Sunday, October 22, 2023

நவராத்திரி பற்றிய 75 அரிய தகவல்கள்🌿🌹


🌹 🌿 நவராத்திரி காலத்தில் முடிந்தவரை பாராயணம் செய்வது தேவிக்கு அளவில்லாத மகிழ்ச்சியைத் தரும்.


🌹 🌿 நவராத்திரி பற்றிய 75 சிறு குறிப்புகளை அறிந்து கொள்ளலாம்.


🌹 🌿 நவராத்திரி பற்றிய 75 சிறு குறிப்புகள் வருமாறு:-


🌹 🌿 1. சோழர் காலத்தில் நவராத்திரி திருவிழா அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டது.


🌹 🌿 2. தமிழ்நாட்டில் நவராத்திரி விழா, நாயக்கர் காலம் முதல் மக்கள் கொண்டாடும் 9 நாள் திருவிழாவாக மாறியது.


🌹 🌿 3. நவராத்திரி காலத்தில்தான் மக்களிடம் வரி வசூலிக்கும் நடைமுறையை விஜய நகர மன்னர்கள் ஏற்படுத்தினார்கள்.


🌹 🌿 4. நவராத்திரி விழாவை பெரிய அரசர்கள் மட்டுமே கொண்டாட உரிமை இருந்தது. ராமநாதபுரம் சேதுபதி மன்னருக்கு முதன் முதலாக நவராத்திரி கொண்டாடும் உரிமையை திருமலை நாயக்கர் வழங்கினார். இதுவே தமிழகத்தில் நவராத்திரி விழா பரவ வழி வகுத்தது.


🌹 🌿 5. நவராத்திரி விழா பற்றி தேவி புராணத்தில் மிக விளக்கமாக கூறப்பட்டுள்ளது.


🌹 🌿 6. நவராத்திரி நாட்களில் பெண்கள் கன்யா பூஜை செய்வதால் சகல செல்வங்களையும் பெறலாம்.


🌹 🌿 7. விஜயதசமி தினத்தன்று பெருமாள் கோவில்களில் வன்னி மரக்கிளையை வைத்து அதில் பெருமாளை எழுந்தருளச் செய்து பூஜை நடத்துவார்கள். இந்த வழிபாட்டில் கலந்து கொண்டால் கிரக தோஷங்கள் விலகி ஓடி விடும்.


🌹 🌿 8. நவராத்திரி பண்டிகையை முதன் முதலில் ராமர்தான் கொண்டாடியதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.


🌹 🌿 9. நவராத்திரி நாட்களில் இரவு 7 மணி முதல் 9.30 மணி வரை தேவி வழிபாடு செய்ய உகந்த நேரமாகும்.


🌹 🌿 10. ஈசனம், அம்மையும் ஒன்று சேர்ந்து ஊஞ்சலில் ஆடுகின்ற தரிசனத்தை 9 நாட்களும் கண்டால் நவராத்திரி பூஜை செய்த பலன் கிடைக்கும்.


🌹 🌿 11. நவராத்திரி நாளில் வரும் சப்தமி திதியன்று வழிபட்டால் ஸ்ரீஹயக்ரிவப் பெருமாளின் அருளைப் பெறலாம். அன்று ஸ்ரீலலிதா சகரஸ்ர நாமத்தையும் நவாக்சரி மந்திரத்தையும் ஓதுவது கூடுதல் பலன்களைத் தரும்.


🌹 🌿 12. பிரம்ம நவராத்திரி, கிருஷ்ண நவராத்திரி, ரிஷி நவராத்திரி, தேவ நவராத்திரி, பஞ்ச கல்ப நவராத்திரி, பாக்ய நவராத்திரி, போக நவராத்திரி, தாத்பர்ய நவராத்திரி, சற்குரு நவராத்திரி, தேவதா நவராத்திரி என்று பல வகை நவராத்திரிகள் உள்ளன.


🌹 🌿 13. பங்குனி மாதம் அமாவாசைக்குப் பிறகு பிரதமையில் தொடங்கும் லலிதா நவராத்திரி, மாசி மாதம் வரும் ராஜ மாதங்கி நவராத்திரி ஆடியில் வரும் மகாவராகி நவராத்திரி, புரட்டாசியில் வரும் சாரதா நவராத்திரி ஆகிய 4 நவராத்திரிகளையும் பெண்கள் கடைபிடித்தால் அம்பிகையின் அருளை பரிபூரணமாகப் பெறலாம்.


🌹 🌿 14. அனைத்திலும் தேவியே உள்ளாள் என்பதை உலகுக்கு உணர்த்தவே நவராத்திரி நாட்களில் கொலு வைக்கப்படுகிறது.


🌹 🌿 15. எல்லாரும் புரட்டாசி நவராத்திரியில் மட்டுமே கொலு வைக்கிறார்கள். ஆனால் 4 நவராத்திரி நாட்களிலும் கொலு வைத்தால்தான் அம்பிகை அருள் கிடைக்கும்.


🌹 🌿 16. வீட்டில் கொலு வைத்தால், அம்பிகை அனைத்து அம்சமாக நம் வீட்டில் எழுந்தருளி விட்டாள் என்பது நம்பிக்கையாகும்.


🌹 🌿 17. ஒரு நவராத்திரிக்கு கொலு வைத்தால் பிறகு வாழ்நாள் முழுவதும் நவராத்திரி நாட்களில் கொலு வைக்க வேண்டும் என்கிறார்கள்.


🌹 🌿 18. நவராத்திரி பூஜையை அஸ்தம், சித்திரை அல்லது மூலம் நட்சத்திர நாட்களில் தொடங்குவது நல்லது. இந்த நாட்களில் வைதிருதி யோக நேரம் இருந்தால் மிகவும் நல்லது.


🌹 🌿 19. புரட்டாசி மாதத்தை எமனின் கோரை பல் என்று அக்னி புராணம் சொல்கிறது. இந்த மாதம் எமனின் பாதிப்பில் இருந்து தப்பவே நவராத்திரி விழாவாக கொண்டாடப்படுகிறது.


🌹 🌿 20. நவராத்திரி பூஜைகள் அனைத்தையும் செய்து சுகன்யா தேவி என்பவள் எல்லா வித பலன்களையும் பெற்றாள்.


🌹 🌿 21. விஜய தசமி தினத்தன்று ஸ்ரீஆயுர் தேவியை போற்றி வழிபட வேண்டும். இதுதான் நவராத்திரி பூஜையின் நிறைவான பூஜையாகும்.


🌹 🌿 22. நவராத்திரி நாட்களில் பகலில் சிவ பூஜையும் இரவில் அம்பிகை பூஜையும் செய்வதே சரியான வழிபாடாகும்.


🌹 🌿 23. நவராத்திரி 9 நாட்களும் தினமும் பகலில் 1008 சிவ நாமாவளிகளை ஜெபித்து வழிபாட்டால் அளவிடற்கரிய பலன்கள் கிடைக்கும்.


🌹 🌿 24. நவராத்திரி வழிபாட்டை தினமும் தொடங்கும் போது ஸ்யவன மகரிஷியையும் சுகன்யா தேவியையும் தியானித்தபடியே தினசரி பூஜையை தொடங்க வேண்டும்.


🌹 🌿 25. நவராத்திரி நாட்களில் சுண்ணாம்பு மாவினால் கோலம் போடக்கூடாது. அரிசி மாவைப் பயன்படுத்திதான் கோலமிட வேண்டும். அவ்வாறு செய்வதால் குடும்ப ஒற்றுமையும், செல்வமும் வளரும். சுண்ணாம்பு மாவு பயன்படுத்தினாலோ, எதிர்மறையான விளைவுகளே உருவாகும்.


🌹 🌿 26. ஒன்பது நாட்களிலும் தேவியாக பாவித்துத் துதிக்க, நமக்குச் சொந்தமல்லாத, பிறர் வீட்டுக் குழந்தையையே அழைத்து வந்து உபசரிக்க வேண்டும். நம் வீட்டு அல்லது நம் உறவினர்களின் குழந்தைகளையே தேர்ந்தெடுப்பது கூடாது.


🌹 🌿 27. தினந்தோறும் நவராத்திரி பூஜையின் நிறைவாக, பலவிதமான மங்கலப் பொருட்களை (மஞ்சள், குங்குமம், வளையல், ரிப்பன் போன்றவை) ஏழைகளுக்கு தானமாக அளிக்க வேண்டும்.


🌹 🌿 28. தனித்து தானம் செய்வதை விட, சத்சங்கமாகப் பலரும் ஒன்று சேர்ந்து, மங்கலப் பொருட்களை மிகப் பெரிய அளவில் தானமாக அளிப்பதே சிறப்பானது.


🌹 🌿 29. தான தர்மங்கள்தான் நவராத்திரி பூஜைகளை நிறைவு செய்ய உதவிகின்றன. ஆகவே நவராத்திரியில் தானமளிப்பதே மிகமிக முக்கியம்.


🌹 🌿 30. தென்னகத்தில் இருந்துதான் நவராத்திரிக்குரிய மகிஷாசுரமர்த்தினியின் கதை வங்க நாடு சென்றது.


🌹 🌿 31. அந்த காலத்தில் நாடு சீரும் சிறப்பும் அடையவும், செங்கோல் நடக்கவும், செல்வம் கொழிக்கவும் நவராத்திரி விழாவை மக்கள் கொண்டாடினார்கள்.


🌹 🌿 32. நவராத்திரி ஒன்பது நாட்களிலும் நாராயணசுக்தம், புருஷசுக்தம், சகஸ்ரநாமம், சுதர்சனமந்திரம், கருடமந்திரம் முதலியவை ஜபரூபமாக முழங்கும்.


🌹 🌿 33. கன்னிப் பெண்களுக்குப் புதிய ஆடை முதலியவை பரிசாக அளிக்கப்படவேண்டும் என்பது நவராத்திரி விழாவின் முக்கிய அம்சமாகும்.


🌹 🌿 34. நவராத்திரி ஒன்பது நாளும் பூஜையைத் திருமகளே ஏற்றுக் கொள்கிறாள்.


🌹 🌿 35. சரஸ்வதி பூஜை என்ன கிழமையானாலும் கடலை சுண்டல் எதுவும் செய்ய முடியாதவர்கள் பழங்கள் கொடுக்கலாம்.


🌹 🌿 36. நவதானியச் சுண்டல் நவக்கிரக நாயகர்களைத் திருப்திப்படுத்தும். கோள்களால் வரக்கூடிய துன்பங்களைத் தடுக்கும்.


🌹 🌿 37. ஷோடச லஷ்மி பூஜை நவராத்திரி வெள்ளிக்கிழமையில் செய்தால் ஐஸ்வர்யம் பெருகும். இது கிரியா சக்தி வழிபாடு.


🌹 🌿 38. நவராத்திரி காலத்தில் முடிந்தவரை பாராயணம் செய்வது தேவிக்கு அளவில்லாத மகிழ்ச்சியைத் தரும்.


🌹 🌿 39. அந்த நாளில் கொலுவுக்கு வரும் கன்னியரின் நடையுடை, பாவனை, பேச்சு, பாட்டு, நடந்து கொள்ளும் விதம் இவற்றை முனிவர்கள் தீர்மானித்து தன் மகனுக்கோ, தன் உறவினர் மைந்தனுக்கோ இவள் ஏற்றவள் என்று தீர்மானிப்பர். பல திருமணங்கள் அப்படி முடிவாகி கார்த்திகை அல்லது தையில் நடந்திருக்கின்றன.


🌹 🌿 40. குழந்தைகள் பொம்மைகளைப் பார்த்துக் கதை கேட்டால் பொறுமையாக சொல்ல முதலில் நீங்கள் அதை அறிந்து வைத்திருங்கள்! குழந்தைகளின் அறிவையும், பக்தியையும், திறமையையும் கொலு வளர்க்கும்.


🌹 🌿 41. கொலு வைப்பதால் பெண்களின் மன இறுக்கம் தளர்ந்து லேசாகிறது.


🌹 🌿 42. டெல்லியிலும், காசிக்கு அருகிலுள்ள ராம் நகர் உத்தரபிரதேசம் போன்ற இடங்களிலும் ‘ராம்லீலா  நடத்த பெரிய, தனியான திடல்களே உள்ளன. ஸ்ரீராமனது காவியத்தை பத்து அல்லது முப்பது நாட்கள் நாடகமாக நடிக்கின்றனர்.


🌹 🌿 43. சிறு துளசிக்கன்றை களிமண்ணோடு கொண்டு வந்து கொலுவில் வைத்து தீபாராதனை காட்டுவது ஆனந்தத்தை அதிகப்படுத்தும்.


🌹 🌿 44. நவராத்திரி கடைசி நாளன்று துர்க்கை இமயமலைக்கு திரும்பிச் செல்வதாக ஐதீகம் இருப்பதால் வட மாநிலங்களில் துர்க்கை சிலைகளை கங்கையில் போட்டு விடுவார்கள்.


🌹 🌿 45. நவராத்திரி பூஜையின் போது எருமை மாடுகளை பலி கொடுக்கும் வழக்கம் மேற்கு வங்கத்தில் இருந்தது. தற்போது அந்த பழக்கம் ஒழிக்கப்பட்டு விட்டது.


🌹 🌿 46. நவராத்திரி விரதம் இருப் பவர்கள் தரையில் தான் படுத்து தூங்க வேண்டும்.


🌹 🌿 47. அம்பிகை சங்கீதப் பிரியை. எனவே நவராத்திரி நாட்களில் தினமும் ஏதாவது ஒரு பாட்டாவது பாட வேண்டும்.


🌹 🌿 48. வடநாட்டில் ஒரு பிரிவினர் நவராத்திரி 9 நாட்களும் உணவு சாப்பிடாமல் விரதம் இருப்பதுண்டு.


🌹 🌿 49. தமிழ்நாட்டில் நவராத்திரி கொலு வைக்கப்படுவது போல ஜப்பானிலும் பொம்மை கொலு வைக்கிறார்கள். நம்மூர் சரசுவதி போல அங்கு பெண்-டென் என்ற தேவதையை வணங்குகிறார்கள். அந்த தேவதையும் சரசுவதி வைத்திருப்பது போல கையில் புத்தகம் வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.


🌹 🌿 50. சந்திரகுப்தர் ஆட்சிக் காலத்தில் நவராத்திரி விழா ஒரு வீர விழாவாகக் கொண்டாடப்பட்டது.


🌹 🌿 51. அக்பர் காலத்தில் தசரா திருவிழா கோலாகல நிலைக்கு மாறியது.


🌹 🌿 52. காளியை மேற்கு வங்க மக்கள் மிகவும் ஆத்மார்த்தமாக வழிபடுவதால் அம்மாநில மக்கள் சக்தி வணக்கக்காரர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.


🌹 🌿 53. குஜராத்தில் நவராத்திரி 9 நாட்களும் பெண்கள் கும்மியடித்து நடனமாடுவார்கள். இந்த நடனத்துக்கு கரவோ என்று பெயர்.


🌹 🌿 54. நவராத்திரி 9 நாட்களும் மகா சக்தியை ஐதீகப்படி வணங்கினால் முக்திப் பேறு உண்டாகும்.


🌹 🌿 55. நவராத்திரி கோலத்தை செம்மண் கலந்து போட்டால் அம்பாள் மனமகிழ்ந்து வருவார்.


🌹 🌿 56. நவராத்திரி 9 நாட்களும் வாசலில் மாவிலை கட்டி பூஜை செய்தால் ஐஸ்வர்யம் உண்டாகும்.


🌹 🌿 57. கொலு வைத்திருப் பவர்கள் அதன் முன் நவக் கிரக கோலம் போட்டால் அம்பாள் அனுக்கிரகமும், நவக்கிரகப் பலன்களும் கிடைக்கும்.


🌹 🌿 58. நவராத்திரி 9 நாட்களும் வீட்டுக்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு பரிசுப் பொருட்களுடன் பூந்தொட்டி, புத்தகத்தை தானமாக கொடுக்கும் பழக்கம் கடந்த சில ஆண்டுகளாக சென்னையில் அதிகரித்துள்ளது.


🌹 🌿 59. முத்தாலத்தி என்றொரு வகை கோலம் உள்ளது. நவராத்திரி நாட்களில் இந்த வகை கோலம் போட்டால் அம்பாள் அருள் நமக்கு எளிதாக கிடைக்கும்.


🌹 🌿 60. நவராத்திரி 9 நாட்களில் வரும் வெள்ளிக் கிழமையன்று 5 சுமங்கலி பெண்களுக்கு அன்னதானம் செய்து புடவை மற்றும் தாம்பூலம் கொடுத்து ஆசி பெற்றால் உடனடியாக திருமணம் கைகூடும்.


🌹 🌿 61. நவராத்திரி 5-ம் நாள் லலிதாம்பிகையின் அவதார தினமாக கொண்டாடப்படுகிறது. அன்று 9 சிறுமிகளுக்கு பட்டுப்பாவாடை தானம் செய்தால் நினைத்தது நடக்கும்.


🌹 🌿 62. நம்மூரில் முளைப்பாரி வைப்பது போல மராட்டி யத்தில் நவராத்திரி முதல் நாளன்று நவதானி யங்களை மண் கலசங்கில் வளர்ப்பார்கள். விஜயத சமியன்று அவற்றை ஊர் வலமாக எடுத்து சென்று ஆறுகளில் கரைத்து விடுவார்கள்.


🌹 🌿 63. உடுப்பி கிருஷ்ணருக்கு நவராத்திரி 9 நாட்களும் சேலை கட்டி சிறப்பு பூஜைகள் நடத்தப்படும்.


🌹 🌿 64. நவராத்திரி 9 நாட்களும் சர்க்கரைப் பொங்கல், உளுந்து வடை, நைவேத்தியம் செய்தால் கூடுதல் பலன்கள் கிடைக்கும்.


🌹 🌿 65. நவராத்திரி தொடர்பான சுலோகம் மந்திரம் தெரியவில்லையா? கவலை படாதீர்கள் ஓம் ஸ்ரீ லலிதா தேவியே நம என்பதை 108 தடவை சொன்னாலே போதும். உரிய பலன் கிடைக்கும்.


