Monday, August 26, 2024

வேலிப்பருத்தி

 *தினம் ஒரு மூலிகை* *வேலிப்பருத்தி*

இதய வடிவ இலைகளை மாற்றடுக்கில் கொண்டு பசுமை நிற பூங்கொத்துக்களையும் மென்மையான முட்களை கொண்ட காய்களை உடைய பால் உள்ள பிசுபிசுப்பான ஏறு கொடி முட்டை வடிவ விதைகளில் பட்டு போன்ற பஞ்சு இழைகள் காணப்படும் இதனை உத்தாமணி என்றும்

Sunday, August 25, 2024

வெள்ளை பூண்டு

 


*தினம் ஒரு மூலிகை*  

கடுமையான மனம் உடைய குமிழ் வடிவ கிழங்கையும் தட்டையான இலைகளை உடைய சிறு செடி கிழங்குகளே மருத்துவ பயன் உடையது அதாவது வெள்ளை பூண்டு பசி தூண்டுதல் செரிமானம் மிகுதல் வயிற்று வாய்வு அகற்றல் சிறுநீர் பெருக்குதல் குடற்புழு கொள்ளுதல் கோழை அகற்றுதல் உடல் தேற்றுதல் வியர்வை பெருக்குதல் நோவு தணித்தல் காய்ச்சல் தணித்தல் என்புருக்கி தனித்தல் காமம் பெருக்குதல் ஆகிய மருத்துவ குணம் உடையது 10 கிராம் உரித்த வெள்ளைப் பூண்டை

Saturday, August 24, 2024

உன்னதமான வாழ்க்கையை வாழலாம்

 உன்னதமான #வாழ்க்கையை வாழலாம் வாருங்கள். 

முடிந்த அளவாவது உதவுபவர்களுக்கு முதன்மையான வாழ்க்கை...

நம்மால் முடிந்த மட்டும் உதவுவோம் ..!

நாம மட்டும் நல்லா இருந்தா போதாதா? 

எதுக்கு இன்னொருத்தருக்கு உதவி பண்ணணும்?

பிறருக்கு நன்மை செய்ய நாம் ஏன் கடமைப்பட்டுள்ளோம்? 

நாமும் நம்ம குடும்பமும் நன்றாக இருந்தால் போதாதா

என்றே பலரும் நினைக்கின்றனர்..!

மாமேதையான ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கூறுகிறார்

`சமுதாயமும் தனி மனிதனும்` என்ற புத்தகத்தில் 

அவரது எண்ணங்களின் சாரம்

வெள்ளறுகு



தினம் ஒரு மூலிகை* *வெள்ளறுகு*.   வெளியே இலைகளை மாற்றடுக்கில் கொண்ட வெண்மையான பூக்களை கொண்ட சிறு செடி கசப்பு சுவை உடையது சமூகத்தை உலர்த்தி பாதுகாப்பாக வைத்திருக்க பல ஆண்டுகள் கூட கெடாமல் நின்று பயன் தரக்கூடியது வெள்ளருகு இதில் இரும்பு சத்து பொட்டாசியம் சோடியம் கால்சியம் குளோரைடு சல்பேட் பாஸ்பேட் மற்றும் வைட்டமின் சி மற்றும் பி ஆகியன அடங்கி உள்ளன நோய் நீக்கி உடல் தேற்றவும் பசி மிகுக்கவும் தாது பலம் மிகுக்கவும் மருந்தாக பயன்படுகிறது சமூகச் சாறு 25 மில்லி கொடுத்து இலையை அரைத்து கடிவாயில் கட்ட வாந்தி பேதியாகி பாம்பு நஞ்சு தீரும் ஓரிரு முறை கொடுக்க வேண்டும் உப்பில்லா பத்தியம் தேவையான சமுலம் மையாய் அரைத்து வெந்நீரில் குழைத்து உடம்பில் பூசி ஒரு மணி நேரம் கழித்து குளித்து வர சொறி சிரங்கு தினவு மேகத் தடிப்பு ஊழல் ஆகியவை தீரும் மாதவிடாயின் முதல் மூன்று நாட்கள் சமூகத்தை எலுமிச்சை அளவு அரைத்து குடிக்க கர்ப்பப்பை மாதவிடாய் கோளாறு தீரும் சமூலம் ஒருபிடி 10 மிளகு ஒரு துண்டு சுக்கு ஒரு தேக்கரண்டி சீரகம் ஆகியவற்றை சிதைத்து ஒரு லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாக காய்ச்சி காலை மாலை குடித்து வர குடல் வாதம் வாத ரோகங்கள் தீரும்.

வில்வம்

 *தினம் ஒரு மூலிகை* *

இலையை உலர்த்தி பொடித்து அரை தேக்கரண்டி தேனில் குழைத்து காலை மாலை கொடுக்க நீர்கோவை தலைவலி மண்டை குடைக்கல் சீதள இருமல் தொண்டை கட்டு காசம் தீரும் இலை சூரணம் அரை தேக்கரண்டி வெண்ணெய் அல்லது நெய்யில் காலை மாலை உட்கொள்ள எரிச்சல் பித்தம் வயிற்று வலி குன்ம எரிச்சல் வயிற்றுப்புண் மலச்சிக்கல் பசியின்

Wednesday, August 21, 2024

தடைகளை வெல்வது எப்படி...

