Thursday, January 4, 2024

நம்மை நாமே நேர்மறையாக வைத்துக் கொள்வது எப்படி?

 


🍃1.பாசிட்டிவாக இருப்பவர்களோடு பழகுங்கள்

🍃நம்மைச் சுற்றி எப்போதுமே பாசிட்டிவ் வைப்ரேஷன் இருந்தால் நாம் இயல்பாகவே அதிக முனைப்போடு ஒரு விஷயத்தை செய்வோம்.

🍃எனவே எதிர்மறை எண்ணத்தோடு ஒரு செயலை செய்பவர்களை எப்போதும் பக்கத்தில் வைத்துக்கொள்ளாதீர்கள்.

🌼2) உற்சாகமாக இருங்கள் :-

🍃சோகத்தை விட்டொழியுங்கள். எப்போதும் உற்சாகம் கொப்பளிக்க வேலையையும் செய்யுங்கள்.

🍃இந்த வேலையைச் செய்ய வேண்டுமே என செய்து முடிக்காமல், இந்த வேலையை நம்மை விட வேறு யாரும் இவ்வளவு சிறப்பாக செய்துவிட முடியாது என்பதை மற்றவர்களுக்கு உணர்த்த வேண்டும் என எண்ணி வேலை பாருங்கள்.

🌼3. பவர்ஃபுல்லாக உணருங்கள் : -

🍃உடல் வலிமை, பண வலிமை எல்லாவற்றையும் தாண்டி மனவலிமை மிக முக்கியம்.

🍃உங்களை போல இந்த உலகத்தில் பவர்ஃபுல்லானவர் யாருமில்லை. உடனே சிரிக்காதீர்கள்.

🍃இது தான் நிஜம். உங்களின் பெஸ்ட் எது என்பது உங்களுக்கே இன்னும் தெரியவில்லை.

🍃உங்கள் வலிமையை உணர்ந்து செயலாற்றினால் நீங்கள் வேற லெவல் ஆள் பாஸ்.

🌼4. லவ் பண்ணுங்க :-

உங்களை நீங்களே நேசியுங்கள்.

🍃 இந்த உலகத்தில் தன்னை நேசிக்காத மனிதனால் வெற்றியடையவே முடியாது.

🍃உங்களை உங்களுக்கு பிடிக்க, உங்களை எப்படி மாற்ற வேண்டுமோ அப்படி மாற்றுங்கள்.

🍃 உங்கள் மீது நீங்களே அன்பு செலுத்துங்கள். நீங்கள் புறப்பட்டு எழுந்தால் உங்களை வெல்ல யாருமே இல்லை என்பதை உங்கள் மனதுக்கு புரியவையுங்கள்.

🍃 உங்களை போல அழகானவர் யாரும் இல்லை, உங்களை போல திறமையானவர் யாரும் இல்லை என்பதை மீண்டும் மீண்டும் உங்களுக்கே நினைவு படுத்திக் கொள்ளுங்கள்.

🌼5. பயணப்படுங்கள் :-

🍃வாழ்க்கை ஒரு பயணம். அடுத்த நிமிடம் உங்களுக்கு என்ன நடக்கும் என உங்களுக்கே தெரியாது.

🍃இந்த நீண்ட நெடும் பயணத்தில் ஒரு சிலருக்கு வெற்றிகள் எளிதில் வரும், சிலருக்கு தாமதமாக வரும்.

🍃அதற்காக சோர்ந்து விடக்கூடாது. வெற்றிக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை ஆராய்ந்து அதை தொடர்ந்து செயல்படுத்திக் கொண்டே இருங்கள்.

🍃 வாழ்க்கை நிரந்தரம் இல்லாதது.

🍃 ஆனால் பாசிட்டிவ் எண்ணத்துடன் தொடர்ந்து பயணம் செய்தால் உங்களுக்கு வெற்றி கிடைக்கிறதோ இல்லையோ, 

உங்கள் பயணம் மகிழ்ச்சியாகவும்,

உங்களுக்கு பிடித்தமானதாகவும் இருக்கும்.


நேர்மறை சிந்தனை நமக்கு அதிக நம்பிக்கையை கொடுக்கும். நம் எண்ணங்களை நல்வழிப்படுத்தவும் மன அழுத்தம் மற்றும் அது தொடர்பான நோய்களைக் குணப்படுத்தவும் செய்யும். நேர்மறை சிந்தனைகளின் சக்தி, நம் உடலுக்கும் மனதிற்கும் பல வகையான நலன்களைத் தரும்.