🌹 🌿 66. நெமிலியில் திரிபுர சுந்தரி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒரு நவராத்திரிக்கு கலசத்தில் வைக்கப் படும் தேங்காய் அடுத்த ஆண்டு நவராத்திரி வரை கெடாமல் இருக்கும்.


🌹 🌿 67. தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோவிலில் முப்பெரும் தேவியர் இணைந்த அர்த்த நாரீஸ்வர துர்க்கை உள்ளது. 3 தலை, 8 கைகளுடன் இந்த துர்க்கை காணப்படு கிறார்.


🌹 🌿 68. கும்பகோணம் அருகில் உள்ள தேனுபுரீஸ்வரர் கோவிலில் விஷ்ணு துர்க்கை எனப்படும் அஷ்ட புக துர்க்கா தேவி அருள்புரிகிறாள். 8 கரங்களுடன் உள்ள இந்த துர்க்கையின் ஒரு கையில் கிளி இருப்பது தனிச் சிறப்பாகும்.


🌹 🌿 69. நவராத்திரி நாட்களில் முப்பெரும் தேவியரின் கதைகளை கேட்டால் அம்மைநோய் தாக்காது என்பது நம்பிக்கை.


🌹 🌿 70. சுகமான வாழ்வு வேண்டும், கல்வியில் சிறந்து விளங்க வேண்டும், அரசியலிலும், வேலையிலும் பதவி தொடர வேண்டும், எந்த தொழிலில் ஈடுபட்டாலும் வெற்றி மீது வெற்றி பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் நவராத்திரி பூஜையை அவசியம் செய்ய வேண்டும்.


🌹 🌿 71. ராமபிரான் நவராத்திரி விரதத்தை கடைபிடித்த பிறகுதான் அவருக்குச் சீதை இருக்குமிடம் தெரிந்தது என்று தேவி பாகவதம் சொல்கிறது.


🌹 🌿 72. ஜனமேஜயன் நடத்திய சர்ப்ப யாகத்திலிருந்து நாகங்களை மானசாதேவி காப்பாற்றியதால் அவள் நாகேஸ்வரி என்று அழைக்கப்படுகிறாள். இவள் குருவான ஈஸ்வரரிடமிருந்து சித்தயோகத்தை கற்றதால் சித்தயோகினி என்ற நாமத்தைப் பெற்றாள். இவளது கணவர் ஜரத்காரு. நவராத்திரி காலத்தில் இவள் கதை பகுதியைச் சொல்லி அர்ச்சிப்பதால் ராகு, கேது தோஷம், கால சர்ப்ப தோஷம் நீங்குகிறது.


🌹🌿73. கொலு பொருட்களை பாதுகாக்க வேண்டியது முக்கியம். அவைகளில் மந்திர ஆவர்த்தி இருக்கும்.


🌹 🌿 74. தேவியை நவராத்திரி சமயத்தில் ஒன்பது மடங்கு அதிகமாகப் பூஜிக்க வேண்டும் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.


🌹 🌿 75. எல்லாவற்றிற்கும் மேலானது சண்டிஹோமம். சண்டி என்பவள் மூன்று சக்திகளும் ஒன்றிய வடிவம். முப்பெரும் தேவியரையும் ஒன்றாக இணைத்து வழிபடுவதே இந்த ஹோமத்தின் சிறப்பு. விஜயதசமி நாளில் இதைச் செய்வதால் மிக நல்ல பலன்கள் பெறலாம்

தமிழ்நாட்டில் இருக்கும் ஊர்ப் பெயர்கள் - ஒரு சிறிய ஆராய்ச்சி



தமிழ்நாட்டில் இருக்கும் ஊர்களின் பெயர்களைச் சற்று ஆராய்ந்து பார்த்தால், அவற்றில்  பெரும்பாலானவை கீழ்க்காணும் ஒரு சொல் கொண்டு முடிவதைக் காணலாம்.  இவ்வாறு, அவற்றில் ஒரு பொதுவான தன்மை இருப்பதைக் காணில், வியப்பைத் தரும்.


இங்கே தரப்பட்டுள்ளவை எடுத்துக்காட்டுகள் மட்டுமே.  இந்தப் பட்டியலில் விடுபட்டவை நிறைய உள்ளன.


ஊர் -


தஞ்சாவூர், உறையூர், கடலூர், வேலூர்,  திருவாரூர், சாத்தூர், மேட்டூர், மேலூர், அரியலூர், திருவிடைமருதூர், திருக்கோவிலூர், திருக்கடையூர், திங்களூர், திருவாதவூர், ஆம்பூர், பேரூர்


குடி -


தூத்துக்குடி, பரமக்குடி, காரைக்குடி, அரியக்குடி, லால்குடி, ஆலங்குடி, நரிக்குடி, சாயல்குடி, குன்றக்குடி, திட்டக்குடி


பட்டி -


கோவில்பட்டி, பிள்ளையார்பட்டி, உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி,  சின்னாளப்பட்டி, வாடிப்பட்டி,  கொட்டாம்பட்டி, நேமத்தான்பட்டி,  உறங்கான்பட்டி, பள்ளப்பட்டி


கோவில் -


அழகர்கோவில், நாகர்கோவில், சங்கரன்கோவில், திருவானைக்கோவில், வைத்தீஸ்வரன்கோவில், காளையார்கோவில், ஆவுடையார்கோவில், உப்பிலியப்பன் கோவில், நாச்சியார்கோவில், உத்தமர்கோவில், வெள்ளக்கோவில்


பள்ளி -


திருச்சிராப்பள்ளி, திருக்காட்டுப்பள்ளி, செங்கப்பள்ளி, அகஸ்தியம்பள்ளி, போச்சம்பள்ளி, தொரப்பள்ளி, காட்டுப்பள்ளி


கோட்டை -


பட்டுக்கோட்டை, புதுக்கோட்டை, தேவகோட்டை, அருப்புக்கோட்டை, கந்தர்வக்கோட்டை, ஊத்துக்கோட்டை, தேன்கனிக்கோட்டை, நிலக்கோட்டை, நாட்டரசன்கோட்டை, பெரியகோட்டை, வல்லக்கோட்டை, வட்டக்கோட்டை, நாலுகோட்டை, வெம்பக்கோட்டை


பட்டினம் -


நாகப்பட்டினம், காவிரிப்பூம்பட்டினம்,  அதிராம்பட்டினம், சதுரங்கப்பட்டினம், தேங்காய்பட்டினம், குலசேகரப்பட்டினம், காயல்பட்டினம், தேவிபட்டினம், திருமலைராயன்பட்டினம், கோட்டைப்பட்டினம்


பாக்கம் -


கல்பாக்கம், கோடம்பாக்கம், அரும்பாக்கம், அச்சரப்பாக்கம், கீழ்ப்பாக்கம், பட்டினப்பாக்கம், காட்டுப்பாக்கம்


குளம் -


பெரியகுளம், ஆலங்குளம், அழகன்குளம்,  விளாத்திகுளம், சாத்தான்குளம்,  நெடுங்குளம், புளியங்குளம், மாங்குளம், வாகைக்குளம்


பாளையம் -


ராஜபாளையம், மேட்டுப்பாளையம், குமாரபாளையம், உத்தமபாளையம், பெரியபாளையம், மேலப்பாளையம், உடையார்பாளையம்


நல்லூர் -


திருவெண்ணைநல்லூர், ஐராவதநல்லூர், காங்கேயநல்லூர், ஹரிகேசநல்லூர், புன்னைநல்லூர், திருவிசநல்லூர், முத்தரசநல்லூர், ஆதிச்சநல்லூர், மண்ணச்சநல்லூர், வாசுதேவநல்லூர் அரகண்டநல்லூர், கரிவலம் வந்த நல்லூர்


மலை -


திருவண்ணாமலை, சுவாமிமலை, மருதமலை, சென்னிமலை, சிவன்மலை, ஆனைமலை, கழுகுமலை, நாகமலை, விராலிமலை, திருநீர்மலை, பிரான்மலை, குடுமியான்மலை, நார்த்தாமலை


குறிச்சி -


கள்ளக்குறிச்சி, கல்லிடைக்குறிச்சி, ஆழ்வார்குறிச்சி, அரவக்குறிச்சி, பாஞ்சாலங்குறிச்சி, பூலாங்குறிச்சி, துவரங்குறிச்சி, தேவனாங்குறிச்சி


கிரி -


கிருஷ்ணகிரி, நீலகிரி, சங்ககிரி, சூளகிரி, ஏலகிரி, புவனகிரி, சதுரகிரி


குன்றம் -


திருப்பரங்குன்றம், திருக்கழுக்குன்றம், செங்குன்றம், நெடுங்குன்றம், கொடுங்குன்றம்,  திருமால் குன்றம், நெற்குன்றம், பூங்குன்றம், குமரன்குன்றம்


பாறை -


மணப்பாறை, வால்பாறை, பேச்சிப்பாறை, மயிலாடும்பாறை, குஜிலியம்பாறை, பூம்பாறை, சிப்பிப்பாறை


காடு -


திருவாலங்காடு, ஆற்காடு, ஏற்காடு, திருமறைக்காடு, ஊத்துக்காடு,  திருவெண்காடு, மாங்காடு, திருவேற்காடு, களக்காடு, பாலக்காடு, தெப்பக்காடு


புரம் -


காஞ்சிபுரம், மாமல்லபுரம், விழுப்புரம், சமயபுரம், கங்கைகொண்ட சோழபுரம், ராமநாதபுரம், ராசிபுரம், தாராபுரம்,  திருக்கண்ணபுரம், எட்டயபுரம், உமையாள்புரம், கோனேரிராஜபுரம், ஆனந்ததாண்டவபுரம், சேங்காலிபுரம், கோவிந்தபுரம்


புரி -


தருமபுரி, அழகாபுரி, மருங்காபுரி, மேலைச்சிவபுரி, சொர்ணபுரி, ரத்தினபுரி


மங்கலம் -


சத்தியமங்கலம், நீடாமங்கலம், ராஜசிங்க மங்கலம், புத்தாமங்கலம், சேந்தமங்கலம், ஆனைமங்கலம், சாத்தமங்கலம், கொத்தமங்கலம், திருமங்கலம், நந்திமங்கலம், அரியமங்கலம், மறவமங்கலம், மன்னாடிமங்கலம், மாதிரிமங்கலம், கண்டமங்கலம், ஹரித்துவாரமங்கலம் 


ஈஸ்வரம் -


ராமேஸ்வரம், பட்டீஸ்வரம், திருநாகேஸ்வரம், சோழீஸ்வரம், எமனேஸ்வரம், நித்தீஸ்வரம், சோமேஸ்வரம், அகத்தீஸ்வரம், திருக்கண்டீஸ்வரம்


துறை -


மயிலாடுதுறை, திருப்பெருந்துறை, ஆடுதுறை, கூடுதுறை, மாந்துறை, சிந்துபூந்துறை, அவல்பூந்துறை, செந்துறை, முண்டந்துறை


பாடி -


திருமழபாடி, தரங்கம்பாடி, வாணியம்பாடி, குறிஞ்சிப்பாடி, வியாசர்பாடி, திருமுனைப்பாடி, எடப்பாடி, வாழப்பாடி, கவுந்தப்பாடி, வேலப்பாடி


சேரி -


புதுச்சேரி, வேளச்சேரி, கொரடாச்சேரி, கூடுவாஞ்சேரி, மேச்சேரி, நல்லிச்சேரி, செம்மஞ்சேரி, திருமணஞ்சேரி


குப்பம் -


நெல்லிக்குப்பம், மேட்டுக்குப்பம், ஆற்காடு குப்பம், மேல்குப்பம், கீழக் குப்பம், திருமலைக்குப்பம், நெடுங்குப்பம், கோட்டைக்குப்பம், அரியாங்குப்பம், செட்டிக்குப்பம், ஆலங்குப்பம்


பேட்டை -


உளுந்தூர்பேட்டை, உடுமலைப்பேட்டை,  ராணிப்பேட்டை, பரங்கிப்பேட்டை, முத்துப்பேட்டை, அய்யம்பேட்டை, அம்மாபேட்டை, விஷ்ணம்பேட்டை, கம்பரசம்பேட்டை, சோமரசம்பேட்டை


பட்டு -


செங்கல்பட்டு, சேத்துப்பட்டு, பேர்ணாம்பட்டு, அத்திப்பட்டு, பள்ளிப்பட்டு, அரசம்பட்டு, மூங்கில்பட்டு


தோப்பு -


சிங்காரத் தோப்பு, கொண்டித்தோப்பு, நெல்லித்தோப்பு, புளியந்தோப்பு


சோலை -


பழமுதிர்ச்சோலை, மாஞ்சோலை, பூஞ்சோலை, திருமாலிருஞ்சோலை


வனம் -


திண்டிவனம், திருப்புவனம், கடம்பவனம், தில்லைவனம்


சமுத்திரம் -


அம்பாசமுத்திரம், கோபாலசமுத்திரம், மல்லசமுத்திரம், நமனசமுத்திரம், பாலசமுத்திரம், திம்மசமுத்திரம், திருமலைசமுத்திரம், வேங்கடசமுத்திரம், இராவணசமுத்திரம்


ஆறு -


திருவையாறு, திருநள்ளாறு, அடையாறு, தெள்ளாறு, திருவட்டாறு, ஆழியாறு, மூணாறு


கரை -


நீலாங்கரை, கோடியக்கரை, ஊத்தங்கரை, அமைந்தகரை, திருவக்கரை, கும்பக்கரை, மதுக்கரை, கீழக்கரை


ஏரி -


நாங்குநேரி, வரகனேரி, பாகனேரி, வேப்பேரி, கடங்கனேரி, புத்தனேரி, மாறநேரி, பழமானேரி


ஊரணி -


பேராவூரணி, கருப்பாயி ஊரணி, கல்லூரணி


கேணி-


திருவல்லிக்கேணி, வெட்டுவான் கேணி


மடை -


பத்தமடை, காரமடை, மேலமடை, கடைமடை, பன்னீர்மடை


வலம்-


புலிவலம், வேட்டவலம்


வளவு -


மேல வளவு, கீழ வளவு


வலசு -


பெரிய வலசு, பாப்பா வலசு, சின்ன கவுண்டன் வலசு


தெரு -


தெற்குத் தெரு, புதுத்தெரு


கிராமம் -


சாலிகிராமம், புதுக் கிராமம்


கோணம் -


கும்பகோணம், அரக்கோணம்


பூண்டி -


பூண்டி, திருத்துறைப்பூண்டி, திருமுருகன்பூண்டி, கும்மிடிப்பூண்டி, கணியம்பூண்டி


பந்தல் -


மன்னம்பந்தல், தண்ணீர்ப்பந்தல்


கூடல் -


நான்மாடக்கூடல், முக்கூடல்


ஏந்தல் -


கொம்புக்காரனேந்தல், லாடனேந்தல், முத்தனேந்தல்


வாயில் -


திருமுல்லைவாயில், குடவாயில், காளவாசல், சித்தன்னவாசல்


நாடு -


வருசநாடு, கொரநாடு


கால் -


காரைக்கால், மணக்கால், தைக்கால்


கல் -


நாமக்கல், திண்டுக்கல், ஒகேனக்கல், பெருமுக்கல், நீலக்கல், பழமுக்கல்


சுழி -


திருச்சுழி, திருவலஞ்சுழி


மடம் -


ஆண்டிமடம், அக்காள்மடம், தங்கச்சிமடம்


சத்திரம் -


கனகம்மாசத்திரம், சுங்குவார்சத்திரம், ரெட்டியார்சத்திரம், சேதுபாவாசத்திரம், பாவூர்சத்திரம்


'திரு' என்னும் சொல் கொண்டு தொடங்கும் பெயர்களோ கணக்கில் அடங்கா.  அதனால், அவற்றை எல்லாம் இங்கே குறிப்பிடவில்லை.


*ஊரின் பெயர்கள் அனைத்தும் பண்டைய காலம் தொட்டே இந்து மதத்தின் சொல்லால், இந்து மதப் பொருள் கொண்டதாகவே அமைந்துள்ளதைப் பார்க்க முடிகிறது.

Monday, October 16, 2023

தியானம் என்றால் என்ன?

 மனம் என்றால் என்ன? 


மனம் எப்போதும் அலைந்து கொண்டிருக்கும் இயல்பு 

நம் கட்டுபாட்டில் இருக்காது ஒன்றை நினைத்தால் தொடர்ச்சியாக பல்வேறு நிகழ்வுகளை நினைவு கூறி பயணித்து கொண்டே இருக்கும்


இந்த முரட்டு குதிரையின் இயல்பு என்ன ?

அந்த மனஅலை சுழலை  எப்படி வரிசைபடுத்துவது என்று புரிந்து கொண்டால் மனதின் தன்மை எளிமையாக நமக்கு புரிந்து விடும்


மனதின் அலை இயக்கத்தை விஞ்ஞானிகள் Electro Encephalogram அதாவது EEG என்ற கருவி மூலம் 

அளக்கும் போது

அலை நீளங்களை கீழ்கண்டவாறு வகைபடுத்துவார்கள் :


பீட்டா, ஆல்பா, தீட்டா, டெல்டா.


1) பீட்டா அலை : உணர்ச்சிவயப்பட்ட நிலை. நாம் பொதுவாக இருக்கும் மனநிலை. அலை நீளம் 40 To 14  Cycles per seconds.இந்த நிலையில் கோபம், கவலை, பதட்டம் இருக்கும். எதையும் நிதானமாக யோசிக்க முடியாது.


2) ஆல்பா அலை : மனம் அமைதியாக இருக்கும். சிந்திக்க முடியும். நல்லது கெட்டது புரிந்து கொள்ள நிதானம் இருக்கும்.

அலை நீளம் 13 To 08 Cycles per second.


சுருக்கமாக மன அமைதி, மன ஓர்மை, நினைவாற்றல், சிந்திக்கும் திறன் சிறப்பாக இருக்கும்.


3) தீட்டா நிலை: 

அலை நீளம் 07 To 04  cycles per second.இறையோடு இணையும் தெய்வீக நிலை.ஒழுக்க நிலை, செயல் செய்வதில் மிக கூர்மையான சிந்தனை, இறை நிலை நாட்டம், குண நலப் பேறு நற்குணங்களே மேலோங்கும்.