 *


இன்றைய மனிதர்களில் அதிகம் பேர் ஏதாவது ஒரு கவலையுடன் தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.


சிறு தடையையும் பெரிதாக எண்ணி கவலைப் படுகிற வர்கள் அநேகம்.


இதற்கெல்லாம் காரணம்  அவர்கள் மீதே அவர்களுக்கு நம்பிக்கை இல்லாதது தான்.


நமக்கு நண்பனும் நாமே; பகைவனும் நாமே என்று சொல்வது உண்டு..


அதாவது, யார் ஒருவர் தன் பலவீனங்களை முறியடித்து வெற்றி பெறுகிறாரோ, அவரே தனக்குத் தானே நண்பராகிறார்.


யார் ஒருவர் தன் பலவீனங்களை வெற்றி பெற முடியாமல் தவிக்கிறாரோ அவர் அவருக்கே எதிரியாகிறார் என்று அர்த்தம்.,


பெரும்பாலான நிகழ்வுகளை ஆராய்ந்து பார்த்தால், ஒவ்வொரு தடையும் ஒவ்வொரு வெற்றியை மறைத்து வைத்து இருக்கிறது என்பது புரியும்.


அது போன்று தான் தோல்வியும். தோல்வி என்பது நம்மை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டிய அறிவிப்பு என்று சொல்லலாம்.


செல்வத்தை இழப்பது ஒன்றையும் இழப்பதாகாது.

உடல் நலத்தை இழப்பது சிறிதளவு இழந்ததாகும்.

ஆனால் நம்பிக்கை இழப்பது எல்லாவற்றையும்

இழந்ததற்குச் சமம் என்று சொல்வார்கள்..


 தடைகளை வெல்வது எப்படிங்க? என்று நீங்கள் கேட்கலாம்.


இதை எறும்புகள் நமக்குக் கற்றுத் தருகின்றன.

எறும்புகளை ஆராயும் உயிரியல் நிபுணர் ஒருவர்

எறும்புகளை ஆராய்ந்து கொண்டிருந்தார்.


ஓர் எறும்பு தன் வாயில் நீளமான உணவுப் பொருளைச் சுமந்து கொண்டு சென்றது. தரை வழியே சென்று கொண்டிருந்த அந்த எறும்பு ஒரு வெடிப்பைப் பார்த்து விட்டு திடீரென்று நின்று விட்டது.


மேலே செல்ல முடியாமல் தவித்தது. சிறிது நேரம் கழித்து, தான் சுமந்து வந்த இரையை வெடிப்பின் மேல் வைத்து அதன் மீது ஊர்ந்து சென்று வெடிப்பைக் கடந்தது.


பின்பு அந்த இரையைக் கவ்விக் கொண்டு சென்றது.

எறும்பின் அறிவு வியப்பை அளிப்பதாக உள்ளது என எழுதியிருக்கிறார் அந்த ஆராய்ச்சியாளர்.


துன்பம் ஏற்பட்டால், அத்துன்பத்தையே பாலமாக வைத்து முன்னேற வேண்டும் என்பதை நாம் எறும்பிடம் இருந்து கற்றுக் கொள்ளலாம்


*மிகச் சிறிய    எறும்பின்* *தன்னம்பிக்கை* 

 *நமக்கு* *இருந்தால்* *கூடப்* *போதும்*. *எந்தத்* *தடையையும்* *வெல்ல* *முடியும். கவலையும்* *காணாமல்* *போய்* *விடும்* .


 எத்தனை தடைகள்* *குறுக்கிட்டாலும்* , *உள்ளத்தில்* *நம்பிக்கை* *மட்டும்* *இருந்து* *விட்டால்* *உங்களின்* *வெற்றியை* *யாராலும்* *தடுக்க* *முடியாது* .  


 *தன்னம்பிக்கை* *கொள்வோம்* ..! *தடைகளை* *கடந்து*  *வெற்றியை* *சுவைப்போம்* ..