ஆக்கப்பூர்வமான நாளை தொடங்குங்கள்: ஒவ்வொரு நாளையும் நாம் நேர்மறை எண்ணங்களோடு தொடங்க வேண்டும்.

எதிர்மறை சிந்தனை மற்றும் பதற்றத்துடன் காலைப்பொழுதை தொடங்கினால் அந்த நாள் முழுவதும் நமக்கு அது வெற்றிகரமான பொழுதாக இருக்காது.

இந்த நாள் இனிதாக..!: நாள் முழுவதும் தடை களை எதிர்கொண்டால் அது சரியானதாக இருக்காது. அத்தகைய சவால்களை நீங்கள் சந்திக்கும் போது, சின்ன விசயமோ பெ ரிய விசயமோ அமைதியாக இருந்துவிடுவது நல்லது. போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டிருக்கும் போ து, நம்மைப் பதற்றப்படுத்திக் கொள்வதை விட இனிமையான இசையை கேட்டு, காத்திருக்கும் நேரத்தை கடந்து செல்வது எவ்வளவு நல்லதோ அதே போல் நாம் நமது நெ ருக்கடிகளையும் கடந்து செல்வது சிறந்தது.

நகைச்சுவை உணர்வோடு இருங்கள்: நெருக்கடியான நேரத்தில் கோபப்படுவதையோ , பதற்றமடைவதையோ விடுத்து நகைச்சுவை உணர்வோடு இருக்க கற்றுக்கொ ண்டா ல் எவ்வளவு பெரி ய பிரச்னையும் நம்மை இலகுவாகக் கடந்து சென்றுவிடும். "இதுவும் கடந்து போகும்' என்ற உணர்வோடு எல்லாச் சூழ்நிலைகளிலும் மனதை ஒரு நிலையோடு வைத்துக் கொள்ளபழகிக் கொள்ளுங்கள்

தோல்விகளில் இருந்து பா டம் கற்றுக் கொள்ளுங்கள்: நாம் எப்போதும் எல்லா நேரங்களிலும் மிகச்சரியாக எதையும் செய்து விடமுடியாது. தவறு செய்வது என்பது மனித இயல்பு. பல நேரங்களில் நாம் செய்யும் வேலைகளில் ஏற்படும் தவறுகளை - அதனால் அடைந்த தோல்விகளைப் பற்றியே சிந்தித்துக் கொண்டேயிருக்காமல் அடுத்த நிலையைப் பற்றியோசித்து வேகமாகவும், விவேகமாகவும் செயல்படத் தொடங்க வேண்டும். தோல்வி என்பது நிலையானது இல்லை என்பதை உணர்ந்து கொண்டால் போதும்.

நேர்மறை பேச்சு - செயல்களை நம்மிடம் இருந்து தொடங்க வேண்டும்: எந்த ஒரு செயலையும் செய்வதற்கு முன்பே இது என்னால் முடியாது என்ற தாழ்வு மனப்பா ன்மை யை த் தூக்கி எறிந்துவிட்டு தோல்வியே ஆனாலும் பரவாயில்லை ; அது ஓர் அனுபவமாக, படிப்பினையாக இருக்கட்டும் என்று எதிலும் முயற்சியை மேற்கொள்வது நமக்குள் நேர்மறை எண்ணத்தை வளர்க்கும்.

இந்த நேரத்தை கவனத்தில் கொள்ளுங்கள்: இன்று என்ன என்பதை விட இப்போது என்ன என்பதில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். பழையனவற்றை தூக்கி எறியுங்கள். கடந்த கால மோசமான அனுபவங்கள் எதுவானாலும் அந்த வலியைச் சுமந்து கொண்டு திரியாமல் அதன் தவறுகளை உணர்ந்து உங்கள் கடமைகளைச் சரியாக செய்வதில் மட்டும் கவனம் செலுத்துங்கள்.

நேர்மறையான நண்பர்கள், வழிகாட்டிகள், சக பணியாளர்களைக் கண்டறியுங்கள்: நம்மைச் சுற்றி எப்போதும் நேர்மறையான சிந்தனை கொண்டவர்கள் இருப்பார்களேயானால் நமது சிந்தனையும் நேர்மறையானதாகவே இருக்கும்.

எண்ணங்கள் நேர்மறையானதாக இருந்தால் செயல்கள் ஆக்கப்பூர்வமானதாக மாறும். எனவே எதிர்மறை எண்ணங்கள் நமக்குள்ளும் நம்மைச் சுற்றியும் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள். நாமும் மற்றவர்களுக்குள் நேர்மறை எண்ணங்களை விதைக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். அப்போதுதான் நீங்கள் வெற்றியாளராக முடியும்.

No comments:

Post a Comment