Saturday, June 1, 2024

செய்தித் துளிகள் - 01.06.2024 (சனிக்கிழமை)

*வெயிலின் தாக்கத்தால் கோடை விடுமுறை காலம் நீட்டிப்பு !*

*ஜுன் 6 ம் தேதி திறக்க இருந்த நிலையில் ஜுன் 10 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு.*

🍒🍒தமிழக பள்ளிக்கல்வி துறை சாதனை - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் 

🍒🍒தமிழக அரசு ஊழியர்கள் கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும் - முன்னாள்

முதல்வர் அறிக்கை வெளியீடு

🍒🍒பள்ளிகள் திறக்கும் நாளில் சத்துணவு மையங்களுக்கான அறிவுரைகள்- Mid Day Meal Scheme Commissioner Letter வெளியீடு.கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கும் நாளில் சத்துணவு மையங்கள் பின்பற்ற வேண்டிய அறிவுரைகள் வெளியீடு.

🍒🍒01.08.2023 நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்தல் - உபரி பட்டதாரி ஆசிரியர்களை பணிநிரவல் செய்தல் - DSE செயல்முறைகள் 

வெளியீடு.

🍒🍒 RTE - தனியார் பள்ளிகளில் இலவச கல்வி குவிந்த விண்ணப்பங்கள்.. கடந்த ஆண்டை விட 45% அதிகம்.

🍒🍒மத்திய அரசு ஊழியர்களுக்கான பணிக்கொடை உச்ச வரம்பு ₹20 இலட்சத்திலிருந்து ₹25 இலட்சமாக உயர்வு.

🍒🍒அரசு உதவி பெறும் சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் பிற ஊழியர்களை நியமிக்க அந்நிறுவனங்களில் நிர்வாகத்துக்கு முழு உரிமை உண்டு"

-டெல்லி உயர்நீதிமன்றம்.

🍒🍒சென்னை, மதுரை மற்றும் கோயம்புத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் மரபியல் சார்ந்த நோய்கள் மற்றும் மரபுசார் பிற அரிய வகை நோய்களுக்கான சிறப்பு மையங்கள் ஏற்படுத்துதல் - அரசாணை வெளியீடு.

🍒🍒நீட் தேர்வு விடைத்தாள் நகல் விடைக்குறிப்பு வெளியீடு

👉நீட் தேர்வுக்கான விடைத்தாள் நகல்கள் மற்றும் விடைக்குறிப்புகளை தேசியத் தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. 

மே5ம் தேதி நடந்த இத்தேர்வை நாடு முழுவதும் 24 லட்சம் பேர் எழுதினர். இந்நிலையில், தேர்வுக்கான விடைக்குறிப்புகள், மாணவர்களின் விடைத்தாள் நகல்கள்,அதற்கு வழங்கப்பட்ட மதிப்பெண்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

விடைகளுக்கான மதிப்பீட்டில் ஆட்சேபனை இருந்தால்,இன்று இரவு 11.50 மணிக்குள் விண்ணப்பிக்கலாம்

🍒🍒இந்தியா கூட்டணி ஆட்சி அமைவது உறுதி என்று ராகுல் காந்தி திட்டவட்டம்; 

வாக்கு எண்ணிக்கை மையங்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டுகோள்

🍒🍒கல்வித்துறை கண்டுள்ள வளர்ச்சிக்கு செய்தித்தாள்களில் வந்துள்ள செய்திகளே சாட்சி: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

🍒🍒முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் மின்துறையின் முனைப்பான திட்டங்களால்,மின் தடையில்லாத மாநிலமாகத் திகழ்கிறது: தமிழ்நாடு அரசு

🍒🍒சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு மாற்றமின்றி ரூ.53,840க்கு விற்பனை

🍒🍒தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலை.யில் இளநிலை பட்டப்படிப்புகளில் சேர வரும் ஜூன் 3ம் தேதி முதல் இணையதளம் வழியே விண்ணப்பிக்கலாம்.

🍒🍒டெல்லியில் குடிநீருக்காக அலைமோதும் பொதுமக்கள்!

டெல்லியில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், பொதுமக்கள் கடும் அவதி

குடிநீரை வீணாக்கினால் ₹2000 அபராதம் விதிக்கப்படும் என டெல்லி அரசு எச்சரித்துள்ளது.

🍒🍒தமிழ்நாட்டில் வாக்கு எண்ணிக்கை நடக்கும் 39 தொகுதிகளுக்கு பார்வையாளர்களை நியமித்தது.தேர்தல் ஆணையம்.