Sunday, August 18, 2024

18 08 2024 செய்தித்துளிகள்

7.5% இடஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களிடம் எந்தவித கட்டணங்களையும் பொறியியல் கல்லூரிகள் வசூலிக்கக்கூடாது என்று தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு தொழில்நுட்ப கல்வி இயக்ககம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

7.5% இடஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கான கட்டணத்தை அரசே செயல்படுத்தி வருகிறது என்றும் தொழில்நுட்ப கல்வி

Wednesday, August 14, 2024

இதய வலி Vs வாயுப்பிடிப்பு

 *இதய வலி Vs வாயுப்பிடிப்பு இவற்றை எப்படி கண்டுபிடிப்பது?*

லேசாக நெஞ்சு வலித்தால்கூட அது மாரடைப்பின் அறிகுறியாக இருக்குமோ, இதயக் கோளாறாக இருக்குமோ என்கிற அச்சம் பலருக்கும் உள்ளூர எழுகிறது. அது மாரடைப்புதான் என்கிற பயம் வரத்தான் செய்கிறது. ஆனால், சாதாரண வாய்வுத் தொல்லையால்கூட நெஞ்சுவலி ஏற்படலாம்.நெஞ்சுவலிக்கு வாய்வுத் தொல்லையும் காரணமாக இருக்கலாம், மாரடைப்பும் காரணமாக இருக்கலாம். இவற்றை எப்படி வேறுபடுத்திப் பார்ப்பது என்று பார்க்கலாம்.

வாய்வுத் தொல்லை, மாரடைப்பைத் துல்லியமாக வேறுபடுத்திப் பார்க்க முடியாது. ஆனாலும், அறிகுறிகளை வைத்து ஓரளவு வகைப்படுத்தலாம். மாரடைப்பாக இருந்தால், குறிப்பிட்ட இட

வல்லாரை - தினம் ஒரு மூலிகை

 * *வல்லாரை*

வட்டமாகவும் அரைவட்ட வெட்டுப்பற்களுடன் கை வடிவ நரம்பு அமைப்புடனும் நீண்ட காம்புடைய ஆழமான இதய வடிவ இலைகளைக் கொண்ட கணுக்களில் வேர் விட்டு தரையோடு படரும் சிறு கொடி இனம் இலையே மருத்துவ பயன்

Tuesday, August 13, 2024

இன்றைய நாளில் பிறந்தவர்

 *.*

(13-ஆக)

*டி.கே.மூர்த்தி.*


🎶 தமிழ்நாட்டின் தலைசிறந்த மிருதங்க வித்வான்களில் ஒருவரான டி.கே.மூர்த்தி 1924ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13ஆம் தேதி திருவனந்தபுரம்-கன்னியாகுமரி வழித்தடத்தில் அமைந்துள்ள நெய்யாத்தங்கரையில் பிறந்தார். தாணு பாகவதர் கிருஷ்ணமூர்த்தி என்பது இவரின்

பிரச்னையை தீர்க்கிறேன் என்ற பெயரில்

பிரச்னையைகளை நான் எனக்கு தெரிந்த அறிவில் எதிர்கொள்கிறேன் என்றே பயணித்து !! 

ஓர் கட்டத்தில் ..

பிரச்னையை தீர்க்கிறேன் என்ற பெயரில் இன்னும் பிரச்னையை வலுப்படுத்தவே செய்தோம் என்று உணர்ந்த மனமே, இறையருளை கொண்டு எதிர்கொள்வது எப்படி என்ற அடிப்படை சிந்தனைக்கே வரும் ..

முதலில் பிரச்சனையை அடிப்படையாக உருவாக்கியதே நீங்கள் தான்

களவாடப்பட்ட திருச்செந்தூர் முருகன்

களவாடப்பட்ட திருச்செந்தூர் முருகன் சிலை திரும்பி வந்த அதிசயக் கதை தெரியுமா?*_

கடலில் மூழ்கியிருந்த முருகன் சிலையும், நடராஜர் சிலையும் எங்கிருக்கிறது என்பதை தெரியப்படுத்த முருகப்பெருமானே கனவில் வந்து தெரியப்படுத்திய கதை தெரியுமா? சக்தி வாய்ந்த திருச்செந்தூர்

வசம்பு அல்லது சுடுவான்

 *தினம் ஒரு மூலிகை* 

பிள்ளை வளர்த்தி பல பெயர்கள் உண்டு குழந்தைகளின் பாதுகாவலன் மனம் உடைய கிழங்கு உள்ள சிறு செடி கிழங்கே மருத்துவ பயன் உடையது உலர்ந்த கிழங்குகள் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் உடல் தேற்றுதல்

Monday, August 12, 2024

அருள்மிகு குற்றம் பொறுத்த நாதர் திருக்கோயில்

 *இன்றைய திருக்கோவில்*

,*

தலைஞாயிறு, 


(திருக்கருப்பறியலூர்), 


நாகப்பட்டினம் மாவட்டம்.


காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.


மூலவர்  –    குற்றம் பொறுத்

Sunday, August 11, 2024

இன்றைய நாளில் பிறந்தவர்

 *இன்றைய நாளில் பிறந்தவர்.*

(11-ஆக)

*வீ.துரைசுவாமி.*


🎻 1920ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11ஆம் தேதி கர்நாடக இசை வீணை வித்துவான் மைசூர் வீ.துரைசுவாமி பிறந்தார்.


🎻 இவரது முதலாவது இசைக்கச்சேரி பெங்களூர் காயன

தேசிய மகன் மற்றும் மகள் தினம்

 *இன்றைய நாள்..*

(11-ஆக)

*தேசிய மகன் மற்றும் மகள் தினம்.*


🧒👧ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 11ஆம் தேதி தேசிய மகன் மற்றும் மகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.