4) டெல்டா நிலை: 

அலை நீளம் 03 To 01 Cycles per second. இதுவே இறுதி நிலை. தன்னிலை உணர்ந்தோர் நிலை. சமாதி நிலை. பிரபஞ்ச ரகசியம் அனைத்தும் உணர்தல் நிலை, அன்பும் கருணையும் மேலோங்கும் நிலை.


எப்படி மனஅலை நீளத்தை குறைப்பது?


தியானம் ஒன்றே தீர்வு. எங்கே சுற்றினாலும் மனம் ஒருமைப்பட தியானம் மட்டுமே உதவும்.


தியானம் செய்ய செய்ய, மனதின் குறைபாடுகள் குறைய குறைய, மனதை நெறிப்படுத்தி, ஆற்றல் மிக்கதாக உயர்த்தி கொள்ள முடியும்.


தவறாமல் தினம் தியானம்  செய்ய செய்ய, உங்களுக்குள் ஏற்படும் நல்ல மாற்றங்களை உணர்வீர்கள். செயல் சிறப்பாக செய்யும் திறன் கூடும். வாழ்வு சிறக்கும்.


சுருக்கமாக மனம் என்னும் முரட்டு குதிரையை கொட்டடியில் 

அடைக்க முயற்சிப்பதே  தியானம்.

Sunday, October 15, 2023

அக்டோபர் 15, ஏ.பி.ஜே.அப்துல்கலாம்



இந்திய ஏவுகணை நாயகன் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் 1931ம் ஆண்டு அக்டோபர் 15ம் தேதி தமிழ்நாட்டில் ராமேஸ்வரத்தில் பிறந்தார்.


இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் (ISRO) தனது ஆராய்ச்சிப்பணிகளைத் தொடர்ந்த இவர் 1980ஆம் ஆண்டு SLV-III ராக்கெட்டை பயன்படுத்தி ரோகிணி-I என்ற துணைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி இந்தியாவிற்கே பெருமை சேர்த்தார்.


இவர் பத்மபூஷண்(1981), பத்மவிபூஷண்(1990), பாரத ரத்னா (1997) போன்ற விருதுகளை பெற்றுள்ளார். இவருடைய அக்னி சிறகுகள், இந்தியா 2020, எழுச்சி தீபங்கள் ஆகிய புத்தகங்கள் புகழ் பெற்றவைகள்.


1999ம் ஆண்டு பொக்ரான் அணு ஆயுத சோதனையில் முக்கிய பங்காற்றினார். 2002ம் ஆண்டு நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று, இந்தியாவின் 11வது குடியரசு தலைவராக ஜூலை 25, 2002ல் பதவியேற்றார். இந்தியாவை அணு ஆயுத வல்லரசாக மாற்றிய ஏ.பி.ஜே.அப்துல்கலாம் அவர்கள் 2015ம் ஆண்டு ஜூலை 27ம் தேதி மறைந்தார்.

நில அளவுகள்- விவசாயி

நிலத்தை வைத்திருக்கும்

உரிமையாளர் ஒரு நிலத்தையோ,

அல்லது  மனையையோ அளக்க 

முற்படும் பொழுது பெரும்பாலும்

அந்த அளவுகளில் நமக்கு பல விஷயங்கள் புரிவதில்லை...


குறிப்பாக நிலவரைபடம்   

FMB பற்றி தெளிவாக 

நமக்குத் தெரிவதில்லை 

அது நமக்கு புரியாத 

ஒரு புதிராகவே இருக்கிறது.

எனவே ஒரு நிலத்தை எப்படி 

அளக்க வேண்டும் என்பதை தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் 

FMB  எனப்படும் புல  வரைபடத்தை பற்றி முதலில் நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும்..


சர்வே புல வரைப்படத்தில் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய 7 முக்கிய செய்திகள் :


1. ஒரு FMB யில் நிலத்தின் அளவுகள், உட்பிரிவு எண்கள், விளக்கிகள் அருகில் உள்ள சர்வே எண்கள் ஆகியவை இருக்கும்.


2. ஒரு சர்வே எண்ணின் எல்லை கோடுகளுக்கு பெயர் F லைன் என்று பெயர் ( FIELD BOUNDARY LINE).


3. குறுக்கு விட்டமாக வரும் லைனுக்கு G லைன் என்று பெயர் அதாவது A யிலிருந்து D க்கு இவ்வளவு தூரம் என்று கணக்கிட்டு விடுவார்கள்.


4. மேலும் E யிலிருந்து B க்கும் விட்டமாக ஒரு லைனும் அதன் அளவும் போட்டு இருப்பர், அதுவும் G. லைன் ஆகும்.


5. இரண்டு G லைனில் ஏதாவது ஒரு கல் காணாமல் போனாலும் மற்ற G லைனை வைத்து காணாமல் போன கல் எங்கு இருக்க வேண்டும் என்று கண்டுப் பிடிப்பர்.


6. மீட்டர் கணக்கில் தான் FMB யில் அளவுகளை எழுதுவார்கள்.


7. ஒரே சர்வே எண்ணில் 15 ஏக்கருக்கு மேல் இருந்தால் 1:5000 என்றும், கொஞ்சம் குறைவாக இருப்பின் 1:2000 என்றும், மிகசிறிய நிலமாக இருந்தால் 1:1000என்றும் இருக்கும்.


நிலத்தை அளக்கும் அளவு முறைகள் 

****************************************

நிலத்தை அளக்கின்ற அளவீடுகள்! ஒவ்வொரு பகுதிகளில் ஒவ்வொரு அளவீட்டு முறைகள் பயன்படுத்தப்படுகின்றன. 

அவற்றை நிச்சயமாக புரிந்து கொள்ள வேண்டும். 

தமிழ்நாடில் 3 அளவீட்டு முறைகள் பயன்படுத்தப்படுகின்றது.


1. பாரம்பரிய நாட்டு வழக்கு அளவீடுகள் : குழி, மா, வேலி, காணி, மரக்கா,


2. பிரிட்டிஸ் வழக்கு அளவீடுகள் : சதுரஅடி, சென்ட், ஏக்கர், போன்றவை


3. மெட்ரிக் வழக்கு அளவுகள் : ச.மீட்டர், ஏர்ஸ், ஹெக்டேர்ஸ்


ஆனால் எல்லா பட்டா ஆவணங்களும் மெட்ரிக் அளவுமுறைகளில் ஏர்ஸ், ஹெக்டேரில் தான் இருக்கின்றன.


நில அளவீடுகள்

*****************

1 சென்ட்      – 40.47 சதுர மீட்ட‍ர்

1 ஏக்க‍ர்       – 43,560 சதுர அடி

1 ஏக்க‍ர்       – 40.47 ஏர்ஸ்

1 ஹெக்டேர் – 10,000 சதுர மீட்ட‍ர்

1 சென்ட்      – 435.6 சதுர அடி

1 ஏர்ஸ்    – 100 சதுர மீட்ட‍ர்

1 குழி           – 144 சதுர அடி

1 சென்ட்      – 3 குழி

3 மா              – 1 ஏக்க‍ர்

3 குழி           – 435.6 சதுர அடி

1 மா              – 100 குழி

1 ஏக்க‍ர்       – 18 கிரவுண்டு

1 கிரவுண்டு – 2,400 சதுர அடிகள்


ஏக்கர்


1 ஏக்கர் – 100 சென்ட்

1 ஏக்கர் – 0.404694 ஹெக்டேர்

1 ஏக்கர் – 40.5 ஏர்ஸ்

1 ஏக்கர் – 43560 ச.அடி

1 ஏக்கர் – 4046 ச மீ


செண்ட்


1 செண்ட் – 001 ஏக்கர்

1 செண்ட் – 0040 ஹெக்டேர்

1 செண்ட் – 0.405 ஏர்ஸ்

1 செண்ட் – 435.54 ச.அடி

1 செண்ட் – 40.46 ச மீ


ஹெக்டேர்


1 ஹெக்டேர் – 2.47 ஏக்கர்

1 ஹெக்டேர் – 247 செண்ட்

1 ஹெக்டேர் – 100 ஏர்ஸ்

1 ஹெக்டேர் – 107637.8 ச.அடி

1 ஹெக்டேர் – 10,000 ச மீ


ஏர்ஸ்


1 ஏர் – 2.47 செண்ட்

1 ஏர் – 100 ச.மீ

1 ஏர் – 1076 ச.அடி


100 குழி     = ஒரு மா

20 மா        = ஒரு வேலி

3.5 மா       = ஒரு ஏக்கர்

6.17 ஏக்கர்  = ஒரு வேலி


1 ஏக்கரின் நீளம்        = 1 பர்லாங், 40 கம்பங்கள், அல்லது 220 கெஜம்

1 ஏக்கரின் அகலம்     = 1 சங்கிலி, 4 கம்பங்கள், அல்லது 22 கெஜம்

நீட்டலளவை


•             10 கோண் = 1 நுண்ணணு


•             10 நுண்ணணு = 1 அணு


•             8 அணு = 1 கதிர்த்துகள்


•             8 கதிர்த்துகள் = 1 துசும்பு


•             8 துசும்பு = 1 மயிர்நுனி


•             8 மயிர்நுனி = 1 நுண்மணல்


•             8 நுண்மணல் = 1 சிறு கடுகு


•             8 சிறு கடுகு = 1 எள்


•             8 எள் = 1 நெல்


•             8 நெல் = 1 விரல்


•             12 விரல் = 1 சாண்


•             2 சாண் = 1 முழம்


•             4 முழம் = 1 பாகம்


•             6000 பாகம் = 1 காதம் (1200 கஜம்)


•             4 காதம் = 1 யோசனை


•             வழியளவை


•             8 தோரை(நெல்) = 1 விரல்


•             12 விரல் = 1 சாண்


•             2 சாண் = 1 முழம்


•             4 முழம் = 1 பாகம் அல்லது தண்டம்


•             2000 தண்டம் = 1 குரோசம்        21/4மைல்


•             4 குரோசம் = 1 யோசனை


•             71/2 நாழிகைவழி = 1 காதம்(10மைல்)


நிலவளவை குழிக்கணக்கு வருமாறு


16 சாண் = 1 கோல்


18 கோல் = 1 குழி


100 குழி = 1 மா


240 குழி = 1 பாடகம்


கன்வெர்ஷன்


1 சதுர அங்குலம் = 6.4516 சதுர செண்டிமீட்டர்


1 சதுர அடி = 0.09290304 சதுர மீட்டர்


1 சதுர கெஜம் = 0.83612736 சதுர மீட்டர்


1 சதுர மைல் = 2.589988110336 சதுர கிலோமீட்டர்


பிற அலகுகள்1


ஏர் = 100 சதுர மீட்டர்

1 ஹெக்டேர் = 100 ஏர் = 10,000 சதுர மீட்டர் = 0.01 சதுர கிலோமீட்டர்

தற்பொழுது ஏர் அதிகமாகப் பயன்பாட்டில் இல்லை என்றாலும் ஹெக்டேர் இன்றும் நிலங்களை அளக்கும்போது பயன்படுத்தப்படுகிறது.

நிலங்களை அளக்கும்போது பொதுவாகப் பயன்படுத்தப்படும் அலகு ஏக்கர் ஆகும்.

1 ஏக்கர் = 4,840 சதுர கெஜம் = 43,560 சதுர அடி = 4046.8564224 சதுர மீட்டர்


1 சதுர மைல் = 640 ஏக்கர் = 2.5899881103 சதுர கிலோ மீட்டர்


நில அளவை 


100 ச.மீ                              - 1 ஏர்ஸ்


100 ஏர்ஸ்                          - 1 ஹெக்டேர் 


1 ச.மீ                                  - 10 .764 ச அடி


2400 ச.அடி                       - 1 மனை 


24 மனை                         - 1 காணி


1 காணி                            - 1 .32 ஏக்கர் 


144 ச.அங்குலம்            - 1 சதுர அடி 


435 . 6 சதுர அடி          - 1 சென்ட் 


1000 ச லிங்க்ஸ்         -  1 சென்ட் 


100 சென்ட்                     - 1  ஏக்கர் 


1லட்சம்ச.லிங்க்ஸ்   - 1  ஏக்கர் 


2 .47   ஏக்கர்                    - 1 ஹெக்டேர்


1 ஹெக்டேர்               = 2.5 ஏக்கர் (2.47 ஏக்கர் )


1 ஏக்கர்                             = 4840 குழி (Square Yard)


100 சென்ட்                     = 4840 சதுர குழிகள் 


1 சென்ட்                          = 48.4 சதுர குழிகள்


1 ஏக்கர்                             = 4067.23 சதுர மீட்டர் (Sq. Meter )


1 ஏக்கர்                             = 43560 சதுர அடி



வேதாத்திரியம் - சிந்தனை

 🎌🚥🎌🚥🎌🚥🎌🚥🎌🚥🎌


*வாழ்க வையகம்*

*வளர்க வேதாத்திரியம்*

*வாழ்க வளமுடன்*



🎌🚥🎌🚥🎌🚥🎌🚥🎌🚥🎌


🕸️ *இன்றைய நித்தியக்கடன்*


🕸️ அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.


🕸️ *இன்றைய சாதகம்*



🕸️ *இன்றைய நற்சிந்தனை*


🕸️ மனிதர்களுக்கு ஆறறிவு என்று பெருமையாக சொல்லிக் கொள்கிறோம். எதை வைத்து  நமக்கு ஆறறிவு இருக்கிறது என்பதை ஒற்றுக் கொள்கிறோம்.  முதலில் நாம் ஓரறிவு ஈரறிவு என்று வரிசைப்படுத்தும் போது எதை வைத்து இந்த வரிசைகள் அமைகின்றன என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். தொட்டால் உணர்ந்து கொள்ள கூடிய அறிவு தாவரம் ஓரறிவு, (உ-ம்: தொட்டாசுருங்கி) சுவைகளை உணரும் நாக்கு இரண்டறிவு,  வாசனையை உணரும்  மூக்கு மூன்றறிவு, பார்த்து உணரும் கண்கள் நான்கறிவு, ஓசையை உணரும் காதுகள்  ஐந்தறிவு.


🕸️ *இன்றைய தற்சோதனை*


🕸️ ஆறாவது அறிவு மனிதனுக்கு என்று பெருமையோடு சொல்லிக் கொள்ளும் நமக்கு ஆறாவது அறிவு என்பது என்ன..? எதனுடைய, அடிப்படையில் நமக்கு ஆறறிவு இருக்கிறது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். உலகத்தில் பொதுவாக சொல்வதுண்டு, பகுத்தறிவே ஆறாவது அறிவு   என்பதை ஏற்றுக் கொண்டால் ஓர் அறிவு இனமாகிய செடிகளுக்கே இது உண்டு. நாம் தொட்டால் சுருங்கி கொள்கிறது. பக்கத்தில் உள்ள மற்ற இலை, கொடி, செடி அதன் மீது படும்போது சுருங்குவதில்லை. ஆனால் நாம் தொடும்போது சுருங்குகிறது இது பகுத்தறிவு தானே.


🕸️ *இன்றைய பண்புப்பயிற்சி*


🕸️ ஆக பகுத்தறிவு என்பது ஆறாவது அறிவு கிடையாது. அதற்கும் மேலாக தன்னைத்தானே உணர்வதற்கான அறிவே ஆறாவது அறிவு. தன்னை உணர்ந்து கொண்டு தனக்கு மூலமான ஆற்றலையும் (இறைவன்) உணர்ந்து கொள்வதற்காகவே இந்த மனித உருவத்திற்கு  இப்பூமியில் நாம் தன்மாற்றம் பெற்றிருக்கிறோம். தன்னை தானே உணரக்கூடிய ஆறாவது அறிவில், பண்பில் உயர்வோம். எவரொருவர் எவரொருவருக்கும் துன்பம் செய்யாமலும், பிறர் படும் துன்பங்களை போக்கியும், தானும் வாழ்வில் உயர்ந்து பிறர் உயரவும் உதவுவதே ஆறாவது அறிவாகும். வாழ்க வளமுடன்...


🕸️ *குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*


🕸️ *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம் நாளையும் தொடரும்...*


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯


          *🌸வாழ்க வையகம்🌸*

    *🍁வளர்க வேதாத்திரியம்🍁*

          *🌸வாழ்க வளமுடன்🌸*


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯ 

தாய்க்கு பின் தாரம் மறந்து விடாதீர்கள்


இல்லற வாழ்வில் கணவன்-மனைவி தாம்பத்திய உறவை வர்ணிக்கும் அருமையான கண்களில் நீரை வரவழைக்கும் வரிகள்.*🥺


📷 ஒரு கணவர் அவரது மனைவியுடன் வாழ்ந்த வாழ்க்கையின் அனுபவத்தை எழுதுகிறார்...


📷 எழுபத்தைந்து வயதில்..... ஆதரவு இன்றி நிக்குது மனசு...


📷 நாற்பதைந்து வருடம் - ஒரு நாளாவது அவளை கொண்டாடி இருக்கலாம்....


📷 என் கோபத்தை தள்ளுபடி செய்து ஒரு நாளாவது அவளை கொண்டாடி இருக்கலாம்....


📷 அவள் சமையலை ஒருமுறையாவது நான் மனம் நிறைய பாராட்டி இருக்கலாம்...


📷 ஒரு நாளாவது நான் சமையல் செய்து அவளுக்கு ஊட்டி இருக்கலாம்...


📷 ஒரு நாளாவது அவளுக்கு பதில் - நான் அவளது துணியையும் சேர்த்து துவைத்து இருக்கலாம்...


📷 ஒரு நாளாவது TV யையும், Mobil லையும் அணைத்துவிட்டு, அவளை கொஞ்சி இருக்கலாம்...


📷 ஒரு நாளாவது வேலை தளத்தின் கோபத்தையும் எரிச்சலையும் அங்கேயே விட்டு விட்டு வந்து இருக்கலாம்...


📷 ஒரு நாளாவது, என் விடுமுறை நாட்களில் - அவளை வெளியிளே அழைத்து சென்று இருக்கலாம்...