🍒🍒8 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் உள்ள 57 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு.

🍒🍒தேர்தல் முடிவுகள் வெளியான 48 மணி நேரத்தில் பிரதமரை இந்தியா கூட்டணி தேர்ந்தெடுக்கும் - காங்கிரஸ்.

🍒🍒கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

🍒🍒சீனாவில் இருந்து தகவல் தொடர்பு செயற்கைக் கோளை விண்ணில் செலுத்தியது பாகிஸ்தான்.

🍒🍒இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் இடையேயான நான்காவது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 2-0 என முழுமையாக கைப்பற்றியது.

🍒🍒ஜூன் 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகள்,சட்டம் ஒழுங்கு தொடர்பாக சென்னையில் அதிகாரிகளுடன் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா நேற்று ஆலோசனை நடத்தியுள்ளார்.

🍒🍒நாட்டின் முன்னாள் அதிபர் இன்று குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளார். அதிலிருந்தே தெரிகிறது இந்த தீர்ப்பில் அரசியல் உந்துதல் உள்ளது என்று. இது அமெரிக்க சட்ட அமைப்பின் மீதான மக்களின் நம்பிக்கைக்கு பெருத்த சேதமாக அமைந்துள்ளது. 

-டிரம்புக்கு ஆதரவாக எலான் மஸ்க் கருத்து

🍒🍒உடல் உறுப்பு தானம் வழங்கியவர்களுக்கு அறுவை சிகிச்சைக்குப் பிறகு, 3 ஆண்டுகளுக்கு மாதந்தோறும் குறிப்பிட்ட தொகையை உதவித் தொகையாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில அளவிலான குழுவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

🍒🍒ஜூலைக்குள் போலீசாருக்கு ‘ஸ்மார்ட் கார்டு’?

காவலர்கள், இன்ஸ்பெக்டர்களுக்கு பேருந்துகளில் பயணிக்க ஸ்மார்ட் கார்டு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

இந்த கார்டை காட்டி, பேருந்துகளில் அவர்கள் பணி செய்யும் மாவட்டத்திற்குள் இலவசமாகப் பயணிக்க முடியும் எனத் தெரிகிறது. 

அண்மையில் காவலருக்கும், நடத்துனருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தை தொடர்ந்து, மாவட்ட எஸ்.பிக்கள், கமிஷனர்கள் வாயிலாக காவலர்களுக்கு ஜூலைக்குள் ஸ்மார்ட்கார்டு விநியோகிக்கப்பட உள்ளது.

🍒🍒ஹீட் ஸ்ட்ரோக்கால் மாணவர் உயிரிழந்த சோகம்

வட மாநிலங்களில் வீசி வந்த வெப்ப அலை, தற்போது தமிழகத்தையும் தாக்கத் தொடங்கியுள்ளது. 

சென்னையில் ஹீட் ஸ்ட்ரோக் காரணமாக பள்ளி மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

திருநின்றவூர் அருகே உயிரிழந்த பள்ளி நண்பனுக்கு அஞ்சலி செலுத்த சென்ற +2 மாணவன் சக்தி, வெயிலின் தாக்கத்தால் மயங்கி விழுந்தார். 

தொடர்ந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதும் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒

🌹🌹சிறுவர்கள் வாகனம் ஓட்டி விபத்தானால் பெற்றோருக்கு 3 மாதம் சிறை, ரூ.25 ஆயிரம் அபராதம் - புதிய விதிகள் இன்று முதல் அமல்..

சென்னை - 18 வயதுக்குட்பட்டோர் வாகனம் ஓட்டி விபத்து ஏற்பட்டால் பெற்றோருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிப்பதோடு, 3 மாதங்கள் சிறை தண்டனைக்கு வழிவகுக்கும் விதிகள் இன்று (ஜூன் 1) முதல் அமலுக்கு வருகிறது.

இதுதொடர்பாக போக்குவரத்து அதிகாரிகள் கூறியதாவது

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் புதிய ஓட்டுநர் உரிம விதிகள் ஜூன் 1-ம் தேதி முதல்அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு தேவையான ஆவணங்கள் எளிமைப்படுத்தப்படும்.

மேலும், புகை வெளியீடு விதிகளை கடுமையாக்கி, அதிக புகையை வெளியிடும் 9 லட்சம் பழைய அரசு வாகனங்கள் பயன்பாட்டில் இருந்து நீக்கப்படும்.

