Wednesday, April 3, 2024

ஆற்று தும்மட்டி - தினம் ஒரு மூலிகை


*ஆற்று தும்மட்டி*  இதை பேய் தும்மட்டி வரித்தும்மட்டி பிச்சிக்காய் கச்சமுட்டி கலிங்கம் என்று அழைப்பார்கள் மணற்பாங்கான ஆற்றுப்பகுதிகளில் தானாக வளரும் கொடி இனம் காய் பழம் விதை வேர் மருத்துவ குணம் உடையது மலக்கட்டு வயிற்றுப்புழுக்கள் சூதகக்கட்டு சூதக ஜன்னி குன்மம் மூட்டு வலி ஆகியவற்றிற்கு மருந்தாக பயன்படுகிறது காய் (அ) பழத்தை வரகு வைக்கோலில் இட்டு சுட்டு பழத்திற்குள் இருக்கும் விதை மற்றும் மேல் தோல் நீக்கிய சதை பகுதியை உலர்த்தி பொடித்து 50 மில்லி கிராம் முதல் 200 மில்லி கிராம் வரை கொடுக்க மலக்கட்டு சோகை நீங்கும் புழுக்கள் வெளியேறும் மலை வேம்பு இலை சாறு தும்மட்டிக்காய் சாறு விளக்கெண்ணையில் சம அளவு எடுத்து காய்ச்சி அதிகாலையில் வெறும் வயிற்றில் ஐந்து முதல் பத்து மில்லி ஐந்து நாட்கள் குடித்து வர வயிற்றுப் புழுக்கள் வெளியேறும் பழச்சாற்றில் 750 மில்லி எடுத்து குழம்பாக காய்ச்சி பொரித்த வெங்காயம் ஏலரிசி வால் மிளகு கடுகு ரோகிணி குரோசினி ஓமம் வெங்காரம் இந்துப்பு வகை இரண்டு கிராம் சேர்த்து 100 மில்லி முதல் 200 மில்லி வரை கொடுக்க சூதகக்கட்டு சூதக ஜன்னி குருதி குன்மம் மூட்டு வலி தீரும் நன்றி.

No comments:

Post a Comment