🧒👧பெற்றோர்களுக்கும் அவர்களது மகன்கள் மற்றும் மகள்களுக்கும் இடையிலான பிணைப்பு மிகவும் சிறப்பு வாய்ந்தது. குடும்பத்தின் மகிழ்ச்சியை பிரதிபலிக்கும் மகன் மற்றும் மகள்களை கொண்டாடும் விதமாக இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.

ஸ்மார்ட்போனே உங்கள் எதிரி

 _*உங்கள் ஸ்மார்ட்போனே உங்கள் எதிரி... ஜாக்கிரதை!*_

*ஸ்மார்ட்போன்கள் தகவல்களை பரிமாறிக் கொள்ளவும், உலகத்துடன் இணைந்திருக்கவும் நமக்கு வசதி அளிக்கின்றன. ஆனால், இந்த வசதிகள் நம்மை ஆக்கிரமித்துவிட்டனவா? ஸ்மார்ட் போன்கள் நம் நலனுக்கான கருவிகளாக இருப்பதற்கு பதிலாக, நம் வாழ்க்கையை கட்டுப்படுத்தும் எதிரிகளாக மாறிவிட்டனவா? இந்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் இருக்கப்போகிறது இந்தப் பதிவு.*

இன்றைய உலகில் ஸ்மார்ட்போன்கள் நம் வாழ்வில் ஒவ்வொரு அம்சத்திலும் ஊடுருவி உள்ளன. நாம் எழுந்தவுடன் அதை கையில் எடுத்தால்தான் நிம்மதியாக இருக்கிறது. தூங்குவதற்கு முன் அதிக

முத்தக்காசு(அ) கோரை கிழங்கு

 *தினம் ஒரு மூலிகை* **

கோரை இன சிறு புள் முட்டை வடிவ மனமுடைய சிறு கிழங்குகள் பெற்றிருக்கும் இதை முத்தக்காசு எனப்படும் கிழங்கு மருத்துவ பயன் உடையது செய்தல் உடல் மனம் ஊக்கியாக செயல்படுதல் சிறுநீர் வியர்வை பெருக்கல் மாதவிலக்கு தூண்டுதல் குடல் பலம் மிகுதல் நுண் புழு கொல்லுதல் சிறுநீரக கற்கரைத்தல் ஆகிய குணம் உடையது ஒரு கிராம் கிழங்கு பொடியை காலை மாலை தேனில் உட்கொள்ள புத்தி கூர்மை தாது பெருக்கம் பசி மிகுத்தல் உடற்பொலிவு ஆகியவை உண்டாகும் முத்தக்காசு சந்தனம் வெட்டிவேர் பொற்பாடகம் பேய்மிரட்டி சுக்கு ஆகியவை வகைக்கு ஐந்து கிராம் எடுத்து ஒன்று இரண்டாய் இடித்து அ

முருங்கை இலை டீ

 முருங்கை இலை டீ குடித்தால் கிடைக்கும் பயன்கள்


தயாரிக்கும் முறை:


1 கப் முருங்கை இலை

மிளகு 10

சீரகம் 2 ஸ்பூன்

பூண்டு 5

கருவேப்பிலை தேவையான அளவு

தண்ணீர் 500ml

உப்பு தேவையான அளவு


500 ml தண்ணீர் நன்கு கொதிக்கவிட்டு மு

முதியார் கூந்தல்

 *தினம் ஒரு மூலிகை*

 ** மாற்றடுக்கில் அமைந்த சிறு முழு இலைகளையும் இளம் மஞ்சள் நிற சிறு மலர்களையும் உடைய சிறு கொடி தரிசிகளில் தானே வளர்கிறது ஜவுரிக்குடி குதிரைவாலி அம்மையார் கூந்தல் என்றும் அழைப்பார்கள் கொடி முழுமையும் மருத்துவ குணம் உடையது முதியார் கூந்தல் மாம்பட்டை அதிவிரைவு சுக்கு கோரைக்கிழங்கு வகைக்கு 10 கிராம் சேர்த்து இடித்து ஒரு லிட்டர் நீரில் இட்டு 125 மில்லியாக காய்ச்சி வடிகட்டி 3

தெரியாத_விவரம்...மொபைல் சிம் பற்றி

 *விழிப்புணர்வுபதிவு..!!*

*...*

'மனிதர்களின் நெருக்கடியில் இருந்து தப்பிப்பதற்கு, மொபைல் போனை ஸ்விட்ச் ஆஃப் செய்வதே போதுமானதாக இருக்கிறது' என்பது ட்விட்டர் மொழி.

