பழகிக் கொள்ள வேண்டும்,அதுவே மனித பண்பாகும் ,
உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்பது பொருளின் அதாவது பணத்தின் அடிப்படையில் பிரிக்கப்படுகிறது ,அந்த நிலையை மாற்றுவது மனிதப் பண்பாகும்.
எவ்வளவுதான் பணம்,பட்டம், பதவி,படிப்பு இருந்தாலும் எல்லோரும் இறுதியில் மரணம் என்னும் பிணியில் அகப்பட்டு அழிந்து விடுகிறோம் ,
அந்த பணமோ, பதவியோ, மரணத்தைக் காப்பாற்றுவது இல்லை .
மரணத்தைக் காப்பாற்றாத, பணம்,பதவி இருந்து என்ன பயன்? என்பதை மனிதனாக பிறந்த அனைவரும் சிந்திக்க வேண்டும். இவையே மனித பண்பாகும் ,
மனிதன் பிறக்கிறான்; பணத்தை தேடி அலைகிறான்; பெண்ணாசை, மண்ணாசை அவனை வாட்டி வதைக்கிறது.
இதற்கெல்லாம் அடிமையாகி, இந்த உலக வாழ்வே நிரந்தரம் எனக் கருதி இங்கேயே தங்கி விட நினைக்கிறான்.
தன் ஆசைகளைப் பூர்த்தி செய்து கொள்ள, பல தவறுகளை செய்கிறான்.
தான் வாழ வந்த இந்த உலகம், ஒரு வாடகை வீடு என்பதை அவன் உணர்வதில்லை.
மனிதன் காலப் போக்கில் மனித நேயம் மறந்து, பொருட்களின் மீது நாட்டம் கொண்டு மனிதன் மனிதனாக வாழ மறந்துவருகிறான்.
பொருட்கள் நிரந்தரம் அல்ல, மனித வாழ்வும் நிரந்தரம் அல்ல என்பதை உணர வேண்டும்..
*ஆம்.,நண்பர்களே....*
*மனிதனாக பிறந்த நாம் அனைவரும் இந்த சமுதாயத்திற்கு ஏதேனும் ஒரு வகையில் நல்லது செய்தல் வேண்டும்..*
*அப்படி செய்வதால் நமக்கும் மனநிறைவு கிடைக்கும்*
*வந்தோம், பிறந்தோம், வாழ்ந்தோம், சென்றோம் என்று இல்லாமல், அடுத்த வரும் நம் தலைமுறை நன்கு வாழ்ந்திட அவர்களுக்கு நல்ல வழி வகைகள் செய்வோம்.....*
ஐம்பதில் ஆட்டத்தைத் தொடங்குங்கள்!
ஐம்பதில் ஆட்டத்தைத் தொடங்குங்கள்!
இப்போதெல்லாம் 50 வயதைத் தொட்டவுடன், உடலளவிலும் மனதளவிலும் இனி தன்னால் பெரிதாக ஒன்றும் செய்ய முடியாது என்று நம்மில் பலர் முடிவு செய்து கொள்கிறார்கள்...
*50 வயதுக்குப் பிறகு தான் ஒரு பலமான, வளமான மூளையோடு நாம் பயணிக்க ஆரம்பிக்கிறோம்...*
பல விஷயங்களில் அனுபவப்பட்டு, தெளிந்து, வாழ்க்கையை புரிதலோடு பார்க்கிற பருவம் இந்த *இரண்டாவது இன்னிங்ஸ் தான்...!*
வாழ்க்கையில் 50-ல் ஓரளவு உந்துசக்தி குறைந்து போகும்.
இனி என்ன என்ற சோம்பேறி சாய்தளம் நம்மை ஆள, அதனால் பல நோய்களும் நம்மை சூழ முற்படும்...
*50 வயதுக்கு மேல் தவறாமல் செய்ய வேண்டிய அவசியமான விஷயங்கள்:*
புதிய உந்துசக்தியை உருவாக்க புதிதான, உங்களுக்கும் தேவையான சவால் ஒன்றைக் கையிலெடுங்கள்...
உங்களை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள கடினமான இலக்கை முன்னிலைப்படுத்தி அதனை நோக்கி நிதானமாக, ஆனால் உறுதியோடு செல்லுங்கள்...