அதிவேகத்துக்கான அபராதத்தை பொருத்தவரை ரூ.1,000 - ரூ.2,000 என்ற வகையில் இருக்கும்.

18 வயதுக்குட்பட்டோர் மோட்டார் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்தினால், பெற்றோருக்கு 3 மாதம் சிறை தண்டனை, ரூ.25ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.

மேலும், வாகனத்தின் பதிவுசான்றிதழ் ரத்து செய்யப்படுவதோடு, சம்பந்தப்பட்ட சிறுவனுக்கு 25 வயது வரை ஓட்டுநர் உரிமம் வழங்கப்படாது.

விண்ணப்பிக்கும் நடைமுறையில் பெரியளவில் மாற்றமில்லை.

அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்தோருக்கு இழப்பீடு தொகையாகரூ.2 லட்சம்,பலத்த காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்பட உள்ளது.

இதற்கு சம்பந்தப்பட்ட கோட்டாட்சியர் அல்லதுவட்டாட்சியரை அணுகி விண்ணப்பிக்கலாம்..1 மாதத்துக்குள் விசாரணை நடத்தி, மாவட்டநீதிபதி அல்லது ஆட்சியரால் இழப்பீடு வழங்கப்படும் என்றனர்.

🍒🍒நீதிமன்றங்களில்  இ பைலிங் கட்டாயம் என்ற உத்தரவை ஒத்திவைத்து

சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒

🌹🌹நாய் கடித்துவிட்டதா? ரேபீஸ் வைரஸ் தாக்கமல் இருக்க உடனடியாக இதை செய்யுங்கள்...

👉நாய் கடித்துவிட்டால் நம்மில் பலர் உடனே மருத்துவமனைக்கு செல்வதையே முதலில் செய்கின்றனர். மருத்துவமனைக்கு சென்று ரேபீஸ் தடுப்பூசி செலுத்துவது முக்கியம்தான். ஆனால் அதற்கு முன்பு நாம் கட்டாயம் செய்ய வேண்டிய சில விஷயங்கள் இருக்கின்றன. அதிலும் முதல் ஒரு மணிநேரத்தில் நாம் செய்யும் விஷயங்கள்தான் நம் உயிரை காப்பாற்றும்.நாய் கடித்தால் அது ரேபீஸ் பாதித்த நாயா அல்லது சாதாரண நாயா என்ற ஆராய்ச்சி எல்லாம் தேவையில்லை. நாய் கடித்த உடனேயே அருகில் எங்காவது டேப் (Tap) இருந்தால் அதனை திறந்து நாய் கடி காயங்களில் தண்ணீரை வேகமாக அடித்து கழுவ வேண்டும். ஒரு நிமிடம் வெறும் தண்ணீரில் கழுவிய பின்னர், சோப்பை காயத்தின் மீது நன்கு தடவி பிறகு அதே போல தண்ணீரை விட்டு கழுவ வேண்டும். 15 நிமிடங்கள் இதனை செய்ய வேண்டும். ஒருவேளை சோப்பு இல்லாவிட்டால், வெறும் தண்ணீரையே வேகமாக காயத்தின் மீது அடித்து கழுவலாம்.நாய் பற்கள் பட்டு துளை போல காயம் ஏற்பட்டிருந்தால் அந்த காயத்துக்குள் தண்ணீரை வேகமாக அடித்து கழுவ வேண்டியது அவசியம். அதன் பின்னர் டெட்டால் போன்றவற்றை காயத்தின் மீது ஊற்றி நன்றாக கழுவிவிட வேண்டும். இப்படி செய்யும் போது காயங்களின் மேற்பரப்பில் இருக்கும் ரேபீஸ் வைரஸ்கள் 80 சதவீதம் அழிந்துவிடும்.இதையடுத்து, மருத்துவமனைக்கு உடனடியாக சென்று முதல் டோஸ் ரேபீஸ் தடுப்பூசியை செலுத்த வேண்டும். முதல் டோஸ் தடுப்பூசியை எவ்வளவு சீக்கிரமாக எடுக்கிறோமோ அந்த அளவுக்கு ரேபீஸ் கிருமியை நாம் அழித்துவிடலாம். அதன் பின்னர் மருத்துவர் கூறும் நாட்களில் சென்று அடுத்தடுத்து 3 டோஸ்களை எடுத்துக் கொள்ள வேண்டும். நாய் கடி காயங்களுக்கு பொதுவாக தையல் போட மாட்டார்கள். காயம் காற்றோட்டமாக இருக்க வேண்டும்.

No comments:

Post a Comment