பிரியமானவர்களை உடனடியாகத் தொடர்பு கொள்ளவும், பிடிக்காதவர்களிடம் இருந்து விலகியிருக்கவும் தற்போதெல்லாம் கையில் இருக்கும் ஸ்மார்ட்போனே நமக்குப் போதுமானதாக இருக்கிறது. போனில் வரும் சில அழைப்புகள் நம்மை மகிழ்ச்சியுறச் செய்

ஏன் கேரளா God's own country

 _*ஏன் கேரளாவை God's own country என்று சொல்கிறோம் தெரியுமா??*_

🍁🍁🍁

கேரளாவில் இயற்கை அழகிற்கு பஞ்சமே இல்லை. இயற்கை நிரம்பி வழியும் அந்த இடத்தை சொர்க்கம் என்றே கூறலாம். சிலர் அதனால், இது கடவுளின் சொந்த பூமி என்று கூறுவார்கள். ஆனால், இதற்கும் ஒரு கதை உள்ளது.

நாம் சற்றுப் பின்னோக்கி  மகாபாரத காலத்திற்குச் செல்வோம். பீஷ்மர், கர்ணன் போன்றவர்களின் குருவும், விஷுனுவின் அவதாரமும் ஆன பரசுராமர் பற்றி உங்களுக்கு நன்றாகவே தெரியும். அதேபோ

Thursday, August 8, 2024

பிராமணர்' என்பதற்கு பொருள்

முதல்ல  இத படிங்க!

பழங்காலத்தில் தீப்பெட்டி இல்லை எனவேதான் பழந்தமிழகத்தில் சட்டியில் நெருப்பை காக்கப் படாத பாடு பட்டனர் (QUEST FOR FIRE ஆங்கில படம் பாருங்க)

ஒரு வகுப்பாரின் கடமையாக வீட்டில் அக்கினி வளர்ப்பது ஆக்கப்பட்டது இதற்க்குத்தான்.

காலையில் வயற்காடு சென்று மாலையில் வீடு திரும்புவோர் வீட்டில் அக்கினியை பாதுகாக்க இயலாது 

எனவே எப்போதும் வீட்டில் ஆள் இருக்கும் வகுப்பாக பார்த்து அந்த வகுப்பாரின் கடைமையாக அக்கினியை வளர்ப்பது ஒப்படைக்கப்பட்டது 

அந்த வகுப்பாரின் பெயரே 'அந்தணர்'

'அந்தணர்' என்பதில் 'தணல்' உள்ளது பாருங்கள் 

'தணல்' வளர்த்தோர் 'தணர்' 


இதிலிருந்து தமிழகத்து அந்தணர் யாவரும் தமிழரே என்று தெளியலாம் வெளி மாநில வெளிநாட்டு மக்கள் அல்ல அவர்கள் 


நெருப்பை பார்த்துகொள்வதால் 'பார்பார்' என்றும் 

அதுவே 'பார்பனர்' என்று ஆகியது 


'பிராமணர்' என்பதற்கும் அதே பொருள்தான் 


பிரமம் = நெருப்பு 


பிரமதாயம் - நெருப்பை வளர்தலுக்கு அரசன் தந்த மானியம் 


பிரம மூகூர்த்தம் = காலையில் ஒளி வரும் நேரம் 


பிரம கூர்ச்சம் = நெருப்பை வளர்க்க பயன்படும் தருப்பை முடிச்சு 


பிரம தேஜஸ் = நெருப்பின் ஒளி 


இவற்றால் 'பிரமம்' என்பதற்கு 'நெருப்பு' என்று பொருள் என்பது புலனாகிறது 


எனவே 'அந்தணர்,பிராமணர்,பார்ப்பார், ஆகிய மூன்று சொற்களுமே 'தீ வளர்ப்போர்' என்ற ஒரே பொருளில் தான் ஆதி தமிழர்களால் வழங்கப்பட்டு வந்தது 


ஆதாரம் புறநானூறு.......

செய்தித்துளிகள்

 *இன்றைய நட்பும் நிகழ்வும் செய்திகள்*


8.08.2024(வியாழக்கிழமை)

*சிந்தனை துளிகள்*


 யாரையும் கஷ்டப்படுத்தக் கூடாது என்று நினைப்பர்கள் தான் எல்லோராலும் கஷ்டத்தை அனுபவிக்கிறார்கள்.!


பணத்தினால் வரும் பாசம் பணம் இருக்கும் வரை...

அழகினால் வரும் பாசம் இளமை இருக்கும் வரை...

ஆனால் குணத்தினால் வரும் பாசம் மட்டுமே உயிர் இருக்கும் வரை நிலைத்து இருக்கும்.!!


ஒருவருடைய மனதில் இருக்கும் வலிகளையும் வேதனைகளையும் ஒருபோதும் அடுத்தவர்களால் உணர முடியாது.!!!

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

🙏🙏🙏🙏🙏


*


 

🍒🍒போக்சோ சட்டம் பற்றிய காணொலிகளை பள்ளிகளில் திரையிட தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு.

🍒🍒டாக்டர் இராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பித்த ஆசிரியர்களின் பெயர் பட்டியல் வெளியீடு.