*எப்போதுமே புதிய விஷயங்களைத் தேடுங்கள், புதிய மனிதர்களிடம் பேசுங்கள்...*
*60 வயதுக்கு மேற்பட்ட ஆட்களோடு உட்கார்ந்து முதியோர் அரங்கம் உருவாக்காதீர்கள்...*
“இளைஞர்களோடு பழகுங்கள். 25 வயதில் இருந்த உத்வேகம் அவர்களிடமிருந்து உங்களுக்கு மீளக் கிடைக்கும்...”
*அழகான உடைகளை ரசனையுடன் தேர்வு செய்து, மிடுக்காக உடுத்துங்கள். 50 வயதில் நரையும், திரையும், வழுக்கையும் அழகு தான்...*
உலகின் மிகப்பெரிய சாதனைகளைச் செய்தவர்கள், நிறைய பேரை ஈர்க்கின்றவர்களில் 50+ காரர்கள் தான் அதிகம்..!!!
*பெரும்பாலான இளைஞர்களுடன், ஒத்த கருத்து நண்பர்களுடன் புதிய இடங்களுக்கு, புதிய அனுபவங்களைத் தேடிப் பயணம் செல்லுங்கள்...*
*வேறுபட்ட மனிதரோடு உரையாடுங்கள்..... திசையறியா ஆர்வமூட்டும் பயணங்கள் நம்மை பள்ளிப் பருவத்திற்கு இட்டுச் சென்று துள்ளிக் குதிக்க வைக்கும்...*
புதிய நவீன சிந்தனையாளர்களின் புத்தகங்களைத் தேடி நிறைய படியுங்கள். உங்கள் மூளைக்கு தீனி போட நிறைய, நிறைய புதிய விஷயங்களைத் தேடிப் படியுங்கள்...
நகைச்சுவைக் கதைகளை, நிகழ்வுகளை, ஒளிமங்களை விரும்பிக் காணுங்கள்...
*சிரித்துப் பேசுங்கள், பிறர் சிரிக்கப் பேசுங்கள், உங்களைச் சுற்றி ஒரு ஒளி வட்டம் நிலையாகும்...*
*விரோதிகளை விலக்குங்கள், பெருமைக்காரர்களை, பொறாமைக்காரர்களை கால விரயம் கருதி ஒதுக்குங்கள்...*
*மன ஆரோக்கியம்,*
*உடல் ஆரோக்கியம் பேணுங்கள்,* *நடைப்பயிற்சி, மூச்சுப்பயிற்சி,*
*சிறு சிறு ஆசனங்கள் தவறாது செய்யுங்கள்...*
வாரம் ஒரு முறையாவது உங்கள் இணை மனதினருடன் சிரித்து, மகிழ்ந்து, உண்டு, உறவாடுங்கள்...
*மறந்தும் சாய்வு நாற்காலிவாசிகள் பக்கம் ஒதுங்கி விடாதீர்கள், உங்களை அவர்கள் பக்கத்திலேயே படுக்க வைத்து விடுவார்கள்...*
பொதுச்சேவையில் நாட்டம் கொள்ளுங்கள். ஏரி, குளம், தூய்மை, சுற்றுச்சூழல், பசுமை, சமூக நேர்மை காத்தலில் ஆர்வம் கொள்ளுங்கள்...
*மகன், மகள் மற்றும் குறிப்பாக மருமகளைத் திட்டாதீர்கள்.,*
முதலில் நம்மைச் சார்ந்தவர்களுக்கு, பின்னர் அடுத்தவர்களுக்கு, உதவி தேவைப் படுபவர்களுக்கு, உங்களால் இயன்ற வகையில் உதவுங்கள். அவர்கள் நன்றியில் உங்களை நீங்களே புதிதாக ரசித்து மகிழ்வீர்கள்...
*எப்போதுமே முதல் இன்னிங்சை விட இரண்டாம் இன்னிங்க்ஸ் தான் நாம் வாழ்ந்த வாழ்வின் அர்த்தங்களை நிர்ணயிப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது...*
*மேற்சொன்ன விஷயங்களை சரியாகச் செய்தால் 50+ ஆரோக்கியம் பற்றிக் கவலைப்படத் தேவையே இல்லை தோழர்களே...*
*மூளையும், மனசும், உடலும் சரியாக இயங்க ஏற்பாடு செய்து விட்ட பிறகு ஆரோக்கியத்தில் என்ன பிரச்சனை வந்து விடப் போகிறது...???*
நீரழிவு நோயை குணமாக்கும் "சமணமுத்திரை
இன்று நிறைய நபர்கள் நீரிழிவு வியாதியினால் அவதிப்பட்டு வருகின்றனர். கணையத்தில் இரண்டு செல்கள் உள்ளன. ஆல்பா செல், பீட்டா செல், பீட்டா செல்தான் இன்சுலினை சுரக்கிறது.