📷 ஊர் ஊராய் சுற்றி அவளை உற்சாகப்படுத்தி இருக்கலாம்...


📷 அவள் விரும்பி கேட்காத போதும் - ஒரு புடவை வாங்கி கொடுத்து இருக்கலாம்...


📷 ஒரு மாசமாவது− என் முழு சம்பளப் பணத்தை அவளிடமே கொடுத்து இருக்கலாம்...


📷 ஒரு நாளாவது காலையில் அலாரத்தை கொஞ்சம் அணைத்து வைத்து அவளை தூங்க விட்டு இருக்கலாம்...


📷 நீ சாப்பிட்டியா என்று அவளை ஒரு நாளாவது கேட்டு இருக்கலாம்...


📷 நீயும் வா என்னுடன் வந்து சாப்பிடு என்று ஒரு நாளாவது சொல்லி இருக்கலாம்...


📷 அவள் உடல் நலத்தைப் பற்றி ஒருமுறையாவது விசாரித்து இருக்கலாம்...


📷 அவள் தன்னை கவனிப்பதை விடுத்து பிள்ளைகளை மட்டும் கவனிப்பதை கண்டு நான் கொஞ்சம் - அவளை


கவனித்து இருக்கலாம்...


📷 அவள் நோயில் விழுந்த போது நான் கடன் பட்டேனும் அவளை காப்பாற்றி இருக்கலாம்...


📷 என் தாயே! தாரமே ! − நீ என்னுடன் இருந்த போது நான் கம்பீரமாய் வாழ்ந்தேன்...


📷 நீ என்னை விட்டு போனதும் நான் பலமுறை கால் தடுக்கி விழுகிறேன்...


📷 என்னை தூக்கி விடவும் மூத்தவனுக்கு நேரம் இல்லை...


📷 தேனீர் ஏதாவது போட்டுத்தரக் கேட்டால் இளையவளுக்கு சினம் வருது...


📷 என் மனைவியே உன்னை நான் தினமும் கொண்டாடி இருக்க வேண்டும்...


📷 நான் தவறுகள் இழைத்ததற்கு என்னை நீ மன்னித்து விடு...


📷 மூச்சு இழந்த - உன் புகைப்படத்துக்கு தினம் தினம் முத்தமிட்டு உன்னிடம் மன்னிப்பு கேட்கிறேன்...


மனைவியே! என்னை மன்னித்து விடு...


📷 மீண்டும் ஒரு பிறப்பு இருக்கும் என்றால் நீயே என் மனைவியாய் வந்து விடு... நான் உன்னை கொண்டாட வேண்டும்...


📷 எழுபத்தைந்து வயதில்... இந்த நிலை யாருக்கும் வராமலிருக்க....


உங்கள் மனைவியை தினமும் நீங்கள் நேசியுங்கள்


வாழ்க்கை வசந்தமாகும்.


*தாய்க்கு பின் தாரம்  மறந்து விடாதீர்கள்*🤗

Wednesday, October 11, 2023

இறைவனின் நிழல்

மனதினுடைய இயக்க நிலைகளை இப்போது ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொள்வோம்.  ஜீவகாந்தமானது உடலில் உள்ள உயிர்ச்சக்தித் துகள்களின் விரைவான சுழற்சியினால் எழும் அலைகளே.  ஒரு உடலில் உள்ள உயிர்ச்சக்தித் துகள்களிலிருந்து இவ்வாறு வெளியாகும் அலைகள் அனைத்தும் உடலில் சுழன்று கொண்டே இருக்கின்றன.*_


_பொதுவாக, எந்த ஆற்றல் சுழற்சி பெற்றாலும் திண்மை உடைய பகுதி மத்தியில் போய்ச் சேர்வதும், லேசான பகுதி புறத்தே நிற்பதும் துல்லியச் சமதளச் சீர்மை (Specific Gravity) தத்துவம் ஆகும்.  இந்த இயல்பின்படி  ஜீவகாந்தத்தின் பெரும்பகுதி தனது சுழலியக்கத்தினால் உடலின் மையப் பகுதிக்கு வந்து சேருகிறது.  அங்கு இறுகி குறுகி அழுத்தம் பெற்று ஜீவகாந்த நிலைக்களமாக அமைகிறது.  இதனைக் கருமையம் என்றும், ஆன்மா என்றும் வழங்குகிறோம்._

.

_*மனிதன் எந்தச் செயல் செய்தாலும் உடலில் ஓடிக் கொண்டிருக்கும் ஏற்படும் தாக்கங்கள் அனைத்தும் கருமையத்தில் போய்ச் சேருகின்றன.  இந்த நிகழ்ச்சியை வினைப்பதிவு என்று கூறுகிறோம்.  பதிவு என்றால் இங்கு எழுதி விளக்கக் கூடியதோ  அல்லது புலன்களுக்கு எட்டும்படியாக அடையாளம் கொடுக்கக் கூடியதோ அல்ல.*_


_கருமையத்தில் இறுகிக் குறுகி நிலை பெற்றிருக்கும் ஜீவகாந்த அழுத்தம் ஒவ்வொரு செயல் அல்லது அனுபோக அனுபவங்களுக்கும் ஏற்ப  தரமாற்றம் பெற்றுக் கொண்டே இருக்கிறது.  அப்படி மாற்றம் பெற்ற தன்மைகள் அதே மன அலைச் சுழல் மறுபடியும் வரும்போது, மூளையின் காந்த அலைகளால் விரித்துக் காட்டப்படுகிறது.  அப்பொழுது உண்டாகும் அகக் காட்சியே எண்ணங்கள்._


_*இறைநிலைக்கும் மன நிலைக்கும் உள்ள தொடர்பை உணர வேண்டும் என்றால் அவற்றை உருவத்துக்கும் அதிலிருந்து தோன்றும் நிழலுக்கும் ஒப்பிடலாம்.  உருவத்தை விட்டு நிழல் பிரிவதே இல்லை.  ஆனால் நிழலை எடுத்துக்காட்டவல்ல ஒளியானது உருவத்தின் மீது படும் கோணத்திற்கு ஏற்ப  நிழலானது அளவில் மாறுபடும்.  அதுபோன்று மனித மனம் இறைநிலையை விடுத்து இயங்குவதே இல்லை.*_

.

_*- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.*_

மனதின் நிறைவுநிலையே பேரின்பம்.

வேதாத்திரிய விழாக்கு-20


*எது பேரின்பம்? பேரின்பத்தில்  வாழ்பவர் யார்?*


தன்னையும், கடவுளையும், உடல் மன துன்பமில்லாமல் வாழும் அறிவையும் அறிந்த *"மனதின் நிறைவுநிலையே பேரின்பம்."* 


தன்னையும் கடவுளையும் ஒன்றாக அறிந்தவரே, பிரபஞ்சத்திலுள்ள அனைத்தும் அனைவரும் நானே என்பதை அறிந்திருப்பார். 


அவருக்கே அனைத்து உயிர்களையும் தனக்கு சமமாக மதித்து ஒழுகும் அன்பு மலர்ந்திருக்கும்.


பொருள், புகழ், செல்வாக்கு புலனின்பம் நான்கும் போதும் என்ற மனநிறைவும் அமைதியும் இருக்கும்.

ஒழுக்கம், கடமை, ஈகை ஆகிய அறநெறிகளைக் கடைப்பிடித்து, உலக இன்பங்களை அளவோடு அனுபவித்து உடல் நலத்தோடும், பொருள் வளத்தோடும், உயர்புகழோடும்  துன்பமில்லாத நிலைத்த இன்பத்தில் வாழ்வார்.

வாழ்க வேதாத்திரியம். வாழ்க வளமுடன்

உருகுங்கள் உருமாறுங்கள். உருக்குங்கள் உரு மாற்றுங்கள்

சிகரம் தொடு! 

-------------------------


உங்களுக்கு..

உங்களை.


உங்களுக்கு எத்தனை

நபர்களை தெரியும்

என்பதைவிட,

உங்களை எத்தனை

நபர்களுக்குத் தெரியும்

என்பதே முக்கியம்.


உங்களுக்கு யாரெல்லாம்

நண்பர்கள் என்பதைவிட,

உங்களை யாரெல்லாம்

நண்பர்களாக ஏற்றுக்

கொண்டுள்ளார்கள்

என்பதே முக்கியம்.


உங்களுக்கு எத்தனை பேரை

பிடிக்கும் என்பதைவிட,

எத்தனை பேருக்கு

உங்களை பிடிக்கும்

என்பதே மிக முக்கியம்.


தினமும் எத்தனை பேரை

நீங்கள் நினைக்கிறீர்கள்

என்பதைவிட,,

எத்தனை பேர் உங்களை

நினைக்கிறார்கள்

என்பதே முக்கியம்.


நீங்கள் பேச விரும்புவர்கள்

யாரெல்லாம் என்பதைவிட,

யாரெல்லாம் உங்களிடம்

பேச விரும்புகிறார்கள்

என்பதே முக்கியம்.


யோசியுங்கள்.

சிந்தித்து பாருங்கள்.


இது ஒருபுறம் இருக்கட்டும்.

உங்களை ஏன் உங்களுக்கு

பிடிக்கும்...என்ன காரணங்கள்

கண்டு பிடியுங்கள்.


பேசும் திறனா?

நகைச்சுவை உணர்வா?

உழைப்பா?

அறிவாற்றலா?

பழகும் தன்மையா?

ஒழுக்கமா?

அணுகுமுறையா?

கடமை உணர்ச்சியா?

புன்னகையா?

நேர்மையா? 


இப்படி பல இருந்தாலும்

உங்களின் உண்மையான

சக்தி, பலம் எதில் என்று

கண்டுபிடிக்க வேண்டும்.


இருப்பதை பலப்படுத்த வேண்டும்

இல்லாததை வளர்க்க வேண்டும்.


நம்மை நாமே செதுக்குவதே

தலை சிறந்த செயலாகும்..


கல்லாக இருக்கும் நாம்

நல்ல சிலையாக வேண்டும்.


மரமாக இருக்கும் நாம்

புல்லாங்குழலாக வேண்டும்.


ஒரு சிற்பி

ஒரு சிலையை உருவாக்கும்போது,

ஒரு சிலை மட்டும் அல்ல,

ஒரு சிற்பியும் உருவாகுகிறான்.


அதுபோல,


நம்மை செதுக்கி உருவாக்கும் போது

நம்மை சுற்றி உள்ளவர்கள்

நம்மை விரும்பும் மனிதர்களாக

உருமாறுகிறார்கள்..


உருகுங்கள்

உறுமாறுங்கள்.


உருக்குங்கள்

உறு மாற்றுங்கள்.


வெற்றி நிச்சயம்


Monday, October 2, 2023

பல்லக்கு தூக்கிகள்

 


முருகன் ஊரில் ஒரு பெரிய செல்வந்தர். மிகவும் உதவும் குணம் உடையவர். எங்கு சென்றாலும் பல்லக்கில் தான் செல்வார். இதற்காகவே எட்டு உடல் வலிமையுடைய ஆட்களை தெரிவு செய்து பல்லக்கு தூக்கிகளாக வேலைக்கு வைத்திருந்தார். நேர நேரம் சத்தான உணவு கொடுத்து வந்தார் முருகன். சத்தாக உண்டு வேலை நேரம் போக மீதி நேரத்தில் ஓய்வெடுத்து  வலிமையை ஏற்றி வைத்திருந்தனர் அவ்வெட்டு பெரும்.
ஒரு நாள் முருகன் பக்கத்து ஊரில் நடக்கும் நண்பரின் குடும்ப விழாவிற்கு பல்லக்கில் சென்றிருந்தார். திரும்பும் வழியில் ஒரு பசு மாடு தன் கன்று குட்டியை காணவில்லை என்று தவித்து கத்திக் கொண்டிருப்பதை கண்டார். மேலும் பயணத்தை தொடராமல் பல்லக்கை அங்கேயே ஒரு மரத்தடியில் இறக்கும் படி கட்டளை இட்டார் முருகன்.  பல்லக்கு தூக்கிகளை கூப்பிட்டு அந்த பசுவின் கன்றை தேடுமாறு கூறினார்.  அதற்கு பல்லக்கு தூக்கிகள் தங்களால் அது  முடியாது என்றனர். மேலும் பல்லக்கு தூக்குவது மட்டுமே தங்கள் வேலை, பிற வேலைகளை தங்களால் செய்ய முடியாது என்று மறுதலித்தனர்.
சிறிது யோசித்தார்  செல்வந்தர் முருகன். பின் சரி பல்லக்கை தூக்குங்கள் என்றார். இங்கிருந்து கிழக்கு நோக்கி செல்லுங்கள் என்றார் முதலில். செல்லும் பாதையில் கண்ணும் கருத்துமாக கன்றுகுட்டி எங்காவது கண்ணில் புலப்படுகிறதா என்று தேடினார். ஒன்றும் புலப்படவில்லை. மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே பல்லக்கை திருப்புங்கள் என்றார். அங்கிருந்து மேற்கு நோக்கி செல்லுங்கள் என்று கட்டளை இட்டார். போகும் வழியெல்லாம் வாஞ்சையாக கன்றுக்குட்டியை தேடினார். இத்திசையிலும் கன்று புலப்படவில்லை. மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே பல்லக்கை திருப்புங்கள் என்றார். அங்கிருந்து தெற்கு திசை நோக்கி செல்லுங்கள் என்று கட்டளை இட்டார். இங்கும் வழியெங்கும் கன்று கண்ணுக்கு அகப்படவில்லை.
ஒவ்வொரு திசையாக மாறி மாறி பல்லக்கை தூக்கி சென்ற பல்லக்கு தூக்கிகள் சோர்வடைந்தனர். ஐயா நாங்கள் கன்றை தேட மாட்டோம் என்று சொன்னதற்காக இப்படி எங்களை பழி வாங்குகிறீர்களா என்று வினவினர். நாங்கள் அனைவரும் சோர்வடைந்து விட்டோம் என்றனர். என்னப்பா இப்படி சொல்கிறீர்கள் உங்களுக்கு கஷ்டம் தரக் கூடாது என்று தான் முதலில் கன்றை தேடி கொண்டு வாருங்கள் என்று கூறினேன். நீங்கள் தான் குறிப்பிட்ட வேலையை தவிர மற்ற வேலைகளை செய்ய இயலாது என்றீர்கள். பிறகு தானே நானே தேட புறப்பட்டு விட்டேன், இதென்ன இதற்கு இப்படி கூறுகிறீர்களே  என்றார் பதிலுக்கு.
சரி எல்லா பக்கமும்  தேடி விட்டோம் மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே பல்லக்கை திருப்புங்கள் என்றார் முருகன். அங்கிருந்து வடக்கு  திசை நோக்கி செல்லுங்கள் என்று கூறினார். இங்கு ஒரு வழியாக தாய் பசு தொலைத்த கன்று கண்ணுக்கு அகப்பட்டது. மிகவும் மகிழ்ச்சியடைந்த முருகன் கன்றுக்குட்டியை  தாய் பசுவிடம் சேர்த்து வைத்தார்.
இப்பல்லக்கு தூக்கிகள் முருகன் சொல்வதை முதலிலேயே கேட்டு திசைக்கு இரண்டு பேராக கன்றை தேடி சென்றிருந்தால் எவ்வளவு சுலபமாக கன்றை தேடி கண்டு பிடித்திருக்கலாம். தேவை இல்லாமல் இதை செய்ய மாட்டேன் அதை செய்ய மாட்டேன் என்று பேசி கஷ்டப்பட்டு பல்லக்கையும் தூக்கி சுமந்துகொண்டு தேடும் அவலத்திற்கு ஆளாகி இருக்க மாட்டார்கள் அல்லவா?
நம்மைச் சுற்றி இருக்கும் வேலைகளில் சூழ்நிலைக்கேற்ப நம்மால் இயன்ற அனைத்து வேலைகளையும் நாம் திறம்பட செய்யவேண்டும். அது எனது வேலை இல்லை, இது எனது வேலை இல்லை என்று தட்டி கழிக்கலாகாது. அப்படி தட்டி கழித்தால் அதில் சில வேலைகள் பெரிய சுமையாக மீண்டும் நம் தலையிலே விழும்.

                                                                                                                                                                       

Veerapandian.K

Assistant Professor/Mech

www.pandianprabu.weebly.com

Thursday, September 28, 2023

சத்ரபதி சிவாஜியைப் பற்றி கொஞ்சம் சொல்லித் தாருங்கள். 🙏



1. “என் ராஜ்யத்தில், சிவாஜியைத் தோற்கடிக்க ஓர் ஆள் கூடவா இல்லை?” என்று உள்ளக் குமுறலுடன் கேட்டார், பீஜப்பூர் சுல்தான் அலி அதில் ஷாவின் பேகம்.


2. “அன்று, சிவாஜி என் விரல்களை மட்டும் நறுக்கி எறிய வில்லை; என் கர்வத்தையும் கூடவே நறுக்கி எறிந்து விட்டார்; என் கனவில் கூட சிவாஜியைக் காண நான் பயப்படுகிறேன்” என்று அபு தாலிபன் அரசனான ஷயிஸ்டகான் கூறியிருக்கிறார்.


3. சிவாஜியின் அம்பர்கண்ட் யுத்தம், கின்னஸ் புத்தகத்தில் பதிவாகி உள்ளது. 30000 உஸ்பெக் வீரர் படையை, வேறும் 1000 பேர் கொண்ட சிவாஜியின் படை நிர்மூலமாக்கியது மட்டுமல்லாமல், போர் திட்டமிடலுக்கு இது சிறந்த உதாரணமாக விளங்குகிறது. இது தான் உலக சாதனை.


4. நேதாஜி சுபாஷ் சந்திர போஸிடம் ஹிட்லர், “உங்கள் தேசத்திலிருந்து ஆங்கிலேயர்களை விரட்டி அடிக்க  ஹிட்லர் தேவையில்லை; சிவாஜியின் சரித்திரத்தை போதித்தாலேயே போதும்” என்று சொன்னார்.