🍒🍒 “அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை உயர்த்தும் முடிவை கைவிடுக” - தினகரன்

🍒🍒ஊக்க ஊதிய உயர்வு அனுமதித்தல் - நீதிமன்றத்தில் பெறப்படும் தீர்ப்பாணைகளுக்கு, நடைமுறையில் உள்ள அரசாணைகளை கருத்தில் கொண்டு உரிய ஆணைகள் வழங்க முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு.

🍒🍒ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - பணியாளர் தொகுதி - மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் நிலையில் உள்ள அலுவலர்களுக்கு பணியிட மாற்றம் மற்றும் பணியிடம் வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.

🍒🍒09.08.2024 அன்று விசாரணைக்கு வர இருந்த உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு வழக்கு 14.08.2024க்கு விசாரணைக்கு வர உள்ளது.

🍒🍒பிறப்பு சான்றிதழில் 15 ஆண்டுகளாக பெயர் சேர்க்காதவர்கள் வரும் டிசம்பர் 31 க்குள் பெயர் சேர்த்துக் கொள்ளலாம் என அறிவிப்பு வெளியீடு.

🍒🍒நீட் முதுகலை மருத்துவ படிப்பிற்கான வினாத்தாள் வெளியாகவில்லை டெலிகிராம் வலைதளத்தில் முதுகலை நீட் நுழைவுத் தேர்வு வினாத்தாள்  70 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுவதாக   வெளியான தகவல் பொய்யானது என்று தேசிய மருத்துவக் கல்வி வாரியம் அறிவிப்பு.

🍒🍒தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் 2024-25ம் ஆண்டுக்கான தரவரிசை நேற்று வெளியானது.

இளநிலை கால்நடை மருத்துவம், பராமரிப்பு படிப்புகள், கோழி இன தொழில்நுட்பம் மற்றும் பால்வளம் உள்ளிட்ட படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலும் வெளியானது.

🍒🍒இளங்கலை மருத்துவப் படிப்புகள் (எம்.பி.பி.எஸ்.) உள்ளிட்டவற்றுக்கு விண்ணப்பிக்க இன்று 8-ஆம் தேதி வரை காலக்கெடுவை சென்டாக் நிா்வாகம் நீட்டித்துள்ளது.

இதுகுறித்து சென்டாக் நிா்வாகம் தரப்பில் கூறியிருப்பதாவது:

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ் (பல் மருத்துவம்), பி.ஏ.எம்.எஸ். (ஆயுா்வேதம்), கால்நடை மருத்துவம் உள்ளிட்ட நீட் மதிப்பெண் அடிப்படையில் மாணவா் சோ்க்கைக்கு கடந்த ஜூலை 28 -ஆம் தேதி முதல் சென்டாக் இணையதளத்தில் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. அதன்படி, மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனா்.

இந்த நிலையில், விண்ணப்பிக்க கடந்த செவ்வாய்க்கிழமை (ஆக. 6) இறுதி நாளாக சென்டாக் அறிவித்திருந்தது.

மேலும், 1,300-க்கும் மேற்பட்டோா் வருவாய் சான்றிதழை சமா்ப்பிக்காமலும் உள்ளனா்.ஆகவே, அவா்களுக்கு மறு வாய்ப்பு அளிக்கும் வகையில்,இன்று 8-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என சென்டாக் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு ஒதுக்கீட்டு இடங்களை பொருத்தவரை விண்ணப்ப கட்டணமாக, எஸ்.சி., எஸ்.டி., மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு, ரூ. 500, இதர பிரிவினருக்கு ரூ.1,000 கட்டணம் என நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

நிா்வாக இடங்கள், சுய நிதி இடங்களுக்கு எஸ்.சி.,எஸ்.டி., மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு ரூ.1,000, இதர பிரிவினா், பிற மாநில மாணவா்களுக்கு ரூ.2,000 என நிா்ணயிக்கப்பட்டுள்ளது. என்.ஆா்.ஐ., பிரிவினருக்கு ரூ. 5,000 விண்ணப்பக் கட்டணமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி குடியுரிமையுள்ள மாணவா்கள் ரூ.20 க்கான இ.ஸ்டாம்ப் பேப்பரில் உறுதிமொழி படிவத்தினை பதிவேற்றம் செய்ய வேண்டும். 

அந்த படிவத்தில் முதல் வாதியாக பெற்றோா் பெயரும், இரண்டாம் வாதியாக (பாா்ட்டி) கன்வீனா், சென்டாக் இடம் பெற வேண்டும். அதில் பெற்றோரும், மாணவரும் கையொப்பமிட வேண்டும்.