இந்த முத்திரை இன்சுலின் சுரக்கும் குறைபாட்டை நீக்க வல்லது. சுகர் உள்ளவர்கள் இந்த முத்திரை செய்தால் மிக விரைவிலேயே நல்ல பலன் நிச்சயம் கிடைக்கும்.
*செய்முறை*
நாற்காலியில் நிமிர்ந்து அமரவும். கண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சை இருபது விநாடிகள் கூர்ந்து தியானிக்கவும். பின் கைகளை கும்பிடுவதை அப்படியே மாற்றி கும்பிடவும். படத்தில் உள்ளது போல் செய்யவும். இரண்டு நிமிடங்கள் முதல் ஐந்து நிமிடங்கள் செய்யவும். காலை, மதியம், மாலை சாப்பிடும்முன் பயிற்சி செய்யவும்.
*பலன்கள்*
சுமணமுத்திரை நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும்.
பான்க்ரியாஸை நன்றாக செயல்படவைக்கும்.
கணையத்தில் இன்சுலின் நன்றாக சுரக்கும்.
நரம்புத்தளர்ச்சியைப் போக்கி உடலில் உள்ள நரம்பு மண்டலத்தை வலுப்படுத்தும்.
நரம்புமண்டலம் சிறப்பாக செயல்படுவதால் கண் நரம்புகள் வலுவாகும்.
கால்களில் புண்கள் வராமல் பாதுகாக்கும்.
சிறுநீர்த்தொற்று ஏற்படாமல் பாதுகாக்கும்.
சுறுசுறுப்பாகவும் உற்சாகமாகவும் வாழ வழி வகை செய்கின்றது.
செரிமானம் நன்றாக இருக்கும்.
தோள்பட்டை வலி, கால் பாத வலி, வீக்கம் வராமல் தடுக்கின்றது.
உடலில் நீரின் தன்மை சரியாக இருக்க செய்கின்றது.
சுகர் உள்ளவர்கள் இந்த முத்திரை செய்தால் மிக விரைவிலேயே நல்ல பலன் நிச்சயம் கிடைக்கும்.
*குறிப்பு*
48 நாட்களாவது (ஒரு மண்டலம்) தொடர்ந்து பயிற்சி செய்தால் தான் பலனை அனுபவிக்க முடியும். இங்கிலீஷ் மருந்துகள் எடுத்துக் கொண்டே முத்திரைப் பயிற்சியும் செய்யலாம். முத்திரை செய்வதினால் எந்த பின்விளைவும் ஏற்படாது. கீழே உட்கார முடியாதவர்கள் நாற்காலியில் அமர்ந்து கால்கள் தரையில் படும்படி பயிற்சி செய்யலாம்.
Friday, February 23, 2024
திரும்பிப் பார்க்கிறேன்...!
இல்வாழ்வில் அடியெடுத்து வைத்து, பின் நம் குடும்பம் என ஒன்று உருவாகி குழந்தைகள் பிறந்து, அவர்களும் வேகமாக வளர்ந்து விட்டார்கள்.
பள்ளி, கல்லூரி என அவர்களுக்குப் பிடித்த கல்வியைக் கற்று, அவர்களது எதிர்காலத்தை அவர்களே தீர்மானிக்கும் நிலைக்கும் வந்துவிட்டார்கள்.
நாம் எல்லோரும் கொஞ்சம் கொஞ்சமாக முதுமையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறோம்.
வயதுக்கேற்ற சின்னச் சின்ன உடல் உபாதைகள் நமக்கு இருந்தபோதும், ஆரோக்கியத்தை காத்துக்கொண்டு நாட்களை நகர்த்திக் கொண்டிருக்கிறோம்.
*வாழ்வினை திரும்பிப் பார்க்கும்போது, மலைப்பாக இருக்கிறது!*
எத்தனையோ சந்தோசங்கள், சிரிப்புகள்... எத்தனையோ துக்கங்கள், கண்ணீர் துளிகள்...
எத்தனையோ ஏமாற்றங்கள், கோபங்கள்...