5. "சிவாஜி மட்டும் இங்கிலாந்தில் பிறந்திருந்தால், நாங்கள் இந்த பூமியை மட்டுமல்ல, அண்ட சராசரத்தையும் ஆண்டிருப்போம்” என லார்ட் மவுண்ட்பேட்டன் சொன்னார்.


6. “சிவாஜி இன்னும் பத்தாண்டுகள் உயிரோடிருந்திருந்தால், நாங்கள் இந்தியாவைப் பற்றி நினைத்துக் கூடப் பார்த்திருக்க முடியாது” என்று ஒரு பிரிட்டிஷ் கவர்னர் சொல்லியிருக்கிறார்.


7. “சிவாஜி மாதிரி சண்டையிட்டால், நாம் எளிதாக சுதந்திரத்தைப் பெற்று விடலாம்” என நேதாஜி புகழ்ந்திருக்கிறார்.


8. “சிவாஜி என்பது ஒரு பெயர் மட்டுமல்ல; இளைஞர்களை ஊக்குவிக்கும் ஒரு சக்தி; இதனைக் கொண்டு நாட்டு விடுதலையை அடைய முடியும்” என சுவாமி விவேகாநந்தர் சொல்லியிருக்கிறார்.


9. "சிவாஜி அமெரிக்காவில் பிறந்திருந்தால், அவரை 'சூரியன்' என்றே போற்றியிருப்போம்" என அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பாரக் ஒபாமா புகழ்ந்துள்ளார்.


10. சிவாஜி, தன் 30 ஆண்டு காலத்தில், இரண்டு தடவை தான் நம் நாட்டு எதிரிகளுடன் மோதியுள்ளார். பிற யுத்தங்கள் யாவும், அயல் நாட்டுப் படைகளுக்கு எதிராகத் தான்.


11. சிவாஜி மோதியதெல்லாம் கொடூரத் தாக்குதலுக்குப் பெயர் பெற்ற பதான், துருக்கி, ஆஃப்கானிஸ்தான், மங்கோலியா படைகளுக்கு எதிராகத் தான். இவற்றில் ஒன்றில் கூட சிவாஜி தோல்வியே கண்டதில்லை.


12. ஈரான், சிவாஜியை முறியடிக்க கடற்படையை அனுப்ப முடிவு செய்த போது, சிவாஜி, இந்தியாவின் முதல் கப்பற்படையை ஏற்படுத்தினார். ஆனால், அது முழு அளவில் உருவாக்கப் படுவதற்கு முன், சிவாஜி தன் 50-வது வயதில் மரணமடைந்தார். 

(பிறந்தது: 19-2-1630; இறந்தது  3-4-1680).


13. காபூலில் இருந்து காந்தஹார் வரை என் தைமூர் குடும்பம் மொகலாய சுல்தான்களின் ஆட்சியை நிறுவியது. ஈராக், ஈரான், துருக்கி போன்ற பல நாடுகளை என் படைகள் வென்று வந்துள்ளன. 


ஆனால், இந்தியாவில் தான் சிவாஜி எனக்கு பெரும் தடையாக இருந்து விட்டார். என் சக்தி முழுதையும் செலவிட்டும், அவரை வெற்றி கொள்ள முடியவில்லை.


அல்லாவே..! எனக்கு, பயமில்லாத, துணிச்சலான ஓர் எதிரியைக் கொடுத்து விட்டாய். இவ்வுலகின் அஞ்சா நெஞ்சன் உன்னிடம் வருகிறான். அவனுக்கு உன் சொர்க்கத்தின் வாசலைத் திறந்து வைத்திரு” 

என்று சிவாஜியின் மறைவை ஒட்டி நடந்த நமாஸ், பிரார்த்தனையில் மொகலாயச் சக்கரவர்த்தி அவுரங்கசீப் படித்துள்ளார்.


14. பாஸ்டன் பல்கலைக் கழகத்தில், “மேலாண்மைக்கு குரு சிவாஜி” என்று ஒரு பாடம் இன்றும் போதிக்கப் பட்டு வருகிறது.


இந்தியாவில் தான் சிவாஜி போன்ற மாவீரர்களைப் பற்றியெல்லாம் பள்ளிகளில் சொல்லிக் கொடுக்கப் படுவதில்லை. 


அப்புறம் எப்படி தேசம், தியாகம், வீரம், விவேகம், புத்திசாலித்தனம், அஞ்சாநெஞ்சம் போன்றவை வரும்?


வாய் சவடால் அடித்துக் கொண்டு, அயோக்கிய அரசியல்வாதிகளுக்குப் புகழாரம் சூட்டிக் கொண்டு, டாஸ்மாக்குக்குப் போய்க் கொண்டு, 

வெட்டிப் பேச்சுப் பேசிக் கொண்டு இருக்கத்தான் நேரம் சரியாக இருக்கு..!


வருங்கால நம் சந்ததியினரையாவது வீரமாக, விவேகமாக, நாட்டுப்பற்றுடன் இருக்க சத்ரபதி சிவாஜி மகாராஜ் பற்றி சொல்லித் தருவோம்... ❤️🙏

கர்ணன் கற்றது வித்தை அல்ல, வேதம்!


கர்ணன் பிறப்பால் சத்ரியன். வீரத்துக்குக் குறைச்சல் இல்லை. இருந்தாலும் குரு வேண்டுமே?


துரோணாச்சாரியார் மறுத்துவிட, கிருபாச்சாரியாரிடம் ஒரு நாள் அதிகாலை போகிறான் கர்ணன். மாணவர்களின் திறமையை சோதிக்க, வானத்தில் பறக்கும் ஒரு பறவையை குறிபார்த்து வீழ்த்தச் சொல்கிறார் குரு.


அர்ஜுனன் ஒரே அம்பில் பறவையை வீழ்த்திவிட்டு தேரேறிப் போய்விட்டான். 


இப்போது கர்ணனின் முறை.  அம்பை நாணில் பூட்டியாயிற்று. ஒரு கணம் பறவையை வானில் குறி பார்த்தவன் வில்லையும் அம்பையும் கீழே வைத்து விட்டான்.


மிகச் சிறந்த வில் வீரனான கர்ணன் அப்படிச் செய்தது குருவுக்கு அதிசயம். காரணம் கேட்கிறார். 


குருவே இது மிகவும் அதிகாலை நேரம்.  இந்த நேரத்தில் ஒரு பறவை விண்ணில் பறக்கிறது என்றால் நிச்சயம் தன் குஞ்சுகளுக்கான உணவைக் கொண்டு போகிறது என்றுதான் பொருள்.  இப்போது திறமைக்காக அதைக் கொன்றுவிட்டால் நான் வீரனாவேன். ஆனால் அந்த இளம் குஞ்சுகள் அனாதை ஆகிவிடும்.  எனவே நான் கொல்ல மாட்டேன் என்றானாம்.


கலங்கிப்போன குரு சொன்னாராம், "கர்ணா நீ கற்றது வித்தை அல்ல வேதம்" என்று பாராட்டினார் !!!

பணத்தாலும், பதவியாலும், அதிகாரத்தாலும் நீங்கள் பலமானவர்களாக இருக்கலாம். அந்த பலத்தை உன்னை நேசிப்பவர்களிடமோ, அல்லது உன்னை விட பலம் குறைந்தவர்களிடமோ காட்டாதீர்கள்.. 


வாழ்க்கை ஒரு வட்டம். தொடங்கிய இடத்துக்கே வந்தாகனும் .

Wednesday, September 27, 2023

கார்ல் மார்க்ஸ் சொன்ன காட்டு பன்றி கதை


 கார்ல் மார்க்ஸ் ஒருமுறை கூறினார்: "தலைமுறைக்கு ஒரு சுதந்திரத்தை அகற்று, விரைவில் உங்களுக்கு சுதந்திரம் இருக்காது, யாரும் கவனித்திருக்க மாட்டார்கள்.


 ஒரு நாள் வகுப்பு ஆய்வகத்தில் இருந்தபோது, ​​ஒரு இளைஞன் தன் முதுகைத் தடவி நீட்டுவதைப் பேராசிரியர் கவனித்தார்.

  முதுகு வலித்தது போல.


 என்ன விஷயம் என்று அந்த இளைஞனிடம் பேராசிரியர் கேட்டார்.  தனது முதுகில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்துள்ளதாக அந்த மாணவர் கூறியுள்ளார்.  அவர் தனது சொந்த நாட்டில் கம்யூனிஸ்டுகளுடன் சண்டையிட்டபோது சுடப்பட்டார், அவர்கள் தனது நாட்டின் அரசாங்கத்தை தூக்கி எறிந்து புதிய கம்யூனிஸ்ட் ஆட்சியை நிறுவ முயன்றனர்.


 அப்போது, ​​அந்த மாணவன் பேராசிரியையைப் பார்த்து ஒரு விசித்திரமான கேள்வியைக் கேட்டான்.


 "காட்டுப் பன்றிகளைப் பிடிக்கத் தெரியுமா?"


 பேராசிரியை ஜோக் என்று நினைத்து பஞ்ச்லைன் கேட்டார்.  இது நகைச்சுவையல்ல என்று அந்த இளைஞன் கூறினான்.


 "காடுகளில் பொருத்தமான இடத்தைக் கண்டுபிடித்து தரையில் சோளத்தைப் போட்டு காட்டுப் பன்றிகளைப் பிடிக்கிறீர்கள். காட்டுப் பன்றிகள் சோளத்தைக் கண்டுபிடித்து இலவச உணவை சாப்பிட ஒவ்வொரு நாளும் வரத் தொடங்குகின்றன.


 அவர்கள் தினமும் வந்து பழகும்போது, ​​அவர்கள் வழக்கமாக வரும் இடத்தில் ஒருபுறம் வேலி போடுகிறீர்கள்.


 முதலில், காட்டுப் பன்றிகள் பயப்படுகின்றன, ஆனால் அவை வேலியுடன் பழகியதும், அவை மீண்டும் சோளத்தை சாப்பிடத் தொடங்குகின்றன, நீங்கள் வேலியின் மற்றொரு பக்கத்தைப் போடுவீர்கள்.


 அதற்கு பழகி மீண்டும் சாப்பிட ஆரம்பிக்கிறார்கள்.  வேலியின் நான்கு பக்கங்களும் கடைசிப் பக்கத்தில் ஒரு வாயிலுடன் இருக்கும் வரை நீங்கள் தொடர்க�

Saturday, September 23, 2023

சிந்தனை தத்துவம்

 🪷☘️🪷☘️🪷☘️🪷☘️🪷☘️


🪷🦜🪷 பற்றற்று வாழ்வதென்றால் எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஓடிப்போய் சந்நியாசி ஆவதல்ல.🪷

🪷🦜🪷 இருப்பது போதும், வருவது வரட்டும், போவது போகட்டும், மிஞ்சுவது மிஞ்சட்டும் என்று சலனங்களுக்கு ஆட்படாமல் இருப்பதே பற்றற்ற வாழ்க்கையாகும்.


🪷🦜🪷 எதுவுமே தேவை இல்லை என்று இருந்தவர்கள் நீயே போதும் என மாறுவதும், நீயே போதும் என்று இருந்தவர்கள் எதுவுமே தேவை இல்லை என மாறுவதுமே வாழ்க்கை கற்றுக்கொடுக்கும் ஆக சிறந்த (ஏ)மாற்றம்.🪷


🪷🦜🪷 மனம் பக்குவப்பட்டால், பாதை தெளிவாகும். பாதை தெளிவானால், பயணம் எளிதாகும், பயணம் எளிதானால் வாழ்க்கை இனிதாகும்.🪷

Friday, September 22, 2023

யாருக்கு எதைத் தர வேண்டும், எப்படித் தர வேண்டும் என்பது இறைவனுக்குத் தெரியும்


இறைவன் கொடுக்க வேண்டுமென்று தீர்மானித்ததை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.


காசியபர் எனும் அந்தணர் கல்வி கேள்விகளில் சிறந்தவர். 


என்ன காரணத்தாலோ, அவருக்கு பார்வை குறைபாடு ஏற்பட்டு, 

ஒரு கட்டத்தில், முழுவதுமாகவே தெரியாமல் போனது. 


பார்வை கிடைக்க வேண்டி, திருச்செந்தூர் முருகப் பெருமானை சரணடைந்தார். 


அதிகாலையில் எழுந்து, கடல் மற்றும் நாழிக் கிணற்றில் நீராடுவதும், 

அவன் நாமத்தை பாராயணம் செய்வதுமாக திருச்செந்தூரான் சன்னிதியே கதியென்று நெடுநாட்களாக

கிடந்தார்.


பிரார்த்தனையின் பலனாக, திடீரென்று ஒரு நாள், அவருக்கு மங்கலாகப் பார்வை தெரியத் துவங்கியது. 


மகிழ்ச்சியில் கூத்தாடினாலும், 'திருச்செந்தூரா. உன் அருளால், 

என் பார்வை முழுமையாகத் தெரியாதா,என வேண்டி, கண்ணீர் விட்டார்.


அப்போது, கோவிலுக்கு வந்த பக்தர் ஒருவர் அருளால் ஆடிய

படியே "காசியபா... 

என் பக்தனும், இந்நாட்டு அரசனுமான ஜகவீரன் இங்கு வருகிறான்; 


அந்த உத்தம பக்தனின் கை உன் மீது பட்டதும், உனக்குப் பார்வை முழுமையாகத் தெரியும்..

என்றார்.


அதைக் கேட்டதும், அளவு கடந்த மகிழ்ச்சி ஏற்பட்டாலும், 

அதே

சமயம் கலக்கமாகவும் இருந்தது. 


காரணம், பார்வையற்றவர்

களை அரசர் பார்க்க கூடாது என்பது அக்கால சம்பிரதாயம்.


இந்த மனப் போராட்டத்தில் காசியபர் அமர்ந் திருக்க சிறிது நேரத்தில்,

கோவிலுக்கு வந்தார் அரசர் ஜகவீரன். 


அருள் வாக்கு பற்றிய தகவல் அவரிடம் எடுத்துரைக்கப்

பட்டது. 


ஆனால், 

அரசரோ, " நான் அரசன் என்பதால், அதிகாரம் வேண்டுமானால் என்னிடம் இருக்கலாமே தவிர, 


அற்புதம் 

செய்யக் கூடிய அளவிற்கெல்லாம் சக்தி எதுவுமே என்னிடம் கிடையாது..." என்று சொல்லி, 

சாமி தரிசனம் செய்வதிலேயே முனைப்பாக இருந்தார்.


அன்றிரவு, 

அரசர் ஜகவீரன், கோவிலிலேயே தங்க வேண்டி இருந்ததால், சண்முக விலாச மண்டபத்தில் வந்து அமர்ந்தார். 


திடீரென்று அவருக்கு என்ன தோன்றியதோ, " அந்த பார்வையற்றவரை அழைத்து வாருங்கள்.."  என்றார்.


அரசு பணியாளர்கள் வந்து சம்பிரதாயத்தை எடுத்து சொல்லி மறுத்த போதும், பிடிவாதமாக அவரை அழைத்து வரச் சொன்னார் அரசர்.


காசியபரைப் பார்த்ததும், 

மனம் கசிந்த அரசர், நீங்கள் நாளைக் காலை நீராடி, முருகன் சன்னிதிக்கு வாருங்கள்; 


அவன் திருவருள்படியே நடக்கட்டும்..."  என்றார்.


மறுநாள் காலையில், "முருகா, 

உன் சொற்படி இவருக்குப் 

பார்வை வராவிட்டால், 


நானே, 

என் தலையை அறுத்துக் கொண்டு இறப்பேன்..." என்று கூறி, 

விபூதியை எடுத்து காசியபரின் கண்களில் ஊதி, அவர் கண்களை கைகளால் மெல்ல வருடினார் அரசர்.


அடுத்த வினாடி, காசியபருக்கு பார்வை திரும்பியது. 


அனைவரும் அரசரை வாழ்த்த, அரசரோ 

இது முருகன் எனக்களித்த 

உயிர்ப்

பிச்சை, 


ஆறுமுகனின் அருள் இதை விடப் பெரியது.

எனக் கூறி, அமைதியாக வெளியேறினார்.


அரசரின் கரங்களால் காசியபரின் துயர் தீர்த்த ஆறுமுகன், நம் துயரையும், 

எவர் மூலமாகவாவது நிச்சயம் களைவார். 


அந்த ஜகவீரன் எனும் அரசரின் மகன் தான் *வீரபாண்டிய கட்டபொம்மன்*...



படிக்காதமேதை...ன்னு சும்மாவா சொல்றாங்க

 மாதம்தோறும் உழைக்காமலேயே அனைவருக்கும் இலவசமாக பணம் கொடுக்கும் திட்டத்தை

செயல்படுத்தினால் அரசு என்னவாகும்? என்று படிக்காத மேதை காமராஜர் அந்த காலத்திலேயே ஒரு நிகழ்ச்சியில் தெளிவாக பேசி உள்ளார்.


பெருந்தலைவர் 

#காமராஜர் அவர்கள் முதல் அமைச்சராக இருந்த காலத்தில்...

தஞ்சாவூர் வெண்ணாற்றங்கரை நீரேற்று நிலையத்தில் ஒரு நிகழ்ச்சி...


நிகழ்ச்சியில் படிக்காத மேதை காமராஜர் தனக்கே உரிய பாணியில் பேசியது...


நாட்ல இருக்கிற எல்லாருக்கும் பணம் வேணும்.....


ஏதாச்சும் இயலாமையை சொல்லி அரசாங்கம் பண உதவி பண்ணனும்னு கேட்கிறாங்க...

எனக்கு ஒன்னும் பிரச்சினை இல்லை....


பண நோட்டு அடிக்கிற மிஷின் எங்க கிட்டே தான் இருக்கு.....

எவ்வளவு வேண்டுமானாலும் அச்சடிக்கலாம்னேன்...


அடிச்சு உங்கள் இஷ்டப்படியே ஆளுக்கு ஒரு மூட்டை பணம் கொடுத்துடுவோம்னேன்...


இப்போ பணம் இல்லாதவங்களே நாட்ல கிடையாதுன்னு வச்சுக்குவோம்...


