Saturday, June 1, 2024

சீதாப்பழம் - தினம் ஒரு மூலிகை

 *


 *சீதாப்பழம்*.   நீண்ட நீள் வட்ட இலைகளை உடைய சிறிய மரம் பழங்களுக்காக வளர்க்கப்படுகிறது இலை பட்டை வேர் பழம் விதை ஆகியவை மருத்துவ பயன் உடையது இலைகள் நுண்பு கொள்ளியாகவும் பட்டை உடலுறமாக்கி திசுக்களை இறுகச் செய்யவும் பயன்படுகிறது வேர் கழிச்சலை ஏற்படுத்தும் இலைகளை சிறிது உப்பு சேர்த்து அரைத்து கட்டிகள் புண்கள் சதை வளரும் கட்டிகள் ஆகியவற்றின் மீது வைத்து கட்டி வர அவை குணமாகும் இலையை நீரில் இட்டு கொதிக்க வைத்து எடுத்த நீரைக் கொண்டு கழிவு வர குழந்தைகளுக்கு காணும் ஆசனவாய் தசை வெள்ளி தள்ளுதல் சரியாகும். சீத்தாப்பழம் கடும் உடல் நல பாதிப்புக்கு பின் உடல் தேற பழம் பலன் தருகிறது விதை பொடியை கடலை மாவுடன் கலந்து தலை குளிக்க பயன்படுத்தினால் பேன்கள் அறவே சாகும் பழச்சாற்றினை உப்பு சேர்த்து பிசைந்து பற்றுப்போட கட்டிகள் பழுத்து உடைந்து ஆறும் பழத்தில் நார்ச்சத்தும் தாமிரச்சத்தும் சீராக இருப்பதால் செரிமானத்துக்கு உதவுகிறது மலச்சிக்கல் வராமல் தடுக்கிறது குடல் இயக்கத்தை சீராக்கி குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை மேம்படுத்துகிறது பழம் ஜீரண சக்தியை அதிகரிப்பதால் பித்தம் வாந்தி பேதி தலைச்சுற்றல் போன்றவை குணப்படுத்தும்.

No comments:

Post a Comment