எல்லாவற்றையும் கடந்து வந்துவிட்டோம்!
நம் மீது அன்பைப் பொழிந்த, நாம் அன்பு செலுத்திய நிறைய பேர் இன்று நம்மிடையே இல்லை.
இயற்கைச் சீற்றங்கள், பேரழிவுகள், விபத்துக்கள், கொடிய மற்றும் கொள்ளை நோய்கள், பஞ்சங்கள், போர்கள், தீவிரவாதம் ஆகியவற்றிலிருந்து இதுவரை தப்பித்துக் கொண்டோம்.
நாம் ஆசையாய் நினைத்த சில விசயங்கள் கைகூடாததாலும், நாம் கொஞ்சமும் நினைத்தே பார்த்திராத சில விசயங்கள் நடந்தேறியதாலும்
மனம், வாக்கு, செயல் என அனைத்திலும் மாற்றங்கள் கண்டோம்.
பெரியவர்களின் பல ஆசீர்வாதங்கள்,
சமயங்களில் சில காயப்படுத்திய சொற்கள் இரண்டையும் ஏற்றுக் கொண்டோம்.
யாரெல்லாம் நம்மை உண்மையாய் நேசிப்பவர்கள், யாரெல்லாம் உள்ளொன்று வைத்து வெளியில் ஒன்று பேசுபவர்கள், யாரெல்லாம் பாசமாய் இருப்பது போல நடிப்பவர்கள் என்பதை சற்று தாமதமாக என்றாலும், கண்டுகொண்டோம்.
சில நண்பர்கள், சில உறவுகள் பிரிந்து போனதையும், சில நண்பர்கள், சில உறவுகள் நம்மை மறந்து போனதையும் வேறு வழியின்றி இயல்பாய் எடுத்துக் கொண்டோம்.
புதுப்புது இடங்களைச் சுற்றிப்பார்த்தும்,
விதவிதமான உணவுகளை ருசித்துப் பார்த்தும் மகிழ்ந்த தருணங்களை நினைவில் பதியவைத்துக்
கொண்டோம்.
வாழ்வின் இக்கட்டான நேரங்களில், ஆத்மார்த்தமான நண்பன் அல்லது தோழியிடமிருந்து ஆலோசனைகளைப் பெற்று அதிலிருந்து மீண்டு வந்தோம்.
வேறு வேறு இடங்களில், வேறு வேறு மனிதர்களுடன், வேறு வேறு சூழ்நிலைகளில் பழகி, நிறைய அனுபவங்களை சேகரித்துக்கொண்டோம்.
பிறந்தநாள், திருமண நாள், சுப நிகழ்வுகள், விழாக்கள், புதுவருடம் போன்ற விசேஷ தினங்கள் மற்றும் பண்டிகை நாட்களில் கூடி மகிழ்ந்தோம்.
பணம் மட்டுமே வாழ்க்கையில்லை என அறிந்து
கொண்டோம்.
பணம், பட்டம், பதவி, புகழ், வீடு, தோட்டம், நகை, கார், சொத்து, சுகம், உறவுகள் என எதுவும் நம்முடன் கடைசிவரை வரப்போவதில்லை எனப் புரிந்து கொண்டோம்.
நிம்மதியை வெளியில் தேடிப் பயனில்லை, அது நமக்குள்ளேதான் இருக்கிறது என்று தெரிந்து கொண்டோம்.
எல்லாவற்றையும் மன்னித்துவிடவும், சிலவற்றையாவது மறந்துவிடவும் கற்றுக்கொண்டோம்.
எல்லாமும் கடந்துபோகும் எனவும், எதுவும் நிரந்தரமில்லை எனவும் புரிந்து கொண்டோம்.
புத்தகங்களை வாசிப்பதும், இயற்கையை ரசிப்பதும், இனிய இசை கேட்பதும், இறைவனிடம் பிரார்த்திப்பதும் மனதுக்கு ஆறுதலான விசயங்கள்.
*காலம் எல்லாக் காயங்களையும் ஆற்றும்!*
எனவே,
*இக்கணத்தில் வாழ்வோம்!*
*வாழ்க்கையே திருவிழாதான்!*
*நாளும் இயல்பாய் அதைக் கொண்டாடுவோம்...!*🌹🙏👍🙏🌹😀👏
Tuesday, February 20, 2024
துருவ ஒளிவெள்ளம் தோன்றுவது எப்படி? Aurora Borealis