கொஞ்ச நாள் கழிச்சு கடைத்தெரு பக்கம் போனீங்கன்னா எல்லா கடையும் பூட்டி கெடக்கும்... அரிசி, பருப்பு, உப்பு, புளி, மொளகா, எண்ணெய் -ன்னு ஒன்னும் கெடைக்காது. 

விவசாய வேலைக்கு ஆள் வராது... 

ஒரு வேலைக்கும் ஒருத்தனும் வரமாட்டான்..

எப்படி வருவான்னேன்..?


பணம் வேணும்னு உழைக்கிறாங்க....

கட்டு கட்டா பணம் இருக்கும்போது 

எவன் தான் வேலைக்கு வருவான்...?


பணத்தை தலைக்குமாட்டில் வச்சுக்கிட்டு வயித்துல ஈரத்துணியை போட்டு கிட்டு... கெடக்க வேண்டியது தான்!


ஊரே தூக்கம் வராம கெடக்கும்....


இப்போ அது மதிப்புள்ள பணம் காசு இல்ல..

வெத்து பேப்பர் தான்னேன்....!

உழைப்பு தான் பணம்ன்னேன்...!


பொருளாதாரத்திற்கு மூல ஆதாரமே... உழைப்பு தான்னேன்....!


உழைப்பு இல்லாமல்...

ஒன்னுமே கெடைக்காது!

ஒன்னுமே கெடையாது!

இப்ப தெரிஞ்சுதா...?


உழைப்பு இல்லாமல் கட்டு கட்டா பணம் குடுத்தால் நாட்டோட பொருளாதாரமே சீர்கெட்டு கதை கந்தலாகி போகும்னேன்!"


இது பொருளாதார படிப்பு படிக்காமல் நாட்டு நிலையையும் நாட்டு மக்கள் நாடித்துடிப்பையும் படிச்ச ஒரு பாமர மனுஷன் சொன்னது!


படிக்காதமேதை...ன்னு சும்மாவா சொல்றாங்க!

அண்ணாத்துரைக்கு எதிராக தேவர் காஞ்சிபுரத்தில் பேசியது.


   "ஜின்னா எந்த வகையில் வட இந்தியன் அல்ல; எந்த வகையில் ராபின்சன் என்ற வெள்ளைக்காரன் உங்களுக்கு வேண்டியவன்? திலகர் பெயர் மாத்திரம் உங்களுக்குக் கசப்பாக இருப்பானேன்? இது இந்த நாட்டு அரசியலுக்கு விரோதமாக நீங்கள் செய்யும் தேசத் துரோகம் அல்லவா?.


ஜஸ்டிஸ் கட்சியிலிருந்து வெள்ளைக்காரனுக்கு வால் பிடித்த கூட்டத்தில் வந்த எண்ணம் என்பதைத் தவிர வேறு எதைக் காட்டுகிறது?. அதற்கு மேல் ‘வடநாட்டான் திராவிட நாட்டை சுரண்டுகிறான். வட இந்தியன் பெயர் இந்த நாட்டில் இருக்க வேண்டாம். இருந்தால் போராடி மாற்றுவோம் ‘ என்று சொல்கிறார்கள். மிக்க மகிழ்ச்சி.


டால்மியாபுரம் என்ற பெயரை மாற்றப் போராடிய நீங்கள் நான் எடுத்துச் சொன்ன ஹார்விபட்டி என்ற பெயரை மாற்ற ஏன் சத்தியாகிரகம் பண்ணவில்லை?. வெள்ளைக்காரன் பெயர் இருக்கலாம்; அதைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருக்கணும். அதே நேரத்தில் ‘டால்மியாபுரம் ‘ என்ற பெயர் போகணும் என்றால் அறிவுடையவன் கேட்பானா?.


 ஹார்வி மில்லில் பட்டிவீரன்பட்டி செளந்தரபாண்டியன் வகையறா பங்கு இருக்கிறது. அந்த செளந்தரபாண்டியன் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தந்தையாக இருந்ததால், ஹார்விபட்டி என்ற பெயரை மாற்ற வேண்டுமென்று சொன்னால் உங்கள் கட்சிக்குப் பணம் வராது. ஆகையால் தமிழ் என்ற பெயரால் மக்களிடம் உண்மையை மறைப்பதில் பிரயோசனம் இல்லை. இதைப் புரிந்து கொள்ள வேண்டும். இதுதான் அதனுடைய ரகசியம்.


அதற்குமேல் திராவிடநாடு என்று கோஷிக்கிறார்கள். திராவிட நாடு யார்கிட்டே கேட்கிறாய் ? முறையாக இருந்து வெள்ளையன் நம்மை அடிமையாக வைத்திருந்த காலத்தில், சுதந்திரப்போரில் மக்கள் பக்கத்தில் இருந்திருந்தால் கேட்க உரிமை இருக்கிறது என்றாவது சொல்லலாம். வெள்ளையனை எதிர்த்துப் போராட்டம் நடைபெற்றபோது வெள்ளைக்கார சர்க்காரிடம் கைக்கூலி வாங்கிக் கொண்டு, அவனுக்கு அனுகூலமாக யுத்த ‘புரபகண்டா ‘ ‘செய்துவிட்டு, இப்போது திராவிடநாடு கேட்டால் என்ன அர்த்தம்?.


 பாகிஸ்தான் கேட்டு வாங்கி அவன் ரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டது மாதிரி, நீ வெள்ளைக்காரனுக்கு ஐந்தாம் படையை அமைப்பாய். அப்படி ஏமாற நாங்கள் பைத்தியக்காரர்கள் அல்ல.


‘தமிழ் வேண்டும் ஹிந்தி வேண்டாம் ‘ என்கிறார்கள். 1937-லேயே ஹிந்தி எதிர்ப்பு வருகிறபோது, ‘ஹிந்தியைப் புகுத்தாதே ‘ என ராஜகோபாலாச்சாரியர் மந்திரி சபைக்குச் சொன்னவன் அடியேன். இது சரித்திரம். எங்கள் அரசாட்சி அமைந்தால் ‘தமிழ் மாகாணம் ‘ என்று பெயர் வைப்போம். Residuary Madras State என்கிற பெயரை எடுப்பதில் பின்னடைந்தவர்கள் அல்ல நாங்கள். 


ஆனால் தமிழ் என்பதன் பெயராலும், தமிழ் உரிமையைக் காப்பாற்றுகிறோம் என்கிற பெயராலும் தமிழன் நாகரீகத்தைக் கெடுக்கக்கூடிய போராட்டங்களையும், பிராமணர் பிராமணர் அல்லாதார் என்று

சொல்லிக் கொண்டு நாஸ்திகத்தை வளர்ப்பதையும் நாங்கள் ஏற்க முடியாது. ‘ரோமாபுரி ராணி ‘ என்ற கதையை எழுதுவதா நீ பிராமணர் அல்லாதோரைக் காப்பாற்றுகிற யோக்யதை ?


எத்தனை பள்ளிக்கூடப் பையன்களை பாழாக்கி இருக்கிறாய் இதைப் போன்ற கதைகளை எழுதி ? ரோமாபுரி ராணி கதை போதாது என்று ‘தங்கையின் காதல் ‘ என்று ஒரு கதை

எழுதியிருக்கிறாய். தங்கையைக் கண்டு காதல் கொள்ளுகிறான் அண்ணன் என்று எழுதியிருக்கிறாய்.அடுத்து மகன் தாயைத் தாலிகட்ட வேண்டியதுதானே? 

வேறு என்ன?

இதுவா தமிழ் நாகரீகம்? சின்னச்சின்ன பள்ளிப் பிள்ளைகளைப் பாழாக்கி நாட்டை மிக விபரீதமான பாதைக்குக் கொண்டு போகக்கூடிய இத்தகைய கட்சிகளை, தாங்கள் தேர்தலில் ஆதரிக்கக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன். - #பசும்பொன்_தேவர். 


பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அவர்கள் 1957 ‘ம் ஆண்டு பிப்ரவரி 21 அன்று காஞ்சிபுரத்தில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசியது.

Monday, September 18, 2023

சுவாமி விவேகானந்தரின் ஞானமொழிகள்-பாகம்-15

 சுவாமி விவேகானந்தரின் 

ஞானமொழிகள்-பாகம்-15

...


----

வேதாந்தம் மட்டுமே உலகம் தழுவிய மதமாக முடியும்; வேறெந்த மதமும் அத்தகைய ஒன்றாக இருக்க முடியாது

----

நமது மதத்தைத் தவிர, ஏறக்குறைய உலகின் மற்ற பெரிய மதங்கள் எல்லாமே அதைத் தோற்றுவித்த ஒருவர் அல்லது பலரது வாழ்க்கையோடு இணைக்கப்பட்டடுள்ளன.

---


நமது கடவுள் சகுணமாகவும் அதே வேளையில் நிர்க்குணமாகவும் இருப்பதைப்போல் நமது மதமும் அழுத்தமான வகையில் தத்துவங்களின் மீது கட்டப்பட்ட ஒன்றாகவும், அதே நேரத்தில் மனிதர்களின் விருப்பங்களுக்கு ஏற்ப எண்ணற்ற விதங்களில் பின்பற்றுவதற்கு ஏற்ற விதமாகவும் அமைந்துள்ளது.

----

நமது மதத்தை விட அதிகமான அவதார புருஷர்களை, மகான்களை, தீர்க்கதரிசிகளை வேறு எந்த மதம் தந்துள்ளது இன்னும் எண்ணற்றறோரைத் தருவதற்கும் தயாரக இருக்கிறது?

----

உலக சாஸ்திரங்கள் அனைத்திலும் வேதாந்த போதனைகள் மட்டுமே, இக்கால விஞ்ஞானத்தின் புறவுலக ஆராய்ச்சி முடிவுகளோடு முழுக்கமுழுக்க இயைபு உடையதாக உள்ளது.

----

-

வெறியும் ரத்த வெள்ளமும் கொடூரமும் நிறுத்தப்பட்டாலன்றி எந்த நாகரீகமும் வளர முடியாது. மனிதர்கள் ஒருவருக்கொருவரை அன்புணர்வுடன் அணுகாதவரை எந்த நாகரீகமும் தலை நிமிரவே முடியாது.

----

இங்கே இந்தியாவில் தான் இந்துக்கள் கிறிஸ்தவர்களுக்கு சர்ச்சுகளும், முகமதியர்களுக்கு மசூதியும் கட்டித் தந்தனர்; இன்றும் கட்டித் தருகின்றனர். அவர்களின் கொடுமைகள் ஆதிக்க வெறி இவற்றிற்கு இடையிலும் நம்மைப்பற்றிப்பேசும் இழிவான பேச்சுக்களுக்கு இடையிலும், நாம் அவர்களை அன்பினால் வெற்றி கொள்ளும்வரை நிச்சயும் கிறிஸ்தவர்களுக்கு சர்ச்சுகளையும் முகமதியர்களுக்கு மசூதிகளையும் கட்டிக் கொடுப்போம்; கொடுத்துக்கொண்டே இருப்போம்.

----

Sunday, September 17, 2023

வங்கி கொள்ளைபோன கதை-சிந்திக்கவும் சிரிக்கவும் வைத்தது

 *மும்பையில் நடந்த ஒரு வங்கிக் கொள்ளையின் போது .*.... *கொள்ளையா்கள் துப்பாக்கியுடன், அனைவரையும் மிரட்டினா்*


_இந்தப் பணம் அரசுக்கு சொந்தமானது , ஆனால் ,உங்கள் உயிர் உங்களுக்குச் சொந்தமானது"" அதனால்,யாரும் எங்களை எதிர்க்க வேண்டாம்!அனைவரும் அசையாமல் கீழே படுங்கள் என்றார்கள். படுத்துவிட்டார்கள் ._


மனதை மாற்றும் முறை என்பது இதுதான் . 


*". This is called "Mind Changing Concept” Changing the conventional way of thinking."*


_அங்கே ஒரு பெண், கொள்ளையர் களின் கவனத்தைத் திருப்ப அநாகரிகமாக நடந்தாள் . அப்பொழுது கொள்ளையா்களில் ஒருவன் , இங்கு நடக்க போவது கொள்ளை, கற்பழிப்பு அல்ல என்று மிரட்டி, அமர வைத்தான்.._..


*இதைத்தான், செய்யும் தொழில்களில் கவனம் தேவை என்று சொல்கிறோம்  "Being Professional & Focus only on what you are trained""*


_கொள்ளையடித்து விட்டு வீட்டிற்கு வந்தவுடன் கொள்ளையா்களுள் ஒருவன் கேட்டான் "" வாருங்கள் சீக்கிரம் பணத்தை எண்ணி விடலாம்"" என்று ._


_மற்றொருவன் சொன்னான் , பொறு , அவசரம் வேண்டாம் . பணம் நிறைய இருக்கிறது .நேரம் அதிகம்  செலவாகும். அரசே நாம் எவ்வளவு₹#கொள்ளை அடித்தோம் என்று, நாளை செய்திகளில் சொல்லி விடும்._


*இதைத்தான்,படிப்பை விட அனுபவம் சிறந்தது என்போம்!*


*This is called "Experience.” Nowadays, experience is more important than paper qualifications! ""*


_கொள்ளை நடந்த போதே,வங்கியின் மேலாளா் இச்சம்பவத்தை காவல்துறையிடம் சொல்ல முனைந்த போது,அவருடைய மேல் அதிகாரி தடுத்து அவரிடம் கூறினார்._ 


" _வங்கியில் கொள்ளை போனது 20 கோடி தான். நாம் மேலும் 30 கோடி எடுத்து பங்கு பிரித்துக் கொள்வோம். மொத்தமாக ஐம்பது கோடி கொள்ளை போய்விட்டது என்று சொல்லி விடுவோம்" என்றார்_.


""காற்றுள்ள போதே தூற்றிக் கொள் ""என்பது இது தான் "

 *This is called Swim along with the tide.... Converting an unfavourable situation to yours.*


_இதை கேட்ட மற்றொரு அதிகாரி "" வருடம் ஒரு கொள்ளை,இவ்வாறு நடந்தால் மிக நன்றாக இருக்கும் "" என்றார் ._

 

இதுதான் சுயநலமான உலகம்!

*This is called Killing boredom World. Personal happiness is much more important than your job.*


_மறுநாள் செய்திகளில்,வங்கியில் 100 கோடி கொள்ளை போய்விட்டது என்று அறிவிக்கப்பட்டது .அமைச்சர் போட்ட உத்தரவு அப்படி.அவர் பங்கு 50 கோடி._


_கொள்ளையா்கள் மிரண்டு போனார்கள். பணம் எண்ணும் மிஷின் வாங்கி வந்து,பணத்தை எண்ணத் தொடங்கினர் ._


_எவ்வளவு எண்ணியும் ,அவா்களால் இருபது கோடிகளுக்கு மேல் போக முடியவில்லை ._


_கொள்ளையா்களில் ஒருவன் எரிச்சல் அடைந்து ," நாம் உயிரைப் பணயம் வைத்து இருபது கோடி கொள்ளையடித்தோம்._


_ஆனால் இந்ந வங்கி அதிகாரிகளும், அமைச்சரும் சிரமம் இல்லாமல், எண்பது கோடி கொள்ளை அடித்து விட்டனர். படிப்பின் அவசியம் புரிகிறது இப்பொழுது_


*இதற்குத் தான் படித்திருக்க வேண்டும் .""என்றான்* 


*True. Knowledge is nowadays very important than money in this world.*


*இந்தியா இப்படிப்பட்ட திருடர்களா லும், அமைச்சர்களாலும்தான் ஆளப்படுகிறது!பாவம் மக்கள்!*


-படித்ததில் பிடித்தது-

சுவாமி விவேகானந்தரின் ஞானமொழிகள்-பாகம்-14

 சுவாமி விவேகானந்தரின் 

ஞானமொழிகள்-பாகம்-14

...


பல்வேறு மதப் பிரிவுகளும் தத்துவங்களும் சாஸ்திரங்களும் இருந்தாலும் இவை அனைத்திற்கும் அடிப்படையாக ஒரு கருத்து, ஒரு கொள்கை உள்ளது. அது மனிதனின் ஆன்மாவில் நம்பிக்கை . இந்தக் கருத்தினால் உலகின் போக்கையே மாற்ற முடியும்.

----

-

மனிதனுக்கும் கடவுளுக்கும் இடையில், மகானுக்கும் பாவிக்கும் இடையில் வேற்றுமையை உண்டாக்குவது எது? அவித்யை, அதாவது அறியாமை

---

மிக வுயர்ந்த மனிதனுக்கு அவன் காலடியில் நெளிகின்றன சாதாரண புழுவிற்கும் உள்ள வித்தியாசம் என்ன? அறியாமை. நெளிகின்ற அந்தச் சிறு புழுவிற்குள் எல்லையற்ற ஆற்றலும் அறிவும் தூய்மையும் இறைவனின் எல்லையற்ற தெய்வீகமும் உள்ளது. அது வெளிப்படவில்லை,

----

உங்கள் விதி உங்கள் கைகளில் இருக்கிறது 

----

உங்களுடைய சொந்த வினை தான் உங்களுக்காக இந்த உடம்பை உற்பத்தி செய்திருக்கிறது. உங்களுக்காக இதை வேறு யாரும் செய்யவில்லை 

---

வினோதமானதோர் உண்மையைப் பாருங்கள். ஒன்றன்பின் ஒன்றாக எத்தனையோ நாடுகள் உலக மேடைக்கு வந்து, ஒரு சில கணங்கள் தங்கள் பாத்திரங்களை ஆரவாரமாக நடித்துவிட்டு, காலப் பெருங் கடலில் நீர்க்குமிழி போல், ஏறக்குறைய எந்த அடையாளத்தையும் நிறுத்தாமல் அழிந்து போய்விட்டன, இங்கு நாமோ நிரந்தரமானது போன்ற வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

---

எவ்வளவு தான் அரசியல் மற்றும் சமுதாய மாற்றங்களைக் கொண்டு வந்தாலும் தீமைகளைத் தீர்க்க முடியாது . அக வாழ்வில் ஓர் உறுதியான மாற்றம் மட்டுமே வாழ்க்கையின் தீமைகளை நீக்கும்.