உறுதிமொழி படிவத்தில், எக்ஸிகியூட்டி மாஜிஸ்திரேட், நோட்டரி கையொப்பம் பெற்று பதிவேற்றம் செய்ய வேண்டும்.அத்துடன் மாணவா் சோ்க்கை சம்பந்தமான சந்தேகங்களுக்கு சென்டாக் மின்னஞ்சல் முகவரியிலும்,

 0413-2655570, 2655571 என்ற தொலைபேசி எண்களிலும் தொடா்பு கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

🍒🍒நீலகிரி மாவட்டம் கோக்கால் பகுதியில், மண்ணில் புதையும் வீடுகள்

வீடுகள் மண்ணில் புதைவதற்கான காரணம் குறித்து புவியியல் வல்லுநர்கள் நேரில் ஆய்வு

இந்திய புவியல் மூத்த வல்லுநர் யுன்யெலோ டெப் தலைமையில்  ஆய்வு

அதிநவீன கருவிகள் மூலம் நேற்று முதல் 20 நாட்கள் ஆய்வு நடைபெற உள்ளது

நிலச்சரிவு ஏற்படுவதற்கு முன்னோட்டமா, புதிய கட்டடங்கள் கட்டப்படுவதால் பாதிப்பா என ஆய்வு.

🍒🍒வெண்கலம் வென்ற மனு பாக்கருக்கு உற்சாக வரவேற்பு!

பாரிஸ் ஒலிம்பிக்கில் இரட்டைப் பதக்கம் வென்று நாடு திரும்பிய

மனு பாக்கருக்கு  ரசிகர்கள், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்

10 மீ. தனி நபர் ஏர் பிஸ்டல், 10 மீ. ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில் வெண்கலம் வென்றிருந்தார் மனு பாக்கர்

🍒🍒முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழா நிறைவையொட்டி, அவரது உருவம் பொறித்த ரூ.100 நாணயம்

வரும் 17ஆம் தேதி, சென்னையில் கருணாநிதி நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

சென்னை கலைவாணர் அரங்கில் விழா ஏற்பாடுகள் தீவிரம்

தமிழக அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட உள்ள இந்த விழாவில், முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் பங்கேற்கவுள்ளனர்.

🍒🍒சந்திரயான்-3 திட்டத்தில் பணியாற்றிய விஞ்ஞானிகள், பொறியாளர்களுக்கு ராஷ்ட்ரிய விஞ்யான் புரஸ்கார் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரோ விஞ்ஞானிகள், பொறியாளர்கள் என 33 பேருக்கு ராஷ்ட்ரிய விஞ்யான் புரஸ்கார் விருதுகளை மத்திய அரசு அறிவித்தது.

🍒🍒தமிழகத்தைச் சேர்ந்த நெசவாளர் பாலகிருஷ்ணனுக்கு டெல்லியில் தேசிய கைத்தறி விருது வழங்கப்பட்டது.

மத்திய ஜவுளித் துறை சார்பில் டெல்லியில் நடந்த விழாவில் விருதை துணை குடியரசுத் தலைவர் வழங்கினார். விருதுடன் சேர்ந்து ரூ.2 லட்சம் ஊக்கத்தொகையையும் துணை குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கர் வழங்கினார்

🍒🍒அமெரிக்காவைச் சேர்ந்த கம்பியூட்டர் தயாரிப்பு நிறுவனமான DELL, அதன் SALES பிரிவில் இருந்து 12,500 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.

செயற்கை நுண்ணறிவு மற்றும் நவீன தொழில்நுட்பத்தில் முதலீடு செய்யவுள்ளதால் இந்த முடிவு என விளக்கம் அளித்துள்ளது. கடந்தாண்டு சுமார் 13,000 ஊழியர்களை DELL பணிநீக்கம் செய்திருந்தது.                                           🍒🍒வினேஷ் போகத் தகுதி நீக்க விவகாரத்தில் எந்த மாற்றமில்லை என்று சர்வதேச மல்யுத்த சங்கம் உறுதி அளித்துள்ளது.

100 கிராம் எடைக்காக அனுமதித்தால் மற்றவர்களுக்கு அனுமதி வழங்க வேண்டிவரும். போட்டிக்கான விதி என்பது அனைவருக்கும் ஒரே மாதிரியானது தான் என்று சர்வதேச மல்யுத்த சங்கம் கூறியுள்ளது.

🍒🍒SSLV என்ற சிறு செயற்கைக் கோள் ஏவும் ராக்கெட் மூலம் ஆக.15-ம் தேதி சுதந்திர தினத்தன்று EOS-08 என்ற புவி கண்காணிப்பு செயற்கைக் கோளை இஸ்ரோ விண்ணில் செலுத்துகிறது.

ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து செலுத்தப்பட உள்ள செயற்கைக் கோளில் 3 முக்கிய கருவிகள் பொருத்தப்பட உள்ளன.

🍒🍒வினேஷ் போகத்.. 

நீங்கள் சாம்பியன்களின் சாம்பியன். இந்தியாவின் பெருமை, ஒவ்வொரு இந்தியருக்கும் உத்வேகம் அளிப்பவர். உங்களுடைய இந்த பின்னடைவு மிகுந்த வருத்தத்தை தருகிறது. என்னுடைய வருத்தத்தை விவரிக்க வார்த்தைகளே கிடையாது.