----

மேலை நாட்டின் அறிவுஜீவிகள், நம் பழைய தத்துவங்களில், அதிலும் குறிப்பாக வேதாந்தத்தில், தாங்கள் தேடிக் கொண்டிருக்கின்ற புதிய சிந்தனைத் துடிப்பையும் தங்கள் பசிக்கும் தாகத்திற்கும் ஏற்ற ஆன்மீக உணவையும் நீரையும் காண்கிறார்கள்.



----

சுவாமி விவேகானந்தரின் ஞானமொழிகள்-பாகம்-12

 சுவாமி விவேகானந்தரின் 

ஞானமொழிகள்-பாகம்-12

...

சுயநலம் கொண்டவன் எல்லா கோயில்களையும் வழிபட்டிருந்தாலும், புண்ணியத் தலங்கள் அனைத்தையும் பார்த்திருந்ததாலும் சிறத்தைதயப்போல் தன் உடம்பு முழுவதிலும் மதச் சின்னங்களைத் தீட்டிக் கொண்டிருந்தாலுமும் அவன் சிவ பெருமானிடமிருந்து விலகியே இருக்கிறான்.

----

இந்த நாட்டின் அருமையான ஆன்மீகப் புதையல்களுள் பாதி திருடப்பட்டுவிட்டது, நாம் அவற்றை இழந்துவிட்டோம்.மறு பாதியோ, தானும் தின்னாமல் பசுவையும் தின்ன விடாமல் வைக்கோற்போரைக் காவல் செய்யும் நாய்களைப் போன்ற சிலரிடம் சிக்கிக் கொண்டிருக்கிறது.

-----

லௌகீக அடிப்படையில் ஆகட்டும், அறிவு அல்லது ஆன்மீக அடிப்படையில் ஆகட்டும், இறைவன் பாரபட்சமின்றி, ஒன்றில்லாவிட்டால் மற்றொன்றை ஒவ்வொருவருக்கும் அளித்து எல்லோரையும் சமமாகவே வைத்திருக்கிறார். எனவே நாம் தான் உலகத்தைக் காப்பவர்கள் என்று நினைக்கத் தேவையில்லை.

-

மதம் வாழ்வது அன்பில் , இதயத்தின் தூய்மையான உண்மையான அன்பில்தானே தவிர சடங்குகளில் அல்ல. 

----


உடலாலும் மனத்தாலும் தூய்மையாக இல்லாமல் ஒருவன் கோயிலுக்கு வருவதும் சிவ பெருமானை வழிபடுவதும் பயனற்றது. உடம்பாலும் மனத்தாலும் தூய்மையாக இருப்பவர்களின் பிரார்த்தனைகளை சிவபெருமான் நிறைவேற்றுகிறார். 

----

Saturday, September 16, 2023

21 இலைகளால் விநாயகருக்கு பூஜை செய்யவேண்டும்.

 1) முல்லை இலை ( அரம் இன்பம் வீடு பொருள் கிடைக்கும்) 2)கரிசலாங்கண்ணி(செல்வம் 16 வகை செல்வம் கிடைக்கும்)

3) வில்வம் இலை(விரும்பியதை எல்லாம் கிடைக்கும்)

4) அருகம் புல் ( மோட்சம் கிடைக்கும்)

5) இழந்த இலை (கல்வி ஞானம் கிடைக்கும்)

6)ஊமத்தை இலை(பெருந்தன்மையை கொடுக்கும்)

7)வன்னி இலை (வீடு கிடைக்கும்)

8)நாயுருவி இலை(முக பொலிவு பெறும்)

9)கண்டங்கத்திரி இலை(மனவலிமை வீரம் கிடைக்கும்)

10)அரளி இலை(காரிய சித்தி கிடைக்கும்)

11)எருக்கன் இலை& பூ (பெண் சிசு பாதுகாப்பாக இருக்கும்)

12)மருதம் இலை(வம்ச விருத்தி கிடைக்கும்)

13)விஷ்ணு கிரந்தி இலை(நுண் அறிவு கிடைக்கும்)

14)மாதுளம் இலை( புகழ் கிடைக்கும்)

15)தேவதாரு இலை(எதையும் தாங்கும் மனம்)

16)அரச மர இலை( பதவி கிடைக்கும்)

17)ஜாதி மல்லி இலை(சகல சௌகரியம் கிடைக்கும்)

18)தாழம்பூ இலை (பெரிய செல்வம் கிடைக்கும்)

19)அகத்தி கீரை(கடன் தொல்லை தீரும்)

20)தவனம் இலை (ஒற்றுமை)

21)மரிக்கொழுந்து ( கணவன் மனைவி ஒற்றுமை)


21 இலைகளால் விநாயகருக்கு பூஜை செய்யவேண்டும்.

நன்றி 



காவிரியும், கருணாநிதியும்...

 🤔 காவிரியும், கருணாநிதியும்... 


யாராவது இப்படி விலாவாரியாக எழுதினால்தான் நமக்கு விளங்குது.  ஆமாம்! அந்த பேனா சிலையை ஹோகைனக்கல் காவிரி நடுவுல வச்சுடலாமா!? 


பல்லாயிரம் வருடமாக பறிபோகாத காவிரி திமுக தெலுங்கர் கருணாநிதியால் பறிபோனது எப்படி? மீந்தது அவர் மகன்  காலத்தில் பறிபோகும்.


காரணம் இது தான்.... தமிழர்களுக்கு காவிரி விஷயத்தில் மட்டும் அவர் செய்த துரோகங்கள் இவ்வளவு! அவர் செய்த அனைத்து துரோகங்களையும் பட்டியலிட நமக்கு ஆயுள் போதாது!


1000 ஆண்டு சோழர் காலத்தில் பறிபோகாத காவிரி.


200 ஆண்டு வெள்ளையர்களின் ஆட்சியில் பறிபோகாத காவிரி.


வெறும் 50 ஆண்டு திராவிட ஆட்சியில் பறிபோனது காவிரி...😡😡😡 இளைய தலைமுறைகள் கவனிக்க ,, 


காவிரி பிரச்சனையில் திமுகவின்  துரோகங்கள் வரிசையாக:  


முதல் துரோகம்: கர்நாடக அரசு ஹேமாவதி அணையைக் கட்டிக் கொள்வதில் தமிழக அரசுக்கு எந்தவித ஆட்சேபணையும் இல்லை" என்று 6.3.1970 அன்று தமிழக பேரவையில் கருணாநிதி பேசி இருக்கிறார் என்பது வரலாறு. இது கருணாநிதியின் முதல் துரோகம். 


இரண்டாவது துரோகம்: இதனைத் தொடர்ந்து, காவேரி நதியின் உபநதிகளாகிய கபினி, ஹேமாவதி, ஹாரங்கி, சொர்ணவதி ஆகியவற்றில் பல்வேறு கட்டுமானப் பணிகளை மத்திய நீர் ஆணையத்தின் ஒப்புதல் இல்லாமலும், மத்திய திட்டக் குழுவின் ஒப்புதல் இல்லாமலும், தன்னிச்சையாக கர்நாடகம் துவக்கியது. கர்நாடக அரசின் இந்த அத்து மீறல்களை எல்லாம் கண்டு கொள்ளாமல் இருந்தவர் தான் திராவிட கருணாநிதி. இது கருணாநிதியின் இரண்டாவது துரோகம்.


மூன்றாவது துரோகம்: 4.8.1971 அன்று இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 131-ன் கீழ் உச்ச நீதிமன்றத்தில் காவேரி நீர் உரிமை பிரச்சனை குறித்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தமிழக பேரவை மற்றும் மேலவைக்கு தெரிவிக்காமலேயே தனக்குள்ள அரசியல் நெருக்கடி காரணமாக திரும்பப் பெற்றுக் கொண்டு விட்டார் கருணாநிதி! 


வேறு ஒன்றும் இல்லை சர்க்காரியா கமிஷன் எனும் கத்தி /துப்பாக்கி தான் இது கருணாநிதியின் மூன்றாவது துரோகம்.. 


நான்காவது துரோகம்: காவேரி பிரச்சனையின் மூலாதாரமே கருணாநிதிதான். கர்மவீரர் காமராஜ் காலத்தில் கர்நாடக அரசு அணைகள் கட்டவில்லை காவேரி ஒப்பந்தம் நடைமுறையில் இருந்தது. அந்த ஒப்பந்தம் சென்னை மாகாண அரசுக்கும் மைசூர் அரசுக்கும் இடையே உருவானது. இந்த ஒப்பந்தப்படி காவிரி ஆற்றின் குறுக்கே மைசூர் அரசு ஒரு அணையைப் புதிதாகக் கட்ட சென்னை மாகாணத்தின் ஒப்புதலைப் பெற ஒப்புக் கொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்தம் காலாவதியாகும் முன்பு நீட்டிக்க வேண்டும் என்பதே அனைவரும் ஒப்புக்கொண்டது .அதனை நீட்டிக்க முயற்சி எடுக்கவில்லை திராவிட கருணாநிதி. அதன் விளைவு கி.பி.1892-ம் ஆண்டு போடப்பட்ட முதல் ஒப்பந்தம் கருணாவின் அலட்சியத்தால் காலாவதியானது. இது தான் 219 ஆண்டு கால காவேரி நதி பங்கிட்டு பிரச்சனையில் தமிழகத்தின் உரிமை பறிபோக முதன்மை காரணமாய் அமைந்து விட்டது. 


இப்படி கர்நாடகா கடந்த 40 வருடங்களில் முக்கியமாக கருணாநிதி ஆட்சிக்காலத்தில் - அணைகள் கட்டியதை - ஹேமாவதி ஆற்றில் 34 டி.எம்.சி நீர் கொள்ளளவு கொண்ட அணை, கபினி ஆற்றில் 19 டி.எம்.சி கொள்ளளவு அணை - ஹேரங்கி ஆற்றில் 6 டி.எம்.சி கொள்ளளவு கொண்ட அணை - தடுக்காத கருணாநிதி தமிழர் நலன் /திராவிடர் நலன் குறித்து கவலை கொண்டது இல்லை. 


ஐந்தாவது துரோகம்: காவிரி நடுவர் மன்றம் கடந்த 2007ம் ஆண்டு தனது இறுதித் தீர்ப்பை அறிவித்தது. ஆனால், அதை முறைப்படி அமலாக்க அதை முதலில் மத்திய அரசின் கெஜட்டில் வெளியிட வேண்டும். அதில் வெளியிடப்பட்டுவிட்டால், அதை நிறைவேற்ற வேண்டிய கடமை கர்நாடகத்துக்கு மேலும் அதிகமாகும். ஆனால், இதை கெஜட்டில் வெளியிடாமல் இழுத்தடித்து வந்தது மத்திய காங்கிரஸ் அரசு. இதை கெஜட்டில் ஏன் வெளியிட- வில்லை ? என்று மத்திய அரசை அந்த நேரம் உச்ச நீதிமன்றமே கண்டித்துள்ளது. அப்போது மத்திய காங்கிரஸ் ஆட்சியில் கூட்டணி கட்சியாக பதவி சுகங்களை ஏகத்திற்கும் அனுபவித்து வந்த திமுக இது குறித்து துளி கூட கவலைப்படவேயில்லை . இது கருணாநிதியின் ஐந்தாவது துரோகம் .


மத்திய அரசின் கெஜட்டில் வெளியிட நீதி மன்றம் மூலம் சாதித்தவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்கள்தான்! 


ஆறாவது துரோகம்: காவேரி பிரச்சனையில் .காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பை அரசிதழில் (மத்திய அரசின் கெஜட்) வெளியிடக் கூடாது என்று பிரதமர் மன்மோகன் சிங்கை நேரில் சந்தித்து தேவ கௌடா கோரிக்கை விடுத்தார் -அதில் தேவ கௌடா சாதித்தார். அப்பேற்பட்ட தமிழின விரோதி இந்திய பிரதமராக பதவி வகிக்க ஆதரவுக்கரம் நீட்டியவர் இந்த கருணாநிதி தான். இது கருணாநிதியின் ஆறாவது துரோகம்! 


மிக பெரிய ஏழாவது துரோகம்: இது எல்லாவற்றையும் முழுங்கி சாப்பிடக்கூடிய அளவிற்கு கருணாநிதி செய்த மாபெரும் துரோகம் இதோ - 1998 ம் ஆண்டு ஆகஸ்ட் 3 ம் தேதி திமுக ஆட்சியின் போது, சென்னையில் முதல்வர் கருணாநிதி, பிரதமர் தலைமையில் ஆன காவேரி ஆணையம் அமைப்பதற்கான மத்திய அரசின் வரைவு அறிக்கையை விவாதிக்க கூட்டம் கூட்டினார். அதில் காவேரி நடுவர் மன்றத்தின் இடைக்கால உத்தரவை கர்நாடக அரசு அமுல்படுத்தாத பட்சத்தில், பிரதமர் தலைமையிலான காவேரி ஆணையமே, கர்நாடக அணைகளை தன் கட்டுப்பாட்டில் கொண்டுவரும் அதிகாரம் சம்பந்தப்பட்ட ஷரத்து இருந்தது. அதனை கருணாநிதி நீக்கி விட்டார்.


காரணம் அவரின் குடும்பத்தார் கர்நாடகாவில் வாங்கி குவித்துள்ள அளவற்ற/ கணக்கற்ற சொத்துக்கள் மற்றும் அவரது  ஊடகங்கள்  தான். 


அந்த ஷரத்து இருந்தால் இப்போது உச்சமன்ற தீர்ப்பை கர்நாடகா மதிக்காததை சுட்டிக்காட்டி அதன் அணைகளை மத்திய அரசு கையகப்படுத்தி தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்க வாய்ப்புகள்  இருந்திருக்கும். அதனை இரக்கமின்றி அடைத்தவர் கருணாநிதி தான். இது கருணாநிதியின் ஏழாவது துரோகம் .


எட்டாவது துரோகம்: ஏற்கனவே ஒரு காங்கிரஸ் முதல்வர் (கண்ணனின் பெயர் கொண்டவர்) கர்நாடகாவில் ஆட்சி செய்தபோது, ஜெயலலிதா அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி காவேரியில் சம்பா பயிர்களை காப்பாற்ற தண்ணீர் தர சம்மதம் தெரிவித்தார். அப்போது காங்கிரஸுடன் கூட்டணியில் இருந்த கருணாநிதி டெல்லி காங்கிரஸ் தலைமையிடம் சொல்லி காவேரியில் தண்ணீர் திறந்து விட்டால், ஜெயலலிதா புகழ் கூடிவிடும். நான் சிறுமைப்படவேண்டி நிற்கும் நிலை வரும் என சொல்லி அதனை தடுத்து விட்டார். இதனை அந்த காங்கிரஸ் முதல்வர் தனது சுயசரிதையில் தேதி முதற்கொண்டு சொல்லி உண்மையை புட்டு புட்டு வைத்து விட்டார். இது கருணாநிதியின் எட்டாவது துரோகம்! 


ஒன்பதாவது  துரோகம்: இந்திய பிரதமர்கள் வி பி சிங், நரசிம்மராவ், குஜ்ரால், தேவ கௌடா, வாஜிபாய் ஆகியோர் அமைச்சரவையில் பங்கு பெற்றார். அதன் பிறகு மன்மோகன் சிங் ஆட்சியில் இவர் ஆதரவு இல்லை என்றால் ஆட்சியே இருக்காது. மிரட்டி மிரட்டி எத்தனையோ பதவிகள் வாங்கினார் கருணாநிதி , ஆனால் அப்போதும் கூட, காவேரி பிரச்சனைக்காக சிறு துரும்பை கூட கிள்ளி போடாதவர் தான் கருணாநிதி. தனது மகனுக்கும், பேரப்பிள்ளைகளுக்கும் சோனியா காந்தி அரசில் ( மன்மோகன் சிங் பொம்மை பிரதமர் ) நல்ல பசையான துறைகளை வாங்க நேரடியாக டெல்லி சென்றவர் அப்போதே மத்திய நீர்வளத்துறையை கேட்டு பெற்றிருந்தால் இந்நேரம் கருணாநிதி காவிரி பிரச்சனை தீர்த்ததற்காக உலக புகழ் பெற்றிருப்பார். ஆனால் அவர் அதை செய்ய வில்லை இது கருணாநிதியின் ஒன்பதாவது  துரோகம்.


பத்தாவது துரோகம்: காவிரி வழக்கை வாபஸ் பெற்றால் ..தானே பிரச்சனையை சுமுகமாக முடித்து நியாயமான நீரைத்தருகிறேன்  என இந்திரா சொன்னார். கூட்டணி ஆசைக்காக ( ஊழல் பாதுகாப்புக்காக?)  அதனை ஏற்று திமுக வழக்கை வாபஸ் பெற்றது. இது கருணாநிதியின் பத்தாவது துரோகம்.


இப்படி அடுக்கடுக்காக காவேரி நதி நீர் விஷயத்தில் துரோகங்கள் செய்தவர் இந்த கருணாநிதிதான் .


தமிழகத்தில் காவேரி பாய்ந்த கழனிகள் எல்லாம் வறண்ட பாலைவனங்களாக மாற துரோகங்கள் செய்து தனது குடும்பத்தின் சொத்துக்களை பல பல மடங்காக பெருக்கியவர் கருணாநிதிதான்.


காவேரி பாய்ந்த நிலத்தை கருக வைத்த அரசியல் வாதி இவர்தான். ஆம்! இவரின் துரோகங்களை தமிழர்கள் குறிப்பாக திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் கூட இன்னும் அறியாதது தமிழகத்தின் சாபக்கேடுதான். 


இவர்கள் மக்கள் உயிரை பற்றியோ பிரச்சனைக்கு  நிரந்தர தீர்வையோ விரும்பாதவர்கள். 


ஏமாற்றுவதற்கு அங்கீகாரம் கொடுத்தபின் ஏமாளி போராடுவது அபத்தம். அதன்மூலம் மத்தியில் யார் ஆட்சிக்கு வந்தாலும் தண்ணீர் கொடுக்காமலிருக்கும் உரிமையை நிரந்தரமாக வழங்கிவிட்டோம். 


இன்றும் தமிழகத்தில். நூற்றுக்கணக்கான இந்திரா, ராஜீவ் சிலைகள் நம்மைப் பார்த்து ஏளனமாக சிரிக்கின்றன. ஆனாலும் எதிர்காலத்தில் சோனியா ராகுலுக்கும் சிலைவைத்து வணங்கப்போகிறான் மான மிகு தமிழன்  வீராணம் ? கூவத்தை மணக்கவைத்த கருணாவுக்கும்தான்.... 


இவ்வளவு துரோகத்தையும் செய்து விட்டு அவர் மகன் உத்தமன் வேஷம் போடுகிறார் என்றால் தமிழ் மக்களின் அறியாமையை என்னவென்று சொல்ல  கருணாநிதி மக்களுக்காக செய்த பச்சைத் துரோகம்!! 


இதெல்லாம் என்ன நியாயம்...!?

🚩🙏🚩

ஆண்களுக்கு மட்டும் ஒரு ரகசியம் சொல்லப் போகிறேன்-MGR

 ஒரு முறை பொதுக் கூட்டத்தில் புரட்சித் தலைவர் பேசிக் கொண்டிருந்தார். பெரும் கூட்டம்.


பேச்சின் இடையே, "ஆண்களுக்கு மட்டும் ஒரு ரகசியம் சொல்லப் போகிறேன். 


என்னை வாழவைக்கும் தாய்மார்கள் எழுந்துச் செல்லுங்கள். 


ஒரே ஒரு தாய்க்குலம் கூட இருக்கக் கூடாது" என்றார்.


பெண்களும் எழுந்துச் சென்று விட்டார்கள். 


அதுவரை எதுவும் பேசாமல் மைக்கைப் பிடித்துக் கொண்டிருந்த புரட்சித்தலைவர்.


"என்னிடம் ரகசியம் எதுவுமில்லை. பேச்சை அப்போதே முடித்து விட்டேன். 


கூட்டம் கலையும்போது நெரிசலில் தாய்மார்களுக்கு இடையூறு வந்துவிடக் கூடாது என்றே அப்படி சொன்னேன்" என்றார்.


கூட்டம் ஜோராக கைத்தட்டியது.



பொறியாளர் தின வரலாற்று திருமகன்

இந்தியா பிரிட்டன் அரசின் நேரடி நிர்வாகத்துக்கு வந்த 3ம் ஆண்டில் அதாவது 1860ல் மைசூர் பக்கம் ஒரு பிராமண குடும்பத்தில் என அக்குழந்தை பிறந்தது, அது ஆந்திர தெலுங்கு வம்சம், அந்த குழந்தையின் தந்தையின் முன்னோர்கள் அங்கிருந்து மைசூருக்கு குடியேறிய சமஸ்கிருத பண்டிதர்கள்


மோக்சகுண்டம் எனும் தன் ஊர் பெயரை தன்னோடு சுமந்து வந்த குலம் அது


அக்குழந்தைக்கு படிப்பு இயல்பாக வந்தது, படிப்பில் மட்டுமே வளர்ந்து பருவமாகி 15ம் வயதிலே அவன் சிறந்த மாணவனாக உருவானான், அப்பொழுது அவன் தந்தை மறைந்தார் எனினும் போராடி தன் 21ம் வயதில் சென்னை பல்கலைகழகத்தில் 1881ம் ஆண்டு பட்டம் வாங்கி பின் புனேவில் கட்டடம் கட்டும் படிப்பில் டிப்ளமோ முடித்தார்


1885ம் ஆண்டு முதல் அவரின் அசுர பணி தொடங்கிற்று


அது பிரிட்டிஷ் அரசின் நேரடி ஆட்சி காலத்தில் சில கட்டங்கள் பாலங்கள் இன்னும் பல எழும்பிய காலம் என்பதால் பிரிட்டிசார்  அவரை பொதுபணிதுறையில் சேர்த்துகொண்டான், மகராஷ்ட்ரா நாசிக்கில் இருந்து அவரின் பணி தொடங்கிற்று


அங்கிருந்து பின் சிந்துநதிகரை பகுதிக்கு அனுப்பட்டார் , 1894 வரை அங்குதான் பணியாற்றினார், பின் சூரத்துக்கு மாற்றபடார்


அவரின் அபார அறிவும் பெரும் திறமையும் பதவி உயர்வுகளை கொடுத்து கொண்டே இருந்தன, அப்பொழுதே சில பயிற்சிக்காக ஜப்பானுக்கும் சீனாவுக்கும் அரசால் அனுப்பட்டிருந்தார்


1898ல் ஜப்பானிய பாசன முறைகளை அறிந்துவந்து பல வசதிகளை செய்ய்தொடங்கினார்


பின் பிரிட்டிசார் அவரை பாசன வசதிகள் செய்யும் குழுவில் பிரதான இடமளித்து உயர்த்தினான், எகிப்து முதலான தேசங்களுக்கு சென்றுவந்து ஆற்றில் அணைகட்டுதல் உள்ளிட்ட பல விஷயங்களை அனுபவமாக பெற்றுவந்தார்


அவரின் அளப்பறிய சாதனை தானியங்கி மதகுகளை 1903ம் ஆண்டே வடிவமைத்தது, ஆற்று வெள்ளத்துக்கு ஏற்ப தானே இயங்கும் மதகுகளை அவர் வடிவமைத்தபொழுது உலகம் அவரை கொண்டாடிற்று, உலகின் அணைகளில்லாம் அந்த மாற்றம் வந்தது


மறுபடி அமெரிக்கா, கனடா, ரஷ்யா ஐரோப்பா என எங்கெல்லாமோ சென்று நவீன அணைகளுக்கும் பாசனங்களுக்கும்  உதவினார்


அன்று சுல்தானியமாக இருந்த ஐதரபாத் நிஜாம் அவரை பெரும் முயற்சிக்கு பின் அழைத்துவந்து தன் பகுதியின் முன்சி ஆற்றின் வெள்ளபெருக்கை கட்டுபடுத்தும் திட்டத்தை கோரினான், அதை திறம்பட முடித்து கொடுத்தார் அவர்


1908ல் பெரும் மரியாதையுடன் பிரிட்டிஷ் அரச சேவையில் இருந்து ஓய்வு பெற்றார் அந்த விஸ்வேஸ்வரய்யர், அப்படியே சொந்த ஊருக்கும் வந்தார்


அவரை மைசூர் சமஸ்தானஸ்தின் திவானாக 1909ம் ஆண்டு சேர்ந்தார், அப்பொழுது நான்காம் கிருஷ்ணாராஜ உடையார் மைசூர் மன்னராக இருந்தார்


மைசூர் சமஸ்தானம் முன்பு நாயக்கர் காலத்தில் விஜயநகர அரசில் இருந்தது பின் நாயக்கர்கள் பலமிழந்தபொழுது பிஜப்பூர் சுல்தானிய கட்டுபாட்டில் இருந்தது, வீரசிவாஜி காலத்தில் நாயக்கர்கள் தலையெடுத்தனர்


சிவாஜி அவர்களை தலைநிமிர வைத்தான், அவன் காலத்தில் தமிழக கோவை திண்டுக்கல் வரை மைசூர் சமஸ்தானம் இருந்தது


ஆனால் பின்பு ஹைதர் அலி அதனை கைபற்றியிருந்தான் பின் அவன் மகன் திப்பு அந்த சுல்தானியத்தை பழைய பிஜப்பூர் சமஸ்தானம் போல விஸ்தரிக்க எண்ணி போர்கள் பல புரிந்தான் எனினும் பிரிட்டிஷார் அவனை முறியடித்து உடையார்களை பதவியில் அமர்த்தினர்


அந்த நான்காம் உடையாரிடம்தான் திவானாக 1909ல் வந்தார் விஸ்வேஸ்ரய்யர்


அப்பொழுது ஒரு விசித்திரமான சிக்கல் மைசூர் சமஸ்தானத்துக்கு இருந்தது, அது ஹைதர் அலி காலத்தில் தஞ்சை மராட்டியருக்கும் மைசூருக்கும் ஏற்பட்ட முரண்பாடு என்கின்றது வரலாறு


அதாவது காவேரியில் வெள்ளம் வந்து தஞ்சாவூர் பக்கம் பாதிப்பை ஏற்படுத்தினால் முன் கூட்டியே அறிவிக்கவில்லை இன்னும் முறையாக தடுக்கவில்லை என தஞ்சை சமஸ்தானம் மைசூரிடம் இருந்து நஷ்ட ஈட்டை கோரியது


திப்பு அப்படி தரமுடியாது என காவேரியின் மடைகளை அடித்து உடைத்த காலமும் இருந்தது


அது உடையார் காலத்திலும் தொடர்ந்தது பல்லாயிரம் பணம் இப்படி நஷ்ட ஈடாக வழங்கபட்டுகொண்டிருந்தது


விஸ்வேஸ்ரய்யர் அந்த பணத்தை முதலீட்டாக கொண்டு ஒரு அணைகட்டிவிட்டால் பின் வெள்ள சிக்கல் வராது நஷ்ட ஈடும் கொடுக்கவேண்டாம் என பெரும் திட்டத்தை முன்வைத்தார்


அதுவரை மைசூரில் காவேரிக்கு குறுக்கே பெரும் அணை இல்லை, சிறிய வகை கால்வாய்களும் பாசனங்களும் இருந்தன‌


பெங்களூர் அப்பொழுது ஒரு கிராமம் அளவுக்குத்தான் இருந்தது


அப்பொழுது 81 லட்சம் செலவில் அணைகட்ட தீர்மானிக்கபட்டது, அது பெரும் தொகைதான் ஆனாலும் தீர்க்கதரியான விஸ்வேஸ்வரய்யா அணையில் மின்சாரம் தயாரித்து விற்பது, பெரும் தோட்டமும் நகரமும் உருவாக்கி அந்த பணத்தை ஈடுகட்டுவது என திட்டம் தயாரித்தார்


அவரின் பெரும் அனுபவமும்  உலகளாவிய பெரும் அறிவும் அதற்கு கைகொடுத்தன‌


பின் ஆங்கில அரசிடம் அனுமதிகோரபட்டது அவர்கள் அனுமதி கொடுத்தார்கள், விஸ்வேஸ்வரய்யா அணை கட்ட தொடங்கினார்


கண்ணம்பாடி எனும் இடத்தில் ஏமாவதி லட்சுமணதீர்த்தம் எனும் இரு நதிகள் காவேரியோடு சேருமிடத்தில் அணையினை எழுப்பினார்


46 தானியங்கி மதகுகளுடன் அதிசயம் போல அந்த அணையினை கட்டிமுடித்தார், அப்படியே அழகான பிருந்தாவனமும் உருவாக்கினார்


மைசூர் மெல்ல செழிக்க ஆரம்பித்தது, காவேரியின் டெல்டாவில் விளைந்த நெல்லை மைசூரை ஒட்டியே டன் கணக்கில் விளையவைத்து அசத்தினார் விஸ்வேரய்யர்


அந்த அணை அந்த உடையார் பெயரில் "கிருஷ்ண ராஜ சாகரம்" என எழும்பியதுதான் கன்னடம் இன்று எழும்பி நிற்பதன் முதல்படி


அந்த அணையின் பலத்தில்தான் அதன் ஆதாரத்தில்தான் பெங்களூர் எனும் கிராமம் மெல்ல மெல்ல நகரமானது, அந்த நகரின் பிரதான கட்டடமான "விதான் சவுதா" விஸ்வேரய்யாவால் வடிவமைக்கபட்டது


இந்த அணை கொடுத்த நீர்வளமே பெங்களூர் எனும் சிறிய கிராமத்தை உலகின் முன்னணி நகரமாக இன்று மாற்றி வைத்திருக்கின்றது


தொடர்ந்து பெரும் திட்டங்களை கொடுத்தார் அய்யர், இன்று சிறிதும் பெரிதுமாக இருக்கும் கன்னட அணைகள் சுமார் 28ம் அவர் கொடுத்த வழிகளே


அதே நேரம் மேட்டூர் அணைகட்டபடும் பொழுதும் பெரும் பங்களிப்பை செய்தார் விஸ்வேரய்யர்


தன் ஓய்வு காலத்திலும் நாடெங்கும் ஓடி ஓடி உழைத்து கொண்டிருந்தார், ஒரு கட்டட நிபுணராக தொழிற்சாலைகளை நிர்மானிப்பதில் பெரும் பங்குவகித்தார்


ரூர்கேலா போன்ற பெரும் இரும்பு ஆலைகள் உருவாக காரணமானார், இன்னும் எவ்வளவோ பெரும் அணைகளும் பாலமும் ஆலையும் எழும்ப காரணமானார்


இந்தியாவின் கல்வி நிலையங்களில் கட்டட பொறியியல் அவரால் எழும்பிற்று, கல்வி நிலையம் பல திறக்க உதவினார், அவர் பெயரில் ஏகபட்ட கல்வி நிறுவணங்களும் திறக்கபட்டன‌


அப்துல்கலாமுக்கு முன்பு பெரும் அடையாளமாக விஞ்ஞான கல்விக்கு அவர்தான் வலம் வந்தார்


சுதந்திர இந்தியாவிலும் அவரின் பங்களிப்பு பிரமாதமாக இருந்தது, 1955ல் அவருக்கு பாரத ரத்னா வழங்கபட்டது


101 வயதுவரை பெரும் வாழ்வு வாழ்ந்த அவர் 1962 வரை இந்தியாவின் எல்லா அணைகளுக்கும் திட்டமிட்டு கொடுத்தார், கல்வி நிலையங்களை வழிநடத்தினார்


மைசூர் கிருஷ்ணராஜ சாகரில் தொடங்கிய அவரின் அணைகட்டும் முயற்சி பக்ரா நங்கல் முதல் எவ்வளவோ அணைகள் வர காரணமானது


இந்தியாவின் முதல் பொறியாளரான அவர் பெயரில்தான் இந்தியாவில் "பொறியாளர் தினம்" கொண்டாடபடுகின்றது


ஆம், இன்று இந்தியாவில் பொறியாளர் நாள்


இந்தியா இன்று கண்டிருக்கும் விவசாய தன்னிறைவுக்கும், தொழில்புரட்சிக்கு அடிப்படையான நீர் வசதிக்கும், மின்சார உற்பத்திக்கும் மூலம் அவர்தான்


அவரின் திட்டங்கள்தான் இந்திய ஆற்ற்பாசான அணைகள் மூலம் இந்தியாவினை அடுத்தகட்டத்துக்கு இழுத்து சென்றது, இந்தியாவின் இன்றைய வளர்ச்சி அவரால்தான் அடிதளமிட்டது


"கன்னட சிற்பி" என அழைக்கபடும் அளவு அவரால் கன்னட மகாணம் பெரும் வாழ்வு பெற்றது


இன்று மாண்டியா பக்கமும் கன்னட பக்கமும் விவசாயம் கொழிக்கின்றது என்றால், பெங்களூர் எனும் பெருநகரம் உலக அளவில் கவனிக்கபடுகின்றது என்றால் அதன் மூல காரணம் அந்த விஸ்வேரய்யர்

அவரை இந்திய தேசமும் கன்னட மக்களும் நன்றியோடு வணங்கி கொண்டிருக்கின்றார்கள்


தமிழகம் வழக்கம்போல் நழுவுகின்றது, இன்று பொறியாளர் தினம் எனும் பரபரப்பு கூட தமிழகத்தில் இல்லை, காரணம் அவர் ஒரு அய்யர், இந்து பிராமணன் அதுவும் சமஸ்கிருதம் கற்ற வேதம் ஓதிய பிராமணன்


தேசாபிமானிகள் தமிழக‌ மேட்டூர் அணைமுதல் பல அணைகள் கட்ட காரணமான அந்த மூல விஞ்ஞானிக்கு நன்றி செலுத்தி கொண்டிருக்கும் நேரமிது


பிராமண வெறுப்பு தமிழகத்தில் அரசியலானது


இங்கு 1909களில் நீதிகட்சி பிராமண வெறுப்பு பேசியபொழுது தொடங்கியது தமிழக வீழ்ச்சி

அதே 1909களில் ஒரு பிராமணனை அரவணைத்து அவன் வழிகாட்டலில் எழுந்தது கன்னட எழுச்சி


ஆம், பிராமணனை ஆதரித்த மாகாணம் எழுந்து வளர்ந்து வாழ்வு பெற்று வாழ்ந்து கொண்டிருப்பதும், பிராமண எதிர்ப்பை அரசியலாக்கிய தமிழகம் வீழ்ந்து கொண்டிருப்பதும் காலத்தின் சாட்சிகள்..


ஒரு அறிவார்ந்த பிராமணன் உருவாக்கிய கன்னடம் இன்று நிமிர்ந்து நிற்கின்றது அவன் காட்டிய வழியில் அணையும் விளை நிலங்களும் ஆலைகளுமாக பிரமாண்டமாக எழும்பி நிற்கின்றது


பிராமணை பழித்து உருவான தமிழக அரசியல் இன்று எப்படியாயிற்று கூவம் முதல் எல்லா நதிகளும் என்னாயிற்று என கண்டால் எல்லோருக்கும் புரியும்


அறிவும் திறமையும் இருப்பவன் யாராக இருந்தாலும் அவனை கொண்டாடும் இனம் வாழும் மாறாக வீண் பழியும் குழப்பமான சுயநல அரசியலும் செய்து அதில் அறிவுடையோர்களை விரட்டி அடித்தால் அந்த இனம் வீழும்


விஸ்வேஸரய்யா என்பவருக்கு தேசம் பெரும் அஞ்சலி செலுத்துகின்றது, கன்னட மக்கள் கூடுதலாக வணங்கிகொண்டிருக்கின்றார்கள்


அதே நேரம் இந்திய தமிழகத்தில் அண்ணாதுரை என முன்னாள் முதல்வர் ஒருவருக்கும் பிறந்தநாள் கொண்டாடுகின்றார்கள்


இந்த இருவரில் யார் புகழ் நிலைத்தது, இன்னும் நிலைத்து நிற்கும் என்றால் சந்தேகமே இல்லாமல் விஸ்வேஸ்ர அய்யர் புகழ்தான்.