சவால்களை நேருக்கு நேர் எதிர்கொள்வதுதான் உங்கள் இயல்பு. இதிலிருந்து மீண்டு வலிமையாக வாருங்கள். நாங்கள் உங்களுக்கு ஆதரவாக இருக்கிறோம்”

பிரதமர் மோடி ஆறுதல்

🍒🍒இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் பி.டி.உஷாவை தொடர்பு கொண்டு வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும் என பிரதமர் மோடி பரிந்துரை அளித்துள்ளார்.

🍒🍒வங்காள தேசத்தில் இருந்து சிறப்பு விமானங்கள் மூலம் 400 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்.

🍒🍒உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தேசிய அளவில் 2-வது இடத்தை பிடித்து தமிழ்நாடு சாதனை படைத்துள்ளது.

595 உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து தேசிய அளவில் தமிழ்நாடு சாதனை படைத்துள்ளது. உடல் உறுப்புகளுக்காக காத்திருந்தவர்களுக்கு 178 உடல் உறுப்புகள் வெற்றிகரமாக பொருத்தப்பட்டு சாதனை படைத்தது. இந்தியாவில் அதிகளவில் இதய மாற்று அறுவை சிகிச்சை செய்த மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது.

🍒🍒முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 13ம் தேதி கூடுகிறது அமைச்சரவை கூட்டம்

தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 13ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு

உலக முதலீட்டாளர் மாநாட்டின் தொடர்ச்சியாக முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் அமெரிக்கா செல்லவுள்ள நிலையில் அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.

🍒🍒பங்களாதேஷில் அனைவரும் ஒற்றுமையாக உள்ளோம். 

இந்துக்கள் தாக்கப்படுவதாக பொய்யான வீடியோக்களை நம்பவேண்டாம்

இங்க நடப்பது இடஒதுக்கீடு, வேலை வாய்ப்புக்கான போராட்டம்.

மத கலவரம் அல்ல

வங்கதேசம் இந்து அமைப்பு

🍒🍒சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 குறைவு

ஒரு கிராம் தங்கம் ரூ.6,330க்கும், ஒரு சவரன் ரூ.50,640க்கும் விற்பனை

🍒🍒நாளை நடைபெறுவதாக இருந்த அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ஒத்திவைப்பு

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

பொதுக்குழுவை கூட்டுவது தொடர்பாக, மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்படலாம் என தகவல் வெளியான நிலையில் ஒத்திவைப்பு

🍒🍒இரவு 10 மணிக்குள் தூங்குவதால் ஏற்படும் நன்மைகள்

👉இரவு 10 -11 மணிக்குள் தூங்குவதால் இதயம் மற்றும் அது சார்ந்த நோய் அபாயங்கள் குறைவதாக ஐரோப்பிய ஹார்ட் ஜர்னல் நடத்திய ஆய்வு கூறுகிறது.

👉தினமும் 8-9 மணி நேரம் உறக்கம் பெற வாய்ப்புள்ளதால், உடல் முழுமையாக ஓய்வெடுக்க வழிவகுக்கிறது.

👉ஹார்மோன்களில் சமநிலை ஏற்படுவதால், வேலையில் செயல்திறன் அதிகரிக்கிறது.

👉இதனால் நோய் எதிர்ப்பு மண்டலம் நல்ல வலுப்பெறுவதால், உடல் முழுமையான ஆரோக்யம் பெறுகிறது.

மிளகரணை- தினம் ஒரு மூலிகை

மிளகரணை

சிறிய நீள் வடிவ காம்பற்ற முக்கூட்டு இலைகளை மாற்றடுக்கில் கொண்ட வளைந்த முட்களை மிகுதியாக உள்ள ஏழு கொடி இலைகள் கசப்பு சுவை உடையவை இலை காய் வேர்பட்டை மருத்துவ குணம் உடையவை குதல் முறை நோய் நீக்கல் கோழை

Monday, August 5, 2024

மாசிக்காய் -தினமும் ஒரு மூலிகை


*தினம் ஒரு மூலிகை* **

 மாசிக்காய் மற்ற மரங்களின் காயை போல் பூவிலிருந்து காய்க்காது குறிப்பிட்ட சில மரங்களின் கிளைகளில் வளரும் ஒருவகை குடம்பிகள் சுரக்கும் திரவம் உறைந்து திரண்டு உருண்டையாக கெட்டிப்படும் இதுவே மாசிக்காய் ஆகும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் திசுக்களை இறுகச் செய்தல் முறை நோய் அகற்

Saturday, August 3, 2024

செய்தித் துளிகள் 03 08 2024

⛑️⛑️100% தேர்ச்சி பெற்ற தனியார் பள்ளிகளுக்கு நாளை 4.08.2024(ஞாயிற்றுக்கிழமை)  பாராட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது.


இவ்விழாவில் சர்வதேச/ தேசிய/ மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்ற மாணவ மாணவியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு